Opening Possibilities, Illuminating Potentials
Island-wide Free Delivery for Purchase of Rs. 3990 or above.

Cart

Your Cart is Empty

Back To Shop
Contact Us 0764980321

ரசவாதி ( Rasavathi ) The Alchemist

Rs. 2,690.00

or 3 installments of Rs.896.67 with

பாலோ கொயலோ

 

தமிழில்: நாகலட்சுமி சண்முகம்

 

உங்கள் கனவுகளைப் பின்தொடர்ந்து செல்லுவதைப் பற்றிய ஒரு கற்பனைக் கதை

 

 

  • Grand Prix des lectrices de Elle for roman (1995)
  • Premio Grinzane Cavour for Narrativa Straniera (1996)
  • Corine Internationaler Buchpreis for Belletristik (2002)
  • 8.5 கோடிப் பிரதிகள் விற்றுச்சாதனை படைத்துள்ள நூல்

 

“ஒருவரின் விதியை நிறைவேற்றுவதற்கான தேடல்.” அந்தோனி ராபின்ஸ்

 

“உலகளாவிய ஞானத்தின் ஒரு தொழில்முனைவோர் கதை, நம் சொந்த வாழ்க்கையின் வணிகத்திற்கு நாம் உபயோகிக்கலாம்.” ஸ்பென்சர் ஜான்சன், எம்.டி

 

“இது என் முழு வாழ்க்கையையும் மாற்றியது. என்னை இந்த இடத்திற்கு அழைத்துச் செல்ல சதி செய்த அனைத்து மக்களையும் நான் உணர்ந்தேன். ஃபாரல் வில்லியம்ஸ், இசைக்கலைஞர்

 

In stock

or 3 X Rs. 896.67 with Koko Koko

ஆன்மாவிற்குப் பரவசமூட்டுகின்ற ஞானத்தை உள்ளடக்கிய எளிய, சக்திவாய்ந்த இப்புத்தகம், ஆன்டலூசியா பகுதியைச் சேர்ந்த, சான்டியாகோ என்ற செம்மறியாட்டு இடையன் ஒருவனைப் பற்றியது. அவன் ஸ்பெயினில் உள்ள தன்னுடைய சொந்த கிராமத்திலிருந்து புறப்பட்டு, பிரமிடுகளில் புதைத்து வைக்கப்பட்டுள்ள ஒரு பொக்கிஷத்தைத் தேடி எகிப்தியப் பாலைவனத்திற்குச் செல்லுகிறான். வழியில் அவன் ஒரு குறவர்குலப் பெண்ணையும், தன்னை ஓர் அரசர் என்று கூறிக் கொள்ளுகின்ற ஓர் ஆணையும், ஒரு ரசவாதியையும் சந்திக்கிறான். அவர்கள் அனைவரும், அவன் தேடிக் கொண்டிருக்கின்ற பொக்கிஷத்திற்கு இட்டுச் செல்லக்கூடிய பாதையை அவனுக்குக் காட்டுகின்றனர். அது என்ன பொக்கிஷம் என்பதோ, வழியில் எதிர்ப்படும் முட்டுக்கட்டைகளை சான்டியாகோவால் சமாளிக்க முடியுமா என்பதோ அவர்கள் யாருக்கும் தெரியாது. ஆனால், லௌகிகப் பொருட்களைத் தேடுவதில் தொடங்குகின்ற ஒரு பயணம், தனக்குள் இருக்கும் பொக்கிஷத்தைக் கண்டறிகின்ற ஒன்றாக மாறுகிறது. வசீகரமான, உணர்வுகளைத் தட்டியெழுப்புகின்ற, மனிதாபிமானத்தைப் போற்றுகின்ற இக்கதை, நம்முடைய கனவுகளின் சக்திக்கும் நம்முடைய இதயம் சொல்லுவதைக் கேட்க வேண்டியதன் முக்கியத்துவத்திற்குமான ஒரு நிரந்தரச் சான்றாகும்.

 

ஆசிரியர் பற்றி

நம்முடைய காலகட்டத்தைச் சேர்ந்த, மிகுந்த தாக்கம் விளைவித்துள்ள எழுத்தாளர்களில் ஒருவரான பாலோ கொயலோ, 1947ல் பிரேசிலில் ரியோ டி ஜெனிரோ நகரில் பிறந்தார். விற்பனையில் உலகச் சாதனைகளைப் படைத்துள்ள பல நூல்களை அவர் எழுதியுள்ளார். அவருடைய நூல்கள் 81 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன, 170க்கும் அதிகமான நாடுகளில் சுமார் 22.5 கோடிப் பிரதிகள் விற்பனையாகியுள்ளன. ‘பிரேசிலியன் அகாடமி ஆஃப் லெட்டர்ஸ்’ அமைப்பின் ஓர் உறுப்பினரான அவர், செவாலியே விருது பெற்றவர். 2007ல், ஐக்கிய நாடுகள் சபையின் அமைதித் தூதராக அவர் நியமிக்கப்பட்டார்.

 

Book Specifications

Title: The Alchemist / ரசவாதி
Author: Paulo Coelho / பாலோ கொயலோ
Translator: Nagalakshmi Shanmugam / நாகலட்சுமி சண்முகம்
Language: Tamil
Binding: Paperback
Pages: 244
Weight:
Published Year: 1988
Tamil Translation Published Year: 2019
Publisher: Manjul Publishing House
ISBN: 978-93-88241-45-8
Dimensions:
Print size: Please feel free to drop us a message.