Opening Possibilities, Illuminating Potentials
Delivery in 1-5 business days. Island-wide Free Delivery for Purchase of Rs. 3990 or above.

Cart

Your Cart is Empty

Back To Shop
Contact Us 0764980321

டேவிட்டும் கோலியாத்தும் / Davidum Koliyathum

Rs. 1,990.00

or 3 installments of Rs.663.33 with

மால்கம் க்ளேட்வெல்

 

கிட்டத்திட்ட மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக புராதன பாலஸ்தீனத்தில் ஆடு மேய்க்கும் சிறுவனான டேவிட் பெரிய உருவத்தைக் கொண்ட பராக்கிரமசாலியான கோலியாத்தை கவணின் உதவிகொண்டு அடித்து கீழே சாய்த்தான் என்பது வரலாறு. அந்தக் காலத்திலிருந்து இன்றுவரை பலவீ னமானவருக்கும் பலமானவருக்குமான பிரச்சினை, போட்டி என்றால் டேவிட், கோலியாத்தைத்தான் நாம் உதாரணமாகச் சுட்டிக் காட்டிக் கொண்டிருக்கிறோம்.

டேவிட்டின் வெற்றியை நாம் சாத்தியமற்றது, அதிசயமானது எனக் கூறி வருகிறோம்.

 

டேவிட்டும் கோலியாத்தும் என்கிற இந்தப் புத்தகத்தில் மால்கம் க்ளாட்வெல் நாம் எதையெல்லாம் வளர்ச்சிக்குத் தடையானது , சாத்தியமற்றது என நினைத்துக் கொண்டிருக்கிறோமோ அதற்கெல்லாம் சவால் விடுகிறார்.”பாரபட்சம் அல்லது உடல் அளவில் இயலாமை அல்லது பெற்றோரில் ஒருவரை இழந்து நிற்பது அல்லது சாதாரண பள்ளிக்கூடத்தில் படிப்பது அல்லது ஏதேனும் ஒன்றில் பின் தங்கியிருப்பது”-இப்படிப்பட்ட பிரச்சினைகள் கொண்டவர்கள் அதை எதிர்கொண்டு வெற்றி பெற முடியுமா?

 

இந்த மாதிரியான தடைகள் இருந்தால் எதையும் சாதிக்கமுடியாது என நாம் வழக்கமாக நினைப்பதுண்டு.ஆனால் இந்தத் தடைகளுக்கும், சாத்தியமற்றவைகளுக்கும் புதிய விளக்கம் கொடுக்கிறார் மால்கம்.

 

பல ஆண்டுகளுக்கு முன்பு டேவிட் என்ற ஆடு மேய்க்கும் சிறுவனுக்கும், பராக்கிரமசாலியான கோலியாத்துக்கும் என்ன நடந்தது என்கிற ஓர் உண்மைக்கதையோடு இந்தப் புத்தகம் ஆரம்பிக்கிறது. அதிலிருந்து வட அயர்லாந்து, ‘ட்ரபிள்ஸ்’ என அழைக்கப்பட்ட இன தேசியவாத மோதல், புற்றுநோய் ஆய்வாளர்களின் மனநிலை,சமூக உரிமை செயல்பாட்டாளர்கள்,கொலை, அதற்கு பதிலாக பழி தீர்த்தல், வெற்றி பெற்ற/வெற்றி பெறாத வகுப்பறைகளின் இயக்கவியல் எனப் பல தளங்களுக்குப் பயணித்து நாம் எவஎல்லாம் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கின்றன என நினைக்கிறோமோ அவையெல்லாம் எப்படி வெற்றிக்கு உதவுகின்றன என்பதை பல்வேறு ஆய்வுகளின் துணையுடன் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

 

இவருடைய முந்தையப் புத்தகங்கள் போல – TIPPING POINT, BLINK, OUTLIERS, WHAT THE DOG SAW-டேவிட்டிலும் கோலியாத்திலும் நம்மைச் சுற்றியிருக்கும் உலகத்தில் நடப்பதை வழக்கத்திற்கு மாறாக அவதானித்து ஒரு மாற்றுச் சிந்தனையை வரலாறு, உளவியல், சமூகவியல் துறைகளில் செய்யப்பட ஆய்வுகளின் அடிப்படையில் நமக்குத் தந்திருக்கிறார்.

 

வாருங்கள் நாமும் பயணிப்போம்!!

Out of stock

Notify me when stock available

About the author

மால்கம் கிளாட்வெல் (Malcolm Timothy Gladwell 3 செப்டம்பர் 1963) கனடாவைச் சேர்ந்த ஆங்கில எழுத்தாளர், இதழாளர், நூலாசிரியர், மற்றும் பேச்சாளர் ஆவார். 1996 முதல் தி நியூ யார்க்கர் என்ற ஆங்கில செய்தித்தாளில் பணியாற்றும் எழுத்தாளராக இருந்து வருகிறார். ஐந்து நூல்களை எழுதியுள்ளார்.

 

Book Specifications

Binding: Paperback
Pages: 352
Published Year: 2016
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
ISBN: 9789383067657

Reviews

There are no reviews yet.

Be the first to review “டேவிட்டும் கோலியாத்தும் / Davidum Koliyathum”

Your email address will not be published. Required fields are marked *