Opening Possibilities, Illuminating Potentials
Island-wide Free Delivery for Purchase of Rs. 3990 or above.

Cart

Your Cart is Empty

Back To Shop
Contact Us 0764980321

Category: கிளாசிக்ஸ்

Showing all 15 results

 • Sale!
  Out of Stock

  [RARE] நவரத்தின மலை சோவியத் மக்களது நாட்டு கதைகள் (A Mountain of Gems)

  Rs. 2,290.00
  or 3 X Rs.763.33 with

  தமிழில் ரா. கிருஷ்ணையா

   

  ருஷ்யா, உக்ரைன், பெலோருஷ்யா, லித்துவேனியா, லாத்வியா, எஸ்தோனிய, கரேலியா, மல்தாவியா, அஸர்பைஜான், ஆர்மேனிய, ஜார்ஜியா, பாஷ்கீரயா, கல்மீகியா, துர்க்மெனிய, தாஜிக், உஸ்பேக், கிர்கீஸ், கஸாஹ், யாகூத், புர்யாத் போன்ற சோவியத் மக்களது தேர்ந்தேடுக்கபட்ட 38 நாட்டுக் கதைகள்.

   

  * 70களிலும் 80களிலும் வெளிவந்த பிரபல்யமான புத்தகங்கள். மிகவும் அரிதான புத்தகங்கள்.

  இவை பாவிக்கப்படாத புத்தகங்கள். ஆனால் அச்சிடப்பட்டு 30 வருடங்களுக்கு மேல் கிடங்கில் இருந்ததால் சில புத்தகங்களில் கரையான் அறிப்பு, பக்கங்களின் நிறம் மாறுதல் போன்ற சிறிய சேதங்கள் இருக்கலாம்.

  ஆனால் முழுமையாக வாசிக்க முடியுமாக இருக்கும்.

  or 3 X Rs. 763.33 with Koko Koko
  Read more
 • Sale!
  Dubrovsky flashbook.lk
  Out of Stock

  [RARE] துப்ரோவ்ஸ்கி கொள்ளைக்கூட்டத் தலைவானாக மாறிய இளம் பிரபுவின் கதை (Dubrovsky)

  Rs. 690.00
  or 3 X Rs.230.00 with

  அலெக்சாண்டர் புஷ்கின்

  தமிழில் நா . தர்மராஜன் எம் .ஏ .

   

  மாபெரும் ருஷ்யக் கவிஞரான அலெக்சாந்தர் பூஷ்கின் (1799- 1837) உரை நடையிலும் மேதையாக இருந்தார். அவர் எழுதிய இவான் பெல்லின் சிறு கதைகள், ஸ்பேடுகளின் ராணி மற்றும் காப்டன் மகள் மிகப் பிரபலமானவையாகும். கவிஞரின் சோகமான மரணத்துக்குப் பிறகு 1841ல் வெளியிடப்பட்ட துப்ரோவ்ஸ்கி தனிச் சிறப்புடைய குறுநாவலாகும்.

  இக் குறுநாவலின் கதாநாயகனான விளதீமிர் துப்ரோவ்ஸ்கி நிலவுடமையாளர் குடும்பத்தில் பிறந்தவர், ஆனால் அநீதிகளையும் எதிர்த்துப் போராடுகிறார். தன் குடும்பத்துக்குத் தீங்கிழைந்த திரொயெகூரவ் வீர என்ற பிரபுவின் மகளை அவர் காதலிக்கிறார். அவருடை வீர சாகசச் செயல்களும் தூய்மையான காதலும் அக்காலத்திய நிலவுடமையாளர்களின் வாழ்க்கைப் பின்னணியில் அழகுற எழுதப்பட்டிருக்கிறது.

   

   

  * 70களிலும் 80களிலும் வெளிவந்த பிரபல்யமான புத்தகங்கள். மிகவும் அரிதான புத்தகங்கள்.

  இவை பாவிக்கப்படாத புத்தகங்கள். ஆனால் அச்சிடப்பட்டு 30 வருடங்களுக்கு மேல் கிடங்கில் இருந்ததால் சில புத்தகங்களில் கரையான் அறிப்பு, பக்கங்களின் நிறம் மாறுதல் போன்ற சிறிய சேதங்கள் இருக்கலாம்.

  ஆனால் முழுமையாக வாசிக்க முடியுமாக இருக்கும்.

  or 3 X Rs. 230.00 with Koko Koko
  Read more
 • Out of Stock

  வெண் இரவுகள் ( Ven Iravugal ) White Nights

  Rs. 790.00
  or 3 X Rs.263.33 with

  ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி

  தமிழில்: எம். ஏ. சுசீலா

   

  தஸ்தயேவ்ஸ்கியின் ஆரம்ப கால படைப்புகளில் ஒன்று வெண்ணிற இரவுகள். 1848ம் ஆண்டு வெளியாகி உள்ளது. 164 ஆண்முகள் கடந்த போதும் இன்று வாசிக்கையிலும் கதாபாத்திரங்களின் அடங்காத இதயத் துடிப்பும் காதலின் பித்தேறிய மொழிகளும் புத்தம் புதியதாகவே இருக்கிறது. உலகில் தொடர்ந்து வாசிக்கபட்டு கொண்டாடப்பட்டு வரும் அரிய காதல்கதை இது. இரண்டு ஆண்கள் ஒரு இளம்பெண். மூன்றே முக்கிய கதாபாத்திரங்கள். நான்கு இரவுகள் ஒரு பகலில் கதை முடிந்துவிடுகிறது. கதை முழுவதும் ஒரே இடத்தில் ஒரு ஆணும் பெண்ணும் சந்தித்து கொள்கிறார்கள். பேசிக் கொள்கிறார்கள். முடிவில் பிரிந்து போய்விடுகிறார்கள்.

  or 3 X Rs. 263.33 with Koko Koko
  Read more
 • Out of Stock

  பிள்ளையார் சுழி

  Rs. 1,990.00
  or 3 X Rs.663.33 with

  டெல்லி கனேஷ்

   

  ‘பிள்ளையார் சுழி’ நடிகர் டெல்லி கணேஷின் சுயசரிதை நூல். வாழ்க்கைச் சம்பவங்களைப் பூத்தொடுப்பது போல அழகாகத் தொடுத்து எழுதப்பட்ட நூல். உண்மைச் சம்பவங்களின் பதிவுதான். ஆனால் கற்பனையாக எழுதப்பட்ட நாவலை விடவும் விறுவிறுப்பாகச் செல்கிறது. நூலில் ஆங்காங்கே விரவியிருக்கும் நகைச்சுவை, படிக்கும் போதே நம் முகத்தில் ஒரு மெல்லிய புன்முறுவலைத் தோற்றுவிக்கிறது. எடுத்தால் படித்து முடிக்காமல் வைக்கத் தோன்றாது.

  கீழே கணேசன் என்ற பெயருடைய ஒரு நடுத்தரக் குடும்பத்துப் பையன் விடா முயற்சியால் டெல்லி கணேஷ் என்ற நடிகராகப் பரிணமித்ததை விளக்குவதே இந்த நூல். ‘திருநெல்வேலி வல்லநாடு கணேசனை, மதுரை கணேஷாக மாற்றியது டி. வி. எஸ்… மதுரை கணேசனை கார்ப்போரல் கணேஷாக மாற்றியது இந்திய விமானப்படை… ஏர்ஃபோர்ஸ்காரனை நாடகக்காரனாக மாற்றியது டெல்லியின் தக்ஷிண பாரத நாடக சபா… ‘டெல்லிகணேஷ்’ என்று நாமகரணம் சூட்டி நாடகக்காரனை சினிமாக்காரனாக மாற்றியது திரு. கே.பி…’ என முத்தாய்ப்பாக அவர் தொகுத்துச் சொல்லும்போது படிக்கும் நமக்கே ஒரு வாழ்க்கையில் பல வாழ்க்கைகளை வாழ்ந்த நிறைவு தோன்றுகிறது. – திருப்பூர் கிருஷ்ணன்

  or 3 X Rs. 663.33 with Koko Koko
  Read more
 • Out of Stock

  விலங்குப் பண்ணை ( The Animal Farm )

  Rs. 860.00
  or 3 X Rs.286.67 with

  ஜார்ஜ் ஆர்வெல்

   

  லெனினுக்குப் பிந்தைய கம்யூனிஸ்ட ரஷ்யாவின் அரசியலை இந்த நாவல் மிகக் கடுமையாக விமர்சிக்கிறது. ஆனால் மறைபொருள் வடிவத்தில் ஆகவே இதை ஓர் உருவக நாவல் என்று சொல்லலாம். ஆனால் இந்த நூலை எழுதிய ஜார்ஜ் ஆர்வெல் ஒரு சோஷலிஸ்டு. கம்யூனிஸத்திற்கு எதிரானவர் அல்ல. ரஷ்யப் புரட்சியின் நூற்றாண்டு விழா தொடங்கியிருக்கிற இந்தத் தருணத்தில் ‘விலங்குப் பண்ணை’யின் அரசியல் நம்மை அதிர்ச்சியுறச் செய்கிறது; ஆழ்ந்து கவனிக்க வைக்கிறது. எழுபது ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த இந்த நாவலை ஒரு தற்கால இலக்கியமாகவே பார்க்கத் தோன்றுகிறது.

  or 3 X Rs. 286.67 with Koko Koko
  Read more
 • Out of Stock

  ஆதவன் சிறுகதைகள்

  Rs. 4,990.00
  or 3 X Rs.1,663.33 with

  ஆதவன்

   

  ‘1960-70களில் இந்திய நகரங்களில் இளமைப் பொழுதை க்கழித்த, படித்த, மத்தியதர வர்க்கத்தினரின் பிரத்தியேக ஆசை – அபிலாஷைகளையும் சோகங்களையும் நிராசைகளையும் ஆதவனைப்போல யாரும் தமிழில் பிரதிபலித்ததில்லை. ’இண்டர்வியூ’, ’அப்பர் பெர்த்’ போன்ற அவருடைய பக்குவம் மிக்க சிறுகதைகளைப் படித்து, இவ்வளவு துல்லியமாகவும், சத்தியம் தொனிக்கவும் தற்கால இந்தியாவின் படித்த இளைஞர் மனத்தைச் சித்திரிக்க முடியுமா என்று வியந்திருக்கிறேன்.’

  – அசோகமித்திரன்
   

  ‘நான் அவனை பாதித்திருப்பது போல, ஆதவனும் என்னை மிகவும் பாதித்திருக்கிறான். இதை நான் பெருமையாகச் சொல்லிக்கொள்ள முடியும்.’

  – இந்திரா பார்த்தசாரதி
   

  ‘தமிழ் இலக்கியத்தை நிரந்தரமாக அலங்கரிக்கக்கூடிய பல மணிமணியான சிறுகதைகளை ஆதவன் எழுதியிருக்கிறார். இப்போதும் எழுத்துலகில் நிறைய இளைஞர்களைப் பார்க்கிறேன். நுணுக்கமாக எழுதுபவர்கள், பெரும் மேதாவிலாசம் இருந்தாலும் அன்பும் அடக்கமும் உடையவர்கள்… இத்தகைய இளைஞர்களைப் பார்க்கிறபோது ஆதவனைப் பற்றிய ஞாபகம் வந்துகொண்டே இருக்கிறது.’

  – திருப்பூர் கிருஷ்ணன்

  or 3 X Rs. 1,663.33 with Koko Koko
  Read more
 • Out of Stock

  முறிந்த பாலம் ( Murintha Paazham )

  Rs. 1,050.00
  or 3 X Rs.350.00 with

  தோர்ன்டன் ஒயில்டர்

  தமிழில்: இரா. நடராசன்

   

  தான்டர்ன் ஒயில்டரின் முறிந்த பாலம் நாவல் கடவுளுக்கும் மனிதனுக்குமான உறவையும், வாழ்வின் புதிர்தன்மையையும் விவரிக்கிறது. 1927ம் ஆண்டு வெளியான இந்த நாவல் இன்று வரை வாசகர்களால் தொடர்ந்து கொண்டாடப்பட்டு வரும் படைப்பாகவுள்ளது. இந்த நூற்றாண்டின் சிறந்த 100 நாவல்களில் ஒன்றாகப் பலராலும் பட்டியலிடப்பட்ட முறிந்த பாலம் நாவல் உண்மைச் சம்பவம் ஒன்றை அடிப்படையாகக் கொண்டது. பெரு நாட்டில் உள்ள செயிண்ட் லூயிஸ் ரே பாலம் 1714 ஆண்டு அறுந்து விழுந்தது. இதனால் ஐந்து பேர் இறந்து போனார்கள். அந்த நிகழ்வையே நாவல் மையமாக் கொண்டு மனித வாழ்வு குறித்த ஆழமான விசாரணையை மேற்கொள்கிறது.

  or 3 X Rs. 350.00 with Koko Koko
  Read more
 • Out of Stock

  கார்கடல் : வெண்முரசு: மகாபாரதம் நாவல் வடிவில்

  Rs. 7,190.00
  or 3 X Rs.2,396.67 with

  ஜெயமோகன்

   

  மகாபாரதப் போரின் உச்சங்கள் நிகழ்வது இந்நாவலில். அந்த மாபெரும் போர் இருண்டு முகிலென அனைத்து அறங்களையும் நெறிகளையும் மூடுவதன் சித்திரம் இதில் உள்ளது. ஒவ்வொரு கட்டுகளாக அவிழத் தொடங்குகின்றன. ஒவ்வொருவரும் தங்கள் இறுதி எல்லைகளை உணர்கிறார்கள். வீரத்திற்கும் துணிவுக்கும் தற்கொடைக்கும் எழவைக்கும் உயரங்களையும் சினத்திற்கும் வஞ்சத்துக்கும் இறங்கவைக்கும் எல்லைகளையும்.
   

  போர் ஏன் உலக இலக்கியங்களில் அத்தனை விரிவாகச் சொல்லப்படுகிறது? ஏனென்றால் வாழ்க்கையின் எல்லாத் தருணங்களிலும் நிகழ்ந்துகொண்டிருப்பது போர்தான். நுண்செயல்களாலான போர், அகப்போர், குறியீட்டுப்போர். அத்தனை போர்களையும் அப்பட்டமாகப் புறத்தே நிகழ்த்திப் பார்ப்பதே போர் என நிகழ்கிறது. அங்கே மனிதன் தன்னை முழுவிசையுடன் தன்னைச் சூழ்ந்திருக்கும் பிறமானுடருடன், அறியமுடியாத ஊழுடன் உரசிக் கொள்கிறான், அறிந்து மீள்கிறான், அழிகிறான்.
   

  கார்கடல் முந்தைய நாவல்களில் பேருருவாக எழுந்த போர்க்களக் காட்சிகளை வெவ்வேறு கண்கள் வழியாக விரித்துரைத்து முன்செல்கிறது. மகாபாரதம் என்பதே போரின் கதைதான், அதன் அனைத்து நிகழ்வுகளும் போரிலேயே வந்து உச்சம் கொள்கின்றன. போரை அறிவதனூடாகவே அதன் முந்தைய நிகழ்வுகளனைத்தையும் நாம் அறியமுடியும். கார்கடல் மகாபாரத நிகழ்வுகள் அனைத்திலும் புதிய பார்வைகளை அளிக்கும் கதைப்பரப்பு.
   

  கார்கடல் – வெண்முரசு நாவல் வரிசையில் இருபதாவது நாவல்.

  or 3 X Rs. 2,396.67 with Koko Koko
  Read more
 • Out of Stock

  தீர்க்கதரிசி

  Rs. 690.00
  or 3 X Rs.230.00 with

  கலீல் ஜிப்ரான்

   

  கலீல் கிப்ரானின் த பிராபட் என்ற இந்த புத்தகம் ஆங்கிலத்தில் கவித்துவமான 26 கட்டுரைகளைக் கொண்டது. இது நிறைய ஆன்மீக ஊக்குவிகளைக் கொண்டது.

   

  ஆசிரியர் தன் கைப்பட பன்னிரெண்டு ஓவியங்களை வரைந்துள்ளார். 11 வருடங்களுக்கு மேல் இந்தப் புத்தகத்தின் நேர்த்திக்காக உழைத்திருக்கிறார். இது கிப்ரானின் சிறந்த படைப்பு. அவருடைய இலக்கிய வாழ்வின் உச்சத்தைத் தொட்டப் புத்தகம். இதனால் இவர் ‘வாஷிங்டன் தெருவின் புலவர்’ என்று அறியப்பட்டார்.

   

  உணர்சிகளின் கொந்தளிப்பின் ஈர்ப்பைப் படம் பிடித்திருக்கிறார். த உலக பிராபட் 40 மொழிகளுக்கு மேல் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. 20ம் நூன்றாண்டின் மிகவும் அதிகப்படியாகப் படிக்கப்பட்ட புத்தகம் என்று பெயர் வாங்கியது. இதன் முதல் பதிப்பில் 1300 பிரதிகள் ஒரே மாதத்தில் விற்கப்பட்டன.

  or 3 X Rs. 230.00 with Koko Koko
  Read more
 • Sale!
  Out of Stock

  யவன ராணி (இரண்டு பாகங்கள்) ( Yavana Rani – 2 Parts )

  Rs. 4,990.00
  or 3 X Rs.1,663.33 with

  சாண்டில்யன்

   

  யவன ராணி என்பது தமிழக எழுத்தாளர் சாண்டில்யன் எழுதிய ஒரு வரலாற்றுப் புதினம். 1960களில் குமுதம் வார இதழில் இத்தொடர் வெளிவந்தது. வானதி பதிப்பகத்தாரால் புத்தகமாக வெளியிடப்பட்டது. இந்தக் கதையில் சங்ககாலத்தில் வாழ்ந்த சோழர் வரலாற்றை ஒட்டி கற்பனைகளையும் சேர்த்து கதை எழுதப்பட்டுள்ளது.

   

  கரிகாலன் (திருமாவளவன்) வெண்ணி (கோவில்வெண்ணி தஞ்சை – திருவாரூர் சாலையில் உள்ள ஓர் சிற்றூர்) நகரில் சேர மன்னன் பெருன்சேரலாதனையும், பாண்டியனையும், பன்னிரு வேளிர் ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்த இருங்கோவேள் படையையும் அழித்து மன்னனாக முடி சூடியதை இப்புதினம் விவரிக்கின்றது.

   

  கதையின் நாயகன் சோழ நாட்டின் படைத்தலைவனாக இருந்த இளஞ்செழியன். இளஞ்செழியன் தன் முறைப்பெண் பூவழகியின் மீது கொண்ட காதலையும், யவன ராணி (கிரேக்க ராணி) இளஞ்செழியன் மீது கொண்ட மாசறு காதலையும் விவரிகின்றது. தமிழகத்தில் (பூம்புகார் நகரில்) தமிழருக்கு யவனர்கள் சேவகம் செய்து வந்ததையும், பூம்புகாரின் சிறப்பையும், கடல் வாணிபத்தில் தமிழர் பங்கையும், இப்லாஸ் என்ற யவனன் இளஞ்செழியன் மீது கொண்ட விசுவாசத்தையும், டைபிரியஸ் என்ற யவன கடற்படைத் தலைவன் போர் திறமைகளையும் இப்புதினம் விவரிக்கின்றது.

  or 3 X Rs. 1,663.33 with Koko Koko
  Read more
 • Sale!
  Vaalkavilirunthu Gangai Varai flashbooks.lk
  Out of Stock

  வால்காவிலிருந்து கங்கை வரை (Volgavilirundhu Gangai Varai)

  Rs. 2,290.00
  or 3 X Rs.763.33 with

  ராகுல சாங்கிருத்தியாயன்

   

  மனித சமுதாயத்தின் தோற்றம், வளர்ச்சி, நாகரிகம் பற்றி தத்துவரீதியாக விளக்கும் மகத்தான சிருஷ்டி இந்தப் புத்தகம். ஆரம்ப நிலை வாசகரும் புரிந்து கொள்ளும்படியான எளிமையான 20 கதைகள். இந்து- ஐரோப்பிய, இந்து- இராணிய சாதிகளின் வரலாற்றை ஆதாரமாகக் கொண்ட ஒவ்வொரு, 8,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து 20ம் நூற்றாண்டு வரைக்குமான, மனித சமுதாய வளர்ச்சியின் ஒவ்வொரு படி! இந்தியாவின் அதிக வாசகர்களால் மிகவும் விரும்பிப் படிக்கப்பட்டது மட்டுமல்லாமல் மதவாதிகளால் அதிகம் தாக்குதலுக்கு உள்ளான புத்தகமும் கூட. தமிழகத்தில் சிந்தனைப் புரட்சிக்கு வித்திட்ட அறிவார்ந்த நூலின் 29 வது அழகிய செம்பதிப்பு இது.

  or 3 X Rs. 763.33 with Koko Koko
  Read more
 • Out of Stock

  ஆட்கொல்லி விலங்கு

  Rs. 1,390.00
  or 3 X Rs.463.33 with

  ஆட்கொல்லி விலங்கு

   

  “அடுத்து என்ன, அடுத்து என்ன என்று பரபரப்போடு பக்கங்களைப் புரட்ட வைக்கும் பலவிதமான சாகச அனுபவங்கள் அடுத்தடுத்து இந்நூலில் விரிகின்றன.

  ஒரு புலி எந்தப் புள்ளியில் ஆட்கொல்லி விலங்காக உருமாறுகிறது?
   
  அது எவ்வாறு மனிதர்களை வேட்டையாடுகிறது?
   
  வனத்தில் வாழும் ஒரு சிறுத்தை ஏன் மனிதர்கள்மீது பாயவேண்டும்?
   
  ஒரு வேட்டை எவ்வாறு படிப்படியாகத் திட்டமிடப்படுகிறது?
   
  ஓர் ஆட்கொல்லி விலங்கின் இருப்பிடம் எவ்வாறு கண்டுபிடிக்கப்படுகிறது?
   
  விலங்கு வரும்வரை எப்படிப் பதுங்கியிருக்கவேண்டும்?
   
  காட்டிலும் மேட்டிலும் என்னென்ன வகையான ஆபத்துகள் காத்திருக்கும்?
   
  தேடிப்போன விலங்கு கண்முன்னால் திரண்டு நிற்கும் அந்தக் கணத்தில் என்ன நடக்கிறது?
   

  அடுத்து எந்த விலங்கு தோன்றுமோ எப்படித் தாக்குமோ என்று அச்சத்தில் உறைந்துகிடக்கும் கிராமத்து மக்களை மீட்டெடுக்க கென்னத் ஆண்டர்சன் தனது வேட்டையைத் தொடங்குகிறார். மனிதன் இயற்கையின்மீது பெரும் போர் தொடுக்கிறான். இயற்கை பதிலுக்கு மனிதனை வேட்டையாடத் தொடங்குகிறது. இந்தப் போரில் வெல்லப்போவது யார்? “

  or 3 X Rs. 463.33 with Koko Koko
  Read more
 • Out of Stock

  மிரட்டும் மர்மங்கள்

  Rs. 1,890.00
  or 3 X Rs.630.00 with

  நன்மாறன் திருநாவுக்கரசு

   

  அங்கு கண்டேன், இங்கு தோன்றியது, அவர்கள் பார்த்ததாகச் சொன்னார்கள் என்று தொடங்கி ஆவி பற்றி பலவிதமான கதைகள் பல வடிவங்களில் உலாவிக்கொண்டிருக்கின்றன. உண்மையில் ஆவி இருக்கிறதா? வேற்றுகிரகம், ஏலியன், பறக்கும் தட்டு போன்றவற்றைப் பற்றியெல்லாம் அமெரிக்காவில் இன்றளவும் பலவிதமான ஆய்வுகள் நடக்கின்றனவாமே? அப்படியென்றால் இவையெல்லாம் உண்மையில் இருக்கின்றன என்றுதானே அர்த்தம்?
   

  கண் இல்லாத மனிதன், பேய் வீடு, ரத்தக்காட்டேரி, மரணக் கிணறு, சிவப்புப் பிசாசு, இறந்த பின்பும் துடிக்கும் இதயம் என்று தொடங்கி உலகம் முழுக்க நடைபெற்ற அல்லது நடைபெற்றதாகச் சொல்லப்படும் அமானுஷ்ய சம்பவங்கள் இந்நூலில் திரட்டப்பட்டுள்ளன.
   

  அஞ்சிக்கொண்டும் அலறிக்கொண்டும் வாசிக்கவேண்டிய நூல். இருள் கவிந்திருக்கும்போது படிக்காமல் இருப்பது நலன் பயக்கும்.

  or 3 X Rs. 630.00 with Koko Koko
  Read more
 • Out of Stock

  1984 ஜார்ஜ் ஆர்வெல்

  Rs. 1,650.00
  or 3 X Rs.550.00 with

  ஜார்ஜ் ஆர்வெல்

  தமிழில்: மஹாரதி

   

  நவீன இலக்கியத்தின் மிக உறுதியான படைப்புகளில் ஒன்று.

   

  உலக யுத்தத்திற்குப்பின்பு, பூமியைத் தங்களுக்குள் பங்கிட்டுக்கொண்டன மூன்று கண்டத்து வல்லரசுகள். அவற்றில் ஒன்றான ஒஷானியாவைக் களமாகக் கொண்டது இந்தப் புதினம். அன்றைய காலகட்டத்தின் அரசியல் கட்டுமானங்களைப் பற்றிய ஆர்வெல்லின் அற்புதமான, நேர்த்தியான விமர்சனம், சீரழிந்த எதிர்கால வலைகளில் சிக்கிக்கொண்ட வின்ஸ்டன் ஸ்மித் ஊடாகவும், அரசுப்பணியின் போது தான் சந்தித்த ஜூலியாவுடன் கொண்ட அவனது காதல் விவகாரத்தின் ஊடாகவும் திறனோடு பயணிக்கிறது. ஆனந்தமான வாசிப்பைத் தரும் 1984.

   

  உலகத்தின் சமூக, அரசியல் கட்டுமானங்கள் மீது புத்திசாலித்தனமான, மிகமுக்கியமாக, அமரத்துவம் பெற்ற ஓர் அங்கதத் தாக்குதலையும் நிகழ்த்தும் புதினமாக மிளிர்கிறது.

  or 3 X Rs. 550.00 with Koko Koko
  Read more
 • Out of Stock

  பிரைட் அண்ட் பிரஜுடிஸ் ( Pride and Prejudice Tamil )

  Rs. 1,790.00
  or 3 X Rs.596.67 with

  ஜேன் ஆஸ்டின்

   

  எலிசபெத் பென்னட் முதல் முறையாக ஒரு நடன நிகழ்ச்சியில் ஃபிட்ஸ்வில்லியம் டார்சியை சந்தித்தபொழுது, திமிர்பிடித்த அருவருப்பான மனிதனென்று அவனை அலட்சியப்படுத்துகிறாள். தாங்கிக்கொள்ள முடியாத அளவு துடுக்குத்தனமாக நடந்துகொள்வது மட்டுமல்லாமல் அவளுடன் நடனமாடும் யோசனையைக் கூட மறுக்கிறான் டார்சி.

   

  வாழ்க்கை அவர்களை ஒருவருக்கெதிராக மற்றவரை நிறுத்தும்பொழுது டார்சி அவளது அறிவுக்கூர்மை மற்றும் நகைச்சுவை உணர்வால் கவரப்பட, எலிசபெத் அவன் மீதான தன் உணர்ச்சிகளைக் குறித்து வியக்க துவங்குகிறாள். ஆனால் டார்சி அவளது கடைசி தங்கை லிடியாவை அவதூறிலிருந்துக் காப்பாற்ற, இதுவரை அகம்பாவத்தினால் அவளைக் குறித்து தன் கருத்தில் பாரபட்சமாக இருந்துவிட்டோமோ என்று சிந்தித்தாள்.

   

  போராடும் இரு உள்ளங்களின் கதை இது என்றாலும் பதினெட்டாம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் நிலவிய வாழ்க்கை முறையைப் பற்றிய ஒரு நையாண்டியாக இதனை ஜேன் ஆஸ்டின் நெய்துள்ளார். இரண்டு நூந்தாண்டுகளுக்கு முன்னால் பதிப்பிடப்பட்டாலும் இன்றளவிலும் இது வாசகர்களின் உள்ளங்களை கவர்ந்து வருகிறது.

  or 3 X Rs. 596.67 with Koko Koko
  Read more