Opening Possibilities, Illuminating Potentials
Island-wide Free Delivery for Purchase of Rs. 3990 or above.

Cart

Your Cart is Empty

Back To Shop
Contact Us 0764980321

Showing all 2 results

  • Sale!
    vilangiyal flashbooks.lk
    Out of Stock

    [RARE] விலங்கியல் (Zoology)

    Rs. 2,690.00
    or 3 X Rs.896.67 with

    வ. ஷாலாயேவ் , நி. ரிக்கவ்

     

    இந்த விலங்கியல் பாடபுத்தகம் ஆரம்பத்தில் சோவியத் யூனிய னுக்காகத் தயாரிக்கப்பட்டது. அங்கே இதன் இருபது மறு பதிப்புக்கள் வெளியாயின. ருஷ்ய சோவியத் சோஷலிஸக் கூட்டுக் குடியரசிலும் மற்ற யூனியன் குடியரசுகளிலும் இருபது ஆண்டுக் காலம் இது உயர் நிலைப் பள்ளிகளில் பாடபுத்தகமாகப் பயிலப்பட்டது. அறுபதுக்களின் தொடக்கத்தில் இந்நூல் தெற்கு ஆசிய மொழிகள் பலவற்றில் வெளியிடப்பட்டது. தற்போது இப்பாடபுத்தகத்தின் இரண்டாம் பதிப்பு இம்மொழிகளுக்காகத் தயாரிக்கப்பட்டிருக்கிறது. முதல் பதிப்பில் போலவே இந்தப் பதிப்பிலும் ஓரணுவுயிர்கள் முதல் பிரைமேட்டுகள் ஈறாக விலங்குலகின் முக்கியக் குழுக்களைப் பற்றிய முறையான சுருக்க விவரம் தரப்பட்டிருக்கிறது. இயற்கை உருவ இயல், உடலியல், சூழ்நிலை இயல், கருவியல், தொல்லுயிரியல், வகைப் பாகு பாட்டியல் ஆகிய விலங்கியலின் பல்வேறு துறைகளிலிருந்து திரட்டப் பட்டுள்ள தகவல்கள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

     

     

    * 70களிலும் 80களிலும் வெளிவந்த பிரபல்யமான புத்தகங்கள். மிகவும் அரிதான புத்தகங்கள்.

    இவை பாவிக்கப்படாத புத்தகங்கள். ஆனால் அச்சிடப்பட்டு 30 வருடங்களுக்கு மேல் கிடங்கில் இருந்ததால் சில புத்தகங்களில் கரையான் அறிப்பு, பக்கங்களின் நிறம் மாறுதல் போன்ற சிறிய சேதங்கள் இருக்கலாம்.

    ஆனால் முழுமையாக வாசிக்க முடியுமாக இருக்கும்.

    or 3 X Rs. 896.67 with Koko Koko
    Read more
  • Out of Stock

    ஆடு-மாடு வளர்ப்பு

    Rs. 990.00
    or 3 X Rs.330.00 with

    விகடன் குழு

     

    ஆடு மாடுகளை வளர்ப்பது என்பது ஆதிகாலத்திலிருந்து மனித சமுதாயத்துக்குப் பயனளிக்கும் ஒன்றாகவே கருதப்பட்டு வருகிறது. எத்தனையோ விவசாயக் குடும்பங்களுக்கு ஆடு மாடுகள்தான் சோறு போடுகின்றன. இன்று பல குழந்தைகள், ஏன் பெரியவர்கள்கூட பசுவின் பால் குடித்துதான் வளர்கிறார்கள்; வாழ்கிறார்கள். விவசாயத்தில் நவீன தொழில்நுட்பங்கள் புகுந்துவிட்டாலும், விவசாயத் தொழில்களுக்கு ஆடு மாடுகள் ஏராளமாக உதவி புரிகின்றன. மாடுகள் தங்கள் உழைப்பைத் தருவதோடு இறைச்சி, பால், சாணம், கோமியம், கொம்பு, தோல் என அனைத்தையும் தந்து உதவுகின்றன. ஆடு வளர்ப்பிலும் அதேபோலதான். ஆட்டின் இறைச்சி, தோல், பால், புழுக்கை என அனைத்தும் பணமாகிறது. கறவை மாடுகள், உழவு மாடுகள், எருமை மாடுகள், காளை மாடுகள் போன்ற மாட்டு இனங்களை வளர்க்கவும், அவற்றுக்குத் தேவையான புல் வகைகள், தீவனங்கள், பராமரிப்பு… என விளக்கங்களைத் தருவதோடு, மாடுகளை வாங்கவும் விற்கவும் சந்தைகள், வங்கிக்கடன், லாபகணக்குகள் என அத்தனை விவரங்களையும் தருகிறது இந்த நூல். ஆடு&மாடு வளர்ப்பு என்பது ஒரு லாபம் தரும் தொழிலாகவே மாறிவிட்டது.

    or 3 X Rs. 330.00 with Koko Koko
    Read more