Opening Possibilities, Illuminating Potentials
Delivery in 1-5 business days. Island-wide Free Delivery for Purchase of Rs. 3990 or above.

Cart

Your Cart is Empty

Back To Shop
Contact Us 0764980321

Showing all 3 results

  • நிலமெல்லாம் ரத்தம் / Nilamellam Ratham

    Rs. 6,290.00
    or 3 X Rs.2,096.67 with

    பா.ராகவன்

     

    இருபதாம் நூற்றாண்டில் உலகம் சந்தித்த மிகப்பெரிய சிக்கல், இஸ்ரேல் பாலஸ்தீன் தொடர்பானது. தனித்துவம் மிக்க இரண்டு மதங்களின் வலுவான முரண்பாட்டுப் பின்னணியில் திறமை மிக்க அரசியல்வாதிகளால் முன்னெடுத்துச் செல்லப் பட்ட மக்களின் உணர்வு சார்ந்ததொரு பிரச்னை.

     

    இன்று வரை இது தீராதிருக்க என்ன காரணம்? சொந்த மண்ணில் அகதிகளாக வாழும் பாலஸ்தீனிய அரேபியர்களுக்குப் பிற அரபு தேசங்கள் ஏன் கைகொடுப்பதில்லை? மத்தியக் கிழக்கின் வளமையும் செழுமையும் பாலஸ்தீனியர்களுக்கு மட்டும் ஏன் எப்போதுமே இல்லாமல் போகிறது? ஒதுங்க ஓரிடமில்லாமல் உலகெங்கும் உயிருக்கு அஞ்சி ஓடியவர்கள் யூதர்கள்.

     

    அப்படிப்பட்டவர்கள், தமக்கு வாழ இடமளித்த பாலஸ்தீன் அரேபியர்களை வஞ்சிக்க நினைப்பது எதனால்? பாலஸ்தீன் போராளி இயக்கங்களின் தோற்றம் முதல் செயல்பாடுகள் வரையிலான விரிவான அறிமுகத்தை இந்நூல் தருகிறது.

     

    யாசிர் அரஃபாத்தின் ஆயுதப் போராட்டம், அமைதி முயற்சிகள், அவற்றின் விபரீத விளைவுகள், இஸ்ரேலிய ஆட்சியாளர்களின் கண்ணோட்டம், உலக நாடுகளின் கருத்துகள் என்று விரிவான களப்பின்னணியுடன், ஆதாரபூர்வமான அரசியல் சரித்திரமாக எழுதப்பட்ட நூல் இது.

    or 3 X Rs. 2,096.67 with Koko Koko
    Add to cart
  • இஸ்ரேல் பற்றிய பத்து கட்டுக்கதைகள் / Israel Patriya Paththu Kattukadhaikal / Ten Myths About Israel Tamil

    Rs. 2,390.00
    or 3 X Rs.796.67 with

    இலான் பப்பே

    தமிழில்: பிரேம்

     

    இன்று பற்றியெரிந்துகொண்டிருக்கும் ஃபலஸ்தீனப் பிரச்சினையைப் புரிந்துகொள்வதற்கு உதவும் மிக முக்கியமான புத்தகம். இஸ்ரேலைக் கட்டமைக்க உதவிய ‘கட்டுக்கதைகளும்’, தற்போது முன்னெடுக்கப்படும் பிரச்சாரமும் ஃபலஸ்தீன மக்கள் மீதான அடக்குமுறையை நிலைநிறுத்துவதில் எவ்வாறு உதவுகின்றன என்பதை எளிமையாகவும் தெளிவாகவும் விளக்கிடும் மதிப்புமிக்க கருத்தாயுதம். ஃபலஸ்தீன் மீதான காலனிய ஆக்கிரமிப்பின் ஐம்பது ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி வெளியிடப்பட்ட முன்னோடியான இந்தப் புத்தகத்தில், துணிச்சல் நிறைந்த இஸ்ரேலிய வரலாற்றாசிரியர் இலான் பப்பே, சமகால இஸ்ரேலின் தோற்றம் பற்றியதும் அடையாளம் பற்றியதுமான மிகவும் சர்ச்சைக்குரிய கருத்துகளை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டுள்ளார்.

     

    பப்பே ஆராய்ந்துள்ள இந்தப் ‘பத்து கட்டுக்கதைகளும்’ ஊடகங்களில் திரும்பத்திரும்ப முடிவின்றிச் சொல்லப்படுபவை, இராணுவத்தால் செயல்படுத்தப்பட்டவை, உலக நாடுகளின் அரசாங்கங்களால் கேள்வியின்றி ஏற்றுக்கொள்ளப்பட்டவை, அந்தப் பிராந்தியத்தின் அநீதியான தற்போதைய நிலையை அப்படியே நிலைத்திருக்கச் செய்பவை. ‘ஃபலஸ்தீனம் யூதர்களின் பூர்விக பூமி; ஆனால் பால்ஃபோர் பிரகடனத்தின்போது அது ஆளில்லாத வெற்று நிலமாக இருந்தது’ என்ற வாதம் தொடங்கி, இஸ்ரேல் என்ற தனிநாடு உருவாக்கத்தின் ஆரம்ப காலங்களில் ஸியோனிசத்தின் பங்கு என்னவாக இருந்தது என்பது வரை ஆராய்கின்றார்

     

    1948ஆம் ஆண்டில் ஃபலஸ்தீனர்கள் தங்கள் வீடுகளையும் நிலங்களையும் விட்டுத் தாமாக முன்வந்து வெளியேறினார்களா என்ற கேள்வியை முன்வைக்கும் அவர், 1967 போர் ‘வேறு வழியில்லாமல்’ இஸ்ரேல் நடத்திய போர்தானா என்றும் கேள்வியெழுப்புகின்றார். கேம்ப் டேவிட் ஒப்பந்தங்களின் தோல்வியைச் சுற்றியிருக்கும் கட்டுக்கதைகளைக் குறித்து விவாதிக்கும் பப்பே, ‘இரு நாடுகள்’ தீர்வு ஏன் சாத்தியமற்றது என்பதை விளக்குகின்றார்.

    or 3 X Rs. 796.67 with Koko Koko
    Add to cart
  • Out of Stock

    யூதர்கள்: வரலாறும் வாழ்க்கையும் ( Yudhargal: Varalaarum Vaazhkaiyum )

    Rs. 1,980.00
    or 3 X Rs.660.00 with

    முகில்

     

    யூதர்களின் கலாசாரம், பழக்கவழக்கங்கள், பண்டிகைகள், திருமணம், வாழ்க்கை முறை, வழிபாடு என அனைத்து அம்சங்களையும் காட்சிப்படுத்தும் இந்நூல், அவர்களது சரித்திரத்துக்கும் சமகாலத்துக்கும் இடையே அநாயாசமாக ஒரு மேம்பாலம் கட்டுகிறது.

    or 3 X Rs. 660.00 with Koko Koko
    Read more