Opening Possibilities, Illuminating Potentials
Delivery in 1-5 business days. Island-wide Free Delivery for Purchase of Rs. 3990 or above.

Cart

Your Cart is Empty

Back To Shop
Contact Us 0764980321

Category: ஹிந்து மதம்

Showing all 3 results

  • Out of Stock

    ராமாயணம் (Sri Rama Lila)

    Rs. 1,790.00
    or 3 X Rs.596.67 with

    வனமாலி 
    நாகலட்சுமி சண்முகம்

     

    மனித பரிபூரணத்தின் உச்சமாக பூமியில் அவதரித்த விஷ்ணுவின் ஏழாவது அவதாரமான ராமரின் கதை. வனமாலி ஆசிரமம், காலத்தால் அழியாத புராணமான ஸ்ரீ ராம லீலாவைப் படிக்கும் பண்டைய பாரம்பரியத்தைத் தொடர்கிறது. ஆழ்ந்த பக்தியுடன் எழுதப்பட்ட இந்நூல், வாசகர்களை கண்ணீரை வரவழைத்து, பக்தியைத் தூண்டுகிறது. ஒவ்வொரு காண்டத்தின் முடிவிலும் யோகா வசிஷ்ட வசனங்கள் ஓதப்பட்டு, ஆழ்ந்த ஆன்மீக ஞானத்தை வழங்குகின்றன. ஸ்ரீ ராம லீலாவைப் படிப்பவர்களுக்கு வளமான கதைசொல்லல் மற்றும் ஆன்மீக நுண்ணறிவு ஆகியவற்றின் மாற்றத்தக்க அனுபவம் காத்திருக்கிறது.

    or 3 X Rs. 596.67 with Koko Koko
    Read more
  • Out of Stock

    மகாபாரதம் (ராஜாஜி) ( Mahabaratham )

    Rs. 1,650.00
    or 3 X Rs.550.00 with

    வியாச முனிவர்

     

    மகாபாரதம் பாரதத்தின் இரண்டு இதிகாசங்களுள் ஒன்றாகும். மற்றது இராமாயணம் ஆகும். வியாச முனிவர் சொல்ல விநாயகர் எழுதியதாக மகாபாரதம் கூறுகிறது. இது சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்டுள்ளது. இந்தியத் துணைக்கண்டப் பண்பாட்டைப் பொறுத்தவரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த இதிகாசம் இந்து சமயத்தின் முக்கியமான நூல்களில் ஒன்று. அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்னும் மனிதனுடைய நால்வகை நோக்கங்களையும், சமூகத்துடனும், உலகத்துடனும் தனிப்பட்டவருக்கு உரிய உறவுகளையும், பழவினைகள் பற்றியும் இது விளக்க முற்படுகின்றது.

     

    இது 74,000க்கு மேற்பட்ட பாடல் அடிகளையும், நீளமான உரைநடைப் பத்திகளையும் கொண்டு விளங்கும் இந்த ஆக்கத்தில் 18 இலட்சம் சொற்கள் காணப்படுகின்றன. இதனால் இது உலகின் மிக நீண்ட இதிகாசங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது இலியட், ஒடிஸ்சி ஆகிய இரண்டு இதிகாசங்களும் சேர்ந்த அளவிலும் 10 மடங்கு பெரியது. தாந்தே எழுதிய தெய்வீக நகைச்சுவை (Divine Comedy) என்னும் நூலிலும் ஐந்து மடங்கும், இராமாயணத்திலும் நான்கு மடங்கும் இது நீளமானது. நவீன இந்து சமயத்தின் முக்கிய நூல்களிலொன்றான பகவத் கீதையும் இந்த இதிகாசத்தின் ஒரு பகுதியே. பாண்டு, திருதராட்டிரன் என்னும் இரு சகோதரர்களின் பிள்ளைகளிடையே இடம் பெற்ற பெரிய போரை மையமாக வைத்து உருவாக்கப்பட்டதே இந்தக் காப்பியமாகும். இதனைத் தமிழில் இலக்கியமாகப் படைத்தவர் வில்லிபுத்தூரார் ஆவார். பாரதியார் மகாபாரதத்தின் ஒரு பகுதியை பாஞ்சாலி சபதம் எனும் பெயரில் இயற்றினார். வியாசர் விருந்து என்ற பெயரில் இராஜகோபாலாச்சாரி அவர்கள் மகாபாரதத்தினை உரைநடையாக இயற்றியுள்ளார்

    or 3 X Rs. 550.00 with Koko Koko
    Read more
  • Out of Stock

    அர்த்தமுள்ள இந்துமதம் ( Arthamulla Indumatham )

    Rs. 4,390.00
    or 3 X Rs.1,463.33 with

    கண்ணதாசன்

     

    அர்த்தமுள்ள இந்து மதம் என்பது கவிஞர் கண்ணதாசன் இந்து சமயத்தின் பல்வேறு தத்துவங்களையும், அத் தத்துவங்களில் பொதிந்துள்ள ஆழமான கருத்துக்களையும் கொண்டு எழுதிய ஒரு சமய நூல். தினமணிக் கதிர் இதழில் ஒராண்டுக் காலம் தொடராக வெளிவந்த கட்டுரைகள் தொகுக்கப்பட்டு வானதி பதிப்பகம் மூலம் நூலாக வெளியிடப்பட்டது. பத்து பாகங்களாகத் தனித்தனிப் புத்தகங்களாக வெளியிடப்பட்ட இந்த நூலை 2009 ஆம் ஆண்டில் ஒரே நூலாகத் தொகுத்து கண்ணதாசன் பதிப்பகம் வெளியிட்டது.

    or 3 X Rs. 1,463.33 with Koko Koko
    Read more