Category
- University Magazines
- சிறுவர்களுக்கான புத்தகங்கள்
- Children Books
- English Books
- Book Bundles
- Current Affairs
- Military & Intelligence
- Short Stories
- Fiction
- Poetry
- Environment & Nature
- Science
- Medicine
- Linguistics
- Atheism & Agnosticism
- (Auto)Biography & Memoir
- Business & Management
- Creativity
- Economics
- Education & Research
- Health & Nutrition
- History
- Humor
- Love & Relationships
- Parenting
- Personal Development
- Personal Finance
- Philosophy
- Politics
- War
- Psychology
- Religion & Spirituality
- Society & Culture
- Sports
- Travel & Adventure
- Technology & the Future
- True Crime
- Women Empowerment
- தமிழ் Books
- Book Bundles ( தமிழ் )
- சட்டம்
- இயற்கை
- கட்டுரை
- கணிதம்
- பயணக்குறிப்புகள்
- விவசாயம்
- அரசியல்
- ஆரோக்கியம்
- உளவியல்
- புனைவு
- காதல் மற்றும் உறவு
- சமூகவியல்
- சுயசரிதைகள் மற்றும் நினைவுகள்
- சுயமுன்னேற்றம்
- தத்துவஞானம்
- தொழில்நுட்பம் & எதிர்காலம்
- பொருளாதாரம்
- போர்
- பணம்
- மதம் & ஆன்மீகம்
- வணிகம் & மேலாண்மை
- வரலாறு
- விஞ்ஞானம் & பிரபல அறிவியல்
- விளையாட்டு
- சினிமா
- கவிதைகள்
- குழந்தை வளர்ப்பு
- குற்றம்
- மருத்துவம்
- மொழி
Product categories
- Children Books
- English Books
- (Auto)Biography & Memoir
- Atheism & Agnosticism
- Book Bundles
- Business & Management
- Creativity
- Current Affairs
- Economics
- Education & Research
- Environment & Nature
- Fiction
- Health & Nutrition
- History
- Humor
- Linguistics
- Love & Relationships
- Medicine
- Military & Intelligence
- Parenting
- Personal Development
- Personal Finance
- Philosophy
- Poetry
- Politics
- Psychology
- Religion & Spirituality
- Science
- Short Stories
- Society & Culture
- Sports
- Technology & the Future
- Travel & Adventure
- True Crime
- War
- Women Empowerment
- University Magazines
- சிறுவர்களுக்கான புத்தகங்கள்
- தமிழ் Books
- Book Bundles ( தமிழ் )
- அரசியல்
- ஆரோக்கியம்
- இயற்கை
- உளவியல்
- கட்டுரை
- கணிதம்
- கவிதைகள்
- காதல் மற்றும் உறவு
- குற்றம்
- குழந்தை வளர்ப்பு
- சட்டம்
- சமூகவியல்
- சினிமா
- சுயசரிதைகள் மற்றும் நினைவுகள்
- சுயமுன்னேற்றம்
- தத்துவஞானம்
- தொழில்நுட்பம் & எதிர்காலம்
- பணம்
- பயணக்குறிப்புகள்
- புனைவு
- பொருளாதாரம்
- போர்
- மதம் & ஆன்மீகம்
- மருத்துவம்
- மொழி
- வணிகம் & மேலாண்மை
- வரலாறு
- விஞ்ஞானம் & பிரபல அறிவியல்
- விளையாட்டு
- விவசாயம்
Category: தொழில் மற்றும் வெற்றி
Showing all 41 results
-
இலக்குகள்! ( Ilakkugal )
Rs. 2,690.00or 3 X Rs.896.67 withAdd to cartபிரையன் டிரேசி
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
பெரும்பாலானோருக்கு, தாங்கள் குறி வைக்கும் இலக்குகள் வெறும் கனவாகவே இருந்துவிடும்போது, ஒரு சிலரால் மட்டும் தாங்கள் தேர்ந்தெடுக்கும் இலக்குகள் அனைத்தையும் எப்படி அடைந்துவிட முடிகிறது? இதற்கான விடை ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது என்கிறார் பிரையன் டிரேசி. ஒருசில வெற்றியாளர்களுக்கு மட்டுமே தெரிந்திருந்த அந்த ரகசியங்களை இப்புத்தகத்தில் அவர் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.
இருபதாண்டுகால அனுபவத்தையும் நாற்பதாண்டுகால ஆராய்ச்சிகளையும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள இப்புத்தகம், இலக்குகளை நிர்ணாயிக்கவும் அவற்றை அடையவும் தேவையான, நடைமுறைக்கு உகந்த, நிரூபணமான உத்திகளைத் தெள்ளத்தெளிவாக எடுத்துரைக்கிறது. இப்புத்தகத்தினால் இதுவரை பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் பயனடைந்துள்ள்னர்.
எந்தவிதமான இலக்குகளாக இருந்தாலும் சரி, அவற்றை அடையத் தேவையான 12 அம்சத் திட்டம் ஒன்றை பிரையன் டிரேசி இந்நூலில் முன்வைக்கிறார். ஒருவருடைய வலிமைகளை எவ்வாறு அடையாளம் காண்பது, சுயமதிப்பையும் சுயதுணிச்சலையும் எவ்வாறு வளர்த்தெடுப்பது, எதிர்ப்படும் தடைகற்களை எவ்வாறு தகர்த்தெறிவது, சவால்களை எவ்வாறு எதிர்கொள்வது போன்றவற்றை அவர் இப்புத்தகத்தில் அறிவியற்பூர்வமான கண்ணோட்டத்துடன் அணுகுகிறார்.
இலக்குகள் குறித்து இனி நீங்கள் வேறு ஒரு புத்தகத்தைத் தேடி அலைய வேண்டியதில்லை.
-
நந்தன் நிலேகனி: இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையின் பிராண்ட் அம்பாசிடர்
Rs. 690.00Rs. 550.00or 3 X Rs.183.33 withAdd to cartராஜீவ் திவாரி
Infosys நிறுவனத்துடனான நந்தன் நிலேகனியின் பயணம் 1978 இல் தொடங்கியது, Infosys உருவாவதற்கு முன்பே, அவர் IIT பாம்பேயில் பட்டம் பெற்ற பிறகு Patni Computers சேர்ந்து N.R. கீழ் பணியாற்றத் தொடங்கினார். நாராயண மூர்த்தி. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, ஜூலை 2, 1981 இல், Infosys மூர்த்தி மற்றும் பிற இணை நிறுவனர்களான எஸ். கோபாலகிருஷ்ணன், கே.தினேஷ், என்.எஸ்.ராகவன், என்.எம்.நீலேகனி மற்றும் எஸ்.டி.ஷிபுலால். மூர்த்தி தனது மனைவியிடமிருந்து ரூ.10,000 கடன் வாங்கி, 1980கள் மற்றும் 1990களில் Infosys உருவாக்க குழு கடுமையாக உழைத்தது.
Infosys தலைமை அலுவலகம் பெங்களூரில் உள்ளது. இது IT மற்றும் BPO சேவைகளில் நிபுணத்துவம் பெற்றது. இது உலகம் முழுவதும் இத்தகைய சேவைகளை வழங்குகிறது மற்றும் 58,000 பணியாளர்களைக் கொண்டுள்ளது. இதன் ஆண்டு வருமானம் $2 பில்லியன் மற்றும் சந்தை மூலதனம் $21 பில்லியன். நந்தன் நிலேகனி நாராயண மூர்த்தியுடன் இணைந்து Infosys நிறுவனத்தை 1981 இல் தொடங்கினார். அவர் மார்ச் 2002 இல் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்படும் வரை நிறுவனத்தில் பல பதவிகளை வகித்துள்ளார்.
-
குழுவில் சிறப்பாகச் செயல்பட 17 முக்கியப் பண்புகள்
Rs. 1,950.00or 3 X Rs.650.00 withAdd to cartஜான் சி. மேக்ஸ்வெல்
தமிழில்: பொன். சின்னத்தம்பி முருகேசன்
எவரொருவரும் எந்தவொரு குழவிலும் சிறப்பாகச் செயல்பட, தனிப்பட்ட முறையில் தன்னிடம் கொண்டிருக்க வேண்டிய 17 முக்கியப் பண்புகளைப் பற்றி ஜான் மேக்ஸ்வெல் இப்புத்தகத்தில் எடுத்துரைக்கிறார். அவரது விரிவான விளக்கங்களும் எளிய உதாரணங்களும் சுலபமாகப் புரிந்து கொள்ளக் கூடியவை. குடும்பம், அலுவலகம், விளையாட்டு அணி போன்ற எல்லா இடங்களிலும் அவை பொருந்தும் என்பது அவற்றின் சிறப்பு.
- குழுவில் இடம்பெற்றிருக்கும் எவரொருவருக்கும் அடுக்கடுக்காக வெற்றிகளை ஈட்டித்தரவல்ல பண்புநலன்களில் சில:
- தெளிந்த நோக்குடன் இயங்குதல்: எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் இலக்கு நோக்கியே இருத்தல்
- அரவணைத்துச் செல்லுதல்: பிறருடைய நலனில் கருத்தூன்றிச் செயல்படுதல்
- தன்னலமின்றிச் செயலாற்றுதல்: குழுவின் நலனுக்காக எந்த
வேலையையும் விருப்பத்துடன் ஏற்றுக்கொள்ளுதல் தளராத உறுதியுடன் இருத்தல்: பின்னடைவுகளை எதிர்கொள்ளும்போதும் நன்னம்பிக்கையுடன் கடினமாக உழைத்தல் .
இத்தகையப் பண்புநலன்கள் குழு உறுப்பினர்கள் மீதும் குழுவின் வெற்றிமீதும் எத்தகையத் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை மேக்ஸ்வெல் இங்கு சித்தரித்துக் காட்டுகிறார். குழுவில் சிறப்பாகச் செயல்பட 17 முக்கியப் பண்புகள் எனும் இந்நூல் ஏதோ போகிற போக்கில் அறிவுரைகள் அள்ளித் தெளிக்கும் விதத்திலோ, வறட்டுச் சிந்தனையின் வடிவமாகவோ அமையவில்லை; மாறாக, இது குழுநலனை முன்னிறுத்தும் குழு உறுப்பினர்களின் மதிப்பை மேம்படுத்த வடிவமைக்கப்பட்ட வலிமையிக்கச் செயல்பாடுகளை விவரிக்கின்றது.
-
சிந்தனையை மாற்றுங்கள் வாழ்க்கையை மாற்றுங்கள்
Rs. 3,190.00or 3 X Rs.1,063.33 withAdd to cartபிரையன் டிரேசி
தமிழில்: சி. ஆர். ரவீந்திரன்
உங்களுடைய எதிர்காலத்திற்கு உரிய வரைப்படத்தை உங்களுக்கு முன்னால் வைத்திருக்கிறீர்கள். வியக்கத் தகுந்த உங்களுடைய எதிர்காலத்தை நீங்களாகவே உருவாக்கிக் கொள்ள நீங்கள் செய்ய வேண்டியவை இவைதான். இந்தப் புத்தகத்தை நீங்கள் படிக்க வேண்டும். உங்களுடைய சொந்த வாழ்க்கையில் அதை எப்படிப் பயன்படுத்துவது என்பதை நீங்கள் முடிவு செய்ய வேண்டும். அதற்கு இந்த புத்தகம் உறுதுணையாக இருக்கும்.
உங்களைப் பற்றியும், உங்களுடைய ஆற்றலைப் பற்றியும் நீங்கள் கொண்டிருக்கும் சிந்தனைகளைப் படிப்படியாக மாற்றி, அதன் மூலம் உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் மாபெரும் வெற்றி பெறுவது எப்படி என்பதை இப்புத்தகம் விளக்குகிற்து. நீங்கள் உங்களுக்காக நிர்ணயித்துக் கொள்ளும் இலக்கு எதுவானலும் அதை அடைய இந்த புத்தகம் வழிவகுக்கும்.
-
பெருங்கனவு காணத் துணியுங்கள்! ( Perung Kanavu Kaana Thuniyungal )
Rs. 1,950.00or 3 X Rs.650.00 withAdd to cartஅங்குர் வாரிக்கூ
அங்குர் வாரிக்கூ தன்னுடைய முதல் நூலில், தன்னுடைய பயணத்திற்கு உந்துசக்தியாக விளங்கிய முக்கிய யோசனைகளைத் தொகுத்து வழங்கியுள்ளார். அவர் ஒரு விண்வெளிப் பொறியாளராக ஆக விரும்பியதில் தொடங்கிய அவருடைய பயணம், இலட்சக்கணக்கானவர்கள் இணையத்தில் பார்த்தும் படித்தும் உள்ள பல்வேறு படைப்புகளை உருவாக்குவதில் முடிந்தது.
நீண்டகால வெற்றிக்குத் தேவையான பழக்கங்களை உருவாக்குவதன் முக்கியத்துவத்தில் தொடங்கி, நிதி நிர்வாகத்திற்கான அடித்தளம்வரையும், தோல்வியை ஆரத் தழுவிக் கொள்வது மற்றும் ஏற்றுக் கொள்வதில் தொடங்கி, பச்சாதாபத்தைக் கற்றுக் கொள்வதைப் பற்றிய உண்மைவரையும் அவருடைய சிந்தனை பரந்துபட்டதாக இருக்கிறது.
இப்புத்தகம் நீங்கள் மீண்டும் மீண்டும் வாசிக்க வேண்டிய ஒன்று. இதிலுள்ள வரிகளை நீங்கள் அடிக்கோடிட்டுக் கொண்டு பின்னர் மீண்டும் மீண்டும் அவற்றைப் பற்றிச் சிந்தித்துப் பார்ப்பீர்கள். நீங்கள் உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் அந்நியர்களுக்கும் கொடுக்கப் போகின்ற ஒரு புத்தகம் இது. மிக அதிகமாகப் பரிசளிக்கப்பட்டப் புத்தகமாக இப்புத்தகம் உருவெடுக்க வேண்டும் என்பது அங்குரின் விருப்பமாகும்.
-
மக்களைக் கையாளும்போது தன்னம்பிக்கையுடனும் திறமையுடனும் செயல்படுவது எப்படி
Rs. 2,690.00or 3 X Rs.896.67 withAdd to cartலெஸ் ஜிப்லின்
இது லெஸ் கிப்லின் அவர்களின் மக்களுடன் எவ்வாறு நம்பிக்கை மற்றும் சக்தியைக் கையாள்வது என்பதன் தமிழாக்கம். இந்த புத்தகத்தில், மனித உறவுகள் துறையில் அங்கீகரிக்கப்பட்ட நிபுணரான ஆசிரியர், மனித நடத்தைக்கு பின்னால் உள்ள அடிப்படைக் கொள்கைகளை தெளிவாக விளக்குகிறார். தனிநபர்கள் தங்களுக்குச் சாதகமாகச் செயல்படும் நேர்மறையான முடிவுகளுக்கு எவ்வாறு தொடர்பு கொள்ளலாம் என்பதை அவர் விவரிக்கிறார். ஒரு நல்ல முதல் தோற்றத்தை ஏற்படுத்துவதற்கும், கேட்கும் மற்றும் பேசும் திறன்களை மேம்படுத்துவதற்கும், மற்றவர்களை பாதிக்கும் வகையில், மக்களை வெற்றிகரமாக நிர்வகிப்பதற்கும் நேரத்தைச் சோதனைக்குட்பட்ட நுட்பங்கள் மற்றும் உத்திகளைக் கற்றுக்கொள்ள இந்தப் புத்தகம் உதவும்.
-
கருமமே கண்ணாக! (Karumame Kannaaha!)
Rs. 2,290.00or 3 X Rs.763.33 withAdd to cartகால் நியூபோர்ட்
தமிழில்: PSV குமாரசாமி
“ஆழ்ந்த கவனம் செலுத்தும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டியது ஏன் முக்கியம் என்பதைத் தக்கக் காரணங்களுடன் எடுத்துரைக்கின்ற இந்நூல், உடனடியாக நடைமுறையில் செயல்படுத்தத்தக்க அறிவுறுத்தல்களை வழங்குகிறது.”
–ஆடம் எம். கிரான்ட், ‘ஒரிஜினல்ஸ்’ நூலின் ஆசிரியர்‘கருமமே கண்ணாக’ என்பது அறிவைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட வேண்டிய ஒரு கடினமான வேலையை, எந்த கவனச்சிதறலுக்கும் ஆளாகாமல் ஒருமித்த கவனக்குவிப்புடன் மேற்கொள்வதற்கான திறனாகும். கருமமே கண்ணாகச் செயல்படுவது நீங்கள் செய்கின்ற எந்தவொரு வேலையிலும் நீங்கள் சிறப்புற உதவும், குறைவான நேரத்தில் நீங்கள் அதிகமானவற்றைச் சாதிக்க வழி வகுக்கும், ஒரு திறமையில் மேதமை பெறுவதிலிருந்து வரக்கூடிய உண்மையான மனநிறைவை உங்களுக்கு வழங்கும். சுருக்கமாகக் கூறினால், ஒருமித்த கவனம் செலுத்தக்கூடிய திறன் என்பது, போட்டிகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கின்ற இன்றைய உலகில் சர்வ வல்லமை வாய்ந்த ஓர் ஆயுதத்தைப் போன்றது.
ஆனாலும், இரைச்சல்மிக்க அலுவலகங்களில் பணியாற்றுகின்ற அறிவுசார் ஊழியர்களாக இருந்தாலும் சரி, தங்களுடைய முன்னோக்கைக் கூர்தீட்டிக் கொள்ளப் போராடிக் கொண்டிருக்கின்ற படைப்பாளிகளாக இருந்தாலும் சரி, பெரும்பாலான மக்கள், ஆழ்ந்த கவனத்துடன் வேலை செய்வதற்கான திறனை இழந்துள்ளனர். மாறாக, மின்னஞ்சல்களிலும் சமூக ஊடகங்களிலும் அவர்கள் தங்களுடைய நாட்களைத் தொலைத்துக் கொண்டிருக்கின்றனர் – இதைவிடச் சிறந்த வழி ஒன்று இருக்கிறது என்பதை உணராமல்!
கலாச்சார விமர்சனங்களையும் நடைமுறையில் செயல்படுத்தப்படக்கூடிய அறிவுரைகளையும் உள்ளடக்கிய இந்நூல், கவனச்சிதறலுக்கு உள்ளான ஓர் உலகில் ஒருமித்த கவனத்துடன் வெற்றி பெறுவதற்கான வழியைத் தேடிக் கொண்டிருக்கின்ற எவரொருவருக்கும் வழி காட்டும்.
-
TCS: ஒரு வெற்றிக் கதை
Rs. 3,690.00or 3 X Rs.1,230.00 withRead moreஎஸ். ராமதுரை
கி. இராமன்ஒரு நிறுவனத்தை மாபெரும் நிறுவனமாக மாற்றுவது எப்படி? ஓர் எளிய கனவைப் பெருங்கனவாக வளர்த்தெடுப்பது எப்படி? தகவல் தொழில்நுட்பத் துறையில் முன்நிலை வகிக்கும் நிறுவனங்களில் ஒன்றாக டி.சி.எஸ் வளர்ந்த கதையை அதைச் சாத்தியப்படுத்திய ஒருவரே நேரடியாக நம்மோடு இதில் பகிர்ந்துகொள்கிறார். டாப் டென் நிறுவனங்களில் ஒன்றாக மாறவேண்டும் என்பது டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் நிறுவனத்தின் ஆரம்பகாலக் கனவு. அதை அடைவதற்கு ஒரு காலக்கெடுவையும் அவர்கள் நிர்ணயித்தார்கள்.
ஆனால் அதற்கு ஒரு வருடம் முன்பாக, அதாவது 2009ஆம் ஆண்டில் கனவு நிறைவேறிவிட்டது. இந்த அதிசயத்துக்குப் பின்னாலிருப்பவர் டி.சி.எஸ் தலைமைச் செயல் அதிகாரியான எஸ்.ராமதுரை. அவர் பொறுப்புக்கு வந்தபோது நிறுவனத்தின் ஆண்டு வருமானம் 155 மில்லியன் டாலர். இன்று 42 நாடுகளில் கிளைகள் படர்ந்துள்ளன. 5 லட்சத்துக்கும் மேலானவர்கள் பணிபுரிகிறார்கள்.
வருடாந்தர வருமானம் 22 பில்லியன் டாலருக்கும் மேல்.டி.சி.எஸ் நிறுவனத்தின் வரலாறென்பது நவீன இந்தியாவின் மகத்தான வெற்றிக் கதைகளில் ஒன்று. மிகவும் மதிக்கப்படும் வணிகத் துறைத் தலைவர்களில் ஒருவரான எஸ்.ராமதுரை இந்தப் புத்தகத்தில் அந்த அசாதாரண வெற்றியை எட்டிப்பிடித்த கதையை விரிவாக நினைவுகூர்ந்திருக்கிறார்.
-
வென்றே தீருவோம்: சாதனையாளர்களின் வெற்றி ரகசியங்கள் ( Vendre Theervom )
Rs. 3,190.00or 3 X Rs.1,063.33 withRead moreரெய்னர் ஸிட்டல்மன்
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
சாதனையாளர்களின் வெற்றி ரகசியங்கள்
ஆஸ்திரிய நாட்டில் ஒரு சாதாரண போலீஸ்காரருக்கு மகனாகப் பிறந்த அர்னால்டு, ஹாலிவுட்டில் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் சூப்பர் ஸ்டாராக உயர்ந்தார். கலிபோர்னியா மாநில கவர்னராகவும் ஆனார்.
ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ், மைக்ரோசாப்டின் பில்கேட்ஸ் உலகப் பெரும் பணக்காரர்களாக உயர்ந்தது எப்படி?
இந்த வெற்றி ரகசியங்களைப் பற்றி ரெய்னர் சிட்டல்மன் ஆங்கிலத்தில் எழுதிய புத்தகம் உலகப் புகழ் பெற்றது. அதை வென்றே தீருவோம் என்ற பெயரில், தமிழில் மொழிபெயர்த்துள்ளார் நாகலட்சுமி சண்முகம்.
வாழ்க்கையில் முன்னேற வேண்டும், வெற்றிச்சிகரத்தை அடையவேண்டும் என்று நினைப்பவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம்.
-
SONY நிறுவனம் வளர்ந்த கதை நிறுவனர் அகியோ மொரிடாவின் சுயசரிதம் ( Sony Niruvanam Vazharntha Kathai )
Rs. 1,090.00or 3 X Rs.363.33 withRead moreஅகியா மொரிடா
இரண்டாம் உலகப்போரினால் உருத்தெரியாமல் சிதைந்துபோன ஒரு தேசம் ஜப்பான். உலகநாடுகளில் அது புரிந்த அட்டூழியங்களுக்கு அமெரிக்கா அணுகுண்டுகள் மூலம் பதிலடி கொடுத்தபோது இனி பல தலைமுறைகளுக்கு அந்த தேசம் தலையெடுக்க முடியாது என்றுதான் உலகம் எண்ணியது. ஆனால் போரில் தோற்றாலும் பொருளாதாரத்தில் தோற்க விரும்பாத ஜப்பானியர்கள் தன்னம்பிக்கையையும் உழைப்பையும் உரமாக விதைத்தனர் ஜப்பானிய மண்ணில் ஒருசில தலைவர்கள் மட்டுமல்ல ஒரு தேசமே தன்னம்பிக்கையோடு எழுந்து நின்று போர் முனையில் காட்டிய வேகத்தை நாட்டை மறுசீரமைப்பதிலும் காட்டினார்கள் விளைவு 30 ஆண்டுகளுக்குள் அமெரிக்காவுக்கு நிகரான பொருளியல் வல்லரசாக உருவெடுத்தது ஜப்பான்.அந்த அதியசத்துக்கு வித்திட்டவர்கள் பலர் இருந்தாலும் ஒருவரின் பெயரை ஜப்பானிய வரலாறு மட்டுமல்ல உலக வரலாறும் என்றென்றும் போற்றும்.
Made in japan என்ற வாசகத்தை தாங்கி வரும் எந்த பொருளையும் கண்ணை மூடிக்கொண்டு வாங்கும் அளவுக்கு உலக மக்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள் என்றால் அதற்கு முழுமுதற் காரணம் அந்த தொழில் பிரம்மா. அவர்தான் தரக்கட்டுப்பாடு என்ற தாரகமந்திரத்தையும் SONY என்ற புகழ்பெற்ற நிறுவனத்தையும் உலகுக்கு தந்த ஜப்பானிய தொழில் முனைவர் அக்யோ மொரிட்டா.சிதைந்துபோன ஜப்பானை சீர்தூக்கிவிட உதவிய அந்த தொழில்பிதாமகனின் தன்முனைப்பூட்டும் கதையை தெரிந்துகொள்வோம்.
-
சாக்குப்போக்குகளை விட்டொழியுங்கள்! சுயஒழுங்கின் வியத்தகு சக்தி ( Saakupokugalai Vittoliyungal )
Rs. 2,590.00or 3 X Rs.863.33 withRead moreபிரையன் டிரேசி
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
நிரந்தர மகிழ்ச்சியையும் வெற்றியையும் அடைய 21 வழிகள்.
அதிர்ஷ்டத்தாலோ அல்லது அசாதாரணமான திறமையாலோ மட்டுமே வெற்றியை அடைய முடியுமென்று பெரும்பாலான மக்கள் நினைக்கின்றனர். ஆனால் பெரும் சாதனையாளர்கள் பலர் வெற்றியை அடைவதற்கு மிகச் சாதாரணமான ஒரு கருவியைத்தான் உபயோகித்துள்ளனர். அதுதான் சுயஒழுங்கு.
-
விற்பனைத்துறையில் அதலபாதாளத்தில் இருந்து வெற்றிச் சிகரத்திற்கு என்னை நான் உயர்த்திக் கொண்டது எப்படி (vitpanai thuraiyil adhalapaadhalathil irundhu vetri shiharathitku ennai uyarthikondadhu eppadi)
Rs. 1,490.00or 3 X Rs.496.67 withRead moreஃபிராங்க் பெட்ஜர்
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
“நான் இதுவரை படித்தப் புத்தகங்களிலேயே விற்பனைத்திறம் பற்றி எழுதப்பட்டுள்ள மிகவும் உதவிகரமான, உங்களை அபாரமாக ஊக்குவிக்கக்கூடிய தலைசிறந்த புத்தகம் இதுதான்.” – டேல் கார்னகி, ‘நண்பர்களை வெற்றி கொள்வதும் மற்றவர்களைக் கவர்ந்திழுப்பதும் எப்படி‘ என்ற நூலின் ஆசிரியர்
“இப்புத்தகம் எனக்குச் செய்துள்ள உபகாரங்களை அளவிட முடியாது. வெற்றிகரமாகத் திகழ வேண்டும் என்று விரும்புகின்ற எவரொருவரும் படித்தாக வேண்டிய ஒரு புத்தகம் இது.” –நார்மன் வின்சென்ட் பீல், ‘நேர்மறைச் சிந்தனையின் வியத்தகு சக்தி‘ என்ற நூலின் ஆசிரியர்
இப்புத்தகம் உங்களுக்கு இவற்றைக் கற்றுக் கொடுக்கும்:
- உற்சாகத்தின் சக்தியால் எவற்றையெல்லாம் சாதிக்கலாம்
- பயத்தை எவ்வாறு வெற்றி கொள்வது
- உங்களது பொருட்களை சந்தேகக் கண்ணோடு பார்க்கும் வாடிக்கையாளரை உத்வேகத்துடன் வாங்க வைப்பது எப்படி
- வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை விரைவாகப் பெறுவது எப்படி
- ஒரு விற்பனையைச் சுருக்கமாக முடிப்பது எப்படி
-
வருங்காலம் இவர்கள் கையில் / Varungkaalam Ivargal Kaiyil
Rs. 820.00or 3 X Rs.273.33 withRead moreஎன்.சொக்கன்
அதிக முதலீடு இன்றி பெரும் செல்வம் ஈட்டிய ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களின் உத்வேகமூட்டும் வெற்றிக் கதைகள்.
அட, புதுமையாக இருக்கிறதே என்று மற்றவர்களை வியக்க வைக்கும் ஒரு யோசனை.
அந்த யோசனையைச் செயல்படுத்தத் தேவையான உழைப்பு.
இந்த இரண்டு மட்டும் இருந்தால் போதும். Uber, Snapchat, DropBox, Spotify என்று இந்தப் புத்தகம் எடுத்துக் காட்டும் வெற்றிகரமான உதாரணங்கள் பல இந்த இரண்டின் கலவையால் மட்டுமே சாத்தியமாகி இருக்கின்றன.
பதினைந்துக்கும் மேற்பட்ட ஆச்சரியமூட்டும் வெற்றிக் கதைகளை என்.சொக்கன் இந்நூலில் நமக்காகப் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.
அவற்றிலிருந்து திரட்டிக்கொண்ட பாடங்களை வைத்து நம்மாலும் பல வெற்றிகரமான நிறுவனங்களை உருவாக்கிக்காட்ட முடியும்.
-
தலைமைப் பண்பு பற்றிய மெய்யறிவு ( Thalaimai Panbu Pattriya Meyyarivu )
Rs. 2,490.00or 3 X Rs.830.00 withRead moreராபின் ஷர்மா
தமிழில்: அ. ராஜமோகன்
“இந்த ஆண்டின் மிகச் சிறந்த வியாபார நுணுக்கம் நிறைந்த நூல்.” -ப்ராஃபிட் மேகஸின்
‘கருத்துக்கள் செறிந்தது, படிக்க எளிதானது, பெரிதும் பயனுள்ளது. நாங்கள் எங்கள் மேலாண்மை தொடர்பான அணியினருக்கும் அங்காடியை நடத்துபவர்களுக்கும் விநியோகம் செய்துள்ளோம். அவர்களிடமிருந்து நல்ல வரவேற்பு இருக்கிறது.” – டேவிட் ப்ளூம், தலைமை அதிகாரி, ஷாப்பர்ஸ் டிரக் மார்ட்
“இந்த நூல் மெய்யறிவும் பொது அறிவும் நிறைந்த ஒரு தங்கச் சுரங்கம்”- டீன் லேரி டாப் – ரிச்சர்டு ஐவி ஸ்கூல் ஆஃப் பிசினஸ், யூனிவர்சிட்டி ஆஃப் ஒன்டாரியோ
“வணிகத் துறையில் ஈடுபட்டிருப்பவர்கள், சிறந்த வழியைக் காட்டி பயனுள்ள வாழ்க்கை வாழ்வதற்கு உதவும் நூல்.” -ஜிம் ஓ நீல், டைரக்டர் ஆஃப் ஆப்பரேஷன்ஸ், டிஸ்ட்ரிக்ட் சேல்ஸ் டிவிஷன், லண்டன் லைஃப்
‘தன்னுடைய பொக்கிஷத்தை விற்ற துறவி என்னும் நூலை உருவாக்கியவரிடமிருந்து வந்துள்ள தலைமைப் பண்பு குறித்த மெய்யறிவு என்னும் நூல் மிக அதிகமாக விற்பனையாகும் நூல்களின் பட்டியலில் உயர்ந்த இடத்தை நோக்கிச் செல்கிறது.” –இன்வெஸ்ட்மெண்ட் எக்ஸிகியூட்டிவ்
“துறவி வியாபாரத்தில் சமநிலையுடன் இருப்பது பற்றி வழிகாட்டுகிறார். அவருடைய நூல்கள் பலனளிக்கின்றன.” –டொரான்டோ ஸ்டார்
-
கவலை வேண்டாம் ( Don’t Worry )
Rs. 3,090.00or 3 X Rs.1,030.00 withRead moreஷுன்மியோ மசுனோ
தமிழில்: PSV குமாரசாமி
சில நேரங்களில் நீங்கள் ஒரு விஷயம் குறித்துப் பெரிதும் கவலை அடைந்திருப்பீர்கள். ஆனால் திடீரென்று, அது எவ்வளவு முக்கியத்துவமற்றது என்ற பிரக்ஞை உங்களுக்கு ஏற்படும். அப்போது உங்களுக்கு ஏற்படுகின்ற ஆசுவாச உணர்வைக் கண்டு நீங்களே வியப்பீர்கள். இக்கணத்தில் உங்களுடைய கண்களுக்கு முன்னால் இருக்கின்ற விஷயங்களில் உங்களுடைய கவனத்தைக் குவிப்பதில்தான் சூட்சுமம் இருக்கிறது. அப்படிச் செய்வதன் மூலம், தேவையற்றப் பதற்றத்திலிருந்து உங்களை உங்களால் விடுவித்துக் கொள்ள முடியும்; அதோடு, உங்கள் மனமும் அமைதியடையும்.
இப்புத்தகத்திலிருந்து நீங்கள் கீழ்க்கண்டவற்றைக் கற்றுக் கொள்வீர்கள்:
• ஒப்பிடுவதை நீங்கள் நிறுத்தும்போது, உங்களுடைய மாயைகளில் தொண்ணூறு சதவீதம் மாயமாய் மறைந்துவிடுவதை நீங்கள் காண்பீர்கள்.
• உங்களுடைய உடைமைகளை உதறித் தள்ளுங்கள். அது உங்களுடைய மனத்தையும் உடலையும் லேசாக்கும்.
• அவசர அவசரமாக எதையும் செய்யாதீர்கள். தினமும் ஒரு முறையாவது சிறிது நேரம் அசையாமல் நின்று கொண்டிருங்கள்.
• நேர்மறையாக எதிர்வினையாற்றுங்கள். மகிழ்ச்சியாக இருக்கப் போகிறீர்களா இல்லையா என்பதைத் தீர்மானிக்கப் போவது நீங்கள்தான்.
• தேவையற்றவற்றைத் தேடித் திரியாதீர்கள்.
• போட்டியிலிருந்து தூரச் செல்லுங்கள், எல்லாம் தானாகவே சரியாகும். -
சூப்பர் சேல்ஸ்மேன் ஆவது எப்படி: விற்பனையின் உளவியல்
Rs. 2,590.00or 3 X Rs.863.33 withRead moreபிரயன் டிரேசி
தமிழில்: வானமாமலை
விற்பனை வெற்றிக்கு வழிகாட்டும் 10 முக்கிய குறிப்புகள்
“உங்கள் கனவுகள் வெற்றி பெற வேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்றால் விற்பனை வழிமுறைக்கு பின்புலமான உளவியலைப் புரிந்து கொள்ள வேண்டியது முக்கியமானது. இந்தப் பத்தகம் அந்தப் புரிதலுக்கான திறவுகோல்.”
— டாம் ஹாப்கின்ஸ், ஆசிரியர், ஹவ் டு மாஸ்டர் தி ஆர்ட் ஆஃப் செல்லிங்
எந்தச் சந்தையிலும் உங்களின் விற்னையை இரண்டு அல்லது மூன்று மடங்கு ஆக்குங்கள்.
நீங்கள் முன்னைவிட அதிகமான, துரிதமான மற்றும் எளிதான விற்பனை செய்ய உடனே பயன்படுத்தக்கூடிய யோசனைகள் வழிமுறைகள் மற்றும் உத்திகளை வழங்குவதே இந்நூலின் நோக்கம்.
-
நேரத்தை வெற்றி கொள் (Nerathai Vetrikol)
Rs. 1,650.00or 3 X Rs.550.00 withRead moreமேச்சன் மெக்டொனால்டு
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
“வாசகர்கள் தங்கள் நேரத்தை ஒழுங்கமைத்து, செயல்பாடுகளை அவற்றின் முக்கியத்துவத்திற்கேற்ப வரிசைப்படுத்தி, வேலை, வீடு மற்றும் சமுதாயம் என்று தங்கள் வாழ்வின் ஒவ்வொரு தளத்திலும் சிறந்த பலன்களைப் பெற நேரத்தை வெற்றி கொள்’ என்னும் இப்புத்தகம் பெரிதும் உதவும்.” -எட்வர்டு ஜி. டாய்ஷ்லான்டர் நிர்வாகத் துணைத் தலைவர் நார்த் ஸ்டார் ரிசோர்ஸ் குரூப்
“உங்கள் குழுவும், உங்கள் வாடிக்கையாளர்களும் மேலும் சாதனைகளைப் புரிய அவர்களுக்குப் பயிற்சி அளிக்க எளிய, திறமையான வழிமுறைகளை நீங்கள் தேடிக் கொண்டிருந்தால், இப்புத்தகம் நீங்கள் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய ஒன்று.” – லூ கசாரா நிறுவனர் & தலைமை நிர்வாக அதிகாரி தி சுசாரா கிளினிக் எல்எல்சி
‘வாய்ப்புகள் ஒவ்வொரு நாளும் நம்மை நோக்கி வருகின்றன. ஆனால் ஒரு சிலரால் மட்டுமே அவற்றைப் பார்க்க முடிகிறது. அதிலும் ஒரு சிலரே அவ்வாய்ப்புகளைக் கொண்டு என்ன செய்வது என்பதை அறிந்துள்ளனர். வாய்ப்புகளை நீங்கள் கண்டுகொள்வதற்கும் அவற்றைக் கொண்டு என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்வதற்கும் இப்புத்தகம் உங்களுக்குப் பயிற்சியளிக்கிறது.” – சேத் ஏ. ராடோவ், மூத்த உதவித் தலைவர் & சேர்மன்ஸ் கிளப் உறுப்பினர்
-
ஆண்ட்ரு கார்னகி ( Andrew Carnegie )
Rs. 790.00or 3 X Rs.263.33 withRead moreஆண்ட்ரூ கார்னகி
தமிழில்: பி. உதயகுமார்
ஸ்காட்லாந்தில் பிறந்து வளர்ந்து, அமெரிக்காவின் சுதந்திர சூழலை விரும்பி, அமெரிக்கா வந்த ஒரு சாதனை மனிதனின் வாழ்க்கை வரலாறு இது. 1851 ஆம் ஆண்டில் இரண்டரை டாலர் வார சம்பளத்தில் தொடங்கிய அவரது வெற்றி வாழ்க்கை. படிப்படியாக உலகின் முதல் இரும்பாலை மகாராஜாவாக உயர்ந்தார். ரயில் பெட்டிகள் தயாரிப்பது, இரும்புப் பாலங்கள் கட்டுவது, தண்டவாளங்கள் செய்து அவற்றை நிறுவுதல் என்று, தான் தொழிலில் உயர்ந்தது மட்டுமல்லாது அமெரிக்காவையும் தொழிலில் முன்னேற்றமடைந்த நாடாக உயர்த்திய பெருமையாளர் ஆவார்.
ஆனால் எளிமையானவர்கூட அன்னாரின் சாதனைகளில் சில..
- கார்னகி மெலோன் பல்கலைக் கழகத்தைத் தோற்றுவித்த
- 1885-ஆம் ஆண்டில் 500,000 டாலர்கள் வழங்கி பிட்ஸ்பர் நூலகத்தை சிறப்புற நடத்தியது.
- இதைப்போல்…3000 நூலகங்களை உலக நாடுகள் பலவற்றிலும் நிறுவியது.
ஏன் நூலகங்களுக்கு இவ்வளவு முன்னுரிமை? விவரம் நூலில்.
1919-ஆம் ஆண்டில் கார்னகியின் மறைவின் போது, அவர் நேரடியாக வழங்கிய தர்மங்களின் மொத்தத் தொகை 350 கோடி டாலர். இது தவிர தொண்டு நிறுவனங்களுக்கு இவர் வழங்கியது 30 கோடி டாலர்.
இந்நூல் இந்த சாதனை மேதையின் கையால் எழுதப்பெற்ற சுயசரிதம்.
-
மக்களைக் கையாளும் கலை ( Makkalaik Kaiyaalum Kazhai )
Rs. 2,290.00or 3 X Rs.763.33 withRead moreஆலன் ஃபாக்ஸ்
தமிழில்: குமாரசாமி
- NEW YORK TIMES BESTSELLER!
மற்றவர்களுடன் நன்றாகப் பழகுவதுதான் வெற்றிக்கும் மகிழ்ச்சிக்கும் உண்மையான ரகசியம். பல்லாயிரக்கணக்கான வகுப்பறைகளில் நாம் வாசிப்பு, எழுதுதல் மற்றும் எண்கணிதம் ஆகியவற்றைக் கற்பிக்கிறோம், ஆனால் மனித உறவுகளின் உலகளாவிய பிரச்சினைகளுக்கான தீர்வுகளை சோதனை மற்றும் பிழை மூலம் கண்டுபிடிக்க வேண்டும். சோதனை வேதனையானது மற்றும் பிழை விலை உயர்ந்தது.
மக்கள் கருவிகள்: உறவுகளை கட்டியெழுப்புவதற்கான 54 உத்திகள், மகிழ்ச்சியை உருவாக்குதல் மற்றும் செழிப்பைத் தழுவுதல், சிறந்த, மகிழ்ச்சியான, அதிக வெற்றிகரமான வாழ்க்கையை உருவாக்க நீங்கள் பயன்படுத்தக்கூடிய நேரம் நிரூபிக்கப்பட்ட நுட்பங்களை வழங்குகிறது. ஒவ்வொரு நாளும் நாம் எதிர்கொள்ளும் சவால்களுக்கு விரைவான மற்றும் பயனுள்ள தீர்வுகளைத் தேடும் பிஸியான மக்களுக்கு இது சரியான ஆதாரமாகும்.
ஒவ்வொரு பக்கத்திலும் நடைமுறை ஞானம்
-
செல்வம் சேர்க்கும் வழிகள்
Rs. 1,690.00or 3 X Rs.563.33 withRead moreG. S. சிவகுமார்
* எது செல்வம்? அதை எப்படிக் கண்டடைவது? எப்படி அதை நோக்கி நகர்ந்து செல்வது?
* நேர்மையாக, நேர் வழியில் பணம் ஈட்டுவது சாத்தியமா? .
* செல்வந்தர் ஆவதற்கு ஏதேனும் தகுதி இருக்கிறதா? அந்தத் தகுதியை நான் பெற்றிருக்கிறேனா என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது?
* எது எனக்கு ஏற்றது? மாதச் சம்பளம் பெறுவதா அல்லது ஒரு தொழில் தொடங்கி நடத்துவதா?
* தொழில் எனில் எது பாதுகாப்பானது? எதில் வருமானம் அதிகம் கிடைக்கும்?
* கிடைக்கும் வருமானத்தை எப்படிச் சேமிப்பது? எப்படிப் பெருக்குவது? எப்படி முதலீடு செய்வது?
யாரிடம் கேட்பது, எப்படிக் கேட்பது போன்ற தயக்கங்களை உதறித் தள்ளிவிட்டு இந்நூலை வாசிக்க ஆரம்பியுங்கள், வளமான எதிர்காலம் உங்களுக்காகக் காத்திருக்கிறது.
-
நீங்களும் விற்பனையாளர் ஆகலாம் (You Can Sell)
Rs. 1,950.00or 3 X Rs.650.00 withRead moreShiv Khera / ஷிவ் கேரா
நீங்கள் ஒரு வெற்றிகரமான விற்பனை நிபுணரை உருவாக்கும் நேர-சோதனை கொள்கைகளை நீங்கள் விற்கலாம். பயன்படுத்தப்படும் வார்த்தை கொள்கைகள்’ மற்றும் தந்திரோபாயங்கள் அல்ல. ஏனெனில் தந்திரோபாயங்கள் கையாளக்கூடியவை, அதேசமயம் கொள்கைகள் ஒருமைப்பாட்டின் அடித்தளத்தை அடிப்படையாகக் கொண்டவை. வெற்றிபெற நீங்கள் ‘வர்த்தகத்தின் தந்திரங்களை’ கற்றுக்கொள்ள வேண்டும் என்று மக்கள் சொல்வதை நீங்கள் பல முறை கேட்கிறீர்கள். இது உண்மையல்ல. இந்தப் புத்தகம் வித்தியாசமானது!
-
டாடா: நிலையான செல்வம் ( The Creation of Wealth )
Rs. 1,390.00or 3 X Rs.463.33 withRead moreஆர். எம். லாலா
தமிழில்: B.R. மகாதேவன்
அதிகம் வாசிக்கப்பட்ட வெற்றிக் கதை இது!
1868-ல் ஜம்சேட்ஜி டாடாவால் சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு நிறுவனம் சுமார் நூற்றைம்பது ஆண்டுகளாக தேசத்துக்கு வளம் சேர்த்துவரும் விதத்தை விவரிக்கும் புத்தகம் இது.தொழில் புரட்சிக்கு முந்தைய உலகில் முன்னணியில் இருந்த நம் தேசத்தை நவீன காலகட்டத்திலும் மேலான நிலைக்குக் கொண்டு செல்ல ஜம்சேட்ஜி மூன்று திட்டங்களை முன் வைத்தார். ஒன்று, எஃகு உருக்காலைத் திட்டம். இரண்டு, நீர் மின்சாரத் திட்டம். மூன்றாவது, ஆராய்ச்சிக்கான பல்கலைக்கழகம்.
அந்தக் கனவுகளை அடியொற்றியே டாடா குழுமம் வளர்ந்து வந்திருப்பதன் மூலம் நிறுவனருக்கு நியாயமான அஞ்சலியைச் செலுத்தியிருக்கிறது. ஆனால், அந்த வெற்றி எளிதில் கிடைத்துவிடவில்லை. அரசுக் கட்டுப்பாடுகள் இருந்த காலகட்டத்திலும், தாராளமயமாக்கல் நடைபெற்ற காலகட்டத்திலும் டாடா குழுமம் என்னென்ன சவால்களைச் சந்திக்க வேண்டியிருந்தது, அவற்றை எப்படி வென்று காட்டியிருக்கிறது என்பதை இந்தப் புத்தகம் விரிவாக விவரிக்கிறது.
டாடா குழுமத்தின் வெற்றி என்பது வர்த்தக, தொழில்துறை சார்ந்த ஒன்று மட்டுமே அல்ல என்பதையும் தெளிவாக ஆவணப்படுத்துகிறது. பணியாளர் நலத்திட்டங்கள், சமூக நலத்திட்டங்கள், உயர் கல்வி மையங்கள், கலை, கலாசார மேம்பாடு, கிராமப்புற மேம்பாடு என பலவகைகளில் டாடா குழுமம் ஆற்றிவரும் தேச நலச் செயல்திட்டங்கள் பற்றியும் அழுத்தமாகச் சித்திரிக்கிறது.
-
வெற்றி நிச்சயம்
Rs. 1,690.00or 3 X Rs.563.33 withRead moreஷாட் ஹெம்ஸ்டெட்டர் பி.எச்.டி
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
உங்கள் ‘நிரல்களை’ மாற்றுவதற்கும், உங்கள் இலக்குகளை அடைவதற்கும், ‘சுய உதவி’யிலிருந்து ‘சுயத்தை’ எடுப்பதற்கும் நம்பமுடியாத தீர்வு. ஊக்கமளிக்கும் நடத்தை துறையில் 25 ஆண்டுகளுக்கும் மேலான ஆராய்ச்சியின் அடிப்படையில், அதிகம் விற்பனையாகும் எழுத்தாளர் டாக்டர் ஷாட் ஹெல்ம்ஸ்டெட்டர், தங்கள் வாழ்க்கையில் வெற்றிபெறும் நபர்களுக்கு – நாளுக்கு நாள் – மற்றும் வெற்றிபெறாத நபர்களுக்கு இடையேயான உண்மையான வித்தியாசத்தை வெளிப்படுத்துகிறார்.
ஷாட் ஹெல்ம்ஸ்டெட்டர் நம் ஒவ்வொருவரின் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வளர்ச்சிக்கு அடித்தளமாக இருக்கும் மூன்று அடிப்படை திருப்புமுனை கருத்துக்களை வெளிப்படுத்துகிறார். மூன்று கருத்துக்களும் இணைந்தால், அவை வெற்றிக்கு உத்தரவாதம் அளிக்கின்றன என்பதை அவர் கண்டுபிடித்தார். சுய உதவியில் இருந்து சுயத்தை வெளியேற்றும் எளிதான பின்பற்றக்கூடிய திட்டத்தில், எடையைக் குறைக்கவும் மேம்படுத்தவும் இந்த முன்னேற்றக் கருத்துகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை வாசகருக்கு டாக்டர் ஹெல்ம்ஸ்டெட்டர் காட்டுகிறார். உடல் தகுதி, வருமானத்தை அதிகரிப்பது, சுயமரியாதை மற்றும் தன்னம்பிக்கையை உருவாக்குதல், குடும்பம் மற்றும் உறவுகளை மேம்படுத்துதல், மன அழுத்தத்தைக் குறைத்தல், மேலும் ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். ஊக்கமளிக்கும் ஆராய்ச்சித் துறையில் இருந்து மிக முக்கியமான மற்றும் புதுப்பித்த கண்டுபிடிப்புகளை வழங்குதல், டாக்டர் ஹெல்ம்ஸ்டெட்டர் உடனடியாக வாசகருக்கு பழைய மனதிட்டங்களிலிருந்து விடுபடவும், கவனம் செலுத்தவும், இலக்குகளை அமைக்கவும் மற்றும் கண்காணிக்கவும், உந்துதலாக இருக்கவும், வழியில் உதவி செய்யவும் உதவுகிறது.
-
ஆடு-மாடு வளர்ப்பு
Rs. 990.00or 3 X Rs.330.00 withRead moreவிகடன் குழு
ஆடு மாடுகளை வளர்ப்பது என்பது ஆதிகாலத்திலிருந்து மனித சமுதாயத்துக்குப் பயனளிக்கும் ஒன்றாகவே கருதப்பட்டு வருகிறது. எத்தனையோ விவசாயக் குடும்பங்களுக்கு ஆடு மாடுகள்தான் சோறு போடுகின்றன. இன்று பல குழந்தைகள், ஏன் பெரியவர்கள்கூட பசுவின் பால் குடித்துதான் வளர்கிறார்கள்; வாழ்கிறார்கள். விவசாயத்தில் நவீன தொழில்நுட்பங்கள் புகுந்துவிட்டாலும், விவசாயத் தொழில்களுக்கு ஆடு மாடுகள் ஏராளமாக உதவி புரிகின்றன. மாடுகள் தங்கள் உழைப்பைத் தருவதோடு இறைச்சி, பால், சாணம், கோமியம், கொம்பு, தோல் என அனைத்தையும் தந்து உதவுகின்றன. ஆடு வளர்ப்பிலும் அதேபோலதான். ஆட்டின் இறைச்சி, தோல், பால், புழுக்கை என அனைத்தும் பணமாகிறது. கறவை மாடுகள், உழவு மாடுகள், எருமை மாடுகள், காளை மாடுகள் போன்ற மாட்டு இனங்களை வளர்க்கவும், அவற்றுக்குத் தேவையான புல் வகைகள், தீவனங்கள், பராமரிப்பு… என விளக்கங்களைத் தருவதோடு, மாடுகளை வாங்கவும் விற்கவும் சந்தைகள், வங்கிக்கடன், லாபகணக்குகள் என அத்தனை விவரங்களையும் தருகிறது இந்த நூல். ஆடு&மாடு வளர்ப்பு என்பது ஒரு லாபம் தரும் தொழிலாகவே மாறிவிட்டது.
-
8 மாபெரும் சாதனையாளர்களின் பண்புகள்
Rs. 1,490.00or 3 X Rs.496.67 withRead moreகேமரூன் சி. டெய்லர்
“அறிவுள்ள உலக உண்மைகள் இந்த புத்தகத்தில் அழகாகப் பரவியுள்ளன. அறுவடைச் சட்டங்களுக்கான ஒரு உண்மையான விளக்கம்”
டா. ஸ்டீபன் ஆர். கவி, அமெரிக்காவின் நம்பர் 1 ஆக விற்பனையாகும், தி 7 ஹேபிட்ஸ் ஆஃப் ஹைலி எஃபெக்டிவ் பீப்பிள் புத்தகத்தை எழுதியுள்ளார்.“வெற்றி, சந்தோஷம், ஆன்மீகம் மற்றும் நிதி சுதத்திரம் சிக்கலானது அல்ல, நான் ஏன் இப்படி நினைக்கிறேன் என்று கேமருன் சி. டெய்லரின் புத்தகத்தை படித்த பின்னர் நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.
லூ ஹோல்ட்ஸ், நேஷனல் சேம்பியன் மற்றும் ஹெட் ஃபுட்பால் கோச், நாட்டர்டாம் பல்கலைக்கழகம், 1985-1996“நீங்கள் உங்களது வாழ்க்கையின் நடைமுறைப்படுத்தக்கூடிய காலங்கடந்த உண்மைகள் கொண்ட இது இதமான அற்புதமான புத்தகம்”
பிரெயன் டிரேசி, சிறப்பாக விற்பனையாகும் தி வேட்டு வெல்த் புத்தகத்தின் எழுத்தாளர்“இந்த புத்தகத்தை படிப்பவர்கள் இதில் உள்ள உறுதியான நெறிகளின் செல்வத்தின் மீது செயல்படுவார்கள் என்று நான் நம்புகிறேன்!’
ஜான் எம். ஹன்ட்ஸ்மேன் பில்லியனர், ஹன்ட்ஸ்மேன் கார்பரேஷனின் நிறுவனர்“புத்திசாலியான வர்கள் இந்த தகவலை பின்பற்றுவார்கள்!’
வில்லியம் டி. டான்கோ பிஎச்.டி., நம்பர் 1 ஆக விற்பனையாகும் தி மில்லினியர் நெக்ஸ்ட் டோர் புத்தகத்தை எழுதியவர் -
பிசினஸ் சீக்ரெட்ஸ் (Business Secrets)
Rs. 2,290.00or 3 X Rs.763.33 withRead moreசி.கே. ரங்கநாதன்
‘பிசினஸா… எனக்கும் அதுக்கும் ரொம்ப தூரம்… அதைப் பற்றி எனக்குத் தெரியாது… எனக்கு சப்போர்ட் பண்ண யாரும் இல்லை…’ என்ற எண்ணம் கொண்டிருப்பவர்கள் இந்த நூலைப் படித்த பிறகு அப்படிச் சொல்லவே முடியாது. முதலில் என்ன பிசினஸ் செய்யலாம் எனத் தேர்ந்தெடுத்து பின் அதை எந்த இடத்தில் அமைக்கலாம்… அதற்கு முதலீடு செய்ய என்னென்ன தேவை என்பதை ஆராய்ந்து, திட்டமிட்டு, எளிமையான முறையில் கையாளும்பட்சத்தில் குறைந்த முதலீட்டில் அதிக வருமானத்தைப் பெறும் உத்திகளைப் பற்றி இந்த நூல் தெளிவாகக் கற்றுக்கொடுக்கிறது. என்ன தொழில் செய்ய வேண்டும்? அதில் எது நமக்கு ஏற்றதாய் இருக்கும் எனக் கண்டுபிடித்து அதை எப்படி ஆரம்பிக்க வேண்டும்?
தொழிலாளர்களை எப்படி நியமிக்க வேண்டும்? பிசினஸில் ஏற்படும் தடைகளையும் தவறுகளையும் எப்படி எதிர்கொண்டு முன்னேற்றம் அடைய வேண்டும்? பிசினஸுக்காக முதலீட்டுப் பணம் எப்படிப் பெறுவது? அதற்கான திட்டங்கள் என்ன? போன்ற நுணுக்கமான வழிமுறைகளை எடுத்துரைத்திருப்பது இந்த நூலின் சிறப்பு. பிசினஸ் செய்வதில் குறுக்குவழி கூடாது; அதனால் சந்திக்க நேரிடும் விளைவுகள்… வருமான வரி செலுத்துவதன் அவசியங்கள்; அதனால் கிடைக்கும் மரியாதை… வங்கி அதிகாரிகளால் அங்கீகரிக்கப்படுதல்; இதனால் கூடுதல் கடன் கிடைக்கக்கூடிய வாய்ப்பு… போன்ற பிசினஸ் சீக்ரெட்ஸ்களை பக்குவமாகச் சொல்லியிருக்கிறார் நூலாசிரியர் சி.கே.ஆர். நாணயம் விகடனில் தொடராக வெளிவந்த பிசினஸ் சீக்ரெட்ஸ், நூல் வடிவம் பெற்றிருக்கிறது. சிறந்த ஆலோசனைகளையும் ஆக்கப்பூர்வமான அறிவுரைகளையும் பெற்று, உங்கள் பிசினஸில் நீங்கள் வெற்றிபெற, பக்கங்களைப் புரட்டுங்கள்… பிசினஸில் வெல்லுங்கள்!
-
லாபம் தரும் ஜீரோ பட்ஜெட் ( Laabam Tharum Budget )
Rs. 1,170.00or 3 X Rs.390.00 withRead moreவிகடன் குழு
ஜீரோ பட்ஜெட் விவசாயம் என்பது செலவில்லாமல், ரசாயனம் சேர்க்காமல் இயற்கை முறையில் விவசாயம் செய்வது.
இதுவரை பூச்சியை விரட்ட, விதை நேர்த்தி செய்ய, அதிக விளைச்சல் காண பலவித ரசாயனங்களை உபயோகித்து விவசாயம் செய்த விவசாயிகள், பண விரயம் ஆனதோடு எதிர்பார்த்ததை விட அதிக எதிர் விளைவுகளையும் சந்தித்து, இத்தொழிலை விட்டுவிடலாம் என சோர்ந்து போனார்கள்.
விவசாயிகளின் சோர்வை நீக்கி, விழிப்பு உணர்வு கொடுக்கவே வந்தது ‘பசுமை விகடன்’ இதழ் நடத்திய ஜீரோ பட்ஜெட் இயற்கை வேளாண்மை பயிற்சி முகாம். ஜீரோ பட்ஜெட் குறித்து வேளாண் வித்தகர் சுபாஷ் பாலேக்கர் கொடுத்த பயிற்சிகள், உயிர் காக்கும் விவசாயத் தொழிலை மீட்டுத் தந்ததோடு, விவசாயிகளுக்கு அளவில்லாத மகிழ்ச்சியையும் அள்ளிக்கொடுத்தது.ஜீவாமிர்தம், பிரம்மாஸ்திரம், அக்னிஅஸ்திரம், கன ஜீவாமிர்தம், பீஜாமிர்தம், புளித்த மோர்க்கரைசல், எலுமிச்சை முட்டைக் கரைசல், மீன் அமினோ அமிலக் கரைசல் போன்ற இயற்கை உரம் தயார் செய்யும் முறையை கற்றுக்கொடுத்த சுபாஷ் பாலேக்கரது விவசாய நுணுக்கங்களைக் கையாண்டு விவசாயிகள் மேம்பட்ட மகசூல், அமோக விளைச்சல், மகத்தான லாபம் கண்டு வெற்றியின் உச்சத்தில் உள்ளனர்.
ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயத் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி மல்லி, வாழை, ஆரஞ்சு, மாம்பழம், பாகல், கரும்பு, மஞ்சள், பப்பாளி முதற்கொண்டு அதற்கு ஊடுபயிராக பூக்கள், தானிய வகைகளைப் பயிரிட்டு அதிக லாபம் அடைந்த விவசாயிகள், தங்களது அனுபவத்தை பசுமை விகடனில் பகிர்ந்துகொண்டார்கள். அந்த வெற்றி அனுபவங்கள் இப்போது நூல் வடிவில் உங்கள் கையில் உள்ளது.இதேமுறையில் வெற்றியடைய விரும்பும் விவசாயிகளுக்கு இந்த நூல் வரப்பிரசாதமே!
-
வெற்றித் திறன் ( Vettrith Thiran )
Rs. 1,650.00or 3 X Rs.550.00 withRead moreஜிக் ஜிக்லர்
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
ஜிக் ஜிக்லர் மக்கள் மேலாண்மை திறன்களை வளர்ப்பதன் மூலம் தங்களிடமிருந்தும் மற்றவர்களிடமிருந்தும் எவ்வாறு அதிகமான வெளியீடை பெறுவது என்பதை வாசகர்களுக்குக் காட்டுகிறது. அவர் நல்ல தலைமைத்துவத்தின் பண்புகளை வெளிப்படுத்துகிறார் மற்றும் மோசமான நிர்வாக நடைமுறைகளை சமாளிப்பதற்கும் சரிசெய்வதற்கும் குறிப்பிட்ட தீர்வுகளை வழங்குகிறார். நிகழ்வுகள் மற்றும் தெளிவான விளக்கப்படங்கள் நிறைந்த, சிறந்த செயல்திறன் எந்தவொரு தொழிலிலும் அதிகபட்ச செயல்திறனை அடைய மேற்பார்வையாளர்கள், சக பணியாளர்கள் மற்றும் துணை அதிகாரிகளுடன் உறவுகளை மேம்படுத்துவதற்கான சிறப்பு வழிமுறைகளை வழங்குகிறார்.
-
எண்ணங்களை மேம்படுத்துங்கள்!
Rs. 1,890.00or 3 X Rs.630.00 withRead moreடாக்டர் எம். ஆர். காப்மேயர்
தமிழில்: பி. சி. கணேசன்
இந்நூலை நீங்கள் வாங்கினால் போதும்- உங்கள் வெற்றிக்கான ஒரு முதலீட்டைச் செய்து விட்டீர்கள் என்று அர்த்தம்! இந்நூலில் 80 அத்தியாயங்கள் உள்ளன. அவை உங்கள் மனத்தின் ஆற்றலை அதிகரிக்கவல்லவை. ஏற்கனவே மாபெரும் சிந்தனையாளர்கள் இவற்றை அறிந்திருந்தார்கள். ஆகவேதான் அவர்கள் அத்தனை பெரிய சிந்தனையாளர்களாக- வரலாற்றில் இடம் பெற முடிந்தது. இந்நூலில் கூறப்படும் வழிமுறைகள் அனைத்தும் முன்பே நிரூபிக்கப்பட்ட வெற்றி ரகசியங்கள். இவை உங்கள் வாழ்வில் வெற்றியையும் மகிழ்ச்சியையும் உள்ளார்ந்த அமைதியையும் வழங்கக் கூடியவை. மாபெரும் சிந்தனையாளராக நீங்கள் மாற வேண்டுமா? வேண்டாமா? வேண்டும் என்றால் இதோ 80 வழிகள் உங்களுக்காக திறந்து கிடக்கின்றன.
-
வெற்றிச் சூத்திரங்கள் பன்னிரண்டு
Rs. 1,490.00or 3 X Rs.496.67 withRead moreபிரையன் டிரேசி & ஜே. சுரேந்திரன்
பழுத்த அனுபவம் வாய்ந்த சுயமுன்னேற்ற பேச்சாளரும் சொற்பொழிவாளருமான பிரையன் டிரேசியும், இந்தியாவில் சர்வதேசப் பயிலரங்குகளையும் கருத்தரங்குகளையும் வெற்றிகரமாக ஏற்பாடு செய்து வருகின்ற ‘ சக்சஸ் ஞான்’ என்ற மிகப்பெரிய நிறுவனத்தின் நிறுவனரான ஜே. சுரேந்திரனும், உங்கள் வாழ்வில் நீங்கள் குறிவைத்துள்ளது எதுவாக இருந்தாலும் அதை நீங்கள் அடைவதற்க்கான பன்னிரண்டு வெற்றிச் சூத்திரங்களை இந்நூலில் முன்வைக்கிறார்.
-
வெற்றி வாய்ப்புகளுக்கான கடைசி வழிகாட்டி ( The Last Prospecting Guide You’ll Ever Need )
Rs. 1,190.00or 3 X Rs.396.67 withRead moreபாப் பர்க்
உங்களுக்கு தேவையான அனைத்து வாய்ப்புகளும் உள்ளதா?
நம்மில் சிலருக்கே! பாப் பர்க் பயனுள்ள ஆய்வுகளின் ரகசியங்களைக் கற்றுக்கொண்டார், இப்போது அவர் தனது நிரூபிக்கப்பட்ட, நேரத்தைச் சோதித்த நுட்பங்களை உங்களுக்கு வழங்குகிறார்! இந்த சக்திவாய்ந்த வழிகாட்டியில், திறமையான மற்றும் வலியின்றி தகுதிவாய்ந்த வேட்பாளர்களை எவ்வாறு சேகரிப்பது என்பதை ஆரம்பநிலை மற்றும் சாதகமாக அவர் காட்டுகிறார். உங்கள் பக்கத்தில் உங்களுக்குத் தேவைப்படும் கடைசி வருங்கால வழிகாட்டி மூலம், நீங்கள் விரும்பும் அனைத்து வணிக வாய்ப்புகளையும் எவ்வாறு வளர்ப்பது என்பதை நீங்கள் சரியாகக் கற்றுக் கொள்வீர்கள்.
-
மாற்றம் எனும் மந்திரம்
Rs. 1,290.00or 3 X Rs.430.00 withRead moreசைமன் பெய்லி
உங்கள் வாழ்க்கையை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்ல நீங்கள் தயாரா? நீங்களோ அல்லது உங்கள் நிறுவனமோ சந்தையில் நிகழ்ந்துள்ள மாற்றங்களால் திக்குமுக்காடிப் போயிருக்கிறீர்களா? அல்லது நாட்டில் வேகமாக மாறிக் கொண்டிருக்கும் பொருளாதாரச் சூழல்களை எப்படிச் சமாளிப்பது என்ற கவலை உங்களை அரித்துக் கொண்டிருக்கிறதா? அல்லது புதிய விடிவெள்ளிக்காக நீங்கள் காத்துக் கொண்டிருக்கிறீர்களா? ‘ஐயோ! மீண்டும் திங்கட்கிழமை வந்துவிட்டது!’ என்று புலம்பிக் கொண்டிருக்கிறீர்களா? அல்லது எல்லாமே சிறப்பாகச் சென்று கொண்டிருப்பதாகப் பாசாங்கு செய்து கொண்டு கழுத்துவரை இழுத்து மூடிக் கொண்டு தூங்கிக் கொண்டிருக்கிறீர்களா?
கவலைப்படாதீர்கள். இதில் நீங்கள் மட்டும் தனியாக இல்லை. வருங்காலம் குறித்த பயமும். மாறிக் கொண்டிருக்கும் பொருளாதாரச் சூழ்நிலைகள் குறித்த அச்சமும் எல்லா இடங்களிலும் படமெடுத்து ஆடிக் கொண்டிருப்பதால், நன்னம்பிக்கை மனோபாவம் தேய்பிறையாக ஆகிக் கொண்டிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நன்னம்பிக்கை மனோபாவத்திற்கு மாறவும், நமக்காக ஒரு சிறப்பான வருங்காலத்தைப் படைக்கவும் துடித்துக் கொண்டிருக்கும் உங்களையும் என்னையும் போன்றவர்களுக்காகத்தான் இப்புத்தகம் எழுதப்பட்டுள்ளது. நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் தொழில்முறை வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தி, நம்முள் ஒளிந்திருக்கும் அளவற்ற ஆற்றலை அறுவடை செய்ய இப்புத்தகம் உங்களுக்கு வழிகாட்டும். இன்றைய சவாலான சூழலில், தங்களை மாற்றிக் கொண்டு, மாற்றத்திற்கான கிரியாஊக்கியாகத் தங்களை ஆக்கிக் கொள்ள வேண்டிய அவசியத்தை உணர்ந்திருக்கின்ற ஊழியர்கள், மேலாளர்கள், வணிகத் தலைவர்கள் ஆகியோருக்கானதுதான் இந்நூல். உங்களுடைய வாழ்க்கையில் நீண்டகால நோக்கில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்த உங்களுக்குக் கண்டிப்பாகத் தேவைப்படும் ஊக்குவிப்பு, உள்நோக்கு, தெளிவான வழிகாட்டுதல் ஆகியவற்றை நீங்கள் இப்புத்தகத்தில் காண்பீர்கள்.
-
எமோஷனல் இன்டெலிஜென்ஸ் 2.0
Rs. 1,090.00or 3 X Rs.363.33 withRead moreசோம. வள்ளியப்பன்
அறிவாற்றலை அளவிடும் ஐகி முறையை இப்போது ஒருவரும் பயன்படுத்துவதில்லை.அறிவுத்திறன் இருந்தால்தான் வெற்றி பெறமுடியும், மாபெரும் சாதனைகள் புரியமுடியும் என்னும் நம்பிக்கையும்கூட பெருமளவில் தகர்ந்துவிட்டது. இப்போது உலகை ஆண்டுகொண்டிருப்பது EQ எனப்படும் எமோஷனல் இன்டெலிஜென்ஸ் மட்டுமே.
உள்ளுணர்வுகளைத் துல்லியமாகப் புரிந்துகொண்டு அவற்றைச் சரியான முறையில் கையாளும் கலையை யார் திறன்படக் கற்கிறார்களோ அவர்களே இன்று வெற்றியாளர்களாக வலம் வருகிறார்கள். தனிப்பட்ட வாழ்வில் மட்டுமல்ல படிப்பு, அலுவலகம், தொழில் என்று வாழ்வின் எந்த நிலையில் இருந்தாலும் EQ முக்கியமானதாக மாறுகிறது.
தலைமைப் பதவியை வகிக்கவேண்டுமா? போட்டியாளர்களைச் சமாளிக்கவேண்டுமா? கனவுகளை நினைவாக்கவேண்டுமா? நீங்கள் இயங்கும் துறையில் முதன்மைச் சாதனையாளராகத் திகழவேண்டுமா? உங்கள் சிந்தனைகள், செயல்பாடுகள் இரண்டிலும் ஆச்சரியமூட்டும் மாற்றங்களை மேற்கொள்ளவேண்டுமா? உங்களுடைய உகி திறனை மேம்படுத்திக்கொள்வதுதான் ஒரே அடிப்படை வழி.
சோம. வள்ளியப்பனின் இந்தப் புத்தகம் IQ-வை விட ஏன் EQ முக்கியம் என்பதையும் அதை எப்படி வளர்த்துக்கொள்வது என்பதையும் முறைப்படி கற்றுக்கொடுக்கிறது.
‘குமுதம் சினேகிதி’ இதழில் வெளிவந்து ஏகோபித்த பாராட்டைப் பெற்ற வாழ்வியல் தொடரின் புத்தக வடிவம்.
-
பிசினஸ் சைக்காலஜி ( Business Psychology Tamil )
Rs. 850.00or 3 X Rs.283.33 withதெருவோரப் பெட்டிக்கடை முதல் உலகம் முழுக்கக் கிளைகளைக் கொண்டிருக்கும் பன்னாட்டு நிறுவனம் வரை அனைவரும் தெரிந்துகொள்ளவிரும்பும் விஷயம், பிசினஸ் சைக்காலஜி.
· வாடிக்கையாளர்களை எப்படி ஈர்ப்பது?· அவர்களை எப்படித் தக்கவைத்துக்கொள்வது?
· அவர்களுடைய எண்ணிக்கையை எப்படி அதிகரிப்பது?
பொருள், சேவை என்று நீங்கள் விற்க விரும்புவது எதுவாக இருந்தாலும் உங்களுக்கு இந்த விஷயங்கள் தெரிந்திருக்கவேண்டும்.
வாடிக்கையாளரின் மனதுக்குள் நுழைந்து, அவர்களுடைய உளவியலைத் தெரிந்துகொண்டால்தான் உங்களால் அவர்களுடைய தேவைகளைத் துல்லியமாகப் பூர்த்தி செய்யவேண்டும். அதேபோல் உங்களுடைய போட்டியாளரின் உளவியலையும் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும். அப்போதுதான் அவர்களைவிடச் சிறப்பாக உங்கள் பொருளை அல்லது சேவையை நீங்கள் உங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கவேண்டும்.
இந்தப் புத்தகம் உங்களுக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் பிசினஸ் சைக்கலாலஜியை மிக எளிமையாக, மிகவும் ஜாலியாகக் கற்றுக்கொடுக்கிறது.
ஏராளமான எடுத்துக்காட்டுகளையும் வெற்றி ஃபார்முலாக்களையும் இது உள்ளடக்கியிருக்கிறது. உங்களிடம் இந்தப் புத்தகம் இருந்தால் உங்கள் துறையில் நீங்கள்தான் வெற்றியாளர்.
-
மார்க்கெட்டிங் மாயாஜாலம்
Rs. 1,190.00or 3 X Rs.396.67 withRead moreசதீஷ் கிருஷ்ணமூர்த்தி
‘மார்க்கெட்டிங். இது ஒரு தாரக மந்திரம். உங்கள் கண்ணில் தென்படும் அத்தனை விஷயங்கள் மீதும் பரம்பொருள் போல் ஆதிக்கம் செலுத்தும் சக்தி. ஒரு வரியில் சொல்வதென்றால் பொருள்களை விற்கப் பயன்படும் உத்தி. பெட்டிக்கடை தோறும் பெப்ஸி போர்டுகளும் கொல்லைப்புறம் வரை கோககோலா தட்டிகளும் தென்படுவதன் பின்னால் உள்ள சூட்சுமம்.
மார்க்கெட்டிங் என்பது உங்கள் தொழிலில் வெற்றிக்கும் தோல்விக்கும் உள்ள வித்தியாசம். உங்களுக்கு எது வேண்டும்? வெற்றிதானே? உங்கள் வர்த்தகம் கொழிப்பதற்கான வழிமுறைகளை அள்ளித்தருகிறது! சுய தொழில் புரிவோருக்கும், மிகப்பெரிய நிறுவனங்களில் மார்க்கெட்டிங் துறையில் வேலை தேடிக்கொண்டிருப்போருக்கும் – ஏன், கடைக்குப் போய் காசு கொடுத்து ஏதாவது வாங்கும் அத்தனை பேருக்குமே இது ஒரு அட்சய பாத்திரம்.
-
இமோஷனல் இன்டெலிஜண்ஸ் : இட்லியாக இருங்கள் Emotional-Intelligence
Rs. 890.00or 3 X Rs.296.67 withRead moreசோம வள்ளியப்பன்
‘நீங்கள் புத்திசாலி. அறிவாளி. திறமைசாலி. உங்களால் எத்தனையோ சாதனைகளை வெகு அலட்சியமாகச் செய்ய முடியும்! நீங்கள் நினைத்தால் இந்த உலகையே கட்டி ஆள முடியும்! ஒரு சந்தர்ப்பம் மட்டும் சரியாக அமைந்து விட்டால்
அது ஏன் இதுவரை அமையவில்லை?
நீங்கள் திறமைசாலி என்று தெரிந்தும்கூட உங்களைப் பயன்படுத்த ஏன் உலகம் தயங்குகிறது?
இன்டர்வியூக்களில் அமர்க்களமாகத்தான் பதில் சொல்கிறீர்கள்.
ஆனாலும் ஏன் வேலை கிடைக்கமாட்டேன் என்கிறது?அலுவலகத்தில் உங்கள் அளவுக்குப் பொறுப்பாகச் செயல்படக் கூடியவர் வேறு யாருமே இல்லை. இது நிர்வாகத்துக்கும் தெரியும்! ஆனாலும் உங்களுக்கு உரிய பதவி உயர்வுகள் ஏன் தாமதமாகின்றன?
இதெல்லாம் குரு பார்வை, சனி பார்வை, நாலில் செவ்வாய், இரண்டில் ராகு என்று யாராவது கப்ஸா விட்டால் நம்பாதீர்கள்! ஒரே ஒரு விஷயம். மிகச் சிறிய விஷயம். இதுவரை நீங்கள் கவனிக்கத் தவறிய அற்ப விஷயம்! அதைச் சரி செய்துவிட்டால் அடுத்தக் கணம் நீங்கள்தான் சூப்பர் ஸ்டார்! இது வெறும் தன்னம்பிக்கை நூல் அல்ல! அறிவியல்பூர்வமாக உங்களை, உங்களுக்கே அலசிப் பிழிந்து காயவைத்து இஸ்திரி போட்டுக் கொடுக்கப் போகிற புத்தகம்.
-
நிரந்தர வெற்றிக்கு வழிவகுக்கும் சுயபேச்சு: உங்களுக்கு நீங்களே பேசிக் கொள்ளும்போது என்ன சொல்ல வேண்டும்?
Rs. 2,290.00or 3 X Rs.763.33 withRead moreஷாட் ஹெம்ஸ்டெட்டர், பிஹெச்.டி
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
நீங்கள் யார் என்று நீங்கள் நம்புகிறீர்களோ அவர்தான் நீங்கள்
இப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ள எளிய, நடைமுறைக்கு உகந்த சுயபேச்சு உத்திகள், உங்கள் வாழ்க்கைமீதான கட்டுப்பாட்டை மீட்டெடுக்கவும் உங்கள் கனவுகளை நனவாக்கவும் உதவும்.
தகவல்களை நமது மூளை எவ்வாறு பெறுகிறது, எப்படி அவற்றை ஏற்றுக் கொள்கிறது என்பது குறித்த நவீன அறிவியல் அடிப்படையில் கொள்கைகளின் அமைந்த ஒன்றுதான் சுயபேச்சு. இதில் கூறப்பட்டுள்ள புரட்சிகரமான உத்தியை உபயோகித்து, உங்கள் மூளையில் ஏற்கனவே பதிவாகியுள்ள எதிர்மறைப் பதிவுகளை ஒட்டுமொத்தமாகத் துடைத்தெறிந்துவிட்டு, அந்த இடத்தில் ஒரு துடிப்பான, நேர்மறையான வாழ்க்கையை அமைத்துக் கொள்ளத் தேவையான தகவல்களை எப்படி அரியணை ஏற்றலாம் என்பதை இப்புத்தகம் உங்களுக்குக் கற்றுக் கொடுக்கும்.
-
நேரத்தை உரமாக்கு
Rs. 1,090.00or 3 X Rs.363.33 withRead moreசோம. வள்ளியப்பன்
திறமை இருக்கிறது. சாதிக்கவேண்டும் என்னும் முனைப்பு இருக்கிறது. கனவுகளும் நிறையவே இருக்கின்றன. ஒரே சிக்கல், நேரம் மடடும்தான். எல்லாவற்றையும் எப்படி குறுகிய காலத்துக்குள் செய்துமுடிக்க முடியும்? வளர்ந்து வரும் போட்டிகளைச் சமாளித்து, எல்லாத் தடைகளையும் மீறி நம் கனவைச் சாதித்து முடிக்கும்வரை காலம் காத்திருக்குமா என்ன? இருபத்து நான்கு மணி நேரத்தை வைத்துக்கொண்டு பெரிதாக என்ன செய்துவிடமுடியும் என்று நினைக்கிறீர்களா? இதுதான் உங்கள் கவலை என்றால் இந்தப் புத்தகம் உங்கள் கவலைக்கான தீர்வு.
படிப்பு, தகுதி, செல்வம், புகழ், திறமை உள்ளிட்ட பண்புகள் நபருக்கு நபர் மாறுபட்டாலும் காலம் அனைவருக்கும் பொதுவானதுதான். அதை எப்படிப் பயன்படுத்துவது அல்லது வீணடிப்பது என்பதில் மட்டும்தான் வேறுபாடு இருக்கிறது. சாதனையாளர்களுக்கும் தோல்வியாளர்களுக்குமான வேறுபாடு என்பது இதுதான்.
சோம. வள்ளியப்பன் எழுதிய புகழ்பெற்ற நூலான, ‘காலம் உங்கள் காலடியில்’ புத்தகத்தின் இரண்டாம் பாகம் இது. நேர மேலாண்மையைச் சுவையாகவும் தகுந்த உதாரணங்களுடனும் கற்றுத் தரும் இந்நூல், மாணவர்கள் முதல் மேனேஜர்கள் வரை அனைவருக்கும் பயனளிக்கக்கூடியது.
-
சூப்பர் சேல்ஸ் சக்சஸ் ஃபார்முலா / Super Sales – Success Formula
Rs. 1,290.00or 3 X Rs.430.00 withஜி.எஸ்.சிவகுமார்
விற்பனைத் துறையில் பெரும் சாதனைகள் புரிய ஓர் எளிமையான, சுவாரஸ்யமான கையேடு!- விற்பனைத் துறை எப்படிச் செயல்படுகிறது? அதில் இணைவது எப்படி?- இத்துறையில் என்னென்ன சிக்கல்கள், சவால்கள், வாய்ப்புகள் உள்ளன? அவற்றை எப்படிக் கையாள்வது?- உங்கள் மேலாளரின் நம்பிக்கையைப் பெறுவது எப்படி? எந்தவொரு குழுவிலும் சிக்கலின்றி பணியாற்றுவது எப்படி?- பேச்சு, எழுத்துத் திறனை வளர்த்துக்கொள்வது எப்படி?- வாடிக்கையாளரைப் புரிந்துகொள்வது எப்படி? அவருடைய தேவைகளை உணர்ந்து, பூர்த்தி செய்வது எப்படி?- பேரங்களை வெற்றிகரமாக நடத்திமுடிக்கும் கலையை எப்படிக் கற்றுக்கொள்வது?- இலக்குகளை அடைவது எப்படி? நெருக்கடிகளைச் சமாளிப்பது எப்படி?நீங்கள் விற்பனைத் துறையைச் சேர்ந்தவராக இருந்தால் அல்லது அதில் நுழையும் கனவு கொண்டிருப்பவராக இருந்தால், இந்தப் புத்தகத்தை நீங்கள் வாசித்தே தீர வேண்டும். 35 ஆண்டுகளுக்கும் மேலாக விற்பனைத் துறையில் பணியாற்றிய தனது நீண்ட, நெடிய அனுபவத்தின் அடிப்படையில் இந்நூலை உருவாக்கியிருக்கிறார் சிவக்குமார். உங்களுடைய நிச்சயமான வெற்றிக்கு உத்தரவாதமளிக்கும் பாடங்கள் பல இதில் உள்ளன.பிசினஸ் டிப்ஸ் ( Business Tips Tamil )
Rs. 790.00or 3 X Rs.263.33 withRead moreசதீஷ் கிருஷ்ணமூர்த்தி
எதையும் எளிதாகப் புரிந்துகொள்ளும்படியும் வெகுவாக ரசிக்கும்படியும் சொல்வது சதீஷ் கிருஷ்ணமூர்த்தியின் இயல்பு. கனமான, ஆழமான பிசினஸ் மேனேஜ்மெண்ட் பாடங்கள்கூட இவர் கை பட்டால் புதுப் பொலிவு பெற்றுவிடுகிறது. நீங்கள் ஏற்கெனவே தொழிலொன்றை நடத்திவந்தாலும் சரி, ஒரு தொழில்முனைவோராக மாறும் கனவோடு இருப்பவராக இருந்தாலும் சரி… இந்தப் புத்தகம் உங்களுக்குத் தேவையான பயனுள்ள டிப்ஸ்கள் அனைத்தையும் கையடக்கமாகத் தொகுத்து அளிக்கிறது. திறமைசாலியான ஓர் ஆலோசகரை அதிக வருமானம் கொடுத்து பணியில் அமர்த்திக்கொள்வதற்குப் பதில் இந்தப் புத்தகத்தை வாங்கி வைத்துக்கொண்டால் போதும். வளமான வாழ்வும் லாபகமான வர்த்தகமும் கைமேல் கிடைக்கும்.ஸ்டார்ட்-அப் பிசினஸில் சக்சஸ் / Startup Businessil Success
Rs. 1,690.00or 3 X Rs.563.33 withRead moreசதீஷ் கிருஷ்ணமூர்த்தி
எல்லோரிடமும் ஒரு ஸ்டார்ட்அப் கனவு இருக்கிறது. இதுவரை இல்லையென்றாலும் சுலபத்தில் வளர்த்துக்கொண்டுவிட முடியும்.
சவாலானது என்ன தெரியுமா? கனவை நகர்த்திச் சென்று நடைமுறைக்குக் கொண்டு வருவதும் அதை வெற்றி பெறச் செய்வதும்தான். இதற்கு அஞ்சியே பலர், ‘இதெல்லாம் சிலருக்குதான் சரிப்பட்டு வரும்’ என்று ஏக்கப் பெருமூச்சோடு தங்கள் கனவைக் கனவாகவே முடித்துக்கொண்டு விடுகிறார்கள். அவ்வாறு செய்யத் தேவையில்லை. துணிந்து திட்டத்தில் இறங்குங்கள் என்கிறது இந்நூல்.
என் ஸ்டார்ட்அப் வெற்றி பெறுமா என்பதை எப்படித் தெரிந்துகொள்வது? தெரிந்துகொண்டபிறகு என்ன செய்யவேண்டும்? முதலீட்டுக்கு எப்படி நிதி திரட்டுவது? பார்ட்னர் வைத்துக்கொள்ளவேண்டுமா அல்லது தனியாகவே ஆரம்பிக்கலாமா? எப்படி விளம்பரம் செய்வது? எப்படி வாடிக்கையாளர்களைப் பெறுவது? போட்டிகளை எப்படிச் சமாளிப்பது? பயணத்தைத் தொடங்கிய பிறகு படுகுழிகள் தென்பட்டால் என்ன செய்வது? திறமையாக நிர்வாகம் செய்வது எப்படி?
நிர்வாகவியல், மார்க்கெட்டிங் உள்ளிட்ட துறையில் நிபுணத்துவம் பெற்ற சதீஷ் கிருஷ்ணமூர்த்தியின் இந்நூல் ஸ்டார்ட்அப் உலகம் பற்றிய மிகச் சிறந்த அறிமுகத்தை எளிமையாக அளிக்கிறது.