Opening Possibilities, Illuminating Potentials
Island-wide Free Delivery for Purchase of Rs. 3990 or above.

Cart

Your Cart is Empty

Back To Shop
Contact Us 0764980321

Category: உத்வேகம் & ஊக்கம்

Showing 1–60 of 100 results

  • ஆழ்மனத்திற்கு அப்பாலுள்ள அதிசய சக்தி ( Aazhmanathitku Appal Ulla Athisaya Sakthi )

    Rs. 2,690.00
    or 3 X Rs.896.67 with

    ஜேம்ஸ் ஜென்சன்

     

    தமிழில்: நாகலட்சுமி சண்முகம்

     

    டாக்டர் ஜோசப் மர்ஃபி ஆழமன உளவியல் துறையின் முன்னோடிகளில் ஒருவர் என்பதில் சந்தேகமில்லை. 1963ல் ‘ஆழ்மனத்தின் அற்புத சக்தி’ என்ற அவருடைய நூல் வெளியானதிலிருந்து, ஆய்வுகள் மூலமாகப் பல கூடுதலான விஷயங்கள் ஆழ்மன உளவியல் துறையில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. அதோடு, இன்று நாம் வாழும் இவ்வுலகம், சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிடப் பெருமளவு மாறியுள்ளது.

     

    டாக்டர் ஜோசப் மர்ஃபியின் மூல உரையைத் திருத்தியமைத்து, “ஆழ்மனத்தின் அற்புத சக்தி” என்ற அதன் தலைப்பிற்குக் கீழே வெறுமனே “புதிதாகத் திருத்தியமைக்கப்பட்டது” என்ற வார்த்தைகளுடன் அந்நூலை வெளிகொணரலாம் என்றுதான் முதலில் நான் நினைத்திருந்தேன்.

     

    இது தொடர்பாக நான் ஆய்வு செய்து கொண்டிருந்தபோது, இக்காலத்தியத் தகவல்கள் மிக அதிக அளவில் இருந்ததை நான் கண்டறிந்தேன். இதன் விளைவாக உருவானதுதான் இந்நூல். திருத்தியமைக்கப்பட்ட இப்புதிய பதிப்பின் மூலமாக இத்துறை தொடர்பான புதிய ஆராய்ச்சிகளையும் கண்டுபிடிப்புகளையும் வாசகர்களுக்கு வழங்க நான் முயற்சித்துள்ளேன். இதன் மூலம் நூலில் இடம்பெற்றிராத “ எப்படி செய்ய வேண்டும் “ என்பது போன்ற விஷயங்களையும் நாம் இந்நூலில் சேர்த்திருக்கிறேன். — ஜேம்ஸ் ஜென்சன்

    or 3 X Rs. 896.67 with Koko Koko
    Add to cart
  • கணம் கணம் வெல்வோர்க்கான கொள்கை ( Kanam Kanam Velvorkkana Kolkai ) The Everyday Hero Manifesto

    Rs. 2,590.00
    or 3 X Rs.863.33 with

    ராபின் ஷர்மா

     

    இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக, சரித்திரம் படைத்த ஆமையாகவும், மிகச்சிறந்த செயல்வீரராகவும் ராபின் ஷர்மா திகழ்ந்து வருகிறார். பல பிரபல வணிக ஆளுமைகள், புகழ்பெற்ற விளையாட்டு வீரர்கள், கேளிக்கை உலகின் நட்சத்திரங்கள் ஆகியோர், தங்களுடைய உயர்ந்த இலட்சியங்களை, அன்றாட வெற்றிகளாக மாற்றிக் கொள்ள உதவும் வழிமுறைகளை, தன்னுடைய புதுமையான பயிற்சி முறைகளின் மூலம் ராபின் ஷர்மா சாத்தியப்படுத்தி வருகிறார்.

     

    இப்போது அவருடைய முதன்மையான படைப்பான, ‘கணம் கணம் வெல்வோர்க்கான கொள்கை” என்ற இந்நூலின் மூலம், தலைசிறந்த கொள்கைகள், வழிமுறைகள், கருவிகள் ஆகியவற்றின் சாரத்தை, வெற்றிக்கான வழிகளாக முன்வைத்துள்ளார். இந்நூல், உங்கள் திறமைகளை உயர்த்துவதுடன், உலகத்தர வாழ்க்கையை வழங்கும் பயிற்சி நூலாகவும் அமையும். மேலும் உங்களை ஆன்மிக வழியில் முன்னேற்றவும் இது உதவும்.

    or 3 X Rs. 863.33 with Koko Koko
    Add to cart
  • மாவீரன் அலெக்சாண்டர் / Maveeran Alexander

    Rs. 2,690.00
    or 3 X Rs.896.67 with

    எஸ்.எல்.வி.மூர்த்தி

     

    ஆயிரம் தன்னம்பிக்கை நூல்களை வாசிப்பதும் அலெக்சாண்டரின் வாழ்க்கையை வாசிப்பதும் ஒன்றே !

     

    ஆறு, ஏழு, எட்டாம் வகுப்புகளிலேயே, நம் எல்லோருக்கும் மாவீரன் அலெக்சாண்டர் பரிச்சயமானவர், பாலபருவத்தில், நம் மதைக் கவர்ந்த பத்து மாமனிதர்களைப் பட்டியல் போடச் சொன்னால், அவர்களுள் ஒருவராக அலெக்சாண்டர் நிச்சயம் இருப்பார்.

     

    அலெக்சாண்டரின் யுத்த, நிர்வாக, கலாச்சாரப் பரிவர்த்தனைச் சாதனைகள் அற்புதமானவை, பிரமிக்க வைப்பவை. உண்மையில், இவையெல்லாம் அலெக்சாண்டர் என்ற மாபெரும் ஆளுமையின் அடையாளங்கள் மட்டுமே. இவை அனைத்தையும் தாண்டி, இன்னொரு மெய்யான அலெக்சாண்டர் இருக்கிறார். அத்தனைய அலெக்சாண்டரின் விஸ்வரூபத்தை எழுத்துவடிவில் காட்சிப்படுத்துகிறார் நூலாசிரியர் எஸ்.எல்.வி.மூர்த்தி.

     

    ஆசை, ஆசை, ஆசை, ஆசை ஒரு மனித வடிவெடுத்து வந்தால், அதுதான் அலெக்சாண்டர். சாதாரண மனிதர்கள் 33 பிறவிகள் எடுத்தாலும் கனவு காணக்கூட முடியாத சிகரங்களைத் தன் 33 வயதில் அலெக்சாண்டர் எட்டியதற்குக் காரணம், அவருடைய அடங்காத ஆசை.

    உலகை வெல்லும் ஆசையைக் கொண்டு சாதித்தவை ஏராளம்.

     

    ஜூலியஸ் சீஸர், நெப்போலியன் புத்தகங்களின் வரிசையில் எஸ்.எல்.வி.மூர்த்தியின் முக்கியமான பதிவு, மாவீரன் அலெக்சாண்டர் !

    or 3 X Rs. 896.67 with Koko Koko
    Add to cart
  • இலக்குகள்! ( Ilakkugal )

    Rs. 2,690.00
    or 3 X Rs.896.67 with

    பிரையன் டிரேசி

     

    தமிழில்: நாகலட்சுமி சண்முகம்

     

    பெரும்பாலானோருக்கு, தாங்கள் குறி வைக்கும் இலக்குகள் வெறும் கனவாகவே இருந்துவிடும்போது, ஒரு சிலரால் மட்டும் தாங்கள் தேர்ந்தெடுக்கும் இலக்குகள் அனைத்தையும் எப்படி அடைந்துவிட முடிகிறது? இதற்கான விடை ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது என்கிறார் பிரையன் டிரேசி. ஒருசில வெற்றியாளர்களுக்கு மட்டுமே தெரிந்திருந்த அந்த ரகசியங்களை இப்புத்தகத்தில் அவர் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

     

    இருபதாண்டுகால அனுபவத்தையும் நாற்பதாண்டுகால ஆராய்ச்சிகளையும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள இப்புத்தகம், இலக்குகளை நிர்ணாயிக்கவும் அவற்றை அடையவும் தேவையான, நடைமுறைக்கு உகந்த, நிரூபணமான உத்திகளைத் தெள்ளத்தெளிவாக எடுத்துரைக்கிறது. இப்புத்தகத்தினால் இதுவரை பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் பயனடைந்துள்ள்னர்.

     

    எந்தவிதமான இலக்குகளாக இருந்தாலும் சரி, அவற்றை அடையத் தேவையான 12 அம்சத் திட்டம் ஒன்றை பிரையன் டிரேசி இந்நூலில் முன்வைக்கிறார். ஒருவருடைய வலிமைகளை எவ்வாறு அடையாளம் காண்பது, சுயமதிப்பையும் சுயதுணிச்சலையும் எவ்வாறு வளர்த்தெடுப்பது, எதிர்ப்படும் தடைகற்களை எவ்வாறு தகர்த்தெறிவது, சவால்களை எவ்வாறு எதிர்கொள்வது போன்றவற்றை அவர் இப்புத்தகத்தில் அறிவியற்பூர்வமான கண்ணோட்டத்துடன் அணுகுகிறார்.

     

    இலக்குகள் குறித்து இனி நீங்கள் வேறு ஒரு புத்தகத்தைத் தேடி அலைய வேண்டியதில்லை.

    or 3 X Rs. 896.67 with Koko Koko
    Add to cart
  • Sale!
    Nandan Neela Kani Flashbookslk

    நந்தன் நிலேகனி: இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையின் பிராண்ட் அம்பாசிடர்

    Rs. 550.00
    or 3 X Rs.183.33 with

    ராஜீவ் திவாரி

    Infosys நிறுவனத்துடனான நந்தன் நிலேகனியின் பயணம் 1978 இல் தொடங்கியது, Infosys உருவாவதற்கு முன்பே, அவர் IIT பாம்பேயில் பட்டம் பெற்ற பிறகு Patni Computers சேர்ந்து N.R. கீழ் பணியாற்றத் தொடங்கினார். நாராயண மூர்த்தி. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, ஜூலை 2, 1981 இல், Infosys மூர்த்தி மற்றும் பிற இணை நிறுவனர்களான எஸ். கோபாலகிருஷ்ணன், கே.தினேஷ், என்.எஸ்.ராகவன், என்.எம்.நீலேகனி மற்றும் எஸ்.டி.ஷிபுலால். மூர்த்தி தனது மனைவியிடமிருந்து ரூ.10,000 கடன் வாங்கி, 1980கள் மற்றும் 1990களில் Infosys உருவாக்க குழு கடுமையாக உழைத்தது.

    Infosys தலைமை அலுவலகம் பெங்களூரில் உள்ளது. இது IT மற்றும் BPO சேவைகளில் நிபுணத்துவம் பெற்றது. இது உலகம் முழுவதும் இத்தகைய சேவைகளை வழங்குகிறது மற்றும் 58,000 பணியாளர்களைக் கொண்டுள்ளது. இதன் ஆண்டு வருமானம் $2 பில்லியன் மற்றும் சந்தை மூலதனம் $21 பில்லியன். நந்தன் நிலேகனி நாராயண மூர்த்தியுடன் இணைந்து Infosys நிறுவனத்தை 1981 இல் தொடங்கினார். அவர் மார்ச் 2002 இல் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்படும் வரை நிறுவனத்தில் பல பதவிகளை வகித்துள்ளார்.

    or 3 X Rs. 183.33 with Koko Koko
    Add to cart
  • Nam valvu Flashbookslk

    நல் வாழ்வு நம் கையில்  

    Rs. 1,790.00
    or 3 X Rs.596.67 with

    லூயிஸ் எல். ஹே

     

    சுய மதிப்பீடு என்பது ஒரு கலை. சகல நலன்களையும் அடைய விரும்புகிற எவருக்கும் மிக மிக அவசியம் இந்த சுயமதிப்பீடு. சித்தர்கள் முதல் தத்துவ வித்தகர்கள் வரை எண்ணற்ற ஞானியர் தமது சித்தாந்தங்களின் திரட்சியாகவும், இறுதித் தீர்ப்பாகவும் கூறுவது,

    “”உன்னையே நீ அறி என்பது தான். “”உனக்கான தீர்வுகள் அனைத்தும் உனக்குள்ளேயே உள்ளன என்பதைக் கேட்டு யாரும் மிரள வேண்டியதில்லை. இதற்கான எளிய பயிற்சிகளைத் தான் இந்நூல் அருமையாக விவரிக்கிறது. மனவலிமையை வளர்த்துக் கொண்டே சக்தியின் மூலம் புற்று நோயிலிருந்தே முற்றிலும் தன்னை விடுவித்துக் கொண்ட பெண்மணியான லூயிஸ் எல்.ஹே, உலக மக்களின் உயர்வுக்கான பல சூட்சுமங்களை இதில் விவரித்துள்ளார்.

    or 3 X Rs. 596.67 with Koko Koko
    Add to cart
  • ஒரு துறவியைப்போலச் சிந்தியுங்கள் (Think Like a Monk)

    Rs. 3,290.00
    or 3 X Rs.1,096.67 with

    ஜே  ஷெட்டி

     

    நீங்கள் ஒரு துறவியைப்போலச் சிந்திக்கின்றபோது இவற்றைப் புரிந்து கொள்வீர்கள்: • உங்களுடைய வாழ்வின் நோக்கத்தை எவ்வாறு அடைவது • எதிர்மறைகளை எவ்வாறு மீறுவது • அளவுக்கதிகமாகச் சிந்திப்பதை எவ்வாறு நிறுத்துவது • மகிழ்ச்சியைத் தேடினால் ஏன் அதை உங்களால் கண்டுபிடிக்க முடியாது • சந்திக்கும் அனைவரிடமிருந்தும் எவ்வாறு கற்றுக் கொள்வது • நீங்கள் ஏன் உங்களுடைய எண்ணம் அல்லர் • வெற்றிக்குப் பரிவு இன்றியமையாததாக இருப்பது ஏன் • இன்னும் பற்பல விஷயங்கள். . .

    or 3 X Rs. 1,096.67 with Koko Koko
    Add to cart
  • நீங்கள் சிந்திக்கின்ற அனைத்தையும் நம்பி விடாதீர்கள் (Don’t Believe Everything You Think)

    Rs. 1,690.00
    or 3 X Rs.563.33 with

    ஜோசப் நுயென்

     

    வலி தவிர்க்கப்பட முடியாதது, ஆனால் வேதனை அப்படியல்ல. உங்களுடைய மூளையை மறுவடிவமைப்பது, உங்களுடைய கடந்தகாலத்தை மாற்றி எழுதுவது, நேர்மறைச் சிந்தனை போன்ற எதைப் பற்றியதும் அல்ல இந்நூல். இதில் நீங்கள் கீழ்க்கண்டவற்றைக் கற்றுக் கொள்வீர்கள்: • அனைத்து விதமான உளவியல்ரீதியான மற்றும் உணர்வுரீதியான வேதனைகளுக்குமான மூலகாரணத்தைக் கண்டறிந்து அதைக் களைவது எப்படி • எதிர்மறை எண்ணங்களாலும் உணர்வுகளாலும் அலைக்கழிக்கப்படாமல் இருப்பது எப்படி • உங்களுடைய சூழல் எதுவாக இருந்தாலும், அன்பு, அமைதி மற்றும் ஆனந்தத்தை அனுபவிப்பது எப்படி • சிந்தனையைக் கடந்து நிற்கின்ற உங்களுடைய உள்ளுணர்வையும் உள்ளார்ந்த ஞானத்தையும் கைவசப்படுத்துவது எப்படி • ஊக்குவிப்பு மற்றும் மன உறுதியின் உதவியின்றி, சுய சந்தேகம், சுய அழிவு போன்றவற்றிலிருந்து விடுபடுவது எப்படி நம்முடைய மனத்தின் அளப்பரிய ஆற்றலை அறிந்து கொள்வதற்கும், நாம் விரும்புகின்ற வாழ்க்கையை உருவாக்கிக் கொள்வதற்கும் தேவையான அனைத்து விஷயங்களும் இந்நூலில் அடங்கியுள்ளன.

    or 3 X Rs. 563.33 with Koko Koko
    Add to cart
  • செல்வந்தராக்கும் சுலப விஞ்ஞானம் ( Selvantharakkum Sulaba Vinganam ) The Science of Getting Rich

    Rs. 890.00
    or 3 X Rs.296.67 with

    வாலஸ் டி வாட்டில்ஸ்

    தமிழில்: பி. உதயகுமார்

     

    ரோண்டா பைரனின் (Rhonda Byrne) அதிகம் விற்பனையாகும் புத்தகம் மற்றும் திரைப்படமான இரகசியம் (The Secret) ன் உத்வேகம் இந்தப் புத்தகம்தான். வாலஸ் வாட்டில்ஸ், செல்வம் பெறுவதற்கான வழியில் சிந்தனை மற்றும் மன உறுதியை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை சுருக்கமாக காட்டுகிறது.

    or 3 X Rs. 296.67 with Koko Koko
    Add to cart
  • Sale!

    நிறைவான வாழ்க்கைக்கான நிகரற்றக் கொள்கைகள் ( Everyday Greatness: Inspiration for a Meaningful Life )

    Rs. 3,490.00
    or 3 X Rs.1,163.33 with

    ஸ்டீபன் ஆர். கவி

    தமிழில்: நாகலட்சுமி சண்முகம்

     

    ஊக்கமளிக்கும் கதைகள் மற்றும் நடைமுறை நுண்ணறிவு வாசகர்களுக்கு அன்றாட மகத்தான வாழ்க்கையை வாழ சவால் விடுகின்றன.

     

    செயல்படுவதற்கான தேர்வு – உங்கள் ஆற்றல்
    நோக்கத்தின் தேர்வு – உங்கள் இலக்கு
    கொள்கைகளுக்கான தேர்வு – உங்கள் இலக்குகளை அடைவதற்கான வழிமுறைகள்

     

    அடங்கும் தலைப்புகள்:

    அர்த்தத்தைத் தேடுதல்
    பொறுப்பேற்பது
    உங்களுக்குள்ளே தொடங்குகிறது
    கனவை உருவாக்குதல்
    மற்றவர்களுடன் அணிசேருதல்
    துன்பத்தை சமாளித்தல்

     

    மாயா ஏஞ்சலோ, ஜாக் பென்னி மற்றும் ஹென்றி டேவிட் தோரே போன்ற உலகின் மிக பிரபலமான மற்றும் அன்பான எழுத்தாளர்கள், தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் கதைகள் மற்றும் ஸ்டீபன் கோவியின் நுண்ணறிவு மற்றும் வர்ணனை, “பிரதிபலிப்புகள் ” ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் குழு அல்லது தனிப்பட்ட ஆய்வுக்குப் பயன்படுத்தக்கூடிய ஒரு திட்டத்தை உருவாக்க உதவுகிறது.

    or 3 X Rs. 1,163.33 with Koko Koko
    Add to cart
  • சிந்தனையை மாற்றுங்கள் வாழ்க்கையை மாற்றுங்கள்

    Rs. 3,190.00
    or 3 X Rs.1,063.33 with

    பிரையன் டிரேசி

    தமிழில்: சி. ஆர். ரவீந்திரன்

     

    உங்களுடைய எதிர்காலத்திற்கு உரிய வரைப்படத்தை உங்களுக்கு முன்னால் வைத்திருக்கிறீர்கள். வியக்கத் தகுந்த உங்களுடைய எதிர்காலத்தை நீங்களாகவே உருவாக்கிக் கொள்ள நீங்கள் செய்ய வேண்டியவை இவைதான். இந்தப் புத்தகத்தை நீங்கள் படிக்க வேண்டும். உங்களுடைய சொந்த வாழ்க்கையில் அதை எப்படிப் பயன்படுத்துவது என்பதை நீங்கள் முடிவு செய்ய வேண்டும். அதற்கு இந்த புத்தகம் உறுதுணையாக இருக்கும்.

     

    உங்களைப் பற்றியும், உங்களுடைய ஆற்றலைப் பற்றியும் நீங்கள் கொண்டிருக்கும் சிந்தனைகளைப் படிப்படியாக மாற்றி, அதன் மூலம் உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் மாபெரும் வெற்றி பெறுவது எப்படி என்பதை இப்புத்தகம் விளக்குகிற்து. நீங்கள் உங்களுக்காக நிர்ணயித்துக் கொள்ளும் இலக்கு எதுவானலும் அதை அடைய இந்த புத்தகம் வழிவகுக்கும்.

    or 3 X Rs. 1,063.33 with Koko Koko
    Add to cart
  • டேவிட்டும் கோலியாத்தும் / Davidum Koliyathum

    Rs. 1,990.00
    or 3 X Rs.663.33 with

    மால்கம் க்ளேட்வெல்

     

    கிட்டத்திட்ட மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக புராதன பாலஸ்தீனத்தில் ஆடு மேய்க்கும் சிறுவனான டேவிட் பெரிய உருவத்தைக் கொண்ட பராக்கிரமசாலியான கோலியாத்தை கவணின் உதவிகொண்டு அடித்து கீழே சாய்த்தான் என்பது வரலாறு. அந்தக் காலத்திலிருந்து இன்றுவரை பலவீ னமானவருக்கும் பலமானவருக்குமான பிரச்சினை, போட்டி என்றால் டேவிட், கோலியாத்தைத்தான் நாம் உதாரணமாகச் சுட்டிக் காட்டிக் கொண்டிருக்கிறோம்.

    டேவிட்டின் வெற்றியை நாம் சாத்தியமற்றது, அதிசயமானது எனக் கூறி வருகிறோம்.

     

    டேவிட்டும் கோலியாத்தும் என்கிற இந்தப் புத்தகத்தில் மால்கம் க்ளாட்வெல் நாம் எதையெல்லாம் வளர்ச்சிக்குத் தடையானது , சாத்தியமற்றது என நினைத்துக் கொண்டிருக்கிறோமோ அதற்கெல்லாம் சவால் விடுகிறார்.”பாரபட்சம் அல்லது உடல் அளவில் இயலாமை அல்லது பெற்றோரில் ஒருவரை இழந்து நிற்பது அல்லது சாதாரண பள்ளிக்கூடத்தில் படிப்பது அல்லது ஏதேனும் ஒன்றில் பின் தங்கியிருப்பது”-இப்படிப்பட்ட பிரச்சினைகள் கொண்டவர்கள் அதை எதிர்கொண்டு வெற்றி பெற முடியுமா?

     

    இந்த மாதிரியான தடைகள் இருந்தால் எதையும் சாதிக்கமுடியாது என நாம் வழக்கமாக நினைப்பதுண்டு.ஆனால் இந்தத் தடைகளுக்கும், சாத்தியமற்றவைகளுக்கும் புதிய விளக்கம் கொடுக்கிறார் மால்கம்.

     

    பல ஆண்டுகளுக்கு முன்பு டேவிட் என்ற ஆடு மேய்க்கும் சிறுவனுக்கும், பராக்கிரமசாலியான கோலியாத்துக்கும் என்ன நடந்தது என்கிற ஓர் உண்மைக்கதையோடு இந்தப் புத்தகம் ஆரம்பிக்கிறது. அதிலிருந்து வட அயர்லாந்து, ‘ட்ரபிள்ஸ்’ என அழைக்கப்பட்ட இன தேசியவாத மோதல், புற்றுநோய் ஆய்வாளர்களின் மனநிலை,சமூக உரிமை செயல்பாட்டாளர்கள்,கொலை, அதற்கு பதிலாக பழி தீர்த்தல், வெற்றி பெற்ற/வெற்றி பெறாத வகுப்பறைகளின் இயக்கவியல் எனப் பல தளங்களுக்குப் பயணித்து நாம் எவஎல்லாம் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கின்றன என நினைக்கிறோமோ அவையெல்லாம் எப்படி வெற்றிக்கு உதவுகின்றன என்பதை பல்வேறு ஆய்வுகளின் துணையுடன் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

     

    இவருடைய முந்தையப் புத்தகங்கள் போல – TIPPING POINT, BLINK, OUTLIERS, WHAT THE DOG SAW-டேவிட்டிலும் கோலியாத்திலும் நம்மைச் சுற்றியிருக்கும் உலகத்தில் நடப்பதை வழக்கத்திற்கு மாறாக அவதானித்து ஒரு மாற்றுச் சிந்தனையை வரலாறு, உளவியல், சமூகவியல் துறைகளில் செய்யப்பட ஆய்வுகளின் அடிப்படையில் நமக்குத் தந்திருக்கிறார்.

     

    வாருங்கள் நாமும் பயணிப்போம்!!

    or 3 X Rs. 663.33 with Koko Koko
    Add to cart
  • Do Epic shit tamil flashbooks.lk

    பெருங்கனவு காணத் துணியுங்கள்! ( Perung Kanavu Kaana Thuniyungal )

    Rs. 1,950.00
    or 3 X Rs.650.00 with

    அங்குர் வாரிக்கூ

     

    அங்குர் வாரிக்கூ தன்னுடைய முதல் நூலில், தன்னுடைய பயணத்திற்கு உந்துசக்தியாக விளங்கிய முக்கிய யோசனைகளைத் தொகுத்து வழங்கியுள்ளார். அவர் ஒரு விண்வெளிப் பொறியாளராக ஆக விரும்பியதில் தொடங்கிய அவருடைய பயணம், இலட்சக்கணக்கானவர்கள் இணையத்தில் பார்த்தும் படித்தும் உள்ள பல்வேறு படைப்புகளை உருவாக்குவதில் முடிந்தது.

     

    நீண்டகால வெற்றிக்குத் தேவையான பழக்கங்களை உருவாக்குவதன் முக்கியத்துவத்தில் தொடங்கி, நிதி நிர்வாகத்திற்கான அடித்தளம்வரையும், தோல்வியை ஆரத் தழுவிக் கொள்வது மற்றும் ஏற்றுக் கொள்வதில் தொடங்கி, பச்சாதாபத்தைக் கற்றுக் கொள்வதைப் பற்றிய உண்மைவரையும் அவருடைய சிந்தனை பரந்துபட்டதாக இருக்கிறது.

     

    இப்புத்தகம் நீங்கள் மீண்டும் மீண்டும் வாசிக்க வேண்டிய ஒன்று. இதிலுள்ள வரிகளை நீங்கள் அடிக்கோடிட்டுக் கொண்டு பின்னர் மீண்டும் மீண்டும் அவற்றைப் பற்றிச் சிந்தித்துப் பார்ப்பீர்கள். நீங்கள் உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் அந்நியர்களுக்கும் கொடுக்கப் போகின்ற ஒரு புத்தகம் இது. மிக அதிகமாகப் பரிசளிக்கப்பட்டப் புத்தகமாக இப்புத்தகம் உருவெடுக்க வேண்டும் என்பது அங்குரின் விருப்பமாகும்.

    or 3 X Rs. 650.00 with Koko Koko
    Add to cart
  • HOW TO HAVE CONFIDENCE AND POWER IN DEALING WITH PEOPLE Tamil flashbooks.lk

    மக்களைக் கையாளும்போது தன்னம்பிக்கையுடனும் திறமையுடனும் செயல்படுவது எப்படி

    Rs. 2,690.00
    or 3 X Rs.896.67 with

    லெஸ் ஜிப்லின்

     

    இது லெஸ் கிப்லின் அவர்களின் மக்களுடன் எவ்வாறு நம்பிக்கை மற்றும் சக்தியைக் கையாள்வது என்பதன் தமிழாக்கம். இந்த புத்தகத்தில், மனித உறவுகள் துறையில் அங்கீகரிக்கப்பட்ட நிபுணரான ஆசிரியர், மனித நடத்தைக்கு பின்னால் உள்ள அடிப்படைக் கொள்கைகளை தெளிவாக விளக்குகிறார். தனிநபர்கள் தங்களுக்குச் சாதகமாகச் செயல்படும் நேர்மறையான முடிவுகளுக்கு எவ்வாறு தொடர்பு கொள்ளலாம் என்பதை அவர் விவரிக்கிறார். ஒரு நல்ல முதல் தோற்றத்தை ஏற்படுத்துவதற்கும், கேட்கும் மற்றும் பேசும் திறன்களை மேம்படுத்துவதற்கும், மற்றவர்களை பாதிக்கும் வகையில், மக்களை வெற்றிகரமாக நிர்வகிப்பதற்கும் நேரத்தைச் சோதனைக்குட்பட்ட நுட்பங்கள் மற்றும் உத்திகளைக் கற்றுக்கொள்ள இந்தப் புத்தகம் உதவும்.

    or 3 X Rs. 896.67 with Koko Koko
    Add to cart
  • Life is what you make it Tamil flashbooks.lk

    ஆக்கப்படுவதே வாழ்க்கை

    Rs. 1,590.00
    or 3 X Rs.530.00 with

    பிரீத்தி ஷெனாய்

     

    நீங்கள் சென்றுக்கொண்டிருக்கும் பாதையை விதி வளைத்து விட்டால் என்ன செய்வீர்கள்? நீங்கள் செல்ல விரும்பாத இடத்திற்கு அது உங்களைத் தூக்கி எறிந்தால் என்ன செய்வது? நீங்கள் போராடுவீர்களா, ஓடுவீர்களா அல்லது ஏற்றுக் கொள்வீர்களா?

     

    எண்பதுகளின் முற்பகுதியில் இந்தியாவின் இரண்டு நகரங்களில் அமைக்கப்பட்ட வாழ்க்கை என்பது அங்கிதாவின் சில குறிப்பிடத்தக்க வருட வாழ்க்கையின் ஒரு பிடிப்புக் கணக்கு. அங்கிதா ஷர்மா உலகத்தை தன் காலடியில் வைத்திருக்கிறாள். அவள் இளமையாக இருக்கிறாள், அழகாக இருக்கிறாள், புத்திசாலியாக இருக்கிறாள், மேலும் பல நண்பர்கள் மற்றும் பையன்கள் அவளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவள் எம்பிஏவுக்கான முதன்மையான மேலாண்மைப் பள்ளியில் சேரவும் முடிகிறது. ஆறு மாதங்களுக்குப் பிறகு, அவள் மனநல மருத்துவமனையில் நோயாளியாக இருக்கிறாள். வாழ்க்கை கொடூரமாகவும் குளிராகவும் அவளுக்கு மிகவும் அர்த்தமுள்ளதாக இருந்ததை பறித்துக்கொண்டது, அதையெல்லாம் திரும்பப் பெற அவள் இப்போது போராட வேண்டும்.

     

    இது வளர்ந்து வரும், நம்பிக்கையின் சக்தி மற்றும் உறுதியும், அடக்க முடியாத ஆவியும் எப்படி விதி உங்கள் மீது வீசினாலும் அதை எப்படி வெல்ல முடியும் என்பது பற்றிய ஆழமான நகரும் மற்றும் ஊக்கமளிக்கும் பதிவு. ஒரு கதை, அதன் மையத்தில் ஒரு காதல் கதை, இது நம்மைப் பற்றிய நமது நம்பிக்கைகளையும், நமது நல்லறிவுக் கருத்தையும் கேள்விக்குள்ளாக்குகிறது, மேலும் ஒருவர் அதை உருவாக்குவதுதான் வாழ்க்கை என்று நம்பும்படி நம்மைத் தூண்டுகிறது.

    or 3 X Rs. 530.00 with Koko Koko
    Add to cart
  • இரகசியம் ( Irahasiyam ) The Secret

    Rs. 3,290.00
    or 3 X Rs.1,096.67 with

    ரோன்டா பைர்ன்

     

    தமிழில்: PSV குமாரசாமி

     

    இரகசியத்தைப் படிப்படியாக நீங்கள் புரிந்து கொள்ளும்போது நீங்கள் விரும்பும் அனைத்தையும் பெறுவது எப்படி, வேண்டிய நிலைகளை அடைவது எப்படி? விரும்பியவற்றைச் செய்வது எப்படி என்பதை அறிந்து கொள்வீர்கள். உண்மையில் நீங்கள் யார் என்பதைத் தெரிந்து கொள்வீர்கள்.  உங்களுக்காகக் காத்திருக்கும் பிரம்மாண்டத்தையும உணர்ந்து கொள்வீர்கள்.

    or 3 X Rs. 1,096.67 with Koko Koko
    Add to cart
  • ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

    Rs. 1,690.00
    or 3 X Rs.563.33 with

    அலிஸ் காலப்ரைஸ் & ட்ரெவோர் லிப்ஸ்கோம்ப்

     

    ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ‘நூற்றாண்டின் சிறந்த மனிதர்’ என்று பெயரிடப்பட்டவர். உலக வரலாற்றில் மிகப்புகழ் பெற்ற விஞ்ஞானிகளில் ஒருவராகத் திகழ்கிறார். ஆனால் ஒரு தனிமனிதனாக எந்தமாதிரி காணப்பட்டார்?

    or 3 X Rs. 563.33 with Koko Koko
    Add to cart
  • கதாநாயகன் (இரகசியம் #4) ( Kadhanayagan ) (Colour)

    Rs. 3,950.00
    or 3 X Rs.1,316.67 with

    ரோன்டா பைர்ன்

     

    ஹீரோ என்பது பன்னிரண்டு ஆண்களும் பெண்களும் தங்கள் வாழ்க்கையில் வெற்றியை ஈட்டியவர்களின் ஞானத்தின் தொகுப்பாகும். அவர்களின் வாழ்க்கை துன்பங்களால் நிறைந்தது, ஆனால் அவை அனைத்தையும் அவர்கள் வெற்றிகரமாக கடந்தனர். ஒவ்வொருவருக்கும் உள்ளே ஒரு ஹீரோ இருக்கிறார், எழுந்திருக்க காத்திருக்கிறார். ரோண்டா பைர்ன் இந்தப் புத்தகத்தில் தனது நம்பிக்கைகளை வலுப்படுத்துகிறார், அந்த உத்வேகம் நம்மைச் சுற்றி இருக்கிறது, மகிழ்ச்சியும் தைரியமும்தான் ஒருவர் தங்கள் வாழ்க்கையை வீரமாக மாற்றிக்கொள்ளும் மிகப்பெரிய பலம்.

    or 3 X Rs. 1,316.67 with Koko Koko
    Add to cart
  • மகிழ்ச்சியாக இருப்பதற்கான துணிச்சல் ( Magilchiyaaga Iruppathatkaana Thunichal ) The Courage To Be Happy

    Rs. 3,190.00
    or 3 X Rs.1,063.33 with

    இச்சிரோ கிஷிமி and ஃபூமிடாகா கோகா

      தமிழில்: PSV குமாரசாமி

     

    • சர்வதேச அளவில் விற்பனையில் சக்கைப்போடு போட்டிருந்த ‘விரும்பப்படாத ஒருவராக இருப்பதற்கான துணிச்சல்’ என்ற நூலின் தொடர்ச்சி இது.

     

    நம்முடைய வாழ்க்கையை நாம் எப்படிப்பட்ட முறையில் வாழ வேண்டும் என்பதற்கான ஆழமான முன்னோக்குகளை இந்நூல் எளிமையான முறையில் எடுத்துரைக்கிறது. ‘விரும்பப்படாத ஒருவராக இருப்பதற்கான துணிச்சல்’ நூலைப் போலவே இந்நூலும், ஒரு தத்துவஞானிக்கும் ஓர் இளைஞனுக்கும் இடையே நடக்கின்ற விவாதங்களின் வடிவில் அமைந்திருக்கிறது. மகிழ்ச்சியான, மனநிறைவான வாழ்க்கையை வாழ்வதற்கான சூட்சமம், 20ஆம் நூற்றாண்டின் உளவியல் ஜாம்பவான்களாகத் திகழ்ந்த சிக்மன்ட் ஃபிராய்டுக்கும் கார்ல் யுங்கிற்கும் இணையாக விளங்கிய மற்றொரு தலைசிறந்த, அதிகமாக அறியப்படாத உளவியலாளரான ஆல்ஃபிரெட் அட்லரின் உளவியல் கோட்பாடுகளில் மறைந்துள்ளது என்று இதில் வருகின்ற தத்துவஞானி நம்புகிறார்.

     

    ஆனால், அவரோடு மல்லுக்கு நிற்கின்ற இளைஞனோ, வெறுமனே உங்களுடைய சிந்தனையை மாற்றுவதன் மூலம் உங்களால் உங்களுடைய வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள முடியும் என்று வாதிடுகிறான். அந்தத் தத்துவஞானி பொறுமையாக, அட்லருடைய “துணிச்சலின் உளவியலின்” சாராம்சத்தை விளக்கி, மகிழ்ச்சியையும் மனநிறைவையும் அடைவதற்குத் தேவைப்படுகின்ற படிப்படியான வழிமுறைகளையும், அந்த மாற்றங்கள் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்ற விதத்தில் எத்தகைய பிரம்மாண்டமான நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் எடுத்துரைக்கிறார்.

     

    இது உண்மையிலேயே ஒருவருடைய வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றக்கூடிய சக்தியைக் கொண்டிருக்கின்ற ஓர் படைப்பாகும். இது அனைத்து விதமான பின்புலங்களைக் கொண்டிருப்பவர்களுக்கும் பொருத்தமாக இருப்பது இதன் தனிச்சிறப்பு.

    or 3 X Rs. 1,063.33 with Koko Koko
    Add to cart
  • ரிச்சர்ட் பிரான்ஸன்

    Rs. 1,290.00
    or 3 X Rs.430.00 with

    என். சொக்கன்

     

    பணி என்பது பணம் பண்ண மட்டுமே அல்ல.  ரசித்து, அனுபவித்துச் செய்யுங்கள்.  நீங்கள் விரும்பிய அனைத்தும் உங்கள் பின்னால் வரும்! இதுதான் ரிச்சர்ட் பிரான்ஸனின் வெற்றிச் சூத்திரம்.  அந்தச் சூத்திரத்தைப் பயன்படுத்தி அவர் சென்ற உயரம் பிரம்மாண்டமானது.

     

    ஆனால் அந்த உயரத்தை அவர் ஒன்றும் அநாயாசமாகத் தொட்டுவிடவில்லை.  தடைகள் வந்தன.  எதிர்ப்புகள் அணிவகுத்தன.  முன்னேறும் பாதையில் முட்டுக்கட்டைகள் விழுந்தன.  குறிப்பாக, வெர்ஜின் விமான சேவையைத் தொடங்கியபோது பெரும் பண முதலைகள் எல்லாம் அவரை அழுத்தப் பார்த்தன.

     

    ஆனால் அனைத்தையும் நம்பிக்கையுடனும், துணிச்சலுடனும் எதிர்கொண்டார் பிரான்ஸன்.  ஆகவே, சாதித்தார். வர்த்தக உலகம் சந்தித்த மற்ற வெற்றியாளர்களிடம் இருந்து பிரான்ஸன் பல விஷயங்களில் வேறுபடுகிறார்.  காத்திரமான பண பலத்துடன் களத்தில் இறங்கவில்லை.

     

    பரம்பரைப் பணக்காரரும் இல்லை. ஆனாலும் அவர் சாதனைகளின் உச்சத்தைத் தொட்டார்.  அது தான் சாமானியர்கள் பலரையும் பிரான்ஸனை நோக்கி ஈர்த்தது.  ஈர்த்துக்கொண்டே இருக்கிறது.

     

    தொழில் முனையும் ஆர்வம் உள்ள அத்தனை பேருக்கும் ரிச்சர்ட் பிரான்ஸன் ஆதர்சமாகத் தெரிகிறார்.  அது ஏன் என்பதை நுணுக்கமான ஆய்வின் வழியாக எடுத்துச் சொல்லியிருக்கிறார் என். சொக்கன்.

     

    வர்த்தக வெற்றியாளர்கள் பலருடைய வாழ்க்கையையும் புத்தகமாகப் பதிவு செய்திருப்பவர் அவர் என்ற வகையில் இந்தப் புத்தகம் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.

    or 3 X Rs. 430.00 with Koko Koko
    Add to cart
  • அதிகாலை 5 மணி குழு ( Athikalai 5 Mani Kulu )

    Rs. 2,350.00
    or 3 X Rs.783.33 with

    ராபின் ஷர்மா

     

    உங்கள் காலையை சொந்தமாக்கி – உங்கள் வாழ்க்கையை உயர்த்துங்கள்.

     

    புகழ்பெற்ற தலைமைப் பண்பு மற்றும் மிகச்சிறந்த செயல்திறன் நிபுணர் ராபின் சர்மா 20 ஆண்டுகளுக்கு, முன்பு. ஒரு புரட்சிகரமான காலை வழக்கத்தை அடிப்படையாகக் கொண்டு அதிகாலை 5 மணி குழு தத்துவத்தை அறிமுகப்படுத்தினார். இது அவரைப் பின்பற்றுபவர்களுக்கு அவர்களின் உற்பத்தித்திறனை அதிகரிக்கவும், அவர்களின் சிக்கலான வாழ்வில் சிறந்த ஆரோக்கியத்தை செயல்படுத்தவும் அவர்களது அமைதியைப் பாதுகாக்கவும் உதவியது.

     

    இப்போது தீவிரமான நான்கு ஆண்டு முயற்சியின் விளைவாக எழுத்தாளரால் வடிவமைக்கப்பட்டுள்ள, பலருக்கும் சாதனை முடிவுகளை அடையவும், அதே நேரத்தில் அவர்களின் மகிழ்ச்சி, உதவும்தன்மை மற்றும் புத்துணர்ச்சி ஆகியவற்றை மேம்படுத்தவும் உதவிய வாழ்க்கையை மாற்றும் இந்த புத்தாத்தில், அதிகாலையில் எழும் பழக்கத்தைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்வீர்கள், முன்பின் தெரியாத இரண்டு மனிதர்கள் ஒரு விசித்திரமான தொழிலதிபரைச் சந்திப்பது, பிறகு அவரே அவர்களின் ரகசிய வழிகாட்டியாக மாறுவது பற்றிய ஒரு அழகான மற்றும் பெரும்பாலும் சுவாரஸ்யமான கதையான அதிகாலை 5 மணி குழு புத்தகம் கீழ்க்கண்டவாறு உங்களை வழிநடத்தும்.

     

    வியக்கத்தக்க சாதனைகளை உருவாக்க சிறந்த மேதைகள், வணிக அதிபர்கள் மற்றும் உலகின் புத்திசாலித்தனமான மக்கள் தங்கள் கலைப் பொழுதை எவ்வாறு தொடங்குகிறார்கள்.. அதிகாலையில் எழுகையில், தூண்டுதல், மிகுந்த கவளம் மற்றும் அதி தீவிள உந்துதலுடன் உங்கள் நாளிள் முழுப் பயனையும் அடையும் படியான அதிகம் அறியப்படாத நீங்கள் உடனடியாகப் பயன்படுத்தக் கூடிய ஒரு சூத்திரம் அதிகாலையின் அமைதியான நேரத்தை படிப்படியான செயல்முறை மூலம் பயன்படுத்தி, உடற்பயிற்சி, சுய புதுப்பித்தல் மற்றும் தனிப்பட்ட வளர்ச்சிக்கு தேவையான நேரம் பெறுதல்.

     

    ஒரு நரம்பியல் அடிப்படையிலான நடைமுறையானது அதிகாலையில் எழும் பழக்கத்தின் மூலம். பெரும்பாலான மக்கள் தூங்கிக் கொண்டிருக்கும்போது, உங்களுக்கு சிந்திக்கவும், படைப்பாற்றலை வெளிப்படுத்தவும், பநட்டமான செயல்பாட்டிற்கு பதிலாக நிம்மதியாக நாரைத் தொடங்கவும் அருமையான வாய்ப்பைத் தருகிறது. “ரகசியமான செயல்” தந்திரோபாயங்கள் டிஜிட்டல் கபணிச்சிதறல்கள் மற்றும் அற்பமான திசைதிருப்பல்களிலிருந்து உங்கள் சிறப்புத் திறன்கள், இயற்கைத் நிறமைகள் மற்றும் கனவுகளை பாதுகாத்து, நீங்கள் அதிர்ஷ்டம், செல்வாக்கு மற்றும் உலகில் அற்புதமான தாக்கத்தை அனுபவிக்க உதவுகிறது.

    or 3 X Rs. 783.33 with Koko Koko
    Add to cart
  • Out of Stock

    TCS: ஒரு வெற்றிக் கதை

    Rs. 3,690.00
    or 3 X Rs.1,230.00 with

    எஸ். ராமதுரை
    கி. இராமன்

     

    ஒரு நிறுவனத்தை மாபெரும் நிறுவனமாக மாற்றுவது எப்படி? ஓர் எளிய கனவைப் பெருங்கனவாக வளர்த்தெடுப்பது எப்படி? தகவல் தொழில்நுட்பத் துறையில் முன்நிலை வகிக்கும் நிறுவனங்களில் ஒன்றாக டி.சி.எஸ் வளர்ந்த கதையை அதைச் சாத்தியப்படுத்திய ஒருவரே நேரடியாக நம்மோடு இதில் பகிர்ந்துகொள்கிறார். டாப் டென் நிறுவனங்களில் ஒன்றாக மாறவேண்டும் என்பது டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் நிறுவனத்தின் ஆரம்பகாலக் கனவு. அதை அடைவதற்கு ஒரு காலக்கெடுவையும் அவர்கள் நிர்ணயித்தார்கள்.
     

    ஆனால் அதற்கு ஒரு வருடம் முன்பாக, அதாவது 2009ஆம் ஆண்டில் கனவு நிறைவேறிவிட்டது. இந்த அதிசயத்துக்குப் பின்னாலிருப்பவர் டி.சி.எஸ் தலைமைச் செயல் அதிகாரியான எஸ்.ராமதுரை. அவர் பொறுப்புக்கு வந்தபோது நிறுவனத்தின் ஆண்டு வருமானம் 155 மில்லியன் டாலர். இன்று 42 நாடுகளில் கிளைகள் படர்ந்துள்ளன. 5 லட்சத்துக்கும் மேலானவர்கள் பணிபுரிகிறார்கள்.
     

    வருடாந்தர வருமானம் 22 பில்லியன் டாலருக்கும் மேல்.டி.சி.எஸ் நிறுவனத்தின் வரலாறென்பது நவீன இந்தியாவின் மகத்தான வெற்றிக் கதைகளில் ஒன்று. மிகவும் மதிக்கப்படும் வணிகத் துறைத் தலைவர்களில் ஒருவரான எஸ்.ராமதுரை இந்தப் புத்தகத்தில் அந்த அசாதாரண வெற்றியை எட்டிப்பிடித்த கதையை விரிவாக நினைவுகூர்ந்திருக்கிறார்.

    or 3 X Rs. 1,230.00 with Koko Koko
    Read more
  • Amazon Oru Vetri Kathai Flashbookslk
    Out of Stock

    Amazon ஒரு வெற்றிக் கதை ( Amazon Oru Vettrik Kadhai )

    Rs. 1,150.00
    or 3 X Rs.383.33 with

    எஸ்.எல்.வி.மூர்த்தி

     

    அமேசானின் வெற்றிக்கதை என்பது மாபெரும் வெற்றிகளை ஈட்டிவரும் ஒரு பெரும் நிறுவனத்தின் கதையா அல்லது அதைத் தோற்றுவித்த ஓர் அசாதாரணமான ஆளுமையின் கதையா? இரண்டுமேதான்.

     

    அமேசான் என்பது ஆலமரம் என்றால் அதன் விதை, ஜெஃப் பெஸோஸ். எனவே இது ஒரு விதையின் கதை. எனவே, இது ஒரு மரத்தின் கதையும்கூட. அமெரிக்காவில் ஒரு மூலையில் மிகச் சாதாரணமாக ஆரம்பிக்கப்பட்ட ஒரு ஸ்டார்ட் அப் கம்பெனி உலகம் முழுவதும் கிளைகளைப் பரப்பி பிரமிப்பூட்டும் வெற்றிகளைப் பெற்றது எப்படி?

    அமேசானைத் தோற்றுவித்த ஜெஃப் பெஸோஸ் உலகப் பணக்காரர்கள் வரிசையில் பில் கேட்ஸுக்கு அடுத்த இடத்தைப் பிடித்தது எப்படி? எதிர்காலத்தில் இணையம்தான் உலகை ஆளப்போகிறது என்பதை ஜெஃபால் எப்படி முன்கூட்டியே உணரமுடிந்தது? புத்தகங்களை ஆன்லைனில் விற்பதன்மூலம் லாபம் ஈட்டமுடியும் என்னும் நம்பிக்கையை அவர் எப்படிப் பெற்றார்? புத்தகங்களில் தொடங்கி உலகிலுள்ள அனைத்தையும் வாங்குவதற்கான பிரமிப்பூட்டும் இணையக் கடையாக அமேசானை அவர் வளர்த்தெடுத்தது எப்படி? அமேசான் தன் பணியாளர்களை நடத்தும் விதம் குறித்தும் ஜெஃப் தன் போட்டியாளர்களைச் சிதறடிக்கும் முறை குறித்தும் எழும் பல்வேறு குற்றச் சாட்டுகள் உண்மையா? வாழ்விலும் பணியிலும் ஜெஃப் பெஸோஸை நம்முடைய முன்னுதாரணமாகக் கொள்ளமுடியுமா? எனில் அவரிடமிருந்து நாம் என்னென்ன வெற்றிப் பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்? எஸ்.எல்.வி. மூர்த்தியின் இந்நூல் மிக சுவாரஸ்யமான முறையில் ஒரு வண்ணமயமான வாழ்வை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது.

    or 3 X Rs. 383.33 with Koko Koko
    Read more
  • Out of Stock

    வென்றே தீருவோம்: சாதனையாளர்களின் வெற்றி ரகசியங்கள் ( Vendre Theervom )

    Rs. 3,190.00
    or 3 X Rs.1,063.33 with

    ரெய்னர் ஸிட்டல்மன்

    தமிழில்: நாகலட்சுமி சண்முகம்

     

    சாதனையாளர்களின் வெற்றி ரகசியங்கள்

     

    ஆஸ்திரிய நாட்டில் ஒரு சாதாரண போலீஸ்காரருக்கு மகனாகப் பிறந்த அர்னால்டு, ஹாலிவுட்டில் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் சூப்பர் ஸ்டாராக உயர்ந்தார். கலிபோர்னியா மாநில கவர்னராகவும் ஆனார்.

     

    ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ், மைக்ரோசாப்டின் பில்கேட்ஸ் உலகப் பெரும் பணக்காரர்களாக உயர்ந்தது எப்படி?

     

    இந்த வெற்றி ரகசியங்களைப் பற்றி ரெய்னர் சிட்டல்மன் ஆங்கிலத்தில் எழுதிய புத்தகம் உலகப் புகழ் பெற்றது. அதை வென்றே தீருவோம் என்ற பெயரில், தமிழில் மொழிபெயர்த்துள்ளார் நாகலட்சுமி சண்முகம்.

     

    வாழ்க்கையில் முன்னேற வேண்டும், வெற்றிச்சிகரத்தை அடையவேண்டும் என்று நினைப்பவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம்.

    or 3 X Rs. 1,063.33 with Koko Koko
    Read more
  • Out of Stock

    நல்ல அதிர்வுகள் நல்ல வாழ்க்கை Nalla Athirvukal Nalla Vaazhkai ( Good vibes, Good Life Tamil )

    Rs. 2,590.00
    or 3 X Rs.863.33 with

    வெக்ஸ் கிங்

    தமிழில்: நாகலட்சுமி சண்முகம்

     

    உங்களை நீங்களே உண்மையாக நேசிக்க எவ்வாறு கற்றுக் கொள்வது? எதிர்மறையான உணர்ச்சிகளை நேர்மறையான உணர்ச்சிகளாக எவ்வாறு மாற்றுவது? நிரந்தரமான மகிழ்ச்சியைக் கண்டுகொள்வது உண்மையிலேயே சாத்தியமா? இன்ஸ்டாகிராமில் வெற்றிகரமாக வலம் வருகின்ற வெக்ஸ் கிங், மேற்குறிப்பிடப்பட்டுள்ள கேணீநீள்விகளுக்கும் இன்னும் அதிகமானவற்றுக்கும் இந்நூலில் விடையளிக்கிறார். பாதகமான சூழல்களிலிருந்து மீண்டு வந்து, இளைய தலைமுறையினருக்கு நம்பிக்கைக்கான ஒரு மூலாதாரமாக விளங்குகின்ற அவர், தன்னுடைய தனிப்பட்ட அனுபவங்களையும் தன்னுடைய உள்ளார்ந்த புரிதலையும் கொண்டு உங்களுக்கு உத்வேகமூட்ட வந்துள்ளார். நீங்கள் சிந்திக்கின்ற, உணர்கின்ற, பேசுகின்ற மற்றும் நடந்து கொள்கின்ற விதத்தை நீங்கள் மாற்றும்போது, நீங்கள் இவ்வுலகத்தை மாற்றத் தொடங்குகிறீர்கள் என்பதை வெக்ஸ் கிங் இந்நூலில் உங்களுக்குக் காட்டுகிறார்.

    or 3 X Rs. 863.33 with Koko Koko
    Read more
  • Out of Stock

    ஜீபூம்பா : 100 ஆளுமைகளைச் சாதனையாளர்களாக மாற்றிய கணங்கள்

    Rs. 2,990.00
    or 3 X Rs.996.67 with

    என். சொக்கன்

     

    ஜீபூம்பா சாதனையாளர்களுடைய வாழ்க்கையை நாம் ஒரு பக்கத்திலிருந்து பார்க்கும்போது அவர்களுடைய வெற்றித் தருணங்கள்தான் அடுத்தடுத்துத் தெரிகின்றன. நாமெல்லாம் இப்படி இல்லை, இவர்கள் தனி ரகம் என்று நினைக்கிறோம். ஆனால், இன்னொரு பக்கத்திலிருந்து பார்க்கும்போது தொடக்கக் காலத்தில் அவர்கள் எப்படி இருந்தார்கள் என்பது தெரிகிறது. திடீரென்று சில ஒற்றுமைகள் தெரியத் தொடங்குகின்றன. நாமும் இப்படிதானே இருந்தோம், பிறகு எப்படி அவர்கள் வேறுவிதமாக வளர்ந்திருக்கிறார்கள் என்று யோசிக்கிறோம்.
     

    இந்தப் புதிருக்கான விடை, இந்த இரண்டு பார்வைகளுக்கும் நடுவில் உள்ள ஒரு மாயத் தருணம். அது கூர்ந்து பார்க்கிறவர்களுக்குதான் புரியும். அந்தத் திருப்புமுனைதான் அவர்களுடைய வாழ்க்கையை மாற்றிப்போட்டிருக்கிறது, முன்னேற்றத்தைக் கொண்டுவந்திருக்கிறது என்பது தெரியும். பல துறைகளைச் சார்ந்த சாதனையாளர்களுடைய வாழ்க்கைகளின் திருப்புமுனைக் கணங்களைக் கதை வடிவில் பதிவு செய்யும் நூல் இது, நம்முடைய வாழ்க்கையில் வரக்கூடிய திருப்புமுனைகளை அடையாளம் காணவும் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவும் உதவும்.

    or 3 X Rs. 996.67 with Koko Koko
    Read more
  • Out of Stock

    ரிஸ்க் எடு தலைவா! (Risk Edu Thalaiva)

    Rs. 860.00
    or 3 X Rs.286.67 with

    சிபி கே. சாலமன்

     

    செய்வதையே செய்துகொண்டிருந்தால் இதுவரை கிடைத்ததே இனியும் கிடைக்கும். நீங்கள் மாறவேண்டுமானால் ரிஸ்க் எடுக்கத்தான் வேண்டும். மறுத்தால், மாற்றம் உங்கள் மீது திணிக்கப்படும்.

     

    அதற்காக, தொட்டதற்கெல்லாம் மாறிக்கொண்டிருக்க முடியாது. மாறவேமாட்டேன் என்று விடாப்பிடியாகப் பிடிவாதம் பிடிக்கவும் முடியாது. எனில், எப்போதெல்லாம் மாறவேண்டும், எப்போதெல்லாம் மாறக்கூடாது? இதுதான் பிரச்னை, இல்லையா? பிரச்னையைப் பிரச்னையாகப் பார்க்க மட்டுமே நாம் பழகிக் கொண்டிருக்கிறோம். பிரச்னையை மட்டும் உங்கள் நெருக்கமான ஃப்ரெண்டாக மாற்றிக் கொள்ள முடிந்தால்? நன்றாகத்தான் இருக்கும். ஆனால் அது சாத்தியமா? சாத்தியம். நிச்சயம் சாத்தியம்.

     

    சின்னச் சின்ன சுவாரசியமான கதைகள், நடைமுறைச் சம்பவங்கள் என்று மாற்றங் களை எதிர்கொள்ளும் மந்திர வித்தையை மனத்தில் பதிய வைக்கும் இந்தப் புத்தகம் உங்கள் வாழ்வில் ஒரு நல்ல மாற்றத்தை உருவாக்கப் போகிறது. மாற்றங்களை நாமே தேர்ந்தெடுக்கலாம். நாம்தான் தேர்ந்தெடுக்க வேண்டும்.

    or 3 X Rs. 286.67 with Koko Koko
    Read more
  • Sony Niruvanam Valarntha Kathai Flashbookslk
    Out of Stock

    SONY நிறுவனம் வளர்ந்த கதை நிறுவனர் அகியோ மொரிடாவின் சுயசரிதம் ( Sony Niruvanam Vazharntha Kathai )

    Rs. 1,090.00
    or 3 X Rs.363.33 with

    அகியா மொரிடா

    இரண்டாம் உலகப்போரினால் உருத்தெரியாமல் சிதைந்துபோன ஒரு தேசம் ஜப்பான். உலகநாடுகளில் அது புரிந்த அட்டூழியங்களுக்கு அமெரிக்கா அணுகுண்டுகள் மூலம் பதிலடி கொடுத்தபோது இனி பல தலைமுறைகளுக்கு அந்த தேசம் தலையெடுக்க முடியாது என்றுதான் உலகம் எண்ணியது. ஆனால் போரில் தோற்றாலும் பொருளாதாரத்தில் தோற்க விரும்பாத ஜப்பானியர்கள் தன்னம்பிக்கையையும் உழைப்பையும் உரமாக விதைத்தனர் ஜப்பானிய மண்ணில் ஒருசில தலைவர்கள் மட்டுமல்ல ஒரு தேசமே தன்னம்பிக்கையோடு எழுந்து நின்று போர் முனையில் காட்டிய வேகத்தை நாட்டை மறுசீரமைப்பதிலும் காட்டினார்கள் விளைவு 30 ஆண்டுகளுக்குள் அமெரிக்காவுக்கு நிகரான பொருளியல் வல்லரசாக உருவெடுத்தது ஜப்பான்.அந்த அதியசத்துக்கு வித்திட்டவர்கள் பலர் இருந்தாலும் ஒருவரின் பெயரை ஜப்பானிய வரலாறு மட்டுமல்ல உலக வரலாறும் என்றென்றும் போற்றும்.

    Made in japan என்ற வாசகத்தை தாங்கி வரும் எந்த பொருளையும் கண்ணை மூடிக்கொண்டு வாங்கும் அளவுக்கு உலக மக்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள் என்றால் அதற்கு முழுமுதற் காரணம் அந்த தொழில் பிரம்மா. அவர்தான் தரக்கட்டுப்பாடு என்ற தாரகமந்திரத்தையும் SONY என்ற புகழ்பெற்ற நிறுவனத்தையும் உலகுக்கு தந்த ஜப்பானிய தொழில் முனைவர் அக்யோ மொரிட்டா.சிதைந்துபோன ஜப்பானை சீர்தூக்கிவிட உதவிய அந்த தொழில்பிதாமகனின் தன்முனைப்பூட்டும் கதையை தெரிந்துகொள்வோம்.

    or 3 X Rs. 363.33 with Koko Koko
    Read more
  • Out of Stock

    வெற்றிக் கொள்கைகள் இருபத்தைந்து: உங்கள் இலக்கு எதுவாக இருந்தாலும் அதை அடைய…

    Rs. 3,190.00
    or 3 X Rs.1,063.33 with

    ஜாக் கேன்ஃபீல்டு

    தமிழில்: நாகலட்சுமி சண்முகம்

     

    “ஜாக் கேன்ஃபீல்டு, வாழ்வில் அதிகமானவற்றைப் பெற மிகவும் துடிப்போடு இருப்பவர்களுக்கு, அவற்றை அடைவதற்குத் தேவையான அறிவையும், உள்நோக்குகளையும், புரிதலையும், உத்வேகத்தையும் கொடுக்கின்ற, தனது களத்தில் தலைசிறந்து விளங்குகின்ற ஒரு மேதை. வாழ்க்கையை வெற்றி கொள்ள அர்ப்பணிப்புடன் இருக்கும் எவரொருவருக்கும் இப்புத்தகம் ஒரு மிகச் சிறந்த பரிசு.” –மைக்கேல் ஜெர்பர், உலகப் புகழ்பெற்ற ‘சிறுதொழில் அதிபர்களின் குரு

     

    “ஜாக் கேன்ஃபீல்டின் வெற்றிக் கொள்கைகள் எளிமையானவை, ஆனால் அவற்றைக் கொண்டு நீங்கள் அடையவிருக்கும் விளைவுகள் அபாரமானவையாக இருக்கும்!” — ஆன்டனி ராபின்ஸ், உலகப் புகழ்பெற்ற ஊக்குவிப்புப் பேச்சாளர்

     

    “இவ்வருடம் உங்களால் ஒரே ஒரு புத்தகத்தை மட்டுமே படிக்க முடியும் என்றால், அது உங்கள் கைகளில் தவழும் இப்புத்தகமாக இருக்கட்டும்,” —ஹார்வீ மெக்கே, ‘ஸ்விம் வித் த ஷார்க்ஸ் வித்தவுட் பீயிங் ஈட்டன் லைவ்’ புத்தகத்தின் ஆசிரியர்

     

    “ஜாக் கேன்ஃபீல்டின் படைப்புகளை நான் கவனமாகப் படித்து வருகிறேன். அவரது மிக அருமையான படைப்பான இப்புத்தகம் உங்கள் வாழ்வில் என்றென்றும் தாக்கத்தை ஏற்படுத்தும்.” –பேட் வில்லியம்ஸ் ‘ஆர்லேன்டோ மேஜிக்’ கூடைப்பந்து அணியின் மூத்தத் துணைத் தலைவர்

     

    “ஜாக் கேன்ஃபீல்டு, வெற்றிக்கான தனது வழிமுறைகளை அறிவுபூர்வமான, எளிதில் படிக்கக்கூடிய ஒரு புத்தகத்தின் வடிவில் கொடுத்துள்ளார். ஜாக்கின் போதனை மிகவும் ஆற்றல்வாய்ந்ததாக உள்ளது. இவ்வருடத்திற்கான சிறந்த பரிசு இது.” —கென்னத் பிளான்சார்டு ‘ஒரு நிமிட மேலாளர்’ புத்தகத்தின் இணையாசிரியர்

     

    “எனது அருமை நண்பரான ஜாக் கேன்ஃபீல்டு, இன்றைய உலகின் தலைசிறந்த பேச்சாளர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்களில் ஒருவர். நீங்கள் அவரோடு சிறிது நேரம் செலவிட்டு, அவரது யோசனைகளையும் உள்நோக்குகளையும் உட்கிரத்துக் கொண்டுவிட்டால், உங்களது எஞ்சிய வாழ்நாள் முழுவதும் நீங்கள் ஒரு நேர்மறையான மனிதராக மாறியிருப்பீர்கள்.” — பிரையன் டிரேசி ‘சிந்தனையை மாற்றுங்கள், வாழ்க்கையை மாற்றுங்கள்’ புத்தகத்தின் ஆசிரியர்

    or 3 X Rs. 1,063.33 with Koko Koko
    Read more
  • Sale!
    orukku-ulaga-mannar_Flashbookslk
    Out of Stock

    உருக்கு உலக மன்னர்: லட்சுமி மிட்டால்

    Rs. 650.00
    or 3 X Rs.216.67 with

    விமலநாத்

    இந்தியாவின் உருக்குத் தொழிலில் முதலிடத்தை, கடின உழைப்பாலும், திறமையாலும் அடைந்த லட்சுமி மிட்டல் குழுமம், நமது பாராட்டுக்குரியவர்கள். “இந்தியா ஏழை நாடு என்ற ஏளனம், இந்த இருபத்தைந்து ஆண்டுகளில், லட்சுமி மிட்டல், ரத்தன் டாடா, நாராயண் மூர்த்தி போன்ற தொழில் வல்லுனர்களால் காணாமல் போய்விட்டது. லட்சுமி மிட்டலின் நிறுவனம் உலகின் மிகப் பெரிய உருக்கு இரும்பு உற்பத்தியாளராக மாற, அனைத்து விதத்திலும் தயாராக உள்ளது என்ற அளவுக்கு, இந்தோனேஷியா மற்றும் கஜகஸ்தான் ஆகிய நாடுகளில், சொந்த உருக்கு இரும்பு நிறுவனங்களை வைத்திருக்கும், அந்த மாமனிதரின் எழுச்சி ஊட்டும் வரலாறு!

    or 3 X Rs. 216.67 with Koko Koko
    Read more
  • Out of Stock

    எனது பயணம்: கனவுகளுக்குச் செயல்வடிவம் கொடுத்தல் ( Enathu Payanam ) My Journey

    Rs. 1,450.00
    or 3 X Rs.483.33 with

    ஏ.பி.ஜே.அப்துல் கலாம்

     

    கனவுகள் என்பவை நம் தூக்கத்தில் நாம் காண்பவை அல்ல; நம்மை ஒருபோதும் தூங்கவிடாமல் பார்த்துக் கொள்பவைதான் நமது கனவுகளாக இருக்க வேண்டும்.

    or 3 X Rs. 483.33 with Koko Koko
    Read more
  • viyathaku vinthai manam flashbooks.lk
    Out of Stock

    வியத்தகு விந்தை மனம் – வெளிக்கொணர்வோம் அறிய திறம்

    Rs. 1,590.00
    or 3 X Rs.530.00 with

    அல் கொரன்

    தமிழில்: எஸ். அப்துல் லத்திப்

     

    உலகளாவிய விற்பனையில் முதலிடம்

     

    விந்தைகள் புரிவது உங்கள் மனமே!

    உங்கள் மனத்தின் திறக்கப்படாத பொக்கிஷத்தை திறந்துவைக்கும் சாவி இதோ உங்கள் கரங்களில்… உங்கள் வாழ்வையும் வருங்காலத்தையும் வளமாக்கும் அதிசய ரகசியம். நீங்கள் ஒரு மந்திரவாதி ஆகவேண்டியதில்லை. மனத்தின் சக்தியைப் பெறக்கட்டளையிடும் “மூலை”யாகச் செயல்பட வேண்டாம். உங்களுடைய உள்மனத்தில் பொதிந்திருக்கும் இயற்கையான காந்த சக்தியை இந்த நூல்காட்டும் வழிறையில் மட்டும் பயன்படுத்தக் கற்றுக்கொள்ளுங்கள். மற்றவர்களைக் கவர்ந்திழுக்கும் மகிமை புரியலாம். வணிகமென்றாலும், சமுதாய வாழ்க்கை என்றாலும் வெற்றிக்கு வழிகாட்டி மனவலிமையும் கூட்டும்.

    or 3 X Rs. 530.00 with Koko Koko
    Read more
  • Out of Stock

    ரகசியக் கடிதங்கள் ( Ragasiyak Kadithangal ) The Secret Letters

    Rs. 1,790.00
    or 3 X Rs.596.67 with

    ராபின் ஷர்மா

    தமிழில்: வானமாமலை

     

    உங்கள் வாழ்க்கையை மிகச் சிறந்த வாழ்க்கையாக அமைத்திடும், தனது பொக்கிஷத்தை விற்ற துறவியின், கதைத்திரட்டுகள்.

    or 3 X Rs. 596.67 with Koko Koko
    Read more
  • Out of Stock

    சாக்குப்போக்குகளை விட்டொழியுங்கள்! சுயஒழுங்கின் வியத்தகு சக்தி ( Saakupokugalai Vittoliyungal )

    Rs. 2,590.00
    or 3 X Rs.863.33 with

    பிரையன் டிரேசி

     

    தமிழில்: நாகலட்சுமி சண்முகம்

     

    நிரந்தர மகிழ்ச்சியையும் வெற்றியையும் அடைய 21 வழிகள்.

    அதிர்ஷ்டத்தாலோ அல்லது அசாதாரணமான திறமையாலோ மட்டுமே வெற்றியை அடைய முடியுமென்று பெரும்பாலான மக்கள் நினைக்கின்றனர். ஆனால் பெரும் சாதனையாளர்கள் பலர் வெற்றியை அடைவதற்கு மிகச் சாதாரணமான ஒரு கருவியைத்தான் உபயோகித்துள்ளனர். அதுதான் சுயஒழுங்கு.

    or 3 X Rs. 863.33 with Koko Koko
    Read more
  • Out of Stock

    அதிக ஆற்றல்வாய்ந்த மனிதர்களின் 7 பழக்கங்கள் ( Athika Aatralvaayntha Manithargalin 7 Palakkangal ) The 7 Habits of Highly Effective People

    Rs. 4,290.00
    or 3 X Rs.1,430.00 with

    ஸ்டீபன் ஆர். கவி

     

    தமிழில்: நாகலட்சுமி சண்முகம்

     

    தனிநபர் மாற்றத்திற்கான சக்தி மிக்க படிப்பினைகள் என, தனி மனித மேலாண்மைத் தத்துவங்களை விவரமாகத் தருகிறது. நான்கு பகுதிகளில் மேலாண்மைக் கருத்துகளைத் தெளிவாகக் கொடுத்துள்ளார் நூலாசிரியர் ஸ்டீபன் ஆர்.கவி. ஏழு பழக்கங்கள், தனி மனித வாழ்வையே வெற்றிகரமாக மாற்றியமைத்துவிடும் என்பதைப் பதிவு செய்கிறது. இதில், இவர் முதல் பழக்கமாக முன்வைப்பது, முன்யோசனையுடன் செயலாற்றுதல் என்பதை! பழக்கம் இரண்டு என இவர் குறிப்பிடுவது, முடிவை மனத்தில் வைத்துத் துவங்குதல் என்பதை! இதில் தனி மனித தலைமைத்துவம் குறித்த கொள்கைகள் இடம்பெற்றுள்ளன. அடுத்து மூன்றாவது பழக்கமாக, “முதலில் செய்ய வேண்டியவற்றை முதலில் செய்தல்’ என்பது. இதில் நிர்வாகம் குறித்தக் கருத்துகள் நிறைய உள்ளன.

    or 3 X Rs. 1,430.00 with Koko Koko
    Read more
  • Out of Stock

    விற்பனைத்துறையில் அதலபாதாளத்தில் இருந்து வெற்றிச் சிகரத்திற்கு என்னை நான் உயர்த்திக் கொண்டது எப்படி (vitpanai thuraiyil adhalapaadhalathil irundhu vetri shiharathitku ennai uyarthikondadhu eppadi)

    Rs. 1,490.00
    or 3 X Rs.496.67 with

    ஃபிராங்க் பெட்ஜர்

    தமிழில்: நாகலட்சுமி சண்முகம்

     

    “நான் இதுவரை படித்தப் புத்தகங்களிலேயே விற்பனைத்திறம் பற்றி எழுதப்பட்டுள்ள மிகவும் உதவிகரமான, உங்களை அபாரமாக ஊக்குவிக்கக்கூடிய தலைசிறந்த புத்தகம் இதுதான்.” – டேல் கார்னகி, ‘நண்பர்களை வெற்றி கொள்வதும் மற்றவர்களைக் கவர்ந்திழுப்பதும் எப்படி‘ என்ற நூலின் ஆசிரியர்

     

    “இப்புத்தகம் எனக்குச் செய்துள்ள உபகாரங்களை அளவிட முடியாது. வெற்றிகரமாகத் திகழ வேண்டும் என்று விரும்புகின்ற எவரொருவரும் படித்தாக வேண்டிய ஒரு புத்தகம் இது.” –நார்மன் வின்சென்ட் பீல், ‘நேர்மறைச் சிந்தனையின் வியத்தகு சக்தி‘ என்ற நூலின் ஆசிரியர்

     

    இப்புத்தகம் உங்களுக்கு இவற்றைக் கற்றுக் கொடுக்கும்:

    • உற்சாகத்தின் சக்தியால் எவற்றையெல்லாம் சாதிக்கலாம்
    • பயத்தை எவ்வாறு வெற்றி கொள்வது
    • உங்களது பொருட்களை சந்தேகக் கண்ணோடு பார்க்கும் வாடிக்கையாளரை உத்வேகத்துடன் வாங்க வைப்பது எப்படி
    • வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை விரைவாகப் பெறுவது எப்படி
    • ஒரு விற்பனையைச் சுருக்கமாக முடிப்பது எப்படி
    or 3 X Rs. 496.67 with Koko Koko
    Read more
  • Out of Stock

    உங்கள் படுக்கையை மடித்து வையுங்கள் (Make Your Bed)

    Rs. 1,650.00
    or 3 X Rs.550.00 with

    வில்லியம் எச் மெக்ராவன்
    பி.எஸ்.வி.குமாரசாமி

     

     

    2014 ஆம் ஆண்டு மே 17 அன்று, அமெரிக்கக் கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற அட்மிரல் வில்லியம் எச். மெக்ரேவன், டெக்சாஸ் பல்கலைக்கழக மாணவர்களின் பட்டமளிப்பு விழாவில் அவர்கள் முன் ஓர் உரை நிகழ்த்தினார். “இங்குத் தொடங்குவது உலகையே மாற்றும்” என்ற அப்பல்கலைக்கழகத்தின் குறிக்கோள் வாசகத்தை அடித்தளமாக வைத்து அவர் ஆற்றிய உரையில், தான் நேவி சீல் பயிற்சியின்போது கற்றுக் கொண்ட பத்துப் பாடங்களை மாணவர்களுடன் அவர் பகிர்ந்து கொண்டார். அப்பாடங்கள் தன்னுடைய பயிற்சியின்போதும், தன்னுடைய நீண்ட, சாகசமிக்கக் கடற்படைப் பணியின்போதும் தனக்கு உதவியதுபோல வாழ்க்கை முழுவதும் தனக்கு எப்படி உதவின என்பதையும் அவர் எடுத்துரைத்தார். தங்களை மாற்றிக் கொள்ளவும், அதன் மூலம் இந்த உலகை மாற்றவும் அப்பாடங்களை எவரொருவராலும் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று கூறி அவர் அம்மாணவர்களுக்கு ஊக்கமளித்தார். காலம் கடந்து நிற்கின்ற ஆற்றல் கொண்ட இந்நூல், நடைமுறைக்கு ஏற்றப் பல அறிவுரைகளையும் ஊக்குவிப்பையும் கொண்டுள்ளது. வாழ்க்கையின் இருண்ட கணங்களில்கூட அதிக அளவில் சாதிப்பதற்கு இந்நூல் உங்களுக்கு உத்வேகமூட்டும் என்பது உறுதி.

    or 3 X Rs. 550.00 with Koko Koko
    Read more
  • Out of Stock

    சக்தி (இரகசியம் #2) (Colour) ( The Power )

    Rs. 4,290.00
    or 3 X Rs.1,430.00 with

    ரோன்டா பைர்ன்

     

    நீங்கள் நினைப்பதை விட வாழ்க்கை வாழ்வதற்கு எளிதானதுதான். உங்களுக்குள் இருக்கும் அந்த மாபெரும் சக்தியையும், வாழ்க்கை செயல்படும் விதத்தையும் நீகாள் புரிந்துகொள்ளும்போது வாழ்வின் மாயாஜாலத்தை நீங்கள் முழுமையாக அனுபவிப்பீர்கள்.அப்போது நீங்கள் ஓர் அற்புதமான வாழ்க்கையை வாழ்வீர்கள்.இக்கணத்தில் இருந்து உங்கள் வாழ்வின் அற்புதங்கள் அரங்கேறட்டும்.

    or 3 X Rs. 1,430.00 with Koko Koko
    Read more
  • Out of Stock

    நேர்மறைச் சிந்தனையின் வியத்தகு சக்தி: நம் வாழ்வின் அன்றாடப் பிரச்சினைகளைத் தீர்க்க உதவும் நடைமுறைக் கையேடு ( Nermarai Sinthanaiyin Viyathaku Sakthi )

    Rs. 2,590.00
    or 3 X Rs.863.33 with

    நார்மன் வின்சென்ட் பீல்

     

    தமிழில்: நாகலட்சுமி சண்முகம்

     

    பூரண திருப்தியுடன் கூடிய ஒரு வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழ இலட்சக்கணக்கான மக்களுக்கு இப்புத்தகம் வழிகாட்டியுள்ளது. தோல்வி மனப்பான்மையை முற்றிலுமாகத் துடைத்தெறிந்து, ஒருவருக்குள் உறங்கிக் கிடக்கும் சக்தியை விழித்தெழச் செய்து அற்புதமான வாழ்க்கையை வாழ இந்த புத்தகம் அறிவுரைகளை கூறுகிறது.

    or 3 X Rs. 863.33 with Koko Koko
    Read more
  • Out of Stock

    துணிந்தவனுக்கே வெற்றி ( Thuninthavanukke Vettri )

    Rs. 1,990.00
    or 3 X Rs.663.33 with

    ஜாக் கேன்ஃபீல்டு   மார்க் விக்டர் ஹான்சன்

    தமிழில்: நாகலட்சுமி சண்முகம்

     

    • நீங்கள் விரும்பும் வெற்றியை அடைய வேண்டுமா?
    • நீங்கள் குறிவைத்துள்ள சாதனைகளைப் படைத்திட வேண்டுமா?
    • உங்கள் பெருங்கனவுகளை நனவாக்கிட வேண்டுமா?

     

    அவற்றை சாதிக்க வழிகாட்டுகிறார்கள் இப்புத்தகத்தின் ஆசிரியர்கள் ஜாக் கேன்ஃபீல்டும், மார்க் விக்டர் ஹான்சனும். அதற்குத் தேவையான உத்திகள் இப்புத்தகம் நெடுகிலும் பரவிக் கிடக்கின்றன. உங்கள் சுயமதிப்பை வானளாவ உயர்த்தவும், உங்கள் தைரியத்திற்கு உயிரூட்டி, உரமிட்டு வளர்க்கவும், ஒரு வெற்றியாளனின் மனப்போக்கைத் தத்தெடுத்துக் கொள்ளவும் இப்புத்தகம் உங்களைத் தயார்படுத்தும். உங்கள் பயங்களை அடக்கியாளவும் வாழ்வின் சவால்களைச் சந்திக்கவும் துணியுங்கள், வெற்றி நிச்சயம்!

    or 3 X Rs. 663.33 with Koko Koko
    Read more
  • நம்புதலின் மேஜிக்
    Out of Stock

    நம்புதலின் மேஜிக்

    Rs. 1,390.00
    or 3 X Rs.463.33 with

    கிளாட் ப்ரிஸ்டல்

    தமிழில்: மீரா ரவிஷன்கர்

     

    மனதில் தூங்கிக்கொண்டிருக்கும் விசையை விடுவி – அதீத சக்தியைக் கொண்ட உன் ஆற்றலை கண்டுபிடி!

     

    நீ என்ன நம்புகிறாயோ அதுதான் நீ!!!

     

    வாழ்வில் தேவையானவற்றைப் பெற மேஜிக் ஃபார்மூலா இருக்கா? இந்தப் புத்தகம் அதிசயம் என்றாலும் மிகையாகாது. இதில் எல்லோரும் பயன்படுத்தி பலன் கண்ட ஆக்க பூர்வமான முறைகள் உள்ளன. உங்கள் வாழ்வின் கரம் சிறப்பாகி, உங்கள் விருப்பங்கள் அனைத்தையும் அடையலாம்.

     

    நீங்கள் உங்கள் உலகின் படைப்பாளி. உங்களின் உள்ளே ஆளுமை விசை உண்டு. அது உங்கள் மனப்பிரபஞ்சத்தில் நீங்கள் வரைந்திருக்கும் படங்களை நிஜ உலகில் உண்மையாக்கும் சக்தி வாய்ந்தது, உங்களிடம் தேவை – இது வேலை செய்யும் என்ற நம்பிக்கை!

     

    உங்கள் வாழ்வினுள் மேஜிக்கைக் கொண்டு வாருங்கள்!

    or 3 X Rs. 463.33 with Koko Koko
    Read more
  • Out of Stock

    அக்னிச் சிறகுகள்: சுயசரிதம்

    Rs. 1,990.00
    or 3 X Rs.663.33 with

    ஏ.பி.ஜே.அப்துல் கலாம், அருண் திவாரி

    தமிழில்: கவிஞர் புவியரசு

     

    ஒவ்வொரு சாமானியனும் தனது முழு மன உறுதியாலும் கடின உழைப்பாலும் வெற்றியை அடையும் தனது கதையை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும், ஏனென்றால் மற்றவர்கள் தனது கதையில் உத்வேகத்தையும் வலிமையையும் காணலாம். ‘விங்ஸ் ஆஃப் ஃபயர்’ என்பது தொலைநோக்கு விஞ்ஞானி டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் சுயசரிதை ஆகும், அவர் மிகவும் எளிமையான தொடக்கத்தில் இருந்து இந்தியாவின் ஜனாதிபதியாக உயர்ந்தார். டாக்டர் கலாமின் நுண்ணறிவுகள், தனிப்பட்ட தருணங்கள் மற்றும் வாழ்க்கை அனுபவங்கள் நிறைந்த புத்தகம். அது அவருடைய வெற்றிப் பயணத்தைப் பற்றிய புரிதலை நமக்குத் தருகிறது.

    or 3 X Rs. 663.33 with Koko Koko
    Read more
  • Out of Stock

    தீர்க்கதரிசி

    Rs. 690.00
    or 3 X Rs.230.00 with

    கலீல் ஜிப்ரான்

     

    கலீல் கிப்ரானின் த பிராபட் என்ற இந்த புத்தகம் ஆங்கிலத்தில் கவித்துவமான 26 கட்டுரைகளைக் கொண்டது. இது நிறைய ஆன்மீக ஊக்குவிகளைக் கொண்டது.

     

    ஆசிரியர் தன் கைப்பட பன்னிரெண்டு ஓவியங்களை வரைந்துள்ளார். 11 வருடங்களுக்கு மேல் இந்தப் புத்தகத்தின் நேர்த்திக்காக உழைத்திருக்கிறார். இது கிப்ரானின் சிறந்த படைப்பு. அவருடைய இலக்கிய வாழ்வின் உச்சத்தைத் தொட்டப் புத்தகம். இதனால் இவர் ‘வாஷிங்டன் தெருவின் புலவர்’ என்று அறியப்பட்டார்.

     

    உணர்சிகளின் கொந்தளிப்பின் ஈர்ப்பைப் படம் பிடித்திருக்கிறார். த உலக பிராபட் 40 மொழிகளுக்கு மேல் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. 20ம் நூன்றாண்டின் மிகவும் அதிகப்படியாகப் படிக்கப்பட்ட புத்தகம் என்று பெயர் வாங்கியது. இதன் முதல் பதிப்பில் 1300 பிரதிகள் ஒரே மாதத்தில் விற்கப்பட்டன.

    or 3 X Rs. 230.00 with Koko Koko
    Read more
  • Out of Stock

    நவல் ரவிகாந்த்தின் நாட்குறிப்புகள் (Naval Ravikanthin Naatkurippuhal) The Almanack Of Naval Ravikant

    Rs. 1,950.00
    or 3 X Rs.650.00 with

    எரிக் ஜோர்கன்சன்

     

    செல்வந்தராக ஆவது என்பது வெறும் அதிர்ஷ்டத்தைப் பற்றியது அல்ல; மகிழ்ச்சி என்பது நாம் பிறக்கும்போது நம்மோடு பிறந்த விஷேச குணம் அல்ல. இந்த அபிலாஷைகள் நம்மால் எட்டப்பட முடியாதவை அல்ல. செல்வத்தை உருவாக்குவதும் மகிழ்ச்சியாக இருப்பதும் கற்றுக் கொள்ளப்படக்கூடிய திறன்களே.

     

    அத்திறன்கள் என்னென்ன? அவற்றை எப்படிக் கற்றுக் கொள்வது? நம்முடைய முயற்சிக்கு வழிகாட்டுகின்ற கொள்கைகள் எவையெவை?

     

     

    நவல் ரவிகாந்த் ஒரு தொழிலதிபர், ஒரு தத்துவவியலாளர் மற்றும் ஒரு முதலீட்டாளர். செல்வச் சேகரிப்பு மற்றும் மகிழ்ச்சியாக இருத்தல் தொடர்பான தன்னுடைய கொள்கைகளின் மூலமாக உலகின் கவனத்தைப் பெரிதும் கவர்ந்தவர் அவர். கடந்த பத்து ஆண்டுகளில் அவர் சமூக ஊடகங்கள் மற்றும் பேட்டிகளின் மூலமாகப் பகிர்ந்து கொண்ட ஞானத்தின் தொகுப்புதான் இந்நூல். செல்வத்தையும் மகிழ்ச்சியையும் எப்படி அடைவது என்பதைப் படிப்படியாகக் கற்றுக் கொடுக்கும் ஒரு நூல் அல்ல இது. மாறாக, நீங்கள் செல்வத்தையும் மகிழ்ச்சியையும் அடைவதற்கான உங்களுடைய சொந்தப் பாதையை உருவாக்கிக் கொள்வதற்கு அவருடைய வார்த்தைகள் உங்களுக்கு வழிகாட்டும்.

    or 3 X Rs. 650.00 with Koko Koko
    Read more
  • Out of Stock

    நாடற்றவன் / Nadatravan

    Rs. 1,390.00
    or 3 X Rs.463.33 with

    அ.முத்துலிங்கம்

     

    2012 இல் ஒளிம்பிக் போட்டி நடந்தபோது நாடற்ற ஒருத்தர் மரதன் ஒட்டத்தில் கலத்து கொண்டார். உலகத்திலே நாடு இல்லாத அத்தனை பேருக்கும் பிரதிநிதியாக ஒடினார்.

     

    அவரை எப்படி மறக்க முடியும் ? அவர் முதல் மூன்று இடங்களில் வரவில்லை. ஒரு பதக்கமும் பெறவில்லை. உலகத்துக் கண்கள் அவரில் இருந்தன.

    நான் அவரை மட்டுமே பார்த்தேன்.

     

    அவர்தான் என்னுடைய வீரர்.

    or 3 X Rs. 463.33 with Koko Koko
    Read more
  • Out of Stock

    தலைமைப் பண்பு பற்றிய மெய்யறிவு ( Thalaimai Panbu Pattriya Meyyarivu )

    Rs. 2,490.00
    or 3 X Rs.830.00 with

    ராபின் ஷர்மா

    தமிழில்: அ. ராஜமோகன்

     

    “இந்த ஆண்டின் மிகச் சிறந்த வியாபார நுணுக்கம் நிறைந்த நூல்.” -ப்ராஃபிட் மேகஸின்

     

    ‘கருத்துக்கள் செறிந்தது, படிக்க எளிதானது, பெரிதும் பயனுள்ளது. நாங்கள் எங்கள் மேலாண்மை தொடர்பான அணியினருக்கும் அங்காடியை நடத்துபவர்களுக்கும் விநியோகம் செய்துள்ளோம். அவர்களிடமிருந்து நல்ல வரவேற்பு இருக்கிறது.” – டேவிட் ப்ளூம், தலைமை அதிகாரி, ஷாப்பர்ஸ் டிரக் மார்ட்

     

    “இந்த நூல் மெய்யறிவும் பொது அறிவும் நிறைந்த ஒரு தங்கச் சுரங்கம்”- டீன் லேரி டாப் – ரிச்சர்டு ஐவி ஸ்கூல் ஆஃப் பிசினஸ், யூனிவர்சிட்டி ஆஃப் ஒன்டாரியோ

     

    “வணிகத் துறையில் ஈடுபட்டிருப்பவர்கள், சிறந்த வழியைக் காட்டி பயனுள்ள வாழ்க்கை வாழ்வதற்கு உதவும் நூல்.” -ஜிம் ஓ நீல், டைரக்டர் ஆஃப் ஆப்பரேஷன்ஸ், டிஸ்ட்ரிக்ட் சேல்ஸ் டிவிஷன், லண்டன் லைஃப்

     

    ‘தன்னுடைய பொக்கிஷத்தை விற்ற துறவி என்னும் நூலை உருவாக்கியவரிடமிருந்து வந்துள்ள தலைமைப் பண்பு குறித்த மெய்யறிவு என்னும் நூல் மிக அதிகமாக விற்பனையாகும் நூல்களின் பட்டியலில் உயர்ந்த இடத்தை நோக்கிச் செல்கிறது.” –இன்வெஸ்ட்மெண்ட் எக்ஸிகியூட்டிவ்

     

    “துறவி வியாபாரத்தில் சமநிலையுடன் இருப்பது பற்றி வழிகாட்டுகிறார். அவருடைய நூல்கள் பலனளிக்கின்றன.” –டொரான்டோ ஸ்டார்

    or 3 X Rs. 830.00 with Koko Koko
    Read more
  • Out of Stock

    அற்புதங்கள் உங்கள் கையில் ( Atputhangal Ungal Kaiyil ) You can Work Your Own Miracles

    Rs. 1,950.00
    or 3 X Rs.650.00 with

    நெப்போலியன் ஹில்

     

    நீங்கள் விரும்பும் அனைத்தும் உங்கள் கைக்கெட்டும் தூரத்தில்தான் உள்ளது!

     

    நீங்கள் விரும்புகின்றவற்றைக் கைவசப்படுத்துவதற்கு, உங்களுடைய சொந்த ஆளுமைக்குள் துயில் கொண்டிருக்கின்ற அந்த அற்புத சக்தியை விழித்தெழச் செய்வது எப்படி என்பதை நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும், அவ்வளவுதான்!

     

    தொழில்முனைவோர், மருத்துவர்கள், இராணுவ வீரர்கள், கலைஞர்கள் போன்ற, பல்வேறு துறைகளைச் சேர்ந்த மக்கள், வெற்றிகரமான ஆளுமையின் அற்புத சக்தியின் வாயிலாகத் தங்கள் இலக்குகளை அடையவும், தங்கள் வெற்றிக்குக் குறுக்கே நிற்கும் தடைகளைத் தகர்த்தெறியவும், தாங்கள் விரும்புகின்ற வாழ்க்கையை வாழவும் கற்றுக் கொண்டிருக்கின்றனர்.

     

    உங்களாலும் அவர்களில் ஒருவராக ஆக முடியும்!

     

    உலகப் புகழ் பெற்ற நூலாசிரியரும், வெற்றிக்கான இரகசியங்களைத் தன் வாழ்நாள் முழுவதும் பிறருக்குக் கற்றுக் கொடுத்த ஆசானுமான நெப்போலியன் ஹில், அதற்கான வழிகளை இந்நூலின் வாயிலாக உங்களுக்குக் கற்றுக் கொடுக்க வருகிறார்.

    or 3 X Rs. 650.00 with Koko Koko
    Read more
  • Life is a gift Tamil flashbooks.lk
    Out of Stock

    வாழ்க்கை ஒரு பரிசு

    Rs. 1,990.00
    or 3 X Rs.663.33 with

    கில் எட்வர்ட்ஸ்

    தமிழில்: PSV குமாரசாமி

     

    வாழ்க்கை ஒரு பரிசு என்ற இந்த புத்தகத்தில், கில் எட்வர்ட்ஸ் உங்கள் கனவு வாழ்க்கையை உருவாக்க நான்கு அண்ட ரகசியங்களை வழங்குகிறார்:

     

    * வாழ்க்கையை ஒரு பரிசாகப் பார்ப்பது

    * ஈர்ப்பு விதியைப் புரிந்துகொள்வது

    * ஓட்டத்தில் உங்கள் வழியை உணருதல்

    * நிபந்தனையற்ற அன்பைப் பயிற்சி செய்தல்.

     

    இந்த ரகசியங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம், நீங்கள் ஒவ்வொரு கனவையும் நனவாக்கலாம் – உங்களுக்கு அதிக வெற்றி மற்றும் செழிப்பு, நல்ல ஆரோக்கியம், அன்பான உறவுகள், உங்கள் சிறந்த வேலை அல்லது வீடு, உலகில் மாற்றத்தை ஏற்படுத்துங்கள் அல்லது உள் அமைதியையும் மகிழ்ச்சியையும் காணலாம்.

     

    or 3 X Rs. 663.33 with Koko Koko
    Read more
  • Out of Stock

    வரம் பெற்ற வாழ்க்கை ( Varam Pettra Vaazhkai )

    Rs. 1,290.00
    or 3 X Rs.430.00 with

    நெப்போலியன் ஹில்

    தமிழில்: அகிலன் – கபிலன்

     

    நெப்போலியன் ஹில், பல மில்லியன் சிறந்த விற்பனையான திங்க் அண்ட் க்ரோ ரிச் எழுதியவர், தனிப்பட்ட வளர்ச்சி இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவர். அவர் மிகவும் செல்வாக்கு மிக்க எழுத்தாளர்களில் ஒருவர் என்று எளிதாகக் கூறலாம்.

     

    இந்த வாழ்க்கை வரலாறு நெப்போலியன் ஹில்லின் பயணத்தை அவரது தாழ்மையான தொடக்கத்திலிருந்து ஆண்ட்ரூ கார்னகி உடனான அவரது புகழ்பெற்ற சந்திப்பு வரை, ஒரு சக்திவாய்ந்த சிந்தனையாளராக மாறுவதற்கான அவரது பயணம் வரை படம்பிடிக்கிறது.

    or 3 X Rs. 430.00 with Koko Koko
    Read more
  • The Diary of a Young Girl Tamil Flashbooks.lk
    Out of Stock

    ஒரு இளம் பெண்ணின் நாட்குறிப்பு

    Rs. 1,790.00
    or 3 X Rs.596.67 with

    ஆன் ஃப்ராங்க்

    தமிழில்: மைதிலி சம்பத்

     

    ஆன் ஃப்ராங்கின் நாட்குறிப்பிற்கு அறிமுகம் தேவையில்லை.
    மனித சரித்திரத்தின் பயங்கரமான ஒரு காலகட்டத்தில், அழகாக எழுதப்பட்ட ஒரு இளம் பெண்ணின் வாழ்க்கை சரித்திரம் இது.

    எத்தனையோ இடர்பாடுகளை எதிர்த்து போராடியும், உயிர் வாழ விரும்பும் மனிதனின் அழிக்க முடியாத உறுதிக்கு இது ஒரு நிரூபணம். ஆன் ஃப்ராங்க் இரண்டாம் உலகப்போரில் பலியாகி இருப்பினும், அவளுடைய கதையையும், அவள் நாட்குறிப்பின் ஒவ்வொரு அங்குலத்தையும் எடுத்துக் கொண்டுள்ள அவள் வார்த்தைகள்,

    அவளுடைய நினைவுகளை உலகம் அறிந்து கொள்வதற்காக பல காலமாக உயிருடன் வைத்திருக்கிறது…

    or 3 X Rs. 596.67 with Koko Koko
    Read more
  • Out of Stock

    பிரம்மாண்டமான சிந்தனையின் மாயாஜாலம் (Pirammandamaana Sindhanaiyin Maayajaalam)

    Rs. 2,590.00
    or 3 X Rs.863.33 with

    டேவிட் ஷுவார்ட்ஸ் பிஎச்.டி

     

    தமிழில்: நாகலட்சுமி சண்முகம்

     

    டேவிட் ஷுவார்ட்ஸ் பிஎச்.டி யின் உலகெங்கும் விற்பனையில் மகத்தான சாதனைகள் புரிந்துள்ள “The Magic of Thinking Big” என்னும் நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு.

    அதிகப் பணம் சம்பாதிக்கவும், துணிச்சலுடன் தலைமையேற்று வழிநடத்தவும், மகிழ்ச்சியுடன் வாழவும் வழிகாட்டும் கையேடு.

    or 3 X Rs. 863.33 with Koko Koko
    Read more
  • Out of Stock

    தள்ளு : மோட்டிவேஷன்

    Rs. 1,190.00
    or 3 X Rs.396.67 with

    சோம. வள்ளியப்பன்

     

    ஒருவரது செயல்திறனை மதிப்பீடு செய்வது எப்படி? சுமாராக பணியாற்றுபவர்கள் மேம்படுத்துவது எப்படி? ‘ஊழியர்களின் ஒட்டுமொத்த ஒத்துழைப்பைப் பெறுவது எப்படி? வேறுப்ட்ட மனநிலையில் இருக்கும் ஊ‘ழியர்களை ஒரு புள்ளியில் ஒருங்கிணைப்பது எப்படி? வேலைக்கு ஏற்ற தகுதிகளை வளர்த்துக்கொள்வது எப்படி? தகுதிக்கு ஏற்ற பணிகளைத் தேர்வு செய்வது எப்படி? ஊழியர்கள் தாங்கள் செய்யும் பணியில் எந்த அளவுக்கு மனநிறைவு பெற்றிருக்கிறார்கள் என்பதை எப்படிக் கண்டறிவது.?

     

    ஒவ்வொரு ஊழியரும் அதிகபட்ச செயல்திறனை வெளிப்படுத்தி ஊக்கத்துடன் பணியாற்றினால்தான் நிறுவனத்தோடு சேர்ந்து நாமும் அடுத்த்தடுத்த கட்டங்களுக்கு முன்னேற முடியும். செயல்திறன் அதிகரிக்க ஊக்கம் தேவை. வெளியில் இருந்து மட்டுமல்ல. உள்ளுக்குள் இருந்தும். உலகமெங்கும் நடைமுறையில் இருக்கும் மோட்டிவேஷன் தியரிகளை ஆராய்ந்து கண்டுபிடிக்கப்பட்ட நுணுக்கமான தகவல்கள், அவற்றின் மூலம் செயல்திறனை மேம்படுத்த உருவாக்கபட்ட முறைகள் ஆகியவற்றை எளிமையாக விளக்குகிறது இந்தப் புத்தகம். உங்கள் மேன்மைக்கும், உங்களுடன் பணிபுரிபைவர்களின் மேன்மைக்குமான புத்தகம் இது.

    or 3 X Rs. 396.67 with Koko Koko
    Read more
  • The 24 Hour Turnaround Tamil flashbooks.lk
    Out of Stock

    24 மணிநேரத்தில் வாழ்க்கையை மாற்றி அமையுங்கள்

    Rs. 2,490.00
    or 3 X Rs.830.00 with

    ஜிம் ஹார்ட்னஸ் & நீல் எஸ்கெலின்

     

    மாற்றத்திற்கான ஆரம்ப மற்றும் மிகப்பெரிய தடை முதல் படி – அதைச் செய்வதற்கான உண்மையான முடிவு. செயல்படுவதற்கான முடிவு ஒரு நிமிடம் மட்டுமே ஆகும், ஆனால் தாக்கம் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும். மாற்றத்திற்கான ஆற்றலைக் கண்டறிய 24 ஒரு மணி நேர கால அவகாசத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை நேரம்-சோதனை செய்யப்பட்ட ஆலோசனை மற்றும் ஊக்கமளிக்கும் எடுத்துக்காட்டுகள் விளக்குகின்றன.

    or 3 X Rs. 830.00 with Koko Koko
    Read more
  • Out of Stock

    நண்பர்களை எளிதாகப் பெறுவதும் மக்களிடம் செல்வாக்குடன் விளங்குவதும் எப்படி

    Rs. 1,690.00
    or 3 X Rs.563.33 with

    டேல் கார்னகி

    தமிழில்: நாகலட்சுமி சண்முகம்

     

    உலகில் இதுவரை வெளிவந்துள்ள ஊக்குவிப்புப் புத்தகங்களிலேயே மிகச் சிறந்த வெற்றியைப் பெற்றுள்ள புத்தகம் இது. உங்களுடைய தனிப்பட்ட உறவுகளைத் திறம்பட நிர்ணயிப்பதற்குக் காலத்தால் அழியாத அறிவுரைகளை டேல் கார்னகி இப்புத்தகத்தில் உங்களுக்கு வழங்குகிறார். அதோடு, கீழ்க்கண்டவற்றையும் உங்களுக்கு அவர் விளக்கிக் காட்டுகிறார்:

     

    • உங்கள் கருத்துக்களைச் சாணக்கியத்துடனும் சாதுரியத்துடனும் பிறருக்கு எடுத்துரைப்பது எப்படி?

    • மக்களை உங்கள்மீது விருப்பம் கொள்ள வைப்பது எப்படி?

    பிறரிடம் வேலை வாங்கும் உங்கள் திறனை அதிகரித்துக் கொள்வது எப்படி?

    உரையாடல் கலையில் சிறந்து விளங்குவது எப்படி?

    • அதிகத் திறன்மிக்கத் தலைவராகப் பரிணமிப்பது எப்படி?

     

    கடந்த 70 வருடங்களாக இப்புத்தகம் தொடர்ந்து அச்சில் இருந்து வருகிறது. இதுபோன்ற நூல்களில் இதுதான் முதலாவதும் முத்தாய்ப்பானதும் ஆகும். நீங்கள் வெற்றிப் பாதையில் பயணிக்க இந்த ஒரு புத்தகம் மட்டுமே உங்களுக்குத் தேவை!

    or 3 X Rs. 563.33 with Koko Koko
    Read more
  • Makkalaik Kaiyaalum Kalai People Tools Tamil flashbooks.lk
    Out of Stock

    மக்களைக் கையாளும் கலை ( Makkalaik Kaiyaalum Kazhai )

    Rs. 2,290.00
    or 3 X Rs.763.33 with

    ஆலன் ஃபாக்ஸ்

    தமிழில்: குமாரசாமி

     

    • NEW YORK TIMES BESTSELLER!

     

    மற்றவர்களுடன் நன்றாகப் பழகுவதுதான் வெற்றிக்கும் மகிழ்ச்சிக்கும் உண்மையான ரகசியம். பல்லாயிரக்கணக்கான வகுப்பறைகளில் நாம் வாசிப்பு, எழுதுதல் மற்றும் எண்கணிதம் ஆகியவற்றைக் கற்பிக்கிறோம், ஆனால் மனித உறவுகளின் உலகளாவிய பிரச்சினைகளுக்கான தீர்வுகளை சோதனை மற்றும் பிழை மூலம் கண்டுபிடிக்க வேண்டும். சோதனை வேதனையானது மற்றும் பிழை விலை உயர்ந்தது.

     

    மக்கள் கருவிகள்: உறவுகளை கட்டியெழுப்புவதற்கான 54 உத்திகள், மகிழ்ச்சியை உருவாக்குதல் மற்றும் செழிப்பைத் தழுவுதல், சிறந்த, மகிழ்ச்சியான, அதிக வெற்றிகரமான வாழ்க்கையை உருவாக்க நீங்கள் பயன்படுத்தக்கூடிய நேரம் நிரூபிக்கப்பட்ட நுட்பங்களை வழங்குகிறது. ஒவ்வொரு நாளும் நாம் எதிர்கொள்ளும் சவால்களுக்கு விரைவான மற்றும் பயனுள்ள தீர்வுகளைத் தேடும் பிஸியான மக்களுக்கு இது சரியான ஆதாரமாகும்.

     

    ஒவ்வொரு பக்கத்திலும் நடைமுறை ஞானம்

    or 3 X Rs. 763.33 with Koko Koko
    Read more
  • Sale!
    Out of Stock

    இலக்கை எட்டும் வரை இடைவிடாது இயங்கு ( Ilakkai Ettum Varai Idaividdathu Iyangu )

    Rs. 1,990.00
    or 3 X Rs.663.33 with

    கேரென் மெக்ரீடி

    தமிழில்: எஸ். ராமன்

     

    இலக்கை எட்டும் வரை இடைவிடாது இயங்கு’ என்னும் இந்த நூல், உலகில் தனி நபர் ஒருவரால் உருவாகிக்கொண்டிருக்கும் மாபெரும் நகரங்களில் ஒன்றான Greater Springfield என்னும் நகரை உருவாக்கி வரும் ஒரு தமிழரின் வாழ்க்கை விண்ணளவு உயர்ந்த கதை. 1992ல் குறைவான முதலீட்டுடன், உறுதியான மனத்தோடு 2860 ஏக்கர் பரப்பளவு கொண்ட மிகச் சுமாரான நிலத்தை வாங்கினார். அடுத்த இருபது வருட காலத்தில் எண்ணிலடங்கா பின்னடைவுகள், ஏமாற்றங்கள் மற்றும் சவால்களைத் தாண்டி உலகமே வியக்கும் வண்ணம் இன்று மிகப்பெரிய நகரத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.

     

    ஏழ்மை சூழ்ந்த பிறப்பிலிருந்து இந்த அளவிற்கு இவரை உயர்த்தியது சுவாமி விவேகானந்தரின் பத்து கட்டளைகள். இந்தப் பத்து கட்டளைகள் எப்படி மஹாவின் கனவுகளுக்கு உயிரூட்டம் கொடுத்தன?….. படியுங்கள்

    or 3 X Rs. 663.33 with Koko Koko
    Read more
  • The Master Key System Tamil flashbooks.lk
    Out of Stock

    திறனின் திறவுகோல் அமைப்பு

    Rs. 1,490.00
    or 3 X Rs.496.67 with

    சார்ல்ஸ் எப். ஹானல்

     

    இந்த புத்தகம் வெற்றிக்கான ஒரு சக்திவாய்ந்த அமைப்பின் ரகசியத்தை வைத்திருக்கிறது, இது எழுத்தாளர் சார்லஸ் எஃப். ஹானெலால் தனக்கென ஒரு செல்வத்தை குவிக்க பயன்படுத்தப்பட்டது. மாஸ்டர் கீ சிஸ்டம் ஈர்ப்பு விதியின் மூலம் படைப்பு வெளிப்பாட்டின் கொள்கைகளின் அடித்தளத்தை அமைக்கிறது. பிரபஞ்சத்தின் மிகவும் சக்திவாய்ந்த சக்தியைக் குறிப்பிடும் போது, ​​இன்று மிகவும் பிரபலமான வார்த்தையாக மாறியுள்ள, ஈர்ப்பு விதி என்ற சொற்றொடரைப் பயன்படுத்திய முதல் புத்தகங்களில் இது ஒன்றாகும். உங்கள் மனதின் படைப்புக் கருவியை எவ்வாறு உருவாக்குவது மற்றும் பயன்படுத்துவது என்பதை நீங்கள் கற்றுக் கொள்வீர்கள்.

    or 3 X Rs. 496.67 with Koko Koko
    Read more
  • Out of Stock

    அதிசயங்களை நிகழ்த்தும் அதிகாலை (Adhisayangalai Nihazthum Adhikaalai)

    Rs. 1,990.00
    or 3 X Rs.663.33 with

    ஹால் எல்ராட்

    தமிழில்: PSV குமாரசாமி

     

    நீங்கள் கற்பனை செய்து வைத்திருக்கும் வாழ்க்கையை விரைவாக அடைய இதோ ஓர் எளிய வழி!

     

    காலையில் நீங்கள் வழக்கமாக எழுந்திருப்பதைவிட ஒரு மணிநேரம் முன்னதாக எழுந்து, பத்து நிமிடங்களுக்கு ஒரு நடவடிக்கை என்ற கணக்கில் வெறும் ஆறு நடவடிக்கைகளை மட்டும் மேற்கெள்ளுவதன் மூலம் உங்கள் வாழ்க்கையில் உங்களால் அதிசயங்களை நிகழ்த்த முடியும் என்று யாராவது சொன்னால் நீங்கள் நம்புவீர்களா?

    or 3 X Rs. 663.33 with Koko Koko
    Read more
  • Out of Stock

    நல்லதாக நாலு வார்த்தை : மனிதர்களைப் புரிந்துகொள்ள… வாழ்க்கையை வெற்றிகொள்ள..

    Rs. 1,190.00
    or 3 X Rs.396.67 with

    சோம. வள்ளியப்பன்

     

    பணம் முக்கியம். ஆனால் அது ஒன்று மட்டுமே வாழ்வின் குறிக்கோளாக இருக்க-முடியாது அல்லவா? மனம் நிறைவாக இல்லாதபோது எவ்வளவு பணம் இருந்து என்ன பயன்? எத்தனைப் பெரிய பதவியில் இருந்து என்ன பலன்?
     

    என் வீடு, என் மனம், என் நிம்மதி என்று இருப்பதும்கூடச் சாத்தியமில்லை. வீட்டைக் கடந்து சமூகத்தோடு நாம் உறவாட வேண்டியிருக்கிறது. பலவிதமான மனிதர்களோடு நல்லுறவு கொள்ளவேண்டியிருக்கிறது. அதை எப்படிச் செய்வது? மனிதர்களை எப்படிப் புரிந்துகொள்வது? மகிழ்ச்சியை எப்படிக் கண்டடைவது? குடும்பம், அலுவலகம், சமூகம் என்று எங்கும் அன்போடும் பண்போடும் திகழ்வது எப்படி? வாழ்வில் எல்லாமும் பெற்று வளமோடும் மனநிறைவோடும் வாழ்வது எப்படி?

    or 3 X Rs. 396.67 with Koko Koko
    Read more
  • Sale!
    The Greatest Secret Tamil flashbooks.lk
    Out of Stock

    மாபெரும் இரகசியம் Maperum Irakasiyam ( The Greatest Secret )

    Rs. 4,290.00
    or 3 X Rs.1,430.00 with

    ரோன்டா பைர்ன்

    தமிழில்: PSV குமாரசாமி

     

    2006 ஆம் ஆண்டில் இரகசியம் நூலை வெளியிட்டதன் மூலம் சர்வதேசப் புரட்சி ஒன்றை ரோன்டா பைர்ன் தோற்றுவித்தார். வாழ்க்கையை அடியோடு மாற்றக்கூடிய அவருடைய இந்தக் கண்டுபிடிப்பு, தங்களுக்குள் புதைந்து கிடக்கும் சக்திகளை வாசகர்கள் புரிந்து கொள்ள உதவியது. ஆனால் ரோன்டாவின் பயணம் அத்துடன் முடியவில்லை. ஏனெனில், அதிக ஞானத்தைத் தேடிச் செல்லும்படி ஏதோ ஒன்று அவருக்குள்ளிருந்து அவரை உந்தித் தள்ளியது. அவர் அந்தத் தேடலில் பதினான்கு ஆண்டுகளைச் செலவிட்டதன் விளைவாகக் கண்டுபிடித்த உலகளாவிய உண்மைகள் இந்நூலின் பக்கங்களில் இடம்பெற்றுள்ளன.

     

    மாபெரும் இரகசியம் மக்களை பௌதிக உலகிலிருந்து உயர்த்தி, அனைத்துச் சாத்தியக்கூறுகளும் நிறைந்துள்ள ஆன்மிகத் தளத்திற்குக் கூட்டிச் செல்லும். இந்நூலில் இடம்பெற்றுள்ள போதனைகள், நீங்கள் உடனடியாக நடைமுறையில் பயன்படுத்தக்கூடிய சில பயிற்சிகளை வழங்குவதோடு, உங்களுடைய பயங்கள், ஐயப்பாடு, கவலை, வேதனை ஆகியவற்றைக் கரைக்கக்கூடிய ஆழமான உண்மைகளையும் வழங்குகின்றன. உலகம் நெடுகிலுமுள்ள பல்வேறு ஆன்மிக ஆசான்கள் உதிர்த்த ஞான முத்துகளால் நிரம்பி வழிகின்ற மாபெரும் இரகசியம், துன்பத்திற்கு ஒரு முடிவு கட்டி, ஒரு பேரானந்தமான வாழ்க்கையை வாழ்வதற்கான ஒரு நேரடியான பாதையை வாசகர்களுக்கு வழங்குகிறது.

    or 3 X Rs. 1,430.00 with Koko Koko
    Read more