Opening Possibilities, Illuminating Potentials
Delivery in 1-5 business days. Island-wide Free Delivery for Purchase of Rs. 3990 or above.

Cart

Your Cart is Empty

Back To Shop
Contact Us 0764980321

போராட்டங்களின் கதை / Poratangalin Kadhai

Rs. 2,050.00

or 3 installments of Rs.683.33 with

அ.முத்துக்கிருஷ்ணன்

 

போராட்டம். இந்த வார்த்தை காலம் காலமாக உலகெங்கும் கோடிக்கணக்கான உதடுகள் உச்சரித்துக்கொண்டிருக்கும் வார்த்தை. தனக்கான உரிமை மறுக்கப்படும்போதெல்லம் அதைப் பெற மனிதனுக்கு இயற்கை கொடுத்த ஆயுதம்தான் போராட்டக் குணம். உலகத்தில் பல மாற்றங்களும் முன்னேற்றங்களும் காலம்தோறும் நிகழ்ந்துகொண்டே இருக்க போராட்டமே ஆணிவேர்.

 

ஆண்டான் அடிமை முறை, முதலாளித்துவத்தின் அடக்குமுறை, தனியுடைமை இவற்றையெல்லாம் நீர்த்துப்போகச் செய்ததே போராட்டம்தான். ஆனால், இவை இன்னும் முற்றுமாக ஒழிந்துவிடவில்லை. வேறு பெயரில் வேறு உருவில் ஆங்காங்கே அவ்வப்போது தோன்றிக்கொண்டுதான் இருக்கின்றன. அப்போதெல்லாம் முன்வந்து நின்று அதை முடக்கிப்போடுவது போராட்டம்தான்.

 

காந்தி தலைமையில் வெறும் 50 பேருடன் தொடங்கி இறுதியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்ட உப்பு சத்தியாகிரகப் போராட்டப் பயணம் பிரிட்டிஷ் ஆதிக்கத்தையே அசைத்துப் பார்த்தது. தமிழ்நாட்டின் அரசியல் எதிர்காலத்தையே மாற்றிய இந்தி எதிர்ப்புப் போராட்டம், குலக்கல்வி திட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டம் என தமிழ்நாடு தொடங்கி உலகம் முழுதும் நடந்த பல்வேறு போராட்டங்களைப் பற்றி ஜூனியர் விகடனில் வெளிந்த கட்டுரைத் தொடரின் தொகுப்பு நூல் இது.

 

வீறுகொண்டு எழுந்த பற்பல போராட்டங்களைப்பற்றி அறிய வாருங்கள்!

Out of stock

Notify me when stock available

About the Author

அ. முத்துக்கிருஷ்ணன் (A. Muthukrishnan) தமிழ் எழுத்தாளரும் சமூக செயற்பாட்டாளரும் ஆவார். 1973-ஆம் ஆண்டு பிறந்தவர் ஆவார். தென்னிந்தியாவின் மதுரை மாவட்டத்தில் பிறந்த இவர் தனது இளம் பருவம் வரை கோவா, ஹைதராபாத், மும்பை நகரங்களில் வசித்தார்.

1986-இல் மதுரைக்கு பயணமானது இவரது குடும்பம். அக்காலகட்டத்தில் மதுரையில் அவர் படித்த துறையில் வேலை வாய்ப்புகள் இல்லாததால் மதுரையில் வேறு துறைகள் சார்ந்த வேலைகளை பார்க்கத் தொடங்கினார், அதன்பின்னர் சொந்தமாகப் பல சிறு குறு தொழில் முயற்சிகளில் ஈடுபட்டார்.

 

Book Specifications

Binding: Paperback
Pages: 287
Published Year: 2023
Publisher: விகடன் பிரசுரம்
ISBN: 9789394265486

Reviews

There are no reviews yet.

Be the first to review “போராட்டங்களின் கதை / Poratangalin Kadhai”

Your email address will not be published. Required fields are marked *