Opening Possibilities, Illuminating Potentials
Delivery in 1-5 business days. Island-wide Free Delivery for Purchase of Rs. 3990 or above.

Cart

Your Cart is Empty

Back To Shop
Contact Us 0764980321

கடைசி முகலாயன்: ஓர் அரசகுலத்தின் வீழ்ச்சி, டெல்லி, 1857 / Kadaisi Mugalayan / The Last Mughal Tamil

Rs. 5,490.00

or 3 installments of Rs.1,830.00 with

வில்லியம் டேல்ரிம்பிள்

தமிழில்: இரா.செந்தில்

 

‘மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய முக்கியமான புத்தகம்.’ -டயானா ஆட்டில், கார்டியன் புக்ஸ் ஆஃப் தி இயர்

 

‘டேல்ரிம்பிள் நம் காலத்தின் மிகச்சிறந்த வரலாற்று ஆசிரியர்களுள் ஒருவர். இந்தப் புத்தகம் இதுவரை அவர் எழுதியதிலேயே சிறந்த புத்தகமாக இருக்கும்.’ -ஏஷியன் ஏஜ்

 

‘டெல்லி கைப்பற்றப்பட்டு வீழ்ச்சியுற்ற கதையை அரிதான மனிதநேயத்துடன் விவரிக்கிறார் டேல்ரிம்பிள், இந்தப் பேரார்வம் எல்லோரையும் தொற்றிக்கொள்ளக்கூடியது. உரைநடையில் அது மிக அழகானதாக, தடுமாற்றமில்லாமல், தங்குதடையின்றி நிரம்பி வழிகிறது.’ -தி ஹிந்து

 

அரசர் பேச ஆரம்பித்தார். ‘நீங்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை பிள்ளைகளே!

 

கேளுங்கள்!

 

இந்த அழிவை நான் கொண்டுவரவில்லை. எனக்கு செல்வங்களோ சொத்துக்களோ இல்லை. நிலமும் இல்லை, பேரரசும் இல்லை. நான் எப்போதுமே ஒரு பிச்சைக்காரன். ஒரு மூலையில் அமர்ந்துகொண்டு இறைவனைத் தேடிக்கொண்டிருக்கும் சூஃபி. என்னைச்சுற்றி சிலர் இருப்பதால் எனக்கான தினசரி ரொட்டியை நான் சாப்பிடுகிறேன். ஆனால் இப்போது மீரட்டில் பற்றவைக்கப்பட்ட ஒரு மாபெரும் தீநாக்கு அந்த ரொட்டியையும் விழுங்கிக் கொண்டிருக்கிறது. அது டெல்லியின் மீது விழுந்து இந்த மகத்தான நகரத்தை பற்றவைத்துவிட்டது.

 

இப்போது நானும் என்னுடைய வம்சாவளியும் அழிந்துபோக இருக்கிறோம். மகத்தான தைமூரிய [முகலாயர்கள்] பேரரசர்களுக்கு உண்டான பெயர் இப்போதும் உயிர்த்திருக்கிறது, ஆனால் விரைவில் அந்தப் பெயரும் முற்றாக அழிக்கப்பட்டு மறக்கப்பட்டுவிடும்.

Out of stock

Notify me when stock available

About the author

வில்லியம் தால்ரிம்பில் (William Dalrymple 20 மார்ச்சு 1965 ) என்பவர் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த வரலாற்றாளர், எழுத்தாளர், திறனாய்வாளர், மற்றும் ஒலிபரப்பாளர் ஆவார். இவருடைய படைப்பாக்கங்களுக்காக பல விருதுகளும் பரிசுகளும் இவருக்குக் கிடைத்தன.

டப் கூப்பர் நினைவுப் பரிசு, தாமஸ் குக் பயணப் புத்தக விருது, சண்டே டைம்ஸ் பிரிட்டிசு இளம் எழுத்தாளர் விருது முதலிய பரிசுகளையும் விருதுகளையும் பெற்றார்.

ஜெய்ப்பூர் இலக்கியத் திருவிழா கொண்டாடும் அமைப்பில் இவர் முக்கியப் பங்காற்றுகிற இயக்குனராக உள்ளார்.

 

Book Specifications

Binding: Paperback

Pages: 760

Published Year: 2017

Publisher: எதிர் வெளியீடு

ISBN: 9788193395523

Reviews

There are no reviews yet.

Be the first to review “கடைசி முகலாயன்: ஓர் அரசகுலத்தின் வீழ்ச்சி, டெல்லி, 1857 / Kadaisi Mugalayan / The Last Mughal Tamil”

Your email address will not be published. Required fields are marked *