Opening Possibilities, Illuminating Potentials
Delivery in 1-5 business days. Island-wide Free Delivery for Purchase of Rs. 3990 or above.

Cart

Your Cart is Empty

Back To Shop
Contact Us 0764980321
Sale!

வீரர்களின் வரலாற்று தொகுப்பு / Veerarhalin Varalatru Thohuppu

Original price was: Rs. 6,480.00.Current price is: Rs. 5,832.00.

எஸ். எல். வி. மூர்த்தி

 

நெப்போலியன்: சாமானியன் சக்ரவர்த்தியான சாதனைச் சரித்திரம்

 

சாதாரணன் – சிப்பாய் – தளபதி – மன்னன் – சக்கரவர்த்தி – கைதி. மாவீரன் நெப்போலியனின் வாழ்க்கையை இப்படி ஆறே வார்த்தைகளில் சுருங்கச் சொல்லிவிடலாம். ஆனால், இந்த ஆறு வார்த்தைகளுக்குப் பின்னால் புதைந்து கிடக்கும் பேருண்மைகள் அதி ஆழமானவை, மிக அழுத்தமானவை. பால்ய காலத்தில் வறுமையைச் சுவைத்து, வெளியில் சொல்ல முடியாத அவலங்களை விழுங்கி, வளர்ந்த எந்த ஒரு மனிதனும் விதியின் புதைகுழியில் சிக்கி முகவரியே இல்லாமல் போயிருப்பான். ஆனால், தன்னம்பிக்கையின் முகவரியாகத் துளிர்த்து, தழைத்து, விழுதுவிட்டு வளர்ந்து நின்றவன் நெப்போலியன். எதிர்வந்த சிரமங்கள் எப்பேர்ப்பட்டதெனினும் அவற்றை ரோமங்களாகக் கருதி ஊதித் தள்ளும் மனோதிடம் இந்த மாவீரனின் தனிச்சிறப்பு. அந்த மனோதிடமும் தன்னம்பிக்கையும் நெப்போலியனுக்குள் நிலைபெற்றது எப்படி என்பதை நுணுக்கமாகப் படம் பிடித்திருப்பது இந்நூலின் தனிச்சிறப்பு.

 

மாணவனாக இருந்தபோதே மனத்தளவில் போரிட்டுப் பழகியவன், வெறும் சிப்பாயாகத் தடம் பதித்தபோதே தலைமைத் தளபதிக்கு இணையாக இயங்கியவன், தளபதியாக உயர்ந்தபோதே சக்கரவர்த்தி சிம்மாசனத்தை நோக்கி வீரத்துடன் நகர்ந்தவன் – நெப்போலியன் எப்போதும் வருங்காலத்தை நிகழ்காலத்தில் வாழ்ந்து பார்த்தவன். இவன், மெய்யான மாவீரன் மட்டுமல்ல, கூர்த்த மதிகொண்ட அரசியல்வாதி; நேர்த்தியான நிர்வாகி; கிடைக்கும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு முன்னேறிச் செல்வதில் நிகரற்றவன்! யுத்தத்தைக் காதலிக்கும் நெப்போலியனுக்குள் புதைந்துகிடக்கும் பெண்பித்தன் எப்போது வேண்டுமானாலும் விழித்தெழுவான். இந்நூலில் எஸ்.எல்.வி. மூர்த்தியின் ‘குதிரைப் பாய்ச்சல் மொழி’, வெறும் போர்கள் வழியே நெப்போலியனின் வீர பிம்பத்தைக் கட்டமைக்காமல், ஒரு சாமானியனின் மகன், படிப்படியாக பிரான்ஸின் சக்கரவர்த்தியாகப் உருவெடுத்த பிரமாண்டத்தைத் தத்ரூபமாக விவரிக்கிறது. உலகம் போற்றும் ஒப்பற்ற மாவீரனை அங்குலம் அங்குலமாகத் தரிசிக்கும் பேரனுபவத்துக்குத் தயாராகுங்கள்!

 

செங்கிஸ்கான் 

 

செங்கிஸ்கான் பிறந்தபோது மங்கோலியா என்ற தேசமே கிடையாது.நாடோடிகளாக – ஐம்பதுக்கும் அதிகமான இனங்களாகச் சிதறிக்கிடந்த மங்கோலிய மக்களை ஒன்று சேர்த்து , பூஜ்யத்திலிருந்து மாபெரும் சாம்ராஜ்யத்தை அவர் உருவாக்கினார். தலைமுறை தலைமுறைகளாக வீடே இல்லாமல், வயிற்றுப் பிழைப்புக்காக ஊர் ஊராக அலைந்த நாடோடி. சாப்பாட்டுக்கே வழியில்லாமல் எலிகளையும், அணில்களையும், நாய்களையும் வேட்டையாடித் தின்றவர். கீழ்ஜாதி என்று முத்திரை குத்தப்பட்டவர் பரந்து விரிந்த ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தின் அதிபரானார்.

 

போர்களின்போது செங்கிஸ்கான் கொன்று குவித்தவர்களின் எண்ணிக்கை நான்கு கோடியைத் தாண்டும். காட்டு மிராண்டி , ரத்தக் காட்டேரி என்று பல சரித்திர மேதைகளால் சித்தரிக்கப்பட்ட அதேவேளையில், மங்கோலியர்கள் செங்கிஸ்கானைத் தங்கள் தேசத்தந்தையாக, பொன்மனச்செம்மலாக, கடவுளாக இன்றும் மதிக்கிறார்கள்.

 

பெண்மையை மதித்த – சாதி வேற்றுமைகளை வெறுத்த இவர் கொண்டுவந்த சில நியமங்கள் பதின்மூன்றாம் நூற்றாண்டில் இத்தகைய புரட்சி சிந்தனைகள் எப்படி இவர் மனதில் உருவாகின என்னும் பிரமிப்பை ஏற்படுத்துபவை.

 

எதிரிகளை துவம்சம் செய்ய அவர் காட்டியது ரத்தவெறி பிடித்த ஓநாய் முகத்தை. குடிமக்களுக்கு நல்லது செய்யக் காட்டியது மருள்விழி மானின் சாந்த சொரூபத்தை. இருதுருவங்களான ஓநாயும் மானும் ஒரே மனித நெஞ்சிற்குள் குடியிருக்க முடியுமா? முடிந்திருக்கிறதே! சாத்தியப்படுத்தியிருக்கிறாரே இந்த மனிதர்!

 

உலக வரலாறு சில பார்வைகள் (Glimpses of world history) என்ற தனது நூலில் நேருகூட வரலாற்றிலேயே மாபெரும் இராணுவத் தளபதி செங்கிஸ்கான்தான். அலெக்சாண்டரும் சீசரும் இவர் முன்னால் கத்துக்குட்டிகள் என்றாரே.

 

அது எதனால்?

 

பதில் காண படியுங்கள்!

Original price was: Rs. 2,190.00.Current price is: Rs. 1,971.00.
Original price was: Rs. 4,290.00.Current price is: Rs. 3,861.00.

Only 0 left in stock

or 3 X Rs. 1,584.00 with Koko Koko

About the author

எஸ்.எல்.வி. மூர்த்தி (பிறப்பு: ஆகஸ்ட் 18 1945) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். சென்னையில் வசித்து வருகிறார். தமிழ் நாளிதழ்களில் ஐம்பதுக்கும் மேற்பட்ட கதை, கட்டுரைகளை எழுதியிருக்கிறார். வெற்றிக்கு வித்திடும் ஆசிரியர்களே, வெற்றிக்கு விரைந்திடு, சவாலே சமாளி போன்ற கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறார்.

இவர் எழுதிய “தொழில் முனைவோர் கையேடு” எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் பொருளியல், வணிகவியல், மேலாண்மையியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

 

Book Specifications

Title: நெப்போலியன்
Binding: Paperback
Pages: 416
Published Year: 2014
Publisher: Sixth sense Publications
ISBN: 9789383067251

 

Title: செங்கிஸ்கான்
Binding: Paperback
Pages: 232
Published Year: 2018
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
ISBN: 97893880066002

Reviews

There are no reviews yet.

Be the first to review “வீரர்களின் வரலாற்று தொகுப்பு / Veerarhalin Varalatru Thohuppu”

Your email address will not be published. Required fields are marked *