Opening Possibilities, Illuminating Potentials
Delivery in 1-5 business days. Island-wide Free Delivery for Purchase of Rs. 3990 or above.

Cart

Your Cart is Empty

Back To Shop
Contact Us 0764980321

Category: வரலாற்று நாவல்

Showing all 8 results

 • Sale!

  மர்யமா: கிரானடா முக்கதைகள் – 2 ( Maryama )

  Rs. 1,390.00
  or 3 X Rs.463.33 with

  றள்வா ஆஷூர்
  தமிழில்: முனைவர் பி.எம்.எம். இர்ஃபான்

   

  எங்கள் மூதாதையர்கள் ஏதும் குற்றமிழைத்துவிட்டதற்காகவா எங்களை இப்படித் தண்டிக்கிறாய்? அல்லது நல்லவர்களும் கெட்டவர்களுமான மனிதர்கள் தங்கள் இச்சைப்படி நடத்திச் செல்லவா இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்திருக்கிறாய்? அவர்களின் மனேபாவம் இப்படிக் கொடூரமாக இருப்பதைத் தெரிந்திருந்தும் ஏன் அவர்களை விட்டு வைத்திருக்கிறாய்?

  – நாவலிலிருந்து…

  or 3 X Rs. 463.33 with Koko Koko
  Add to cart
 • Sale!

  வேர்கள் ( Vergel ) The Roots

  Rs. 8,990.00
  or 3 X Rs.2,996.67 with

  அலெக்ஸ் ஹேலி

  தமிழில்: பொன். சின்னத்தம்பி முருகேசன்

   

  அமெரிக்காவின் அசுர வளர்ச்சிக்கு அடியுரமாய், ஆப்பிரிக்காவிலிருந்து அடிமைகளாய்க் கொண்டுவரப்பட்ட கருப்பினத்தவரின் வியர்வையும் ரத்தமும் உள்ளன. தனித்த, முழுமையான பண்பாட்டுடன் ஆப்பிரிக்காவில் வசித்த கருப்பின மக்கள், 18-ம் நூற்றாண்டில் அடிமைகளாக விற்கப்பட்டு, அமெரிக்க நிலத்துக்கு அழைத்துவரப்பட்டார்கள். அங்கு கிடைத்ததெல்லாம், உயிரை உடலில் தக்க வைத்துக்கொள்ளப் போதுமான உணவு மட்டும்தான்.

   

  வசைகள், சித்தரவதைகள் என்று பல்வேறு துன்பங்களுக்கு இடையில் பணிசெய்ய அமர்த்தப்பட்ட பரிதாப உயிர்கள் அவர்கள். அப்படி, மேற்கு ஆப்பிரிக்காவின் காம்பியாவில் பிறந்து, அமெரிக்காவில் அடிமையாக வேலைபார்க்க நேர்ந்த குண்டா கின்டே என்பவரின் வழிவந்த ஏழாவது தலைமுறையைச் சேர்ந்தவர்தான் அலெக்ஸ் ஹேலி. மால்கம் எக்ஸ் வாழ்க்கை வரலாற்றை எழுதிய இவர், தனது மூதாதையரின் கிராமத்தைத் தேடிச்சென்று அவர்களது வாழ்க்கையைப் புத்தகமாக எழுதினார்.

   

  அதுதான் ‘வேர்கள்’ (ரூட்ஸ்) நாவல். 1976-ல் வெளியான இந்த நாவல், தொலைக்காட்சித் தொடராக வெளிவந்து, பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆப்பிரிக்க – அமெரிக்க மக்களின் வாழ்க்கை, அவர்களது கலாச்சாரம் பற்றிய தகவல்கள் கொண்ட இந்தப் புத்தகம்,

  or 3 X Rs. 2,996.67 with Koko Koko
  Add to cart
 • Sale!
  Out of Stock

  கிரானடா (நாவல்) ( Granada )

  Rs. 2,190.00
  or 3 X Rs.730.00 with

  றள்வா ஆஷூர்

  தமிழில்: முனைவர் பி.எம்.எம். இர்ஃபான்

   

  அசாதாரணமானதொரு காலத்தில் வாழ்ந்த சாதாரணர்கள் சிலரின் வாழ்க்கையைப் பின்தொடர்ந்து செல்வதன்வழி பதினைந்தாம் நூற்றாண்டில் நிகழ்ந்த முஸ்லிம் ஸ்பெயினின் வீழ்ச்சி ஏற்படுத்திய பண்பாட்டு இழப்பையும் வலியையும் வெகுநுட்பமாக நெய்தெடுத்திருக்கிறது கிரானடா. ஸ்பானிஷ் மதக்குற்ற விசாரணைக் காலத்தின் மூச்சடைக்கும் சூழலின் மத்தியில் அரும்பும் அழகிய காதல்கள், அடக்குமுறைக்கு முன் பணிய மறுக்கும் பண்பாடு, பிழைத்து வாழ்ந்துவிடுவதற்கான யத்தனங்கள் என வாழ்வின் பல்வேறு வண்ணங்களும் முயங்கி மாயம் நிகழ்த்தும் ஒரு நவீன கிளாசிக் இது. முக்கதைகளில் முதலாவது.

  or 3 X Rs. 730.00 with Koko Koko
  Read more
 • Out of Stock

  கள்வனின் காதலி (படங்களுடன்) / Kalvanin Kadhali

  Rs. 1,320.00
  or 3 X Rs.440.00 with

  கல்கி

  or 3 X Rs. 440.00 with Koko Koko
  Read more
 • Out of Stock

  பார்த்திபன் கனவு (Parthiban Kanavu)

  Rs. 1,780.00
  or 3 X Rs.593.33 with

  கல்கி

   

  இது கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களால் கல்கி இதழில் தொடராக எழுதி வெளியான புகழ் பெற்ற வரலாற்றுப் புதினமாகும். இது பின்னர் நூலாக வெளிவந்தது. இச்சரித்திரக் கதையில் பார்த்திபன் எனும் சோழ அரசனின் கனவு அவரின் புத்திரன் மூலம் எவ்வாறு நிறைவேறுகின்றது என்பது அழகாகக் கூறப்பட்டுள்ளது. நரசிம்ம பல்லவன், சிறுத்தொண்டர் என்கின்ற பரஞ்சோதி போன்ற வரலாற்றுப் பாத்திரங்கள் இக்கதையில் வருகின்றனர். கல்கியின் மற்றொறு புதினமான சிவகாமியின் சபதத்தில் வரும் பல கதாபாத்திரங்கள் பார்த்திபன் கனவிலும் தொடர்வதை காணலாம்.

  or 3 X Rs. 593.33 with Koko Koko
  Read more
 • Sale!
  Out of Stock

  சிவகாமியின் சபதம் ( Sivagamiyin Sabatham )

  Rs. 5,700.00
  or 3 X Rs.1,900.00 with

  கல்கி

   

  அமரர் கல்கி எழுதிய அற்புத வரலாற்றுப் புதினம் ‘சிவகாமியின் சபதம்’. பல்லவ சாம்ராஜ்யத்தினை நம் கண் முன்னே நிறுத்தும் அதிஅற்புத காவியம் இது. முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் அரசாண்ட காலத்தில் நடைபெற்ற சம்பவங்களைப் பயன்படுத்தி எழுதப்பட்ட இந்தப் புதினத்தில் இளவரசன் முதலாம் நரசிம்ம பல்லவனுக்கு முக்கிய இடம் உண்டு. சிவகாமியின் சபதம் கதையானது காஞ்சியில் ஏற்பட்ட போர்ச் சூழலையும், அதன் தொடர்ச்சியாக சாளுக்ய நாட்டின் தலைநகர் வாதாபியின் மீது பல்லவர் போர்தொடுத்ததைப் பற்றியது.

   

  முதல் பகுதியில் பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மனே நாயகனைப் போன்று தோன்றினும் பிற்பகுதியில் அவரது மகன் நரசிம்ம பல்லவர் கதையில் ஆதிக்கம் செலுத்துவார். எனவே இந்தக் கதையின் நாயகன் யார் என்பதை வாசகர்களே முடிவு செய்துகொள்ளுங்கள். கதையில் பல்லவ மற்றும் சாளுக்ய நாட்டின் வரலாற்றை கண்முன்னே நிறுத்துகிறார் அமரர் கல்கி. காஞ்சி மாநகரில் சமணர்களின் வருகைக்குப் பின்னர் ஏற்பட்ட மதமாற்றங்களை நாவலில் நாம் அறியலாம். புத்த துறவி நாகநந்தி, பரஞ்சோதி, சிவகாமி, சிற்பி ஆயனார் போன்ற பாத்திரங்கள் நாவலை படித்து முடித்த பின்னரும் நம் மனக்கண்ணில் நிழலாடுவார்கள்.

   

  மகேந்திரவர்மனை, ஆயகலைகளில் சிறந்தவராகவும் அவைகளை விரும்பி வளர்ப்பவராகவும் கல்கி சித்தரித்துள்ளார். நுண்ணிய அறிவு கூர்மை உடையவராகவும் மந்திரிகளின் ஆலோசனைகளை ஏற்பவராகவும் மகேந்திரவர்மன் இருந்ததாகவும் அவர் குறிப்பிடுகிறார். இவர் காலத்தில்தான் மாமல்லபுரம் சிற்பங்களால் புகழ் பெற்றது. வரலாற்றில் துரோகங்கள், போரின் அவலங்கள், பெண்களின் நிலைகளை சிவகாமி சபதத்தில் அழகாக சித்தரித்துக்காட்டுகிறார் கல்கி. அமரர் கல்கியின் எழுத்துக்கள் அமரத்துவம் வாய்ந்தவை. இளையதலைமுறை அவரது எழுத்துக்களை வாசிக்க வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் எமது விகடன் பிரசுரம் சிவகாமியின் சபதத்தை தமிழ்கூறும் நல்லுலகத்துக்கு மீண்டும் அளிப்பதில் பெருமை கொள்கிறது. மணியம் செல்வன் அவர்களின் உயிரோவியங்கள் உங்கள் மனதை நிச்சயம் வருடும்.

   

  எத்தனை முறை படித்தாலும் சலிக்காத சாகாவரம் பெற்ற சரித்திரத்தை வாசித்து தேன்தமிழ்ச் சுவை பருகி… வரலாற்றின் பக்கத்தைப் புரட்டுங்கள்!

  or 3 X Rs. 1,900.00 with Koko Koko
  Read more
 • Sale!
  Out of Stock

  பொன்னியின் செல்வன் (Vol.1 – Vol. 5) / Ponniyin Selvan

  Rs. 12,290.00
  or 3 X Rs.4,096.67 with

  கல்கி

   

  பேராசிரியர் அமரர் கல்கி பற்றியோ, அவரின் எழுத்தாற்றல் பற்றியோ தமிழ்கூறும் நல்லுலகுக்கு புதிதாகச் சொல்வதற்கு எதுவுமில்லை. அவருடைய படைப்பின் மகிமை அத்தகையது. அவரின் சரித்திரக் காப்பியங்களான பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன் போன்றவை காலத்தால் அழியாத காவியங்களாக போற்றப்படுபவை. இன்னும் எத்தனை நூறாண்டு காலத்துக்குப் பிறகு அவற்றை எடுத்துப் படித்தாலும், அமரர் கல்கியின் மயக்கும் நடையும், எளிமையும் இனிமையும் நிரம்பிய தமிழும், கதையின் வசீகரப் போக்கும் ஓர் இனிய சுழலுக்குள் நம்மை இழுத்துப் போவதை உணரலாம்.
   

  சரித்திரத்தையும் கற்பனையையும் மிகத் திறமையாகக் குழைத்து அமரர் கல்கி படைத்திருக்கும் புதினமான ‘பொன்னியின் செல்வன்’, தமிழ் வாசகர்களுக்குக் கிடைத்த ஓர் இலக்கிய வரம் என்றே சொல்லலாம். பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய சரித்திரக் காட்சிகளை – அவற்றுக்கான அடிப்படை ஆதாரங்களை அச்சு பிசகாமல் உள்வாங்கிக் கொண்டு & அருகில் இருந்தே பார்த்தது போல நுணுக்கமாக அவர் விவரித்திருக்கும் நேர்த்தியை என்னவென்று சொல்ல! சுந்தரச் சோழர், அருள்மொழி வர்மன், ஆதித்த கரிகாலன், வந்தியத்தேவன், செம்பியன்மாதேவி, குந்தவை, வானதி, நந்தினி, ஆழ்வார்க்கடியான், பழுவேட்டரையர் என வரிசையாக ஒவ்வொருவரும் உயிர்பெற்று நம் முன் நடமாடத் துவங்குகிறார்கள். அன்றைய சோழ தேசத்தில் நிலவிய ராஜாங்கப் பிரச்னைகள், வகுக்கப்பட்ட யுத்த வியூகங்கள், தீட்டப்பட்ட சதியாலோசனைகள் ஆகியவை ஒரு மர்ம நாவலுக்குரிய அத்தனை படபடப்பையும் ஏற்படுத்தி விடுகிறது.
   

  இதில் எவையெல்லாம் நிஜ சரித்திரம், எவையெல்லாம் சரித்திரத்தின் நீட்சியாக உருவாக்கப்பட்ட கற்பனைச் சம்பவங்கள் எனப் பிரித்தறிய முடியாதபடி பின்னிப் பிணைந்து இருப்பது, அமரர் கல்கியின் ஜீவிய எழுத்துத் திறனுக்குச் சான்று! ஒலியும் ஒளியும் போல…

  or 3 X Rs. 4,096.67 with Koko Koko
  Read more