Opening Possibilities, Illuminating Potentials
Island-wide Free Delivery for Purchase of Rs. 3990 or above.

Cart

Your Cart is Empty

Back To Shop
Contact Us 0764980321

Category: குற்றம்

Showing all 8 results

 • Out of Stock

  இடி அமீன் ( Idi Amin )

  Rs. 1,380.00
  or 3 X Rs.460.00 with

  ச. ந. கண்ணன்

   

  இடி அமின் கொன்றொழித்த மனித உயிர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தில் இருந்து ஐந்து லட்சம் வரை இருக்கும் என்று கணக்கிடுகிறார்கள். ரத்தம் குடிப்பார், மனித உடல் பாகங்களைத் தின்பார் என்பதில் தொடங்கி பல உறைய வைக்கும் குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன. கொன்ற உடல்களை நீர்வீழ்ச்சியில் வீசி முதலைகள் பசியாற வைப்பார் என்று அவர் உதவியாளர் சாட்சியம் அளித்திருக்கிறார்.

   

  இடி அமின் குறித்த வதந்திகளும் கட்டுக்கதைகளும் அதிகம். என்றாலும், உகாண்டாவின் சர்வாதிகாரியாக அவர் ஆட்சியில் இருந்த காலத்தில் அரங்கேறிய அரசியல் அராஜகங்களுக்கும், இனப்படுகொலைகளுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் வலுவான ஆதாரங்கள் முன்வைக்கப்படுகின்றன. எதிர்ப்பவர்-களை மட்டுமல்ல, எதிர்க்க நினைப்பவர்களையும் அமின் அழித்திருக்கிறார். இந்தியர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். பொருளாதாரம் உருக்குலைந்தது. அவர் காலத்தில், அவருடன் பழகியவர்கள், பணியாற்றியவர்கள் அத்தனை பேரும் கொல்லப்பட்டார்கள் அல்லது காணாமல் போனார்கள். தப்பிப் பிழைத்தவர்கள் வெகு சிலரே.

   

  இடி அமின் செய்துகொண்டிருந்தது சீர்திருத்தமா, சீரழிவா என்பதை உகாண்டா மட்டுமல்ல உலகமும்கூட நீண்ட காலத்துக்குப் புரிந்துகொள்ளவில்லை. உண்மை தெரிய வந்தபோது, நிலைமை கைமீறியிருந்தது. ஒரு தேசம் அங்கே அழிந்துபோயிருந்தது. ஹிட்லர், முஸோலினி வரிசையில் மனித குலத்துக்கு பெரும் நாசம் விளைவித்த சர்வாதிகாரியான இடி அமினின் வாழ்க்கையை உகாண்டாவின் வரலாறோடு சேர்த்தே வழங்கிஇருக்கிறார் ச.ந. கண்ணன்.

  or 3 X Rs. 460.00 with Koko Koko
  Read more
 • Prabhala Kolai Vazhakkugal Flashbookslk
  Out of Stock

  பிரபல கொலை வழக்குகள்

  Rs. 1,690.00
  or 3 X Rs.563.33 with

  எஸ். பி. சொக்கலிங்கம்

   

  எம்ஜிஆரைச் சுட்டுவிட்டுத் தன்னையும் சுட்டுக்கொண்டார் எம்ஆர் ராதா. இருவரும் உயிர் பிழைத்தது எப்படி? எம்ஜிஆர் கொலை முயற்சி வழக்கு எப்படி நடத்தப்பட்டது?

   

  இறந்துபோன ஜமீன் இளவரசர் ஒருவர் பல்லாண்டுகள் கழித்து, சந்நியாசியாகத் திரும்பிவந்தபோது, ஒட்டுமொத்த இந்தியாவின் கவனமும் அவர்மீது திரும்பியது. அவர் உண்மையிலேயே இளவரசரா அல்லது ஜமீனின் சொத்துகளை அபகரிக்க வந்தவரா? இந்தச் சிக்கலை விடுவிக்க எடுக்கப்பட்ட முயற்சிகளும் உண்மையை நிரூபிக்கத் தொடுக்கப்பட்ட வழக்கும் மர்ம நாவலைவிடவும் விறுவிறுப்பானவை. திடுக்கிடச் செய்யும் விசாரணை விவரங்கள்.

   

  ஜின்னா, ஒரு கொலை வழக்கில் வாதாடியதும் அதில் தோற்றுப்போனதும் தெரியுமா?

   

  தமிழகத்தை உலுக்கிய விஷ ஊசிக் கொலைகள் எப்படி முடிவுக்கு வந்தன? குற்றவாளிகள் எப்படிப் பிடிபட்டனர்?

   

  சென்னை எழும்பூரிலிருந்து ராமேஸ்வரம் சென்ற ரயிலில், ஒரு டிரங்குப் பெட்டியில், தலையில்லாத மனித உடல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. பின்னாட்களில், தூர்தர்ஷனில் தொடர் நாடகமாக மாறி பார்வையாளர்களைக் கிடுகிடுக்க வைத்தது இந்தக் கொலைச்சம்பவம். முழு விவரங்கள் உள்ளே.

   

  க்ரைம் நாவல்களைவிடவும் சுவாரஸ்யமான, விறுவிறுப்பான?பல பிரபலமான கொலை வழக்குகளும் பின்னணி விசாரணைத் தகவல்களும் இந்நூலில் விரிவாக இடம்பெற்றுள்ளன. இந்த வழக்குகளை வழக்கறிஞர் S.P.சொக்கலிங்கம் பதைபதைக்கச் செய்யும் எழுத்து நடையில் நமக்கு அறிமுகம் செய்கிறார்.

  or 3 X Rs. 563.33 with Koko Koko
  Read more
 • Out of Stock

  பிரிட்டிஷ் உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம் ( British Ulavaazhiyin Opputhal Vaakumoolam )

  Rs. 590.00
  or 3 X Rs.196.67 with

  ஆலிவர் ஹெம்பர்

   

  சதித்திட்டங்களைத் தெரிந்து கொள்வது காலம் காலமாய் மனிதர்களுக்கு ஆர்வமூட்டக்கூடிய விஷயம். அதனால்தான் இடதுசாரிகளும் வலதுசாரிகளும் ஏறக்குறைய அனைவருமே சதிக்கொள்கை மீது நம்பிக்கை வைக்கிறார்கள்.

  பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரிட்டிஷ் காமன்வெல்த் (பொதுநல) அமைச்சகம் உலகம் முழுவதும் தனது காலனியை ஏற்படுத்துவதற்காக ஆயிரக்கணக்கான ஆண்களையும் பெண்களையும் நன்கு பயிற்றுவித்து உளவாளிகளாக அனுப்புகிறது. அவர்களில் ஒருவர்தான் ஆலிவர் ஹெம்பர்.

  அவர் அரபு நாடுகளிலும் ஆசிய நாடுகளிலும் தமக்கு அளிக்கப்பட்ட பணியை எவ்வாறு மேற்கொண்டார் என்பதை ஒப்புதல் வாக்குமூலமாக இந்நூலில் பதிவு செய்கிறார்.

  or 3 X Rs. 196.67 with Koko Koko
  Read more
 • Out of Stock

  பிரபல கொலை வழக்குகள் (பாகம் 2) ( Prabala Kozhai Vazhakkugal PART 2 )

  Rs. 920.00
  or 3 X Rs.306.67 with

  எஸ். பி. சொக்கலிங்கம்

   

  மதுரை நாயக்கரின் வீட்டின் புறக்கடையில் உள்ள வடிகாலில் அடைப்பு. சாக்கடைக் குழியின் சிமெண்ட் மூடியை அகற்றிவிட்டு உள்ளே பார்த்தால் ஒரு பச்சிளம் குழந்தையின் இடது கை விரல்களும் குழந்தையின் தலையும் தெரிந்தது.

   

  சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில், ஈச்ச இலையில் சுற்றிக் கட்டப்பட்ட பார்சல் ஒன்று எக்ஸ்பிரஸ் ரயில் வண்டியில் ஏற்றப்பட்டது. பிரித்துப் பார்த்தால் உள்ளே ஒரு பெண்ணின் சடலம்.

   

  சென்னை மந்தைவெளியில் பேருந்தின் கடைசி இருக்கையின் அடியில் ஒரு வெள்ளை நிற பாலித்தீன் பை கண்டெடுக்கப்பட்டது. உள்ளே ரத்தக்கறையுடன் தலையில்லாத உடல்.

   

  நெஞ்சைப் பதைபதைக்கச் செய்யும் பத்து படுகொலைகள் இதில் விவரிக்கப்பட்டுள்ளன. கொலை நடந்த நொடியில் இருந்து தீர்ப்பு வழங்கப்பட்ட நொடி வரை நடந்தவை அனைத்தையும் படு துல்லியமாக, முழு ஆதாரங்களுடன் விறுவிறுப்பான மொழி நடையில் ஒரு திரைப்படம் போல் கண் முன்னே விரியச் செய்கிறார் எஸ்.பி. சொக்கலிங்கம். எழுத்தாளராக மட்டுமல்லாமல் வழக்கறிஞராகவும் இருப்பதால் சட்டங்கள், நீதி மன்ற விசாரணைகள் தொடர்பான நுட்பமான விவரங்களையும் கவனமாகப் பதிவு செய்கிறார்.

   

  வாசகர்களின் பெருத்த வரவேற்பைப் பெற்ற பிரபல கொலை வழக்குகள் நூலின் இரண்டாம் பகுதி இது. பத்து த்ரில்லர் படங்களை ஒரே நேரத்தில் பார்க்கத் தயாராகுங்கள்.

  or 3 X Rs. 306.67 with Koko Koko
  Read more
 • Out of Stock

  ஹிட்லர்: வாழ்வும் அரசியலும் ( Hitler: Vaazhvum Arasiyalum )

  Rs. 1,490.00
  or 3 X Rs.496.67 with

  பா. ராகவன்

   

  விதி, கலை உணர்ச்சியுடன் கட்டமைத்த ஒரு வில்லன், ஹிட்லர். அவரது இனவெறி, பதவி வெறி, மண் வெறி அனைத்துமே தனிப்பட்ட முறையில் அவருக்கு ஏற்பட்ட விரக்திகளாலும் ஏமாற்றங்களாலும் துயரங்களாலும் உருவானவை. அவர் பிறவி அரசியல்வாதி கிடையாது. தன்னை நிலை நிறுத்திக்கொள்ள அரசியல்தான் சரி என்று தீர்மானம் செய்து, அதைப் பிழைகளின் வழியாகவே பயின்றவர். பெரிய ராஜதந்திரி எல்லாம் இல்லை. சுண்டி இழுக்கும் உணர்ச்சிமயமான சொற்பொழிவுகளால் மட்டுமே தனது ஆளுமையைக் கட்டமைத்துக்கொண்டவர்.

   

  உலகுக்கு வெளிப்பட்ட நாள் முதல் மரணம் வரை அதிரடியாகவே ஓடி வாழ்ந்து மறைந்தவர். தமிழில் வெளிவந்திருக்கும் ஹிட்லரின் வாழ்க்கை வரலாறுகளில் மிக அதிகம் வாசிக்கப்பட்டதும் மிகவும் பாராட்டப்பட்டதும் பா. ராகவனின் இந்தப் புத்தகம்தான். ஹிட்லரின் செயல்பாடுகளில் இருந்த வேகமும் வெறித்தனமும் இந்நூலின் மொழிநடையாக மறு உருவம் கொண்டிருக்கின்றன.

  or 3 X Rs. 496.67 with Koko Koko
  Read more
 • Out of Stock

  கொடூரக் கொலை வழக்குகள்: பதைபதைக்கச் செய்யும் நிஜக் கதைகள் ( Kodoorak Kozhai Vazhakkugal )

  Rs. 1,190.00
  or 3 X Rs.396.67 with

  வைதேகி பாலாஜி

   

  ஆட்டோ சங்கர், பூலான் தேவி, அஜ்மல் கசாப், வீரப்பன், நொய்டா படுகொலை போன்ற ஒட்டுமொத்த இந்தியாவையும் பதைபதைக்க வைத்த கொடூரமான கொலை வழக்குகள் இந்தப் புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளன.

   

  நினைத்துப்பார்க்கவே அஞ்சும் கொலைபாதகக் குற்றங்களை இவர்களில் சிலர் மிக இயல்பாகச் செய்திருக்கிறார்கள். சிலர் பணத்துக்காகவும் சிலர் புகழுக்காகவும் சிலர் இன்னதென்றே கண்டுபிடிக்க முடியாத காரணங்களுக்காகவும் கொன்றிருக்கிறார்கள். ஒவ்வொரு வழக்கும் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது.

   

  குற்றவாளியின் பின்னணி என்ன? எது அவரைக் குற்றச்செயல்களைச் செய்யத் தூண்டியது? எப்படிப்பட்ட குற்றங்களில் அவர் ஈடுபட்டார்? அவருடைய வாழ்க்கைமுறை, பின்னணி என்ன? அவர் பிடிபட்டது எப்படி? பிறகு என்ன ஆனது? கிரிமினல்களைத் தண்டிப்பதன்மூலம் மட்டும் நீதி கிடைத்துவிடுமா? இவர்கள் உருவாகக் காரணமாக இருந்த சமூக அரசியல் சூழலை எப்படிச் சீர்திருத்துவது?

   

  இந்த வழக்குகளில் பெரும்பாலானவை மிகப் பரந்த அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தியவை. அன்றைய பத்திரிகைகளில் சுடச்சுட அலசப்பட்டவை. பொதுவெளியில் அச்சத்துடன் விவாதிக்கப்பட்டவை. நூலாசிரியர் வைதேகி பாலாஜியின் இந்தப் புத்தகம் அந்தக் காலகட்டத்தையும் அப்போதைய பரபரப்பையும் நம்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது.

  or 3 X Rs. 396.67 with Koko Koko
  Read more
 • Out of Stock

  பிரபல கொலை வழக்குகள் (பாகம் 1) ஒட்டுமொத்த இந்தியாவையும் பீதியில் உறைய வைத்த வழக்குகள், விசாரணை விவரங்கள்

  Rs. 1,690.00
  or 3 X Rs.563.33 with

  எஸ். பி. சொக்கலிங்கம்

   

  இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பு ஊடகங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்ட பாவ்லா கொலை வழக்கின் பின்னணி என்ன? தமிழகத்தை உலுக்கிய விஷ ஊசிக் கொலைகள் எப்படி முடிவுக்கு வந்தன? குற்றவாளிகள் எவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டனர்? ஒருகாலத்தில் திரையுலகின் முடிசூடா மன்னராக மின்னிய எம்.கே. தியாகராஜ பாகவதரின் வாழ்க்கை ஒரு கொலை வழக்கால் தலைகீழாக மாறியது எப்படி? ஆளவந்தார் கொலை வழக்கை இன்றளவும் மக்கள் மனதில் அழுத்தமாகப் பதிந்திருப்பது ஏன்? பல புதிய சிக்கல்களைக் கொண்டிருந்த நானாவதி கொலை வழக்கு எவ்வாறு தீர்க்கப்பட்டது? சிங்கம்பட்டி கொலை வழக்கு, வெம்பன் வழக்கு, மரியாகுட்டி கொலை வழக்கு என்று பரபரப்பாக விவாதிக்கப்பட்ட, திடுக்கிடும் திருப்பங்களைக் கொண்ட சில பிரபலமான கொலை வழக்குகளின் முழுமையான பின்னணி இந்நூலில் இடம்பெற்றுள்ளது.
   

  கொலை, கொலைக்கான காரணம், கொலையாளியின் பின்னணி, துப்புத் துலக்கப்பட்ட விதம், விசாரிக்கப்பட்ட முறை, குறுக்கு விசாரணை நடத்தப்பட்ட விதம் என்று படிப்படியாக விவரித்து இறுதியாக எத்தகைய தீர்ப்புகளை இந்த வழக்குகள் பெற்றன என்பதை விறுவிறுப்பான முறையில் விவரித்துள்ளார் வழக்கறிஞர் குக. சொக்கலிங்கம். கற்பனை கிரைம் கதைகள் எல்லாம் பக்கத்தில்கூட வரமுடியாது.

  or 3 X Rs. 563.33 with Koko Koko
  Read more
 • Out of Stock

  ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு

  Rs. 6,600.00
  or 3 X Rs.2,200.00 with

  சி. சரவணகார்த்திகேயன்

   

  ஆயிரமாண்டுக்கு முந்தைய ஒரு கொடூரக் கொலை வழக்கு இப்பிரம்மாண்ட நாவலில் துப்பறியப்படுகிறது. ஆதித்த கரிகாலன் என்ற சோழத்து இளவரசனின் துர்மரணத்தின் மர்மத்தில் ஒளிந்திருப்பது சாவுக்கான பழிவாங்கலா, அரியணைக்கான பேராசையா, காதல் துயரின் வன்மமா அல்லது அதிகாரத்துக்கான வேட்கையா என்ற வினாவைத் தமிழ் வாசகப் பரப்பு தொடர்ந்து விவாதித்துக் கொண்டே இருக்கிறது. காலாதீதமாக‌ மௌனித்து நிற்கும் கல்வெட்டுகளின் இடைவெளிகளில் கற்பனையைப் பாய்ச்சி கண் கூசும் அந்த‌ உண்மையை நெருங்கிக் காண எத்தனிக்கிறது இந்த வரலாற்றுப் புதினம்!
  or 3 X Rs. 2,200.00 with Koko Koko
  Read more