Opening Possibilities, Illuminating Potentials
Island-wide Free Delivery

Cart

Your Cart is Empty

Back To Shop
Contact Us 0764980321

இச்சிகோ இச்சியே

Rs. 2,590.00

ஹெக்டர் கார்சியா & பிரான்செஸ்க் மிராயியஸ்

தமிழில்: PSV குமாரசாமி

 

வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் கொண்டாடுவதற்குத் தேவையான ஒரு திறவுகோல் நம் அனைவரிடமும் இருக்கிறது. இச்சிகோ இச்சியேதான் அது! நம்முடைய வாழ்க்கையில் நாம் எதிர்கொள்கின்ற கணங்கள் ஒவ்வொன்றும் ஒரே ஒரு முறைதான் நிகழும் என்பதால் அதை நாம் நழுவ விட்டுவிட்டால், அதை நாம் என்றென்றைக்குமாக இழந்துவிடுவோம். இதை ஜப்பானியர்கள் இச்சிகோ இச்சியே என்று அழைக்கின்றனர். ஒருவரை சந்திக்கும்போதும் சரி, அவரிடமிருந்து விடைபெற்றுக் கொள்ளும்போதும் சரி, குறிப்பிட்ட அந்த சந்திப்பு தனித்துவமானது என்பதை எடுத்துரைக்கும் வகையில் ஒருவருக்கொருவர் இச்சிகோ இச்சியே என்று கூறிக் கொள்கின்றனர்

Out of stock

Notify me when stock available

இந்நூலிலிருந்து இவற்றை நீங்கள் கற்றுக் கொள்ளலாம்:

* ஒவ்வோர் ஆண்டும் இரண்டு வாரங்களுக்கு மட்டுமே பூக்கின்ற செர்ரிப் பூக்களின் வருகையை ஜப்பானியர்கள் கொண்டாடுவதைப்போல, சட்டென்று கடந்து போகின்ற கணங்களின் அழகைக் கொண்டாடுவது எப்படி?
* உங்களுடைய ஐம்புலன்களின் உதவியோடு நிகழ்கணத்தில் நங்கூரமிடுவது, கடந்த காலத்திற்குள்ளும் வருங்காலத்திற்குள்ளும் உங்களைப் பிடித்துத் தள்ளுகின்ற அச்சங்கள், கவலைகள், வருத்தங்கள், கோபங்கள் போன்றவற்றிலிருந்து நீங்கள் விடுபட எப்படி உதவும்?
* இச்சிகோ இச்சியேவைப் பயன்படுத்தி உங்களுடைய இக்கிகய்யைக் கண்டுபிடிப்பது எப்படி?

 

About the Authors

ஹெக்டர் கார்சியா ஸ்பெயினில் பிறந்த ஹெக்டர் கார்சியா இப்போது ஜப்பானில் குடியேறியுள்ளார். அவர் ஜப்பானில் பத்தாண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறார். ஜப்பானியக் கலாச்சாரம் தொடர்பான பல நூல்களை அவர் எழுதியுள்ளார். அவற்றில் ‘ய கீக் இன் ஜப்பான்’, ‘இக்கிகய்’ ஆகிய இரண்டு நூல்களும் சர்வதேச அளவில் விற்பனையில் சாதனைகள் புரிந்துள்ளன. ஜப்பானுக்குக் குடிபெயர்வதற்கு முன்பு, சுவிட்சர்லாந்திலுள்ள ‘செர்ன்’ நிறுவனத்தில் ஒரு கணினிப் பொறியாளராக அவர் பணியாற்றினார். பிரான்செஸ்க் மிராயியஸ் பிரான்செஸ்க் மிராயியஸ், பல விருதுகளைப் பெற்றுள்ள, சர்வதேச அளவில் விற்பனையில் சாதனைகள் புரிந்துள்ள பல நூல்களை எழுதியுள்ளார். எப்படிச் சிறப்பாக வாழ்வது என்பது குறித்த நூல்களும் அவற்றில் அடக்கம். அதோடு, ‘லவ் இன் ஸ்மால் லெட்டர்ஸ்’, ‘வாபி-சாபி’ ஆகிய இரண்டு நெடுங்கதைகளும் அவற்றில் அடங்கும்.

Book Specifications

Title: The Book of Ichigo Ichie / இச்சிகோ இச்சியே
Author: Francesc Miralles, Héctor García / ஹெக்டர் கார்சியா & பிரான்செஸ்க் மிராயியஸ்
Translator: PSV Kumarasamy / PSV குமாரசாமி
Language: Tamil
Binding: Hardcover
Pages: 186
Weight:
Published Year: 2018
Tamil Translation Published Year: 2021
Publisher: Manjul Publishing House
ISBN: 9789390924189
Dimensions:
Print size: Please feel free to drop us a message.

Cart

Your Cart is Empty

Back To Shop