Opening Possibilities, Illuminating Potentials
Delivery in 1-5 business days. Island-wide Free Delivery for Purchase of Rs. 3990 or above.

Cart

Your Cart is Empty

Back To Shop
Contact Us 0764980321

Category: இஸ்லாம்/முஸ்லிம்கள்

Showing all 12 results

  • நிலமெல்லாம் ரத்தம் / Nilamellam Ratham

    Rs. 6,290.00
    or 3 X Rs.2,096.67 with

    பா.ராகவன்

     

    இருபதாம் நூற்றாண்டில் உலகம் சந்தித்த மிகப்பெரிய சிக்கல், இஸ்ரேல் பாலஸ்தீன் தொடர்பானது. தனித்துவம் மிக்க இரண்டு மதங்களின் வலுவான முரண்பாட்டுப் பின்னணியில் திறமை மிக்க அரசியல்வாதிகளால் முன்னெடுத்துச் செல்லப் பட்ட மக்களின் உணர்வு சார்ந்ததொரு பிரச்னை.

     

    இன்று வரை இது தீராதிருக்க என்ன காரணம்? சொந்த மண்ணில் அகதிகளாக வாழும் பாலஸ்தீனிய அரேபியர்களுக்குப் பிற அரபு தேசங்கள் ஏன் கைகொடுப்பதில்லை? மத்தியக் கிழக்கின் வளமையும் செழுமையும் பாலஸ்தீனியர்களுக்கு மட்டும் ஏன் எப்போதுமே இல்லாமல் போகிறது? ஒதுங்க ஓரிடமில்லாமல் உலகெங்கும் உயிருக்கு அஞ்சி ஓடியவர்கள் யூதர்கள்.

     

    அப்படிப்பட்டவர்கள், தமக்கு வாழ இடமளித்த பாலஸ்தீன் அரேபியர்களை வஞ்சிக்க நினைப்பது எதனால்? பாலஸ்தீன் போராளி இயக்கங்களின் தோற்றம் முதல் செயல்பாடுகள் வரையிலான விரிவான அறிமுகத்தை இந்நூல் தருகிறது.

     

    யாசிர் அரஃபாத்தின் ஆயுதப் போராட்டம், அமைதி முயற்சிகள், அவற்றின் விபரீத விளைவுகள், இஸ்ரேலிய ஆட்சியாளர்களின் கண்ணோட்டம், உலக நாடுகளின் கருத்துகள் என்று விரிவான களப்பின்னணியுடன், ஆதாரபூர்வமான அரசியல் சரித்திரமாக எழுதப்பட்ட நூல் இது.

    or 3 X Rs. 2,096.67 with Koko Koko
    Add to cart
  • தோழர்கள்: புனிதர்களின் அற்புத வரலாறு ( Thozharkal )

    Rs. 8,910.00
    or 3 X Rs.2,970.00 with

    நூருத்தீன்

     

    நாகரிக இலக்கணத்திற்கு உட்படாத முறையற்ற வாழ்வை வாழ்ந்துகொண்டிருந்த அரேபியர்கள், முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மூலம் இஸ்லாமிய மீளெழுச்சி துவங்கியபின் சுடர் விடும் நாயகர்களாகப் பரிணமித்தார்கள். தோழர்கள் என்றானார்கள். அந்தத் தோழர்களின் வரலாறுகள் தமிழில் நிறைய உண்டு. ஆனால் பரவலாக அறியப்படாத தோழர்களின் வரலாற்றை விறுவிறுப்பாகக் கூறும் தொகுப்பு இது.

    or 3 X Rs. 2,970.00 with Koko Koko
    Add to cart
  • Sale!
    Out of Stock

    இறைத்தூதர் முஹம்மது (ஸல்) மற்றும் தோழர்கள் தொகுப்பு / Iraithoothar Muhammad (PBUH) mattrum Thozhargal Thohuppu

    Original price was: Rs. 11,900.00.Current price is: Rs. 10,120.00.

    தாரிக் ரமதான், நூருத்தீன்

     

    இறைத்தூதர் முஹம்மது

     

    மேலை நாடுகளில் தெரிந்திராத முகமதுவை இந்நூல் சித்தரிக்கிறது. பொருத்துபோகக் கூடியவராக, அன்பு, மென்மை, மாறாத நேர்மையுடையவராக, அனாதைகளின், ஏழைகளின் தேவைகளை அறிந்தவராக உள்ள ஒரு தலைவரை இந்நூல் படம்பிடித்துக்காட்டுகிறது.

     

    தோழர்கள்: புனிதர்களின் அற்புத வரலாறு

     

    நாகரிக இலக்கணத்திற்கு உட்படாத முறையற்ற வாழ்வை வாழ்ந்துகொண்டிருந்த அரேபியர்கள், முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மூலம் இஸ்லாமிய மீளெழுச்சி துவங்கியபின் சுடர் விடும் நாயகர்களாகப் பரிணமித்தார்கள். தோழர்கள் என்றானார்கள். அந்தத் தோழர்களின் வரலாறுகள் தமிழில் நிறைய உண்டு. ஆனால் பரவலாக அறியப்படாத தோழர்களின் வரலாற்றை விறுவிறுப்பாகக் கூறும் தொகுப்பு இது.

    or 3 X Rs. 3,373.33 with Koko Koko
    Read more
  • நான் புரிந்துகொண்ட நபிகள் ( Naan Purinthu Konda Nabigal )

    Rs. 1,690.00
    or 3 X Rs.563.33 with

    அ.மார்க்ஸ்

     

    பிற மதங்களைப் போல இஸ்லாம் தன்னை ஏற்றுக்கொண்டவர்களுக்கு மரணத்திற்குப் பிந்திய வாழ்வை மட்டுமே இலக்காக வைத்து இயங்கும் மதமன்று. ஒரு மத நிறுவனத்தை மட்டுமின்றி இந்த உலகிலேயே நிறைவேற்றத்தக்க ஒரு சமூகத் திட்டத்தையும் முன்வைத்து இயங்குவதால் அது மிகவும் செயலூக்கத்துடன் வரலாற்றில் தலையிடுகிறது. நபிகள் ஒரு இறைத்தூதர் மட்டுமன்று. அவர் சமகால வரலாற்றில் தலையிட்ட ஒரு வரலாற்று நாயகரும்கூட. வாளெடுத்துப் போராடியவர். வாழ்நாளில் வென்று காட்டியவர்.

     

    மானுடராக நம்முன் வாழ்ந்ததன் விளைவாகவும் சமகால வரலாற்றில் செயலூக்கமிக்க ஓரங்கமாக விளங்கியதன் அடியாகவும் அவரின் வாழ்வு வண்ணமயமானதாக விளங்குகிறது. ஏராளமான சம்பவங்கள். ஏராளமான மனிதர்கள். ஒரு இறைத்தூதராக மட்டுமின்றி நகைச்சுவை பேசி நண்பர்களோடு சிரிக்கிற. மகனின் மரணத்தில் அழுது குலுங்குகிற, காதல் வயப்படுகிற, மன்னிக்கும் மாண்புகள் நிறைந்த ஒரு சிறந்த மனிதராகவும் அவர் நம்முன் தோன்றுகிறார். இந்தப் பரிமாணங்களை முன்வைக்கும் அதே நேரத்தில் அவர் வாழ்வின் ஊடாகவும், அவர் வழி இறங்கிய திருக்குர்ஆனின் ஊடாகவும் வெளிப்படும் சில முக்கிய இறையியல் சிந்தனைகளையும் நான் புரிந்துகொண்ட வகையில் இங்கே முன்வைத்துள்ளேன்.

    ——- முன்னுரையிலிருந்து

    or 3 X Rs. 563.33 with Koko Koko
    Add to cart
  • Sale!
    Out of Stock

    இலங்கை முஸ்லிம்களை புரிந்துகொள்ளல்

    Original price was: Rs. 900.00.Current price is: Rs. 800.00.
    or 3 X Rs.266.67 with

    அ.வா. முஹ்சீன்

     

    தவறான புரிதலானது இரு பக்கங்களைக் கொண்டுள்ளது. ஒன்று முஸ்லிம்களைப் பற்றி, ஏனைய சமூகங்கள் மத்தியில் நிலவுகின்ற தவறான அபிப்பிராயங்கள், இரண்டு முஸ்லிம்கள் தம்மைப் பற்றிக் கொண்டிருக்கின்ற தவறான அபிப்பிராயங்கள். இந்நூல் இந்த இரண்டையும் பற்றி பேசுகிறது. இலங்கைச் சூழலில், முஸ்லிம் எதிர்கொள்கின்ற நெருக்கடிகளின் பின்னணியில் எழுதப்பட்டுள்ள இந்நூல், இலங்கையைத் தாண்டி, உலக அளவில் முஸ்லிம் சமூகங்கள் அக்கறை கொள்ள வேண்டிய விடயங்கள் பற்றியும் பேசுகிறது.

    கலந்துரையாடப்படவும் விவாதிக்கப்படவும் கூடிய பல விடயங்களை இந்நூல் கொண்டிருக்கிறது. தேசிய அளவிலும் உலகளாவிய ரீதியிலும் சமூகங்களின் ஐக்கியம் மிகப் பெருமளவில் அவசியமாகியுள்ள இன்றைய நிலையில், இந்நூல் அத்தகைய ஐக்கியம் பற்றி மேலும் அக்கறை கொள்வதைத் தூண்டுகிறது.

    or 3 X Rs. 266.67 with Koko Koko
    Read more
  • Sale!
    Out of Stock

    பஷீர் கதைகள் ( Basheer Kathaigal )

    Original price was: Rs. 4,150.00.Current price is: Rs. 3,790.00.
    or 3 X Rs.1,263.33 with

    வைக்கம் முகம்மது பஷீர்

     

    முற்போக்கு இலக்கியம் முதன்மையான நடைமுறையாக இருந்த காலப் பகுதியில் எழுத்தில் ஈடுபட்டவர் பஷீர். ‘ஜீவன் சாஹித்ய பிரஸ்தானம்’ (வாழ்விலக்கிய இயக்கம்) என்று அழைக்கப்பட்ட போக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தியவர்கள் பஷீர், தகழி சிவசங்கர பிள்ளை, பி. கேசவதேவ், பொன்குன்னம் வர்க்கி ஆகியோர். இவர்களின் எழுத்தில் புதுவகையை உருவாக்கியவர் பஷீர்.

     

    நடைமுறை உலகை மாற்றிப் புதிய உலகைச் சமைப்பதற்கான அறைகூவலைப் பிற எழுத்தாளர்கள் முன்னிருத்தினர். இந்த முழுமையற்ற உலகத்தை மாற்றி முழுமையான உலகைப் படைப்பது பற்றிய கனவை முன்வைத்தார்கள். ஆனால் பஷீர் இந்த முழுமையற்ற உலகை நேசித்தவராக இருந்தார். தீமையும் கீழ்மையும்இந்த உலகின் உயிரோட்டமான அம்சங்கள் என்று உணர்ந்திருந்தார்.

     

    நடைமுறை உலகத்தால் புறக்கணிக்கப்பட்டவர்களேஅவரது கதை மாந்தர்களாக இருந்தனர். அவர்களது வாழ்க்கையே அவருக்குக் கதை நிகழ்வுகளாக இருந்தன. பொறுக்கிகள், வேசிகள், திருடர்கள், முட்டாள்கள், பைத்தியங்கள், ஏமாற்றுப்பேர்வழிகள் எல்லாரும் அவருடைய அன்புக்குரிய பாத்திரங்களாக இருந்தார்கள்.அந்தப் பாத்திரங்கள்மீது வாசகரும் அன்பு பாராட்டக் கட்டாயப்படுத்தியதுதான் பஷீர் கலையின் வெற்றி.

    or 3 X Rs. 1,263.33 with Koko Koko
    Read more
  • Sale!
    Out of Stock

    காதலின் நாற்பது விதிகள் (ஸூஃபி நாவல்) ( Kadhalin Naatpathu Vithigal ) The Forty Rules of Love

    Original price was: Rs. 3,890.00.Current price is: Rs. 3,490.00.
    or 3 X Rs.1,163.33 with

    எலிஃப் ஷஃபாக்

    தமிழில்: ரமீஸ் பிலாலி

     

    தீராக் காதலின் தற்காப்புப் போராட்டத்தில் பழங்காலமும் நிகழ்காலமும் கச்சிதமாகக் கை கோர்க்கின்றன.     — தி டைம்ஸ் (இங்கிலாந்து)

     

    தனது கவித்துவமான இந்நாவலில் எலிஃப் ஷஃபாக் இறைக் காதலை நோக்கிய இரண்டு யாத்திரைகளை இணை கோடுகளாக வரைந்திருக்கிறார்: ஒன்று நவீன காலத்தில் நிகழ்கிறது, மற்றொன்று பதின்மூன்றாம் நூற்றாண்டில் ஸூஃபி ஞானிகளான ரூமிக்கும் ஷம்ஸி தப்ரேஸுக்கும் இடையில் நிகழ்கிறது. இவ்விரு கதையாடல்கள் கொள்ளும் குறுக்கீட்டில் சுயம், சுயமின்மை, இறைவனுக்கான அர்ப்பணம் ஆகியவை குறித்த முக்கியமான போதனைகள் வெளிப்படுகின்றன.   —— ஆல்ட்முஸ்லிமா.காம்

     

    காதலின் நாற்பது விதிகள் வாசியுங்கள். நீங்கள் உங்களின் இதயத்தைத் திறக்கலாம், தடைப்பட்டுக் கிடக்கும் இடங்களைத் தகர்த்து வெளிப்படலாம், மாயமான முறையில் காதலில் விழலாம், விடுதலையின் ஆழமான ஆனந்தத்தை உணரலாம்.    —– ஜாக் கார்ன்ஃபீல்டு

    or 3 X Rs. 1,163.33 with Koko Koko
    Read more
  • Sale!
    Out of Stock

    மைல்கற்கள் (Milekatkal) (Maalim Fi at-Tariq)

    Original price was: Rs. 2,310.00.Current price is: Rs. 2,190.00.
    or 3 X Rs.730.00 with

    சையித் குதுப்

    தமிழில்: ஷாஹுல் ஹமீது உமரீ

     

    நவீன இஸ்லாமிய எழுச்சியின் நாயகர்களில் முதன்மையானவர் சையித் குதுப். அவருடைய புத்தகங்களில் அதிகம் வாசிக்கப்பட்ட, விவாதிக்கப்பட்ட புத்தகம் இதுதான். இராணுவ நீதிமன்றத்தில் அவர்மீது, இந்தப் புத்தகத்தை எழுதியதும் ஒரு குற்றச்சாட்டாக முன்வைக்கப்பட்டது.

     

    இந்நூலில் அவர், மனித சமூகம் இஸ்லாத்தின் நிழலில் மட்டுமே ஆரோக்கியமான வளர்ச்சியை நோக்கிச் செல்லவும் நிம்மதியான வாழ்க்கையை வாழவும் முடியும் என்பதை விளக்குவதுடன்; மற்ற கண்ணோட்டங்கள் தோல்வியைச் சந்திக்கும் என்பதையும், அவை எப்படி மனித சமூகத்தை அழிவை நோக்கிக் கொண்டுசெல்கின்றன என்பதையும் எடுத்துக்காட்டுகிறார். இஸ்லாத்தின் உன்னதமான வழிகாட்டலின் பாதையிலுள்ள மைல்கற்களைப் பட்டியலிடும் குதுப், வரலாற்றில் அப்படியொரு முன்மாதிரியான சமூகம் எவ்வாறு உருவானது என்பதையும், அதற்குப் பின்னாலிருந்த காரணிகள் குறித்தும், அதன் தனித்தன்மைகள் குறித்தும் தெளிவுற விவரிக்கிறார்.

     

    இஸ்லாமிய அழைப்புப் பணியில் ஆர்வமுள்ள அனைவருக்கும் ஓர் கட்டாய வாசிப்பு.

    or 3 X Rs. 730.00 with Koko Koko
    Read more
  • Out of Stock

    ரூமியின் வைரங்கள் ( Roomiyin Vairangal )

    Rs. 400.00
    or 3 X Rs.133.33 with

    ஜலாலுத்தீன் ரூமி

    தமிழில்: ரமீஸ் பிலாலி

     

    13-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பாரசீக மகாகவியும் சூஃபி ஞானியும் ஆன மௌலானா ரூமி அவர்களின் தேர்ந்தெடுத்த கவிதைகள் இந்நூல் உங்களிடம் கொண்டு வருகிறது.

     

    மௌலானா ரூமியின் கவிதைகளில் அன்பின் அனைத்துப் பரிமாணங்களும் வெளிப்பட்டுள்ளன. எனவே, சில நேரங்களில் அவரின் கவிதை மிகவும் எளிமையானதாகத் தென்படலாம். இளம் காதலன் ஒருவன் தன் காதலியிடம் பேசுவது போல் தெரியலாம். ஆனால் மனித காதல் என்பதும்கூட இறைக் காதலின் பிரதிபலிப்புதான் என்பதை மௌலானா ரூமி மீண்டும் மீண்டும் தனது காவியத்தில் உணர்த்துகிறார்கள். ஒவ்வொரு அன்பும் இறைவனிடமே இட்டுச் சென்றாக வேண்டும். ஏனெனில் அன்பின் மூல முகவரி இறைவன்தான். அதற்கான வழியை மௌலானா ரூமியின் கவிதைகள் நமக்குக் காட்டுகின்றன.

    or 3 X Rs. 133.33 with Koko Koko
    Read more
  • Sale!
    Out of Stock

    கிரானடா (நாவல்) ( Granada )

    Original price was: Rs. 2,470.00.Current price is: Rs. 2,190.00.
    or 3 X Rs.730.00 with

    றள்வா ஆஷூர்

    தமிழில்: முனைவர் பி.எம்.எம். இர்ஃபான்

     

    அசாதாரணமானதொரு காலத்தில் வாழ்ந்த சாதாரணர்கள் சிலரின் வாழ்க்கையைப் பின்தொடர்ந்து செல்வதன்வழி பதினைந்தாம் நூற்றாண்டில் நிகழ்ந்த முஸ்லிம் ஸ்பெயினின் வீழ்ச்சி ஏற்படுத்திய பண்பாட்டு இழப்பையும் வலியையும் வெகுநுட்பமாக நெய்தெடுத்திருக்கிறது கிரானடா. ஸ்பானிஷ் மதக்குற்ற விசாரணைக் காலத்தின் மூச்சடைக்கும் சூழலின் மத்தியில் அரும்பும் அழகிய காதல்கள், அடக்குமுறைக்கு முன் பணிய மறுக்கும் பண்பாடு, பிழைத்து வாழ்ந்துவிடுவதற்கான யத்தனங்கள் என வாழ்வின் பல்வேறு வண்ணங்களும் முயங்கி மாயம் நிகழ்த்தும் ஒரு நவீன கிளாசிக் இது. முக்கதைகளில் முதலாவது.

    or 3 X Rs. 730.00 with Koko Koko
    Read more
  • Sale!
    Out of Stock

    மர்யமா: கிரானடா முக்கதைகள் – 2 ( Maryama )

    Original price was: Rs. 1,450.00.Current price is: Rs. 1,390.00.
    or 3 X Rs.463.33 with

    றள்வா ஆஷூர்
    தமிழில்: முனைவர் பி.எம்.எம். இர்ஃபான்

     

    எங்கள் மூதாதையர்கள் ஏதும் குற்றமிழைத்துவிட்டதற்காகவா எங்களை இப்படித் தண்டிக்கிறாய்? அல்லது நல்லவர்களும் கெட்டவர்களுமான மனிதர்கள் தங்கள் இச்சைப்படி நடத்திச் செல்லவா இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்திருக்கிறாய்? அவர்களின் மனேபாவம் இப்படிக் கொடூரமாக இருப்பதைத் தெரிந்திருந்தும் ஏன் அவர்களை விட்டு வைத்திருக்கிறாய்?

    – நாவலிலிருந்து…

    or 3 X Rs. 463.33 with Koko Koko
    Read more
  • Sale!
    Out of Stock

    உன் வாழ்வைப் புதுப்பித்துக் கொள்! ( Un Vaazhvai Puthupiththuk Kol )

    Original price was: Rs. 2,570.00.Current price is: Rs. 2,390.00.
    or 3 X Rs.796.67 with

    முஹம்மது அல்கஸ்ஸாலி

    தமிழில்: ஷாஹுல் ஹமீது உமரீ

     

    கண்ணியமும் வெற்றியும் விளைச்சலும் மனிதர்களின் உள்ளங்களில் இனிமையான கனவுகளாக மட்டுமே இருக்கும். அவற்றுக்காகச் செயல்படக்கூடியவர்கள் தங்களின் ஆன்மாவை அவற்றில் ஊதினால் மட்டுமே, இவ்வுலகில் இருக்கும் உணர்வோடும் செயல்பாட்டோடும் அவற்றை அடைந்தால் மட்டுமே அவை உயிரோட்டம் ததும்பிய உண்மைகளாக மாற்றமடையும்.

    – முஹம்மது அல்கஸ்ஸாலி

    or 3 X Rs. 796.67 with Koko Koko
    Read more