Category
- University Magazines
- சிறுவர்களுக்கான புத்தகங்கள்
- Children Books
- English Books
- Book Bundles
- Current Affairs
- Military & Intelligence
- Short Stories
- Fiction
- Poetry
- Environment & Nature
- Science
- Medicine
- Linguistics
- Atheism & Agnosticism
- (Auto)Biography & Memoir
- Business & Management
- Creativity
- Economics
- Education & Research
- Health & Nutrition
- History
- Humor
- Love & Relationships
- Parenting
- Personal Development
- Personal Finance
- Philosophy
- Politics
- War
- Psychology
- Religion & Spirituality
- Society & Culture
- Sports
- Travel & Adventure
- Technology & the Future
- True Crime
- Women Empowerment
- தமிழ் Books
- Book Bundles ( தமிழ் )
- சட்டம்
- இயற்கை
- கட்டுரை
- கணிதம்
- பயணக்குறிப்புகள்
- விவசாயம்
- அரசியல்
- ஆரோக்கியம்
- உளவியல்
- புனைவு
- காதல் மற்றும் உறவு
- சமூகவியல்
- சுயசரிதைகள் மற்றும் நினைவுகள்
- சுயமுன்னேற்றம்
- தத்துவஞானம்
- தொழில்நுட்பம் & எதிர்காலம்
- பொருளாதாரம்
- போர்
- பணம்
- மதம் & ஆன்மீகம்
- வணிகம் & மேலாண்மை
- வரலாறு
- விஞ்ஞானம் & பிரபல அறிவியல்
- விளையாட்டு
- சினிமா
- கவிதைகள்
- குழந்தை வளர்ப்பு
- குற்றம்
- மருத்துவம்
- மொழி
Product categories
- Children Books
- English Books
- (Auto)Biography & Memoir
- Atheism & Agnosticism
- Book Bundles
- Business & Management
- Creativity
- Current Affairs
- Economics
- Education & Research
- Environment & Nature
- Fiction
- Health & Nutrition
- History
- Humor
- Linguistics
- Love & Relationships
- Medicine
- Military & Intelligence
- Parenting
- Personal Development
- Personal Finance
- Philosophy
- Poetry
- Politics
- Psychology
- Religion & Spirituality
- Science
- Short Stories
- Society & Culture
- Sports
- Technology & the Future
- Travel & Adventure
- True Crime
- War
- Women Empowerment
- University Magazines
- சிறுவர்களுக்கான புத்தகங்கள்
- தமிழ் Books
- Book Bundles ( தமிழ் )
- அரசியல்
- ஆரோக்கியம்
- இயற்கை
- உளவியல்
- கட்டுரை
- கணிதம்
- கவிதைகள்
- காதல் மற்றும் உறவு
- குற்றம்
- குழந்தை வளர்ப்பு
- சட்டம்
- சமூகவியல்
- சினிமா
- சுயசரிதைகள் மற்றும் நினைவுகள்
- சுயமுன்னேற்றம்
- தத்துவஞானம்
- தொழில்நுட்பம் & எதிர்காலம்
- பணம்
- பயணக்குறிப்புகள்
- புனைவு
- பொருளாதாரம்
- போர்
- மதம் & ஆன்மீகம்
- மருத்துவம்
- மொழி
- வணிகம் & மேலாண்மை
- வரலாறு
- விஞ்ஞானம் & பிரபல அறிவியல்
- விளையாட்டு
- விவசாயம்
Category: அரசியல்
Showing 1–60 of 66 results
-
மூலதனம் ( Mooladhanam ) Das Capital (3 பாகங்கள்)
Rs. 18,890.00or 3 X Rs.6,296.67 withAdd to cartகார்ல் மார்க்ஸ்
“நான் லண்டனில் வசிப்பதால், எனது கட்சித் தொடர்புகளெல்லாம் குளிர்காலத்தில் கடிதப் போக்குவரத்தோடு சரி; கோடையிலோ அவை பெரும்பாலும் நேர்முகமாகவே நடைபெறும். இந்த நிலைமையும், சீராக அதிகரித்து வரும் எண்ணிக்கையிலான ஏடுகளிலும் இயக்கத்தைக் கவனிக்கவேண்டிய அவசியமும், ஓரளவு சீராக நடைபெற்று வரும் கட்சி விவகாரங்களைக் கவனிப்பதற்கு குளிர்கால மாதங்களை, குறிப்பாக, ஆண்டின் முதல் மூன்று மாதங்களை ஒதுக்கிக் கொள்ளுமாறு என்னை நிர்ப்பந்தித்துள்ளன.
பொதுவாக, ஒரு மனிதனின் வயது எழுபதைத் தாண்டியிருக்கும் போது, அவனது மூளையின் மெய்னெர்ட் இணைப்பு நரம்புகள் எரிச்சலூட்டக் கூடிய அளவில் மதமதப்புடன் செயல்படுகின்றன. இந்நிலையில், கையாளுவதற்குக் கடினமான மெய்யியல் சிக்கல்களில் அவ்வப்போது ஏற்படும் தடங்கல்களை அவன் முன்போல சுலபமாகவும் துரிதமாகவும் சமாளிப்பதில்லை. ஆகவே, ஒரு குளிர்காலத்தில் முடிக்கப்பட வேண்டிய பணி எதிர்பார்த்தபடி பூர்த்தியாகாவிட்டால், அடுத்த குளிர்காலத்தில் அதே பணியை பெரும்பாலும் புதிதாகத் தொடங்க வேண்டிய நிலைமையே ஏற்பட்டது.
மூலதனம் நூலில் மிகமிகக் கடினமான ஐந்தாம் பகுதியைப் பதிப்பிப்பதில் நடந்தது இதுவே!”
-எங்கெல்ஸ் முன்னுரையிலிருந்து
-
இந்தியா அடிமைப்படுத்தப்பட்ட வரலாறு / India Adimaipaduthapatta Varalaru / The Theft of India
Rs. 2,290.00or 3 X Rs.763.33 withAdd to cartராய் மாக்ஸம்
தமிழில்: பி.ஆர்.மகாதேவன்
நம் நாடு பல காலம் அந்நியர்களுக்கு அடிமைப்பட்டுக்கிடந்தது, நீண்ட நெடிய போராட்டங்களுக்குப் பிறகு நாம் விடுதலை பெற்றோம். நாமனைவரும் அறிந்த இந்த ஒற்றை வரியை நீட்டி, விவரித்தால் உலுக்கியெடுக்கும் வரலாறு உயிர்பெற்று வருகிறது.
போர்த்துகல், டச்சு, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகள் இந்தியாவை எப்படி ஆக்கிரமித்தன?
இந்த ஆக்கிரமிப்புகள் நம் உடலையும் உள்ளத்தையும் எவ்வாறு பாதித்தன,
நம் நிலமும் கடலும் பண்பாடும் பொருளாதாரமும் வாழ்வியலும் எத்தகைய பேரழிவுகளைச் சந்தித்தன, இவற்றையெல்லாம் இந்தியா எவ்வாறு எதிர்கொண்டதுமூன்று நூற்றாண்டுகளாக இந்தியா அனுபவித்த கணக்கற்ற வதைகளையும் வலிகளையும் இந்நூல்மூலம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறார் ராய் மாக்ஸம்.
வணிகத்தின் பெயரால் தொடங்கிய கப்பல் பயணம் எவ்வாறு கொலை, கொள்ளை, பட்டினி, பஞ்சம் என்று முற்றிலும் சீரழிவுப் பாதையில் சென்று முடிந்தது என்பதை அதிர வைக்கும் சான்றுகளோடு வெளிப்படுத்துகிறது இந்நூல்.
ராய் மாக்ஸிமின் The Theft of India நூலின் அதிகாரபூர்வமான தமிழாக்கம் இது.
இது காலனியத்தின் கதை.
நாம் மறக்கக்கூடாத கடந்த காலத்தின் கதை.
-
[RARE] இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்றால் என்ன? (What is Dialectical Materialism?)
Rs. 1,490.00Rs. 990.00or 3 X Rs.330.00 withAdd to cartவி. கிரபிவின்
தமிழில் நா தர்மராஜன் எம் .ஏ .
* 70களிலும் 80களிலும் வெளிவந்த பிரபல்யமான புத்தகங்கள். மிகவும் அரிதான புத்தகங்கள்.
இவை பாவிக்கப்படாத புத்தகங்கள். ஆனால் அச்சிடப்பட்டு 30 வருடங்களுக்கு மேல் கிடங்கில் இருந்ததால் சில புத்தகங்களில் கரையான் அறிப்பு, பக்கங்களின் நிறம் மாறுதல் போன்ற சிறிய சேதங்கள் இருக்கலாம்.
ஆனால் முழுமையாக வாசிக்க முடியுமாக இருக்கும்.
-
சே குவாரா: பொலிவியன் டைரி ( Bolivian Diary Tamil )
Rs. 2,490.00or 3 X Rs.830.00 withAdd to cartசே குவேரா
என்.ராமச்சந்திரன்சேகுவாரா கொரில்லாப் படையின் தலைவராக இருக்கும்போது, 1956-58ம் வருடங்களில் நடைபெற்ற கியூபாவின் புரட்சிப் போராட்டத்தின் போது நாட்குறிப்பில் தினசரி நிகழ்வுகளை எழுதுவது வழக்கம். தினசரிக் குறிப்பு எழுதும் பழக்கம் அவரிடம் இருந்ததால், பொலிவியாவில் கழிந்த அவரது கடைசி நாட்களைப் பற்றிய விவரமான தகவல்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு, திருத்தப்பட்டு நூலாக வெளிவந்துள்ளது. நாட்குறிப்பு முழுவதும் சே. குவாராவால் பல புனைபெயர்கள் மற்றும் அடைப்பெயர்கள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன. சில சமயம் ஒரே நபரைப் பல்வேறு பெயர்களில் குறிப்பிட்டுள்ளார். பொலிவியப் புரட்சியின் காலகட்டத்தில் சம்பந்தப்பட்ட சில முக்கியமான ஆவணங்களும், நகரத்துப் போராளிகளுக்கு விடுத்த ஆணைகளும், பொலிவிய மக்களுக்கு அறிவிப்புகளும், போராட்டத்தில் சே குவாரா சந்தித்தவர்களும் மற்றும் சம்பந்தப்பட்ட நபர்களும் இடங்களும் பின்னிணைப்புகளாக கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் பிடல் காஸ்ட்ரோவின் அறிமுக உரையும், கேமிலோ குவாராவின் முன்னுரையும் இந்நூலில் இடம் பெற்றுள்ளது.
-
எண்ணெய் அரசியல் / Ennai Arasiyal
Rs. 1,490.00or 3 X Rs.496.67 withAdd to cartகேர்ரி லீச்
தமிழில்: நா. தர்மராசன்
உலகச் சீர்குலைவு ஒன்று புதிதாகத் தலைதூக்குகிறது. இதில் இயற்கை வளங்களுக்காக நடத்தப்படும் போர்கள் அவசரமாக முக்கியத்துவம் கொள்கின்றன. இந்த வளங்களைக் கைப்பற்றுவதில் உலகின் சக்திவாய்ந்த அரசுகள் மேற்கொள்ளும் தன்னிச்சையான இராணுவ பலத்துடன் கூடிய அயல்நாட்டுக் கொள்கைகள் எண்ணெயின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.
உலகின் தென்பகுதியில் உள்ள எண்ணெய் வளமிக்க நாடுகள் தங்களின் இறையாண்மை, பண்பாட்டு ஒற்றுமை, மனித உரிமைகள், அழிவின் விளிம்பிலிருக்கும் சுற்றுப்புறச் சூழல் போன்றவற்றைக் காப்பாற்ற இந்தப் போரில் கட்டாயப்படுத்தி இழுக்கப்படுகின்றன.
-
யூத பயங்கரவாதிகளின் ரகசிய அறிக்கை
Rs. 990.00or 3 X Rs.330.00 withAdd to cartசெர்கி நிலஸ்
தமிழில்: ஆரூர் சலீம்
இந்த 21ம் நுாற்றாண்டின் குழப்பம் வாய்ந்த, அரசியல் சூழ்நிலையைப் பற்றி, தெளிவாக அறிந்து கொள்ள உதவும் புத்தகங்களுள் முதன்மையானது, ‘புரோட்டோகால்ஸ்’ எனப்படும், யூத பயங்கரவாதிகளின் ரகசிய அறிக்கை புத்தகம். இந்த புத்தகம், அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து, ரஷ்யா போன்ற நாடுகளில் தடை செய்யப்பட்டது. உலக ஆட்சியை, குறுக்கு வழியில் கைப்பற்றும் நோக்கில், சக்தி வாய்ந்த சதிகார குழுவினரால், தீட்டப்பட்ட அரசியல் திட்டங்கள், 1905ல், ‘புரோட்டோகால்ஸ்’ என்ற பெயரில் வெளியாகி, உலகம் முழுவதும் பல அதிர்ச்சி அலைகளை எழுப்பியது.இது வெளியாகி, 120 ஆண்டுகள் ஆன பின்னரும், இதில் விவாதிக்கப்பட்ட தத்துவங்கள், சமகால சமூக நடப்புகளோடு, அச்சு பிசகாமல் பொருந்திப் போவது, இந்த புத்தகத்தை உயிர்ப்பு உள்ளதாக்குகிறது.
-
மார்க்ஸின் மூலதனத்திற்கு ஒரு வழிகாட்டி / Marx’in Mooladhanathirku Oru Vazhikatti / A Companion to Marx’s Capital Tamil
Rs. 2,490.00or 3 X Rs.830.00 withAdd to cartடேவிட் ஹார்வி
இந்த நூலின் ஆசிரியர் டேவிட் ஹார்வி கடந்த நாற்பது ஆண்டுகளாக ‘மார்க்ஸின் மூலதனம்’ குறித்து தொழிலாளர் உள்ளிட்ட அனைத்து தரப்பினர்க்கும் வகுப்புகள் நடத்திய அனுபவம் கொண்டவர்.
மார்க்ஸின் இயக்கவியல் முறையால் கவரப்பட்ட டேவிட் ஹார்வி அதன்வழியாக ஏகாதிபத்தியத்தின் உலகமயமாக்கலை ஊடுருவிப் பார்க்கிறார். அவரது இந்நூல் மூலதனம் நூலுக்கு ஒரு வழிகாட்டி மட்டுமல்ல, அரசியல் நோக்கமும் கொண்டதாகும்.
மூலதனக் குவிப்புக்கு எதிரான அரசியல் போராட்டமானது எந்தளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை எடுத்துரைப்பதுடன், பாரம்பரியமான தொழிலாளி வர்க்கப் போராட்டத்தையும் உயர்த்திப்பிடிக்கிறது. ஏகாதிபத்தியம், இப்போதும் புதிய சந்தைகளுக்காக ஒடுக்குமுறையான அரசியல் மற்றும் ராணுவ வழிமுறைகளை கையாள்கிறது என்பதையும் இந்நூல் பகிரங்கப்படுத்துகிறது.
-
துப்பாக்கிகள் கிருமிகள் எஃகு / Thuppakihal Kirumihal Eghku
Rs. 3,890.00or 3 X Rs.1,296.67 withAdd to cartஜாரெட் டைமண்ட்
இந்த உலகில் ஒரு சில நாடுகள் வளமாகவும், மற்ற நாடுகள் ஏழ்மையாகவும் இருக்கிறதே அது ஏன் என்ற கேள்விக்கு ஜாரெட் டைமண்ட், இந்த நூலின் மூலம் விடையைத் தேடிப் பயணிக்கிறார்.
ஐரோப்பியர்கள் உலகின் பல பகுதிகளை தங்கள் காலனிகளாகமாற்ற முடிந்தது எவ்வாறு? ஏன் சீனாவோ அமெரிக்க இந்தியர்களின் இன்கா சமூகமோ இதைச் செய்ய முடியவில்லை? மனித சமூகத்தின் மீதான அடிப்படையான சுற்றுச்சூழல் சக்திகளின் தாக்கத்தை உலகப் புகழ்பெற்ற இந்நூல் விளக்குகிறது.
மேலும் மனித குலத்தின் கடந்த 13,000 ஆண்டுகால வரலாற்றைச் சுருக்கமாகக் கூறுகின்றது.
-
நெப்போலியன்: சாமானியன் சக்ரவர்த்தியான சாதனைச் சரித்திரம்
Rs. 3,290.00or 3 X Rs.1,096.67 withAdd to cartஎஸ். எல். வி. மூர்த்தி
சாதாரணன் – சிப்பாய் – தளபதி – மன்னன் – சக்கரவர்த்தி – கைதி. மாவீரன் நெப்போலியனின் வாழ்க்கையை இப்படி ஆறே வார்த்தைகளில் சுருங்கச் சொல்லிவிடலாம். ஆனால், இந்த ஆறு வார்த்தைகளுக்குப் பின்னால் புதைந்து கிடக்கும் பேருண்மைகள் அதி ஆழமானவை, மிக அழுத்தமானவை. பால்ய காலத்தில் வறுமையைச் சுவைத்து, வெளியில் சொல்ல முடியாத அவலங்களை விழுங்கி, வளர்ந்த எந்த ஒரு மனிதனும் விதியின் புதைகுழியில் சிக்கி முகவரியே இல்லாமல் போயிருப்பான். ஆனால், தன்னம்பிக்கையின் முகவரியாகத் துளிர்த்து, தழைத்து, விழுதுவிட்டு வளர்ந்து நின்றவன் நெப்போலியன். எதிர்வந்த சிரமங்கள் எப்பேர்ப்பட்டதெனினும் அவற்றை ரோமங்களாகக் கருதி ஊதித் தள்ளும் மனோதிடம் இந்த மாவீரனின் தனிச்சிறப்பு. அந்த மனோதிடமும் தன்னம்பிக்கையும் நெப்போலியனுக்குள் நிலைபெற்றது எப்படி என்பதை நுணுக்கமாகப் படம் பிடித்திருப்பது இந்நூலின் தனிச்சிறப்பு.
மாணவனாக இருந்தபோதே மனத்தளவில் போரிட்டுப் பழகியவன், வெறும் சிப்பாயாகத் தடம் பதித்தபோதே தலைமைத் தளபதிக்கு இணையாக இயங்கியவன், தளபதியாக உயர்ந்தபோதே சக்கரவர்த்தி சிம்மாசனத்தை நோக்கி வீரத்துடன் நகர்ந்தவன் – நெப்போலியன் எப்போதும் வருங்காலத்தை நிகழ்காலத்தில் வாழ்ந்து பார்த்தவன். இவன், மெய்யான மாவீரன் மட்டுமல்ல, கூர்த்த மதிகொண்ட அரசியல்வாதி; நேர்த்தியான நிர்வாகி; கிடைக்கும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு முன்னேறிச் செல்வதில் நிகரற்றவன்! யுத்தத்தைக் காதலிக்கும் நெப்போலியனுக்குள் புதைந்துகிடக்கும் பெண்பித்தன் எப்போது வேண்டுமானாலும் விழித்தெழுவான். இந்நூலில் எஸ்.எல்.வி. மூர்த்தியின் ‘குதிரைப் பாய்ச்சல் மொழி’, வெறும் போர்கள் வழியே நெப்போலியனின் வீர பிம்பத்தைக் கட்டமைக்காமல், ஒரு சாமானியனின் மகன், படிப்படியாக பிரான்ஸின் சக்கரவர்த்தியாகப் உருவெடுத்த பிரமாண்டத்தைத் தத்ரூபமாக விவரிக்கிறது. உலகம் போற்றும் ஒப்பற்ற மாவீரனை அங்குலம் அங்குலமாகத் தரிசிக்கும் பேரனுபவத்துக்குத் தயாராகுங்கள்!
-
[RARE] இந்தியாவின் வரலாறு (A History of India India) Part 1
Rs. 2,790.00Rs. 2,190.00or 3 X Rs.730.00 withAdd to cartகொ.அ. அன்தோனவா, கி.ம. போன்காரத்-லேவின்
தமிழில்: பூ. சோமசுந்தரம், டாக்டர் இரா. பாஸ்கரன்
நூலாசிரியர்கள் பிரபல சோவியத் இந்திய இயல் வரலாற்றாளர்கள். இவர்கள் கடந்தகால மற்றும் நிகழ்கால இந்திய வரலாற்று ஆராய்ச்சியில் ஈடு பட்டுள்ளவர்கள்.
இந்நூலில் தொன்மைக் கால மற்றும் இடைக் கால இந்திய வரலாறு சுருக்கமான வடிவில் தரப்பட்டுள்ளது. 18ம் நூற்றாண்டின் நடுப் பகுதி வரை நாட்டின் சமூக-பொருளாதார வளர்ச்சி, அரசியல் வரலாறு, மதம், பண்பாடு ஆகியவற்றை நூலாசிரியர் கள் பகுப்பாய்வு சென்துள்ளனர்.
* 70களிலும் 80களிலும் வெளிவந்த பிரபல்யமான புத்தகங்கள். மிகவும் அரிதான புத்தகங்கள்.
இவை பாவிக்கப்படாத புத்தகங்கள். ஆனால் அச்சிடப்பட்டு 30 வருடங்களுக்கு மேல் கிடங்கில் இருந்ததால் சில புத்தகங்களில் கரையான் அறிப்பு, பக்கங்களின் நிறம் மாறுதல் போன்ற சிறிய சேதங்கள் இருக்கலாம்.
ஆனால் முழுமையாக வாசிக்க முடியுமாக இருக்கும்.
-
[RARE] மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் தொகுதி 2 (Marx Engels Selected Works in 12 Volumes)
Rs. 1,990.00Rs. 1,190.00or 3 X Rs.396.67 withAdd to cartகார்ல் மார்க்ஸ், பிரெடெரிக் எங்கல்ஸ்
பேராசான்களான மார்க்ஸ் – எங்கல்ஸ் ஆகியோரின் எழுத்துகளில், தவிர்க்கவே இயலாத இன்றியமையாத எழுத்துகளின் தொகுப்பே இது.
* 70களிலும் 80களிலும் வெளிவந்த பிரபல்யமான புத்தகங்கள். மிகவும் அரிதான புத்தகங்கள்.
இவை பாவிக்கப்படாத புத்தகங்கள். ஆனால் அச்சிடப்பட்டு 30 வருடங்களுக்கு மேல் கிடங்கில் இருந்ததால் சில புத்தகங்களில் கரையான் அறிப்பு, பக்கங்களின் நிறம் மாறுதல் போன்ற சிறிய சேதங்கள் இருக்கலாம்.
ஆனால் முழுமையாக வாசிக்க முடியுமாக இருக்கும்.
-
[RARE] மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் தொகுதி 3 (Marx Engels Selected Works in 12 Volumes)
Rs. 1,990.00Rs. 1,190.00or 3 X Rs.396.67 withAdd to cartகார்ல் மார்க்ஸ், பிரெடெரிக் எங்கல்ஸ்
பேராசான்களான மார்க்ஸ் – எங்கல்ஸ் ஆகியோரின் எழுத்துகளில், தவிர்க்கவே இயலாத இன்றியமையாத எழுத்துகளின் தொகுப்பே இது.
* 70களிலும் 80களிலும் வெளிவந்த பிரபல்யமான புத்தகங்கள். மிகவும் அரிதான புத்தகங்கள்.
இவை பாவிக்கப்படாத புத்தகங்கள். ஆனால் அச்சிடப்பட்டு 30 வருடங்களுக்கு மேல் கிடங்கில் இருந்ததால் சில புத்தகங்களில் கரையான் அறிப்பு, பக்கங்களின் நிறம் மாறுதல் போன்ற சிறிய சேதங்கள் இருக்கலாம்.
ஆனால் முழுமையாக வாசிக்க முடியுமாக இருக்கும்.
-
[RARE] மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் தொகுதி 4 (Marx Engels Selected Works in 12 Volumes)
Rs. 1,990.00Rs. 1,190.00or 3 X Rs.396.67 withAdd to cartகார்ல் மார்க்ஸ், பிரெடெரிக் எங்கல்ஸ்
பேராசான்களான மார்க்ஸ் – எங்கல்ஸ் ஆகியோரின் எழுத்துகளில், தவிர்க்கவே இயலாத இன்றியமையாத எழுத்துகளின் தொகுப்பே இது.
* 70களிலும் 80களிலும் வெளிவந்த பிரபல்யமான புத்தகங்கள். மிகவும் அரிதான புத்தகங்கள்.
இவை பாவிக்கப்படாத புத்தகங்கள். ஆனால் அச்சிடப்பட்டு 30 வருடங்களுக்கு மேல் கிடங்கில் இருந்ததால் சில புத்தகங்களில் கரையான் அறிப்பு, பக்கங்களின் நிறம் மாறுதல் போன்ற சிறிய சேதங்கள் இருக்கலாம்.
ஆனால் முழுமையாக வாசிக்க முடியுமாக இருக்கும்.
-
[RARE] மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் தொகுதி 5 (Marx Engels Selected Works in 12 Volumes)
Rs. 1,990.00Rs. 1,190.00or 3 X Rs.396.67 withAdd to cartகார்ல் மார்க்ஸ், பிரெடெரிக் எங்கல்ஸ்
பேராசான்களான மார்க்ஸ் – எங்கல்ஸ் ஆகியோரின் எழுத்துகளில், தவிர்க்கவே இயலாத இன்றியமையாத எழுத்துகளின் தொகுப்பே இது.
* 70களிலும் 80களிலும் வெளிவந்த பிரபல்யமான புத்தகங்கள். மிகவும் அரிதான புத்தகங்கள்.
இவை பாவிக்கப்படாத புத்தகங்கள். ஆனால் அச்சிடப்பட்டு 30 வருடங்களுக்கு மேல் கிடங்கில் இருந்ததால் சில புத்தகங்களில் கரையான் அறிப்பு, பக்கங்களின் நிறம் மாறுதல் போன்ற சிறிய சேதங்கள் இருக்கலாம்.
ஆனால் முழுமையாக வாசிக்க முடியுமாக இருக்கும்.
-
[RARE] மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் தொகுதி 6 (Marx Engels Selected Works in 12 Volumes)
Rs. 1,990.00Rs. 1,190.00or 3 X Rs.396.67 withAdd to cartகார்ல் மார்க்ஸ், பிரெடெரிக் எங்கல்ஸ்
பேராசான்களான மார்க்ஸ் – எங்கல்ஸ் ஆகியோரின் எழுத்துகளில், தவிர்க்கவே இயலாத இன்றியமையாத எழுத்துகளின் தொகுப்பே இது.
* 70களிலும் 80களிலும் வெளிவந்த பிரபல்யமான புத்தகங்கள். மிகவும் அரிதான புத்தகங்கள்.
இவை பாவிக்கப்படாத புத்தகங்கள். ஆனால் அச்சிடப்பட்டு 30 வருடங்களுக்கு மேல் கிடங்கில் இருந்ததால் சில புத்தகங்களில் கரையான் அறிப்பு, பக்கங்களின் நிறம் மாறுதல் போன்ற சிறிய சேதங்கள் இருக்கலாம்.
ஆனால் முழுமையாக வாசிக்க முடியுமாக இருக்கும்.
-
[RARE] லெனின் நூல் திரட்டு தொகுதி 1 ( Lenin: Collected Works )
Rs. 1,990.00Rs. 1,390.00or 3 X Rs.463.33 withAdd to cartலெனின்
வரலாற்றில் கார்ல் மார்க்ஸ் தத்துவத்துக்கு விதிக்கப்பட்ட வருங்காலம்
மார்க்ஸியத்தின் மூன்று தோற்றுவாய்களும் மூன்று உள்ளடக்கக் கூறுகளும்
மார்க்ஸியமும் திருத்தல்வாதமும்
ஜனநாயகப் புரட்சியில் சமூக-ஜனநாயகவாதத்தின் இரண்டு போர்த்தந்திரங்கள்
* 70களிலும் 80களிலும் வெளிவந்த பிரபல்யமான புத்தகங்கள். மிகவும் அரிதான புத்தகங்கள்.
இவை பாவிக்கப்படாத புத்தகங்கள். ஆனால் அச்சிடப்பட்டு 30 வருடங்களுக்கு மேல் கிடங்கில் இருந்ததால் சில புத்தகங்களில் கரையான் அறிப்பு, பக்கங்களின் நிறம் மாறுதல் போன்ற சிறிய சேதங்கள் இருக்கலாம்.
ஆனால் முழுமையாக வாசிக்க முடியுமாக இருக்கும்.
-
[RARE] லெனின் நூல் திரட்டு தொகுதி 2 ( Lenin: Collected Works )
Rs. 1,990.00Rs. 1,390.00or 3 X Rs.463.33 withAdd to cartலெனின்
ஏகாதிபத்தியம் – முதலாளித்துவத்தின் உச்ச கட்டம்
அரசும் புரட்சியும்
* 70களிலும் 80களிலும் வெளிவந்த பிரபல்யமான புத்தகங்கள். மிகவும் அரிதான புத்தகங்கள்.
இவை பாவிக்கப்படாத புத்தகங்கள். ஆனால் அச்சிடப்பட்டு 30 வருடங்களுக்கு மேல் கிடங்கில் இருந்ததால் சில புத்தகங்களில் கரையான் அறிப்பு, பக்கங்களின் நிறம் மாறுதல் போன்ற சிறிய சேதங்கள் இருக்கலாம்.
ஆனால் முழுமையாக வாசிக்க முடியுமாக இருக்கும்.
-
லீ குவான் யூ: பெருந்தலைவன்
Rs. 2,290.00or 3 X Rs.763.33 withAdd to cartபி. எல். இராஜகோபாலன்
லீ குவான் யூ வழக்குரைஞர் பட்டம் பெற்றது கேம்பிரிட்ஜில். அங்கிருந்த பேராசிரியர்கள் இனபேதம் பார்க்கவில்லை. ஆனால் விளையாட்டு திடல்,பேருந்து,உணவு விடுதி, வியாபார ஸ்தலங்கள் இங்கெல்லாம் மற்றவர்களால் ஆசியர்கள் நடத்தப்பட்ட விதம் கொண்டு லீ கொதித்தார்.
என்னதான் இங்கிலாந்தின் கட்டுப்பாடும், நாகரிகமும், பண்பாடும் அவரை ஈர்த்தாலும் பிரிட்டிஷ் இனவெறியர்கள் நடந்து கொண்ட விதம் அவரைத் தீவிர அரசியலை நோக்கி நகர்த்தியது.
பிரிட்டிஷாரின் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டு, இந்தியாவும் பாகிஸ்தானும் சுதந்திர நாடுகளாக அறிவிக்கப்பட்டதிலிருந்து அவர்களின் வேட்கையும், வேகமும் அதிகரித்த விதம் அவருக்கு நம்பிக்கையை ஊட்டியது. சிங்கப்பூரில் அப்போதைக்கு ஆட்சியில் இருந்த அரசியல் கட்சி, ஏழைகளின் உழைப்பை உறிஞ்சிக் கொழுத்ததை அவர் ரசிக்கவில்லை. அதற்காக கம்யுனிச சித்தாந்தத்தையும் அவர் ஏற்கவில்லை.
மாற்று அரசியலை முன்வைக்க முடிவு செய்து மக்கள் செயல் கட்சியை (Peoples Action Party) நிறுவி ஆட்சியைப் பிடித்தார். 31 ஆண்டுகள் சிங்கப்பூரின் பிரதமராக இருந்த காலத்தில் தரைமட்டமாகக் கிடந்த சிங்கப்பூரை வானுயர்ந்த கோபுரமாய் மாற்றி அமைத்தார்.
சிங்கப்பூர் உலக வர்த்தகத்தின் மையபுள்ளியானது இவரது தீர்க்க தரிசனத்தால்தான். நவீன சிங்கப்பூரின் ஒவ்வொரு அங்குலமும் இவருடைய பெயரைத்தான் ஜெபித்துக் கொண்டிருக்கிறது.
தேசத் தந்தையாக சிங்கப்பூர் மக்களால் போற்றப்படுகிறார் லீ குவான் யூ. அவரது வாழ்க்கையின் அடிநாதமாக இருக்கும் முக்கியமான விஷயங்கள் அனைத்தும் இந்த நூலில் நான்கு பாகங்களில் விவரிக்கப்பட்டிருக்கிறது.
லீ குவான் யூவின் ஆரம்ப வாழ்க்கை தொடங்கி அவருடைய கல்வி, அரசியல் நுழைவு, அவருடைய இலக்கு, அதை அடைய அவர் எதிர்கொண்ட சவால்கள், அவருடைய கம்யூனிஸ எதிர்ப்பின் பின்னணி, தமிழர்கள் மீது அவர் அன்பு காட்டுவதற்கான காரணம் இவை அனைத்துக்கும் விடை சொல்கிறது இந்தப் புத்தகம்.
-
[RARE] புரட்சிகரமான வாய்ச்சொல் (Revolutionary Phrase)
Rs. 1,990.00Rs. 1,490.00or 3 X Rs.496.67 withRead moreவி.இ.லெனின்
இத்தொகுப்பு நூலில் பிரேஸ்த் சமாதான உடன்படிக்கை குறித்து பெரும்பாலும் 1918ல் வி. இ. லெனின் கட்டுரைகள் அடங்கியுள்ளன.
* 70களிலும் 80களிலும் வெளிவந்த பிரபல்யமான புத்தகங்கள். மிகவும் அரிதான புத்தகங்கள்.
இவை பாவிக்கப்படாத புத்தகங்கள். ஆனால் அச்சிடப்பட்டு 30 வருடங்களுக்கு மேல் கிடங்கில் இருந்ததால் சில புத்தகங்களில் கரையான் அறிப்பு, பக்கங்களின் நிறம் மாறுதல் போன்ற சிறிய சேதங்கள் இருக்கலாம்.
ஆனால் முழுமையாக வாசிக்க முடியுமாக இருக்கும்.
-
[RARE] குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம் (The Origin of the Family, Private Property & the State)
Rs. 1,990.00Rs. 1,390.00or 3 X Rs.463.33 withRead moreப். எங்கல்ஸ்
குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்” என்ற இந்நூலை பி. எங்கெல்ஸ் 1884ஆம் ஆண்டு மார்ச் இறுதி முதல் மே இறுதி வரையிலான இரண்டே மாதங்களில் எழுதினார்.
மார்க்சின் கையெழுத்துப் பிரதிகளைப் புரட்டி பார்த்த பொழுது எங்கெல்ஸ், முற்போக்கு அமெரிக்க விஞ்ஞானி லூ. ஹெ. மார்கன் எழுதிய பண்டைக்காலச் சமூகம் என்ற நூலின் சுருக்க குறிப்பைக் கண்டுபிடித்தார். அதை 1880-1881இல் மார்க்ஸ் எழுதியிருந்தார். அதில் மார்க்சின் பல விமர்சன குறிப்புகளோடுகூட சொந்த கருத்துகளும், பிற நூல்கள், கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பட்ட கூடுதல் விவரங்களும் இடம் பெற்றிருந்தன. அச்சுருக்க குறிப்பைப் படித்து, அது மார்க்சும் தானும் சேர்ந்து உருவாக்கிய வரலாற்றுப் பொருள்முதல்வாதக் கருத்தையும் பூர்விக சமுதாயம் பற்றிய தம் கண்ணோட் டங்களையும் ஊர்ஜிதப்படுத்துவதைக் கண்ட எங்கெல்ஸ், மார்க்சின் குறிப்புகளையும் மார்கனின் நூலில் அடங்கியுள்ள ஒரு சில முடிவுகள், உண்மை விவரங்களையும் நூல் பரவலாகப் பயன்படுத்தி ஒரு தனி நூலை எழுதுவது அவசியம் என்ற முடிவிற்கு வந்தார். இது மார்க்ஸ் ‘விட்டுச் சென்ற ஒரு பணியைச் செய்து முடிப்பதாக” அமையுமென்று எங்கெல்ஸ் கருதினார். இந்நூலை எழுதும் பொழுது, கிரீஸ், ரோம், பண்டைய அயர்லாந்து, பண்டைய ஜெர்மானியர்கள் பற்றியெல்லாம் தான் நடத்திய ஆராய்ச்சிகளின் மூலம் கிட்டிய ஏராளமான விவரங்களையும் எங்கெல்ஸ் பயன்படுத்தினார்.
* 70களிலும் 80களிலும் வெளிவந்த பிரபல்யமான புத்தகங்கள். மிகவும் அரிதான புத்தகங்கள்.
இவை பாவிக்கப்படாத புத்தகங்கள். ஆனால் அச்சிடப்பட்டு 30 வருடங்களுக்கு மேல் கிடங்கில் இருந்ததால் சில புத்தகங்களில் கரையான் அறிப்பு, பக்கங்களின் நிறம் மாறுதல் போன்ற சிறிய சேதங்கள் இருக்கலாம்.
ஆனால் முழுமையாக வாசிக்க முடியுமாக இருக்கும்.
-
[RARE] மனிதக் குரங்கு மனிதனாக மாறிய இடைநிலைப்படியில் உழைப்பின் பாத்திரம் (The Part Played by Labour in the Transition from Ape to Man)
Rs. 1,490.00Rs. 890.00or 3 X Rs.296.67 withRead moreஇ. லி . அந்திரேயெவ்
தமிழில் இரா. பாஸ்கரன்
இச்சிறு நூலில் சோவியத் ஆராய்ச்சியாளர் இ.அந்திரேயெவ், “மனிதக் குரங்கு மனிதனாக மாறிய இடைநிலைப்படியில் உழைப்பின் பாத்திரம்” எனும் எங்கெல்சின் கட்டுரை உண்மையான ஒரு உலகக் கண்ணோட்டம் உருவாகியதன் மீது எத்தகைய தாக்கம் செலுத்தியது என்று விளக்குகிறார். எங்கெல்சின் கருத்துகளை ஆதாரமாகக் கொண்டு நூலாசிரியர், மனிதனும் சமுதாயமும் தோன்றியதன் முக்கிய கட்டங்களைச் சுட்டிக் காட்டுகிறார். எங்கெல்சின் அடிப்படைக் கருத்துகளை நிரூபிக்கும் பல விஞ்ஞான விவரங்களை நூலாசிரியர் நவீன புதைபொருள் மற்றும் மானுடவியல் ஆராய்ச்சிகளிலிருந்து எடுத்துக் காட்டுகிறார். இப்பிரச்சினைகளைப் பற்றிய மார்க்சிய அணுகுமுறையைத் தவிர மற்ற அணுகுமுறைகளையும் ஆசிரியர் விமர்சன நோக்கில் பகுப்பாய்வு செய்கிறார்.
* 70களிலும் 80களிலும் வெளிவந்த பிரபல்யமான புத்தகங்கள். மிகவும் அரிதான புத்தகங்கள்.
இவை பாவிக்கப்படாத புத்தகங்கள். ஆனால் அச்சிடப்பட்டு 30 வருடங்களுக்கு மேல் கிடங்கில் இருந்ததால் சில புத்தகங்களில் கரையான் அறிப்பு, பக்கங்களின் நிறம் மாறுதல் போன்ற சிறிய சேதங்கள் இருக்கலாம்.
ஆனால் முழுமையாக வாசிக்க முடியுமாக இருக்கும்.
-
அமெரிக்க உள்நாட்டுப் போர்/ American Civil War
Rs. 1,690.00or 3 X Rs.563.33 withRead moreவானதி
அமெரிக்க வரலாற்றில் மட்டுமல்ல, உலக வரலாற்றிலும் அமெரிக்க உள்நாட்டுப் போர் ஒரு முக்கியமான திருப்புமுனை நிகழ்வு. அடிமைமுறை நீடிக்கவேண்டுமா என்னும் கேள்வியை மையப்படுத்தி அமெரிக்கா இரு துண்டுகளாகப் பிளவுண்டு நின்று மோதிக்கொண்ட போர் இது. எந்தவொரு மனிதனும் இன்னொருவரைவிடத் தாழ்வானவர் கிடையாது என்னும் அடிப்படை மானுடக் கோட்பாட்டை உயர்த்திப் பிடிக்கும் பொருட்டு மேற்கொள்ளப்பட்ட போர் என்பதால்தான் இது நீதியின் போர் என்று அழைக்கப்படுகிறது. இந்தப் போரின் கதாநாயகனாக ஆபிரகாம் லிங்கன் திகழ்ந்தார். அவருடைய ஆட்சிக்காலத்தில் பெரும்பகுதியை இந்தப் போர் விழுங்கிவிட்டது.”
-
சேரர் சோழர் பாண்டியர்
Rs. 1,890.00or 3 X Rs.630.00 withRead moreஎஸ். கிருஷ்ணன்
பண்டைய தமிழக வரலாற்றில் ஆர்வமுள்ள அனைவருக்குமான விரிவான, எளிமையான அறிமுக நூல். தமிழகத்தின் பெரும்பகுதியை மிக நீண்ட காலத்துக்கு ஆண்டவர்கள் சேர, சோழ, பாண்டியர்கள். முதன் முறையாக சங்க காலத்தில் நமக்கு அறிமுகமாகும் மூவேந்தர்கள் 14ஆம் நூற்றாண்டுவரை தமிழகத்தில் கோலோச்சியிருப்பது உண்மையிலேயே பேரதிசயம்தான். மூவரில் வரலாற்றுத் தரவுகள் அதிகம் கொண்டிருப்பவர்கள் சோழர்கள். இதுவரை அதிகம் ஆராயப்பட்டவர்களும் அதிகம் விவாதிக்கப்பட்டவர்களும் அவர்கள்தாம். சோழர்களோடு ஒப்பிடும்போது பாண்டியர்கள் பற்றி நமக்குத் தெரிந்தவை குறைவு. சேரர்கள் பற்றி ஓர் எளிய சித்திரம் மட்டுமே நமக்குக் கிடைத்துள்ளது. அதிக தரவுகள் ஒரு வகை சவால் என்றால் குறைவான தரவுகள் இன்னொரு வகை சவால். இந்நூல் இரண்டையும் வெற்றிகரமாகக் கடந்து வந்துள்ளது. இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், கல்வெட்டுகள், செப்பேடுகள், இலக்கியப் பதிவுகள், ஆய்வாளர்களின் அலசல்கள் என்று பரந்து விரிந்த தரவுகளின் அடிப்படையில் இந்நூலைக் கட்டமைத்திருக்கிறார் எஸ். கிருஷ்ணன். மூவேந்தர்களின் வரலாற்றோடு தமிழகத்தின் நீண்ட, நெடிய வரலாறும் இதில் இணைந்துவருவதைக் காணலாம்.
-
[RARE] குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் (The Origin of the Family, Private Property and The State)
Rs. 990.00Rs. 790.00or 3 X Rs.263.33 withRead moreஇ . லி . அந்திரேயெவ்
சோவியத் விஞ்ஞானி இ. அந்திரேயெவ் இந்நூலில், எங்கெல்ஸ் எழுதிய குடும்பம், தனிசொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம் எனும் புத்தகத்தின் முக்கிய அம்சங்களை ஆராய்கிறார். பூர்விக சமுதாயத்தின் வளர்ச்சிக் கட்டங்கள், இச்சமுதாயத்திலிருந்து பகைமுரண்பாடுகளடங்கிய வர்க்க சமுதாயத் திற்கு மாறியது, திருமண-குடும்ப உறவுகளின் வரலாற்றுப் அரசும் பரிணாமம், தனியுடைமையும் அரசும் தோன்றியது ஆகியவற்றின் மீது ஆசிரியர் கவனம் செலுத்துகிறார் இவற்றோடு கூட எங்கெல்ஸ் முன்வைத்த பிரச்சினைகளைப் பற்றிய இன்றைய விஞ்ஞானக் கருதுகளையும் வாசகர்கள் அறியலாம்.
* 70களிலும் 80களிலும் வெளிவந்த பிரபல்யமான புத்தகங்கள். மிகவும் அரிதான புத்தகங்கள்.
இவை பாவிக்கப்படாத புத்தகங்கள். ஆனால் அச்சிடப்பட்டு 30 வருடங்களுக்கு மேல் கிடங்கில் இருந்ததால் சில புத்தகங்களில் கரையான் அறிப்பு, பக்கங்களின் நிறம் மாறுதல் போன்ற சிறிய சேதங்கள் இருக்கலாம்.
ஆனால் முழுமையாக வாசிக்க முடியுமாக இருக்கும்.
-
தேசமே உயிர்த்து எழு!
Rs. 1,690.00or 3 X Rs.563.33 withRead moreடாக்டர் க.கிருஷ்ணசாமி
திராவிட மயக்கம், திரைப்பட மயக்கம், குடி மயக்கம், இலவசங்கள், நடுநிலையற்றுச் செயல்படும் ஊடகங்கள் என தமிழகம் பொய்கள் மற்றும் போதையின் மயக்கத்தில் ஆழ்ந்து கிடக்கிறது. அவற்றிலிருந்து தமிழக மக்களை மீட்க, ஊராட்சி நடப்புகள் முதல் உலக நடப்புகள் வரை கை பிடித்துக் கற்றுத்தரும் நல்ல ஆசானாகவும் நோயுற்றுக் கிடக்கும் தமிழ்ச் சமூகத்தின் மீது மிகுந்த அக்கறைகொண்ட மருத்துவராகவும் டாக்டர் க.கிருஷ்ணசாமி இந்த நூலில் வெளிப்பட்டிருக்கிறார்.
இந்திய ஒன்றியமென்றால் தமிழகம் ஊராட்சியா?
திராவிட இயக்கங்களால் சாதியை ஒழிக்க முடிந்ததா?
சமூக வலைத்தளங்களுக்குக் கட்டுப்பாடுகள் தேவையா? காஷ்மீரில் நரேந்திர மோதியும் அமித் ஷாவும் செய்தது சரியா? கீழவெண்மணியில் தேவேந்திரகுல வேளாளர்கள், புதிய கல்விக் கொள்கை, பாலஸ்தீனம் என்று விரிவாகவும் ஆழமாகவும் இன்னும் பல தலைப்புகளை துணிவோடு விவாதிக்கிறது இந்நூல். தமிழக அரசியல் களத்தில் தனித்தன்மையுடனும் சுய சிந்தனையுடன் செயல்படும் டாக்டர் க.கிருஷ்ணசாமியின் கருத்துகள் முதல்முறையாகத் தொகுக்கப்பட்டு உங்கள் கைகளில்.
-
பாகிஸ்தான்: இந்தியப் பிரிவினை
Rs. 3,990.00or 3 X Rs.1,330.00 withRead moreடாக்டர் பி.ஆர். அம்பேத்கர்
பாகிஸ்தான் என்ற தனி நாடு தேவையா என்பது தொடர்பாக இந்து தரப்பு, முஸ்லிம் தரப்பு என இரண்டுக்குமான வாதங்களை மிக விரிவாக, மிக அழுத்தமாக முன்வைத்திருக்கிறார் டாக்டர் அம்பேத்கர். காந்தி, சாவர்க்கர், ஜின்னா ஆகியோரின் கோணம், பிரிவினை தொடர்பான உலக நாடுகளின் வரலாறு என அனைத்துக் கோணங்களும் விவாதிக்கப்பட்டுள்ளது. எந்த அளவுக்கு ஆழமாகவும் எந்த அளவுக்கு நடுநிலையோடும் அண்ணல் இந்நூலை எழுதியிருக்கிறார் என்பதை இதிலிருந்தே புரிந்துகொள்ளமுடியும்.
விரிவான ஆய்வுக்குப் பிறகு, பிரிவினைதான் ஒரே தீர்வு எனும் முடிவுக்குதான் அம்பேத்கரும் வந்து சேர்கிறார். அந்தப் பிரிவினையை எவ்வாறு நடைமுறைப்படுத்தவேண்டும் என்பது குறித்து அவர் முன்வைக்கும் பார்வை தனித்துவமானது. ஆனால் அவர் பார்வையை ஒருவரும் கணக்கில் கொள்ளவில்லை. அதன்பின் நடந்தவை நமக்குத் தெரியும். 1940களில் வெளிவந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அம்பேத்கரின் இந்நூலை இன்றைய அரசியல் சூழலில் நாம் வாசிப்பதும் விவாதிப்பதும் முக்கியம்.
-
கருப்பு சிவப்பு காவி
Rs. 1,390.00or 3 X Rs.463.33 withRead moreR.Rangaraj Pandey
எது இந்து மதம், யார் இந்து, ஏன் இந்து?திருவள்ளுவர் ஹிந்துவா?கலப்புத் திருமணங்கள் சரியா?விளம்பரங்கள் – வெப் சீரிஸ் – ஹிந்து உணர்வைக் காயப்படுத்துவதுதான் நோக்கமா?பெரியார் உண்மையிலேயே பெண்ணுரிமை வாதிதானா?சுப.வீயின் ஜாதி துவேஷம்! · திருமாவளவனின் மனு ஸ்மிருதி குறித்த அவதூறு… · கறுப்பர் கூட்டம் – முருகன் சர்ச்சை… · அயோத்தி தீர்ப்பு சரியா தவறா? ·ஆதிக்க ஜாதி எது?தமிழகச் சூழலில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டுவரும் விஷயங்கள் தொடர்பான ரங்கராஜ் பாண்டேவின் தெளிவான, நிதானமான, அழுத்தமான பார்வைகள். ஒவ்வொரு இந்துவும் இந்துமதம் பற்றிப் புரிந்து கொள்ள விரும்புபவர்களும் தெரிந்துகொள்ள வேண்டிய உண்மைகள். -
கியூப புரட்சிப் போர் குறிப்புகள்
Rs. 2,890.00or 3 X Rs.963.33 withRead moreசே குவேரா
சே குவேரா எனும் பெயர், சுதந்திரத்தின் குறியீடு. விடுதலையின் நிரந்தர பிம்பம் அவன். மனிதகுல வரலாற்றில் தன்மறுப்புக்கு முதல்சாட்சி அவன். இறந்தும் இறவா மானுடன் அவன். புரட்சிகர அறம் என்பதனை ஒரு சொல்லால் சுட்ட வேண்டுமெனில், அதன் பெயர் சே குவேரா. சர்வதேசிய மனிதன் என்று சொன்னால், நடந்தும் கடந்தும் விழுந்தும் எழுந்தும் அதன்வழி நடந்தவன் அவன்.
வரலாற்றின் போக்கினில் பற்பல புரட்சியாளர்களின் பெயர்கள் தேய்ந்துபோக, சே குவேரா எனும் பெயர் மட்டும் இன்னும் இன்னுமென ஒளிரக் காரணம் என்ன? உலக வரலாற்றில் இயேசு கிறிஸ்துவை அடுத்து தத்துவாதிகளையும், கலைஞர்களையும், இலக்கியவாதிகளையும், திரைப்பட மேதைகளையும் கவர்ந்தவர்களில் அவனே தலையானவன்.
ஆயுத விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு தலைமைத்துவப் போராளியாக அதிகம் வாசித்தவன்; படைப்பிலக்கியத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவன்; தனது அனுபவங்களை, தனது சிந்தனைகளை அதிகமும் எழுத்தில் பதிவுசெய்தவன் உலக வரலாற்றில் சே குவேராதான்.
-
மோட்டார் சைக்கிள் டைரிகள் (The Motorcycle Diaries)
Rs. 1,490.00or 3 X Rs.496.67 withRead moreசே குவேரா
நான் இந்த குறிப்புகளை முதன்முறை படித்தபோது, அவை புத்தக வடிவில் இல்லை. இதை எழுதிய மனிதரை எனக்கு தெரியாது. படிக்கப் படிக்க, இந்த மனிதரைப் பற்றி தெளிவாகத் தெரிந்தது. நான் அவருடைய மகள் என்று சொல்லிக்கொள்வதில் பெருமைப்படுகிறேன். இந்தப் புத்தகத்தை நீங்கள் படித்து முடித்ததும், அதே பாதையில் நீங்களும் பயணிக்க ஆசைப்படுவீர்கள் என்பதில் எனக்கு சந்தேகமேயில்லை.
அது, அவர் விவரித்த அழகுக்காகவும் இருக்கலாம் அல்லது அவர் பகிர்ந்துகொண்ட அவருடைய ஆழமான உணர்வுகளாலும் இருக்கலாம். பல இடங்களில் நானே, ஆல்பெர்டோ கிளைடோலின் இடத்தில் இருந்து, என் தந்தையின் முதுகைப் பிடித்துக்கொண்டு, அவருடன் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்வதுபோல் உணர்ந்தேன். ஒருவேளை உங்களுக்கு அவர் சென்று பாதையிலேயே பயணம் செய்ய வாய்ப்புக் கிடைத்தால், அங்கே பல விஷயங்கள் இன்னும் மாறாமலும் அல்லது இன்னும் மோசமாக ஆனதையும் பார்ப்பீர்க்கள் என்பது வருத்தத்தக்க விஷயம். பின்னாளில் சே என்றழைக்கப்பட்ட அந்த இளைஞனைப்போல, இந்த நிதர்சன உண்மை நம் அனைவருக்கும் ஒரு சவால். நம்முடைய மக்கள் எப்படியெல்லாம் துன்பப்படுகிறார்கள் என்று புரிந்துகொண்டு, அவர்களுக்கென்று ஓர் புதிய உலகைப் படைப்பது நம்முடைய கடமையாகும். நான் மிகவும். நேசிக்கும் அந்த மனிதருடன் உங்களை விட்டுவிடுகிறேன்.
-
வீரம் விளைந்தது ( How the Steel Was Tempered )
Rs. 2,640.00or 3 X Rs.880.00 withRead moreநிக்கொலாய் ஒஸ்திரோவ்ஸ்கி
தமிழில்: எஸ். ராமகிருஷ்ணன்
மானுட விடுதலைக்காக அர்ப்பணிப்பான வாழ்வையும் அதன் அர்த்தங்களையும் விவரிக்கும் இந்நாவலின் பாத்திரங்கள் உண்மையானவை. 1915ம் ஆண்டு முதல் 1931ம் ஆண்டுவரை இந்நூலாசிரியரும் அவரது தோழர்களும் நடத்திய வீரம் செறிந்த போராட்டங்களையும் தியாகங்களையும் கண்முன் விரித்துச்செல்கிறது. புரட்சிகர அரசியல் போராட்ட உணர்வுகளையும், வீரதீர சாகசங்களையும் விவரிக்கும் இந்நாவலில் இளமை, காதல், சோகம், வீரம், தியாகம், தேசபக்தி, மனிநதேயம் போன்றவை குறித்தும் செறிவாக முன்வைக்கப்பட்டுள்ளன.
புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளர் மக்ஸிம் கார்க்கியால் பெரிதும் போற்றிப் புகழப் பட்ட இந்நாவல் முதன்முதலாக 1934ம் ஆண்டு வெளியானது. உலகெங்கும் 48 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட இந்நூல் சோவியத் நாட்டில் 495 பதிப்புகள் வெளியானதென்பது இந்நூல் மகத்துவத்தை உணர்த்தும்.
-
டாலர் தேசம்: அமெரிக்காவின் அரசியல் வரலாறு / Dollar Thesam
Rs. 6,600.00or 3 X Rs.2,200.00 withRead moreபா.ராகவன்
இது அமெரிக்காவின் அரசியல் வரலாறு. அமெரிக்காவின் அரசியல் சரித்திரத்தை அறிந்துகொள்வதென்பது ஒரு வகையில் உலக சரித்திரத்தையே ஓர் அவசரப் பார்வை பார்ப்பதற்கு ஒப்பாகும்.
நல்ல விதமாகவும் மோசமான விதமாகவும் அமெரிக்கா உறவு கொண்ட தேசங்கள் அனைத்தின் அரசியல் நிலைமையையும் கொஞ்சமாவது தெரிந்துகொள்ளாமல் – அமெரிக்கா ஏன் அத்தேசங்களுடன் உறவு அல்லது குறைந்தபட்சம் தொடர்பு கொண்டது என்பதைப் புரிந்துகொள்வது சிரமம். தனக்கு லாபமில்லாத எந்த ஒரு தேசத்துடனும் அமெரிக்கா உறவு வைத்துக்கொண்டதில்லை; உள் நாட்டு விவகாரங்களில் பங்கு கொண்டதில்லை; யுத்தங்கள் தொடுத்ததில்லை என்பது அதன் சரித்திரம் முழுவதும் காணக் கிடைக்கும் உண்மை.
இது தொடர்பாக, ஏராளமாகக் கிடைத்த ஆதாரங்களே இந்நூலின் மௌன அடித்தளம். டாலர் தேசம், குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் தொடராக வெளியானது. தமிழில் மிக அதிகம் விற்பனையான, வாசிக்கப்பட்ட, கொண்டாடப்பட்ட அரசியல் பிரதி இதுவே.
-
நாகரிகங்களின் மோதல் ( Naharihangalin Modhal ) The Clash of Civilizations
Rs. 3,560.00Rs. 3,390.00or 3 X Rs.1,130.00 withRead moreசாமுவேல் பி.ஹண்டிங்டன்
தமிழில்: க.பூரணச்சந்திரன்
சர்வதேச உறவுகள் பற்றிய ஒரு செவ்வியல் ஆராய்ச்சி நூலான இது, போர்ச் சூழலை உருவாக்குகிற உலக அரசியலை இயக்கும் சக்திகளைப் பற்றிய ஒரு தொலைநோக்குள்ள, வலிமைவாய்ந்த பகுப்பாய்வு.
உலகின் மிகவும் செல்வாக்குள்ள சிந்தனையாளரான சாமுவேல் பி. ஹண்டிங்டன், வெவ்வேறான பண்பாட்டு ‘நாகரிகங்க’ளிடையிலான மோதல்கள்தான் உலக அமைதிக்கு மிகப் பெரிய அபாயம் என்று முன்னறிவிப்புமிக்க இந்த நூலில் வாதிடுகிறார். சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு முதன்முதலாக இந்த நூல் வெளியிடப்பட்டது.
இன்றைய உலகம் முதலாளியம், கம்யூனிசம் என இரு எதிர்முனைகளால் ஆனதல்ல, மத அடிப்படையிலமைந்த எட்டு வெவ்வேறான குழுக்களால் ஆனது; முஸ்லிம்களின் எழுச்சிப் பரவல், கிழக்காசிய நாடுகளிலும் சீனாவிலும் ஏற்பட்டுவரும் பொருளாதார வளர்ச்சி எவ்வாறு மேற்கத்திய ஆதிக்கத்தைச் சவாலுக்கு உட்படுத்துகின்றன; அவை உலக அரசியலை எவ்விதம் மாற்றிக்கொண்டிருக்கின்றன என்பதை இந்த நூல் புத்திப்பூர்வமாகப் பகுப்பாய்வு செய்கிறது.
அணுஆயுதப் பெருக்கம், புலம்பெயர்தல், மனித உரிமைகள், ஜனநாயகம் போன்றவற்றில் உள்ள பிரச்சினைகள் எவ்வாறு நாகரிகங்களுக்கிடையிலான மோதலைத் தீவிரப்படுத்துகின்றன; தேசங்களுக்கிடையிலான கருத்தியல் வேறுபாடுகளை, கலாச்சார வேறுபாடுகள் இடப்பெயர்ச்சி செய்கின்ற நிலையில், உலக அரசியல் எவ்வாறு மறுஆக்கம் செய்யப்படுகிறது; பனிப்போர்க் காலத்தின் பழைய ஒழுங்கை உலக முழுவதும் நிகழும் புதிய மோதல்களும் புதிய கூட்டுறவும் எவ்வாறு பதிலீடு செய்துவருகின்றன என்பதையும் இந்த நூல் விவரிக்கிறது.
ஜப்பானியம், சீனியம், இந்துத்துவம், இஸ்லாமியம், மேற்கத்தியம் என்ற போர்வையில் கிறித்துவம், யூதேயம் போன்ற ஆதிக்கக் கலாச்சாரங்களிடையே நிகழும் தலைமைக்கான போராட்டம் தவிர்க்க முடியாதது என்ற சிந்தனையைத் தூண்டும் ஹண்டிங்டனின் முடிவு, இன்று ஆப்கான் முதல் சிரியா வரை நிதர்சனமாகி வருகிறது. இதன் மூலம் இன்றைய அமெரிக்க அயல்நாட்டுக் கொள்கையை நாம் புரிந்துகொள்வதற்கு இந்த நூல் இன்றியமையாத ஒன்றாகவும் ஆகியிருக்கிறது.
-
இளையராஜா ஏன் முதல்வர் வேட்பாளர் இல்லை?
Rs. 1,190.00or 3 X Rs.396.67 withடி. தருமராஜ்
இளையராஜாவிடமிருந்து தொடங்கும் இந்நூல் சினிமா, சாதி, அதிகாரம் மூன்றும் சந்தித்துக்கொள்ளும் ஒரு மர்மமான புள்ளியில் வேர் பிடித்து, நம் உணர்வு, ரசனை, பண்பாடு, மரபு, நிலம், மொழி, தத்துவம், வரலாறு என்று கிளைகளைப் பரப்பி, விரிந்துகொண்டே செல்கிறது. கிராமமும் நகரமும்; சிறிய பண்பாடும் பெரிய பண்பாடும்; கபாலியும் கரகாட்டமும்; சங்க இலக்கியமும் மேற்கத்திய மொழியியலும்; வன்முறையும் காதலும்; சாதியமும் சினிமாவும் எதிர்பாராத தருணங்களில் சந்தித்துக்கொள்கின்றன. நாம் இதுவரை கேட்டிராத உரையாடல்களை நிகழ்த்துகின்றன.
இந்த அபூர்வ சந்திப்புகளையும் உரையாடல்களையும் கூர்ந்து அவதானித்து பதிவு செய்திருக்கிறார் டி. தருமராஜ். இரண்டு அட்டைகளுக்கு நடுவில் சிக்கிக் கிடக்காமல் உயிர்ப்பெற்று எழுந்து வந்து நம்முன் நிற்கின்றன அவர் எழுத்துகள். இளையராஜாவின் பாடல்கள் போல.
பிரிட்டிஷ் உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம் ( British Ulavaazhiyin Opputhal Vaakumoolam )
Rs. 590.00or 3 X Rs.196.67 withRead moreஆலிவர் ஹெம்பர்
சதித்திட்டங்களைத் தெரிந்து கொள்வது காலம் காலமாய் மனிதர்களுக்கு ஆர்வமூட்டக்கூடிய விஷயம். அதனால்தான் இடதுசாரிகளும் வலதுசாரிகளும் ஏறக்குறைய அனைவருமே சதிக்கொள்கை மீது நம்பிக்கை வைக்கிறார்கள்.
பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரிட்டிஷ் காமன்வெல்த் (பொதுநல) அமைச்சகம் உலகம் முழுவதும் தனது காலனியை ஏற்படுத்துவதற்காக ஆயிரக்கணக்கான ஆண்களையும் பெண்களையும் நன்கு பயிற்றுவித்து உளவாளிகளாக அனுப்புகிறது. அவர்களில் ஒருவர்தான் ஆலிவர் ஹெம்பர்.
அவர் அரபு நாடுகளிலும் ஆசிய நாடுகளிலும் தமக்கு அளிக்கப்பட்ட பணியை எவ்வாறு மேற்கொண்டார் என்பதை ஒப்புதல் வாக்குமூலமாக இந்நூலில் பதிவு செய்கிறார்.
எம்.ஜி.ஆர் முதல் ரஜினி வரை
Rs. 990.00or 3 X Rs.330.00 withRead moreஜீவசகாப்தன்
தமிழக அரசியல் வரலாறும் தமிழகத் திரைப்பட வரலாறும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை. அண்ணா, எம்.ஜி.ஆர், சிவாஜி முதல் இன்றைய ரஜினி, கமல், சீமான் வரை நீள்கிறது இந்த அசாதாரணமான பிணைப்பு. இந்த இரு துறைகளும் சந்தித்துக்கொண்ட புள்ளி எது? இரண்டும் உரையாடத் தொடங்கியது எப்போது? கொண்டும் கொடுத்தும் செழிக்கும் அளவுக்கு இந்த உறவு எவ்வாறு வளர்ந்தது? சினிமா உலகில் அரசியலும் அரசியல் களத்தில் சினிமாவும் இன்று வகிக்கும் இடம் என்ன?
பிரபல ஊடகவியலாளரான ஜீவசகாப்தனின் இந்நூல் சினிமாவையும் அரசியலையும் கோட்பாட்டின் அடிப்படையில் ஆழமாக அணுகி ஆராய்கிறது. ஒரு பக்கம் அண்ணா முதல் ரஜினி வரையிலான சுவையான ஒரு கதை விரிகிறது என்றால் அண்ணாயிசம் முதல் ஆன்மிக அரசியல் வரையிலான கோட்பாட்டுகளின் கதை அடியாழத்தில் அற்புதமாக படர்கிறது.
பெரியார் முதல் இந்துத்துவம் வரை; பாப்புலிசம் முதல் சாதி அரசியல் வரை; மார்க்சியம் முதல் மய்யம் வரை. முந்தைய வரலாற்றையும் இன்றைய அரசியலையும் சுவாரஸ்யமாக இணைக்கும் இந்நூல், ஆழமான விவாதங்களை அழகிய நடையில் முன்வைக்கிறது.
புதிய கல்விக் கொள்கை 2020: வரமா சாபமா?
Rs. 1,190.00or 3 X Rs.396.67 withRead moreஆர். ரங்கராஜ் பாண்டே
நரேந்திர மோதி தலைமையிலான பாஜக அரசு 2014-ல் ஆட்சிப் பொறுப்பேற்றதும் கல்வித்துறையில் காலத்துக்கேற்ற மாற்றங்களைக் கொண்டு வர முயற்சியெடுத்தது. ஆசிரியர்கள், கல்வியாளர்கள், விஞ்ஞானிகள், தொழில் நிபுணர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் எனப் பல தரப்பினரின் கருத்துகளைக் கேட்டுப் புதிய கல்விக் கொள்கை – 2020 வடிவமைக்கப்பட்டு அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்றுவிட்டிருக்கிறது. புதியகல்விக்கொள்கை குறித்து பலதவறானகருத்துகள், அரசியல் உள்நோக்கம் கொண்ட குற்றச்சாட்டுகள் பொதுவெளியில் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆர்.ரங்கராஜ் பாண்டே அனைத்துக்கும் மிகத் தெளிவான, அழுத்தமான பதில்களை எளிய நடையில் இந்தப் புத்தகத்தில் முன்வைத்திருக்கிறார்.அயோத்திதாசர்: பார்ப்பனர் முதல் பறையர் வரை
Rs. 2,390.00or 3 X Rs.796.67 withRead moreடி. தருமராஜ்
இந்த அளவுக்கு விரிவாகவும் ஆழமாகவும் அயோத்திதாசர் கொண்டாடப்படுவது இதுவே முதல்முறை. சாத்தியமாகக்கூடிய அத்தனை கோணங்களிலும் அயோத்திதாசரை அணுகி, நுணுக்கமாக ஆராயும் இப்படியொரு நூல் வெளிவந்ததில்லை.
அயோத்திதாசர் தனி மனிதரல்ல, ஒடுக்கப்பட்டவர்களின் சுயம். அடையாளமற்றவர்களின் ஆவேசம். நூற்றாண்டுகளாகத் தாழ்நிலையில் வைக்கப்பட்டிருக்கும் குரலற்ற பெருந்திரளின் நமட்டுச் சிரிப்பு. அயோத்திதாசர் மீது படிந்திருந்த கனமான பண்டிதத் திரையை விலக்கி அவரை ஒரு மானுடராக வெளிப்படுத்தியதில் டி. தருமராஜின் பங்களிப்பு முதன்மையானது. அரசியல் கட்சிகள் தொடங்கி ஆய்வாளர்கள் வரை பலரும் அயோத்திதாசரைத் தங்களுடைய ஆதர்சமாக வரித்துக்கொண்டது அதற்குப் பிறகுதான்.
பார்ப்பனர்கள் அதிகாரமிக்கவர்களாக மாறியது எப்படி? பறையர் என்னும் சொல் எப்படித் தோன்றியது? பூர்வ பௌத்தர்கள் யார்? திராவிட இயக்கத்துக்கும் அயோத்திதாசருக்கும் என்ன உறவு? பெரியார் , அயோத்திதாசருக்கு எதிரானவரா? அயோத்திதாசர் சொல்லும் பல கதைகளை ஆய்வுலகம் ஏற்றுக்கொள்கிறதா? சாதி ஆதிக்கத்தை எதிர்த்த அயோத்திதாசருமேகூட அருந்ததியரைக் கீழாகத்தான் பார்த்தார் என்பது உண்மையா? அம்பேத்கரை அயோத்திதாசரோடு இணைத்து வாசிக்கலாமா? இன்றைய காலகட்டத்துக்கு அயோத்திதாசர் ஏன் தேவை?
[RARE] விஞ்ஞான கம்யூனிசம் என்றால் என்ன? (Vinjaana Communism enral enna?)
Rs. 1,290.00Rs. 990.00or 3 X Rs.330.00 withRead moreஎல். செலிஸ்னியோவ்
வி. ஃபிதிசவ்* 70களிலும் 80களிலும் வெளிவந்த பிரபல்யமான புத்தகங்கள். மிகவும் அரிதான புத்தகங்கள்.
இவை பாவிக்கப்படாத புத்தகங்கள். ஆனால் அச்சிடப்பட்டு 30 வருடங்களுக்கு மேல் கிடங்கில் இருந்ததால் சில புத்தகங்களில் கரையான் அறிப்பு, பக்கங்களின் நிறம் மாறுதல் போன்ற சிறிய சேதங்கள் இருக்கலாம்.
ஆனால் முழுமையாக வாசிக்க முடியுமாக இருக்கும்.
[RARE] சோஷலிசம் என்றால் என்ன? ( Socialism Enral Enna? )
Rs. 1,490.00Rs. 990.00or 3 X Rs.330.00 withRead moreடி. கிளிமேன்தியெவ்
தி. வசீலியெவா* 70களிலும் 80களிலும் வெளிவந்த பிரபல்யமான புத்தகங்கள். மிகவும் அரிதான புத்தகங்கள்.
இவை பாவிக்கப்படாத புத்தகங்கள். ஆனால் அச்சிடப்பட்டு 30 வருடங்களுக்கு மேல் கிடங்கில் இருந்ததால் சில புத்தகங்களில் கரையான் அறிப்பு, பக்கங்களின் நிறம் மாறுதல் போன்ற சிறிய சேதங்கள் இருக்கலாம்.
ஆனால் முழுமையாக வாசிக்க முடியுமாக இருக்கும்.
தேச செல்வங்களின் கதை
Rs. 1,990.00Rs. 1,790.00or 3 X Rs.596.67 withRead moreலியோ ஹுபர்மேன்
தமிழில்: க. மாதவ்
இந்தப் புத்தகம் ஐரோப்பிய நில உறவுகளை அலசுகிறது. சிலுவைப்போர்களுக்கும் வர்த்தக விரிவாக்கத்திற்கும் இருந்த தொடர்புகள், புதிய பொருள் உற்பத்திகளின் தேவைகள், புதிய வர்க்கங்களின் தோற்றம், முதலாளித்துவத்தின் வளர்ச்சி, நிலப்பிரபுத்துவம்-முதலாளித்துவத்தின் மோதல், தேசிய அரசுகளின் உருவாக்கம், அரசியல் அமைப்புகளின் தோற்றம்-வளர்ச்சி, தொழிற்புரட்சி, தொழிற்சாலை உற்பத்திமுறையின் தோற்றம், புதிய உலகங்களை கண்டுபிடித்தல், அடிமை வர்த்தகம், ஆரம்ப மூலதன குவியல், சந்தை விரிவாக்கம், மூலதன பரவல், ஏகாதிபத்திய வளர்ச்சி, சந்தைகள் பங்கீடு-மறுபங்கீடுக்கான யுத்தங்கள், தொழிலாளி வர்க்கத்தின் தோற்றம், தொழிலாளி வர்க்கத்தின் ஆட்சி அமைதல், பாசிசத்தின் வளர்ச்சி ஆகிய வரலாற்று நிகழ்வுகளை மத்திய யுக காலந்தொட்டு நவீனகாலம் வரையிலான பொருளாதார வளர்ச்சிப் போக்குகள் தக்க சான்றுகளுடன் தொகுக்கப்பட்டுள்ளன.
நாம் அறிந்த வரலாற்று பிரபலங்களின் உண்மை சொரூபம் இந்த வரலாற்று நிகழ்வுகளில் எவ்வாறு இருந்தது என்பதை இந்தப் புத்தகம் மிக சரியாக விளக்குகிறது. இந்தப் பிரபலங்களின் வர்க்க சார்பை மிகத் தெளிவாக சித்தரிக்கிறது.
இந்தப் புத்தகத்தின் பேசுபொருள் சிக்கலான சமூக, அரசியல், பொருளாதாரமாக இருந்தாலும், லியோ ஹூபர்மேன் அதை ஒரு கதைசொல்லியின் பாங்கில் கவித்துவமாக விளக்கியிருப்பதை வாசகர்கள் உணர்வார்கள்.
ஒரு புத்திரனால் கொல்லப்படுவேன்
Rs. 1,890.00or 3 X Rs.630.00 withRead moreமருதன்
‘நீங்கள் எத்தனை பலமிக்கவராக வேண்டுமானாலும் இருந்துகொள்ளுங்கள். நீங்கள் உயர்த்திப் பிடிக்கும் பதாகையின் நிறம் என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். உங்கள் உதடுகள் எத்தகைய உயர்ந்த உண்மையை உச்சரித்தாலும் கவலையில்லை. நீங்கள் மக்களை மதியாதவராக, அவர்களைத் துன்புறுத்துபவராக, அவர்களுடைய சடலங்கள் பெருகுவதைப் பொருட்படுத்தாதவராக இருந்ததால் உங்கள் பலமும் சித்தாந்தமும் உண்மையும் எம்மக்களுக்குப் பயனற்றவை’ என்றார் ராஜனி திராணகம. ஒரு புத்திரனால் அவர் கொல்லப்பட்டார்.
நக்சல்பாரி அலையால் ஈர்க்கப்பட்ட அனுராதா கண்டிக்கு ராஜனி போலவே வாழ்க்கை என்பதையும் போராட்டம் என்பதையும் வெவ்வேறானவையல்ல. இருவரும் கொல்லப்படுவதற்கு அவர்கள் எழுப்பிய எதிர்க்குரலே காரணமாக அமைந்துவிட்டது. சில்வியா பிளாத்தின் கலகம் கவிதையாக வெளிப்பட்டது என்றால் அருந்ததி ராய்க்கு அரசியலாக. <Br> மீராவின் பாடல், கங்குபாய் ஹங்கலின் இசை, மஹாஸ்வேதா தேவியின் சிறுகதை, உமா சக்கரவர்த்தியின் பௌத்தம், ரொமிலா தாப்பரின் வரலாறு என்று பிரிக்கமுடியாதபடி நம்மோடு கலந்துவிட்டிருக்கும் தனித்துவமிக்க சில பெண்களின் எதிர்க்குரல்களைத் தொகுத்தெடுத்துப் பதிவு செய்கிறது இந்நூல்.
சத்திய சோதனை: மகாத்மா காந்தி சுயசரிதை ( Saththiya Sothanai )
Rs. 2,190.00or 3 X Rs.730.00 withRead moreமகாத்மா காந்தி
“இந்த உலகத்திற்கு நான் அறிவுறுத்த வேண்டியது எதுவுமில்லை. சத்தியமும் அகிம்சையும் மலைகளைப்போல பழமையானவை.”
“சத்திய சோதனை, என்ற அரிதான, அபூர்வமான சுயசரிதை மகாத்மா காந்தியின் மனத்தின் செயல்பாடுகளை வெளிக்காட்டும் ஒரு சாளரம், பலகணி – அவரது இதய உணர்வுகளை வெளிப்பபடுத்தும் சாளரம் – சாதாரணமாக இருந்த மனிதரை இந்திய நாட்டின் தந்தை என்ற உயர்ந்த நிலைக்கு, உன்னத நிலைக்கு எது உயர்த்தியது என்பதைப் புரிந்து கொள்வதற்கான தெளிவைக்காட்டும் பலகணி.
காந்தி சிறுவராக இருந்த காலத்திலிருந்து தொடங்கி இந்தியாவில் சுதந்திர இயக்கம் அதன் தொடக்க நிலையில் இருந்த காலம் வரையுள்ள அவரது வாழ்க்கையின் நிலைகளைக் காட்டுவது வரை அழைத்துச் சென்று அவரது பரிசோதனைகளையும் மனக்குமுறல்களையும் அவருடைய வாழ்க்கைத் தத்துவத்தை உருவாக்கிய சூழ்நிலைகளையும் எடுத்துக்காட்டியுள்ளார். குழந்தைத் திருமணம், இங்கிலாந்தில் கல்வி தென்னாப்பிரிக்காவில் வக்கீல் தொழில், அங்கே அவரது சத்தியாகிரகம் உள்ளிட்டலை இவற்றுள் அடங்கும்.
அவருக்கு சுயசரிதை எழுதும் நோக்கம் இல்லை. ஆனால் இனவெறி வன்முறை, காலனித்துவம் ஆகியவற்றுக்கு எதிரான அவருடைய போராட்டத்தால் முழுமையான சத்தியத்தைத் தேடிய தன்னுடைய சத்திய சோதனை அனுபவங்களை இதில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
தலித்துகள்: நேற்று இன்று நாளை
Rs. 1,690.00or 3 X Rs.563.33 withRead moreஆனந்த் தெல்தும்ப்டே
பாலு மணிவண்ணன்இந்திய மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்கு வகிக்கும் தலித் மக்கள் குறித்த விரிவான, ஆழமான அறிமுகம் இந்நூல்.
· சாதி அமைப்பு எப்படித் தோன்றியது? அந்த அமைப்பு எப்படி தலித்துகளை ஒடுக்கியது?
· அடிமைமுறை, தீண்டாமை, இனவெறுப்பு ஆகிய மூன்றுக்கும் இடையிலான ஒற்றுமைகளும் வேற்றுமைகளும் என்னென்ன?
· பௌத்தம், சமணம், பக்தி இயக்கம் ஆகியவை சாதி அமைப்பை எவ்வாறு எதிர்த்தன?
பண்டைய இந்தியாவிலும், காலனியாதிக்க காலகட்டத்திலும் சுதந்தரத்துக்குப் பிறகும் தலித்துகளின் வாழ்நிலையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டன?
. அம்பேத்கரின் வரவு, அவர் முன்னெடுத்த போராட்டங்கள், அவருடைய அரசியல் தலைமை, சாதியமைப்பு குறித்த அவர் ஆய்வுகள், பௌத்த மதமாற்றம் ஆகியவை தலித்துகளிடையே செலுத்திய தாக்கங்கள் எப்படிப்பட்டவை?
· அம்பேத்கருக்குப் பிந்தைய தலித் இயக்கங்களின் இன்றைய நிலை என்ன?
பகுஜன் சமாஜ் போன்ற அரசியல் கட்சிகள் சாதித்தவை என்ன, செய்யத் தவறியவை என்ன? நியோலிபரல் அமைப்பு தலித் மக்களின் வாழ்நிலையில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது?
· இட ஒதுக்கீடு தலித் மக்களுக்குப் பொருளாதார விடுதலையைப் பெற்றுக்கொடுத்திருக்கிறதா?
· தலித்துகள் அரசியல் அதிகாரம் பெற்றவர்களாக இன்று இருக்கிறார்களா?
மைய நீரோட்டத்தில் அவர்கள் இணைந்துவிட்டார்களா?
· தலித்துகள் எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்னைகள் என்னென்ன?
அவர்கள் எதிர்கொண்டு தீர்க்கவேண்டிய சவால்கள் எவை?
ஆனந்த் டெல்டும்டேவின் இந்நூல் தலித்துகளின் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார வரலாறாகவும் அரசியல் போராட்ட ஆவணமாகவும் ஒரே சமயத்தில் திகழ்கிறது.
மெயின் காம்ஃப் / Mein Kampf
Rs. 1,950.00or 3 X Rs.650.00 withRead moreஅடால்ஃப் ஹிட்லர்
“Mein Kampf” என்பது அடால்ஃப் ஹிட்லர் 1920 களின் முற்பகுதியில் சிறையில் இருந்த காலத்தில் எழுதிய புத்தகம். ஹிட்லரின் அரசியல் சித்தாந்தம் மற்றும் நம்பிக்கைகள், அவரது தீவிர யூத-விரோதக் கருத்துக்கள், ஆரிய இனத்தின் மேன்மை பற்றிய நம்பிக்கை மற்றும் ஜெர்மனியில் ஒரு சர்வாதிகார அரசை உருவாக்குவதற்கான அவரது விருப்பம் உள்ளிட்டவற்றை புத்தகம் கோடிட்டுக் காட்டுகிறது.
இந்த புத்தகம் அதன் இனவெறி மற்றும் யூத-விரோத உள்ளடக்கம் மற்றும் இரண்டாம் உலகப் போரின் போது நாஜி ஆட்சி செய்த அட்டூழியங்களுடனான அதன் தொடர்பு காரணமாக மிகவும் சர்ச்சைக்குரிய மற்றும் புண்படுத்தும் படைப்பாக பரவலாகக் கருதப்படுகிறது. இது பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது மற்றும் பொதுவாக வெறுப்பு மற்றும் சகிப்புத்தன்மையின் அடையாளமாக பார்க்கப்படுகிறது.
கலகப் புத்தகம்
Rs. 1,290.00or 3 X Rs.430.00 withRead moreநிவேதிதா லூயிஸ்
‘எந்த அறிவுச் செயல்பாட்டையும் அப்படியே ஏற்றுக் கொள்வதில் சிக்கல் உள்ளது எனக் கலைத்துப் போட்டுக் கலக வாசிப்புக்கு அடித்தளம் இடும் நூல்.’ — அ. மங்கை
கலகக்காரர் என்றதும் புத்தர், இயேசு, ஸ்பார்டகஸ், காந்தி, சே குவேரா போன்ற நாயகர்கள்தாம் உடனடியாக நம் நினைவுக்கு வருகின்றனர். அநீதிக்கு எதிராகப் போரிடும் குணம் ஆண்களுக்கு மட்டுமே உரித்தானது என்னும் அழுத்தமான நம்பிக்கைதான் இதற்குக் காரணம்.
பொதுப்புத்தியாகவே மாறிவிட்ட இந்தக் கருத்தைத் தலைகீழாகத் திருப்பிப்போடுவதே கலகப் புத்தகத்தின் அடிப்படை நோக்கம்.
வரலாற்றின் இண்டு இடுக்குகளைக் கவனமாக ஆராய்ந்து மறக்கடிக்கப்பட்ட சில முக்கியமான பெண் கலகக்காரர்கள்மீது வெளிச்சத்தைப் பாய்ச்சுகிறது இந்நூல். டைட்டானிக் கப்பலிலிருந்து நூற்றுக்கணக்கானோரைக் காப்பாற்றிய மார்கரெட் டோபின், சென்னையில் முதல் தாற்காலிகத் திரையரங்கை நிறுவிய ஃப்ரீடா குளூக், தீப்பெட்டித் தொழிற்ச்சாலை வேலைநிறுத்தத்தை முன்னெடுத்த சாரா சேப்மன், விக்டோரியா ராணிக்கு எதிர்ப்பிரகடனம் வெளியிட்ட பேகம் ஹஸ்ரத் மஹல், ‘லேடி எடிசன்’ பியூலா லூயிஸ் ஹென்றி, உளவியல் துறையில் தன் தடத்தைப் பதித்த அன்னா ஃப்ராய்ட் என்று தொடங்கி வண்ணமயமான பல கலகக்காரர்கள் இதில் இடம்பெறுகிறார்கள்.
அடித்தட்டு மக்கள் வரலாறு, சமூக வரலாறு, பெண்ணியம் ஆகிய துறைகளை ஒரு புள்ளியில் இணைக்கும் முக்கியப் பணியை இந்நூலில் முன்னெடுத்திருக்கிறார் நிவேதிதா லூயிஸ். அந்த வகையிலுமேகூட இது ஒரு கலகப் புத்தகம்தான்.
அமெரிக்காவின் மறுபக்கம்
Rs. 1,140.00or 3 X Rs.380.00 withRead moreநாகேஸ்வரி அண்ணாமலை
அமெரிக்கா என்றதும் மனதில் தோன்றுவது அது வளமிக்க நாடு் ,இராணுவ பலமிக்க நாடு் தனிமனித சுதந்திரத்தைப் போற்றும் நாடு என்பதே. ஆனால் உண்மையில் மூன்றாம் உலக நாடுகளில் அமெரிக்காவின் வரலாற்றுப் பின்னணியைப் புரிந்து கொண்டவர்கள் ஒரு சிலரே.
நாகேஸ்வரியின் இந்நூல் இன்றைய அமெரிக்கா எவ்வாறு உருவானது. அதன் அரசியல் சமூகப் பொருளாதாரப் பின்னணி எப்படி இவ்வளவு வளத்தையும் அதிகாரத்தையும் மையப்படுத்த முடிந்திருக்கிறது ஐரோப்பியக் குடியேறிகள் எப்படி பூர்வீகக் குடிகளை அழித்துக் காலணிகளை அமைத்தனர். அடிமைகளாகக் கொண்டுவரப்பட்ட ஆப்பரிக்கக் கறுப்பர்கள் எந்த அளவிற்கு அந்நாட்டிற்கு வளத்தைச் சேர்த்தனர் போன்ற விஷயங்களில் புதிய வெளிச்சத்தை அளிக்கிறது.
மேலும் உள்நாட்டில் ஜனநாயகம், வெளிநாட்டில் சர்வாதிகாரம் என இரட்டை மனநிலையுடன் இயங்கும் அமெரிக்கா கியூபா, ஈரான் இராக் போன்ற நாடுகளுடன் நடந்துகொண்ட விதம் பற்றியும் சந்தைப் பொருளாதாரத்தால் கார்பரேட் நிறுவனங்கள் மக்களை கடன் அட்டை மூலம் நுகர்வோராகவும் அதீத மருத்துவச் செலவால் கடனாளியாகவும் ஆக்கியிருப்பது பற்றியும் இவை எவ்வாறு சுற்றுச்சூழலை மாசுபடுத்துகின்றன போன்ற சமகாலக் கேள்விகள் மீதான புதிய பார்வைகளையும் இந்நூல் முன்வைக்கிறது
காலத்தின் குரல்
Rs. 1,590.00or 3 X Rs.530.00 withRead moreஇஸ்க்ரா
உலக வரலாற்றை உருமாற்றிய உன்னதமான சொற்பொழிவுகள்.
அம்பேத்கர், காந்தி, நேரு, மார்டின் லூதர் கிங், ஐன்ஸ்டைன், காஸ்ட்ரோ, கென்னடி, சர்ச்சில் என்று வரலாற்றின் போக்கை மாற்றியமைத்த மகத்தான தலைவர்களின் மிகச் சிறந்த உரைகள் அடங்கிய தொகுப்பு இது.
ஒவ்வோர் உரையும் நமக்குள் கரையும். நம் இதயத்தில் தங்கும். புதிய கோணங்களில் சிந்திக்கவும் புதிய உத்வேகத்தோடு போராடவும் நம்மை உந்தித் தள்ளும். சாதி, நிறம், பாலினம், வர்க்கம் என்று பிரிந்து கிடக்கும் மக்களை ஒன்றிணைக்கும் ஆற்றல் இதிலுள்ள ஒவ்வொரு குரலுக்கும் உண்டு. இது காலத்தின் குரல் மட்டுமல்ல.
காலத்தைக் கடந்து உயிர்ப்போடு திரண்டு நிற்கும் மனிதத்தின் குரலும்கூட. இஸ்க்ராவின் அழகிய, உணர்வுப்பூர்வமான மொழிபெயர்ப்பில் மலரும் இந்நூல் படிக்கவும் பரிசளிக்கவும் ஏற்றது.
9/11 சூழ்ச்சி வீழ்ச்சி மீட்சி (9/11 – Soozhchi Veezhchi Meetchi)
Rs. 2,090.00or 3 X Rs.696.67 withRead moreபா. ராகவன்
அல் காயிதாவின் உலகளாவிய நெட் ஒர்க்,அமெரிக்க உளவுத்துறை, பாதுகாப்புதுறை, குடியேற்றம் மற்றும் குடியுரிமை வழங்கும் துறைகளின் பிரச்னைகள், அதிகார வர்க்கத்தில் உள்ள அகங்காரப் பிரச்னைகள் எனப் பல அம்சங்களை மிக விரிவாக அலசி ஆராயும் செப்டம்பர் 11 விசாரனை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் எழுதப்பட்ட நூல் இது.
தோழர்கள்
Rs. 1,190.00or 3 X Rs.396.67 withRead moreகி. ரமேஷ்
கம்யூனிசம் என்றால் என்ன? நம் உலகையும் நாம் எதிர்கொள்ளும் எண்ணற்ற பிரச்சினைகளையும் அது எவ்வாறு அணுகுகிறது? கம்யூனிஸ்டுகள் யார்? பிற கட்சி அரசியல்வாதிகளிடமிருந்து அவர்கள் எவ்வாறு மாறுபடுகின்றனர்? தங்கள் வாழ்க்கைமுறையையும் நெறியையும் அவர்கள் எவ்வாறு வகுத்துக்கொள்கின்றனர்? உழைக்கும் மக்களின் வாழ்வில் அவர்கள் செலுத்திய, செலுத்திவரும் தாக்கம் எத்தகையது? இந்தக் கேள்விகள் முன்பைவிடவும் இன்று தீவிரமும் கூர்மையும் அடைந்துள்ள நிலையில் இந்நூல் வெளிவருவது பொருத்தமானதாகும். கோட்பாடுகளின்மூலம் விளக்குவது ஒரு வகை என்றால் அக்கோட்பாட்டை ஏற்று நடைமுறையில் பின்பற்றிவரும் தோழர்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் கம்யூனிசத்தை விளக்குவது இன்னொரு வகை. இந்நூல் இதைத்தான் செய்கிறது.
சிங்காரவேலர், ஜீவா, ஈ.எம்.எஸ்., பி. சீனிவாச ராவ், அமீர் ஹைதர் கான், சங்கரய்யா, சுர்ஜித், பி. ராமமூர்த்தி போன்ற தோழர்களின் போராட்ட வாழ்வையும் சமூக, அரசியல் பங்களிப்புகளையும் எளிமையாகவும் செறிவாகவும் இந்நூலில் அறிமுகப்படுத்துகிறார் கி. ரமேஷ். வாழ்க்கைக் குறிப்புகளோடு அவரவர் காலத்து அரசியல், சமூகப் பின்னணியையும் இணைத்து வழங்குவது இந்நூலின் சிறப்பு.
FBI: அமெரிக்கப் புலனாய்வுத் துறையின் கதை
Rs. 790.00or 3 X Rs.263.33 withRead moreஎன். சொக்கன்
அமெரிக்காவின் புகழ்பெற்ற அதே சமயம் மிகுந்த சர்ச்சைக்குரிய புலனாய்வு அமைப்பு FBI. அமெரிக்காவைக் கடந்து உலகம் முழுவதிலும் இந்த அமைப்பின் நிழல் பரவிக்கிடக்கிறது. அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்பை உறுதி செய்வதொன்றே அவர்களுடைய ஒரே லட்சியம். அதற்காக எதையும் செய்யச் சித்தமாகயிருக்கிறது FBI. ஜேம்ஸ் பாண்ட் படக் காட்சிகளை மிஞ்சும் பல சாகசங்களை இவர்கள் நிகழ்த்தியிருக்கிறார்கள். நவீன தொழில்நுட்பத்தையும் அறிவியல் கண்டுபிடிப்புகளையும் பயன்படுத்தி பல நூதனமான உத்திகளைக் கையாண்டு உளவு பார்த்திருக்கிறார்கள். தேச பாதுகாப்பை உறுதி செய்திருக்கிறார்கள். அமெரிக்கக் காவல் துறையினரால் சமாளிக்கமுடியாத பல மர்ம கிரிமினல் வழக்குகளைத் திறம்படக் கையாண்டு பாராட்டுகளைக் குவித்திருக்கிறார்கள். உலகம் முழுவதிலும் FBIக்கு பெரும் ரசிகர் கூட்டம் இருக்கிறது.
அவர்களுக்கு இன்னொரு முகமும் இருக்கிறது. வெளியில் தெரியாத இந்த முகத்தைக்கொண்டு FBI பல நிழலுலகக் காரியங்களில் ஈடுபட்டுவருகிறது. சட்டத்தை வளைத்தும் தேவைப்பட்டால் முழுக்க உடைத்தும் பலவற்றை அவர்கள் செய்திருக்கிறார்கள். அவை மிகுந்த சர்ச்சைகளையும் விவாதங்களையும் அவ்வப்போது கிளப்புவது வழக்கம். என். சொக்கனின் இந்தப் புத்தகம் ஊஆஐ என்னும் அதிசய, ரகசிய உலகை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது. கேஜிபி, சிஐஏ, மொஸாட் ஆகிய உளவு நிறுவனங்கள் குறித்தும் இவர் எழுதியிருக்கிறார்.
முதல் உலகப் போர் ( Mudhal Ulagap Por )
Rs. 2,390.00or 3 X Rs.796.67 withRead moreமருதன்
உலக வரைபடத்தை மாற்றியமைத்த முதல் பெரும் போர். உலகம் அதுவரை கண்டிராத பேரழிவைக் கொண்டு வந்த போரும்கூட. நூற்றாண்டுகால சாம்ராஜ்ஜியங்கள் உதிர்ந்து சரிந்தன. பிரிட்டனின் சகாப்தம் முடிவுக்கு வந்தது. புரட்சி மூலம் ரஷ்யா முடியாட்சியைத் துறந்தது. போரின் சாம்பலில் இருந்து அமெரிக்கா, ஒரு புதிய வல்லரசாக உயிர் பெற்று எழுந்தது. முதல் உலகப் போர் ஐரோப்பாவில் மையம் கொண்டது ஏன்?
ஆஸ்திரிய இளவரசர் ஒருவரை, செர்பிய பிரஜை ஒருவன் சுட்டுக்கொன்றான் என்பதற்காக முழு ஐரோப்பாவும் போரில் குதிக்குமா? ஐந்து கோடி சிப்பாய்களைக் களத்தில் இறக்கி, ஒரு கோடி பேரை பலி வாங்குமா? ஒரு தலைமுறை இளைஞர்களை முற்றிலுமாகத் துடைத்து அழித்த இந்தப் போரைத் தவிர்த்திருக்கவே முடியாதா?
இந்த நிமிடம் வரை மேற்கு ஆசியா பிரச்னைக்குரிய ஒரு பிரதேசமாக நீடிப்பதற்கும், இத்தாலியில் முசோலினி பாசிசத்தை வளர்த்தெடுத்ததற்கும், ஜெர்மனியில் ஹிட்லர் எழுச்சி பெற்றதற்குமான மூல காரணம், முதல் உலகப் போரில் இருக்கிறது. இரண்டாம் உலகப் போர் என்பது முதல் உலகப் போரின் தொடர்ச்சி. அல்லது, விளைவு. மருதனின் இந்தப் புத்தகம், முதல் உலகப் போரின் அரசியல், சமூக, ராணுவ வரலாற்றை விரிவாகப் பதிவு செய்கிறது.
பிரியாணியும் புளியோதரையும்: சமகால அரசியல் விமர்சனங்கள்
Rs. 1,290.00or 3 X Rs.430.00 withRead moreஅரவிந்தன் நீலகண்டன்
“மதமும் அரசியலும் மட்டுமல்ல, இணையக் கூடாத பல அம்சங்கள் இன்று பிரிக்க முடியாதபடி ஒன்று கலந்து நிற்கின்றன. கிரிக்கெட் இன்று விளையாட்டு மட்டுமல்ல. நீங்கள் யாருக்குக் கை தட்டுகிறீர்கள் என்பதை வைத்து உங்கள் தேசபக்தி அளவிடப்படுகிறது. படம் பார்ப்பது இனியும் பொழுதுபோக்கு அல்ல. அது அரசியல் செயல்பாடு.
உங்கள் உணவு மேஜையும் பூஜையறையும் படுக்கையறையும் உங்கள் கட்டுப்பாட்டில் இன்று இல்லை. அவை வீதிக்கு இழுக்கப்பட்டு ஆராயப்படுகின்றன. உங்கள் உடை, காதல், ரசனை, நம்பிக்கை, கற்பனை, செயல் எதையும் இனி நீங்கள் தனித்துத் தீர்மானிக்க முடியாது. சாதி, மொழி, அரசியல், கலை, பண்பாடு என்று நம் வாழ்வோடும் சிந்தனைகளோடும் தொடர்புடைய ஒவ்வொரு துறையிலும் காணப்படும் சிக்கல்களையும் முரண்களையும் அரவிந்தனின் இந்நூல் ஆராய்கிறது.
எந்தக் கோட்பாட்டுச் சட்டகத்துக்குள்ளும் சிக்கிக்கொள்ளாமல், எந்த கட்சிக் கொள்கைக்கும் ஒப்புக்கொடுக்காமல் துணிவோடும் சிந்தனைத் தெளிவோடும் மிகச் செறிவான உரையாடலை அரவிந்தன் இதில் நிகழ்த்துகிறார். வெறும் பரபரப்புச் செய்திகளாக நாம் கடந்து சென்றுவிட்ட பல நிகழ்வுகளுக்குப் பின்னாலுள்ள அரசியலையும் உளவியலையும் உள்வாங்கிக்கொள்ள இந்நூல் உதவும்.”
இரண்டாம் உலகப் போர் ( Irandam Ulagap Por )
Rs. 2,390.00or 3 X Rs.796.67 withRead moreமருதன்
மனித குலம் அறிந்திராத பயங்கரங்களை அநாயசமாக நிகழ்த்திக்காட்டியது இரண்டாம் உலகப்-போர். போரின் மையம் ஐரோப்பா என்றாலும் அது ஏற்படுத்திய பேரழிவும் நாசமும் உலகம் முழுவதையும் உலுக்கி எடுத்தது. சிலருக்கு இது ஆக்கிரமிப்புப் போர். சிலருக்குத் தற்காப்பு யுத்தம். சிலருக்கு, பழிவாங்கல். சிலருக்கு விடுதலைப் போர். இன்னும் சிலருக்கு, இது ஒரு லாபம் கொழிக்கும் வியாபாரம். திடீரென்று ஒரு நாள் வெடித்துவிட்ட யுத்தமும் அல்ல. மிகக் கவனமாகத் தயாரிக்கப்பட்டு, தெளிவாகத் திட்டமிடப்பட்டு, தகுந்த முன்னேற்பாடுகளுடன் நிகழ்த்தப்பட்ட மிருகத்தனம். அரசியல், சமூக, வரலாற்றுப் பின்புலத்தில் இரண்டாம் உலகப் போரை விரிவாக விவரித்து, அலசுகிறார் மருதன்.
[RARE] தேசிய இனப் பிரச்சினைகளும் பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதமும்
Rs. 1,790.00Rs. 1,090.00or 3 X Rs.363.33 withRead moreலெனின்
தேசங்களின் சுயநிர்ணய உரிமை குறித்த விவாதங்களை நடத்தியதிலும் தீர்வுகளை அளித்ததிலும் உலக வரலாற்றில் வி. இ. லெனினுக்கு நிகர் வேறு யாருமில்லை. இது ஒரு தொகுப்பு நூல். இதில் அடங்கியுள்ள படைப்புகள் பின்வருமாறு:
ருஷ்யாவின் சமூக-ஜனநாயகத் தொழிலாளர் கட்சியின் தேசிய இனச் செயல்திட்டம்,தேசிய இனப்பிரச்சினை பற்றிய விமர்சனக் குறிப்புகள், தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை, மகா ருஷ்யர்களின் தேசிய இனப் பெருமிதம் பற்றி, சோசாலிசப் புரட்சியும் தேசிய இனங்களின் பிரச்சனை அல்லது “தன்னாட்சிமயமாக்கல்”.
ரஷ்யப் புரட்சியின் நூற்றாண்டை கேடலோனியாக்களும் குர்திஸ்தான்களும் வரவேற்கும் இக்காலத்தில் லெனினை வாசிப்பது மிகவும் பொருத்தமானதாகும்.
* 70களிலும் 80களிலும் வெளிவந்த பிரபல்யமான புத்தகங்கள். மிகவும் அரிதான புத்தகங்கள்.
இவை பாவிக்கப்படாத புத்தகங்கள். ஆனால் அச்சிடப்பட்டு 30 வருடங்களுக்கு மேல் கிடங்கில் இருந்ததால் சில புத்தகங்களில் கரையான் அறிப்பு, பக்கங்களின் நிறம் மாறுதல் போன்ற சிறிய சேதங்கள் இருக்கலாம்.
ஆனால் முழுமையாக வாசிக்க முடியுமாக இருக்கும்.
பெரியார் ( Periyar )
Rs. 940.00or 3 X Rs.313.33 withRead moreஆர். முத்துக்குமார்
- இந்திய அரசியல் களத்தில் இவரைப் போல் இன்னொரு புயல் உருவாகவில்லை. உருவாகப்போவதும் இல்லை.
- அதிகாரம், ஆட்சி, கட்சி அரசியல் அனைத்துமே வெங்காயம்தான் பெரியாருக்கு. மதம், தேசியம், மொழி, கற்பு என்று புனிதமாகக் கொண்டாடப்படும் அனைத்தையும் போட்டு உடைத்தவர். யாருக்காகவும் எதற்காகவும் சமரசம் செய்துகொண்டதில்லை பெரியார். கண்முன்னால் ஒரு அராஜகமா? தோழர்களே, திரண்டு வாருங்கள் போராடுவோம்! போராட்டம். அது மட்டும்தான் தெரியும்.
- பெரியார் முன்வைத்த நாத்திகவாதம் ஆக்ரோஷமானது, ஆவேசமானது, அறிவியல்பூர்வமானது. நிலச் சீர்திருத்தத்தில் இருந்து தொடங்குவோம் என்று கம்யூனிஸ்டுகள் சொன்னபோது, அமைதியாக ஒதுங்கிக்கொண்டார். மதம். அனைத்துப் பிரச்னைகளுக்கும் ஆணிவேர் இதுவே என்றார்.
- இந்திய சுதந்தரத்துக்குக் கறுப்புக் கொடி. காந்தி, அண்ணா, ராஜாஜி போன்றவர்களுடன் கருத்து மோதல். மணியம்மை திருமணம். திமுக மீது காட்டமான விமரிசனங்கள். அதிகாரத்துக்கு அடங்கிப்போக மறுக்கும் குணம். சர்ச்சைகளுக்குச் சற்றும் பஞ்சமில்லா வாழ்க்கை அவருடையது.
- தீரமிக்க போராட்டப் பாரம்பரியம் பெரியாரோடு தொடங்கி பெரியாரோடு முற்றுப்பெறுகிறது. பெரியாரை நம் கண்முன் நிறுத்தும் இந்நூல், வரலாற்றில் அவர் வகித்த பாத்திரத்தையும் சமூகத்தில் அவர் ஏற்படுத்திய மாற்றங்களையும் அழுத்தமாகச் சுட்டிக்காட்டுகிறது.
மறக்கப்பட்ட வரலாறு
Rs. 1,590.00or 3 X Rs.530.00 withRead moreஜெ. ராம்கி
“மிகுந்த பரபரப்போடு செய்தித்தாள்களில் வாசித்திருப்போம். தொலைக்காட்சிகளில் பார்த்திருப்போம். என்ன நடந்தது, எப்படி நடந்தது என்று வியப்போடு நிறையவே விவாதித்திருப்போம். அதன்பின் மெல்ல, மெல்ல நம் நினைவுகளிலிருந்து இந்தச் செய்திகள் மங்கி ஒரு கட்டத்தில் மறைந்தே போயிருக்கும்.
பிரேமானந்தா, ராம்விலாஸ் வேதாந்தி, ஹர்ஷத் மேத்தா, லட்சுமி சிவபார்வதி, வி.வி. கிரி, எம்.எஃப். ஹூசேன், ரஞ்சன் விஜேரத்ன, உமா மகேஸ்வரன் போன்றோரைக் கடைசியாக எப்போது நாம் கடந்து வந்தோம்?
இவர்கள் உருவாக்கிய புயல் எந்த அளவுக்கு இன்று நம் நினைவில் இருக்கிறது?
வரலாற்றின் இண்டு இடுக்குகளில் அகழ்வாராய்ச்சி செய்து ஒரு காலத்தில் பெரும் தாக்கம் செலுத்திய பல ஆளுமைகளையும் அரசியல் நிகழ்வுகளையும் மீட்டெடுத்து வந்து அளிக்கிறார் ஜெ. ராம்கி. ஒவ்வோர் அத்தியாயமும் ஒரு துப்பறியும் கதைபோல் இறக்கைக் கட்டிப் பறக்கிறது.”
விஜயநகர பேரரசு
Rs. 1,690.00or 3 X Rs.563.33 withஎஸ். கிருஷ்ணன்
தமிழகத்தைச் சுமார் 200 ஆண்டுகள் ஆட்சி செய்து தங்கள் முத்திரையை வலுவாகப் பதித்துவிட்டுச் சென்றிருக்கிறது விஜயநகரப் பேரரசு. 14ஆம் நூற்றாண்டு முற்பகுதியில் உதயமான இந்தப் பேரரசுக்கு மற்ற அரசுகளுக்கு இல்லாத ஒரு பெரும் கடமை இருந்தது. அது, தென்னாட்டைப் பெரும் சீரழிவிலிருந்து மீட்கும் பணி.
நிலையற்ற அரசும் கொந்தளிப்பான தன்மையும் நிலவிய மோசமான சூழலிருந்து நாட்டை மீட்டுச் செம்மைப்படுத்தினார்கள் விஜயநகர மன்னர்கள். நிர்வாகச் சீர்திருத்தங்கள், பொருளாதார மேன்மை, நீர்ப்பாசனம் என்று தொடங்கி அடிப்படையான மாற்றங்களைக் கொண்டுவந்ததன்மூலம் தென்னகத்தை அவர்கள் தலைநிமிரச் செய்தார்கள். கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில், இடைவிடாத போர்களுக்கு நடுவில் இந்தியாவின் வரலாற்றை விஜயநகரப் பேரரசு அழுத்தந்திருத்தமாக மாற்றி எழுதியது.
விஜயநகரப் பேரரசு எப்படி உருவானது? எந்தெந்த மன்னர்களெல்லாம் ஆண்டனர்? கிருஷ்ணதேவராயர் வகித்த பாத்திரம் எத்தகையது? அவர்களுடைய ஆட்சிமுறை எப்படி இருந்தது? படைபலம் எத்தகையது? கலை, கட்டுமானம், பொருளாதாரம், சமயம் போன்ற துறைகள் எத்தகைய மாற்றங்களைச் சந்தித்தன? எஸ். கிருஷ்ணனின் இந்நூல் விஜயநகரப் பேரரசு பற்றிய மிகச் சிறப்பான பருந்துப் பார்வையை அளிக்கிறது.
சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி? ( Che Guevara Puradchiyaalar Aanathu Eppadi? )
Rs. 1,190.00or 3 X Rs.396.67 withRead moreமருதன்
அர்ஜெண்டினாவில் தொடங்கி சிலி, பெரு, வெனிசூலா, பொலிவியா என்று லத்தீன் அமெரிக்க நாடுகளிடையே எர்னஸ்டோ மேற்கொண்ட பயண அனுபவங்கள் மோட்டார் சைக்கிள் டைரிக் குறிப்புகளாக வெளிவந்தன.
தனித்துவமிக்க இந்தப் புத்தகத்தில் எர்னஸ்டோ தன் அனுபவங்களையும், தரிசித்த நாடுகளின் அரசியல், சமூக, வரலாற்றுப் பின்புலத்தையும் பதிவு செய்திருக்கிறார்.இந்தப் பயணம் எர்னஸ்டோவை உலகின் முதன்மையான புரட்சியாளராக உருமாற்றியது. ஒரு தேர்ந்த மார்க்சிஸ்டாகவும், தீரமிக்கப் போராளியாகவும் வளர்த்தெடுத்தது. மக்களை நேசித்து, மக்களுக்காக வாழ்ந்து, மக்களுக்காக உயிர் துறக்கும் நெஞ்சுரத்தையும் மாண்பையும் பெற்றுத் தந்தது. எர்னஸ்டோ என்னும் சாமானியனை சே குவேராவாக உருமாற்றியது.
ஃபிடல் காஸ்ட்ரோ, சே குவேரா, சாவேஸ் வாழ்க்கை வரலாறுகளைத் தொடர்ந்து லத்தீன் அமெரிக்க அரசியல் குறித்து மருதன் எழுதியுள்ள நன்காவது புத்தகம் இது.
காமராஜ்: கறுப்பு காந்தியின் வெள்ளை வாழ்க்கை
Rs. 990.00or 3 X Rs.330.00 withRead moreநாகூர் ரூமி
காமராஜரை இந்தத் தலைமுறைக்கு மறு அறிமுகம் செய்யும் வாழ்வியல் நூல். ரூமியின் விறுவிறுப்பான மொழிநடை, வாசிப்போரை சொக்க வைக்கும்.
மிகவும் சாதாரணமான குடும்பத்தில் பிறந்தவர். ஆறாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். இந்திய அரசியலில் யாரும் எட்டமுடியாத சாதனைகளைச் செய்தவர். காந்தி, நேரு ஆகியோருக்கு அடுத்தபடியாக இந்திய மக்களையும் உலகத் தலைவர்களையும் தனது அப்பழுக்கற்ற நேர்மையால் கவர்ந்தவர்.
விடுதலைப் போராட்டத்தில் சாதாரண தொண்டராக இருந்து, தலைவராக உயர்ந்தவர். சமுதாயத்தின் கீழ் நிலையில் இருந்து, எத்தனையோ சதிகளை முறியடித்து முன்னேறியவர். மக்கள் மனதில் நீங்காத இடம்பெற்றவர். தனக்கு கிடைக்காத கல்வி தனது ஜனங்களுக்கு கிடைக்க வேண்டும். சமூகத்தின் முன்னேற்றத்துக்கு கல்விதான் முக்கியம் என்பதை புரிந்தவர். ஏழை மாணவர்கள் பள்ளிக்கூடம் போகமுடியாது என்ற நிலையை போக்கியவர். கல்விக் கண் திறந்தவர். காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவராக, முதலமைச்சராக பொறுப்பு வகித்தவர். பதவியை பெரிதாக நினைக்காதவர். முதல்வர் பதவியை துச்சமாக தூக்கி எறிந்தவர். நேருவுக்கு பிறகு இரண்டு முறை நாட்டின் பிரதமர்களை முடிவு செய்தவர். லால் பகதூர் சாஸ்திரியையும், இந்திரா காந்தியையும் பிரதமர்களாக தேர்வு செய்தவர்.
ஜனநாயகத்தையும், அரசியல் சட்டத்தையும் உயிராக கருதியவர். கரைபடியாத கரத்துக்கு சொந்தக்காரர். தனக்கென்று சொந்தமாக வீடுகூட இல்லாதவர். ஒரு செண்ட் நிலம் கூட சம்பாதிக்காதவர். காந்தியின் கடைசி வாரிசாக வாழ்ந்து, அவருடைய பிறந்த நாளிலேயே மரணம் அடைந்த மகத்தான தலைவர். காமராஜ் ஒரு சகாப்தம். பள்ளிகள் இருக்கும்வரை அவர் புகழ் இருக்கும். அணைகள் இருக்கும் வரை அவர் புகழ் அணையாது.
ஆன்மிக அரசியல்
Rs. 1,390.00or 3 X Rs.463.33 withRead moreஆர். ரங்கராஜ் பாண்டே
ஆகமங்கள் என்றால் என்ன என்பது தொடங்கி கோவில்களைத் தம் முழுக் கட்டுப்பாட்டுக்குள் சட்டவிதிகளை மீறிக் கொண்டு வந்திருக்கும் அற நிலையத்துறை செய்துவரும் அநீதிகள் வரை ஒரு முனைவர் பட்ட ஆய்வேட்டுக்கான தரத்துடன் ஆதாரங்களுடன் இந்த நூலில் ரங்கராஜ் பாண்டே தொகுத்தளித்திருக்கிறார்.
ஆகமங்கள் தொடர்பாக நவீன கால முனைவர் பட்டம் பெற்ற தீபாதுரைசாமி, மரபார்ந்த சைவ ஆகம பண்டிதர் குளித்தலை இராமலிங்கம் என இரு தரப்பு நிபுணர் களிடம் நூலாசிரியர் மேற்கொண்ட உரையாடல் இந்த நூலுக்கு மகுடமாகத் திகழ்கிறது.
பூணூல் அறுப்பு, நாத்திகர்களுக்குக் கோவிலில் என்ன வேலை, அறநிலையத்துறையின் சீர்கேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க பக்தர்களாகிய நாம் என்ன செய்யவேண்டும், அனைத்து மதத்தினருக்கும் ஆலயத்தில் நுழைய உரிமை உண்டா உள்ளிட்ட பல சர்ச்சைக்குரிய கேள்விகளை எழுப்பி அச்சமின்றி விவாதிக்கிறார் ரங்கராஜ் பாண்டே. சட்ட திட்டங்களில் நம்பிக்கைகொண்டவர்கள், மதச்சார்பற்ற நேர்த்தியான நிர்வாகத்தில் அக்கறைகொண்டவர்கள் ஆகியோரும் கட்டாயம் படிக்கவேண்டிய நூல்.