Category
- University Magazines
- சிறுவர்களுக்கான புத்தகங்கள்
- Children Books
- English Books
- Book Bundles
- Current Affairs
- Military & Intelligence
- Short Stories
- Fiction
- Poetry
- Environment & Nature
- Science
- Medicine
- Linguistics
- Atheism & Agnosticism
- (Auto)Biography & Memoir
- Business & Management
- Creativity
- Economics
- Education & Research
- Health & Nutrition
- History
- Humor
- Love & Relationships
- Parenting
- Personal Development
- Personal Finance
- Philosophy
- Politics
- War
- Psychology
- Religion & Spirituality
- Society & Culture
- Sports
- Travel & Adventure
- Technology & the Future
- True Crime
- Women Empowerment
- தமிழ் Books
- Book Bundles ( தமிழ் )
- சட்டம்
- இயற்கை
- கட்டுரை
- கணிதம்
- பயணக்குறிப்புகள்
- விவசாயம்
- அரசியல்
- ஆரோக்கியம்
- உளவியல்
- புனைவு
- காதல் மற்றும் உறவு
- சமூகவியல்
- சுயசரிதைகள் மற்றும் நினைவுகள்
- சுயமுன்னேற்றம்
- தத்துவஞானம்
- தொழில்நுட்பம் & எதிர்காலம்
- பொருளாதாரம்
- போர்
- பணம்
- மதம் & ஆன்மீகம்
- வணிகம் & மேலாண்மை
- வரலாறு
- விஞ்ஞானம் & பிரபல அறிவியல்
- விளையாட்டு
- சினிமா
- கவிதைகள்
- குழந்தை வளர்ப்பு
- குற்றம்
- மருத்துவம்
- மொழி
Product categories
- Children Books
- English Books
- (Auto)Biography & Memoir
- Atheism & Agnosticism
- Book Bundles
- Business & Management
- Creativity
- Current Affairs
- Economics
- Education & Research
- Environment & Nature
- Fiction
- Health & Nutrition
- History
- Humor
- Linguistics
- Love & Relationships
- Medicine
- Military & Intelligence
- Parenting
- Personal Development
- Personal Finance
- Philosophy
- Poetry
- Politics
- Psychology
- Religion & Spirituality
- Science
- Short Stories
- Society & Culture
- Sports
- Technology & the Future
- Travel & Adventure
- True Crime
- War
- Women Empowerment
- University Magazines
- சிறுவர்களுக்கான புத்தகங்கள்
- தமிழ் Books
- Book Bundles ( தமிழ் )
- அரசியல்
- ஆரோக்கியம்
- இயற்கை
- உளவியல்
- கட்டுரை
- கணிதம்
- கவிதைகள்
- காதல் மற்றும் உறவு
- குற்றம்
- குழந்தை வளர்ப்பு
- சட்டம்
- சமூகவியல்
- சினிமா
- சுயசரிதைகள் மற்றும் நினைவுகள்
- சுயமுன்னேற்றம்
- தத்துவஞானம்
- தொழில்நுட்பம் & எதிர்காலம்
- பணம்
- பயணக்குறிப்புகள்
- புனைவு
- பொருளாதாரம்
- போர்
- மதம் & ஆன்மீகம்
- மருத்துவம்
- மொழி
- வணிகம் & மேலாண்மை
- வரலாறு
- விஞ்ஞானம் & பிரபல அறிவியல்
- விளையாட்டு
- விவசாயம்
யாருக்காக இந்த மணி ஒலிக்கிறது ( Yaarukkaha Indha Mani Olikkirathu )
Rs. 5,940.00 Rs. 5,490.00

எர்னெஸ்ட் ஹெமிங்வே
தமிழில்: சி. சீனிவாசன்
‘யாருக்காக இந்த மணி ஒலிக்கிறது’ 1940களில் எர்னெஸ்ட் ஹெமிங்வே எழுதிய மிகப் புகழ்பெற்ற புதினம் ஆகும் .ஹெமிங்வே யின் படைப்புகளிலேயே மிகச் சிறந்தது என அவரின் சரிதையை எழுதிய “ஷெப்ரே மெர்ஸ்” இந்நாவலைப் பற்றிக் குறிப்பிடுகிறார். இதுவரை போரைப் பற்றி எழுதப்பட்ட நாவல்களில் மிகச் சிறந்தது இதுதான்.
எந்த வகையில் பார்த்தாலும் இது ஒரு சிறந்த புத்தகம். போரைப் போன்ற ஒரு அதீத சூழ்நிலையில் ஆண்களும் பெண்களும் எவ்வாறு சிந்திப்பார்கள் நடந்துகொள்வார்கள் என்பதைக் குறித்து ஆழ்ந்த நேரடித் தகவல்களை இது தருகிறது. சண்டை, காதல், வீரம், சோகம், புதிர் என்ற அனைத்தும் இதில் நிரம்பியுள்ளது. சுருங்கச் சொல்வதெனில் இது சிறந்த வாசிப்பனுபவத்தைத் தருகிறது.
Out of stock
Notify me when stock available
Book Specifications
Title: For Whom the Bell Tolls
Author: Ernest Hemingway
Translator: C. Seenivasan
Binding: Paperback
Pages: 760
Published Year: 1940
Tamil Translation Published Year: 2014
Publisher: எதிர் வெளியீடு / Ethir Veliyeedu
ISBN: 9788192868073
Related products
-
ஜே.ஜே. சில குறிப்புகள் ( Je Je Sila Kurippugal )
Rs. 1,590.00or 3 X Rs.530.00 withRead moreசுந்தர ராமசாமி
மனிதனுடன் தொடர்பு ஏற்படும்போது, மிகச் சுருங்கிய நேரத்தில், குறுக்குப் பாதை வழியாகக் கிடுகிடு என நடந்து, அவனுடைய மனத்தின் துக்கம் நிறைந்த குகைவாசலைச் சென்றடைகிறேன். என் மீது உன் துக்கத்தையெல்லாம் கொட என்ற செய்தியை எப்படியோ மறைமுகமாக என்னால் உணர்ததிவிட முடிகிறது. மனிதனுக்குரிய சகல பலவீனங்களும் கொண்ட எனக்கு, தங்களை என்னில் இனங்கண்டுகொள்ளும் மற்றவர்களின் தொடர்புகள் வாய்த்தவண்ணம் இருக்கின்றன. என்னைப் போலவே நான் சந்தித்தவர்களும் ‘இப்போது என்னைப் பிடித்துக்கொண்டிருக்கும் துக்கத்தை மட்டும் ஒரு புறச்சக்தி நீக்கித் தந்துவிட்டால் இனி வரவிருக்கும் துக்கங்களை நானே சமாளித்துத் தீர்த்துக் கொள்வேன்’ என்று பிரார்த்தனையில் ஏங்குவதை உணர்ந்திருக்கிறேன். தண்ணீரின் ருசிகள் வேறானவை என்றாலும் எந்த மனத்தைத் தோண்டினாலும் துக்கத்தின் ஊற்று கொப்பளிப்பதைப் பார்க்கலாம். மனித மனத்தின் அடிநிலைகளில் ஒரே திராவகம்தான் ஓடிக்கொண்டிருக்கிறது.
-
பிரைட் அண்ட் பிரஜுடிஸ் ( Pride and Prejudice Tamil )
Rs. 1,790.00or 3 X Rs.596.67 withRead moreஜேன் ஆஸ்டின்
எலிசபெத் பென்னட் முதல் முறையாக ஒரு நடன நிகழ்ச்சியில் ஃபிட்ஸ்வில்லியம் டார்சியை சந்தித்தபொழுது, திமிர்பிடித்த அருவருப்பான மனிதனென்று அவனை அலட்சியப்படுத்துகிறாள். தாங்கிக்கொள்ள முடியாத அளவு துடுக்குத்தனமாக நடந்துகொள்வது மட்டுமல்லாமல் அவளுடன் நடனமாடும் யோசனையைக் கூட மறுக்கிறான் டார்சி.
வாழ்க்கை அவர்களை ஒருவருக்கெதிராக மற்றவரை நிறுத்தும்பொழுது டார்சி அவளது அறிவுக்கூர்மை மற்றும் நகைச்சுவை உணர்வால் கவரப்பட, எலிசபெத் அவன் மீதான தன் உணர்ச்சிகளைக் குறித்து வியக்க துவங்குகிறாள். ஆனால் டார்சி அவளது கடைசி தங்கை லிடியாவை அவதூறிலிருந்துக் காப்பாற்ற, இதுவரை அகம்பாவத்தினால் அவளைக் குறித்து தன் கருத்தில் பாரபட்சமாக இருந்துவிட்டோமோ என்று சிந்தித்தாள்.
போராடும் இரு உள்ளங்களின் கதை இது என்றாலும் பதினெட்டாம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் நிலவிய வாழ்க்கை முறையைப் பற்றிய ஒரு நையாண்டியாக இதனை ஜேன் ஆஸ்டின் நெய்துள்ளார். இரண்டு நூந்தாண்டுகளுக்கு முன்னால் பதிப்பிடப்பட்டாலும் இன்றளவிலும் இது வாசகர்களின் உள்ளங்களை கவர்ந்து வருகிறது.
-
இரண்டாவது தாலி ( Irandavathu Thaali )
Rs. 1,450.00or 3 X Rs.483.33 withRead moreராஜேஷ்குமார்
சுபமதி, செல்லமாக வளரும் பணக்கார வீட்டுப் பெண். அப்பா தொழிலதிபர்.அம்மா இல்லாததால் சுதந்திரம் கொடுத்து பாசமாக வளர்க்கும் அப்பா. பல விஷயங்களில் கண்டிப்பானவர். அதனால் அவளுக்கு அப்பாவிடம் பயம் கலந்த மரியாதை.
ஒரு சமயத்தில் தன் உயிரை காப்பற்றியதால் சுபமதி ,புவனேந்திரன் எனும் இளைஞனிடம் மனதை பறிக் கொடுக்கிறாள். இதற்கிடையில் அவளின் அப்பா தன்னுடனே இருக்கும் அக்கா பையன் சுந்தரத்தை சுபமதிக்கு திருமணம் செய்ய ஆயுத்தம் செய்கிறார்.
காதலன் வீட்டை விட்டு வெளியே வர சொல்கிறான்.அவ்வளவு இலகுவாக அப்பாவிற்கும் சுந்தரத்துக்கும் துரோகம்செய்ய அவளுக்கு மனம் வரவில்லை.
குழப்பத்தில் ஆழ்கிறாள் சுபமதி.ஆனால் அவள் ஒரு முடிவு எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறாள். அந்த முடிவு அவள் வாழ்க்கையை மட்டுமல்ல அவள் சார்ந்தவர்களின் வாழ்க்கையையும் புரட்டிப் போடுகிறது.
கதையில் வரும் வசனங்களும் நிகழ்வுகளும் உங்கள் மனதை வருடவும் செய்யும், நெகிழவும் செய்யும்.
பிறகு, கதைக்கும் தலைப்பிற்கும் என்ன தொடர்பு என்று கேட்கிறீர்களா? அறிய படியுங்கள்,ராஜேஷ்குமாரின் விறுவிறுப்பான நடையில் இரண்டாவது தாலி.
-
சில நேரங்களில் சில மனிதர்கள் ( Sila Nerangalil Sila Manitharkal )
Rs. 2,690.00or 3 X Rs.896.67 withRead moreஜெயகாந்தன்
“சாகித்திய அகாதெமி விருது” பெற்ற சிறந்த நாவல்
இந்த நாவலை எழுதுவதன் மூலம் என்னைப் புதிதாய் ஒரு சோதனையில் நான் ஈடுபடுத்திக் கொண்டேன். காலங்கள் மாறும்போது மனிதர்களும் மாறித்தான் ஆக வேண்டும். மாறிய மனிதர்களைக் காலத்தின் மாற்றமே காண வைக்கிறது. பல மாற்றங்கள் சமுதாய வாழ்வில் புதுமையானைவயாக இருந்தாலும் தனி மனிதர்கள் வாழ்வில் காலங்கடந்த மாற்றங்களாகவே, நிராசைகளின் நிலைத்த சித்திரங்களாகவே உயிரிழந்து வந்து நிற்கின்றன. காலத்தின் அலைகளால் எற்றுண்ட, மோதி மூழ்கிய, போக்கில் மிதந்த, எதிர்த்து ஓய்ந்த ஓர் ஆத்மாவின் கதை இது! ஜெயகாந்தன்.
-
மர்யமா: கிரானடா முக்கதைகள் – 2 ( Maryama )
Rs. 1,450.00Rs. 1,390.00or 3 X Rs.463.33 withAdd to cartறள்வா ஆஷூர்
தமிழில்: முனைவர் பி.எம்.எம். இர்ஃபான்எங்கள் மூதாதையர்கள் ஏதும் குற்றமிழைத்துவிட்டதற்காகவா எங்களை இப்படித் தண்டிக்கிறாய்? அல்லது நல்லவர்களும் கெட்டவர்களுமான மனிதர்கள் தங்கள் இச்சைப்படி நடத்திச் செல்லவா இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்திருக்கிறாய்? அவர்களின் மனேபாவம் இப்படிக் கொடூரமாக இருப்பதைத் தெரிந்திருந்தும் ஏன் அவர்களை விட்டு வைத்திருக்கிறாய்?
– நாவலிலிருந்து…
-
போரும் வாழ்வும் (3 பாகங்கள்) ( Porum Vaazhvum )
Rs. 18,150.00Rs. 16,490.00or 3 X Rs.5,496.67 withRead moreலியோ டால்ஸ்டாய்
தமிழில்: டி.எஸ்.சொக்கலிங்கம்
லியோ டால்ஸ்டாயின் முக்கியமான நாவல்கள் போரும் வாழ்வும் ஒன்று.
போரும் வாழ்வும் ரஷ்யாவின் ”இலியட், ஒடிசி” என்றுபோற்றப்படுகிறது. இந்த மாபெறும் நாவல் வரலாற்று மனிதர்களை நம்முடன் உறவாட வைக்கின்றது.
போரும் வாழ்வும் படிக்கத் தொடங்கியபோது பின்னாட்களில் வெளிவந்த பெரு நாவல் முயற்சிகளுக்கு அது முன்னோடி என்றோ நூற்றைம்பது வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்டது என்றோ எனக்குள் எதுவித எண்ணமும் உருவாகி இருக்கவில்லை. ஆங்கிலப் பிரதியில் சில அத்தியாயங்கள் படித்த பின்பு தமிழில் அந்நூலினை வாசிக்க வேண்டுமென்ற ஆவல் எழுந்தது. டி.எஸ்.சொக்கலிங்கம் அவர்களின் மொழிபெயர்ப்பு சில அத்தியாயங்களிலேயே வாசித்துக் கொண்டிருப்பது ஒரு மொழிபெயர்ப்பு நாவல் என்பதை மறக்கடித்துவிட்டது.
பிரெஞ்சு கலாச்சாரம் வலுவாக ஊடுருவிய ரஷ்ய உயர்குடியை பகடி செய்தவாறே நெப்போலியனுக்கு எதிராக ரஷ்யா நடத்தப் போகும் போருக்கான ஆயத்தங்களுடனும் போரில் கலந்து கொள்ளக் கூடிய உயர் வகுப்பு இளைஞர்களுடனும் அவர்களின் குடும்பங்களுடனும் தொடங்குகிறது. பீயரும் பால்கோன்ஸ்கிகளும் ராஸ்டோவ்களும் குராகின்களும் டோலாகாவும் விருந்துகளின் வழியாகவும் உரையாடல்கள் வழியாகவும் அறிமுகமாகின்றனர். அவர்கள் குறித்த ஒரு சித்திரம் உருவான பின்பு போர் நோக்கி நகர்கிறது.
இரண்டு படைப்பிரிவுகளாக பிரிந்து நின்று சண்டையிடும் வகைப் போர்களையே உருவகப் படுத்தியிருந்த மனதிற்கு டால்ஸ்டாய் அறிமுகம் செய்யும் போர்க்களம் அதிர்ச்சி தரவே செய்கிறது. தளபதியின் கட்டுப்பாட்டில் அனைத்தும் இருப்பதாக நம்பும் ஆண்ட்ரூ யுத்தம் செல்லும் போக்கிற்கு ஏற்றவாறு பாக்ரேஷன் அளிக்கும் உத்தரவுகளை கண்டு ஆச்சரியம் கொள்வதும் இளமைத் துடிப்பில் முன்னேறி காயம்படும் நிக்கலஸ் ஒற்றை பீரங்கிப் படையுடன் எதிர்த்து நிற்கும் டூஷின் வீரத்துடன் சண்டையிட்டு போரின் அன்றைய நாள் முடியும் போது தாங்கள் கைப்பற்றிய பதக்கங்களுடனும் உடுப்புகளுடனும் பதவி உயர்வுக்காக கெஞ்சும் வீரர்கள் என போர் குறித்த ஒவ்வொரு பிம்பத்தையும் சிதறடிக்கிறது முதற் போர்களம்.
மேலும் நடக்காதவற்றை நடந்ததாக நம்பி அதனையே உண்மையாக ஏற்று அதை மேலும் பெருக்கிச் சொல்லுவதையும் நுண்மையாக பகடி செய்கிறது.
சார் மன்னர் அலெக்சாண்டரை ஒரு பரிதாபமான சூழலில் நிக்கலஸ் பார்ப்பதும் மனோகரமான இயற்கைக்கு முன் அதுவரை பேருருவமாக ஆண்ட்ரூ மதித்த நெப்போலியன் சிறுத்துப் போவதும் மனதில் எஞ்சியிருந்த பிம்பங்கள் குறித்த கற்பனையையும் இல்லாமல் ஆக்குகின்றன.
– சுரேஷ் பிரதீப்
-
கடல் புறா (மூன்று பாகங்கள்) ( Kadal Pura – 3 Parts )
Rs. 7,260.00Rs. 6,790.00or 3 X Rs.2,263.33 withAdd to cartசாண்டில்யன்
கலிங்கத்தில் கருணாகர பல்லவன் மேற்கொண்ட சவால்கள், அதனை அநபாய சோழனின் துணையோடு எவ்வாறு முறியடித்தான் என்பதிலிருந்து கதை தொடங்குகிறது. அகூதாவின் உதவியால் கடற்போரின் நுணுக்கங்களை அறிந்து, அகூதாவிடம் பரிசாகப் பெற்ற கப்பலை, தனக்கேற்றவாறு மாற்றி கடல் புறாவை உருவாக்குகிறான்.கடல்புறாவின் உதவியால் கடல் கொள்ளைக்காரர்களிடமிருந்து சோழ நாட்டு வணிகர்களை காப்பாற்றுகிறான். கடல் மோகினித்தீவில் மஞ்சளழகியை சந்திக்கிறான். மஞ்சளழகி அவனிடம் காதல் வயப்படுகிறாள். தன் கடமையை முன்னிட்டும், காஞ்சனாவின் நினைவாலும் மஞ்சளழகியை ஏற்க முடியாமல் விலகுகிறான். ஆனாலும் அவளை மறக்க முடியாமல் வருந்துகிறான்.பின் தற்செயலாக காஞ்சனாவை கடல் கொள்ளைக்காரர்களிடமிருந்து காப்பாற்றுகிறான். ஸ்ரீவிஜயத்தைக் கைப்பற்றி சோழப் புலிக்கொடியை பறக்கவிடுகிறான். போரில் தோற்ற ஜெயவர்மனின் வேண்டுகோளின் பேரில் வீரராஜேந்திரசோழர் மஞ்சளழகியையும் கருணாகர பல்லவனுக்கு மணமுடித்து வைக்கிறார்.
-
கடுந்துயருற்ற காதலர்கள் சதுர சாளரத்திற்கு இறுதி அஞ்சலி செலுத்திவிட்டு முற்றத்திலிருந்து வெளியேறிய போதிலும் ( Kadunthuyaruttra Kadhalarkal Sadhura )
Rs. 450.00Rs. 420.00or 3 X Rs.140.00 withAdd to cartதக்ஷிலா ஸ்வர்ணமாலி
தமிழில்: எம். ரிஷான் ஷெரீப்
இந்தத் தொகுப்பு கவிதையா? ஓவியமா? சிறுகதையா? சிறுகதைகள் பலவும் சேர்ந்தவையா? குறுநாவலா? என்றெல்லாம் யோசிப்பது அநாவசியம் என்றே கருதுகிறேன். இடதுசாரி இயக்கங்களிலிருந்து விலகி குடும்ப ஜீவிதம் நோக்கி பின்வாங்க வேண்டி நேர்ந்த சிலருக்குள்ளே காணப்படும் வாழ்க்கை மீதான அதிருப்தியின் துயரத்தை எனக்கு இவ்வாறாக ஒரு சித்திரமாக வரையத் தேவைப்பட்டது. என்றாலும், நீங்கள் இதை இவ்வாறே பார்க்க வேண்டியதில்லை. இதை வாசிக்கும் போது, இதைப் பார்க்கும் போது இயல்பாகவே எதையேனும் உணர்வோமானால், நாங்கள் அதை அனுபவிப்போம்.
—- தக்ஷிலா ஸ்வர்ணமாலி
-
யவன ராணி (இரண்டு பாகங்கள்) ( Yavana Rani – 2 Parts )
Rs. 5,200.00Rs. 4,990.00or 3 X Rs.1,663.33 withRead moreசாண்டில்யன்
யவன ராணி என்பது தமிழக எழுத்தாளர் சாண்டில்யன் எழுதிய ஒரு வரலாற்றுப் புதினம். 1960களில் குமுதம் வார இதழில் இத்தொடர் வெளிவந்தது. வானதி பதிப்பகத்தாரால் புத்தகமாக வெளியிடப்பட்டது. இந்தக் கதையில் சங்ககாலத்தில் வாழ்ந்த சோழர் வரலாற்றை ஒட்டி கற்பனைகளையும் சேர்த்து கதை எழுதப்பட்டுள்ளது.
கரிகாலன் (திருமாவளவன்) வெண்ணி (கோவில்வெண்ணி தஞ்சை – திருவாரூர் சாலையில் உள்ள ஓர் சிற்றூர்) நகரில் சேர மன்னன் பெருன்சேரலாதனையும், பாண்டியனையும், பன்னிரு வேளிர் ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்த இருங்கோவேள் படையையும் அழித்து மன்னனாக முடி சூடியதை இப்புதினம் விவரிக்கின்றது.
கதையின் நாயகன் சோழ நாட்டின் படைத்தலைவனாக இருந்த இளஞ்செழியன். இளஞ்செழியன் தன் முறைப்பெண் பூவழகியின் மீது கொண்ட காதலையும், யவன ராணி (கிரேக்க ராணி) இளஞ்செழியன் மீது கொண்ட மாசறு காதலையும் விவரிகின்றது. தமிழகத்தில் (பூம்புகார் நகரில்) தமிழருக்கு யவனர்கள் சேவகம் செய்து வந்ததையும், பூம்புகாரின் சிறப்பையும், கடல் வாணிபத்தில் தமிழர் பங்கையும், இப்லாஸ் என்ற யவனன் இளஞ்செழியன் மீது கொண்ட விசுவாசத்தையும், டைபிரியஸ் என்ற யவன கடற்படைத் தலைவன் போர் திறமைகளையும் இப்புதினம் விவரிக்கின்றது.
-
முறிந்த பாலம் ( Murintha Paazham )
Rs. 1,050.00or 3 X Rs.350.00 withRead moreதோர்ன்டன் ஒயில்டர்
தமிழில்: இரா. நடராசன்
தான்டர்ன் ஒயில்டரின் முறிந்த பாலம் நாவல் கடவுளுக்கும் மனிதனுக்குமான உறவையும், வாழ்வின் புதிர்தன்மையையும் விவரிக்கிறது. 1927ம் ஆண்டு வெளியான இந்த நாவல் இன்று வரை வாசகர்களால் தொடர்ந்து கொண்டாடப்பட்டு வரும் படைப்பாகவுள்ளது. இந்த நூற்றாண்டின் சிறந்த 100 நாவல்களில் ஒன்றாகப் பலராலும் பட்டியலிடப்பட்ட முறிந்த பாலம் நாவல் உண்மைச் சம்பவம் ஒன்றை அடிப்படையாகக் கொண்டது. பெரு நாட்டில் உள்ள செயிண்ட் லூயிஸ் ரே பாலம் 1714 ஆண்டு அறுந்து விழுந்தது. இதனால் ஐந்து பேர் இறந்து போனார்கள். அந்த நிகழ்வையே நாவல் மையமாக் கொண்டு மனித வாழ்வு குறித்த ஆழமான விசாரணையை மேற்கொள்கிறது.
Reviews
There are no reviews yet.