Category
- Discounted Books
- English Book Bundles
- University Magazines
- சிறுவர்களுக்கான புத்தகங்கள்
- Children Books
- English Books
- Current Affairs
- Military & Intelligence
- Short Stories
- Fiction
- Poetry
- Environment & Nature
- Science
- Medicine
- Linguistics
- Atheism & Agnosticism
- (Auto)Biography & Memoir
- Business & Management
- Creativity
- Economics
- Education & Research
- Health & Nutrition
- History
- Humor
- Love & Relationships
- Parenting
- Personal Development
- Personal Finance
- Philosophy
- Politics
- War
- Psychology
- Religion & Spirituality
- Society & Culture
- Sports
- Travel & Adventure
- Technology & the Future
- True Crime
- Women Empowerment
- தமிழ் Books
- Book Bundles ( தமிழ் )
- சட்டம்
- இயற்கை
- கட்டுரை
- கணிதம்
- பயணக்குறிப்புகள்
- விவசாயம்
- அரசியல்
- ஆரோக்கியம்
- உளவியல்
- புனைவு
- காதல் மற்றும் உறவு
- சமூகவியல்
- சுயசரிதைகள் மற்றும் நினைவுகள்
- சுயமுன்னேற்றம்
- தத்துவஞானம்
- தொழில்நுட்பம் & எதிர்காலம்
- பொருளாதாரம்
- போர்
- பணம்
- மதம் & ஆன்மீகம்
- வணிகம் & மேலாண்மை
- வரலாறு
- விஞ்ஞானம் & பிரபல அறிவியல்
- விளையாட்டு
- சினிமா
- கவிதைகள்
- குழந்தை வளர்ப்பு
- குற்றம்
- மருத்துவம்
- மொழி
Product categories
- Children Books
- Discounted Books
- English Book Bundles
- English Books
- (Auto)Biography & Memoir
- Atheism & Agnosticism
- Business & Management
- Creativity
- Current Affairs
- Economics
- Education & Research
- Environment & Nature
- Fiction
- Health & Nutrition
- History
- Humor
- Linguistics
- Love & Relationships
- Medicine
- Military & Intelligence
- Parenting
- Personal Development
- Personal Finance
- Philosophy
- Poetry
- Politics
- Psychology
- Religion & Spirituality
- Science
- Short Stories
- Society & Culture
- Sports
- Technology & the Future
- Travel & Adventure
- True Crime
- War
- Women Empowerment
- University Magazines
- சிறுவர்களுக்கான புத்தகங்கள்
- தமிழ் Books
- Book Bundles ( தமிழ் )
- அரசியல்
- ஆரோக்கியம்
- இயற்கை
- உளவியல்
- கட்டுரை
- கணிதம்
- கவிதைகள்
- காதல் மற்றும் உறவு
- குற்றம்
- குழந்தை வளர்ப்பு
- சட்டம்
- சமூகவியல்
- சினிமா
- சுயசரிதைகள் மற்றும் நினைவுகள்
- சுயமுன்னேற்றம்
- தத்துவஞானம்
- தொழில்நுட்பம் & எதிர்காலம்
- பணம்
- பயணக்குறிப்புகள்
- புனைவு
- பொருளாதாரம்
- போர்
- மதம் & ஆன்மீகம்
- மருத்துவம்
- மொழி
- வணிகம் & மேலாண்மை
- வரலாறு
- விஞ்ஞானம் & பிரபல அறிவியல்
- விளையாட்டு
- விவசாயம்
நேரத்தை உரமாக்கு
Rs. 1,090.00
சோம. வள்ளியப்பன்
திறமை இருக்கிறது. சாதிக்கவேண்டும் என்னும் முனைப்பு இருக்கிறது. கனவுகளும் நிறையவே இருக்கின்றன. ஒரே சிக்கல், நேரம் மடடும்தான். எல்லாவற்றையும் எப்படி குறுகிய காலத்துக்குள் செய்துமுடிக்க முடியும்? வளர்ந்து வரும் போட்டிகளைச் சமாளித்து, எல்லாத் தடைகளையும் மீறி நம் கனவைச் சாதித்து முடிக்கும்வரை காலம் காத்திருக்குமா என்ன? இருபத்து நான்கு மணி நேரத்தை வைத்துக்கொண்டு பெரிதாக என்ன செய்துவிடமுடியும் என்று நினைக்கிறீர்களா? இதுதான் உங்கள் கவலை என்றால் இந்தப் புத்தகம் உங்கள் கவலைக்கான தீர்வு.
படிப்பு, தகுதி, செல்வம், புகழ், திறமை உள்ளிட்ட பண்புகள் நபருக்கு நபர் மாறுபட்டாலும் காலம் அனைவருக்கும் பொதுவானதுதான். அதை எப்படிப் பயன்படுத்துவது அல்லது வீணடிப்பது என்பதில் மட்டும்தான் வேறுபாடு இருக்கிறது. சாதனையாளர்களுக்கும் தோல்வியாளர்களுக்குமான வேறுபாடு என்பது இதுதான்.
சோம. வள்ளியப்பன் எழுதிய புகழ்பெற்ற நூலான, ‘காலம் உங்கள் காலடியில்’ புத்தகத்தின் இரண்டாம் பாகம் இது. நேர மேலாண்மையைச் சுவையாகவும் தகுந்த உதாரணங்களுடனும் கற்றுத் தரும் இந்நூல், மாணவர்கள் முதல் மேனேஜர்கள் வரை அனைவருக்கும் பயனளிக்கக்கூடியது.
Out of stock
Notify me when stock available
About the Author
BHEL, வேர்ல்பூல், பெப்சி, டாக்டர் ரெட்டீஸ் பவுண்டேஷன், நவியா, ஆகிய நிறுவனங்களில் 30 ஆண்டுகள் மனிதவளத்துறையில் பணியாற்றியவர். BIM, IFMR, GLIM, AIMS போன்ற பல்வேறு மேலாண்மைக் கல்வி நிறுவனங்களில் சிறப்பு சொற்பொழிவுகள் செய்பவர். அள்ள அள்ளப் பணம், இட்லியாக இருங்கள், ஆளப்பிறந்தவர் நீங்கள், உட்பட தமிழில் 50 புத்தகங்களும், You Vs you மற்றும் Bulls & Bears- all about shares என்ற தலைப்புகளில் இரண்டு ஆங்கிலப் புத்தகங்களும் எழுதியிருக்கிறார்.
தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசு, நெய்வேலி புத்தக காட்சியின் சிறந்த எழுத்தாளர் பரிசு, ஏர்வாடி இராதாகிருஷ்ணன் பரிசு, கவிதை உறவு பரிசு மற்றும் ISTD பரிசு ( You Vs You புத்தகத்திற்கு) ஆகியவை இவர் எழுத்துக்கு கிடைத்த அங்கீகாரங்களில் சில. ஆனந்தவிகடன், குமுதம், நாணயம் விகடன், குமுதம் சினேகிதி, அமுதசுரபி, புதிய தலைமுறை, நமது நம்பிக்கை ஆகிய இதழ்களில் 19 தொடர்களும், தினமணியில் 40 க்கும் மேற்பட்ட நடுப்பக்க கட்டுரைகளும் எழுதியிருக்கிறார்.
தற்போது மேன்மை மேனேஜ்மெண்ட் கன்சல்டன்சி யின் தலைமை நிர்வாகியாக இருந்து பல்வேறு நிறுவனங்களுக்கும் கல்லூரிகளுக்கும் ஆலோசனைகள் மற்றும் மனிதவள மேம்பாட்டுப் பயிற்சி கொடுத்து வருகிறார்.
Book Specifications
Title: நேரத்தை உரமாக்கு
Author: Soma. Valliappan / சோம. வள்ளியப்பன்
Language: Tamil
Binding: Paperback
Pages: 136
Weight: 250g
Published Year: 2017
Publisher: Kizhakku
ISBN: 978-9386737250
Dimensions: 13.97 x 0.81 x 21.59 cm
Print size: Please feel free to drop us a message.
Related products
-
வென்றே தீருவோம்: சாதனையாளர்களின் வெற்றி ரகசியங்கள் ( Vendre Theervom )
Rs. 3,190.00or 3 X Rs.1,063.33 withRead moreரெய்னர் ஸிட்டல்மன்
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
சாதனையாளர்களின் வெற்றி ரகசியங்கள்
ஆஸ்திரிய நாட்டில் ஒரு சாதாரண போலீஸ்காரருக்கு மகனாகப் பிறந்த அர்னால்டு, ஹாலிவுட்டில் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் சூப்பர் ஸ்டாராக உயர்ந்தார். கலிபோர்னியா மாநில கவர்னராகவும் ஆனார்.
ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ், மைக்ரோசாப்டின் பில்கேட்ஸ் உலகப் பெரும் பணக்காரர்களாக உயர்ந்தது எப்படி?
இந்த வெற்றி ரகசியங்களைப் பற்றி ரெய்னர் சிட்டல்மன் ஆங்கிலத்தில் எழுதிய புத்தகம் உலகப் புகழ் பெற்றது. அதை வென்றே தீருவோம் என்ற பெயரில், தமிழில் மொழிபெயர்த்துள்ளார் நாகலட்சுமி சண்முகம்.
வாழ்க்கையில் முன்னேற வேண்டும், வெற்றிச்சிகரத்தை அடையவேண்டும் என்று நினைப்பவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம்.
-
ஸ்டார்ட்-அப் பிசினஸில் சக்சஸ் / Startup Businessil Success
Rs. 1,690.00or 3 X Rs.563.33 withRead moreசதீஷ் கிருஷ்ணமூர்த்தி
எல்லோரிடமும் ஒரு ஸ்டார்ட்அப் கனவு இருக்கிறது. இதுவரை இல்லையென்றாலும் சுலபத்தில் வளர்த்துக்கொண்டுவிட முடியும்.
சவாலானது என்ன தெரியுமா? கனவை நகர்த்திச் சென்று நடைமுறைக்குக் கொண்டு வருவதும் அதை வெற்றி பெறச் செய்வதும்தான். இதற்கு அஞ்சியே பலர், ‘இதெல்லாம் சிலருக்குதான் சரிப்பட்டு வரும்’ என்று ஏக்கப் பெருமூச்சோடு தங்கள் கனவைக் கனவாகவே முடித்துக்கொண்டு விடுகிறார்கள். அவ்வாறு செய்யத் தேவையில்லை. துணிந்து திட்டத்தில் இறங்குங்கள் என்கிறது இந்நூல்.
என் ஸ்டார்ட்அப் வெற்றி பெறுமா என்பதை எப்படித் தெரிந்துகொள்வது? தெரிந்துகொண்டபிறகு என்ன செய்யவேண்டும்? முதலீட்டுக்கு எப்படி நிதி திரட்டுவது? பார்ட்னர் வைத்துக்கொள்ளவேண்டுமா அல்லது தனியாகவே ஆரம்பிக்கலாமா? எப்படி விளம்பரம் செய்வது? எப்படி வாடிக்கையாளர்களைப் பெறுவது? போட்டிகளை எப்படிச் சமாளிப்பது? பயணத்தைத் தொடங்கிய பிறகு படுகுழிகள் தென்பட்டால் என்ன செய்வது? திறமையாக நிர்வாகம் செய்வது எப்படி?
நிர்வாகவியல், மார்க்கெட்டிங் உள்ளிட்ட துறையில் நிபுணத்துவம் பெற்ற சதீஷ் கிருஷ்ணமூர்த்தியின் இந்நூல் ஸ்டார்ட்அப் உலகம் பற்றிய மிகச் சிறந்த அறிமுகத்தை எளிமையாக அளிக்கிறது.
-
வெற்றி வாய்ப்புகளுக்கான கடைசி வழிகாட்டி / Vettri Vaaypukalukkana Kadaisi Vazhikaatti ( The Last Prospecting Guide You’ll Ever Need )
Rs. 1,190.00or 3 X Rs.396.67 withRead moreபாப் பர்க்
உங்களுக்கு தேவையான அனைத்து வாய்ப்புகளும் உள்ளதா?
நம்மில் சிலருக்கே! பாப் பர்க் பயனுள்ள ஆய்வுகளின் ரகசியங்களைக் கற்றுக்கொண்டார், இப்போது அவர் தனது நிரூபிக்கப்பட்ட, நேரத்தைச் சோதித்த நுட்பங்களை உங்களுக்கு வழங்குகிறார்! இந்த சக்திவாய்ந்த வழிகாட்டியில், திறமையான மற்றும் வலியின்றி தகுதிவாய்ந்த வேட்பாளர்களை எவ்வாறு சேகரிப்பது என்பதை ஆரம்பநிலை மற்றும் சாதகமாக அவர் காட்டுகிறார். உங்கள் பக்கத்தில் உங்களுக்குத் தேவைப்படும் கடைசி வருங்கால வழிகாட்டி மூலம், நீங்கள் விரும்பும் அனைத்து வணிக வாய்ப்புகளையும் எவ்வாறு வளர்ப்பது என்பதை நீங்கள் சரியாகக் கற்றுக் கொள்வீர்கள்.
-
கருமமே கண்ணாக! (Karumame Kannaaha!)
Rs. 2,690.00or 3 X Rs.896.67 withRead moreகால் நியூபோர்ட்
தமிழில்: PSV குமாரசாமி
“ஆழ்ந்த கவனம் செலுத்தும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டியது ஏன் முக்கியம் என்பதைத் தக்கக் காரணங்களுடன் எடுத்துரைக்கின்ற இந்நூல், உடனடியாக நடைமுறையில் செயல்படுத்தத்தக்க அறிவுறுத்தல்களை வழங்குகிறது.”
–ஆடம் எம். கிரான்ட், ‘ஒரிஜினல்ஸ்’ நூலின் ஆசிரியர்‘கருமமே கண்ணாக’ என்பது அறிவைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட வேண்டிய ஒரு கடினமான வேலையை, எந்த கவனச்சிதறலுக்கும் ஆளாகாமல் ஒருமித்த கவனக்குவிப்புடன் மேற்கொள்வதற்கான திறனாகும். கருமமே கண்ணாகச் செயல்படுவது நீங்கள் செய்கின்ற எந்தவொரு வேலையிலும் நீங்கள் சிறப்புற உதவும், குறைவான நேரத்தில் நீங்கள் அதிகமானவற்றைச் சாதிக்க வழி வகுக்கும், ஒரு திறமையில் மேதமை பெறுவதிலிருந்து வரக்கூடிய உண்மையான மனநிறைவை உங்களுக்கு வழங்கும். சுருக்கமாகக் கூறினால், ஒருமித்த கவனம் செலுத்தக்கூடிய திறன் என்பது, போட்டிகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கின்ற இன்றைய உலகில் சர்வ வல்லமை வாய்ந்த ஓர் ஆயுதத்தைப் போன்றது.
ஆனாலும், இரைச்சல்மிக்க அலுவலகங்களில் பணியாற்றுகின்ற அறிவுசார் ஊழியர்களாக இருந்தாலும் சரி, தங்களுடைய முன்னோக்கைக் கூர்தீட்டிக் கொள்ளப் போராடிக் கொண்டிருக்கின்ற படைப்பாளிகளாக இருந்தாலும் சரி, பெரும்பாலான மக்கள், ஆழ்ந்த கவனத்துடன் வேலை செய்வதற்கான திறனை இழந்துள்ளனர். மாறாக, மின்னஞ்சல்களிலும் சமூக ஊடகங்களிலும் அவர்கள் தங்களுடைய நாட்களைத் தொலைத்துக் கொண்டிருக்கின்றனர் – இதைவிடச் சிறந்த வழி ஒன்று இருக்கிறது என்பதை உணராமல்!
கலாச்சார விமர்சனங்களையும் நடைமுறையில் செயல்படுத்தப்படக்கூடிய அறிவுரைகளையும் உள்ளடக்கிய இந்நூல், கவனச்சிதறலுக்கு உள்ளான ஓர் உலகில் ஒருமித்த கவனத்துடன் வெற்றி பெறுவதற்கான வழியைத் தேடிக் கொண்டிருக்கின்ற எவரொருவருக்கும் வழி காட்டும்.
-
குழுவில் சிறப்பாகச் செயல்பட 17 முக்கியப் பண்புகள்
Rs. 1,950.00or 3 X Rs.650.00 withRead moreஜான் சி. மேக்ஸ்வெல்
தமிழில்: பொன். சின்னத்தம்பி முருகேசன்
எவரொருவரும் எந்தவொரு குழவிலும் சிறப்பாகச் செயல்பட, தனிப்பட்ட முறையில் தன்னிடம் கொண்டிருக்க வேண்டிய 17 முக்கியப் பண்புகளைப் பற்றி ஜான் மேக்ஸ்வெல் இப்புத்தகத்தில் எடுத்துரைக்கிறார். அவரது விரிவான விளக்கங்களும் எளிய உதாரணங்களும் சுலபமாகப் புரிந்து கொள்ளக் கூடியவை. குடும்பம், அலுவலகம், விளையாட்டு அணி போன்ற எல்லா இடங்களிலும் அவை பொருந்தும் என்பது அவற்றின் சிறப்பு.
- குழுவில் இடம்பெற்றிருக்கும் எவரொருவருக்கும் அடுக்கடுக்காக வெற்றிகளை ஈட்டித்தரவல்ல பண்புநலன்களில் சில:
- தெளிந்த நோக்குடன் இயங்குதல்: எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் இலக்கு நோக்கியே இருத்தல்
- அரவணைத்துச் செல்லுதல்: பிறருடைய நலனில் கருத்தூன்றிச் செயல்படுதல்
- தன்னலமின்றிச் செயலாற்றுதல்: குழுவின் நலனுக்காக எந்த
வேலையையும் விருப்பத்துடன் ஏற்றுக்கொள்ளுதல் தளராத உறுதியுடன் இருத்தல்: பின்னடைவுகளை எதிர்கொள்ளும்போதும் நன்னம்பிக்கையுடன் கடினமாக உழைத்தல் .
இத்தகையப் பண்புநலன்கள் குழு உறுப்பினர்கள் மீதும் குழுவின் வெற்றிமீதும் எத்தகையத் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை மேக்ஸ்வெல் இங்கு சித்தரித்துக் காட்டுகிறார். குழுவில் சிறப்பாகச் செயல்பட 17 முக்கியப் பண்புகள் எனும் இந்நூல் ஏதோ போகிற போக்கில் அறிவுரைகள் அள்ளித் தெளிக்கும் விதத்திலோ, வறட்டுச் சிந்தனையின் வடிவமாகவோ அமையவில்லை; மாறாக, இது குழுநலனை முன்னிறுத்தும் குழு உறுப்பினர்களின் மதிப்பை மேம்படுத்த வடிவமைக்கப்பட்ட வலிமையிக்கச் செயல்பாடுகளை விவரிக்கின்றது.
-
ஆண்ட்ரு கார்னகி ( Andrew Carnegie )
Rs. 790.00or 3 X Rs.263.33 withRead moreஆண்ட்ரூ கார்னகி
தமிழில்: பி. உதயகுமார்
ஸ்காட்லாந்தில் பிறந்து வளர்ந்து, அமெரிக்காவின் சுதந்திர சூழலை விரும்பி, அமெரிக்கா வந்த ஒரு சாதனை மனிதனின் வாழ்க்கை வரலாறு இது. 1851 ஆம் ஆண்டில் இரண்டரை டாலர் வார சம்பளத்தில் தொடங்கிய அவரது வெற்றி வாழ்க்கை. படிப்படியாக உலகின் முதல் இரும்பாலை மகாராஜாவாக உயர்ந்தார். ரயில் பெட்டிகள் தயாரிப்பது, இரும்புப் பாலங்கள் கட்டுவது, தண்டவாளங்கள் செய்து அவற்றை நிறுவுதல் என்று, தான் தொழிலில் உயர்ந்தது மட்டுமல்லாது அமெரிக்காவையும் தொழிலில் முன்னேற்றமடைந்த நாடாக உயர்த்திய பெருமையாளர் ஆவார்.
ஆனால் எளிமையானவர்கூட அன்னாரின் சாதனைகளில் சில..
- கார்னகி மெலோன் பல்கலைக் கழகத்தைத் தோற்றுவித்த
- 1885-ஆம் ஆண்டில் 500,000 டாலர்கள் வழங்கி பிட்ஸ்பர் நூலகத்தை சிறப்புற நடத்தியது.
- இதைப்போல்…3000 நூலகங்களை உலக நாடுகள் பலவற்றிலும் நிறுவியது.
ஏன் நூலகங்களுக்கு இவ்வளவு முன்னுரிமை? விவரம் நூலில்.
1919-ஆம் ஆண்டில் கார்னகியின் மறைவின் போது, அவர் நேரடியாக வழங்கிய தர்மங்களின் மொத்தத் தொகை 350 கோடி டாலர். இது தவிர தொண்டு நிறுவனங்களுக்கு இவர் வழங்கியது 30 கோடி டாலர்.
இந்நூல் இந்த சாதனை மேதையின் கையால் எழுதப்பெற்ற சுயசரிதம்.
-
நீங்களும் விற்பனையாளர் ஆகலாம் (You Can Sell)
Rs. 1,950.00or 3 X Rs.650.00 withRead moreShiv Khera / ஷிவ் கேரா
நீங்கள் ஒரு வெற்றிகரமான விற்பனை நிபுணரை உருவாக்கும் நேர-சோதனை கொள்கைகளை நீங்கள் விற்கலாம். பயன்படுத்தப்படும் வார்த்தை கொள்கைகள்’ மற்றும் தந்திரோபாயங்கள் அல்ல. ஏனெனில் தந்திரோபாயங்கள் கையாளக்கூடியவை, அதேசமயம் கொள்கைகள் ஒருமைப்பாட்டின் அடித்தளத்தை அடிப்படையாகக் கொண்டவை. வெற்றிபெற நீங்கள் ‘வர்த்தகத்தின் தந்திரங்களை’ கற்றுக்கொள்ள வேண்டும் என்று மக்கள் சொல்வதை நீங்கள் பல முறை கேட்கிறீர்கள். இது உண்மையல்ல. இந்தப் புத்தகம் வித்தியாசமானது!
-
இலக்குகள்! ( Ilakkugal )
Rs. 2,990.00or 3 X Rs.996.67 withAdd to cartபிரையன் டிரேசி
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
பெரும்பாலானோருக்கு, தாங்கள் குறி வைக்கும் இலக்குகள் வெறும் கனவாகவே இருந்துவிடும்போது, ஒரு சிலரால் மட்டும் தாங்கள் தேர்ந்தெடுக்கும் இலக்குகள் அனைத்தையும் எப்படி அடைந்துவிட முடிகிறது? இதற்கான விடை ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது என்கிறார் பிரையன் டிரேசி. ஒருசில வெற்றியாளர்களுக்கு மட்டுமே தெரிந்திருந்த அந்த ரகசியங்களை இப்புத்தகத்தில் அவர் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.
இருபதாண்டுகால அனுபவத்தையும் நாற்பதாண்டுகால ஆராய்ச்சிகளையும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள இப்புத்தகம், இலக்குகளை நிர்ணாயிக்கவும் அவற்றை அடையவும் தேவையான, நடைமுறைக்கு உகந்த, நிரூபணமான உத்திகளைத் தெள்ளத்தெளிவாக எடுத்துரைக்கிறது. இப்புத்தகத்தினால் இதுவரை பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் பயனடைந்துள்ள்னர்.
எந்தவிதமான இலக்குகளாக இருந்தாலும் சரி, அவற்றை அடையத் தேவையான 12 அம்சத் திட்டம் ஒன்றை பிரையன் டிரேசி இந்நூலில் முன்வைக்கிறார். ஒருவருடைய வலிமைகளை எவ்வாறு அடையாளம் காண்பது, சுயமதிப்பையும் சுயதுணிச்சலையும் எவ்வாறு வளர்த்தெடுப்பது, எதிர்ப்படும் தடைகற்களை எவ்வாறு தகர்த்தெறிவது, சவால்களை எவ்வாறு எதிர்கொள்வது போன்றவற்றை அவர் இப்புத்தகத்தில் அறிவியற்பூர்வமான கண்ணோட்டத்துடன் அணுகுகிறார்.
இலக்குகள் குறித்து இனி நீங்கள் வேறு ஒரு புத்தகத்தைத் தேடி அலைய வேண்டியதில்லை.
-
பிசினஸ் டிப்ஸ் ( Business Tips Tamil )
Rs. 1,290.00or 3 X Rs.430.00 withAdd to cartசதீஷ் கிருஷ்ணமூர்த்தி
எதையும் எளிதாகப் புரிந்துகொள்ளும்படியும் வெகுவாக ரசிக்கும்படியும் சொல்வது சதீஷ் கிருஷ்ணமூர்த்தியின் இயல்பு. கனமான, ஆழமான பிசினஸ் மேனேஜ்மெண்ட் பாடங்கள்கூட இவர் கை பட்டால் புதுப் பொலிவு பெற்றுவிடுகிறது. நீங்கள் ஏற்கெனவே தொழிலொன்றை நடத்திவந்தாலும் சரி, ஒரு தொழில்முனைவோராக மாறும் கனவோடு இருப்பவராக இருந்தாலும் சரி… இந்தப் புத்தகம் உங்களுக்குத் தேவையான பயனுள்ள டிப்ஸ்கள் அனைத்தையும் கையடக்கமாகத் தொகுத்து அளிக்கிறது. திறமைசாலியான ஓர் ஆலோசகரை அதிக வருமானம் கொடுத்து பணியில் அமர்த்திக்கொள்வதற்குப் பதில் இந்தப் புத்தகத்தை வாங்கி வைத்துக்கொண்டால் போதும். வளமான வாழ்வும் லாபகமான வர்த்தகமும் கைமேல் கிடைக்கும். -
சூப்பர் சேல்ஸ் சக்சஸ் ஃபார்முலா / Super Sales – Success Formula
Rs. 1,390.00or 3 X Rs.463.33 withஜி.எஸ்.சிவகுமார்
விற்பனைத் துறையில் பெரும் சாதனைகள் புரிய ஓர் எளிமையான, சுவாரஸ்யமான கையேடு!- விற்பனைத் துறை எப்படிச் செயல்படுகிறது? அதில் இணைவது எப்படி?- இத்துறையில் என்னென்ன சிக்கல்கள், சவால்கள், வாய்ப்புகள் உள்ளன? அவற்றை எப்படிக் கையாள்வது?- உங்கள் மேலாளரின் நம்பிக்கையைப் பெறுவது எப்படி? எந்தவொரு குழுவிலும் சிக்கலின்றி பணியாற்றுவது எப்படி?- பேச்சு, எழுத்துத் திறனை வளர்த்துக்கொள்வது எப்படி?- வாடிக்கையாளரைப் புரிந்துகொள்வது எப்படி? அவருடைய தேவைகளை உணர்ந்து, பூர்த்தி செய்வது எப்படி?- பேரங்களை வெற்றிகரமாக நடத்திமுடிக்கும் கலையை எப்படிக் கற்றுக்கொள்வது?- இலக்குகளை அடைவது எப்படி? நெருக்கடிகளைச் சமாளிப்பது எப்படி?நீங்கள் விற்பனைத் துறையைச் சேர்ந்தவராக இருந்தால் அல்லது அதில் நுழையும் கனவு கொண்டிருப்பவராக இருந்தால், இந்தப் புத்தகத்தை நீங்கள் வாசித்தே தீர வேண்டும். 35 ஆண்டுகளுக்கும் மேலாக விற்பனைத் துறையில் பணியாற்றிய தனது நீண்ட, நெடிய அனுபவத்தின் அடிப்படையில் இந்நூலை உருவாக்கியிருக்கிறார் சிவக்குமார். உங்களுடைய நிச்சயமான வெற்றிக்கு உத்தரவாதமளிக்கும் பாடங்கள் பல இதில் உள்ளன.