Opening Possibilities, Illuminating Potentials
Island-wide Free Delivery for Purchase of Rs. 3990 or above.

Cart

Your Cart is Empty

Back To Shop
Contact Us 0764980321

Showing all 4 results

  • Sale!
    Aatraliyal Inrum Naliyum flashbooks.lk

    [RARE] ஆற்றலியல் இன்றும் நாளையும் (Energy today and Tomorrow)

    Rs. 1,190.00
    or 3 X Rs.396.67 with

    வி.அ . கிரீலின்

    தமிழில் கி. பரமேஸ்வரன்

     

    இந்நூலில், புகழ்பெற்ற சோவியத்து விஞ்ஞானியும் சோவியத்து விஞ்ஞானப் பேரவை உறுப்பினருமான வி. அ. கிரீலின் அவர்கள் 20 ஆம் நூற்றாண்டில் ஆற்றலியல் வளர்ந்த விதம், வெப்ப ஆற்றல், நீராற்றல், அணு ஆற்றல் போன்றவற்றிலிருந்து மின்னாற்றலைச் சேமித் துவைத்தல், மின்னாற்றலை ஓரிடத்திலிருந்து இன்னொரிடத்திற்கு அனுப்புதல் போன்றவற்றை எல்லோரும் புரிந்து கொள்ளும் வகையில் எழுதியுள்ளார். மேலும் அவர் நாளைய ஆற்றலியலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார். இந்நூல் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.

     

    * 70களிலும் 80களிலும் வெளிவந்த பிரபல்யமான புத்தகங்கள். மிகவும் அரிதான புத்தகங்கள்.

    இவை பாவிக்கப்படாத புத்தகங்கள். ஆனால் அச்சிடப்பட்டு 30 வருடங்களுக்கு மேல் கிடங்கில் இருந்ததால் சில புத்தகங்களில் கரையான் அறிப்பு, பக்கங்களின் நிறம் மாறுதல் போன்ற சிறிய சேதங்கள் இருக்கலாம்.

    ஆனால் முழுமையாக வாசிக்க முடியுமாக இருக்கும்.

    or 3 X Rs. 396.67 with Koko Koko
    Add to cart
  • காலத்தின் மிகச் சுருக்கமான ஒரு வரலாறு (A Briefer History of Time)

    Rs. 1,990.00
    or 3 X Rs.663.33 with

    ஸ்டீஃபன் ஹாக்கிங் and லெனர்டு மிலோடினாவ்

    தமிழில்: நாகலட்சமி சண்முகம்

     

    உலக அளவில் விற்பனையில் பெரும் சாதனைகளைப் படைத்த, ஸ்டீபன் ஹாக்கிங் எழுதிய ‘A Brief History of Time’ நூல், ஓர் அற்புதமான அறிவியல் படைப்பாகும். ஹாக்கிங்கின் வசீகரமான எழுத்து நடையும், காலம் மற்றும் வெளியின் இயல்பு, படைப்பில் கடவுளின் பங்கு, பிரபஞ்சத்தின் வரலாறு மற்றும் எதிர்காலம் போன்ற, அவர் கையாள்கின்ற சுவாரசியமான அறிவியல் விவகாரங்களும் நம் மனங்களைக் கட்டிப் போடுபவையாக இருக்கின்றன. ஆனால் அந்நூல் வெளியிடப்பட்டதிலிருந்து, அதில் இடம்பெற்றிருந்த மிக முக்கியமான கோட்பாடுகளில் சிலவற்றைப் புரிந்து கொள்வது மிகக் கடினமாக இருந்ததாகப் பேராசிரியர் ஹாக்கிங்கிற்கு வாசகர்கள் தொடர்ந்து கடிதங்கள் எழுதி வந்துள்ளனர்.

     

    அவர்களுடைய கோரிக்கைகளுக்கு இணங்கி, அந்நூலில் கையாளப்பட்ட அனைத்து விஷயங்களையும் எவரொருவரும் எளிதில் புரிந்து கொள்வதற்காகவும், சமீபத்திய அறிவியல் அவதானிப்புகளையும் கண்டுபிடிப்புகளையும் பற்றிய தகவல்களை மக்களுடன் பகிர்ந்து கொள்வதற்காகவும் ஹாக்கிங் படைத்துள்ள அற்புதமான நூல்தான் ‘A Briefer History of Time என்ற இந்நூல்.

     

    இது ‘மிகச் சுருக்கமானதாக’ இருந்தாலும்கூட, உண்மையில், முந்தைய நூலின் மிக முக்கியமான அறிவியல் விவகாரங்களை இது அதிக விரிவாக விளக்குகிறது. குழப்பமான எல்லைச் சூழல்கள் குறித்த எண்கணிதம் போன்ற சிக்கலான கோட்பாடுகள் அகற்றப்பட்டுவிட்டன. அவற்றுக்குப் பதிலாக, முந்தைய நூல் நெடுகிலும் இழையோடிய மிகவும் சுவாரசியமான, ஆனால் புரிந்து கொள்ளக் கடினமாக இருந்த சார்புக் கோட்பாடு, வளைவான வெளி, குவாண்டம் கோட்பாடு போன்ற அறிவியல் கோட்பாடுகள் ஒவ்வொன்றுக்கும் இந்நூலில் தனித்தனி அத்தியாயங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

    or 3 X Rs. 663.33 with Koko Koko
    Add to cart
  • காலம்: ஒரு வரலாற்றுச் சுருக்கம் ( Kaalam Oru Varalaattru Surukkam ) A Brief History Of Time

    Rs. 2,690.00
    or 3 X Rs.896.67 with

    ஸ்டீபன் ஹாக்கிங்

    தமிழில்: நலங்கிள்ளி

     

    கல்லூரியின் வாசலில் கால் வைத்த பிறகு அறிவியல் என்னும் பூந்தோட்டத்தை ஆங்கிலம் என்ற முகமூடி அணிந்து உலா வரும் கட்டாயத்தில் உள்ள பெரும்பாலான தமிழ் உள்ளங்களுக்கு, இந்தப் புத்தகம் வீடு தேடி வரும் ஒரு இனிய தென்றல். அறிவியல் என்ற நல்மருந்திற்கு ஆங்கிலம் என்ற கசப்பை ஒதுக்கி, தேன் தமிழ் சேர்த்து கொடுக்கும் முயற்சியிது. கடினமான அறிவியல் கோட்பாடுகளை எளிமையான சொற்றொடர்கள் மூலம் கருத்து மாறாமல் சொல்லுவது என்பது மூளையைப் பின்னிப் பிணைந்து எடுக்கும் வேலை. திரு நலங்கிள்ளி இதனை மிகவும் திறம்படச் செய்துள்ளார். கடுமையான உழைப்பும், தளராத முயற்சிகளும் இதன் பின்னணியில் இருப்பதை என்னால் உணர முடிகிறது. பல இடங்களில் புதிய சொற்களை உருவாக்கியும் அவற்றின் பொருளானது அடிப்படையைச் சிதைத்துவிடாமலும் இருக்கும் வண்ணம் மிக கவனமாகவும் ‘அறிவியல் தமிழ்’ என்னும் கத்தி மேல் பக்குவமாய் நடந்துள்ளார். தமிழில் இது ஒரு புதிய முயற்சி.

    or 3 X Rs. 896.67 with Koko Koko
    Add to cart
  • Sale!
    Out of Stock

    [RARE] அனைவருக்குமான இயற்பியல்: இயக்கம், வெப்பம் ( Physics for Everyone: Motion and Heat)

    Rs. 2,490.00
    or 3 X Rs.830.00 with

    எல். லாண்டாவேர் அ. கிட்டகரோட்ஸ்கி

    தமிழில்: டாக்டர். இ. பழனியாண்டி

     

    * 70களிலும் 80களிலும் வெளிவந்த பிரபல்யமான புத்தகங்கள். மிகவும் அரிதான புத்தகங்கள்.

    இவை பாவிக்கப்படாத புத்தகங்கள். ஆனால் அச்சிடப்பட்டு 30 வருடங்களுக்கு மேல் கிடங்கில் இருந்ததால் சில புத்தகங்களில் கரையான் அறிப்பு, பக்கங்களின் நிறம் மாறுதல் போன்ற சிறிய சேதங்கள் இருக்கலாம்.

    ஆனால் முழுமையாக வாசிக்க முடியுமாக இருக்கும்.

    or 3 X Rs. 830.00 with Koko Koko
    Read more