Opening Possibilities, Illuminating Potentials
Island-wide Free Delivery for Purchase of Rs. 3990 or above.

Cart

Your Cart is Empty

Back To Shop
Contact Us 0764980321

குழுவில் சிறப்பாகச் செயல்பட 17 முக்கியப் பண்புகள்

Rs. 1,950.00

or 3 installments of Rs.650.00 with

ஜான் சி. மேக்ஸ்வெல்

தமிழில்: பொன். சின்னத்தம்பி முருகேசன்

 

எவரொருவரும் எந்தவொரு குழவிலும் சிறப்பாகச் செயல்பட, தனிப்பட்ட முறையில் தன்னிடம் கொண்டிருக்க வேண்டிய 17 முக்கியப் பண்புகளைப் பற்றி ஜான் மேக்ஸ்வெல் இப்புத்தகத்தில் எடுத்துரைக்கிறார். அவரது விரிவான விளக்கங்களும் எளிய உதாரணங்களும் சுலபமாகப் புரிந்து கொள்ளக் கூடியவை. குடும்பம், அலுவலகம், விளையாட்டு அணி போன்ற எல்லா இடங்களிலும் அவை பொருந்தும் என்பது அவற்றின் சிறப்பு.

 

  • குழுவில் இடம்பெற்றிருக்கும் எவரொருவருக்கும் அடுக்கடுக்காக வெற்றிகளை ஈட்டித்தரவல்ல பண்புநலன்களில் சில:
  • தெளிந்த நோக்குடன் இயங்குதல்: எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் இலக்கு நோக்கியே இருத்தல்
  • அரவணைத்துச் செல்லுதல்: பிறருடைய நலனில் கருத்தூன்றிச் செயல்படுதல்
  • தன்னலமின்றிச் செயலாற்றுதல்: குழுவின் நலனுக்காக எந்த

 

வேலையையும் விருப்பத்துடன் ஏற்றுக்கொள்ளுதல் தளராத உறுதியுடன் இருத்தல்: பின்னடைவுகளை எதிர்கொள்ளும்போதும் நன்னம்பிக்கையுடன் கடினமாக உழைத்தல் .

 

இத்தகையப் பண்புநலன்கள் குழு உறுப்பினர்கள் மீதும் குழுவின் வெற்றிமீதும் எத்தகையத் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை மேக்ஸ்வெல் இங்கு சித்தரித்துக் காட்டுகிறார். குழுவில் சிறப்பாகச் செயல்பட 17 முக்கியப் பண்புகள் எனும் இந்நூல் ஏதோ போகிற போக்கில் அறிவுரைகள் அள்ளித் தெளிக்கும் விதத்திலோ, வறட்டுச் சிந்தனையின் வடிவமாகவோ அமையவில்லை; மாறாக, இது குழுநலனை முன்னிறுத்தும் குழு உறுப்பினர்களின் மதிப்பை மேம்படுத்த வடிவமைக்கப்பட்ட வலிமையிக்கச் செயல்பாடுகளை விவரிக்கின்றது.

Only 1 left in stock

or 3 X Rs. 650.00 with Koko Koko

குழுவாக இணைந்து இயங்குதல் என்ற கருத்து, இன்று பள்ளி வகுப்பறைகளிலிருந்து பன்னாட்டு நிறுவனங்களின் நிர்வாகச் செயலகங்கள் வரை எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. மக்கள் இணைந்து செயல்படும்போது, அனைத்துவிதமான நிறுவனங்களின் சாதனைகள் அதிகரிக்கின்றன. குழுவிற்குத் தன் தனிப்பட்ட பங்களிப்பை அதிகரிப்பதுடன், குழுவின் இலட்சியம் நிறைவேற பிற உறுப்பினர்களை ஊக்குவிக்கவும் வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு குழு உறுப்பினரின் முன்னுள்ள சவால். அத்தகைய சவால்களை எதிர்கொள்ளத் தேவையான பண்புகளை நீங்கள் வளர்த்துக் கொள்ள இப்புத்தகம் உங்களுக்கு உதவும்.

நடைமுறையில் சாத்தியப்படுகின்ற கொள்கைகளை மட்டுமே மேக்ஸ்வெல் இதில் கற்றுக் கொடுக்கிறார். குவின்ஸி ஜோன்ஸ், ரொனால்டு ரீகன் போன்ற சிறந்த குழு உறுப்பினர்களின் சுவாரசியக் கதைகளை அவர் இதில் அலசி ஆராய்ந்து, வெற்றிக் கனியைப் பறிக்க அவர்களுக்கு உதவிய பண்புநலன்களை நமக்குப் படம்பிடித்துக் காட்டுகிறார். ஒவ்வொரு குழு உறுப்பினரிடமும் இருக்கும் ஒழுக்கம், பேரார்வம், அர்ப்பணிப்பு, தன்னலமின்மை போன்ற பண்புநலன்கள் எவ்வாறு குழுவின் ஒட்டுமொத்தத் திறனை அதிகரிக்கும் என்பதை நீங்கள் இதில் கற்றுக் கொள்ளலாம்.

வியாபாரம், குடும்பம், அலுவலகம் மற்றும் விளையாட்டு போன்ற அனைத்திலும் குழுவாக இயங்குதல் இன்று ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது. குழு உறுப்பினர் என்ற முறையில் உங்கள் மதிப்பை உயர்த்திக் கொள்ள வழிகாட்டுவதன் மூலம், வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் நீங்கள் சிறப்பாகச் செயல்பட இப்புத்தகம் உங்களுக்கு உதவும்.

 

About the Author

ஜான் சி. மேக்ஸ்வெல் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட தலைமைத்துவ நிபுணர், பேச்சாளர், பயிற்சியாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். அவர் 19 மில்லியனுக்கும் அதிகமான புத்தகங்களை விற்றுள்ளார். டாக்டர். மேக்ஸ்வெல் EQUIP மற்றும் ஜான் மேக்ஸ்வெல் நிறுவனத்தின் நிறுவனர் ஆவார், இது உலகளவில் 5 மில்லியனுக்கும் அதிகமான தலைவர்களுக்கு பயிற்சி அளித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அவர் Fortune 500 நிறுவனங்கள், சர்வதேச அரசாங்கத் தலைவர்கள் மற்றும் வெஸ்ட் பாயிண்டில் உள்ள யுனைடெட் ஸ்டேட்ஸ் மிலிட்டரி அகாடமி, நேஷனல் ஃபுட்பால் லீக் மற்றும் ஐக்கிய நாடுகள் போன்ற பல்வேறு அமைப்புகளுடன் பேசுகிறார். நியூயார்க் டைம்ஸ், வோல் ஸ்ட்ரீட் ஜர்னல் மற்றும் பிசினஸ் வீக் அதிகம் விற்பனையாகும் எழுத்தாளர், மேக்ஸ்வெல் மூன்று புத்தகங்களை எழுதியுள்ளார், அவை ஒவ்வொன்றும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பிரதிகள் விற்றுள்ளன: 21 தலைமையின் மறுக்கமுடியாத சட்டங்கள், உங்களுக்குள் இருக்கும் தலைமைத்துவத்தை வளர்த்தெடுக்க மற்றும் ஒரு தலைவரின் 21 தவிர்க்க முடியாத குணங்கள். நீங்கள் அவரை JohnMaxwell.com இல் காணலாம் மற்றும் Twitter.com/JohnCMaxwell இல் அவரைப் பின்தொடரலாம்.

 

Book Specifications

Title: The 17 Essentials Qualities of a Team Player / குழுவில் சிறப்பாகச் செயல்பட 17 முக்கியப் பண்புகள்
Author: John C Maxwell / ஜான் சி. மேக்ஸ்வெல்
Translator: Pon. Chinnathambi Murugesan / பொன். சின்னத்தம்பி முருகேசன்
Language: Tamil
Binding: Paperback
Pages: 204
Published Year: 2002
Tamil Translation Published Year: 2011
Publisher: Manjul Publishing House
ISBN: 9788183222204
Print size: Please feel free to drop us a message.