Opening Possibilities, Illuminating Potentials
Delivery in 1-5 business days. Island-wide Free Delivery for Purchase of Rs. 3990 or above.

Cart

Your Cart is Empty

Back To Shop
Contact Us 0764980321

Tag: காதல் மற்றும் உறவு

Showing all 7 results

  • கணம் கணம் வெல்வோர்க்கான கொள்கை ( Kanam Kanam Velvorkkana Kolkai )

    Rs. 2,990.00
    or 3 X Rs.996.67 with

    ராபின் ஷர்மா

     

    இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக, சரித்திரம் படைத்த ஆமையாகவும், மிகச்சிறந்த செயல்வீரராகவும் ராபின் ஷர்மா திகழ்ந்து வருகிறார். பல பிரபல வணிக ஆளுமைகள், புகழ்பெற்ற விளையாட்டு வீரர்கள், கேளிக்கை உலகின் நட்சத்திரங்கள் ஆகியோர், தங்களுடைய உயர்ந்த இலட்சியங்களை, அன்றாட வெற்றிகளாக மாற்றிக் கொள்ள உதவும் வழிமுறைகளை, தன்னுடைய புதுமையான பயிற்சி முறைகளின் மூலம் ராபின் ஷர்மா சாத்தியப்படுத்தி வருகிறார்.

     

    இப்போது அவருடைய முதன்மையான படைப்பான, ‘கணம் கணம் வெல்வோர்க்கான கொள்கை” என்ற இந்நூலின் மூலம், தலைசிறந்த கொள்கைகள், வழிமுறைகள், கருவிகள் ஆகியவற்றின் சாரத்தை, வெற்றிக்கான வழிகளாக முன்வைத்துள்ளார். இந்நூல், உங்கள் திறமைகளை உயர்த்துவதுடன், உலகத்தர வாழ்க்கையை வழங்கும் பயிற்சி நூலாகவும் அமையும். மேலும் உங்களை ஆன்மிக வழியில் முன்னேற்றவும் இது உதவும்.

    or 3 X Rs. 996.67 with Koko Koko
    Add to cart
  • உலகிலேயே மகிழ்ச்சியான மனிதர்: நாஜி வதை முகாமிலிருந்து (Ulahileye Mahilchiyana Manidhar)

    Rs. 2,990.00
    or 3 X Rs.996.67 with

    எடி ஜேக்கூ

    தமிழில்: நாகலட்சுமி சண்முகம்

     

    முதலில் தான் ஒரு ஜெர்மானியர், பிறகுதான் தான் ஒரு யூதர் என்று எடி ஜேக்கூ தன்னைப் பற்றி எப்போதுமே கருதி வந்திருந்தார். ஆனால் அந்த எண்ணம், 1938 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், நாஜிப் படையினர் அவரை அடித்து உதைத்துக் கைது செய்து வதை முகாமுக்கு இழுத்துச் சென்றபோது முற்றிலுமாக மாறியது. அதற்கடுத்த ஏழு ஆண்டுகள், கற்பனையில்கூட யாராலும் நினைத்துப் பார்க்க முடியாத கொடூரங்களை எடி நாள்தோறும் அனுபவித்தார், நாஜிக்களிடம் அவர் தன்னுடைய குடும்பத்தினரையும் நண்பர்களையும் தன்னுடைய சொந்த நாட்டையும் இழந்தார். இறுதியில் அவர் எப்படியோ தப்பிப் பிழைத்துவிட்டதால், இனி தன் வாழ்நாள் முழுவதும் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதென்று அவர் ஓர் உறுதிமொழி மேற்கொண்டார்.

     

    அவர் தன்னுடைய வதை முகாம் அனுபவங்களிலிருந்து தான் கற்றுக் கொண்டவற்றைப் பற்றிச் சொற்பொழிவுகள் ஆற்றி வருவதன் மூலமும், ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருவதன் மூலமும், நாஜிக்களின் அடக்குமுறையின்கீழ் உயிரிழந்தவர்களுக்கும் தங்களுடைய சொந்தபந்தங்களை இழந்தவர்களுக்கும் அவர் அஞ்சலி செலுத்துகிறார். அவருடைய 100 ஆவது பிறந்தநாளையொட்டி வெளியிடப்பட்ட இந்நூல், இருண்ட காலகட்டங்களில்கூட மகிழ்ச்சியைக் கண்டுகொள்ள முடியும் என்ற நம்பிக்கையை விதைக்கின்ற ஒன்றாக மிளிர்கிறது.

    or 3 X Rs. 996.67 with Koko Koko
    Add to cart
  • Sale!
    Out of Stock

    நிறைவான வாழ்க்கைக்கான நிகரற்றக் கொள்கைகள் ( Everyday Greatness: Inspiration for a Meaningful Life )

    Original price was: Rs. 3,790.00.Current price is: Rs. 3,490.00.
    or 3 X Rs.1,163.33 with

    ஸ்டீபன் ஆர். கவி

    தமிழில்: நாகலட்சுமி சண்முகம்

     

    ஊக்கமளிக்கும் கதைகள் மற்றும் நடைமுறை நுண்ணறிவு வாசகர்களுக்கு அன்றாட மகத்தான வாழ்க்கையை வாழ சவால் விடுகின்றன.

     

    செயல்படுவதற்கான தேர்வு – உங்கள் ஆற்றல்
    நோக்கத்தின் தேர்வு – உங்கள் இலக்கு
    கொள்கைகளுக்கான தேர்வு – உங்கள் இலக்குகளை அடைவதற்கான வழிமுறைகள்

     

    அடங்கும் தலைப்புகள்:

    அர்த்தத்தைத் தேடுதல்
    பொறுப்பேற்பது
    உங்களுக்குள்ளே தொடங்குகிறது
    கனவை உருவாக்குதல்
    மற்றவர்களுடன் அணிசேருதல்
    துன்பத்தை சமாளித்தல்

     

    மாயா ஏஞ்சலோ, ஜாக் பென்னி மற்றும் ஹென்றி டேவிட் தோரே போன்ற உலகின் மிக பிரபலமான மற்றும் அன்பான எழுத்தாளர்கள், தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் கதைகள் மற்றும் ஸ்டீபன் கோவியின் நுண்ணறிவு மற்றும் வர்ணனை, “பிரதிபலிப்புகள் ” ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் குழு அல்லது தனிப்பட்ட ஆய்வுக்குப் பயன்படுத்தக்கூடிய ஒரு திட்டத்தை உருவாக்க உதவுகிறது.

    or 3 X Rs. 1,163.33 with Koko Koko
    Read more
  • Out of Stock

    வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பது எப்படி ( Vaazhkaiyil Magilchiyaha Iruppathu Eppadi )

    Rs. 2,290.00
    or 3 X Rs.763.33 with

    தவத்திரு தலாய் லாமா & டாகடர் ஹோவர்டு கட்லர்

    தமிழில்: நாகலட்சுமி சண்முகம்

     

     

    or 3 X Rs. 763.33 with Koko Koko
    Read more
  • Out of Stock

    தொலையுணர்வு: ஆழ்மனத்தில் புதைந்து கிடக்கும் அதிசய

    Rs. 2,190.00
    or 3 X Rs.730.00 with

    டாக்டர் ஜோஸப் மர்ஃபி

    தமிழில்: நாகலட்சுமி சண்முகம்

     

    தொலையுணர்வு எனும் அதிசய சக்தி நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது. நம்முள் மறைந்து கிடக்கும் இந்தச் சக்தியை எப்படி வெளிக்கொண்டு வருவது என்பதையும், அதைப் பயன்படுத்தி எவ்வாறு நம்முடைய வாழ்க்கையை அதிஅற்புதமான ஒன்றாக மாற்றியமைத்துக் கொள்வது என்பதையும் இப்புத்தகத்தில் ஜோசப் மர்ஃபி தெள்ளத்தெளிவாக எடுத்துரைக்கிறார்.

    அன்றாட வாழ்வின் சவால்களையும் இன்னல்களையும் பிரச்சினைகளையும் சோதனைகளையும் எதிர்கொண்டு அவற்றிலிருந்து வெற்றிகரமாக மீள்வது எப்படி என்பதை இந்நூல் உங்களுக்குக் கற்றுக் கொடுக்கும். உங்களுக்குள் இருக்கின்ற அசாதாரணமான சக்திகளை உடனடியாக முடுக்கிவிடுவதற்குத் தேவையான சிறப்பு உத்திகளை இது உங்களுக்கு வழங்கும்.

    or 3 X Rs. 730.00 with Koko Koko
    Read more
  • Out of Stock

    நண்பர்களை எளிதாகப் பெறுவதும் மக்களிடம் செல்வாக்குடன் விளங்குவதும் எப்படி

    Rs. 1,690.00
    or 3 X Rs.563.33 with

    டேல் கார்னகி

    தமிழில்: நாகலட்சுமி சண்முகம்

     

    உலகில் இதுவரை வெளிவந்துள்ள ஊக்குவிப்புப் புத்தகங்களிலேயே மிகச் சிறந்த வெற்றியைப் பெற்றுள்ள புத்தகம் இது. உங்களுடைய தனிப்பட்ட உறவுகளைத் திறம்பட நிர்ணயிப்பதற்குக் காலத்தால் அழியாத அறிவுரைகளை டேல் கார்னகி இப்புத்தகத்தில் உங்களுக்கு வழங்குகிறார். அதோடு, கீழ்க்கண்டவற்றையும் உங்களுக்கு அவர் விளக்கிக் காட்டுகிறார்:

     

    • உங்கள் கருத்துக்களைச் சாணக்கியத்துடனும் சாதுரியத்துடனும் பிறருக்கு எடுத்துரைப்பது எப்படி?

    • மக்களை உங்கள்மீது விருப்பம் கொள்ள வைப்பது எப்படி?

    பிறரிடம் வேலை வாங்கும் உங்கள் திறனை அதிகரித்துக் கொள்வது எப்படி?

    உரையாடல் கலையில் சிறந்து விளங்குவது எப்படி?

    • அதிகத் திறன்மிக்கத் தலைவராகப் பரிணமிப்பது எப்படி?

     

    கடந்த 70 வருடங்களாக இப்புத்தகம் தொடர்ந்து அச்சில் இருந்து வருகிறது. இதுபோன்ற நூல்களில் இதுதான் முதலாவதும் முத்தாய்ப்பானதும் ஆகும். நீங்கள் வெற்றிப் பாதையில் பயணிக்க இந்த ஒரு புத்தகம் மட்டுமே உங்களுக்குத் தேவை!

    or 3 X Rs. 563.33 with Koko Koko
    Read more
  • Out of Stock

    எமோஷனல் இன்டெலிஜென்ஸ் 2.0

    Rs. 1,090.00
    or 3 X Rs.363.33 with

    சோம. வள்ளியப்பன்

     

    அறிவாற்றலை அளவிடும் ஐகி முறையை இப்போது ஒருவரும் பயன்படுத்துவதில்லை.அறிவுத்திறன் இருந்தால்தான் வெற்றி பெறமுடியும், மாபெரும் சாதனைகள் புரியமுடியும் என்னும் நம்பிக்கையும்கூட பெருமளவில் தகர்ந்துவிட்டது. இப்போது உலகை ஆண்டுகொண்டிருப்பது EQ எனப்படும் எமோஷனல் இன்டெலிஜென்ஸ் மட்டுமே.

     

    உள்ளுணர்வுகளைத் துல்லியமாகப் புரிந்துகொண்டு அவற்றைச் சரியான முறையில் கையாளும் கலையை யார் திறன்படக் கற்கிறார்களோ அவர்களே இன்று வெற்றியாளர்களாக வலம் வருகிறார்கள். தனிப்பட்ட வாழ்வில் மட்டுமல்ல படிப்பு, அலுவலகம், தொழில் என்று வாழ்வின் எந்த நிலையில் இருந்தாலும் EQ முக்கியமானதாக மாறுகிறது.

     

    தலைமைப் பதவியை வகிக்கவேண்டுமா? போட்டியாளர்களைச் சமாளிக்கவேண்டுமா? கனவுகளை நினைவாக்கவேண்டுமா? நீங்கள் இயங்கும் துறையில் முதன்மைச் சாதனையாளராகத் திகழவேண்டுமா? உங்கள் சிந்தனைகள், செயல்பாடுகள் இரண்டிலும் ஆச்சரியமூட்டும் மாற்றங்களை மேற்கொள்ளவேண்டுமா? உங்களுடைய உகி திறனை மேம்படுத்திக்கொள்வதுதான் ஒரே அடிப்படை வழி.

     

    சோம. வள்ளியப்பனின் இந்தப் புத்தகம் IQ-வை விட ஏன் EQ முக்கியம் என்பதையும் அதை எப்படி வளர்த்துக்கொள்வது என்பதையும் முறைப்படி கற்றுக்கொடுக்கிறது.

     

    ‘குமுதம் சினேகிதி’ இதழில் வெளிவந்து ஏகோபித்த பாராட்டைப் பெற்ற வாழ்வியல் தொடரின் புத்தக வடிவம்.

    or 3 X Rs. 363.33 with Koko Koko
    Read more