Opening Possibilities, Illuminating Potentials
Delivery in 1-5 business days. Island-wide Free Delivery for Purchase of Rs. 3990 or above.

Cart

Your Cart is Empty

Back To Shop
Contact Us 0764980321
Sale!

பணக்கார மனம், பணக்கார வாழ்க்கை தொகுப்பு : பணக்காரத் தந்தை ஏழைத் தந்தை & பணம்சார் உளவியல் தொகுப்பு / Panakara Manam, Panakara Vazkai Thogupu

Original price was: Rs. 6,180.00.Current price is: Rs. 5,870.00.

ராபர்ட் கியோஸாகி, மார்கன் ஹெளஸ்ஸேல்

 

பணக்காரத் தந்தை ஏழைத் தந்தை

 

கியோஸாகி, ஹவாயில் வளர்ந்த விதம் மற்றும் கல்வி பெற்றுக் கொண்ட தன்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே இந்தப் புத்தகம் பேசுகிறது. இரண்டு வேறுபட்ட வாழ்க்கைப் பின்னணிகளைக் கொண்ட மனிதர்கள் பணம், வாழ்க்கை, வேலை என்ற விடயங்களை கையாண்ட முறைகளும் அந்த முறைகள் கியோசாகியின் வாழ்க்கையின் முக்கியமான தீர்மானங்களை எடுப்பதில் எவ்வாறு ஆதிக்கம் செலுத்தின என்பவற்றை விபரமாக இந்நூல் விபரிக்கிறது.

 

பணம்சார் உளவியல்

 

பணத்தைச் சிறப்பாகக் கையாள்வது என்பது, நீங்கள் எவ்வளவு அறிந்திருக்கிறீர்கள் என்பதை மட்டுமே பொறுத்து அமைந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அது, நீங்கள் எப்படி நடந்துகொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. அத்தகைய குணாதிசயத்தைக் கற்றுத்தருவது என்பது, மிகுந்த அறிவாளிகளுக்கே அரிதான செயல்.

 

“மார்கன் ஹௌஸ்ஸேல் போல் ஒருசிலரால் மட்டுமே, பொருளாதாரம் குறித்த இத்தகைய தெளிவைத் தரவியலும்.” — டேனியல் எச். பிங்க், “நியூயார்க் டைம்ஸ்’ -ஆல் மிக அதிக அளவில் விற்கப்படும் நூல் என்று குறிப்பிடப்பட்ட, ‘வென், டு செல் இஸ் யூமன், and டிரைவ்’ என்ற நூலின் ஆசிரியர்

 

“ஹௌஸ்ஸேல்-இன் கணிப்புகள் குறைந்தது இருமுறைகளாவது தினம் நிகழும்; அதற்கு முன்னர் குறிப்பிடப்படாதவற்றை அவை கோடிட்டுக்காட்டும். அவை ஒத்துக்கொள்ளக் கூடியனவாகவும் இருக்கும்.” –ஹோவர்ட் மார்க்ஸ், இணை நிறுவனர், இணை-மேலாளர், ஓக்டிரீ கேப்பிடல் மேனேஜ்மென்ட்

 

“மிகவும் சிக்கலான தத்துவங்களை. ஈர்க்கக்கூடிய வகையிலும், எளிதாகப் புரிந்துகொள்ளக்கூடிய விதத்திலும் சொல்லக்கூடிய எழுத்தாளர்.” –– ஆனி டியூக், ‘திங்கிங் இன் பெட்” என்ற நூலின் ஆசிரியர்

 

பணத்தின் மேலாண்மையை, எப்படிக் கைக்குள் கொள்வது, எப்படி முதலிடுவது, எப்படி வணிக முடிவுகளை எடுப்பது போன்ற செயல்கள் பெரும்பாலும் கணக்கீடுகளின் மூலமாகச் செய்யப்படும் செயல்களாகும். அதற்கு உதவியாக, நாம் எப்படியெல்லாம் கையாள வேண்டும் என்று எடுத்துக்கூற, பல்வேறு சூத்திரங்களும் உள்ளன. ஆனால், உண்மையில், மக்கள் பொருளாதாரம் குறித்த அத்தகைய முடிவுகளை, வெறும் கணக்கீடுகளைக் கொண்டு எடுப்பது இல்லை. பொதுவாக, இரவு உணவை உண்ணும் நேரத்திலோ, நிறுவனங்களில் நடக்கும் கூட்டங்களின் மத்தியிலே அவர்கள் அத்தகைய முடிவுகளை எடுக்கின்றனர். அத்தகைய நிலையில், தங்கள் சொந்த அனுபவங்கள், உலகு குறித்த தங்கள் தனிப்பார்வை, கர்வம், தானெனும் அகம்பாவம், சந்தையாக்கத் திட்டங்கள், கிடைக்கப்போகும் சில சலுகைகள் இவை யாவும் எடுக்கும் அந்த முடிவுக்கான காரணிகளாக அமைகின்றன.

 

“பணம்சார் உளவியல்” என்னும் இந்நூலில், ஆசிரியர், பல்வேறு மக்கள், எப்படியெல்லாம் வித்தியாசமான முறைகளில் பணம் குறித்து யோசிக்கிறார்கள் என்பதை, 19 கதைகளின் மூலம் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். மேலும் ஒரு மனிதனுக்கு, வாழ்க்கையில் மிக முக்கியமான முடிவுகளைக் குறித்து எப்படியான புரிதல் இருத்தல் அவசியம் என்பதையும் தெளிவுபடுத்துகிறார்.

Out of stock

Notify me when stock available

Book Specifications

Title: பணக்காரத் தந்தை ஏழைத் தந்தை
Binding: Paperback
Pages: 248
Published Year: 2013
Publisher: Manjul Publishing House
ISBN: 978-81-8322-375-1

Title: பணம்சார் உளவியல்
Binding: Paperback
Pages: 280
Published Year: 2021
Publisher: Jaico Publishing House
ISBN: 978-9391019198

Reviews

There are no reviews yet.

Be the first to review “பணக்கார மனம், பணக்கார வாழ்க்கை தொகுப்பு : பணக்காரத் தந்தை ஏழைத் தந்தை & பணம்சார் உளவியல் தொகுப்பு / Panakara Manam, Panakara Vazkai Thogupu”

Your email address will not be published. Required fields are marked *