Category
- University Magazines
- சிறுவர்களுக்கான புத்தகங்கள்
- Children Books
- English Books
- Book Bundles
- Current Affairs
- Military & Intelligence
- Short Stories
- Fiction
- Poetry
- Environment & Nature
- Science
- Medicine
- Linguistics
- Atheism & Agnosticism
- (Auto)Biography & Memoir
- Business & Management
- Creativity
- Economics
- Education & Research
- Health & Nutrition
- History
- Humor
- Love & Relationships
- Parenting
- Personal Development
- Personal Finance
- Philosophy
- Politics
- War
- Psychology
- Religion & Spirituality
- Society & Culture
- Sports
- Travel & Adventure
- Technology & the Future
- True Crime
- Women Empowerment
- தமிழ் Books
- Book Bundles ( தமிழ் )
- சட்டம்
- இயற்கை
- கட்டுரை
- கணிதம்
- பயணக்குறிப்புகள்
- விவசாயம்
- அரசியல்
- ஆரோக்கியம்
- உளவியல்
- புனைவு
- காதல் மற்றும் உறவு
- சமூகவியல்
- சுயசரிதைகள் மற்றும் நினைவுகள்
- சுயமுன்னேற்றம்
- தத்துவஞானம்
- தொழில்நுட்பம் & எதிர்காலம்
- பொருளாதாரம்
- போர்
- பணம்
- மதம் & ஆன்மீகம்
- வணிகம் & மேலாண்மை
- வரலாறு
- விஞ்ஞானம் & பிரபல அறிவியல்
- விளையாட்டு
- சினிமா
- கவிதைகள்
- குழந்தை வளர்ப்பு
- குற்றம்
- மருத்துவம்
- மொழி
Product categories
- Children Books
- English Books
- (Auto)Biography & Memoir
- Atheism & Agnosticism
- Book Bundles
- Business & Management
- Creativity
- Current Affairs
- Economics
- Education & Research
- Environment & Nature
- Fiction
- Health & Nutrition
- History
- Humor
- Linguistics
- Love & Relationships
- Medicine
- Military & Intelligence
- Parenting
- Personal Development
- Personal Finance
- Philosophy
- Poetry
- Politics
- Psychology
- Religion & Spirituality
- Science
- Short Stories
- Society & Culture
- Sports
- Technology & the Future
- Travel & Adventure
- True Crime
- War
- Women Empowerment
- University Magazines
- சிறுவர்களுக்கான புத்தகங்கள்
- தமிழ் Books
- Book Bundles ( தமிழ் )
- அரசியல்
- ஆரோக்கியம்
- இயற்கை
- உளவியல்
- கட்டுரை
- கணிதம்
- கவிதைகள்
- காதல் மற்றும் உறவு
- குற்றம்
- குழந்தை வளர்ப்பு
- சட்டம்
- சமூகவியல்
- சினிமா
- சுயசரிதைகள் மற்றும் நினைவுகள்
- சுயமுன்னேற்றம்
- தத்துவஞானம்
- தொழில்நுட்பம் & எதிர்காலம்
- பணம்
- பயணக்குறிப்புகள்
- புனைவு
- பொருளாதாரம்
- போர்
- மதம் & ஆன்மீகம்
- மருத்துவம்
- மொழி
- வணிகம் & மேலாண்மை
- வரலாறு
- விஞ்ஞானம் & பிரபல அறிவியல்
- விளையாட்டு
- விவசாயம்
பின்லாந்து காட்டும் வழி ( Finland Kaattum Vazhi ) 100 Social Innovations from Finland
Rs. 2,890.00

இல்க்கா டாய்பாலே
தமிழில்: காயத்திரி மாணிக்கம்
நீண்ட காலமாக பின்லாந்தும் மற்ற நாடுகளைப் போலவே பொருளாதார முன்னேற்றத்துக்கும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கும்தான் அதிக முக்கியத்துவம் கொடுத்துவந்தது. மிகச் சமீபத்தில்தான் இந்தச் சிந்தனைமுறையில் ஆச்சரியப்படத்தக்க ஒரு திருப்புமுனை நிகழ்ந்தது. மக்களே நாட்டின் மையம், அவர்களுடைய சமூக வாழ்க்கையை மாற்றி அமைப்பதே உண்மையான வளர்ச்சி என்பதை பின்லாந்து புரிந்துகொண்டது. அதன் பிறகு அடுத்தடுத்து அந்நாட்டில் மலர்ந்த சமூகக் கண்டுபிடிப்புகள் பின்லாந்தைத் தனித்துவம் மிக்க ஒரு நாடாக உலக அரங்கில் உயர்த்தியது.
இந்தப் புத்தகம் பின்லாந்தில் ஏற்பட்ட திகைக்கவைக்கும் 108 சமூகக் கண்டு பிடிப்புகளை எளிமையாகவும் சுவையாகவும் அறிமுகப்படுத்துகிறது. சமையலறையில் தொடங்கி அந்நாட்டின் நாடாளுமன்றம்வரை: மருத்துவம் தொடங்கி வர்த்தகம்வரை; அறிவியல் தொடங்கி அடிப்படைக் கட்டுமானம்வரை; கலாசாரம் தொடங்கி பழக்கவழக்கங்கள்வரை ஒவ்வொரு துறையையும் குறிப்பிடத்தக்கமுறையில் வளப்படுத்திய சமூகக் கண்டுபிடிப்புகள் இந்நூலில் பதிவாகியுள்ளன.
உதாரணத்துக்கு, மருத்துவத் துறையில் என்னென்ன புதுமையான மாற்றங்களை ஏற்படுத்தமுடியும்; எல்லோருக்கும் தரமான கல்வி சென்று சேர்வதை எப்படி உறுதிபடுத்திக்கொள்வது; கல்வியின் தரத்தை எப்படி நிர்ணயம் செய்வது: மருத்துவம், கல்வி போன்றவற்றை ஓர் அரசு இலவசமாக வழங்கலாமா; சமூக மாற்றத்துக்கு மக்கள் செய்யவேண்டியது என்ன; ஓர் அரசின் கடமைகள் என்னென்ன என அனைத்தும் இந்நூலில் உள்ளன.
- மிகுந்த வரவேற்பைப் பெற்ற இந்நூல் தற்சமயம் 17 உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
Only 2 left in stock
Book Specifications
Title: பின்லாந்து காட்டும் வழி / 100 Social Innovations from Finland
Author: Ilkka Taipale / இல்க்கா டாய்பாலே
Translator: Gayathri Manickam / காயத்திரி மாணிக்கம்
Language: Tamil
Binding: Paperback
Pages: 368
Weight: 600g
Published Year: 2007
Tamil Translation Published Year: 2018
Publisher: Kizhakku Pathippagam
ISBN: 9788184939194
Dimensions: 13.97 x 2.08 x 21.59 cm
Print size: Please feel free to drop us a message.
Related products
-
[RARE] இந்தியாவின் வரலாறு (A History of India India) Part 1
Rs. 2,790.00Rs. 2,190.00or 3 X Rs.730.00 withAdd to cartகொ.அ. அன்தோனவா, கி.ம. போன்காரத்-லேவின்
தமிழில்: பூ. சோமசுந்தரம், டாக்டர் இரா. பாஸ்கரன்
நூலாசிரியர்கள் பிரபல சோவியத் இந்திய இயல் வரலாற்றாளர்கள். இவர்கள் கடந்தகால மற்றும் நிகழ்கால இந்திய வரலாற்று ஆராய்ச்சியில் ஈடு பட்டுள்ளவர்கள்.
இந்நூலில் தொன்மைக் கால மற்றும் இடைக் கால இந்திய வரலாறு சுருக்கமான வடிவில் தரப்பட்டுள்ளது. 18ம் நூற்றாண்டின் நடுப் பகுதி வரை நாட்டின் சமூக-பொருளாதார வளர்ச்சி, அரசியல் வரலாறு, மதம், பண்பாடு ஆகியவற்றை நூலாசிரியர் கள் பகுப்பாய்வு சென்துள்ளனர்.
* 70களிலும் 80களிலும் வெளிவந்த பிரபல்யமான புத்தகங்கள். மிகவும் அரிதான புத்தகங்கள்.
இவை பாவிக்கப்படாத புத்தகங்கள். ஆனால் அச்சிடப்பட்டு 30 வருடங்களுக்கு மேல் கிடங்கில் இருந்ததால் சில புத்தகங்களில் கரையான் அறிப்பு, பக்கங்களின் நிறம் மாறுதல் போன்ற சிறிய சேதங்கள் இருக்கலாம்.
ஆனால் முழுமையாக வாசிக்க முடியுமாக இருக்கும்.
-
விஜயநகர பேரரசு
Rs. 1,690.00or 3 X Rs.563.33 withஎஸ். கிருஷ்ணன்
தமிழகத்தைச் சுமார் 200 ஆண்டுகள் ஆட்சி செய்து தங்கள் முத்திரையை வலுவாகப் பதித்துவிட்டுச் சென்றிருக்கிறது விஜயநகரப் பேரரசு. 14ஆம் நூற்றாண்டு முற்பகுதியில் உதயமான இந்தப் பேரரசுக்கு மற்ற அரசுகளுக்கு இல்லாத ஒரு பெரும் கடமை இருந்தது. அது, தென்னாட்டைப் பெரும் சீரழிவிலிருந்து மீட்கும் பணி.
நிலையற்ற அரசும் கொந்தளிப்பான தன்மையும் நிலவிய மோசமான சூழலிருந்து நாட்டை மீட்டுச் செம்மைப்படுத்தினார்கள் விஜயநகர மன்னர்கள். நிர்வாகச் சீர்திருத்தங்கள், பொருளாதார மேன்மை, நீர்ப்பாசனம் என்று தொடங்கி அடிப்படையான மாற்றங்களைக் கொண்டுவந்ததன்மூலம் தென்னகத்தை அவர்கள் தலைநிமிரச் செய்தார்கள். கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில், இடைவிடாத போர்களுக்கு நடுவில் இந்தியாவின் வரலாற்றை விஜயநகரப் பேரரசு அழுத்தந்திருத்தமாக மாற்றி எழுதியது.
விஜயநகரப் பேரரசு எப்படி உருவானது? எந்தெந்த மன்னர்களெல்லாம் ஆண்டனர்? கிருஷ்ணதேவராயர் வகித்த பாத்திரம் எத்தகையது? அவர்களுடைய ஆட்சிமுறை எப்படி இருந்தது? படைபலம் எத்தகையது? கலை, கட்டுமானம், பொருளாதாரம், சமயம் போன்ற துறைகள் எத்தகைய மாற்றங்களைச் சந்தித்தன? எஸ். கிருஷ்ணனின் இந்நூல் விஜயநகரப் பேரரசு பற்றிய மிகச் சிறப்பான பருந்துப் பார்வையை அளிக்கிறது.
அமெரிக்க உள்நாட்டுப் போர்/ American Civil War
Rs. 1,690.00or 3 X Rs.563.33 withRead moreவானதி
அமெரிக்க வரலாற்றில் மட்டுமல்ல, உலக வரலாற்றிலும் அமெரிக்க உள்நாட்டுப் போர் ஒரு முக்கியமான திருப்புமுனை நிகழ்வு. அடிமைமுறை நீடிக்கவேண்டுமா என்னும் கேள்வியை மையப்படுத்தி அமெரிக்கா இரு துண்டுகளாகப் பிளவுண்டு நின்று மோதிக்கொண்ட போர் இது. எந்தவொரு மனிதனும் இன்னொருவரைவிடத் தாழ்வானவர் கிடையாது என்னும் அடிப்படை மானுடக் கோட்பாட்டை உயர்த்திப் பிடிக்கும் பொருட்டு மேற்கொள்ளப்பட்ட போர் என்பதால்தான் இது நீதியின் போர் என்று அழைக்கப்படுகிறது. இந்தப் போரின் கதாநாயகனாக ஆபிரகாம் லிங்கன் திகழ்ந்தார். அவருடைய ஆட்சிக்காலத்தில் பெரும்பகுதியை இந்தப் போர் விழுங்கிவிட்டது.”
ஹிட்லர்: வாழ்வும் அரசியலும் ( Hitler: Vaazhvum Arasiyalum )
Rs. 1,490.00or 3 X Rs.496.67 withRead moreபா. ராகவன்
விதி, கலை உணர்ச்சியுடன் கட்டமைத்த ஒரு வில்லன், ஹிட்லர். அவரது இனவெறி, பதவி வெறி, மண் வெறி அனைத்துமே தனிப்பட்ட முறையில் அவருக்கு ஏற்பட்ட விரக்திகளாலும் ஏமாற்றங்களாலும் துயரங்களாலும் உருவானவை. அவர் பிறவி அரசியல்வாதி கிடையாது. தன்னை நிலை நிறுத்திக்கொள்ள அரசியல்தான் சரி என்று தீர்மானம் செய்து, அதைப் பிழைகளின் வழியாகவே பயின்றவர். பெரிய ராஜதந்திரி எல்லாம் இல்லை. சுண்டி இழுக்கும் உணர்ச்சிமயமான சொற்பொழிவுகளால் மட்டுமே தனது ஆளுமையைக் கட்டமைத்துக்கொண்டவர்.
உலகுக்கு வெளிப்பட்ட நாள் முதல் மரணம் வரை அதிரடியாகவே ஓடி வாழ்ந்து மறைந்தவர். தமிழில் வெளிவந்திருக்கும் ஹிட்லரின் வாழ்க்கை வரலாறுகளில் மிக அதிகம் வாசிக்கப்பட்டதும் மிகவும் பாராட்டப்பட்டதும் பா. ராகவனின் இந்தப் புத்தகம்தான். ஹிட்லரின் செயல்பாடுகளில் இருந்த வேகமும் வெறித்தனமும் இந்நூலின் மொழிநடையாக மறு உருவம் கொண்டிருக்கின்றன.
வீரயுக நாயகன் வேள்பாரி (VOL-I & II) / Veerayuga Nayagan Velpari
Rs. 11,890.00Rs. 10,990.00or 3 X Rs.3,663.33 withRead moreசு.வெங்கடேசன்
தன்னலமற்ற கொடை உள்ளத்தாலும், அன்புவழிப்பட்ட வாழ்வியல் மரபாலும் பாரியின் புகழ் தமிழ் நிலம் எங்கும் பரவியது. மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர்கள் அவன் புகழ் கண்டு வெதும்பினர். பறம்பு நாட்டின் நிலவளம் அவர்களின் கண்களை உறுத்தியது.
பாரிக்கு எதிராகத் தனித்தனியே அவர்கள் மேற்கொண்ட போர் முயற்சிகள் கைகூடவில்லை. இறுதியில் மூவேந்தர்களும் ஒன்றிணைந்தனர். அவர்களின் கூட்டுப்படை பாரியின் பறம்பு நாட்டை அனைத்துத் திசைகளில் இருந்தும் ஒருசேரத் தாக்கியது. சின்னஞ்சிறு `டிராய்’ நகரின் மீது மொத்த கிரேக்கப் படையும் போர் தொடுத்ததைப் போலத்தான் இதுவும் நிகழ்ந்தது.
பெரும் நிலப்பரப்பை ஆண்ட மூவேந்தர்களின் கூட்டுப்படை, ஒரு குறுநில மன்னனால் சிதறடிக்கப்பட்டது. அதன் பின் மூவேந்தர்களும் ஒன்றாய் சதிசெய்து, வஞ்சினம் நிகழ்த்தி, பாரியின் உயிர் பறித்தனர். வீரத்தால் சாதிக்க முடியாததை துரோகம் செய்து முடித்தது. இயற்கைக்கும் மனிதனின் பேராசைக்கும் இடையில் இன்று நடக்கும் போராட்டத்தின் ஆதிவடிவம்தான் வேள்பாரியின் கதை. திரும்பும் திசையெல்லாம் அருவி கொட்டும் குறிஞ்சி நிலத்தில், அந்த அருவி நீரினும் குழுமையுடை பாரியின் கரம்பற்றி நடக்க வாருங்கள்…
கிட்டத்தட்ட அனைத்தையும் பற்றிய சுருக்கமான வரலாறு ( Kiddathatta Anaithaiyum Pattriya Surukkamaana Varazhaaru ) ) A Short History of Nearly Everything
Rs. 4,290.00or 3 X Rs.1,430.00 withAdd to cartபில் பிரைசன்
ப்ரவாஹன்
அறிவியல்… அது கசப்பான பாடங்களில் ஒன்று. ஆனால் அறிவியல் சாதனைகள் கசப்பானவையா? இல்லையே! அப்புறம் எப்படி பாடங்கள் மட்டும் கசப்பானவையாக இருக்கிறது என்றால், அதனைக் கற்பிக்கும் முறைதான் அதற்குக் காரணம். அறிவியலை எளிமையாகச் சொன்னால், அதைவிட த்ரில் வேறு எதிலும் இல்லை. அப்படி எழுதப்பட்ட புத்தகங்களில் முதன்மையானது இது. அதனால்தான் பில்பிரைசனின் இந்தப் புத்தகம் உலகிலேயே அதிகமாக விற்பனை ஆன புத்தகங்களில் ஒன்றாக மதிக்கப்படுகிறது.
ஆரம்ப கால ஆதி மனிதர்கள் குறித்த இரண்டு அத்தியாயங்களை எழுதுவதற்காக 19 ஆயிரம் கி.மீ.தூரம் பயணம் செய்தார் பில்பிரைசன்…. உலகில் வாழும் 2,000 விஞ்ஞானிகளை நேரில் சந்தித்துப் பேசினார். அதற்குப் பிறகு ஒரு புத்தகம் எழுதினார். அதுதான் இது… அறிவியலை, நமக்கு அருகாமையில் கொண்டுவந்து நிறுத்தவும் செய்கிறது. — Junior Vikadan
ஹோமோ டியஸ்: வருங்காலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு
Rs. 4,290.00or 3 X Rs.1,430.00 withAdd to cartயுவால் நோவா ஹராரி
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
Wellcome Book Prize Nominee for Longlist (2017)
“மனிதர்கள் கடவுளரைக் கண்டுபிடித்தபோது வரலாறு தொடங்கியது. மனிதர்களே கடவுளராக மாறும்போது வரலாறு முடிவுக்கு வந்துவிடும்.”
– யுவால் நோவா ஹராரிநெப்போலியன்: போர்க்கால புயல்
Rs. 890.00or 3 X Rs.296.67 withRead moreஎன். சொக்கன்
கில்லட்டின் காதலர், கலகக்காரர், போர்வெறி பிடித்தவர், சர்வாதிகாரி, சூழ்ச்சிக்காரர் என்று நெப்போலியன் பற்றிய நெகட்டிவ் பார்வைகள் நிறையவே உண்டு. மாவீரன், லட்சியவாதி, தன்னம்பிக்கைச் சக்கரவர்த்தி, போர் வித்தகர், காதலில் கரைகண்டவர் என்று பாஸிட்டிவ் விஷயங்களையும் பக்கம் பக்கமாகப் பேசலாம். உண்மையில் நெப்போலியன் யார்? லட்சியம் கண்ணை மறைக்க, ரத்தவெறி பிடித்து அலைந்தவரா? அல்லது சூழ்நிலை காரணமாக அப்படியொரு மாயச்சுழலில் மூழ்கடித்துக் கொல்லப்பட்டவரா? வறுமையால் ஆளப்பட்டவரால், எப்படி உலகை ஆளும் பேரரசராக மாற முடிந்தது? இந்த வளர்ச்சி நேர்மையானதா?
இல்லை, கூர்மையான வாளின் முனையால் கொண்டுவரப்பட்டதா? கிடுகிடுவென்று உச்சத்தை நோக்கிச் சென்ற நெப்போலியன், அதைவிட இருமடங்கு வேகத்தில் படுபாதாளத்தில் விழுந்து மறைந்தாரே, அந்த வீழ்ச்சியின் பின்னணி என்ன? இந்தக் கேள்விகளுக்குள்தான், நிஜமான நெப்போலியன் ஒளிந்திருக்கிறார். ஒரு மாமன்னரின் வாழ்க்கை மட்டுமல்ல இது. ஒரு சாமானிய சிப்பாய், பேரரசராக உயர்ந்த வெற்றிக்கதையும் கூட.
தே ஒரு இலையின் வரலாறு/ A Brief History of Tea
Rs. 2,190.00or 3 X Rs.730.00 withRead moreராய் மோக்ஷாம்உலகம் விரும்பி அருந்தும் ஒரு பானத்தின் கதை என்று சொல்லலாம் அல்லது, இப்படியும் விரித்துச் சொல்லலாம். தேநீர் மீது பிரிட்டன் கொண்டிருந்த வேட்கை எவ்வாறு மெல்ல மெல்ல வளர்ந்து அதனை ஒரு பேரரசாக மாற்றியது என்பதையும் அந்த மாற்றம் உலகம் முழுக்க எத்தகைய அதிர்வலைகளை ஏற்படுத்தியது என்பதையும் ஆராயும் முக்கியமான நூல் இது. சீனாவின் தேயிலையை வாங்குவதற்கு இந்தியாவின் ஓப்பியத்தை கிழக்கிந்திய கம்பெனி அளிக்கத் தொடங்கியபோது அதிரத் தொடங்கிய உலகம் இன்னமும் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை என்றுதான் சொல்லவேண்டும். தேயிலைத் தோட்டத்தில் தொடங்கும் பயணம் நம்மை சீனா, இந்தியா, சிலோன், ஆப்பிரிக்கா என்று உலகம் முழுக்க அழைத்துச் செல்கிறது. ஒரு கோப்பை தேநீருக்குள் சூழ்ச்சி, சுரண்டல், கயமை, லாபவெறி, ஆதிக்கம் அனைத்தும் அடங்கியிருக்கும் என்று என்றாவது நினைத்துப் பார்த்திருப்போமா?
தேச செல்வங்களின் கதை
Rs. 1,990.00Rs. 1,790.00or 3 X Rs.596.67 withRead moreலியோ ஹுபர்மேன்
தமிழில்: க. மாதவ்
இந்தப் புத்தகம் ஐரோப்பிய நில உறவுகளை அலசுகிறது. சிலுவைப்போர்களுக்கும் வர்த்தக விரிவாக்கத்திற்கும் இருந்த தொடர்புகள், புதிய பொருள் உற்பத்திகளின் தேவைகள், புதிய வர்க்கங்களின் தோற்றம், முதலாளித்துவத்தின் வளர்ச்சி, நிலப்பிரபுத்துவம்-முதலாளித்துவத்தின் மோதல், தேசிய அரசுகளின் உருவாக்கம், அரசியல் அமைப்புகளின் தோற்றம்-வளர்ச்சி, தொழிற்புரட்சி, தொழிற்சாலை உற்பத்திமுறையின் தோற்றம், புதிய உலகங்களை கண்டுபிடித்தல், அடிமை வர்த்தகம், ஆரம்ப மூலதன குவியல், சந்தை விரிவாக்கம், மூலதன பரவல், ஏகாதிபத்திய வளர்ச்சி, சந்தைகள் பங்கீடு-மறுபங்கீடுக்கான யுத்தங்கள், தொழிலாளி வர்க்கத்தின் தோற்றம், தொழிலாளி வர்க்கத்தின் ஆட்சி அமைதல், பாசிசத்தின் வளர்ச்சி ஆகிய வரலாற்று நிகழ்வுகளை மத்திய யுக காலந்தொட்டு நவீனகாலம் வரையிலான பொருளாதார வளர்ச்சிப் போக்குகள் தக்க சான்றுகளுடன் தொகுக்கப்பட்டுள்ளன.
நாம் அறிந்த வரலாற்று பிரபலங்களின் உண்மை சொரூபம் இந்த வரலாற்று நிகழ்வுகளில் எவ்வாறு இருந்தது என்பதை இந்தப் புத்தகம் மிக சரியாக விளக்குகிறது. இந்தப் பிரபலங்களின் வர்க்க சார்பை மிகத் தெளிவாக சித்தரிக்கிறது.
இந்தப் புத்தகத்தின் பேசுபொருள் சிக்கலான சமூக, அரசியல், பொருளாதாரமாக இருந்தாலும், லியோ ஹூபர்மேன் அதை ஒரு கதைசொல்லியின் பாங்கில் கவித்துவமாக விளக்கியிருப்பதை வாசகர்கள் உணர்வார்கள்.