Category
- University Magazine
- English Books
- Environment & Nature
- Science
- Investment & Strategy
- Medicine
- Linguistics
- Astronomy
- (Auto)Biography & Memoir
- Biological Sciences
- Business
- Career & Success
- Oil Politics
- Communication Skills
- Creativity
- Digital Marketing & E-commerce
- Economics
- Education & Research
- Entrepreneurship
- Health & Nutrition
- History
- Humor
- Love & Relationships
- Management & Leadership
- Marketing & Sales
- Mental Health
- Mathematics & Physics
- Mindfulness & Happiness
- Money & Investment
- Motivation & Inspiration
- Parenting
- Personal Development
- Personal Finance
- Philosophy
- Politics
- War
- Popular Science
- Productivity
- Psychology
- Religion & Spirituality
- Society & Culture
- Sports
- Travel & Adventure
- Technology & the Future
- True Crime
- Venture Capital
- Women Empowerment
- தமிழ் Books
- அரசியல்
- ஆரோக்கியம்
- உத்வேகம் & ஊக்கம்
- உற்பத்தித்திறன்
- உளவியல்
- புனைவு
- காதல் மற்றும் உறவு
- சமூகவியல்
- சுயசரிதைகள் மற்றும் நினைவுகள்
- சுயமுன்னேற்றம்
- தத்துவஞானம்
- தலைமைத்துவம்
- தொழில் மற்றும் வெற்றி
- தொழில்நுட்பம் & எதிர்காலம்
- பொருளாதாரம்
- பங்குச்சந்தை
- தொழில்முனைவு
- நெட்வொர்க் மார்க்கெட்டிங்
- போர்
- பணம்
- மதம் & ஆன்மீகம்
- வணிகம் & மேலாண்மை
- வரலாறு
- விஞ்ஞானம் & பிரபல அறிவியல்
- சினிமா
- கவிதைகள்
- மன ஆரோக்கியம்
- குழந்தை வளர்ப்பு
- குற்றம்
- மருத்துவம்
- மொழி
- கிளாசிக்ஸ்
Category
- English Books
- (Auto)Biography & Memoir
- Artificial Intelligence
- Astronomy
- Atheism & Agnosticism
- Biological Sciences
- Business
- Career & Success
- Communication Skills
- Creativity
- Digital Marketing & E-commerce
- Economics
- Education & Research
- Entrepreneurship
- Environment & Nature
- Health & Nutrition
- History
- Humor
- Investment & Strategy
- Linguistics
- Love & Relationships
- Management & Leadership
- Marketing & Sales
- Mathematics & Physics
- Medicine
- Mental Health
- Mindfulness & Happiness
- Money & Investment
- Motivation & Inspiration
- Oil Politics
- Parenting
- Personal Development
- Personal Finance
- Philosophy
- Politics
- Popular Science
- Productivity
- Psychology
- Religion & Spirituality
- Science
- Society & Culture
- Sports
- Technology & the Future
- Travel & Adventure
- True Crime
- Venture Capital
- War
- Women Empowerment
- University Magazine
- தமிழ் Books
- அரசியல்
- ஆரோக்கியம்
- உத்வேகம் & ஊக்கம்
- உற்பத்தித்திறன்
- உளவியல்
- கவிதைகள்
- காதல் மற்றும் உறவு
- கிளாசிக்ஸ்
- குற்றம்
- குழந்தை வளர்ப்பு
- சமூகவியல்
- சினிமா
- சுயசரிதைகள் மற்றும் நினைவுகள்
- சுயமுன்னேற்றம்
- தத்துவஞானம்
- தலைமைத்துவம்
- தொழில் மற்றும் வெற்றி
- தொழில்நுட்பம் & எதிர்காலம்
- தொழில்முனைவு
- நெட்வொர்க் மார்க்கெட்டிங்
- பங்குச்சந்தை
- பணம்
- புனைவு
- பொருளாதாரம்
- போர்
- மதம் & ஆன்மீகம்
- மன ஆரோக்கியம்
- மருத்துவம்
- மொழி
- வணிகம் & மேலாண்மை
- வரலாறு
- விஞ்ஞானம் & பிரபல அறிவியல்
- விளையாட்டு
Category: காதல் மற்றும் உறவு
Showing all 6 results
அதிக ஆற்றல்வாய்ந்த மனிதர்களின் 7 பழக்கங்கள்
Rs. 4,690.00Rs. 4,390.00Read moreஸ்டீபன் ஆர். கவி
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
தனிநபர் மாற்றத்திற்கான சக்தி மிக்க படிப்பினைகள் என, தனி மனித மேலாண்மைத் தத்துவங்களை விவரமாகத் தருகிறது. நான்கு பகுதிகளில் மேலாண்மைக் கருத்துகளைத் தெளிவாகக் கொடுத்துள்ளார் நூலாசிரியர் ஸ்டீபன் ஆர்.கவி. ஏழு பழக்கங்கள், தனி மனித வாழ்வையே வெற்றிகரமாக மாற்றியமைத்துவிடும் என்பதைப் பதிவு செய்கிறது. இதில், இவர் முதல் பழக்கமாக முன்வைப்பது, முன்யோசனையுடன் செயலாற்றுதல் என்பதை! பழக்கம் இரண்டு என இவர் குறிப்பிடுவது, முடிவை மனத்தில் வைத்துத் துவங்குதல் என்பதை! இதில் தனி மனித தலைமைத்துவம் குறித்த கொள்கைகள் இடம்பெற்றுள்ளன. அடுத்து மூன்றாவது பழக்கமாக, “முதலில் செய்ய வேண்டியவற்றை முதலில் செய்தல்’ என்பது. இதில் நிர்வாகம் குறித்தக் கருத்துகள் நிறைய உள்ளன.
ஆண்களின் பூர்வீகம் செவ்வாய் பெண்களின் பூர்வீகம் சுக்கிரன்
Rs. 1,590.00Read moreஜான் கிரே
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
இந்த புத்தகத்தில், ஆசிரியர் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை அங்கீகரிப்பதன் மூலம் சிறப்பாக தொடர்புகொள்வதற்கு ஒரு தனித்துவமான, நடைமுறை மற்றும் நிரூபிக்கப்பட்ட வழியை வழங்குகிறார். மோதல்களை எவ்வாறு குறைப்பது என்பது குறித்த நடைமுறை ஆலோசனைகள், துணைவர்களின் நடத்தையை எவ்வாறு விளக்குவது மற்றும் புதிய உறவுகளை ஆக்கிரமிப்பதில் இருந்து உணர்ச்சிகரமான “கடந்த காலத்திலிருந்து குப்பைகளை” தடுக்கும் முறைகள் பற்றிய முக்கியமான தகவல்களுடன், இந்த புத்தகம் ஆழமான மற்றும் திருப்திகரமாக வளர விரும்பும் தம்பதிகளுக்கு ஒரு மதிப்புமிக்க கருவியாகும்.
உலகிலேயே மகிழ்ச்சியான மனிதர்: நாஜி வதை முகாமிலிருந்து
Rs. 2,390.00Read moreஎடி ஜேக்கூ
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
முதலில் தான் ஒரு ஜெர்மானியர், பிறகுதான் தான் ஒரு யூதர் என்று எடி ஜேக்கூ தன்னைப் பற்றி எப்போதுமே கருதி வந்திருந்தார். ஆனால் அந்த எண்ணம், 1938 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், நாஜிப் படையினர் அவரை அடித்து உதைத்துக் கைது செய்து வதை முகாமுக்கு இழுத்துச் சென்றபோது முற்றிலுமாக மாறியது. அதற்கடுத்த ஏழு ஆண்டுகள், கற்பனையில்கூட யாராலும் நினைத்துப் பார்க்க முடியாத கொடூரங்களை எடி நாள்தோறும் அனுபவித்தார், நாஜிக்களிடம் அவர் தன்னுடைய குடும்பத்தினரையும் நண்பர்களையும் தன்னுடைய சொந்த நாட்டையும் இழந்தார். இறுதியில் அவர் எப்படியோ தப்பிப் பிழைத்துவிட்டதால், இனி தன் வாழ்நாள் முழுவதும் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதென்று அவர் ஓர் உறுதிமொழி மேற்கொண்டார்.
அவர் தன்னுடைய வதை முகாம் அனுபவங்களிலிருந்து தான் கற்றுக் கொண்டவற்றைப் பற்றிச் சொற்பொழிவுகள் ஆற்றி வருவதன் மூலமும், ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருவதன் மூலமும், நாஜிக்களின் அடக்குமுறையின்கீழ் உயிரிழந்தவர்களுக்கும் தங்களுடைய சொந்தபந்தங்களை இழந்தவர்களுக்கும் அவர் அஞ்சலி செலுத்துகிறார். அவருடைய 100 ஆவது பிறந்தநாளையொட்டி வெளியிடப்பட்ட இந்நூல், இருண்ட காலகட்டங்களில்கூட மகிழ்ச்சியைக் கண்டுகொள்ள முடியும் என்ற நம்பிக்கையை விதைக்கின்ற ஒன்றாக மிளிர்கிறது.
ஒரு இளம் பெண்ணின் நாட்குறிப்பு
Rs. 1,790.00Add to cartஆன் ஃப்ராங்க்
தமிழில்: மைதிலி சம்பத்
ஆன் ஃப்ராங்கின் நாட்குறிப்பிற்கு அறிமுகம் தேவையில்லை.
மனித சரித்திரத்தின் பயங்கரமான ஒரு காலகட்டத்தில், அழகாக எழுதப்பட்ட ஒரு இளம் பெண்ணின் வாழ்க்கை சரித்திரம் இது.எத்தனையோ இடர்பாடுகளை எதிர்த்து போராடியும், உயிர் வாழ விரும்பும் மனிதனின் அழிக்க முடியாத உறுதிக்கு இது ஒரு நிரூபணம். ஆன் ஃப்ராங்க் இரண்டாம் உலகப்போரில் பலியாகி இருப்பினும், அவளுடைய கதையையும், அவள் நாட்குறிப்பின் ஒவ்வொரு அங்குலத்தையும் எடுத்துக் கொண்டுள்ள அவள் வார்த்தைகள்,
அவளுடைய நினைவுகளை உலகம் அறிந்து கொள்வதற்காக பல காலமாக உயிருடன் வைத்திருக்கிறது…
காதல் மொழிகள் ஐந்து
Rs. 2,390.00Read moreகேரி சேப்மேன்
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
காதலின் மொத்த வெளிப்பாடாகத் தெரியும் ஒரு விஷயம் உங்கள் கணவருக்கோ அல்லது மனைவிக்கோ அர்த்தமற்ற ஒன்றாகப் படலாம். இல்லறத்தில் ஈடுபட்டுள்ள இருவரும் ஒருவர் மற்றொருவரின் பிரத்யேகத் தேவைகளைப் புரிந்து கொள்ளக் கடைசியாக இப்புத்தகத்தின் மூலம் ஒரு வழி பிறந்துள்ளது. உங்கள் துணைவருக்குப் புரிந்த மொழியை நீங்கள் பேசக் கற்றுக் கொண்டு அவரிடம் பேசிப் பாருங்கள், உங்கள் காதல் வாழ்க்கையில் ஒரு புதிய வசந்தம் வீசத் துவங்குவதைக் கண்டு மெய்சிலிர்ப்பீர்கள்!
பேராசிரியர் மோரியுடன் நான் செலவிட்டச் செவ்வாய்க் கிழமைகள்
Rs. 1,890.00Read moreமிட்ச் ஆல்பம்
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
‘மிகவும் அருமையாக எழுதப்பட்டுள்ள இந்நூல், வாழ்க்கையின் சிக்கல்களைக் கடந்த எளிமையையும் ஞானத்தையும் தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கிறது.”
–எம். ஸ்காட் பெக், எம்.டி. நூலாசிரியர்இந்நூல் ஒரு வியத்தகு பொக்கிஷம். இறப்பு நிச்சயம் என்ற உணர்வு நம்முடைய மாபெரும் ஆசானாகவும் ஞானத்தின் மூலாதாரமாகவும் திகழ்கிறது. இந்நூலைப் படித்து முடித்ததும் நான் சிரித்தேன், பிறகு அழுதேன். என்னுடைய குழந்தைகளுக்காக நான் உடனடியாக இதன் ஐந்து பிரதிகளை வாங்கினேன்.”
–பெர்னி எஸ். சீகல், எம்.டி, நூலாசிரியர்“அருமையான, இதயத்தை நெகிழ வைக்கின்ற இந்நூலின் ஒவ்வொரு பக்கமும் தயக்கமில்லாத அன்பின் கதகதப்பால் ஒளிர்கிறது.”
–யூத மதகுரு ஹெரால்டு குஷ்னர், நூலாசிரியர்“தன்னுடைய வழிகாட்டியின்மீது அன்பைப் பொழிகின்ற ஒரு மனிதனின் கதை இது. வாழ்க்கைக்குச் செறிவூட்டுகின்ற ஒப்புயர்வில்லா நேர்மை இதில் இழையோடுகிறது.”
–ராபர்ட் பிளை, நூலாசிரியர்“மிட்ச் தன்னுடைய ஆசிரியரிடமிருந்து பெற்ற ஓர் அற்புதமான பரிசை, இந்நூலின் வாயிலாக ஒரு வழிகாட்டியாகவும், ஒரு நமக்கும் வழங்குகிறார். மனிதாபிமானியாகவும், ஓர் ஆன்மிகவாதியாகவும் விளங்கிய பேராசிரியர் மோரி, வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பதற்கு ஒரு முழுநீள வகுப்பை நடத்தியுள்ளார்.”
— ஏமி டேன் நூலாசிரியர்“நெஞ்சைக் கொள்ளை கொள்ளும் விதத்திலும் துடிப்புடனும் எழுதப்பட்டுள்ள இந்நூல், அன்பு மற்றும் இரக்கத்தின் ஊடாக ஒருவரோடு ஒருவர் ஒரு பிணைப்பை உருவாக்கிக் கொள்வதுதான் மிக முக்கியமான வாழ்க்கைப் பாடம் என்பதில் பேராசிரியர் மோரி கொண்டிருந்த ஆணித்தரமான நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. அப்பாடத்தை நம்முடன் பகிர்ந்து கொண்டிருப்பதன் மூலம் மிட்ச் தன்னுடைய குருவுக்கு ஒரு மாபெரும் பரிசை வழங்கியுள்ளார்.”
–டாக்டர் ஜேன் கிரீர் நூலாசிரியர்“சில சமயங்களில், நீங்கள் உங்களைச் சுற்றிலும் உங்கள் பார்வையை மீண்டும் ஒரு முறை ஓடவிட்டால், நாமெல்லாம் தேவதைகளின் நடுவே இருப்பதை உங்களால் கண்டுகொள்ள முடியும். தன்னுடைய சொந்த இறப்பை எதிர்கொண்டிருக்கின்ற அதே நேரத்தில், எப்படி வாழ வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுக்க மோரி போன்ற ஒரு மனிதரால்தான் முடியும். அவர் ஒரு ஞானி என்று கூறினால் அது மிகையாகாது. இந்நூலைப் படித்து முடித்தப் பிறகு, வகுப்பு இன்னும் முடியவில்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.”
–ஜெஃப் டேனியல்ஸ்