Opening Possibilities, Illuminating Potentials
Island-wide Free Delivery for Purchase of Rs. 3990 or above.

Cart

Your Cart is Empty

Back To Shop
Contact Us 0764980321

Category: புனைவு

Showing 1–60 of 102 results

  • பாடும் பறவையின் மௌனம் / Paadum Paravaiyin Maunam / To Kill a Mockingbird Tamil

    Rs. 2,390.00
    or 3 X Rs.796.67 with

    ஹார்ப்பர் லீ

    தமிழில்:  சித்தார்த்தன் சுந்தரம்

     

    1961 ஆம் ஆண்டு இப்புத்தகத்திற்கு புலிட்சர் பரிசு கொடுக்கப்பட்டது.

     

    முப்பதுகளில் இனப் பிரிவினை வழக்கத்திலிருந்த அலபாமா நகரில் வெள்ளையினத்தைச் சேர்ந்த பெண்ணை பலாத்காரம் செய்துவிட்டான் என குற்றஞ்சாட்டப்பட்ட ஒரு நீக்ரோ இளைஞன் டாம் ராபின்சனுக்காக, வழக்கறிஞராக பணிபுரிந்து வந்த ஆட்டிகஸ் ஃபின்ச் வாதாட முன்வந்தார்.

     

    நகரத்தில் இருந்த பெரும்பாலன வெள்ளையின மக்கள் இதை விரும்பவில்லை. ஆனால் ஒடுக்கப்பட்ட இனத்தவரின் உரிமைக்காக வாதாடியே தீர்வேன் என்கிற முடிவிலிருந்து ஆட்டிகஸ் சிறிதும் விலகவில்லை.

     

    வழக்கின் முடிவு என்ன..?

     

    இந்த வழக்கினால் அலபாமா இனப்பிரச்சனையில் மாற்றம் ஏற்பட்டதா..?

     

    நீக்ரோ இளைஞனின் கதி என்னவாயிற்று..?

     

    ஆட்டிகஸின் ஆறு வயது மகள் ஸ்கெளட் ஃபின்ச்சின் பார்வையில் ஹார்ப்பர் லீ விவரிக்கிறார்.

    or 3 X Rs. 796.67 with Koko Koko
    Add to cart
  • என் பெயர் பட்டேல் பை / En Peyar Pattel Pai / Life of Pi Tamil

    Rs. 2,190.00
    or 3 X Rs.730.00 with

    யான் மார்ட்டெல்

    தமிழில்:  பொன். சின்னத்தம்பி முருகேசன்

     

    என்னுடைய விலங்குக் குடும்பத்துக்கு என்னாச்சு?

     

    பறவைகள், கொடிய விலங்குகள், ஊர்வன என்று ஏகப்பட்ட விலங்குகளுக்கு என்னாச்சு?

     

    எல்லாமே மூழ்கிப் போச்சா?

     

    நான் மதிப்பு மிக்கவை எனக் கருதிய ஒவ்வொன்றும் அழிந்து போயின. அப்படி நிகழ்ந்ததற்கு எந்தவொரு விளக்கமும் பிடிபடவுமில்லை.

     

    எதையுமே புரிஞ்சிக்காம சித்ரவதைபட வேண்டியது தானா?

     

    அது தான் முடிவுன்னா, பகுத்தறிவு என்பதற்கு என்ன நோக்கம். ரிச்சர்ட் பார்க்கர்?

     

    உணவு, உடை, உறையுள் இவற்றை அடைவதற்கு அப்பால் பகுத்தறிவு எதற்கும் பயன்படாதா?

     

    பெரிய பெரிய பிரச்சனைகளுக்கு தீர்வுகளைக் கொடுத்தால் என்ன?

     

    விடைபெற முடியாத கேள்விகளை எழுப்புகிற சக்தி மட்டும் எப்படி வந்தது?

     

    சிறிதளவு மீனைக் கூடப் பிடிக்காதென்றால், அவ்வளவு பெரிய வலை எதற்காக?

    or 3 X Rs. 730.00 with Koko Koko
    Add to cart
  • வட்டியும் முதலும் / Vattiyum Mudhalum

    Rs. 2,990.00
    or 3 X Rs.996.67 with

    ராஜு முருகன்

     

    பசியில் தொடங்கியதாலோ என்னவோ… ராஜுமுருகனின் ‘வட்டியும் முதலும்’ தொடரை வாசிக்க வாசிக்க பசி அடங்கவே இல்லை. இளைஞன் ஸ்தானம் கடக்காது வாழும் இந்த மனிதனுக்குள் இத்தனை கடல்களா? ஒவ்வொரு வாரமும் விகடனில் துளிகளாகத் தன் கடல்களை இறக்கிவைத்த இந்த இளைஞனுக்குள் கோபம், வாஞ்சை, பாசம், பரிதவிப்பு, நெருடல் என எத்தனை விதமான உணர்வுகள்!

     

    தன் வாழ்வியல் அனுபவங்களாக வாழ்க்கையின் பன்முகங்களையும் பந்தி வைத்திருக்கும் ராஜுமுருகன், தமிழ் எழுத்துலகின் நம்பிக்கை மிகுந்த அடையாளம். சிரித்து, அழுது, விளையாடி, தூங்கி பன்முகத்தனங்களையும் தன்னை அறியாமலே செய்யும் ஒரு குழந்தையைப்போல் வாழ்வின் அத்தனை விதமான உணர்வுகளையும் போகிறபோக்கில் நெஞ்சு தைக்கச் சொல்லி இருக்கிறார் ராஜுமுருகன். துயரங்களும் நம்பிக்கைகளும் கலந்து நகரும் இந்த உலகை சற்று தூரத்தில் நின்று கவனித்த கணக்காய் அத்தனை விதமான அனுபவங்களையும் இந்தப் புத்தகத்தில் காணலாம்.

     

    புறந்தள்ளப்பட்டவர்களுக்காக அழலாம்; போராடுபவர்களுக்குக் கைகொடுக்கலாம்; இழந்தவர்களுக்குத் துணை நிற்கலாம்; வென்றவர்களுக்கு மலர்க்கொத்து நீட்டலாம்; கொன்றவர்களுக்கு மன்னிப்புக் காட்டலாம். மனித உணர்வுகளின் அத்தனை விதமான வெளிக்காட்டல்களையும் நிச்சயம் இந்தப் புத்தகம் உங்களுக்குள் நிகழ்த்தும். குவிந்து கிடக்கும் பணத்தைப் பார்ப்பதும் பார்வையே… பணத்தின் நடு வட்டத்தில் யாரோ ஒருவன் தன் காதலைப் பிழைகளோடு சொல்லி இருப்பதைப் பார்த்துச் சிலிர்ப்பதும் பார்வையே. அந்தக் காதலன் தன் காதலியோடு சேர்ந்திருப்பானா என, எவனோ ஒருவனுக்காக ஏங்கித் தவிப்பது மூன்றாம் பார்வை.

     

    இந்தப் புத்தகத்தின் அற்புதம் இத்தகைய பெருங்குணமே! கடலுக்குள் கூடுகட்ட – கனவுக்குள் கடல் கட்ட மனப்பக்குவம் வார்க்கும் மயிலிறகுத் தீண்டலே இந்தப் புத்தகம்!…….

    or 3 X Rs. 996.67 with Koko Koko
    Add to cart
  • உருமாற்றம் / Urumaatram / The Metamorphosis Tamil

    Rs. 1,990.00
    or 3 X Rs.663.33 with

    ஃபிரான்ஸ் காஃப்கா

    தமிழில்:  பேரா.ச.வின்சென்ட்

     

    இந்த வாழ்க்கையும், வாழ்வின் மீதுள்ள பிடித்தங்களும் , மனமும் நம்மை உள்முகமாக வேறு ஒரு பக்கம் செலுத்திக்கொண்டிருக்க, வாழ்க்கை ஒரு இறுக்கமான இயந்திரத்தனமான வாழ்வைக் கையளித்தபோது , எப்போதேனும் நாங்கள் நினைத்திருப்போம்தானே? இந்த வாழ்வில் இருந்து வெளியேறுவது எப்படியென்று.

     

    காஃப்காவின் ” உருமாற்றம்”அதன் ஒரு முயற்சியாகத்தான் எனும் நாவலைப் பார்க்கவேண்டியிருக்கிறது. பெரும்பாலான மனிதர்களால் அருவருப்பாகப் பார்க்கப்படுகின்ற கரப்பான் பூச்சியைக் கொண்டு பின்னப்பட்டிருக்கின்ற ஒரு கதை.

     

    ஒரு இளைஞன் திடீரென கரப்பான் பூச்சியாக மாறிவிடுகிறான். அதன் பின் நடப்பதெல்லாம் என்ன? இதுதான் கதை.

    கரப்பான் பூச்சியாக மாறிவிடுகிற இளைஞன், எத்தகையதொரு கற்பனை, உங்களால் இப்படியொரு கற்பனையைச் செய்து பார்க்க முடிகின்றதா?

    ஆம் காஃப்காவின் உருமாற்றம் அத்தகையதொரு முயற்சிதான்.

     

    காப்ரியேல் கார்சியா மார்க்விஸ், “காஃப்காவின் உருமாற்றத்தைப் படித்தது எனக்கு எழுத வேறு வழிகள் இருக்கின்றன என்பதைக் காட்டியது,” என்று குறிப்பிடுகிறார்

     

    or 3 X Rs. 663.33 with Koko Koko
    Add to cart
  • குட்டி இளவரசன் / Kutti Ilavarasan / The Little Prince Tamil

    Rs. 990.00
    or 3 X Rs.330.00 with

    அந்த்வான் து செந்த் – எக்சுபெரி

    தமிழில்: ச. மதனகல்யாணி

     

    குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை எல்லோரும் விரும்பிப் படிக்கும் ‘குட்டி இளவரசன்’ ஏறக்குறைய 200 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, கிட்டத்தட்ட பத்து கோடி பிரதிகள் விற்பனையாகியிருக்கிறது.

     

    நூலிலிருந்து:

    “பெரியவர்கள் ஒருபோதும் எதையும் தாங்களாகவே புரிந்துகொள்வதில்லை. எப்போதும் ஓயாமல் அவர்களுக்கு விளக்கங்களைத் தருவது குழந்தைகளுக்குச் சலிப்பாக இருக்கிறது.”

     

    “இதயத்திற்குத்தான் பார்வை உண்டு, முக்கியமானது கண்களுக்குத் தென்படாது.”

     

    “உன்னுடைய ரோஜாவுக்கு நீ செலவழித்த நேரந்தான் ரோஜாவை உனக்கு அவ்வளவு முக்கியமானதாகச் செய்கிறது.”

    or 3 X Rs. 330.00 with Koko Koko
    Add to cart
  • சித்தார்த்தன் / Sithardhan / Siddhartha Tamil

    Rs. 1,090.00
    or 3 X Rs.363.33 with

    ஹெர்மன் ஹெஸ்ஸே

     

    நோபல் பரிசு பெற்ற ஹெர்மன் ஹெஸ்ஸேயின் புகழ்பெற்ற ஓர் உருவக நாவல் சித்தார்த்தன்.

    இது புத்தர் காலப் பின்னணியில் இந்தியத் துணைக் கண்டத்திலிருந்து சித்தார்த்தன் என்று அழைக்கப்படும் ஒரு சிறுவனின் ஆன்மிகப் பயணத்தை விவரிக்கிறது.

     

    கிழக்கின், மேற்கத்தின் ஆன்மிக மரபுகளை உளப்பகுப்பாய்வுடனும் தத்துவத்துடனும் ஒருங்கிணைத்து, மனிதகுலத்திற்கான ஆழமான, நகரும் கழிவிரக்கத்துடன் எழுதப்பட்டிருக்கிறது இந்தக் கதை. 1922ஆம் ஆண்டு ஜெர்மன் மொழியில் முதல் பதிப்பு வெளியானதிலிருந்து பல மொழிகளில் மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கையைத் தொட்டிருக்கிறது. எளிமையான உரைநடையில், தேடலுள்ளவர் அனைவருக்கும் மிகவும் ஆழமான செய்தியை ஹெஸ்ஸே அனுப்பியுள்ளார்.

     

    சத்தியத்திற்கான தேடலில் தனது வீட்டையும் குடும்பத்தையும் விட்டு வெளியேறும் ஓர் இளைஞனைச் சுற்றிக் கதை சுழல்கிறது. ஒரு பிராமணச் சிறுவன் தன் தேடலைப் பின்தொடர்ந்து, அறிவொளி பெறுவதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்வதற்காக வாழ்க்கையின் பல்வேறு தளத்திற்குச் செல்கிறான். அவன் தந்தைக்கு ஒரு பக்தியுள்ள பிராமணனாக, சமணனாக, பணக்கார வணிகனாக, காதலனாக, எளிய படகோட்டியாக வாழ்க்கையை அனுபவிக்கிறான்.

     

    இதன்மூலம் அவன் தொடர்ச்சியான மாற்றங்களுக்கும் உணர்தல்களுக்கும் உட்படுகிறான், ஒரு பயிற்சியாளனாக பாராயணம் செய்யவோ, பக்தனாகத் தியானிக்கவோ இல்லை. சித்தார்த்தன் உலகத்துடன் கலக்க வருவதில்லை, இயற்கையின் தாளங்களுடன் எதிரொலிக்கிறான்; ஆற்றிலிருந்து பதில்களைக் கேட்க வாசகரின் காதைக் கீழே வளைக்கிறான்.

     

    இந்தப் பதிப்பில் “வாசகர் வழிகாட்டி’ என்னும் புதிய பகுதி இடம்பெறுகிறது. அதில் நாவல், நூலாசிரியர் பற்றிய அறிமுகமும் புத்தகத்தை ஆழ்ந்து படிப்பதற்கான வினாக்களும் வழிகாட்டுதல்களும் உள்ளன.

    or 3 X Rs. 363.33 with Koko Koko
    Add to cart
  • Sale!

    தாய் ( Thaai )

    Rs. 3,390.00
    or 3 X Rs.1,130.00 with

    மாக்ஸிம் கார்க்கி

    தமிழில்: தொ. மு. சி. ரகுநாதன்

     

    படிக்காதவன் உலகம் அறியாதவன் தொழிலாளியின் மனைவி குடிபழக்கத்துக்கு ஆட்பட்ட கணவனால் நிறைய ஆட்ய் உதைபட்டு அழைக்கழிக்கப்பட்டவள். இவளே பிற்காலத்தில் புரட்சிப் புயலான தாய் ஆகிறாள். இந்நாவல் மக்சீய கார்க்கியின் ஒப்புயர்வர்ற அரிய படைப்பு. ரஷ்ய மொழியில் இருநூறுக்கும் மேற்பட்ட பதிப்புகளும் 127 வேற்று மொழிகளில் நூற்றுக்கணக்கான பதிப்புகளும் இதுவரை வெளிவந்திருப்பதே இந்நூலின் சிறப்பைப் பறைசாற்றும்.

    or 3 X Rs. 1,130.00 with Koko Koko
    Add to cart
  • சஹீர் ( Zahir Tamil )

    Rs. 2,390.00
    or 3 X Rs.796.67 with

    பாலோ கோயல்ஹோ

     

    புகழ் பெற்ற ஒரு நூலாசிரியர், போர்முனைச் செய்திகளைச் சேகரிக்கின்ற ஒரு பத்திரிகையாளராக வேலை பார்த்து வரும் தன்னுடைய மனைவி திடீரென்று ஒரு நாள் எந்தச் சுவடுமின்றித் தன்னுடைய வாழ்க்கையிலிருந்து மாயமாய் மறைந்துவிடுவதைக் கண்டு அதிர்ச்சியடைகிறார். காலம் அவருக்கு அதிக வெற்றிகளையும் ஒரு புதிய காதலையும் கொண்டுவருகின்றபோதிலும், அவர் தொடர்ந்து குழப்பத்தில் இருக்கிறார், அதே நேரத்தில், அந்த மர்மத்தால் அவர் அதிகமாக ஆட்கொள்ளப்படுகிறார். ‘யாரேனும் அவளைக் கடத்திச் சென்றுவிட்டனரா? அவள் மிரட்டப்பட்டாளா? அல்லது, என்னுடனான மணவாழ்க்கையில் சலிப்பு ஏற்பட்டு அவள் தானாகவே எங்கோ போய்விட்டாளா?’

    பாலோ கொயலோ, படிப்போரின் மனங்களை வசீகரித்துக் கட்டிப் போடும் விதத்தில் கதை சொல்வதற்கான தன்னுடைய ஆற்றலை வெளிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், சாத்தியக்கூறுகள் நிறைந்த ஓர் உலகில் ஒரு மனிதனாக இருப்பது என்றால் என்ன என்பது குறித்தத் தன்னுடைய அசாதாரணமான, ஆழமான உள்நோக்கையும் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

    or 3 X Rs. 796.67 with Koko Koko
    Add to cart
  • கரமசோவ் சகோதரர்கள் (2 பாகங்கள்) ( Karamazov Sagothararkal )

    Rs. 11,490.00
    or 3 X Rs.3,830.00 with

    ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி

      தமிழில்: கவிஞர் புவியரசு

     

    உலக இயக்கத்தில் மிகச்சிறந்த நாவலாசிரியர் என்ற புகழுக்கு உரியவர், ரஷ்ய இலக்கிய மேதை டாஸ் டாவ்ஸ்கி.ஏழை மக்கள், மரணம் அடைந்தவர்களின் வீடு, முட்டாள், குற்றமும் தண்டனையும், கரமசோவ் சகோதரர்கள் என்ற ஐந்துபடைப்புகள் மிகச் சிறந்தவை. இவற்றில் குற்றமும் தண்டனையும், கரமசோவ் சகோதரர்கள் ஆகிய இரண்டு நாவல்களும் கலையின் சிகரங்கள்.அவருடைய நாவல்களை, அவ்வளவு சுலபமாக படித்துவிட முடியாது. மிகவும் கவனமாக, நிறுத்தி, நிதானத்துடன் தான் படிக்க முடியும். அழுத்தமும், கனமும் கூடிய அற்புதப் படைப்புகள் அவை என்பார் புலவர். கோ. தேவராசன்.1880ம் ஆண்டு வெளிவந்த நாவல் இது.

     

    கடவுள் இரும்பு என்னும் தத்துவத்தை வலியுறுத்தும் நாவல். கரமசோவ் சகோதரர்கள்… கதை அம்சம் என்று பார்த்தால் சாதாரண துப்பறியும் நாவல் போன்றதுதான். ஆனால், அற்புதமான குணச் சித்திரப் படைப்புகள்… இதில் வரும் கேரக்டர்கள்!மூன்று புதல்வர்களின் தந்தையான கரமசோவ் பணத்திற்காக எத்தகைய இழிந்த செயலையும் செய்யத் துணிபவன், மோசடிகளைத் துணிந்து செய்யக் கூடியவன், மண்டைக் குழப்பம் உள்ளவன், கேடு கெட்டவன் என்று அறிமுகப்படுத்துவார். இந்த பாவலோவிச் கரமசோவ்தான் கொல்லப்படுகிறான்….. நீரோட்டம் போன்ற தெளிவான நடையில் மொழி பெயர்த்திருக்கும். புவியரசன் போற்றப்பட வேண்டியவர்.

    or 3 X Rs. 3,830.00 with Koko Koko
    Add to cart
  • Sale!

    இடக்கை / Idakkai

    Rs. 2,290.00
    or 3 X Rs.763.33 with

    எஸ்.ராமகிருஷ்ணன்

     

    நீதி மறுக்கபட்ட மனிதனின் துயரக்குரலே இடக்கை. இந்நாவல் நீதி கிடைக்காத மனிதனின் துயர வாழ்வினைப் பேசுகிறது.

     

    ஔரங்கசீப்பின் கடைசி நாட்களில் துவங்கி மத்திய இந்தியாவின் புனைவு வெளியில் சஞ்சரிக்கிறது இடக்கை.

    or 3 X Rs. 763.33 with Koko Koko
    Add to cart
  • குல்சாரி / Kulsari

    Rs. 900.00
    or 3 X Rs.300.00 with

    சிங்கிஸ் ஐத்மாத்தவ்

     

    இரண்டாம் உலகப் போரில் சோவியத் சமுதாயத்தில் நடைபெற்ற எல்லாவற்றிற்கும் ஸ்டாலின்தான் காரணம் என்ற பரப்புரையை இந்தக் குறுநாவல் தகர்க்கிறது.

     

    சமூகப் போராட்டத்தை மிக நேர்த்தியாக குதிரையை மையமாக வைத்து பின்னப்பட்டுள்ள இந்தக் கதை படிப்போர் நெஞ்சைக் கவர்ந்து ஈர்க்கிறது.

    இந்தக் குறுநாவலில் இடம்பெற்றுள்ள குதிரையும் மக்களும் நம்மோடு வாழ்ந்து பிரிகின்றனர்.

    or 3 X Rs. 300.00 with Koko Koko
    Add to cart
  • அன்புள்ள ஏவாளுக்கு / Anbulla Evaalukku

    Rs. 2,490.00
    or 3 X Rs.830.00 with

    ஆலிஸ் வாக்கர் (ஆசிரியர்), ஷஹிதா (தமிழில்)

     

    உக்கிரமான உணர்வெழுச்சியும், நீடித்து நிலைக்கும் பாதிப்பையும் உண்டாக்குவது. ஆலிஸ் வாக்கர் ஆசிர்வதிக்கப்பட்ட எழுத்தாளர்.- தி நியூயார்க் டைம்ஸ்

     

    பிரமாதம், உலக இலக்கியத்தில் என்றென்றைக்குமான இடத்தைப் பிடிக்கும் எழுத்து- சான் ஃப்ரான்சிஸ்கோ க்ரானிக்கிள்

     

    தி கலர் பர்பிள் எப்போதைக்குமான முக்கியத்துவம் பெற்ற அமெரிக்கப் புதினம்- நியூஸ்வீக்

     

    அருமையான கதாபாத்திரங்கள், ஆப்ரிக்க அமெரிக்கர்களின் வாழ்வினூடாக அற்புததரிசனம் தரும் நாவல், நம்காலத்தின் மிகச்சிறந்த புத்தகங்களுள் ஒன்று-எஸ்ஸென்ஸ் பத்திரிக்கை.

    or 3 X Rs. 830.00 with Koko Koko
    Add to cart
  • Sale!

    கடல் புறா (மூன்று பாகங்கள்) ( Kadal Pura – 3 Parts )

    Rs. 6,790.00
    or 3 X Rs.2,263.33 with

    சாண்டில்யன்

     

    கலிங்கத்தில் கருணாகர பல்லவன் மேற்கொண்ட சவால்கள், அதனை அநபாய சோழனின் துணையோடு எவ்வாறு முறியடித்தான் என்பதிலிருந்து கதை தொடங்குகிறது. அகூதாவின் உதவியால் கடற்போரின் நுணுக்கங்களை அறிந்து, அகூதாவிடம் பரிசாகப் பெற்ற கப்பலை, தனக்கேற்றவாறு மாற்றி கடல் புறாவை உருவாக்குகிறான்.கடல்புறாவின் உதவியால் கடல் கொள்ளைக்காரர்களிடமிருந்து சோழ நாட்டு வணிகர்களை காப்பாற்றுகிறான். கடல் மோகினித்தீவில் மஞ்சளழகியை சந்திக்கிறான். மஞ்சளழகி அவனிடம் காதல் வயப்படுகிறாள். தன் கடமையை முன்னிட்டும், காஞ்சனாவின் நினைவாலும் மஞ்சளழகியை ஏற்க முடியாமல் விலகுகிறான். ஆனாலும் அவளை மறக்க முடியாமல் வருந்துகிறான்.பின் தற்செயலாக காஞ்சனாவை கடல் கொள்ளைக்காரர்களிடமிருந்து காப்பாற்றுகிறான். ஸ்ரீவிஜயத்தைக் கைப்பற்றி சோழப் புலிக்கொடியை பறக்கவிடுகிறான். போரில் தோற்ற ஜெயவர்மனின் வேண்டுகோளின் பேரில் வீரராஜேந்திரசோழர் மஞ்சளழகியையும் கருணாகர பல்லவனுக்கு மணமுடித்து வைக்கிறார்.

    or 3 X Rs. 2,263.33 with Koko Koko
    Add to cart
  • Harry Potter and the Chamber of secrets Tamil flashbooks.lk

    ஹாரி பாட்டரும் பாதாள அறை ரகசியங்களும்

    Rs. 2,350.00
    or 3 X Rs.783.33 with

    ஜே. கே. ரோலிங்

    தமிழில்: குமாரசாமி

     

    அந்த கோடையில் டர்ஸ்லிகள் மிகவும் மோசமானவர்களாகவும் அருவருப்பானவர்களாகவும் இருந்தனர். ஹாரிக்கு ஹாக்வார்ட்ஸுக்குத் திரும்பிச் செல்வதையே விரும்பினார். ஆனால் அவர் தனது பைகளை பேக் செய்யும் போது, ​​ஹாரி பாட்டர் ஹாக்வார்ட்ஸுக்குத் திரும்பினால், பேரழிவு ஏற்படும் என்று கூறும் டோபி என்ற விசித்திரமான, இழிவான உயிரினத்திடமிருந்து ஒரு எச்சரிக்கையைப் பெறுகிறார். ஹாக்வார்ட்ஸில் ஹாரிஸின் இரண்டாம் ஆண்டில், புதிய வேதனைகளும் பயங்கரங்களும் எழுகின்றன. ஆனால் இவை ஒவ்வொன்றும் உண்மையான பிரச்சனை தொடங்கும் போது சிறிய எரிச்சல்களாகத் தோன்றுகின்றன, மேலும் யாரோ ஒருவர் – ஹாக்வார்ட்ஸ் மாணவர்களை கல்லாக மாற்றத் தொடங்குகிறார். அது டிராகோ மால்ஃபோயாக இருக்க முடியுமா? இது ஹாக்ரிடாக இருக்க முடியுமா, அதன் மர்மமான கடந்த காலம் இறுதியாக சொல்லப்பட்டதா? அல்லது ஹாக்வார்ட்ஸில் உள்ள அனைவரும் அதிகம் சந்தேகப்படும் ஒருவராக இருக்கலாம்… ஹாரி பாட்டர் தானே?

    or 3 X Rs. 783.33 with Koko Koko
    Add to cart
  • Sale!

    மர்யமா: கிரானடா முக்கதைகள் – 2 ( Maryama )

    Rs. 1,390.00
    or 3 X Rs.463.33 with

    றள்வா ஆஷூர்
    தமிழில்: முனைவர் பி.எம்.எம். இர்ஃபான்

     

    எங்கள் மூதாதையர்கள் ஏதும் குற்றமிழைத்துவிட்டதற்காகவா எங்களை இப்படித் தண்டிக்கிறாய்? அல்லது நல்லவர்களும் கெட்டவர்களுமான மனிதர்கள் தங்கள் இச்சைப்படி நடத்திச் செல்லவா இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்திருக்கிறாய்? அவர்களின் மனேபாவம் இப்படிக் கொடூரமாக இருப்பதைத் தெரிந்திருந்தும் ஏன் அவர்களை விட்டு வைத்திருக்கிறாய்?

    – நாவலிலிருந்து…

    or 3 X Rs. 463.33 with Koko Koko
    Add to cart
  • திருமுகம்: ஈரானிய நாவல் ( Thirumugam ) Kiss The Lovely Face of God

    Rs. 1,150.00
    or 3 X Rs.383.33 with

    முஸ்தஃபா மஸ்தூர்

    தமிழில்: முனைவர் பி.எம்.எம். இர்ஃபான்

     

    அறிவும் உணர்வும் கலந்த தனித்துவமான சமூக இயங்கியலொன்றை திடமான பாரசீகப் பட்டு நூல்களால் நெய்திருக்கிறார் முஸ்தஃபா மஸ்தூர். இப்புனைவின் வழியாக  அவர் நாவலுக்கான மாதிரியை மீட்டுருவாக்கம் செய்வது மட்டுமன்றி, காதலை மீள் வரைவிலக்கணம் செய்வதனூடாக மனிதனையும் மீட்டுருவாக்கம் செய்கிறார்.

    இது ஐயத்தையும் நம்பிக்கையையும் பற்றிய கதை. வேட்கையையும் தடுமாற்றத்தையும் பற்றிய கதை. காதலையும் தொலைதலையும் பற்றிய கதை. இது மனிதனின் கதை.

    or 3 X Rs. 383.33 with Koko Koko
    Add to cart
  • Sale!

    கடுந்துயருற்ற காதலர்கள் சதுர சாளரத்திற்கு இறுதி அஞ்சலி செலுத்திவிட்டு முற்றத்திலிருந்து வெளியேறிய போதிலும் ( Kadunthuyaruttra Kadhalarkal Sadhura )

    Rs. 420.00
    or 3 X Rs.140.00 with

    தக்ஷிலா ஸ்வர்ணமாலி

    தமிழில்: எம். ரிஷான் ஷெரீப்

     

    இந்தத் தொகுப்பு கவிதையா? ஓவியமா? சிறுகதையா? சிறுகதைகள் பலவும் சேர்ந்தவையா? குறுநாவலா? என்றெல்லாம் யோசிப்பது அநாவசியம் என்றே கருதுகிறேன். இடதுசாரி இயக்கங்களிலிருந்து விலகி குடும்ப ஜீவிதம் நோக்கி பின்வாங்க வேண்டி நேர்ந்த சிலருக்குள்ளே காணப்படும் வாழ்க்கை மீதான அதிருப்தியின் துயரத்தை எனக்கு இவ்வாறாக ஒரு சித்திரமாக வரையத் தேவைப்பட்டது. என்றாலும், நீங்கள் இதை இவ்வாறே பார்க்க வேண்டியதில்லை. இதை வாசிக்கும் போது, இதைப் பார்க்கும் போது இயல்பாகவே எதையேனும் உணர்வோமானால், நாங்கள் அதை அனுபவிப்போம்.

    —- தக்ஷிலா ஸ்வர்ணமாலி

    or 3 X Rs. 140.00 with Koko Koko
    Add to cart
  • Sale!

    தொழுநோயாளியும் பன்றியின் எலும்பும் ( Thozhunoyaliyum Panriyin Elumbum )

    Rs. 790.00
    or 3 X Rs.263.33 with

    முஸ்தஃபா மஸ்தூர்

    தமிழில்: முனைவர் பி.எம்.எம். இர்ஃபான்

     

    சமகால ஈரானிய இலக்கியத்தின் மிக முக்கியமான படைப்புகளுள் ஒன்று. பல மொழிகளுக்குப் பெயர்க்கப்பட்டுள்ள இந்நாவல் திரைப்படப் பண்பு மிகுந்த படைப்பாக்கமாக கருதப்படுகிறது. வேறுபட்ட பல கதாபாத்திரங்களையும் கதைகளையும் கொண்டு பின்னப்பட்டுள்ள இக்குறுநாவல் நீதி, காதல், நோய், மனித அவலம், வாழ்வு, மரணம் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த அடிப்படைப் பிரச்சினைகள் குறித்த தத்துவ நோக்கை முன்வைக்கிறது. எந்தச் சிக்கலுமின்றி வாசகர்கள் மீது தாக்கம் செலுத்தக் கூடிய வகையில் ஆசிரியர் இப்பிரச்சினைகளை வார்த்தைகளுக்கும் கதைகளுக்கும் பின்னால் சாமர்த்தியமாக ஒளித்துவைத்திருக்கிறார்.

    or 3 X Rs. 263.33 with Koko Koko
    Add to cart
  • 50 உலகில் தலைசிறந்த சிறுகதைகள் / 50 Worlds Greatest Short Stories (Tamil) / 50 Ulahil Thalaisirandha Sirukadhaihal

    Rs. 2,290.00
    or 3 X Rs.763.33 with

    Various (Authors)

     

    Dating back to the early traditions of oral storytelling, the short story has evolved through the ages from myths, legends, fairy tales, fables, parables, stories in the Ramayana and Mahabharata, tales in the Panchatantra, the adventure tales of the Odyssey, biblical stories, the Norse sagas, and many others. As the oriental tale and Gothic novel gained popularity in the latter half of the eighteenth century, short stories began developing in Britain. By the beginning of the nineteenth century, it had highly evolved as a form. This anthology is a compilation of some of the classic short stories of the eighteenth and early nineteenth century, from around the world. Beginning with The realistic stories of Pushkin and Chekov, include ‘The Necklace’ by Guy de Maupassant, ‘Eve’s Diary’ by Mark Twain, ‘The “Slapping Sal”’ by Arthur Conan Doyle, ‘The Fly’ by Katherine Mansfield, ‘A Little Cloud’ by James Joyce, ‘White Nights’ by Fyodor Dostoevsky, ‘The Postmaster’ by Rabindranath Tagore, and ‘The Gift of Magi’ by O. Henry. “Short stories are tiny windows into other worlds and other minds and other dreams. They are journeys you can make to the far side of the universe and still be back in time for dinner.” – Neil Gaiman “‘What shall I write?’ said Yegor, and he dipped his pen in the ink.” – Anton Chekov, At Christmas Time “There was a woman who was beautiful, who started with all the advantages, yet she had no luck.” – D. H. Lawrence, The Rocking-Horse Winner

    * Should translate *

    or 3 X Rs. 763.33 with Koko Koko
    Add to cart
  • பதினோரு நிமிடங்கள் ( Pathinoru Nimidangal )

    Rs. 2,090.00
    or 3 X Rs.696.67 with

    பாவ்லோ கொய்லோ

     

    உலகிலேயே மிக அதிகமாக வாசிக்கப்படும், நேசிக்கப்படும் எழுத்தாளர். 72 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, உலகளவில் 140 மில்லியன் பிரதிகளுக்கும் அதிகமாக விற்பனையாகியுள்ள நூல்.

    or 3 X Rs. 696.67 with Koko Koko
    Add to cart
  • Sale!

    மலைகளும் எதிரொலித்தன ( Malaikalum Ethiroliththana )

    Rs. 3,590.00
    or 3 X Rs.1,196.67 with

    காலித் ஹுசைனி

    தமிழில்: சதீஷ் வெங்கடேசன்

    or 3 X Rs. 1,196.67 with Koko Koko
    Add to cart
  • Sale!

    வேர்கள் ( Vergel ) The Roots

    Rs. 8,990.00
    or 3 X Rs.2,996.67 with

    அலெக்ஸ் ஹேலி

    தமிழில்: பொன். சின்னத்தம்பி முருகேசன்

     

    அமெரிக்காவின் அசுர வளர்ச்சிக்கு அடியுரமாய், ஆப்பிரிக்காவிலிருந்து அடிமைகளாய்க் கொண்டுவரப்பட்ட கருப்பினத்தவரின் வியர்வையும் ரத்தமும் உள்ளன. தனித்த, முழுமையான பண்பாட்டுடன் ஆப்பிரிக்காவில் வசித்த கருப்பின மக்கள், 18-ம் நூற்றாண்டில் அடிமைகளாக விற்கப்பட்டு, அமெரிக்க நிலத்துக்கு அழைத்துவரப்பட்டார்கள். அங்கு கிடைத்ததெல்லாம், உயிரை உடலில் தக்க வைத்துக்கொள்ளப் போதுமான உணவு மட்டும்தான்.

     

    வசைகள், சித்தரவதைகள் என்று பல்வேறு துன்பங்களுக்கு இடையில் பணிசெய்ய அமர்த்தப்பட்ட பரிதாப உயிர்கள் அவர்கள். அப்படி, மேற்கு ஆப்பிரிக்காவின் காம்பியாவில் பிறந்து, அமெரிக்காவில் அடிமையாக வேலைபார்க்க நேர்ந்த குண்டா கின்டே என்பவரின் வழிவந்த ஏழாவது தலைமுறையைச் சேர்ந்தவர்தான் அலெக்ஸ் ஹேலி. மால்கம் எக்ஸ் வாழ்க்கை வரலாற்றை எழுதிய இவர், தனது மூதாதையரின் கிராமத்தைத் தேடிச்சென்று அவர்களது வாழ்க்கையைப் புத்தகமாக எழுதினார்.

     

    அதுதான் ‘வேர்கள்’ (ரூட்ஸ்) நாவல். 1976-ல் வெளியான இந்த நாவல், தொலைக்காட்சித் தொடராக வெளிவந்து, பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆப்பிரிக்க – அமெரிக்க மக்களின் வாழ்க்கை, அவர்களது கலாச்சாரம் பற்றிய தகவல்கள் கொண்ட இந்தப் புத்தகம்,

    or 3 X Rs. 2,996.67 with Koko Koko
    Add to cart
  • நடுநிசி நூலகம் / The Midnight Library Tamil / Nadunisi Noolaham

    Rs. 3,190.00
    or 3 X Rs.1,063.33 with

    Matt Haig

     

    ஒரு நூலகம்! பல ஜென்மங்கள்! வாழ்க்கையும் மரணமும் கைகுலுக்கிக் கொள்கின்ற இடத்தில் ஒரு நூலகம் இருக்கிறது. இந்நூலின் கதாநாயகி நோரா அந்த நூலகத்திற்கு வந்து சேர்கின்றபோது, தன் வாழ்க்கையின் சில விஷயங்களைச் சரி செய்து கொள்வதற்கான வாய்ப்பு அவளுக்குக் கிட்டுகிறது. அக்கட்டம்வரை, அவளுடைய வாழ்க்கை துன்பத்திலும் பின்வருத்தங்களிலும் தோய்ந்த ஒன்றாகவே இருந்து வந்திருந்தது.

     

    இதுவரை, தான் தன்மீது நம்பிக்கை வைத்திருந்த அனைவருக்கும் ஏமாற்றத்தை அளித்திருந்ததோடு, தன்னைத் தானே ஏமாற்றிக் கொண்டு வாழ்ந்து வந்திருந்ததையும் அவள் உணர்கிறாள். ஆனால், இப்போது எல்லாமே முற்றிலுமாக மாறவிருக்கின்றது. அவள் தன்னுடைய வாழ்க்கையை வேறு விதமாக வாழ்வதற்கான வாய்ப்பை அந்நூலகத்திலுள்ள நூல்கள் நோராவுக்கு வழங்குகின்றன.

     

    முன்பு அவளுக்கு மிகவும் நெருக்கமாக இருந்த ஒருவரின் உதவியுடன், தன் வாழ்க்கையின் ஒவ்வொரு பின்வருத்தத்தையும் நீக்குவதும், தனக்கான ஒரு கச்சிதமான வாழ்க்கையை வடிவமைத்துக் கொள்வதும் இப்போது அவளுக்குச் சாத்தியமாகியுள்ளது. ஆனால், விஷயங்கள் எப்போதும் தான் கற்பனை செயது வந்துள்ளதைப்போல இருக்கவில்லை என்பதை அவள் உணர்கிறாள்.

     

    விரைவில், அவளுடைய தேர்ந்தெடுப்புகள் அவளையும் அந்த நூலகத்தையும் பெரும் ஆபத்துக்குள் சிக்க வைக்கின்றன. காலம் கடப்பதற்குள் வாழ்க்கையின் இந்த உச்சகட்டக் கேள்விக்கான பதிலை அவள் வழங்கியாக வேண்டும்.

     

    வாழ்க்கையைச் சிறப்பாக வாழ்வதற்கான வழி எது?

    or 3 X Rs. 1,063.33 with Koko Koko
    Add to cart
  • Sale!

    சிவகாமியின் சபதம் ( Sivagamiyin Sabatham )

    Rs. 5,700.00
    or 3 X Rs.1,900.00 with

    கல்கி

     

    அமரர் கல்கி எழுதிய அற்புத வரலாற்றுப் புதினம் ‘சிவகாமியின் சபதம்’. பல்லவ சாம்ராஜ்யத்தினை நம் கண் முன்னே நிறுத்தும் அதிஅற்புத காவியம் இது. முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் அரசாண்ட காலத்தில் நடைபெற்ற சம்பவங்களைப் பயன்படுத்தி எழுதப்பட்ட இந்தப் புதினத்தில் இளவரசன் முதலாம் நரசிம்ம பல்லவனுக்கு முக்கிய இடம் உண்டு. சிவகாமியின் சபதம் கதையானது காஞ்சியில் ஏற்பட்ட போர்ச் சூழலையும், அதன் தொடர்ச்சியாக சாளுக்ய நாட்டின் தலைநகர் வாதாபியின் மீது பல்லவர் போர்தொடுத்ததைப் பற்றியது.

     

    முதல் பகுதியில் பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மனே நாயகனைப் போன்று தோன்றினும் பிற்பகுதியில் அவரது மகன் நரசிம்ம பல்லவர் கதையில் ஆதிக்கம் செலுத்துவார். எனவே இந்தக் கதையின் நாயகன் யார் என்பதை வாசகர்களே முடிவு செய்துகொள்ளுங்கள். கதையில் பல்லவ மற்றும் சாளுக்ய நாட்டின் வரலாற்றை கண்முன்னே நிறுத்துகிறார் அமரர் கல்கி. காஞ்சி மாநகரில் சமணர்களின் வருகைக்குப் பின்னர் ஏற்பட்ட மதமாற்றங்களை நாவலில் நாம் அறியலாம். புத்த துறவி நாகநந்தி, பரஞ்சோதி, சிவகாமி, சிற்பி ஆயனார் போன்ற பாத்திரங்கள் நாவலை படித்து முடித்த பின்னரும் நம் மனக்கண்ணில் நிழலாடுவார்கள்.

     

    மகேந்திரவர்மனை, ஆயகலைகளில் சிறந்தவராகவும் அவைகளை விரும்பி வளர்ப்பவராகவும் கல்கி சித்தரித்துள்ளார். நுண்ணிய அறிவு கூர்மை உடையவராகவும் மந்திரிகளின் ஆலோசனைகளை ஏற்பவராகவும் மகேந்திரவர்மன் இருந்ததாகவும் அவர் குறிப்பிடுகிறார். இவர் காலத்தில்தான் மாமல்லபுரம் சிற்பங்களால் புகழ் பெற்றது. வரலாற்றில் துரோகங்கள், போரின் அவலங்கள், பெண்களின் நிலைகளை சிவகாமி சபதத்தில் அழகாக சித்தரித்துக்காட்டுகிறார் கல்கி. அமரர் கல்கியின் எழுத்துக்கள் அமரத்துவம் வாய்ந்தவை. இளையதலைமுறை அவரது எழுத்துக்களை வாசிக்க வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் எமது விகடன் பிரசுரம் சிவகாமியின் சபதத்தை தமிழ்கூறும் நல்லுலகத்துக்கு மீண்டும் அளிப்பதில் பெருமை கொள்கிறது. மணியம் செல்வன் அவர்களின் உயிரோவியங்கள் உங்கள் மனதை நிச்சயம் வருடும்.

     

    எத்தனை முறை படித்தாலும் சலிக்காத சாகாவரம் பெற்ற சரித்திரத்தை வாசித்து தேன்தமிழ்ச் சுவை பருகி… வரலாற்றின் பக்கத்தைப் புரட்டுங்கள்!

    or 3 X Rs. 1,900.00 with Koko Koko
    Add to cart
  • Sale!

    பொன்னியின் செல்வன் (Vol.1 – Vol. 5) / Ponniyin Selvan

    Rs. 12,290.00
    or 3 X Rs.4,096.67 with

    கல்கி

     

    பேராசிரியர் அமரர் கல்கி பற்றியோ, அவரின் எழுத்தாற்றல் பற்றியோ தமிழ்கூறும் நல்லுலகுக்கு புதிதாகச் சொல்வதற்கு எதுவுமில்லை. அவருடைய படைப்பின் மகிமை அத்தகையது. அவரின் சரித்திரக் காப்பியங்களான பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன் போன்றவை காலத்தால் அழியாத காவியங்களாக போற்றப்படுபவை. இன்னும் எத்தனை நூறாண்டு காலத்துக்குப் பிறகு அவற்றை எடுத்துப் படித்தாலும், அமரர் கல்கியின் மயக்கும் நடையும், எளிமையும் இனிமையும் நிரம்பிய தமிழும், கதையின் வசீகரப் போக்கும் ஓர் இனிய சுழலுக்குள் நம்மை இழுத்துப் போவதை உணரலாம்.
     

    சரித்திரத்தையும் கற்பனையையும் மிகத் திறமையாகக் குழைத்து அமரர் கல்கி படைத்திருக்கும் புதினமான ‘பொன்னியின் செல்வன்’, தமிழ் வாசகர்களுக்குக் கிடைத்த ஓர் இலக்கிய வரம் என்றே சொல்லலாம். பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய சரித்திரக் காட்சிகளை – அவற்றுக்கான அடிப்படை ஆதாரங்களை அச்சு பிசகாமல் உள்வாங்கிக் கொண்டு & அருகில் இருந்தே பார்த்தது போல நுணுக்கமாக அவர் விவரித்திருக்கும் நேர்த்தியை என்னவென்று சொல்ல! சுந்தரச் சோழர், அருள்மொழி வர்மன், ஆதித்த கரிகாலன், வந்தியத்தேவன், செம்பியன்மாதேவி, குந்தவை, வானதி, நந்தினி, ஆழ்வார்க்கடியான், பழுவேட்டரையர் என வரிசையாக ஒவ்வொருவரும் உயிர்பெற்று நம் முன் நடமாடத் துவங்குகிறார்கள். அன்றைய சோழ தேசத்தில் நிலவிய ராஜாங்கப் பிரச்னைகள், வகுக்கப்பட்ட யுத்த வியூகங்கள், தீட்டப்பட்ட சதியாலோசனைகள் ஆகியவை ஒரு மர்ம நாவலுக்குரிய அத்தனை படபடப்பையும் ஏற்படுத்தி விடுகிறது.
     

    இதில் எவையெல்லாம் நிஜ சரித்திரம், எவையெல்லாம் சரித்திரத்தின் நீட்சியாக உருவாக்கப்பட்ட கற்பனைச் சம்பவங்கள் எனப் பிரித்தறிய முடியாதபடி பின்னிப் பிணைந்து இருப்பது, அமரர் கல்கியின் ஜீவிய எழுத்துத் திறனுக்குச் சான்று! ஒலியும் ஒளியும் போல…

    or 3 X Rs. 4,096.67 with Koko Koko
    Add to cart
  • The Kite Runner Tamil flashbooks.lk

    பட்ட விரட்டி ( Patta Viratti ) Kite Runner

    Rs. 2,990.00
    or 3 X Rs.996.67 with

    காலித் ஹுஸைனி

    தமிழில்: எம். யூசுப் ராஜா

     

    இந்த தசாப்தத்தின் முக்கியமான புத்தகம் என்று தி டைம்ஸ், டெய்லி டெலிக்ராப் மற்றும் கார்டியனால் தெரிவு செய்யப்பட்டது.

     

    ‘மனதை உடைப்பது, அதிர்ச்சியளிப்பது, எழுச்சியூட்டுவது.’ – அப்சர்வர்

     

    பட்ட விரட்டி என்ற பொருளுடைய தலைப்பைக் கொண்ட இந்நூல் ஆப்கானிய-அமெரிக்கரான காலித் ஹுசைனியால் எழுதப்பட்ட முதல் புதினம்.

     

    ஒரு ஆப்கானியரால் முதன்முதலில் ஆங்கிலத்தில் பிரசுரிக்கப்பட்ட புதினம் என்கிற சிறப்பையும் பெற்றது இந்நூல். காபூலின் வசீர் அக்பர் கான் பகுதியைச் சேர்ந்த பாஷ்டூன் என்கிற இனத்தின் செல்வக் குடும்பமொன்றில் பிறந்த அமீர் என்கிற சிறுவனின் கதையைச் சொல்கிறது இந்நூல். அவனது சிறு பருவத் தோழனும் தந்தையின் ஹசரா இனத்தைச் சேர்ந்த வேலையாளின் மகனுமான ஹசனுக்கு இழைத்த நம்பிக்கைத்துரோகம் அமீருக்குக் குற்றவுணர்வைத் தருகிறது. ஆப்கானிஸ்தானின் முடியரசின் வீழ்ச்சி, சோவியத் படையெடுப்பு, பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவுக்குமான மக்கள் வெளியேற்றம், மற்றும் தலிபான் ஆட்சி எனும் அமளியான காலகட்டங்களில் இக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.

    or 3 X Rs. 996.67 with Koko Koko
    Add to cart
  • Sale!
    Gemini Circle flashbooks.lk
    Out of Stock

    ஜெமினி சர்க்கிள் / Gemini Circle

    Rs. 990.00
    or 3 X Rs.330.00 with

    சோம. வள்ளியப்பன்.

     

    எளிய மக்களின் கதைகளை எளிய மொழியிலேயே சொல்லிவிடமுடியும் என்றாலும் இறக்குமதி செய்யப்பட்ட வெவ்வேறு பாணிகளைக் கையாண்டு அக்கதைகளைச் சிக்கலானவையாக மாற்றிவிடுகிறார்கள் பலர். அப்படி மாற்றினால் மட்டுமே அது இலக்கியமாகக் கொள்ளப்படும் என்றும் அவர்கள் நம்புகிறார்கள். சோம. வள்ளியப்பனின் எழுத்து அந்த வகையில் மாறுபட்டது. சமுதாயத்தில் நம்மைச் சுற்றிப் பல்வேறு நிலைகளில் வாழும் மனிதர்களை, அவர்களின் குணாதிசயங்களை, பலதரப்பட்ட உணர்வுகளை, அவரவர் நிலைப்பாடுகளை சிக்கலில்லாத, குழப்பமில்லாத நடையில் விவரித்துக்கொண்டு செல்கிறார் அவர். அந்த எளிமை அதற்குண்டான வசீகரத்தை எப்படியோ பெற்றுக்கொண்டு விடுகிறது. நீங்களும் அதை உணர்வீர்கள். ஜீவனுள்ள இந்தக் கதைகள் உங்களோடு நேரடியாகப் பேசும். தாக்கத்தையும் ஏற்படுத்தும். சோம. வள்ளியப்பனின் எழுத்தில் ‘நெஞ்சமெல்லாம் நீ’ என்னும் சிறுகதைத் தொகுப்பும் ‘பட்டாம்பூச்சியின் கண்ணாமூச்சி காலங்கள்’ என்னும் குறுநாவலும் முன்னதாக வெளிவந்துள்ளன.

    or 3 X Rs. 330.00 with Koko Koko
    Read more
  • Sale!
    A Thousand Splendid Suns Tamil flashbooks.lk
    Out of Stock

    ஆயிரம் சூரியப் பேரொளி (A Thousand Splendid Suns)

    Rs. 3,490.00
    or 3 X Rs.1,163.33 with

    காலித் ஹுஸைனி

    தமிழில்: ஷஹிதா

     

    பதினைந்தே வயதினளான மரியம் ரஷீதுக்கு மணம் செய்விக்கப்பட்டு காபுலுக்கு அனுப்பப்படுகிறாள். ஏறத்தாழ இருபது ஆண்டுகளுக்குப் பிறகு உள்ளூரைச் சேர்ந்த பதின்பருவத்தினளான லைலாவுக்கும் மரியத்துக்கும் இடையில் தாய்-மகளினதை ஒத்த நட்பு ஒன்று மலர்கிறது. தாலிபன்கள் ஆட்சியைப் பிடிக்க, வாழ்க்கை, பட்டினிக்கும், கொடுங்கோலாட்சிக்கும், அச்சத்துக்கும் இடையில் அலைவுறுவதாக மாறிப்போகிறது. ஆனாலும் அன்பு, மனிதர்களை எதிர்பாராத வகைகளில் செயற்கரிய காரியங்களைச் சாதிக்க வைத்து, எல்லாத் தடைகளையும் தகர்க்கச் செய்கிறது.

     

    ‘ஒருவேளை எ தௌஸண்ட் ஸ்ப்லெண்டிட் சன்ஸ், தி கைட் ரன்னரைப் போலவே சிறந்ததுதானா என்று நீங்கள் கேட்பீர்களேயானால் இதோ அதற்கான பதில்: இல்லை, இது அதை விடவும் சிறந்தது’ வாஷிங்டன் போஸ்ட்

    or 3 X Rs. 1,163.33 with Koko Koko
    Read more
  • Sale!
    Out of Stock

    [RARE] நவரத்தின மலை சோவியத் மக்களது நாட்டு கதைகள் (A Mountain of Gems)

    Rs. 2,290.00
    or 3 X Rs.763.33 with

    தமிழில் ரா. கிருஷ்ணையா

     

    ருஷ்யா, உக்ரைன், பெலோருஷ்யா, லித்துவேனியா, லாத்வியா, எஸ்தோனிய, கரேலியா, மல்தாவியா, அஸர்பைஜான், ஆர்மேனிய, ஜார்ஜியா, பாஷ்கீரயா, கல்மீகியா, துர்க்மெனிய, தாஜிக், உஸ்பேக், கிர்கீஸ், கஸாஹ், யாகூத், புர்யாத் போன்ற சோவியத் மக்களது தேர்ந்தேடுக்கபட்ட 38 நாட்டுக் கதைகள்.

     

    * 70களிலும் 80களிலும் வெளிவந்த பிரபல்யமான புத்தகங்கள். மிகவும் அரிதான புத்தகங்கள்.

    இவை பாவிக்கப்படாத புத்தகங்கள். ஆனால் அச்சிடப்பட்டு 30 வருடங்களுக்கு மேல் கிடங்கில் இருந்ததால் சில புத்தகங்களில் கரையான் அறிப்பு, பக்கங்களின் நிறம் மாறுதல் போன்ற சிறிய சேதங்கள் இருக்கலாம்.

    ஆனால் முழுமையாக வாசிக்க முடியுமாக இருக்கும்.

    or 3 X Rs. 763.33 with Koko Koko
    Read more
  • Out of Stock

    வின்சன்ட் வான் கோ: மஞ்சள் வீடு (Vincent Van Gogh: Manjal Veedu)

    Rs. 3,290.00
    or 3 X Rs.1,096.67 with

    பட்டுக்கோட்டை ராஜா

     

    இடுங்கும் குளிர் நவம்பர் மாதத்தில் ஒருநாள் வின்சென்ட் மங்காசுக்கு நடந்தான். அவனது கையிலோ, மனதிலோ எதுவுமில்லை. நடந்தவன், சுரங்கச் சுவருக்கு வெளியே இருந்த இரும்புச் சக்கரத்தில் உட்கார்ந்து கொண்டான். மனம் விச்ராந்தியாய் இருந்தது.

     

    அப்போது வயதான ஒரு சுரங்கத் தொழிலாளி வாசல் வழியே வெளியேறி வந்தான்…

     

    கறுப்புத் தொப்பி, கரிபடிந்த சீருடை – கைகள் பேண்ட் – பாக்கெட்டில் இருந்தன. முழங்கால்கள் பேண்ட்டின் வெளியே முட்டித் தெரிந்தன. அந்த உருவமும், அவனது நடையும் வின்சென்ட்டின் மனதில் என்னவோ கிளர்ச்சி செய்தன.

     

    தனது சட்டைப் பைக்குள் கைவிட்டபோது, அப்பா எழுதிய கடிதமும், ஒரு பென்சிலும் கிடைத்தன. கடித உறையின் மேலே, விரல்களின் நடுவே பென்சில் நர்த்தனம் புரிந்தது. உடனே அந்த வயதான தொழிலாளியின் உருவம் அங்கே ஓவியமாய்ப் பதிந்துவிட்டது!

     

    சில நிமிடங்களுக்குப் பிறகு இளைஞன் ஒருவன் வெளிப்பட்டான். அவன் நல்ல உயரமாய் – திடமாய் இருதான். அதே சீருடை. தனது கையில் வின்சென்ட் வைத்திருந்த கடிதத்தின் மறுபக்கம் வெறுமையாக இருந்தது. மீண்டும் விரல்கள் பென்சிலைப் பிடித்தன. கோட்டோவியமாய் அந்த இளைஞனின் உருவம் அங்கே பதிவானது!

     

    அனிச்சையாகவே அந்தச் செயல் நடந்தது. அவர்களை வரைய வேண்டுமென வின்சென்ட் நினைக்கவில்லை. உள்ளிருந்த ஏதோ ஒரு உந்துசக்தி அவனைச் செயல்படுத்தியது.

     

    வின்சென்ட் தனக்குள்ளிருந்த ஓவியனை அடையாளம் கண்ட நாள் அதுதான்!

    or 3 X Rs. 1,096.67 with Koko Koko
    Read more
  • Sale!
    Dubrovsky flashbook.lk
    Out of Stock

    [RARE] துப்ரோவ்ஸ்கி கொள்ளைக்கூட்டத் தலைவானாக மாறிய இளம் பிரபுவின் கதை (Dubrovsky)

    Rs. 690.00
    or 3 X Rs.230.00 with

    அலெக்சாண்டர் புஷ்கின்

    தமிழில் நா . தர்மராஜன் எம் .ஏ .

     

    மாபெரும் ருஷ்யக் கவிஞரான அலெக்சாந்தர் பூஷ்கின் (1799- 1837) உரை நடையிலும் மேதையாக இருந்தார். அவர் எழுதிய இவான் பெல்லின் சிறு கதைகள், ஸ்பேடுகளின் ராணி மற்றும் காப்டன் மகள் மிகப் பிரபலமானவையாகும். கவிஞரின் சோகமான மரணத்துக்குப் பிறகு 1841ல் வெளியிடப்பட்ட துப்ரோவ்ஸ்கி தனிச் சிறப்புடைய குறுநாவலாகும்.

    இக் குறுநாவலின் கதாநாயகனான விளதீமிர் துப்ரோவ்ஸ்கி நிலவுடமையாளர் குடும்பத்தில் பிறந்தவர், ஆனால் அநீதிகளையும் எதிர்த்துப் போராடுகிறார். தன் குடும்பத்துக்குத் தீங்கிழைந்த திரொயெகூரவ் வீர என்ற பிரபுவின் மகளை அவர் காதலிக்கிறார். அவருடை வீர சாகசச் செயல்களும் தூய்மையான காதலும் அக்காலத்திய நிலவுடமையாளர்களின் வாழ்க்கைப் பின்னணியில் அழகுற எழுதப்பட்டிருக்கிறது.

     

     

    * 70களிலும் 80களிலும் வெளிவந்த பிரபல்யமான புத்தகங்கள். மிகவும் அரிதான புத்தகங்கள்.

    இவை பாவிக்கப்படாத புத்தகங்கள். ஆனால் அச்சிடப்பட்டு 30 வருடங்களுக்கு மேல் கிடங்கில் இருந்ததால் சில புத்தகங்களில் கரையான் அறிப்பு, பக்கங்களின் நிறம் மாறுதல் போன்ற சிறிய சேதங்கள் இருக்கலாம்.

    ஆனால் முழுமையாக வாசிக்க முடியுமாக இருக்கும்.

    or 3 X Rs. 230.00 with Koko Koko
    Read more
  • Out of Stock

    வெண் இரவுகள் ( Ven Iravugal ) White Nights

    Rs. 790.00
    or 3 X Rs.263.33 with

    ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி

    தமிழில்: எம். ஏ. சுசீலா

     

    தஸ்தயேவ்ஸ்கியின் ஆரம்ப கால படைப்புகளில் ஒன்று வெண்ணிற இரவுகள். 1848ம் ஆண்டு வெளியாகி உள்ளது. 164 ஆண்முகள் கடந்த போதும் இன்று வாசிக்கையிலும் கதாபாத்திரங்களின் அடங்காத இதயத் துடிப்பும் காதலின் பித்தேறிய மொழிகளும் புத்தம் புதியதாகவே இருக்கிறது. உலகில் தொடர்ந்து வாசிக்கபட்டு கொண்டாடப்பட்டு வரும் அரிய காதல்கதை இது. இரண்டு ஆண்கள் ஒரு இளம்பெண். மூன்றே முக்கிய கதாபாத்திரங்கள். நான்கு இரவுகள் ஒரு பகலில் கதை முடிந்துவிடுகிறது. கதை முழுவதும் ஒரே இடத்தில் ஒரு ஆணும் பெண்ணும் சந்தித்து கொள்கிறார்கள். பேசிக் கொள்கிறார்கள். முடிவில் பிரிந்து போய்விடுகிறார்கள்.

    or 3 X Rs. 263.33 with Koko Koko
    Read more
  • Out of Stock

    பிள்ளையார் சுழி

    Rs. 1,990.00
    or 3 X Rs.663.33 with

    டெல்லி கனேஷ்

     

    ‘பிள்ளையார் சுழி’ நடிகர் டெல்லி கணேஷின் சுயசரிதை நூல். வாழ்க்கைச் சம்பவங்களைப் பூத்தொடுப்பது போல அழகாகத் தொடுத்து எழுதப்பட்ட நூல். உண்மைச் சம்பவங்களின் பதிவுதான். ஆனால் கற்பனையாக எழுதப்பட்ட நாவலை விடவும் விறுவிறுப்பாகச் செல்கிறது. நூலில் ஆங்காங்கே விரவியிருக்கும் நகைச்சுவை, படிக்கும் போதே நம் முகத்தில் ஒரு மெல்லிய புன்முறுவலைத் தோற்றுவிக்கிறது. எடுத்தால் படித்து முடிக்காமல் வைக்கத் தோன்றாது.

    கீழே கணேசன் என்ற பெயருடைய ஒரு நடுத்தரக் குடும்பத்துப் பையன் விடா முயற்சியால் டெல்லி கணேஷ் என்ற நடிகராகப் பரிணமித்ததை விளக்குவதே இந்த நூல். ‘திருநெல்வேலி வல்லநாடு கணேசனை, மதுரை கணேஷாக மாற்றியது டி. வி. எஸ்… மதுரை கணேசனை கார்ப்போரல் கணேஷாக மாற்றியது இந்திய விமானப்படை… ஏர்ஃபோர்ஸ்காரனை நாடகக்காரனாக மாற்றியது டெல்லியின் தக்ஷிண பாரத நாடக சபா… ‘டெல்லிகணேஷ்’ என்று நாமகரணம் சூட்டி நாடகக்காரனை சினிமாக்காரனாக மாற்றியது திரு. கே.பி…’ என முத்தாய்ப்பாக அவர் தொகுத்துச் சொல்லும்போது படிக்கும் நமக்கே ஒரு வாழ்க்கையில் பல வாழ்க்கைகளை வாழ்ந்த நிறைவு தோன்றுகிறது. – திருப்பூர் கிருஷ்ணன்

    or 3 X Rs. 663.33 with Koko Koko
    Read more
  • Out of Stock

    ஜின்களின் ஆசான் (ஸூஃபி நாவல்) ( Jingalin Aasaan)

    Rs. 2,390.00
    or 3 X Rs.796.67 with

    இர்விங் கர்ஷ்மார்

    தமிழில்: ரமீஸ் பிலாலி

     

    இதோ, இதயத்தின் பாதையில் எழுதப்பட்டிருக்கும் ஒரு கதை. ஓர் ஆன்மீக சாகசப் பயணம். ஸூஃபி வழி பற்றிக் குறியீடாகச் சொல்லும் கற்பனை வளம்.

     

    பாலைவனத்தில் அனிச்சையாகக் கண்டறியப்படும் பொருள் ஒன்று சமகால ஸூஃபி குரு ஒருவரையும், அவருடைய சகாக்கள் ஏழு பேரையும் தொல்லுலகத்துப் பொக்கிஷம் ஒன்றைத் தேடிச்செல்லும் கட்டாயத்தில் வைக்கிறது: பேரரசர் சுலைமானின் மோதிரம். ஆம், ஆயிரமாயிரம் மரபுக் கதைகளில் குறிப்பிடப்பட்டுள்ள அதே முத்திரை மோதிரம்தான். புகையற்ற நெருப்பால் படைக்கப்பட்ட பயங்கர உயிரினமான ஜின்களைக் கட்டுப்படுத்தி ஆட்சி புரிவதற்காக இறைவனால் அவருக்கு வழங்கப்பட்ட மோதிரம் அது.

     

    ஆனால், தேடிச்செல்லத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மீது அந்தப் பயணம் ஒரு வினோத பாதிப்பை ஏற்படுத்துகிறது: மாயக் காட்சிகள் அவர்களின் கனவுகளிலும் நினைவுகளிலும் ஊடுருவுகின்றன. அவர்களின் இதயங்களில் கண்ணீர் நிரம்புகிறது. மர்மங்கள் மண்டுகின்றன. பூமியைப் புரட்டுவதுபோன்ற புயல்கள்; முடியப்போவதே இல்லை என்பதுபோன்ற இரவுகள்; மண்ணுக்குள் எப்போதோ தொலைந்த தொல் நகரம்; மேலும், ஜீவ நெருப்பால் ஆன ஜின்கள்.

     

    இறுதியில், அந்தப் பயணம் ஜின்களின் விதியை மட்டும் வெளிப்படுத்தவில்லை, அன்பின் வழியையும் இறைவனின் அளப்பரிய கருணையையும் வெளிப்படுத்துகிறது.

    or 3 X Rs. 796.67 with Koko Koko
    Read more
  • Out of Stock

    தேடாதே (Thedathey)

    Rs. 890.00
    or 3 X Rs.296.67 with

    சுஜாதா

     

    ஜி.யெஸ், ஒரு ப்ரிலான்ஸ் போட்டோகிராபர். அருணா என்கிற ஒரு குட்டி சினிமா நடிகையை புகைப்படம் எடுப்பதற்காகச் செல்கிறான். அவளுடன் பேசிப் பழகி அவளது புத்திசாலித் தனத்தால் ஈர்க்கப்படுகிறான். இரண்டு நாள் சந்திப்பிலேயே இருவரும் காதல் வயப்பட்டு கல்யாணம் வரை பேசிக்கொள்கிறார்கள். கல்யாணத்துக்குத் தடையாக அருணாவின் வாழ்க்கையில் ஒரு சிக்கல் இருக்கிறது. உடனடியாக அதைக் களைந்து விட்டு விருவதாகச் சொல்லிச் செல்கிறாள் அருணா. ஜி.யெஸ் காத்திருக்கிறான். அருணா வராததால் அவளைத் தேடித் செல்கிறான். எதிர்பாராத அதிர்ச்சி அவனைத் தாக்குகிறது.

    or 3 X Rs. 296.67 with Koko Koko
    Read more
  • Out of Stock

    கருங்குயில் (Karunguyil)

    Rs. 1,320.00
    or 3 X Rs.440.00 with

    ஷோபாசக்தி

     

     

    or 3 X Rs. 440.00 with Koko Koko
    Read more
  • Out of Stock

    வீரம் விளைந்தது ( How the Steel Was Tempered )

    Rs. 2,640.00
    or 3 X Rs.880.00 with

    நிக்கொலாய் ஒஸ்திரோவ்ஸ்கி

    தமிழில்: எஸ். ராமகிருஷ்ணன்

     

    மானுட விடுதலைக்காக அர்ப்பணிப்பான வாழ்வையும் அதன் அர்த்தங்களையும் விவரிக்கும் இந்நாவலின் பாத்திரங்கள் உண்மையானவை. 1915ம் ஆண்டு முதல் 1931ம் ஆண்டுவரை இந்நூலாசிரியரும் அவரது தோழர்களும் நடத்திய வீரம் செறிந்த போராட்டங்களையும் தியாகங்களையும் கண்முன் விரித்துச்செல்கிறது. புரட்சிகர அரசியல் போராட்ட உணர்வுகளையும், வீரதீர சாகசங்களையும் விவரிக்கும் இந்நாவலில் இளமை, காதல், சோகம், வீரம், தியாகம், தேசபக்தி, மனிநதேயம் போன்றவை குறித்தும் செறிவாக முன்வைக்கப்பட்டுள்ளன.

     

    புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளர் மக்ஸிம் கார்க்கியால் பெரிதும் போற்றிப் புகழப் பட்ட இந்நாவல் முதன்முதலாக 1934ம் ஆண்டு வெளியானது. உலகெங்கும் 48 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட இந்நூல் சோவியத் நாட்டில் 495 பதிப்புகள் வெளியானதென்பது இந்நூல் மகத்துவத்தை உணர்த்தும்.

    or 3 X Rs. 880.00 with Koko Koko
    Read more
  • Out of Stock

    விலங்குப் பண்ணை ( The Animal Farm )

    Rs. 860.00
    or 3 X Rs.286.67 with

    ஜார்ஜ் ஆர்வெல்

     

    லெனினுக்குப் பிந்தைய கம்யூனிஸ்ட ரஷ்யாவின் அரசியலை இந்த நாவல் மிகக் கடுமையாக விமர்சிக்கிறது. ஆனால் மறைபொருள் வடிவத்தில் ஆகவே இதை ஓர் உருவக நாவல் என்று சொல்லலாம். ஆனால் இந்த நூலை எழுதிய ஜார்ஜ் ஆர்வெல் ஒரு சோஷலிஸ்டு. கம்யூனிஸத்திற்கு எதிரானவர் அல்ல. ரஷ்யப் புரட்சியின் நூற்றாண்டு விழா தொடங்கியிருக்கிற இந்தத் தருணத்தில் ‘விலங்குப் பண்ணை’யின் அரசியல் நம்மை அதிர்ச்சியுறச் செய்கிறது; ஆழ்ந்து கவனிக்க வைக்கிறது. எழுபது ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த இந்த நாவலை ஒரு தற்கால இலக்கியமாகவே பார்க்கத் தோன்றுகிறது.

    or 3 X Rs. 286.67 with Koko Koko
    Read more
  • Out of Stock

    இருட்கனி : வெண்முரசு: மகாபாரதம் நாவல் வடிவில்

    Rs. 5,990.00
    or 3 X Rs.1,996.67 with

    ஜெயமோகன்

     

    இருட்கனி என்பது கர்ணனைக் குறிக்கும் சொல். வெண்முரசின் இருபத்தொன்றாவது நாவலான இது மகாபாரதப்போரின் இறுதியைச் சொல்லத் தொடங்குகிறது. கருமை இங்கே இருளெனத் துளித்துவிட்டிருக்கிறது. குருஷேத்ரக் கொலைக்களத்தில் குருதியெனும் அந்தியில் கதிரவன் மைந்தன் மறையும் காட்சியுடன் நிறைவடையும் இந்நாவல் மானுடவாழ்க்கையின் உச்சகணங்கள் சிலவற்றைச் சொல்கிறது. பிறக்கும் கணம் முதல் அடையாளங்களை எடையெனச் சுமந்த ஒரு மாவீரன் தன்னை அவை ஒவ்வொன்றிலிருந்தும் விடுவித்துக்கொண்டு தன்னைத் தானே வரையறை செய்து களத்தில் ஓங்கி நின்றிருக்கும் கதை.

    இருட்கனி – வெண்முரசு நாவல் வரிசையில் இருபத்தொன்றாவது நாவல்.

    or 3 X Rs. 1,996.67 with Koko Koko
    Read more
  • Out of Stock

    ஆதவன் சிறுகதைகள்

    Rs. 4,990.00
    or 3 X Rs.1,663.33 with

    ஆதவன்

     

    ‘1960-70களில் இந்திய நகரங்களில் இளமைப் பொழுதை க்கழித்த, படித்த, மத்தியதர வர்க்கத்தினரின் பிரத்தியேக ஆசை – அபிலாஷைகளையும் சோகங்களையும் நிராசைகளையும் ஆதவனைப்போல யாரும் தமிழில் பிரதிபலித்ததில்லை. ’இண்டர்வியூ’, ’அப்பர் பெர்த்’ போன்ற அவருடைய பக்குவம் மிக்க சிறுகதைகளைப் படித்து, இவ்வளவு துல்லியமாகவும், சத்தியம் தொனிக்கவும் தற்கால இந்தியாவின் படித்த இளைஞர் மனத்தைச் சித்திரிக்க முடியுமா என்று வியந்திருக்கிறேன்.’

    – அசோகமித்திரன்
     

    ‘நான் அவனை பாதித்திருப்பது போல, ஆதவனும் என்னை மிகவும் பாதித்திருக்கிறான். இதை நான் பெருமையாகச் சொல்லிக்கொள்ள முடியும்.’

    – இந்திரா பார்த்தசாரதி
     

    ‘தமிழ் இலக்கியத்தை நிரந்தரமாக அலங்கரிக்கக்கூடிய பல மணிமணியான சிறுகதைகளை ஆதவன் எழுதியிருக்கிறார். இப்போதும் எழுத்துலகில் நிறைய இளைஞர்களைப் பார்க்கிறேன். நுணுக்கமாக எழுதுபவர்கள், பெரும் மேதாவிலாசம் இருந்தாலும் அன்பும் அடக்கமும் உடையவர்கள்… இத்தகைய இளைஞர்களைப் பார்க்கிறபோது ஆதவனைப் பற்றிய ஞாபகம் வந்துகொண்டே இருக்கிறது.’

    – திருப்பூர் கிருஷ்ணன்

    or 3 X Rs. 1,663.33 with Koko Koko
    Read more
  • Placeholder
    Out of Stock

    காவிரி மைந்தன்

    Rs. 5,590.00
    or 3 X Rs.1,863.33 with

    அனுஷா வெங்கடேஷ்

     

    பல லட்சம் இதயங்களில் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு பெரும் படைப்பை எடுத்துக்கொண்டு அதே உன்னத மொழியில், அதே உயிர்ப்போடு, அதே சுவையோடு தொடர்வதென்பது காரிருளில் கத்தி மேல் நடப்பதற்குச் சமமான ஒரு பணி. அனுஷா வெங்கடேஷ் அப்பணியை வியக்க வைக்கும் அளவுக்குக் கச்சிதமாகச் செய்து முடித்திருக்கிறார். பொன்னியின் செல்வனின் பெருமிதத்துக்குரிய நீட்சியாக காவிரி மைந்தன் இதோ உங்கள் கரங்களில் தவழ்கிறான்.
     

    வாசிக்க, வாசிக்க பரவசம் நம்மைத் தொற்றிக்கொள்கிறது. வந்தியத்தேவனுடன் படகில் செல்கிறோம்.பொன்னியின் செல்வருடன் கொள்ளையர் தீவில் சிக்கிக்கொள்கிறோம். கந்தவேள் மாறனின் காதலில் திளைக்கிறோம். ரவிதாசனின் சதியை ஆழ்வார்க்கடியானுடன் இணைந்து ஒற்றுக் கேட்கிறோம். அச்சமும் காதலும் மர்மமும் வீரமும் சாகசமும் மாறி மாறி நம்மை ஆக்கிரமித்துக்கொள்கின்றன. சோழர்களின் அற்புத உலகம் அத்தனை வண்ணங்களோடும் நமக்காக மீண்டுமொருமுறை திறக்கிறது.

    or 3 X Rs. 1,863.33 with Koko Koko
    Read more
  • Out of Stock

    அஷேரா ( Ashera )

    Rs. 1,190.00
    or 3 X Rs.396.67 with

    சயந்தன்

     

    அஷேரா ஒரு வாழ்வை விரித்துப் பரப்பிய கதைப்பிரதியல்ல. அது தெரிந்தெடுத்த மனிதர்களுடைய ஒன்றோடொன்று ஊடும் பாவியும், விலகி வெளியேறுவதுமான கதைகளின் தொகுப்பு. முன்னும் பின்னுமான காலமும் இங்கும் அங்குமான நிலங்களின் அலைவும் பிரதி முழுவதும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. மனிதர்கள், பெண்ணுடனான காமத்தில் சுகித்திருக்கிறார்கள், அவளுடைய நேசத்தைப் புறந்தள்ளுகிறார்கள், கேலி செய்கிறார்கள், தாய்மையின் மடிச்சூட்டிற்காக ஏங்குகிறார்கள், குழந்தைகளை வெறுக்கிறார்கள், பிரியத்தை எதிர்கொள்ளத் திராணியற்று அதை அலட்சியமாக்கித் தப்பிக்கிறார்கள். யாருடையதோ காலடியில் வீழ்கிறார்கள். யாரையோ காலடியில் வீழச் செய்கிறார்கள், காட்டிக்கொடுக்கிறார்கள், அவமானப்படுத்துகிறார்கள், மன்னிப்பை இரக்கிறார்கள், துரோகமிழைக்கின்றார்கள், பிறழ்கிறார்கள்.

     

    அப்போதெல்லாம் அமானுஷ்யமாக ஒரு துப்பாக்கி செவிக்கெட்டாத மாயச்சத்தத்துடன் சன்னங்களைத் துப்பிக்கொண்டிருந்தது. கந்தகம் காட்சியற்ற நெடியாகப் பரவிக்கொண்டிருந்தது.

     

    நஞ்சு ஊறிய விதையிலிருந்து முளைத்த ஒரு பெரு விருட்சத்தின் பூவிலும், காயிலும், விழுதிலும், விறகிலும் விஷமேறியிருப்பதைப் போல, நம்முடைய நினைவிலும் கனவிலும் பரவியிருக்கும் சா ஓலத்திலிருந்து இலக்கியம் எப்படித் தன்னை விடுதலை செய்துவிட முடியும்?

    or 3 X Rs. 396.67 with Koko Koko
    Read more
  • Out of Stock

    பெண்களற்ற ஆண்கள் ( Pengalattra Aangal ) Men Without Women

    Rs. 1,890.00
    or 3 X Rs.630.00 with

    ஹருகி முரகாமி

    தமிழில்: ஸ்ரீதர் ரங்கராஜ்

     

    வெவ்வேறு தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்ட இந்த எட்டுக் கதைகளுக்கு இடையேயுள்ள ஒற்றுமை இதிலிருக்கும் தனிமை. இந்தக் கதைகளின் வழி முரகாமி, வெவ்வேறு விதத்தில் தங்களைத் தனிமையில் உணரும் மனிதர்கள் மீதான தனது கூர்மையான அவதானிப்பை முன்வைக்கிறார். புதிர்த்தன்மை கொண்ட கதைகள் என்றாலும் ஏதோவகையில் மிகப்பரிச்சயமான உணர்வையும் இவை உண்டாக்குகின்றன. முரகாமிக்கே உரிய எளிமையான, சிறப்பான மற்றும் ஆழமான விதத்தில் அடுக்கப்படும் நிகழ்வுகள் வாழ்வின் மாயத்தன்மை மற்றும் தினசரி அபத்தங்களை ஒருங்கே வெளிப்படுத்துகின்றன.

    or 3 X Rs. 630.00 with Koko Koko
    Read more
  • Out of Stock

    தில்லையில் ஒரு கொள்ளைக்காரன்

    Rs. 1,990.00
    or 3 X Rs.663.33 with

    அனுஷா வெங்கடேஷ்

     

    14ஆம் நூற்றாண்டில் நடந்த முகமதியப் படையெடுப்பை தமிழ்நாடு எவ்வாறு எதிர்கொண்டது? சமணமும் பௌத்தமும் கிட்டத்தட்ட அழிந்திருந்த நிலையில், இந்து மதம் தனது விக்கிரகங்களை எவ்வாறு எதிரிகளின் கரங்களிலிருந்து காப்பாற்றியது? அரங்கம் முதல் தில்லைவரை, மதுரைமுதல் சீர்காழிவரை ஒவ்வொரு விக்கிரகத்தின் பின்னாலும் ஒரு கதை இருக்கிறது. இது தில்லையின் கதை. காணாமல் போன நடேசன் அதிசயத்திலும் அதிசயமாக மீண்டு வந்ததன் பின்னாலுள்ள ஓர் அசாதாரணக் கதை. அனுஷா வெங்கடேஷின் இந்த அபாரமான சரித்திர நாவல் தமிழ் வாசகர்களைக் கொண்டாட்டத்தில் ஆழ்த்தும் என்பது உறுதி.
    or 3 X Rs. 663.33 with Koko Koko
    Read more
  • Out of Stock

    ஜே.ஜே. சில குறிப்புகள் ( Je Je Sila Kurippugal )

    Rs. 1,590.00
    or 3 X Rs.530.00 with

    சுந்தர ராமசாமி

     

    மனிதனுடன் தொடர்பு ஏற்படும்போது, மிகச் சுருங்கிய நேரத்தில், குறுக்குப் பாதை வழியாகக் கிடுகிடு என நடந்து, அவனுடைய மனத்தின் துக்கம் நிறைந்த குகைவாசலைச் சென்றடைகிறேன். என் மீது உன் துக்கத்தையெல்லாம் கொட என்ற செய்தியை எப்படியோ மறைமுகமாக என்னால் உணர்ததிவிட முடிகிறது. மனிதனுக்குரிய சகல பலவீனங்களும் கொண்ட எனக்கு, தங்களை என்னில் இனங்கண்டுகொள்ளும் மற்றவர்களின் தொடர்புகள் வாய்த்தவண்ணம் இருக்கின்றன. என்னைப் போலவே நான் சந்தித்தவர்களும் ‘இப்போது என்னைப் பிடித்துக்கொண்டிருக்கும் துக்கத்தை மட்டும் ஒரு புறச்சக்தி நீக்கித் தந்துவிட்டால் இனி வரவிருக்கும் துக்கங்களை நானே சமாளித்துத் தீர்த்துக் கொள்வேன்’ என்று பிரார்த்தனையில் ஏங்குவதை உணர்ந்திருக்கிறேன். தண்ணீரின் ருசிகள் வேறானவை என்றாலும் எந்த மனத்தைத் தோண்டினாலும் துக்கத்தின் ஊற்று கொப்பளிப்பதைப் பார்க்கலாம். மனித மனத்தின் அடிநிலைகளில் ஒரே திராவகம்தான் ஓடிக்கொண்டிருக்கிறது.

    or 3 X Rs. 530.00 with Koko Koko
    Read more
  • Out of Stock

    சைக்கிள் கமலத்தின் தங்கை ( Cycle Kamalaththin Thangai )

    Rs. 1,090.00
    or 3 X Rs.363.33 with

    எஸ்.ராமகிருஷ்ணன்

     

    நமக்குள் பொதுவான மொழியும், பொதுவான உணர்நுட்பங்களும் இல்லாமல் போயிருக்கலாம். ஆனால், நாம் அனைவரும் பொதுவான ஒரு மௌனத்தையே பகிர்ந்து கொண்டிருக்கிறோம் என்கிறார் கவிஞர் மிராஸ்லாவ் ஹோலுப். பேசப்படாத அந்த மௌனத்தின் பின்னுள்ள கதையை தான் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிக்காட்டுகிறார்.

     

    அவரது கதையுலகம் புனைவின் விசித்திரங்களை கொண்டது. தோற்றவர்களின் வலியை, புறக்கணிக்கப்பட்டவர்களின் முணுமுணுப்பை, தனிமையில் பீடிக்கப்பட்டவர்களின் கண்ணீரை, தீமையின் வெறியாட்டத்தை அடையாளம் காட்டும் இக்கதைகள் தமிழ் சிறுகதைகளின் அடுத்த கட்ட சாதனைகள் என்றே கூறவேண்டும்.

    or 3 X Rs. 363.33 with Koko Koko
    Read more
  • Out of Stock

    முறிந்த பாலம் ( Murintha Paazham )

    Rs. 1,050.00
    or 3 X Rs.350.00 with

    தோர்ன்டன் ஒயில்டர்

    தமிழில்: இரா. நடராசன்

     

    தான்டர்ன் ஒயில்டரின் முறிந்த பாலம் நாவல் கடவுளுக்கும் மனிதனுக்குமான உறவையும், வாழ்வின் புதிர்தன்மையையும் விவரிக்கிறது. 1927ம் ஆண்டு வெளியான இந்த நாவல் இன்று வரை வாசகர்களால் தொடர்ந்து கொண்டாடப்பட்டு வரும் படைப்பாகவுள்ளது. இந்த நூற்றாண்டின் சிறந்த 100 நாவல்களில் ஒன்றாகப் பலராலும் பட்டியலிடப்பட்ட முறிந்த பாலம் நாவல் உண்மைச் சம்பவம் ஒன்றை அடிப்படையாகக் கொண்டது. பெரு நாட்டில் உள்ள செயிண்ட் லூயிஸ் ரே பாலம் 1714 ஆண்டு அறுந்து விழுந்தது. இதனால் ஐந்து பேர் இறந்து போனார்கள். அந்த நிகழ்வையே நாவல் மையமாக் கொண்டு மனித வாழ்வு குறித்த ஆழமான விசாரணையை மேற்கொள்கிறது.

    or 3 X Rs. 350.00 with Koko Koko
    Read more
  • Out of Stock

    கார்கடல் : வெண்முரசு: மகாபாரதம் நாவல் வடிவில்

    Rs. 7,190.00
    or 3 X Rs.2,396.67 with

    ஜெயமோகன்

     

    மகாபாரதப் போரின் உச்சங்கள் நிகழ்வது இந்நாவலில். அந்த மாபெரும் போர் இருண்டு முகிலென அனைத்து அறங்களையும் நெறிகளையும் மூடுவதன் சித்திரம் இதில் உள்ளது. ஒவ்வொரு கட்டுகளாக அவிழத் தொடங்குகின்றன. ஒவ்வொருவரும் தங்கள் இறுதி எல்லைகளை உணர்கிறார்கள். வீரத்திற்கும் துணிவுக்கும் தற்கொடைக்கும் எழவைக்கும் உயரங்களையும் சினத்திற்கும் வஞ்சத்துக்கும் இறங்கவைக்கும் எல்லைகளையும்.
     

    போர் ஏன் உலக இலக்கியங்களில் அத்தனை விரிவாகச் சொல்லப்படுகிறது? ஏனென்றால் வாழ்க்கையின் எல்லாத் தருணங்களிலும் நிகழ்ந்துகொண்டிருப்பது போர்தான். நுண்செயல்களாலான போர், அகப்போர், குறியீட்டுப்போர். அத்தனை போர்களையும் அப்பட்டமாகப் புறத்தே நிகழ்த்திப் பார்ப்பதே போர் என நிகழ்கிறது. அங்கே மனிதன் தன்னை முழுவிசையுடன் தன்னைச் சூழ்ந்திருக்கும் பிறமானுடருடன், அறியமுடியாத ஊழுடன் உரசிக் கொள்கிறான், அறிந்து மீள்கிறான், அழிகிறான்.
     

    கார்கடல் முந்தைய நாவல்களில் பேருருவாக எழுந்த போர்க்களக் காட்சிகளை வெவ்வேறு கண்கள் வழியாக விரித்துரைத்து முன்செல்கிறது. மகாபாரதம் என்பதே போரின் கதைதான், அதன் அனைத்து நிகழ்வுகளும் போரிலேயே வந்து உச்சம் கொள்கின்றன. போரை அறிவதனூடாகவே அதன் முந்தைய நிகழ்வுகளனைத்தையும் நாம் அறியமுடியும். கார்கடல் மகாபாரத நிகழ்வுகள் அனைத்திலும் புதிய பார்வைகளை அளிக்கும் கதைப்பரப்பு.
     

    கார்கடல் – வெண்முரசு நாவல் வரிசையில் இருபதாவது நாவல்.

    or 3 X Rs. 2,396.67 with Koko Koko
    Read more
  • Out of Stock

    மண்டியிடுங்கள் தந்தையே / Mandiyidungal Thandhaiye

    Rs. 2,190.00
    or 3 X Rs.730.00 with

    எஸ்.ராமகிருஷ்ணன்

     

    இந்நாவல் டால்ஸ்டாயின் வாழ்க்கை வரலாற்றில் நடந்த சில நிகழ்வுகளை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட ஒன்று.

     

    எழுத்தாளர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு சர்வதேச அளவில் நிறைய நாவல்கள் எழுதப்பட்டுள்ளன. ஆனால் தமிழில் இந்தவகையான நாவல்இதுவரை வெளியானதில்லை.

    அதுவும் ஒரு ரஷ்ய எழுத்தாளரின் வாழ்க்கையை விவரிக்கும் நாவல் இந்நாள் வரை தமிழில் எழுதப்பட்டதில்லை.

     

    இதுவே முதன்முறை,  அந்த வகையில் இதைத் தமிழில் எழுதப்பட்ட ரஷ்ய நாவல் என்பேன்.

    இந்த நாவலை எழுதுவதற்காக மூன்று ஆண்டுகள் டால்ஸ்டாயின் வாழ்க்கை வரலாறு, ரஷ்ய வரலாறு, டால்ஸ்டாயின் டயரிக்குறிப்புகள்.

    சோபியாவின் டயரிக்குறிப்புகள்.

    டால்ஸ்டாய் குடும்பத்தினரின் நினைவலைகள், டால்ஸ்டாய் பற்றி எழுதப்பட்ட கட்டுரைத் தொகுப்புகள், அவரது சமகால எழுத்தாளரின் படைப்புகள், பண்ணை அடிமைகள் பற்றிய அறிக்கைகள், எனத்தேடித்தேடி படித்தேன்.

    or 3 X Rs. 730.00 with Koko Koko
    Read more
  • Out of Stock

    தீயின் எடை : வெண்முரசு: மகாபாரதம் நாவல் வடிவில்

    Rs. 5,290.00
    or 3 X Rs.1,763.33 with

    ஜெயமோகன்

     

    குருஷேத்ரக் களத்தில் இருண்டவை அனைத்தும் பெய்தொழியும் இறுதி நிகழும் நாவல் இது. போரின் முடிவில் அனைத்தையும் எரித்தபடி எழுகிறது பேரனல். அது விரித்த சாம்பலைக் கரைந்து ஒழுகியபடி பொழிகிறது பெருமழை. மண் தன்னைத் தன்னைக்கொண்டே மூடிக்கொள்கிறது. மாபெரும் வயிறென ஆகிறது. அனைத்தையும் செரித்துக் கொள்ளத் தொடங்குகிறது.

    எஞ்சுவதென்ன என்பது குருஷேத்ரம் எழுப்பும் வினா. எஞ்சியவை வஞ்சமும் ஆறாத்துயரும் மட்டுமே. வெற்றியும் தோல்வியும் பொருளற்றவை ஆயின. உயிர்க்கொடையும் அருந்திறல்நிகழ்வும் வீணென்றாயின. மானுடரை சருகு என எரித்து அங்கே தன்னை நிறுவிக்கொண்டது ஒரு பேரனல். தீயின் எடை அந்த அனலைப்பற்றிய நாவல்.

    or 3 X Rs. 1,763.33 with Koko Koko
    Read more
  • Out of Stock

    தங்கப்புத்தகம் ( Thangapuththagam )

    Rs. 2,150.00
    or 3 X Rs.716.67 with

    ஜெயமோகன்

     

    இவை பெரும்பாலும் திபெத்தில் நிகழும் கதைகள். திபெத் ஒரு தங்கப்புத்தகம். வாசிக்க வாசிக்க விரிவது, வாசிப்பவர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொருள் அளிப்பது. மானுடத்தில் இருந்து தனித்து ஒதுங்கி நின்றிருந்த ஒரு பண்பாடு அது. நித்ய சைதன்ய யதி ஒருமுறை சொன்னதுபோல ‘கெட்டுப்போகாமலிருக்க குளிர்சாதனப்பெட்டிக்குள் வைத்து பாதுகாக்கப்பட்ட பண்பாடு.’ மானுடம் இழந்தவை பல அங்கே சேமிக்கப்பட்டிருந்தன. ஆகவேதான் திபெத் அத்தனை மர்மமான கவர்ச்சி கொண்டதாக இருக்கிறது. மீளமீள மறுகண்டுபிடிப்பு செய்யப்படுகிறது. இந்தக்கதைகள் திபெத்தை ஒரு கதைக்களமாக கொண்டவை என்பதைக் காட்டிலும் ஒருவகை குறியீட்டு வெளியாகக் கொண்டவை என்று சொல்வதே பொருத்தமானது. கனவில் எல்லாமே குறியீடுகள். ஒரு கனவுநிலமாகவே இதில் திபெத் வருகிறது. இது மெய்யான திபெத் அல்ல. இது நிக்கோலஸ் ரோரிச் தன். ஓவியங்களில் சித்தரித்த திபெத். ஆழ்படிமங்கள் வேர்க்கிழங்காக உறங்கும் நிலம். அத்தனை பொருட்களும் குறியீடுகளாக முளைத்தெழும் மண். இந்தக்கதைகளில் ஒருகதையில் இருந்து இன்னொரு கதைக்கு நீண்டுசென்று வலுப்பெறும் ஒரு மெய்த்தேடல் உள்ளது. ஆகவே ஒவ்வொரு கதையும் இன்னொன்றால் நிரப்பப்படுகிறது.

    or 3 X Rs. 716.67 with Koko Koko
    Read more
  • Sale!
    Out of Stock

    நிமித்தம் / Nimiththam

    Rs. 2,690.00
    or 3 X Rs.896.67 with

    எஸ்.ராமகிருஷ்ணன்

     

    நிராகரிப்பின், புறக்கணிப்பின் நஞ்சைவிட கசப்பான ஒன்று இந்த உலகில் இருக்க முடியுமா?

    ஆனால் ஒவ்வொரு நாளும் இந்த நஞ்சை அருந்தியபடி எண்ணற்ற மனிதர்கள் தலைகவிழ்ந்து மௌனமாக நடந்து போகிறார்கள்.

    இந்த மௌனத்தின் ஆழம் நம் இதயங்களைச் சில்லிடச் செய்வது.

     

    இந்த நாவல் அந்த ரகசியப் பள்ளத்தாக்கைத்தான் எட்டிப்பார்க்கிறது.

    புறக்கணிக்கப்பட்ட ஒவ்வொரு மனிதனும் தனக்கென ஒரு கதையை கொண்டிருக்கிறான்.

    வலியாலும் வேதனையாலும் ததும்பும் அந்தக் கதை மனித துயரத்தின் சாட்சியம்.

    நிமித்தம் அப்படி தொடர்ந்த அவமானத்திற்கும் ஏளனத்திற்கும் உள்ளான காதுகேளாத ஒருவனின் கதையை விவரிக்கிறது.

     

    தேவராஜ் ஒரு கதாபாத்திரமில்லை. மாற்றுத்திறனாளிகளை நம் சமூகம் நடத்தும் அவலத்தின் அடையாளம். அவனது வாழ்க்கையின் இடைவெட்டாக தமிழ்ச்சமூகத்தின் அரசியல் மற்றும் பண்பாட்டு மாற்றங்கள் ஊடாடுகின்றன.

     

    மாயமும் யதார்த்தமும் மாறிமாறி பின்னப்பட்டு மாபெரும் கதையாடலாக விரிவுகொள்வதே இந்த நாவலின் தனிச்சிறப்பு.

    or 3 X Rs. 896.67 with Koko Koko
    Read more
  • Out of Stock

    ஓடாதே / Odathe

    Rs. 660.00
    or 3 X Rs.220.00 with

    சுஜாதா

     

    இந்தக் கதையின் நாயகனையும் அவன் மனைவியையும் ஹனிமூன் கொண்டாட விடாமல் பலரும் துரத்துகிறார்கள். புதுமண ஜோடி கால்போன போக்கில் பயந்து ஓடிக்-கொண்டேயிருக்கிறது.

     

    ஒரு கட்டத்தில் துரத்துபவர்கள் திடீரென்று நிறுத்தி விடுகிறார்கள்.

    ஏன் துரத்தினார்கள்?

    எதற்காக நிறுத்தினார்கள்?

    எதுவும் புரியவில்லை!

     

    ஹனிமூன் ஜோடி திகைத்துத் தடுமாறி கணேஷை தஞ்சமடைய, கணேஷும் வஸந்தும் அந்த ‘ஏன்’ ‘எதற்காக’வை துரத்தி விடை தேடும் விறு விறு கதை.

    or 3 X Rs. 220.00 with Koko Koko
    Read more
  • Out of Stock

    முதுநாவல் ( Mudhunaaval )

    Rs. 2,150.00
    or 3 X Rs.716.67 with

    ஜெயமோகன்

     

    புறவயமான உலகின் பொதுவான தளத்திலேயே இவை நிகழ்கின்றன. மிகமெலிதாக அந்த உலகின் தர்க்கங்களை மீறி கனவுக்குள், அதீதத்திற்குள் சென்று தொட்டு மீள்கின்றன. எங்கு அந்த மீறல் நிகழ்கிறதோ அங்குதான் இக்கதைகளின் மையக் கண்டடைதல் அல்லது அடிப்படைக்கேள்வி உள்ளது. இவை தங்கள் முடிவிலியை அங்கேதான் சென்றடைகின்றன.

    அங்கிருந்து அவை கொண்டுவருவது இவ்வுலக வாழ்க்கையை புதிய ஒளியில் காட்டும் ஒரு கோணத்தை. இவ்வாழ்க்கையை பிளந்துசெல்லும் ஒரு புதிய ஒரு அர்த்தப்பரப்பை. மெய்மை எப்போதுமே அப்பால்தான் உள்ளது.. மலையுச்சிமேல் நின்றாலொழிய நகரத்தைப் பார்க்க முடியாது. இவை அத்தகைய உச்சிமுனைப் பார்வைகள்.

    or 3 X Rs. 716.67 with Koko Koko
    Read more
  • Out of Stock

    தீர்க்கதரிசி

    Rs. 690.00
    or 3 X Rs.230.00 with

    கலீல் ஜிப்ரான்

     

    கலீல் கிப்ரானின் த பிராபட் என்ற இந்த புத்தகம் ஆங்கிலத்தில் கவித்துவமான 26 கட்டுரைகளைக் கொண்டது. இது நிறைய ஆன்மீக ஊக்குவிகளைக் கொண்டது.

     

    ஆசிரியர் தன் கைப்பட பன்னிரெண்டு ஓவியங்களை வரைந்துள்ளார். 11 வருடங்களுக்கு மேல் இந்தப் புத்தகத்தின் நேர்த்திக்காக உழைத்திருக்கிறார். இது கிப்ரானின் சிறந்த படைப்பு. அவருடைய இலக்கிய வாழ்வின் உச்சத்தைத் தொட்டப் புத்தகம். இதனால் இவர் ‘வாஷிங்டன் தெருவின் புலவர்’ என்று அறியப்பட்டார்.

     

    உணர்சிகளின் கொந்தளிப்பின் ஈர்ப்பைப் படம் பிடித்திருக்கிறார். த உலக பிராபட் 40 மொழிகளுக்கு மேல் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. 20ம் நூன்றாண்டின் மிகவும் அதிகப்படியாகப் படிக்கப்பட்ட புத்தகம் என்று பெயர் வாங்கியது. இதன் முதல் பதிப்பில் 1300 பிரதிகள் ஒரே மாதத்தில் விற்கப்பட்டன.

    or 3 X Rs. 230.00 with Koko Koko
    Read more
  • Out of Stock

    ஸீரோ டிகிரி ( Zero Degree )

    Rs. 2,650.00
    or 3 X Rs.883.33 with

    சாரு நிவேதிதா

     

    ஸீரோ டிகிரி கலிஃபோர்னியா மாநிலப் பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஒப்பாய்வுப் பாடதிட்டத்திலும், கோட்டயம் மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தின் உயர்னிலைப் பட்டப்படிப்பிலும் பாடமாக வைக்கப்பட்ட நாவல். இந்தியாவின் 50 மிகச் சிறந்த புனைக்கதைகளில் ஒன்றாக Harper Collins பதிப்பகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாவல். Jan Michalski சர்வதேச விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட நாவல். இந்திய மொழிகளில் எழுதப்பட்ட ஒரே liopgrammatic நாவல்.

     

    அகதி முகாம்கள் உட்பட இன்று உலகளாவி பரந்து கிடக்கிறது தமிழ்ச் சமூகம். அதற்கும், ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் அளிக்கப்பட்ட கொடையே ஸீரோ டிகிரி. ஆனால் இந்நாவலைப் பங்களிப்பென ஏற்பதோ சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்தும் கழிவுப் பொருளாக ஒதுக்கித் தள்ளுவதோ சமூகத்தின் பிரச்னையே தவிர என்னுடையது அல்ல. என் மூலமாக இக்காரியம் நடந்திருப்பதென்பது ஒரு தற்செயல் நிகழ்வு மட்டுமே. இதில் நான் ஒரு கருவியாகச் செயல்பட்டிருக்கிறேன் என்று சிறு உவகை மட்டுமே என்னளவில் மிஞ்சக் கூடியது. ஸீரோ டிகிரி நாவலின் முதல் பதிப்பு வெளிவந்தபோது சில ‘பொதுநல விரும்பிகள்’ இதைத் தடை செய்ய வேண்டுமென தவளைச் சத்தம் எழுப்பினார்கள். அந்த வேளையில் அன்பான சில உள்ளங்கள் எனக்கு அளித்த தார்மீக ஆதரவும் அன்பும் என்னால் மறக்க இயலாதது. ஸீரோ டிகிரி ஒரு Lipogrammatic நாவல். சர்வதேச அளவிலேயே ஒன்றிரண்டு நாவல்கள் மட்டுமே இந்த முறையில் எழுதப்பட்டுள்ளன. ஒரு நாவலில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வார்த்தைகளைத் தவிர்த்து விட்டு எழுதுவது லிப்போக்ராமடிக் எழுத்து. ஸீரோ டிகிரியில் ஒரே ஒரு அத்தியாயத்தைத் தவிர வேறு எந்த இடத்திலும் ‘ஒரு’ ‘ஒன்று’ என்ற இரண்டு வார்த்தைகளும், கமா, கேள்விக்குறி போன்ற நிறுத்தற்குறிகளும் பயன்படுத்தப்படவில்லை. – சாரு நிவேதிதா

    or 3 X Rs. 883.33 with Koko Koko
    Read more
  • Sale!
    Out of Stock

    அன்னா கரீனினா 2 பாகங்கள் ( Anna Karenina )

    Rs. 8,900.00
    or 3 X Rs.2,966.67 with

    லியோ டால்ஸ்டாய்

      தமிழில்: நா. தர்மராஜன்

     

    அன்னா கரீனினா அதன் எல்லா அம்சங்களிலும் பரிபூரணமான ஒரு பெரும் படைப்பு. நாவலின் மைய வினா என்பது காதலுக்கும் குடும்பம் என்ற அமைப்புக்கும் இடையேயான உறவென்ன என்பதுதான். காதல் இல்லாத திருமணத்தை கடமைக்காகச் சுமக்க வேண்டுமா? காதலுக்காக ஒருவன் அல்லது ஒருத்தி உறவுகளை இழக்க முடியுமா? அப்படி இழக்குமளவுக்குத் தகுதி கொண்டதுதானா காதல்? உண்மையான தீவிரமான நேசம் என்பது ஒழுக்கக் கேடு என்று எதிர்மறையாக மதிப்பிடப்படுவது சரியா? காதலும் காமமும் எங்கே முயங்குகின்றன, எங்கே பிரிகின்றன? இவ்வாறு அந்த மையக்கேள்வியை தல்ஸ்தோய் விரித்துக்கொண்டே செல்கிறார்.

     

    மிகச்சரளமாக வாசிக்கும்படியாகவும், அதேசமயம் முழுமையாகவும் இந்த மொழியாக்கத்தைச் செய்திருக்கிறார் நா.தர்மராஜன் அவர்கள். அவர் ருஷ்யாவில் பல காலம் இருந்தவராதலால் நுண்தகவல்கள் எல்லாம் சீராக மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. தல்ஸ்தோய்யின் நாவல்கள் வெறும் மானுடசித்திரங்கள் மட்டுமல்ல. அவை ருஷ்யப் பண்பாட்டின், ருஷ்ய நிலத்தின், ருஷ்ய வரலாற்றின் பதிவுகளும்கூட. அவை முழுமையான நாவல்கள். வாசகனுக்கு ருஷ்யாவில் வாழ்ந்து மீண்ட அனுபவத்தை அளிப்பவை. அந்த அனுபவத்தை அளிப்பதாக உள்ளது இந்த மொழியாக்கம்.

    or 3 X Rs. 2,966.67 with Koko Koko
    Read more
  • Out of Stock

    இமைக்கணம் : வெண்முரசு: மகாபாரதம் நாவல் வடிவில்

    Rs. 4,290.00
    or 3 X Rs.1,430.00 with

    ஜெயமோகன்

     

    மகாபாரதப் போரில் கீதை உரைக்கப்படவில்லை, கீதைக்காகவே மகாபாரதப் போர் நிகழ்ந்தது என்பதே வெண்முரசின் தரிசனம். அனைத்து மக்களுக்கும் தங்களுக்கான வேதங்கள் உள்ளன. அவற்றிலிருந்து தொகுக்கப்பட்டது நால்வேதம். நால்வேதத்தின் தொடர்ச்சியும் எதிர்நிலையுமே நாராயண வேதம். அதாவது கீதை. கீதையின் பீடமே மகாபாரதம். அதன் முன்னோடி நூல்கள் உபநிடதங்களும், கீதையிலேயே குறிப்பிடப்படும் பிரம்மசூத்திரமும். வேதங்களுக்கும் வேதாந்தத்திற்குமான முரண்பாடு அல்லது முரணியக்கம் கீதையிலேயே சொல்லப்பட்ட ஒன்று. அதையே வெண்முரசு மொத்த மகாபாரதமாக விரித்துக்கொள்கிறது.

    or 3 X Rs. 1,430.00 with Koko Koko
    Read more
  • Out of Stock

    19 வயது சொர்க்கம் ( 19 Vayadhu Sorgam )

    Rs. 1,290.00
    or 3 X Rs.430.00 with

    ராஜேஷ்குமார்

     

    தன் நண்பனின் வீட்டில் தன் புதுமனைவியை விட்டுவிட்டு வெளிநாட்டுக்கு செல்கிறான் நாயகன், நடக்கப் போகும் விபரீதம் அறியாமல், சிலநாட்களில் அவனுக்கொரு அதிர்ச்சிகரமான தகவல் வந்தடைகிறது. அவனது புதுமனைவி காணாமல் போய்விட்டால் என்னு ஊருக்கு வந்தவன் அவளைக் காணாமல் பதறிப் போகிறான். எல்லா இடங்களிலும் அவளைத் தேடுகிறான். காவல்துறை உள்ளே நுழைகிறது. அவன் கேள்விப்படும் விஷயங்கள் அவனுக்கு சாதமாக அமைய மறுக்கிறது. அவளுக்கு என்ன நடந்தது? எங்கே சென்றாள்…? அவனுக்கு மறுபடியும் அந்த… 19 வயது சொர்க்கம் கிடைக்குமா? ராஜேஷ்குமாரின் விறுவிறுப்பான நடையில் 19 வயது சொர்க்கம்.

    or 3 X Rs. 430.00 with Koko Koko
    Read more