Opening Possibilities, Illuminating Potentials
Island-wide Free Delivery for Purchase of Rs. 3990 or above.

Cart

Your Cart is Empty

Back To Shop
Contact Us 0764980321

Category: கதைகள்

Showing all 7 results

 • வட்டியும் முதலும் / Vattiyum Mudhalum

  Rs. 2,990.00
  or 3 X Rs.996.67 with

  ராஜு முருகன்

   

  பசியில் தொடங்கியதாலோ என்னவோ… ராஜுமுருகனின் ‘வட்டியும் முதலும்’ தொடரை வாசிக்க வாசிக்க பசி அடங்கவே இல்லை. இளைஞன் ஸ்தானம் கடக்காது வாழும் இந்த மனிதனுக்குள் இத்தனை கடல்களா? ஒவ்வொரு வாரமும் விகடனில் துளிகளாகத் தன் கடல்களை இறக்கிவைத்த இந்த இளைஞனுக்குள் கோபம், வாஞ்சை, பாசம், பரிதவிப்பு, நெருடல் என எத்தனை விதமான உணர்வுகள்!

   

  தன் வாழ்வியல் அனுபவங்களாக வாழ்க்கையின் பன்முகங்களையும் பந்தி வைத்திருக்கும் ராஜுமுருகன், தமிழ் எழுத்துலகின் நம்பிக்கை மிகுந்த அடையாளம். சிரித்து, அழுது, விளையாடி, தூங்கி பன்முகத்தனங்களையும் தன்னை அறியாமலே செய்யும் ஒரு குழந்தையைப்போல் வாழ்வின் அத்தனை விதமான உணர்வுகளையும் போகிறபோக்கில் நெஞ்சு தைக்கச் சொல்லி இருக்கிறார் ராஜுமுருகன். துயரங்களும் நம்பிக்கைகளும் கலந்து நகரும் இந்த உலகை சற்று தூரத்தில் நின்று கவனித்த கணக்காய் அத்தனை விதமான அனுபவங்களையும் இந்தப் புத்தகத்தில் காணலாம்.

   

  புறந்தள்ளப்பட்டவர்களுக்காக அழலாம்; போராடுபவர்களுக்குக் கைகொடுக்கலாம்; இழந்தவர்களுக்குத் துணை நிற்கலாம்; வென்றவர்களுக்கு மலர்க்கொத்து நீட்டலாம்; கொன்றவர்களுக்கு மன்னிப்புக் காட்டலாம். மனித உணர்வுகளின் அத்தனை விதமான வெளிக்காட்டல்களையும் நிச்சயம் இந்தப் புத்தகம் உங்களுக்குள் நிகழ்த்தும். குவிந்து கிடக்கும் பணத்தைப் பார்ப்பதும் பார்வையே… பணத்தின் நடு வட்டத்தில் யாரோ ஒருவன் தன் காதலைப் பிழைகளோடு சொல்லி இருப்பதைப் பார்த்துச் சிலிர்ப்பதும் பார்வையே. அந்தக் காதலன் தன் காதலியோடு சேர்ந்திருப்பானா என, எவனோ ஒருவனுக்காக ஏங்கித் தவிப்பது மூன்றாம் பார்வை.

   

  இந்தப் புத்தகத்தின் அற்புதம் இத்தகைய பெருங்குணமே! கடலுக்குள் கூடுகட்ட – கனவுக்குள் கடல் கட்ட மனப்பக்குவம் வார்க்கும் மயிலிறகுத் தீண்டலே இந்தப் புத்தகம்!…….

  or 3 X Rs. 996.67 with Koko Koko
  Add to cart
 • Out of Stock

  ஆடு ஜீவிதம் ( Aadu Jeevitham )

  Rs. 1,650.00
  or 3 X Rs.550.00 with

  பென்யாமின்

    தமிழில்: விலாசினி

   

  • 2009 இன் கேரள சாகித்திய அகாதெமி விருதினை வென்ற நாவல்

   

  நஜீபின் ஆசையெல்லாம் கல்ஃபில் வேலைப்பார்த்து வீட்டிற்குத் தேவையான பணம் அனுப்புவதுதான். இரக்கமற்ற, அபத்தமானத் தொடர் நிகழ்வுகளால் உந்தப்படும் நஜீபிற்கு சவுதி பாலைவனத்தின் நடுவில் ஆடுகளை மேய்க்கும் அடிமை வாழ்வு வாழ நேரிடுகிறது.

   

  தனது கிராமத்தின் செழிப்பான பசுமையான நிலப்பரப்பின் நினைவுகளும் தன் அன்பான குடும்பத்தின் நினைவுகளும் ஆடுகளின் துணையில் மட்டுமே ஆறுதல் கொண்டிருக்கும் நஜீபைத் துன்புறுத்துகிறது. முடிவில், பாலைவனச் சிறையிலிருந்து தப்பிக்க இந்த இளைஞன் ஓர் ஆபத்தான திட்டத்தைத் தீட்டுகிறார்.

   

  மலையாளத்தில் வெளியிடப்பட்டு வரவேற்பைப் பெற்ற ஆடு ஜீவிதம் சிறந்த விற்பனைப் பட்டியலில் இடம்பெற்ற நாவல். மலையாள இலக்கியத்தின் அற்புதமான புதிய எழுத்தாளர்களில் ஒருவரான பென்யாமின், நஜீபின் விசித்திரமானதும் அவலச்சுவை கொண்டதுமான பாலைவன வாழ்க்கையை நையாண்டியாகாவும் மென்மையாகவும் கூறி, தனிமை மற்றும் புறக்கணிப்பின் உலகளாவிய கதையாக இதை உருமாற்றுகிறார்.

  or 3 X Rs. 550.00 with Koko Koko
  Read more
 • Out of Stock

  டாக்டர் வைகுண்டம் கதைகள்

  Rs. 1,690.00
  or 3 X Rs.563.33 with

  ஜெயராமன் ரகுநாதன்

   

  முன்பெல்லாம் குடும்ப டாக்டர் என்றொருவர் இருந்தார். தாத்தா முதல் குழந்தை வரை ஒரு வ் யாருக்கு எதுவென்றாலும் போன் செய்தால் போதும், பெட்டியோடு வீட்டுக்கே ஓடி வந்துவிடுவார். வந்தவுடன் ஊசி, மாத்திரை என்று தாவிவிடாமல் சில நிமிடங்களாவது சிநேகத்தோடு வீட்டு விஷயங்களைப் பேசுவார். உடம்புக்கு என்ன ஆச்சு என்று கனிவோடு விசாரிப்பார். அவரோடு பேச்சுக் கொடுக்கும்போதே எந்த உபாதையாக இருந்தாலும் அது கிட்டத்தட்ட சரியாகிவிட்டது போல் தோன்றும்.

  ‘அதெல்லாம் ஒரு காலம்! இப்போதெல்லாம் அப்படி யார் இருக்கிறார்கள்?’ என்று ஏங்குபவர்களுக்காகவே டாக்டர் வைகுண்டத்தை கற்பனை உலகிலிருந்து எழுந்தருளச் செய்திருக்கிறார் ரகுநாதன் ஜெயராமன். சம்பாதிப்பது அல்ல, சேவையே அவர் நோக்கம். அதுவேதான் அவர் மதிக்கும் தர்மமும்கூட. அவருடைய மிடுக்கு, புத்திசாலித்தனம், சாதுரியம் அனைத்தையும் அவருடைய சிநேகம் விஞ்சிவிடுகிறது.

  நமக்கெல்லாம் மிகவும் நெருக்கமானவராக, நம் குடும்பத்தில் ஒருவராக, ஒரு லட்சிய மருத்துவராக வைகுண்டம் உயர்ந்துவிடுகிறார். இவர் ஏன் நிஜத்தில் வரக்கூடாது என்று நாம் மெய்யாகவே கனவு காண ஆரம்பித்துவிடுகிறோம்.
  மிருதுவான மொழிநடையில் ஓர் அசாதாரணமான உலகைக் கட்டமைத்திருக்கிறார் கதாசிரியர். அந்த உலகை நம்மால் ஒருபோதும் மறக்கமுடியாது.

  or 3 X Rs. 563.33 with Koko Koko
  Read more
 • Out of Stock

  ஷெர்லாக் ஹோம்ஸின் நினைவுக் குறிப்புகள் ( Sherlock Homsin Ninaivuk Kurippukal )

  Rs. 2,640.00
  or 3 X Rs.880.00 with

  சர் ஆர்தர் கோனான் டாயில்

    தமிழில்: குகன்

   

  “The Memories of Sherlock Holmes” ஆங்கில நூலின் தமிழாக்கம்.

   

  சர் ஆர்தர் கோனான் டாயில் திறமையானதொரு கதைசொல்லி. 1881ஆம் ஆண்டு மருத்துவப் பட்டம் பெற்ற இவர், தனது படிப்பு முடிந்த அடுத்த ஆண்டிலேயே “A Study in Scarlet” என்ற முதல் துப்பறியும் நாவலை எழுதினார். இதில்தான், “ஷெர்லாக் ஹோம்ஸ்” என்ற பாத்திரத்தையும், அவருடைய உதவியாராக “வாட்சன்” என்ற பாத்திரத்தையும் இவர் அறிமுகம் செய்தார். அதைத் தொடர்ந்து அந்தப் பாத்திரங்களைக் கொண்டு “The Sign of Four” என்ற நாவலையும் எழுதினார். இதில், ஷெர்லாக் ஹோம்ஸ் என்ற பாத்திரம் வாசகர்களின் கவனத்தை ஈர்க்க, “The Adventures of Sherlock Holmes” என்ற குறுநாவல்களை எழுதினார்.

   

  இதில், வாட்சன் என்ற கதாபாத்திரம் நேரில் கதை சொல்வதுபோல் அனைத்துக் கதைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இன்று வரை பல துப்பறியும் கதைகளுக்கும், கதாபாத்திரங்களுக்கும் ஷெர்லாக் ஹோம்ஸ் பாத்திரப்படைப்புதான் முன்னோடியாக இருக்கிறது. 19ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட கதைகள் என்றாலும், இன்றும்கூட துப்பறியும் கதைகள் வாசிக்க விரும்பும் வாசகர்களுக்கு முதன்மைப் பாத்திரமாக இருப்பது ஷெர்லாக் ஹோம்ஸ்தான்.

  or 3 X Rs. 880.00 with Koko Koko
  Read more
 • Out of Stock

  ஷெர்லாக் ஹோம்ஸின் சாகசக் கதைகள் ( Sherlock Homsin Sagasak Kadhaigal )

  Rs. 2,490.00
  or 3 X Rs.830.00 with

  சர் ஆர்தர் கோனான் டாயில்

    தமிழில்: குகன்

   

  சர் ஆர்தர் கோனான் டாயில் திறமையானதொரு கதைசொல்லி. 1881ஆம் ஆண்டு மருத்துவப் பட்டம் பெற்ற இவர், தனது படிப்பு முடிந்த அடுத்த ஆண்டிலேயே “A Study in Scarlet” என்ற முதல் துப்பறியும் நாவலை எழுதினார். இதில்தான், “ஷெர்லாக் ஹோம்ஸ்” என்ற பாத்திரத்தையும், அவருடைய உதவியாராக “வாட்சன்” என்ற பாத்திரத்தையும் இவர் அறிமுகம் செய்தார். அதைத் தொடர்ந்து அந்தப் பாத்திரங்களைக் கொண்டு “The Sign of Four” என்ற நாவலையும் எழுதினார். இதில், ஷெர்லாக் ஹோம்ஸ் என்ற பாத்திரம் வாசகர்களின் கவனத்தை ஈர்க்க, “The Adventures of Sherlock Holmes” என்ற குறுநாவல்களை எழுதினார்.

   

  இதில், வாட்சன் என்ற கதாபாத்திரம் நேரில் கதை சொல்வதுபோல் அனைத்துக் கதைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இன்று வரை பல துப்பறியும் கதைகளுக்கும், கதாபாத்திரங்களுக்கும் ஷெர்லாக் ஹோம்ஸ் பாத்திரப்படைப்புதான் முன்னோடியாக இருக்கிறது. 19ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட கதைகள் என்றாலும், இன்றும்கூட துப்பறியும் கதைகள் வாசிக்க விரும்பும் வாசகர்களுக்கு முதன்மைப் பாத்திரமாக இருப்பது ஷெர்லாக் ஹோம்ஸ்தான். ‘RAW : இந்திய உளவுத்துறை எவ்வாறு இயங்குகிறது?’, ‘C.B.I : ஊழலுக்கு எதிரான முதல் அமைப்பு’, ‘உளவு ராணிகள்’, ‘இனப்படுகொலைகள்’ போன்ற நூல்கள் எழுதிய எழுத்தாளர் குகன், “The Adventures of Sherlock Holmes” நூலை தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார்.

  or 3 X Rs. 830.00 with Koko Koko
  Read more
 • Out of Stock

  ரோமியோ & ஜூலியட் ( Romeo & Juliet )

  Rs. 1,190.00
  or 3 X Rs.396.67 with

  வில்லியம் ஷேக்ஸ்பியர்

   

  காதல் இன் நஞ்சு.

  வன் அமுதம்.

  பருவப் பயிருக்குப்

  புத்தூட்டம் அளிக்கும் எரு!

  கண்மூடித்தனங்களால்

  நிறைந்த கனவு.

  இளமையின் கொடை!

  ரோமியோ – ஜூலியட்டின்

  காதல் நூற்றாண்டுகளாகத் தீராமல்

  வளர்ந்துகொண்டிருப்பது,

  அது நம்முள் இருக்கும்

  இளமையாற்றலின் பிரதிபலிப்பு

  என்பதால்தான்!

  or 3 X Rs. 396.67 with Koko Koko
  Read more
 • Out of Stock

  வில்லியம் ஷேக்ஸ்பியர் கதைகள் ( Shakespeare Kathaigal )

  Rs. 660.00
  or 3 X Rs.220.00 with

  வில்லியம் ஷேக்ஸ்பியர்

   

   

  or 3 X Rs. 220.00 with Koko Koko
  Read more