Category
- University Magazines
- சிறுவர்களுக்கான புத்தகங்கள்
- Children Books
- English Books
- Book Bundles
- Current Affairs
- Military & Intelligence
- Short Stories
- Fiction
- Poetry
- Environment & Nature
- Science
- Medicine
- Linguistics
- Atheism & Agnosticism
- (Auto)Biography & Memoir
- Business & Management
- Creativity
- Economics
- Education & Research
- Health & Nutrition
- History
- Humor
- Love & Relationships
- Parenting
- Personal Development
- Personal Finance
- Philosophy
- Politics
- War
- Psychology
- Religion & Spirituality
- Society & Culture
- Sports
- Travel & Adventure
- Technology & the Future
- True Crime
- Women Empowerment
- தமிழ் Books
- Book Bundles ( தமிழ் )
- சட்டம்
- இயற்கை
- கட்டுரை
- கணிதம்
- பயணக்குறிப்புகள்
- விவசாயம்
- அரசியல்
- ஆரோக்கியம்
- உளவியல்
- புனைவு
- காதல் மற்றும் உறவு
- சமூகவியல்
- சுயசரிதைகள் மற்றும் நினைவுகள்
- சுயமுன்னேற்றம்
- தத்துவஞானம்
- தொழில்நுட்பம் & எதிர்காலம்
- பொருளாதாரம்
- போர்
- பணம்
- மதம் & ஆன்மீகம்
- வணிகம் & மேலாண்மை
- வரலாறு
- விஞ்ஞானம் & பிரபல அறிவியல்
- விளையாட்டு
- சினிமா
- கவிதைகள்
- குழந்தை வளர்ப்பு
- குற்றம்
- மருத்துவம்
- மொழி
Product categories
- Children Books
- English Books
- (Auto)Biography & Memoir
- Atheism & Agnosticism
- Book Bundles
- Business & Management
- Creativity
- Current Affairs
- Economics
- Education & Research
- Environment & Nature
- Fiction
- Health & Nutrition
- History
- Humor
- Linguistics
- Love & Relationships
- Medicine
- Military & Intelligence
- Parenting
- Personal Development
- Personal Finance
- Philosophy
- Poetry
- Politics
- Psychology
- Religion & Spirituality
- Science
- Short Stories
- Society & Culture
- Sports
- Technology & the Future
- Travel & Adventure
- True Crime
- War
- Women Empowerment
- University Magazines
- சிறுவர்களுக்கான புத்தகங்கள்
- தமிழ் Books
- Book Bundles ( தமிழ் )
- அரசியல்
- ஆரோக்கியம்
- இயற்கை
- உளவியல்
- கட்டுரை
- கணிதம்
- கவிதைகள்
- காதல் மற்றும் உறவு
- குற்றம்
- குழந்தை வளர்ப்பு
- சட்டம்
- சமூகவியல்
- சினிமா
- சுயசரிதைகள் மற்றும் நினைவுகள்
- சுயமுன்னேற்றம்
- தத்துவஞானம்
- தொழில்நுட்பம் & எதிர்காலம்
- பணம்
- பயணக்குறிப்புகள்
- புனைவு
- பொருளாதாரம்
- போர்
- மதம் & ஆன்மீகம்
- மருத்துவம்
- மொழி
- வணிகம் & மேலாண்மை
- வரலாறு
- விஞ்ஞானம் & பிரபல அறிவியல்
- விளையாட்டு
- விவசாயம்
பிரபல கொலை வழக்குகள்
Rs. 1,690.00

எஸ். பி. சொக்கலிங்கம்
எம்ஜிஆரைச் சுட்டுவிட்டுத் தன்னையும் சுட்டுக்கொண்டார் எம்ஆர் ராதா. இருவரும் உயிர் பிழைத்தது எப்படி? எம்ஜிஆர் கொலை முயற்சி வழக்கு எப்படி நடத்தப்பட்டது?
இறந்துபோன ஜமீன் இளவரசர் ஒருவர் பல்லாண்டுகள் கழித்து, சந்நியாசியாகத் திரும்பிவந்தபோது, ஒட்டுமொத்த இந்தியாவின் கவனமும் அவர்மீது திரும்பியது. அவர் உண்மையிலேயே இளவரசரா அல்லது ஜமீனின் சொத்துகளை அபகரிக்க வந்தவரா? இந்தச் சிக்கலை விடுவிக்க எடுக்கப்பட்ட முயற்சிகளும் உண்மையை நிரூபிக்கத் தொடுக்கப்பட்ட வழக்கும் மர்ம நாவலைவிடவும் விறுவிறுப்பானவை. திடுக்கிடச் செய்யும் விசாரணை விவரங்கள்.
ஜின்னா, ஒரு கொலை வழக்கில் வாதாடியதும் அதில் தோற்றுப்போனதும் தெரியுமா?
தமிழகத்தை உலுக்கிய விஷ ஊசிக் கொலைகள் எப்படி முடிவுக்கு வந்தன? குற்றவாளிகள் எப்படிப் பிடிபட்டனர்?
சென்னை எழும்பூரிலிருந்து ராமேஸ்வரம் சென்ற ரயிலில், ஒரு டிரங்குப் பெட்டியில், தலையில்லாத மனித உடல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. பின்னாட்களில், தூர்தர்ஷனில் தொடர் நாடகமாக மாறி பார்வையாளர்களைக் கிடுகிடுக்க வைத்தது இந்தக் கொலைச்சம்பவம். முழு விவரங்கள் உள்ளே.
க்ரைம் நாவல்களைவிடவும் சுவாரஸ்யமான, விறுவிறுப்பான?பல பிரபலமான கொலை வழக்குகளும் பின்னணி விசாரணைத் தகவல்களும் இந்நூலில் விரிவாக இடம்பெற்றுள்ளன. இந்த வழக்குகளை வழக்கறிஞர் S.P.சொக்கலிங்கம் பதைபதைக்கச் செய்யும் எழுத்து நடையில் நமக்கு அறிமுகம் செய்கிறார்.
Out of stock
Notify me when stock available
Book Specifications
Title: Prabhala Kolai Vazhakkugal / பிரபல கொலை வழக்குகள்
Author: S. P. Chokkalingam / எஸ். பி. சொக்கலிங்கம்
Language: Tamil
Binding: Paperback
Pages: 200
Published Year: 2012
Publisher: Kizhakku Pathippagam
ISBN: 9788184937879
Print size: Please feel free to drop us a message.
Related products
-
மனிதகுலம்
Rs. 3,950.00Rs. 3,790.00or 3 X Rs.1,263.33 withAdd to cartருட்கர் பிரெக்மன்
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
“அருமை. பிரெக்மனின் வரலாற்று விவரிப்பு, மனித இயல்பு குறித்தப் புதிய புரிதலுக்கு இட்டுச் செல்கிறது. முன் எப்போதையும்விட இப்போதுதான் இது நமக்கு அதிகமாகத் தேவைப்படுகிறது.”
— சூசன் கெயின்“இந்நூலின் கருப்பொருள் மிக முக்கியமானது, இதன் வீச்சு பிரம்மாண்டமானது, கதை கூறும் விதம் வசீகரமானது. இது ஓர் அருமையான புத்தகம்.”
–டிம் ஹார்ஃபோர்டு“மனிதகுலத்தை வெறுப்போரின் முழக்கங்களுக்கு இது சாவுமணி அடித்துள்ளது. கதிகலங்கிப் போயுள்ள உலகிற்கு நம்பிக்கையளிக்கின்ற ஒரு கலங்கரைவிளக்கமாக இந்நூல் திகழ்கிறது.”
–டேனி டோர்லிங்“மனிதர்களின்” உள்ளார்ந்த நற்குணம் மற்றும் இயல்பான கண்ணியத்தின்மீதான அசாதாரணமான, ஆணித்தரமான நம்பிக்கைப் பிரகடனமாக இந்நூல் வெளிப்படுகிறது. நாம் நினைத்துக் கொண்டிருக்கின்ற அளவு நாம் காட்டுமிராண்டித்தனமான, மட்டுமீறிய பேராசையுடைய, வன்முறையான, எல்லாவற்றையும் அடித்துச் சாப்பிடுகின்ற மூர்க்கத்தனமான ஒரு விலங்கு அல்ல என்ற வாதத்தை ருட்கர் பிரெக்மன் ஆணித்தரமாகவும் நம்பத்தக்க விதத்திலும் இதில் எடுத்துரைக்கிறார்-சான்றுகள் இதற்கு நேரெதிராக இருக்கின்றபோதிலும்!”
— ஸ்டீபன் ஃபிரை, நடிகர்“சில நூல்கள் நம்முடைய யோசனைகளுக்குச் சவால்விடுகின்றன. ஆனால், ‘மனிதகுலம்’ என்ற இந்நூல், அந்த யோசனைகள் எவற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளனவோ, அந்த அடித்தளத்தையே ஆட்டம் காணச் செய்கிறது. இந்நூல் முன்வைக்கின்ற துணிச்சலான வாதம், நம்முடைய சமுதாயம், ஜனநாயகம், மனிதனின் அடிப்படை இயல்பு ஆகியவை குறித்து உங்களை மீண்டும் சிந்திக்க வைக்கும். மனிதன்மீதான நம்பிக்கை முற்றிலுமாக மறைந்துவிட்ட ஓர் ஆழ்கடலில், இவ்வுலகிற்கு இப்போது தேவைப்படுகின்ற, உறுதியான, மூழ்கடிக்கப்பட முடியாத, உயிர்காக்கும் படகாக இந்நூல் விளங்குகிறது.”
–டேனியல் எச். பிங், நூலாசிரியர்“மனிதர்கள் அடிப்படையில் தன்னலவாதிகள், இனிமையற்றவர்கள் என்ற ஓர் எதிர்மறையான கண்ணோட்டத்தை உடைத்தெறிந்து, மனித இயல்பைப் பற்றிய ஒரு துல்லியமான, நமக்கு நம்பிக்கையூட்டுகின்ற ஓர் ஓவியத்தை இந்நூல் நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துகிறது. நம்முடைய சிந்தனைக்குத் தீனி போடுகின்ற, நம்முடைய காலகட்டத்தைச் சேர்ந்த தலைசிறந்த சிந்தனையாளர்களில் ருட்கர் பிரெக்மனும் ஒருவர்.”
–ஆடம் கிரான்ட், நூலாசிரியர் -
கடைசி முகலாயன்: ஓர் அரசகுலத்தின் வீழ்ச்சி, டெல்லி, 1857 / Kadaisi Mugalayan / The Last Mughal Tamil
Rs. 5,490.00or 3 X Rs.1,830.00 withAdd to cartவில்லியம் டேல்ரிம்பிள்
தமிழில்: இரா.செந்தில்
‘மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய முக்கியமான புத்தகம்.’ -டயானா ஆட்டில், கார்டியன் புக்ஸ் ஆஃப் தி இயர்
‘டேல்ரிம்பிள் நம் காலத்தின் மிகச்சிறந்த வரலாற்று ஆசிரியர்களுள் ஒருவர். இந்தப் புத்தகம் இதுவரை அவர் எழுதியதிலேயே சிறந்த புத்தகமாக இருக்கும்.’ -ஏஷியன் ஏஜ்
‘டெல்லி கைப்பற்றப்பட்டு வீழ்ச்சியுற்ற கதையை அரிதான மனிதநேயத்துடன் விவரிக்கிறார் டேல்ரிம்பிள், இந்தப் பேரார்வம் எல்லோரையும் தொற்றிக்கொள்ளக்கூடியது. உரைநடையில் அது மிக அழகானதாக, தடுமாற்றமில்லாமல், தங்குதடையின்றி நிரம்பி வழிகிறது.’ -தி ஹிந்து
அரசர் பேச ஆரம்பித்தார். ‘நீங்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை பிள்ளைகளே!
கேளுங்கள்!
இந்த அழிவை நான் கொண்டுவரவில்லை. எனக்கு செல்வங்களோ சொத்துக்களோ இல்லை. நிலமும் இல்லை, பேரரசும் இல்லை. நான் எப்போதுமே ஒரு பிச்சைக்காரன். ஒரு மூலையில் அமர்ந்துகொண்டு இறைவனைத் தேடிக்கொண்டிருக்கும் சூஃபி. என்னைச்சுற்றி சிலர் இருப்பதால் எனக்கான தினசரி ரொட்டியை நான் சாப்பிடுகிறேன். ஆனால் இப்போது மீரட்டில் பற்றவைக்கப்பட்ட ஒரு மாபெரும் தீநாக்கு அந்த ரொட்டியையும் விழுங்கிக் கொண்டிருக்கிறது. அது டெல்லியின் மீது விழுந்து இந்த மகத்தான நகரத்தை பற்றவைத்துவிட்டது.
இப்போது நானும் என்னுடைய வம்சாவளியும் அழிந்துபோக இருக்கிறோம். மகத்தான தைமூரிய [முகலாயர்கள்] பேரரசர்களுக்கு உண்டான பெயர் இப்போதும் உயிர்த்திருக்கிறது, ஆனால் விரைவில் அந்தப் பெயரும் முற்றாக அழிக்கப்பட்டு மறக்கப்பட்டுவிடும்.
-
கதாநாயகன் (இரகசியம் #4) ( Kadhanayagan ) (Colour)
Rs. 3,950.00or 3 X Rs.1,316.67 withAdd to cartரோன்டா பைர்ன்
ஹீரோ என்பது பன்னிரண்டு ஆண்களும் பெண்களும் தங்கள் வாழ்க்கையில் வெற்றியை ஈட்டியவர்களின் ஞானத்தின் தொகுப்பாகும். அவர்களின் வாழ்க்கை துன்பங்களால் நிறைந்தது, ஆனால் அவை அனைத்தையும் அவர்கள் வெற்றிகரமாக கடந்தனர். ஒவ்வொருவருக்கும் உள்ளே ஒரு ஹீரோ இருக்கிறார், எழுந்திருக்க காத்திருக்கிறார். ரோண்டா பைர்ன் இந்தப் புத்தகத்தில் தனது நம்பிக்கைகளை வலுப்படுத்துகிறார், அந்த உத்வேகம் நம்மைச் சுற்றி இருக்கிறது, மகிழ்ச்சியும் தைரியமும்தான் ஒருவர் தங்கள் வாழ்க்கையை வீரமாக மாற்றிக்கொள்ளும் மிகப்பெரிய பலம்.
-
துப்பாக்கிகள் கிருமிகள் எஃகு / Thuppakihal Kirumihal Eghku
Rs. 3,890.00or 3 X Rs.1,296.67 withAdd to cartஜாரெட் டைமண்ட்
இந்த உலகில் ஒரு சில நாடுகள் வளமாகவும், மற்ற நாடுகள் ஏழ்மையாகவும் இருக்கிறதே அது ஏன் என்ற கேள்விக்கு ஜாரெட் டைமண்ட், இந்த நூலின் மூலம் விடையைத் தேடிப் பயணிக்கிறார்.
ஐரோப்பியர்கள் உலகின் பல பகுதிகளை தங்கள் காலனிகளாகமாற்ற முடிந்தது எவ்வாறு? ஏன் சீனாவோ அமெரிக்க இந்தியர்களின் இன்கா சமூகமோ இதைச் செய்ய முடியவில்லை? மனித சமூகத்தின் மீதான அடிப்படையான சுற்றுச்சூழல் சக்திகளின் தாக்கத்தை உலகப் புகழ்பெற்ற இந்நூல் விளக்குகிறது.
மேலும் மனித குலத்தின் கடந்த 13,000 ஆண்டுகால வரலாற்றைச் சுருக்கமாகக் கூறுகின்றது.
-
சிந்தனையை மாற்றுங்கள் வாழ்க்கையை மாற்றுங்கள்
Rs. 3,190.00or 3 X Rs.1,063.33 withAdd to cartபிரையன் டிரேசி
தமிழில்: சி. ஆர். ரவீந்திரன்
உங்களுடைய எதிர்காலத்திற்கு உரிய வரைப்படத்தை உங்களுக்கு முன்னால் வைத்திருக்கிறீர்கள். வியக்கத் தகுந்த உங்களுடைய எதிர்காலத்தை நீங்களாகவே உருவாக்கிக் கொள்ள நீங்கள் செய்ய வேண்டியவை இவைதான். இந்தப் புத்தகத்தை நீங்கள் படிக்க வேண்டும். உங்களுடைய சொந்த வாழ்க்கையில் அதை எப்படிப் பயன்படுத்துவது என்பதை நீங்கள் முடிவு செய்ய வேண்டும். அதற்கு இந்த புத்தகம் உறுதுணையாக இருக்கும்.
உங்களைப் பற்றியும், உங்களுடைய ஆற்றலைப் பற்றியும் நீங்கள் கொண்டிருக்கும் சிந்தனைகளைப் படிப்படியாக மாற்றி, அதன் மூலம் உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் மாபெரும் வெற்றி பெறுவது எப்படி என்பதை இப்புத்தகம் விளக்குகிற்து. நீங்கள் உங்களுக்காக நிர்ணயித்துக் கொள்ளும் இலக்கு எதுவானலும் அதை அடைய இந்த புத்தகம் வழிவகுக்கும்.
-
போராட்டங்களின் கதை / Poratangalin Kadhai
Rs. 2,050.00or 3 X Rs.683.33 withAdd to cartஅ.முத்துக்கிருஷ்ணன்
போராட்டம். இந்த வார்த்தை காலம் காலமாக உலகெங்கும் கோடிக்கணக்கான உதடுகள் உச்சரித்துக்கொண்டிருக்கும் வார்த்தை. தனக்கான உரிமை மறுக்கப்படும்போதெல்லம் அதைப் பெற மனிதனுக்கு இயற்கை கொடுத்த ஆயுதம்தான் போராட்டக் குணம். உலகத்தில் பல மாற்றங்களும் முன்னேற்றங்களும் காலம்தோறும் நிகழ்ந்துகொண்டே இருக்க போராட்டமே ஆணிவேர்.
ஆண்டான் அடிமை முறை, முதலாளித்துவத்தின் அடக்குமுறை, தனியுடைமை இவற்றையெல்லாம் நீர்த்துப்போகச் செய்ததே போராட்டம்தான். ஆனால், இவை இன்னும் முற்றுமாக ஒழிந்துவிடவில்லை. வேறு பெயரில் வேறு உருவில் ஆங்காங்கே அவ்வப்போது தோன்றிக்கொண்டுதான் இருக்கின்றன. அப்போதெல்லாம் முன்வந்து நின்று அதை முடக்கிப்போடுவது போராட்டம்தான்.
காந்தி தலைமையில் வெறும் 50 பேருடன் தொடங்கி இறுதியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்ட உப்பு சத்தியாகிரகப் போராட்டப் பயணம் பிரிட்டிஷ் ஆதிக்கத்தையே அசைத்துப் பார்த்தது. தமிழ்நாட்டின் அரசியல் எதிர்காலத்தையே மாற்றிய இந்தி எதிர்ப்புப் போராட்டம், குலக்கல்வி திட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டம் என தமிழ்நாடு தொடங்கி உலகம் முழுதும் நடந்த பல்வேறு போராட்டங்களைப் பற்றி ஜூனியர் விகடனில் வெளிந்த கட்டுரைத் தொடரின் தொகுப்பு நூல் இது.
வீறுகொண்டு எழுந்த பற்பல போராட்டங்களைப்பற்றி அறிய வாருங்கள்!
-
ஹோமோ டியஸ்: வருங்காலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு
Rs. 4,390.00or 3 X Rs.1,463.33 withAdd to cartயுவால் நோவா ஹராரி
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
Wellcome Book Prize Nominee for Longlist (2017)
“மனிதர்கள் கடவுளரைக் கண்டுபிடித்தபோது வரலாறு தொடங்கியது. மனிதர்களே கடவுளராக மாறும்போது வரலாறு முடிவுக்கு வந்துவிடும்.”
– யுவால் நோவா ஹராரி -
ஏன் என்ற கேள்வியில் இருந்து துவக்குங்கள் ( Yen Enra Kelviyil Irunthu Thuvakkungal ) Start with Why
Rs. 2,690.00or 3 X Rs.896.67 withAdd to cartசைமன் சினெக்
தமிழில்: PSV குமாரசாமி
ஏன் வெற்றி தேவதை சிலருடைய வாசற்கதவுகளை மட்டும் தட்டிக் கொண்டிருக்கிறாள்?
ஏன் ஒரு சில நிறுவனங்கள் மட்டும் மீண்டும் மீண்டும் மாபெரும் சாதனைகளை நிகழ்த்திக் கொண்டே இருக்கின்றன?
ஏனெனில், தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி, தொழில்வாழ்க்கையிலும் சரி, நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பது முக்கியமல்ல. ஏன் அதைச் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதுதான் முக்கியம்.
ஸ்டீவ் ஜாப்ஸ், ரைட் சகோதரர்கள், மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர், ஆகியோருக்கு இடையே ஓர் ஒற்றுமை இருந்தது. அவர்கள் அனைவரும் ஏன் என்ற கேள்வியிலிருந்து துவக்கினர்.
பிறரை ஊக்குவிக்க வேண்டும் என்று விரும்புகின்றவர்களுக்கும் சரியான தலைவர்களை அடையாளம் காண ஆசைப்படுகின்றவர்களுக்கும் இந்நூல் உறுதுணையாக இருக்கும்.
-
இலக்குகள்! ( Ilakkugal )
Rs. 2,690.00or 3 X Rs.896.67 withAdd to cartபிரையன் டிரேசி
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
பெரும்பாலானோருக்கு, தாங்கள் குறி வைக்கும் இலக்குகள் வெறும் கனவாகவே இருந்துவிடும்போது, ஒரு சிலரால் மட்டும் தாங்கள் தேர்ந்தெடுக்கும் இலக்குகள் அனைத்தையும் எப்படி அடைந்துவிட முடிகிறது? இதற்கான விடை ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது என்கிறார் பிரையன் டிரேசி. ஒருசில வெற்றியாளர்களுக்கு மட்டுமே தெரிந்திருந்த அந்த ரகசியங்களை இப்புத்தகத்தில் அவர் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.
இருபதாண்டுகால அனுபவத்தையும் நாற்பதாண்டுகால ஆராய்ச்சிகளையும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள இப்புத்தகம், இலக்குகளை நிர்ணாயிக்கவும் அவற்றை அடையவும் தேவையான, நடைமுறைக்கு உகந்த, நிரூபணமான உத்திகளைத் தெள்ளத்தெளிவாக எடுத்துரைக்கிறது. இப்புத்தகத்தினால் இதுவரை பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் பயனடைந்துள்ள்னர்.
எந்தவிதமான இலக்குகளாக இருந்தாலும் சரி, அவற்றை அடையத் தேவையான 12 அம்சத் திட்டம் ஒன்றை பிரையன் டிரேசி இந்நூலில் முன்வைக்கிறார். ஒருவருடைய வலிமைகளை எவ்வாறு அடையாளம் காண்பது, சுயமதிப்பையும் சுயதுணிச்சலையும் எவ்வாறு வளர்த்தெடுப்பது, எதிர்ப்படும் தடைகற்களை எவ்வாறு தகர்த்தெறிவது, சவால்களை எவ்வாறு எதிர்கொள்வது போன்றவற்றை அவர் இப்புத்தகத்தில் அறிவியற்பூர்வமான கண்ணோட்டத்துடன் அணுகுகிறார்.
இலக்குகள் குறித்து இனி நீங்கள் வேறு ஒரு புத்தகத்தைத் தேடி அலைய வேண்டியதில்லை.
-
ஸ்டீவ் ஜாப்ஸ் ( Steve Jobs Tamil )
Rs. 4,690.00or 3 X Rs.1,563.33 withAdd to cartவால்டர் ஐசாக்ஸன்
இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்டீவ் ஜாப்ஸுடன் மேற்கொள்ளப்பட்ட நேர்காணல்கள், அத்துடன் அவருடைய குடும்பத்தினர், நண்பர்கள், எதிரிகள், போட்டியாளர்கள் சக ஊழியர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்களுடன் நடத்திய உரையாடல்களையும் அடிப்படையாகக் கொண்டு உருவானது இந்தப் புத்தகம்.
இது பன்னாட்டளவில் பாராட்டப்பட்ட கண்டுபிடிப்பு தன்மையுள்ள ஓர் இறுதிச் சின்னத்தின் வாழ்க்கை வரலாறு. கச்சிதத்தின் மீதான ஆர்வம், ஆவேசம் மிக்க ஆற்றல் ஆகியவற்றால் ஸ்டீவ் ஜாப்ஸ் கணினிகள்,அனிமேசன் திரைப்படங்கள், இசை, கைபேசிகள், டாப்லெட் கணினிப் பயன்பாடு, டிஜிட்டல் பதிப்பு என ஆறு வெவ்வேறு தொழில்துறைகளில் பெறும் புரட்சியை உருவாக்கியவர்.
வால்டர் ஐசாக்ஸன் இன்னூலில் விறுவிறுப்பூட்டும் நடையில் ஆக்க காலத்திறன் மிக்க ஒரு தொழில்முனைவரின் தீவிரம் பொதிந்த ஆளுமையையும் ஏற்ற இறக்கங்கள் மிகுந்த வாழ்க்கையின் கதையையும் விவரிக்கிறார்.