Opening Possibilities, Illuminating Potentials
Island-wide Free Delivery for Purchase of Rs. 3990 or above.

Cart

Your Cart is Empty

Back To Shop
Contact Us 0764980321

Category: கட்டுரை

Showing all 10 results

  • கனவுகளின் விளக்கம் / Kanavukalin Vilakkam

    Rs. 1,150.00
    or 3 X Rs.383.33 with

    சிக்மண்ட் பிராய்ட்

    தமிழில்: நாகூர் ரூமி

     

    ஒரு புத்தகத்தால் என்ன செய்யமுடியும்? இந்தக் கேள்விக்கு இந்த உலக வரலாறு கொடுத்த பதில் என்ன தெர்யுமா?

     

    இந்த உலகத்தையே மாற்ற முடியும் என்பதுதான்.. ஆமாம். இந்த உலகத்தை மாற்றிய ஐந்து நூல்களில் உளவியல் மேதை சிக்மண்ட் பிராய்டின் ‘கனவுகளின் விளக்கம்’ என்ற நூலும் ஒன்று.

     

    கனவுகள்  நம்மை எப்போதுமே வசீகரிப்பவை. ஆனால் அவற்றின் அர்த்தம் புரியாமல் நாம் குழம்பிப் போகிறோம். ஆனால் இனிமேல் அப்படி இருக்க வேண்டியதில்லை. நாகூர் ரூமியின் இந்தத் தமிழாக்கம் உங்கள் கனவுகள் மீது ஒளி பாய்ச்சும்.

     

    உங்கள் கனவுக்கு அர்த்தம் கேட்டு இனி நீங்கள் யாரிடமும் போகவேண்டியதில்லை.

    விடைகள் உங்கள் கைகளிலேயே!

    படித்துப் பாருங்கள்!

    or 3 X Rs. 383.33 with Koko Koko
    Add to cart
  • வேகமாகப் படிக்க சில எளிய உத்திகள் / Vegamagappadikka SIla Uththikal

    Rs. 1,190.00
    or 3 X Rs.396.67 with

    டாக்டர் ம.லெனின்

     

    தங்கள் வாழ்க்கைத் தேவைகளுக்காக வாசிப்பை நம்பி இருப்பவர்கள் அனைவரும் வளம் பெற இந்தப் புத்தகம் மிகவும் உதவும். மாணவ, மாணவியரால் தங்கள் பாடங்களைத் தவிரப் பிற துறை அறிவையும் பெருமளவில் பெருக்கிக்கொள்ள முடியும்.

     

    இப்படிப் பலர் தங்கள் இயலாமையைத் தெரிவிப்பார்கள். இவர்கள் எல்லாருக்குமே பயன்படக் கூடிய விதத்தில் இங்கு பலவித உத்திகளைக் கொடுத்திருக்கிறோம். இவற்றைப் பயன்படுத்திப் பார்த்தால்….‘எனக்கெல்லாம் வேகமாகப் படிக்க வரவே வராது.
    மெதுவாகப் படித்தால்தான் எதுவுமே மனதில் ஏறும். விரட்டி விரட்டிச் சவாரி செய்ய மனம் ஒரு குதிரையா என்ன?’

    என் தொழிலுக்கு நான் அதிகம் படிக்க வேண்டியது அத்தியாவசியமான தேவையாக இருக்கிறது.

    ஆனால் என்னால் அதிகமாகப் படிப்பதற்கு முடியவில்லை. மற்றவர்களைப் போல் வெகு வேகமாக என்னால் படிக்க முடியாமல் இருப்பதற்கு என்ன காரணம்? என்று சிலர் நொந்து கொள்வார்கள்.

     

    இதற்கான வழிமுறைகள் எல்லாருக்குமே தெரிவது இல்லை. அது தெரிந்தவர்கள் மற்றவர்களுக்கு அதைச் சொல்லிக் கொடுப்பதும் இல்லை.

     

    அந்தக் குறையைப் போக்குவதற்காகவே இந்த நூல் உருவாக்கப்பட்டிருக்கிறது. படிக்கப் படிக்க இவர்களுக்கு அதிகப் பலன் கிடைக்கும். எப்படிப் படிப்பது என்பதைப் பற்றிப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் கற்றுக் கொடுக்கிறார்கள்தான். ஆனால் வேகமாகப் படிப்பதற்கு ஒருவர் தனியாகத்தான் முயற்சி செய்ய வேண்டி இருக்கிறது. வேகமாகப் படிப்பவர்கள் எதையும் விரைவாகப் படித்து முடித்துவிடுவார்கள்.

     

    படிப்பதற்கு இவர்களுக்கு நிறைய நேரம் கிடைக்கிறது. நேரம் இருக்கிறது என்பதால் அவர்கள் மேலும் படிக்கலாம். மேலும் மேலும் படிக்கலாம்.

    or 3 X Rs. 396.67 with Koko Koko
    Add to cart
  • போராட்டங்களின் கதை / Poratangalin Kadhai

    Rs. 2,050.00
    or 3 X Rs.683.33 with

    அ.முத்துக்கிருஷ்ணன்

     

    போராட்டம். இந்த வார்த்தை காலம் காலமாக உலகெங்கும் கோடிக்கணக்கான உதடுகள் உச்சரித்துக்கொண்டிருக்கும் வார்த்தை. தனக்கான உரிமை மறுக்கப்படும்போதெல்லம் அதைப் பெற மனிதனுக்கு இயற்கை கொடுத்த ஆயுதம்தான் போராட்டக் குணம். உலகத்தில் பல மாற்றங்களும் முன்னேற்றங்களும் காலம்தோறும் நிகழ்ந்துகொண்டே இருக்க போராட்டமே ஆணிவேர்.

     

    ஆண்டான் அடிமை முறை, முதலாளித்துவத்தின் அடக்குமுறை, தனியுடைமை இவற்றையெல்லாம் நீர்த்துப்போகச் செய்ததே போராட்டம்தான். ஆனால், இவை இன்னும் முற்றுமாக ஒழிந்துவிடவில்லை. வேறு பெயரில் வேறு உருவில் ஆங்காங்கே அவ்வப்போது தோன்றிக்கொண்டுதான் இருக்கின்றன. அப்போதெல்லாம் முன்வந்து நின்று அதை முடக்கிப்போடுவது போராட்டம்தான்.

     

    காந்தி தலைமையில் வெறும் 50 பேருடன் தொடங்கி இறுதியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்ட உப்பு சத்தியாகிரகப் போராட்டப் பயணம் பிரிட்டிஷ் ஆதிக்கத்தையே அசைத்துப் பார்த்தது. தமிழ்நாட்டின் அரசியல் எதிர்காலத்தையே மாற்றிய இந்தி எதிர்ப்புப் போராட்டம், குலக்கல்வி திட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டம் என தமிழ்நாடு தொடங்கி உலகம் முழுதும் நடந்த பல்வேறு போராட்டங்களைப் பற்றி ஜூனியர் விகடனில் வெளிந்த கட்டுரைத் தொடரின் தொகுப்பு நூல் இது.

     

    வீறுகொண்டு எழுந்த பற்பல போராட்டங்களைப்பற்றி அறிய வாருங்கள்!

    or 3 X Rs. 683.33 with Koko Koko
    Add to cart
  • ஃபிராய்ட் / Freud Tamil

    Rs. 2,190.00
    or 3 X Rs.730.00 with

    ஜோனத்தன் லியர்
    தமிழில்: பேரா.ச.வின்சென்ட்

     

    மனிதர்கள் தங்களுக்குள் புதைத்து வைத்திருப்பதை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் பணியை நான் மேற்கொண்ட போது…

    அவற்றைக் கொண்டு வருவது கனமானது என்று நினைத்தேன்.

     

    மனிதர் யாரும் தங்கள் இரகசியத்தைக் காப்பாற்ற முடியாது என்பதைப் பார்க்க கண்ணுடையோரும், கேட்கச் செவியுடையோரும் உறுதிபடக் கூறுவார்கள்.

     

    ஒருவனுடைய உதடுகள் பேசாவிட்டாலும், அவன் தன் விரல் நுனிகளைக் கொண்டு வாயடிக்கிறான். அவனுடைய ஒவ்வொரு சிறு துளையிலிருந்தும் ஏமாற்றுதல் கசிகிறது. – ஃபிராய்ட்

    or 3 X Rs. 730.00 with Koko Koko
    Add to cart
  • தத்துவத்தின் தொடக்கங்கள் / Thathuvathin Thodakangal

    Rs. 1,190.00
    or 3 X Rs.396.67 with

    தேவிபிரசாத் சட்டோபாத்யாயா

    தமிழில்: இரா சிசுபாலன்

     

    தத்துவ உலகில் கிரேக்க தத்துவங்களே உன்னத இடம் பிடிக்கின்றன கருத்து முதல்வாதம், பொருள் முதல்வாதம் என்ற இரு தத்துவங்கள் பிரதானமானவை இந்த இரு தத்துவ கோட்பாடுகள் இந்திய மண்ணில் எப்படி இருந்திருக்கின்றன என நிறுவுவதே இந்த புத்தகத்தின் சாரம்.

     

    தத்துவ உலகில் கிரேக்க தத்துவங்கள் அறிமுகமாவதற்கு முன்பே இந்திய தத்துவங்கள் எப்படி கோலோச்சி இருக்கின்றன என்பதை யக்ஞவல்கியர், உத்தாலகர், புத்தர் போன்ற பொருள் முதல்வாதிகளின் தத்துவங்களை அறிமுகம் செய்கிறார் ஆசிரியர்..

     

    இந்தியா பொருள் முதல்வாத தத்துவங்களின் நாடு என இந்த நூல் சொல்கிறது இந்திய தத்துவ மரபிற்கு ஒரு கொடையாகவே இந்த நூல் பார்க்கபடுகிறது..

    or 3 X Rs. 396.67 with Koko Koko
    Add to cart
  • கற்றல் என்பது யாதெனில்: கல்வி 4.0 / Kattral Enbathu Yathenil

    Rs. 1,990.00
    or 3 X Rs.663.33 with

    ஆயிஷா இரா. நடராசன்

     

    இந்நூலில் ஒவ்வொரு காலகட்டத்திலும், கல்வியில் ஏற்பட்ட அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றங்களை ஆசிரியர் விளக்கியுள்ளார்.

     

    முறையான மற்றும் முறைசாரா கல்விகள் குறித்த விவரிப்புகளைத் தந்துள்ளார். இன்றைய டிஜிட்டல் சந்ததி குறித்த நுட்பமான பார்வையை வெளிப்படுத்தியுள்ளார்.

     

    இணையவழிக் கல்வியின் சாதக பாதகங்களை எடுத்துக் காட்டியுள்ளார்.

    or 3 X Rs. 663.33 with Koko Koko
    Add to cart
  • Out of Stock

    கழிவறை இருக்கை ( Kazhivarai Irukkai )

    Rs. 1,390.00
    or 3 X Rs.463.33 with

    லதா

     

    “கழிவறைஇருக்கை”யின் மூலப்புத்தகமான The Toilet Seat குறித்து அருணா என்ற வாசகரின் கருத்து: 

     

    லதா அவர்களின் எழுத்துக்கள் அதீத முற்போக்குத்தனமாய் சிலருக்கு தோன்றலாம்.. நமக்கு ஒத்துவராது என்று சிலர் ஒதுங்கலாம். ஆனால் மூடி மறைக்கப்படும் வாழ்வியல் முரணை புத்தகமாக்கியிருக்கிறார். இவரைப்போன்ற தைரியம் எல்லா பெண்களுக்கும் சாத்தியமில்லை. நான் இவரை Wonder Woman என மனதுக்குள் அழைத்துக்கொள்வேன்.

     

    ஆண்- பெண்; கணவன் – மனைவி என்ற வரையறை தாண்டிய உளவியல், மற்றும் உடலியல் சார்ந்த தேடலும் ஆறுதலும், மனிதனை முகமூடியுடன் திரியவைக்கும் குடும்ப அமைப்புகளும், வெளிச்சம் பாய்ச்சப்பட்டிருக்கின்றன. இங்கு ரகசியங்களே வாழ்வு. வாழ்க்கையை நாம் அடுத்தவர் அபிமானத்திற்கே வாழ பழக்கப்பட்டிருக்கிறோம். ஆண் பெண் இருவரும் வெவ்வேறு வகையில் ஒருவரை ஒருவர் அடக்கவும் ஆக்கிரமிக்கவும் ஆவலும் காவலும் புரிகின்றோம்.. இந்தப் புத்தகம் ஆண்களின் வக்கிர வில்லத்தனத்தையும் பெண்களின் பிடிவாத பழைய கோட்பாடுகளையும் அலசிப்போட்ட புத்தகம்.

    or 3 X Rs. 463.33 with Koko Koko
    Read more
  • Out of Stock

    தோற்றவர் வரலாறு (Thotravar Varalaru)

    Rs. 990.00
    or 3 X Rs.330.00 with

    அ. முத்துலிங்கம்

     

    சில நாட்களுக்கு முன்னர் இயற்கையின் பேரதிசயம் ஒன்றைப் பார்த்த கதையை சு.ரா.விடம் கூறினேன். சு.ரா வசித்த வீட்டிலிருந்து அந்த இடம் சற்று தூரத்தில்தான் இருந்தது. பெயர் Ano nuevo அதாவது புதுவருட முனை. ஒவ்வொரு ஆண்டும், வருட ஆரம்பத்தில் அலாஸ்காவிலிருந்து 4000 மைல்கள் சளைக்காமல் நீந்தி ஆண் சீல்கள் இந்த முனைக்கு வருகின்றன. அதே மாதிரி பெண் சீல்கள் எதிர்ப்பக்கமான ஹவாயி லிருந்து 3000 மைல்கள் நீந்தி வருகின்றன. அவை புது வருட முனையில் சந்தித்துக்கொள்கின்றன. அவற்றின் காதல் விளையாட்டு பிப்ரவரி 14 அன்று உச்சமடையும். அதில் இருந்துதான் காதலர் தினம் உண்டாகியது என்று சிலர் சொல்கிறார்கள். பெண் சீல்கள் குட்டிகளை ஈன்ற பின்னர் ஹவாய்க்கும் நீந்திப் போய்-விடும். ஆண் சீல்கள் அலாஸ்காவுக்குப் போகும். மறுபடியும் அடுத்த வருடம் அவை சந்திக்கும். இது பற்றியும் பேசினோம். புறப்படும்போது சு.ரா என் அனுபவத்தைக் கட்டுரையாக எழுதச் சொன்னார். நான் அதுவரை கட்டுரை எழுதியது கிடையாது. அப்படித்தான் நான் முதன்முதல் கட்டுரை எழுதினேன். இப்பொழுது இந்தத் தொகுப்பில் உள்ள கட்டுரைகளைப் பார்க்கும்போது பிரமிப்பாக இருக்கிறது.

    – அ. முத்துலிங்கம்

    or 3 X Rs. 330.00 with Koko Koko
    Read more
  • Out of Stock

    இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள் ( Intha kulathil Kallerinthavarkal )

    Rs. 1,320.00
    or 3 X Rs.440.00 with

    வைரமுத்து

     

    வைரமுத்து தன் உலகோடு கொண்டிருக்கும் உறவு நுட்பமானது; ஆழமானது; உணர்ச்சிபூர்வமானது. அந்த உறவின் வலிமையை. ஆனந்தத்தை, அர்த்தத்தை, பரவசத்தை, பூரிப்பை, வலியை, வேதனையை, வைரமுத்து நேர்மையோடு நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். நெகிழ்ச்சியும் கோபமும் அடுத்தடுத்து அணிவகுக்கும் அபூர்வப் பதையல் இது.

    or 3 X Rs. 440.00 with Koko Koko
    Read more
  • Out of Stock

    அதிகாரம் அமைதி சுதந்திரம் ( Adhigaram Amaithi Suthandhiram )

    Rs. 990.00
    or 3 X Rs.330.00 with

    சாரு நிவேதிதா

     

    நான் உங்களுக்கு அளிப்பது சிந்தனைகள் அல்ல; சிந்தனா முறை.அந்த சிதனா முறையின் நோக்கம் சுதந்திரம். சமூகம் உங்களை ஒரு கடவுளை, ஒரு தீர்க்கதரிசியை, ஒரு தத்துவத்தை, ஒரு கோட்பாட்டைப் பின்பற்றச் சொல்லுகிறது. ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்…யாரையும் எதையும் நம்பாதீர்கள். உங்களை நப்புங்கள். உங்களைப் மனதைத் தொடர்ந்து செல்லுங்கள். எந்த சிந்தனையும், அறநெறியும், போதனையும், சட்ட திட்டமும், ஒழுக்க பார்வைகளும் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்த விடாதீர்கள். இதுவே என் எழுத்தின் செய்தி.

    or 3 X Rs. 330.00 with Koko Koko
    Read more