Opening Possibilities, Illuminating Potentials
Delivery in 1-5 business days. Island-wide Free Delivery for Purchase of Rs. 3990 or above.

Cart

Your Cart is Empty

Back To Shop
Contact Us 0764980321

பேராசிரியர் மோரியுடன் நான் செலவிட்டச் செவ்வாய்க் கிழமைகள்

Rs. 1,950.00

or 3 installments of Rs.650.00 with

மிட்ச் ஆல்பம்

தமிழில்: நாகலட்சுமி சண்முகம்

 

‘மிகவும் அருமையாக எழுதப்பட்டுள்ள இந்நூல், வாழ்க்கையின் சிக்கல்களைக் கடந்த எளிமையையும் ஞானத்தையும் தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கிறது.”
–எம். ஸ்காட் பெக், எம்.டி. நூலாசிரியர்

 

இந்நூல் ஒரு வியத்தகு பொக்கிஷம். இறப்பு நிச்சயம் என்ற உணர்வு நம்முடைய மாபெரும் ஆசானாகவும் ஞானத்தின் மூலாதாரமாகவும் திகழ்கிறது. இந்நூலைப் படித்து முடித்ததும் நான் சிரித்தேன், பிறகு அழுதேன். என்னுடைய குழந்தைகளுக்காக நான் உடனடியாக இதன் ஐந்து பிரதிகளை வாங்கினேன்.”
–பெர்னி எஸ். சீகல், எம்.டி, நூலாசிரியர்

 

“அருமையான, இதயத்தை நெகிழ வைக்கின்ற இந்நூலின் ஒவ்வொரு பக்கமும் தயக்கமில்லாத அன்பின் கதகதப்பால் ஒளிர்கிறது.”
–யூத மதகுரு ஹெரால்டு குஷ்னர், நூலாசிரியர்

 

“தன்னுடைய வழிகாட்டியின்மீது அன்பைப் பொழிகின்ற ஒரு மனிதனின் கதை இது. வாழ்க்கைக்குச் செறிவூட்டுகின்ற ஒப்புயர்வில்லா நேர்மை இதில் இழையோடுகிறது.”
–ராபர்ட் பிளை, நூலாசிரியர்

 

“மிட்ச் தன்னுடைய ஆசிரியரிடமிருந்து பெற்ற ஓர் அற்புதமான பரிசை, இந்நூலின் வாயிலாக ஒரு வழிகாட்டியாகவும், ஒரு நமக்கும் வழங்குகிறார். மனிதாபிமானியாகவும், ஓர் ஆன்மிகவாதியாகவும் விளங்கிய பேராசிரியர் மோரி, வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பதற்கு ஒரு முழுநீள வகுப்பை நடத்தியுள்ளார்.”
— ஏமி டேன் நூலாசிரியர்

 

“நெஞ்சைக் கொள்ளை கொள்ளும் விதத்திலும் துடிப்புடனும் எழுதப்பட்டுள்ள இந்நூல், அன்பு மற்றும் இரக்கத்தின் ஊடாக ஒருவரோடு ஒருவர் ஒரு பிணைப்பை உருவாக்கிக் கொள்வதுதான் மிக முக்கியமான வாழ்க்கைப் பாடம் என்பதில் பேராசிரியர் மோரி கொண்டிருந்த ஆணித்தரமான நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. அப்பாடத்தை நம்முடன் பகிர்ந்து கொண்டிருப்பதன் மூலம் மிட்ச் தன்னுடைய குருவுக்கு ஒரு மாபெரும் பரிசை வழங்கியுள்ளார்.”
–டாக்டர் ஜேன் கிரீர் நூலாசிரியர்

 

“சில சமயங்களில், நீங்கள் உங்களைச் சுற்றிலும் உங்கள் பார்வையை மீண்டும் ஒரு முறை ஓடவிட்டால், நாமெல்லாம் தேவதைகளின் நடுவே இருப்பதை உங்களால் கண்டுகொள்ள முடியும். தன்னுடைய சொந்த இறப்பை எதிர்கொண்டிருக்கின்ற அதே நேரத்தில், எப்படி வாழ வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுக்க மோரி போன்ற ஒரு மனிதரால்தான் முடியும். அவர் ஒரு ஞானி என்று கூறினால் அது மிகையாகாது. இந்நூலைப் படித்து முடித்தப் பிறகு, வகுப்பு இன்னும் முடியவில்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.”
–ஜெஃப் டேனியல்ஸ்

Out of stock

Notify me when stock available

நீங்கள் இளமையாக இருந்தபோது, உங்களை நன்றாகப் புரிந்து கொண்டு, நீங்கள் இவ்வுலகத்தை ஒரு நேர்மறையான கண்ணோட்டத்தில் பார்க்கவும், வாழ்க்கையில் நீங்கள் எதிர்நீச்சல் போடுவதற்கும் தேவையான ஆழமான அறிவுரைகளை உங்களுக்கு வழங்கிய ஒரு வழிகாட்டி உங்களுக்கு இருந்திருக்கக்கூடும். உங்களுடைய தாத்தா, பாட்டி, ஆசிரியர், சக ஊழியர், அல்லது வேறு யாரோ ஒருவர் அப்பாத்திரத்தை வகித்திருக்கக்கூடும். இந்நூலின் ஆசிரியரான மிட்ச் ஆல்பத்திற்கு அத்தகைய ஒரு வழிகாட்டியாகத் திகழ்ந்தவர் மோரி ஷுவார்ட்ஸ். ஏறத்தாழ இருபது ஆண்டுகளுக்கு முன்பு மிட்ச் ஆல்பத்தின் கல்லூரிப் பேராசிரியராக இருந்தவர் அவர்.

மிட்சைப்போலவே, நீங்களும் வாழ்வின் ஓட்டத்தில் உங்களைத் தொலைத்துவிட்டு, உங்கள் வழிகாட்டியுடனான தொடர்பை இழந்திருக்கக்கூடும். உங்களுக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தால் அவரை மீண்டும் சந்தித்து, இன்றும் உங்கள் மனத்தை அரித்துக் கொண்டிருக்கின்ற ஆழமான கேள்விகளை அவரிடம் கேட்கவும், அவருடைய ஞானத்தைப் பெறவும் நீங்கள் நிச்சயமாக விரும்புவீர்கள், இல்லையா? அதிர்ஷ்டவசமாக, மிட்ச் ஆல்பத்திற்கு அப்படி ஓர் இரண்டாவது வாய்ப்புக் கிடைத்தது. பேராசிரியர் மோரி, மரணத்தின் வாசலில் நின்று கொண்டிருந்த நேரத்தில் மிட்ச் அவரை மீண்டும் சந்தித்தார். ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமையன்று மோரியின் வீட்டில் நிகழ்ந்த அச்சந்திப்பு, மோரி நடத்திய இறுதி வகுப்பாக மாறியது. அவ்வகுப்பில், வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பதைப் பற்றிய பாடங்களை மோரியிடமிருந்து மிட்ச் கற்றுக் கொண்டார்.

அவர்கள் இருவரும் சேர்ந்து செலவிட்ட அத்தருணங்களின் மாயாஜாலமான விவரிப்புதான் இந்நூல். தன்னுடைய பேராசிரியர் தனக்கு வழங்கியிருந்த அற்புதமான பரிசை மிட்ச் இந்நூலின் வாயிலாக இவ்வுலகத்துடன் பகிர்ந்து கொள்கிறார்.

 

About the Author

மிட்ச் ஆல்பம் சர்வதேச அளவில் மிகவும் பிரபலமாக விளங்குகின்ற ஒரு நூலாசிரியர், பத்திரிகையாளர், திரைப்பட வசனகர்த்தா, நாடக ஆசிரியர், இசைக் கலைஞர், வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஆவார். அவர் இதுவரை எழுதியுள்ள ஒன்பது நூல்களும் மொத்தமாக நான்கு கோடிப் பிரதிகள் விற்பனையாகியுள்ளன. அவருடைய நூல்கள் ஐம்பது மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவற்றில் பல நூல்கள், விருது பெற்றத் திரைப்படங்களாகவும் தொலைக்காட்சித் தொடர்களாகவும் உருவாக்கப்பட்டுள்ளன. அவர் தன் மனைவி ஜெனீனுடன் அமெரிக்காவிலுள்ள டெட்ராய்ட் நகரில் வசித்து வருகிறார்.

 

Book Specifications

Title: Tuesdays with Morrie / பேராசிரியர் மோரியுடன் நான் செலவிட்டச் செவ்வாய்க் கிழமைகள்
Author: Mitch Albom / மிட்ச் ஆல்பம்
Translator: Nagalakshmi Shanmugam / நாகலட்சுமி சண்முகம்
Language: Tamil
Binding: Paperback
Pages: 242
Weight: 210g
Published Year: 1997
Tamil Translation Published Year: 2021
Publisher: Manjul Publishing House
ISBN: 9789355430328
Dimensions: 13 x 20 x 0.5 cm
Print size: Please feel free to drop us a message.