Opening Possibilities, Illuminating Potentials
Delivery in 1-5 business days. Island-wide Free Delivery for Purchase of Rs. 3990 or above.

Cart

Your Cart is Empty

Back To Shop
Contact Us 0764980321

இந்தியாவின் இருண்ட காலம் / Indiavin Irunda Kaalam

Rs. 3,300.00

or 3 installments of Rs.1,100.00 with

சசி தரூர்

தமிழில்: ஜே.கே.இராஜசேகரன்

 

பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தின்மூலம் இந்தியாவுக்குக் கிடைத்துள்ள நன்மைகளை வியந்தோதும் நூல்கள் நம்மிடம் ஏராளம் உள்ளன. அவற்றில் பலவற்றை இந்தியர்களே எழுதியும் இருக்கிறார்கள். ஆனால் காலனியாதிக்கம் இந்தியாவை எப்படிச் சீரழித்தது என்பதையும் எப்படி இந்தத் தேசத்தைப் பின்னோக்கி இழுத்துச்சென்றது என்பதையும் விரிவாக அறிமுகப்படுத்தும் நூல்கள் அரிதாகவே எழுதப்பட்டுள்ளன.

சசி தரூரின் இந்தப் புத்தகம் அந்தக் குறையைத் தீர்த்துவைத்திருக்கிறது.

 

ஏராளமான வரலாற்றுத் தரவுகளையும் நியாயமான வாதங் களையும் முன்வைத்து எழுதப்பட்டிருக்கும் இந்நூல் பிரிட்டிஷ் காலனியாதிக்கம் இந்தியாவின் இருண்ட காலம்தான் என்பதைச் சந்தேகத்துக்கு இடமின்றி நிறுவுகிறது. தவிரவும், காலம் காலமாகச் சொல்லப்பட்டுவரும் பல கற்பிதங்களையும் தகர்த்தெறிகிறது.

 

பின்தங்கியிருந்த இந்தியாவுக்கு நாகரிகத்தை அறிமுகப்படுத்தியது பிரிட்டிஷ் பேரரசுதான் என்பதையும் ஆங்கில மொழி, ரயில்வே, நாடாளுமன்ற ஜனநாயகம், சுதந்தர ஊடகம் ஆகியவற்றை இந்தியர்களின் நலனுக்காகவே பிரிட்டன் அறிமுகப்படுத்தியது என்பதையும் தரூர் ஏற்கமறுக்கிறார். பிரிட்டிஷார் இந்தியாவுக்கு இழைத்த அநீதியைத் தகுந்த சான்றாதாரங்களுடன் அம்பலப்படுத்தும் இந்நூலை ஒவ்வொரு இந்தியரும் வாசிக்கவேண்டியது அவசியம்.

 

நம் கடந்த காலம் குறித்த பிழையான அல்லது குறையான புரிதலைக் களைய உதவும் ஒரு முக்கியமான ஆவணம் இது.

Out of stock

Notify me when stock available

About the author

சசி தரூர் (மலையாளம்: ശശി തരൂര്‍) (பிறப்பு 9 மார்ச் 1956) இந்தியாவின் முன்னாள் மனிதவள மேன்பாட்டுத் துறை அமைச்சரும், முன்னாள் வெளியுறவுத்துறை இணையமைச்சரும் மற்றும் கேரளாவின் திருவனந்தபுரம் மக்களவை தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினரும் ஆவார்.

இவர் எழுத்தாளர், பத்தியாளர், தாளியலாளர், மனித உரிமை வழக்கறிஞர் என பன்முகப்பட்டவர்.

 

Book Specifications

Binding: Paperback
Pages: 383
Published Year: 2018
Publisher: கிழக்கு பதிப்பகம்
ISBN: 9788184938845

Reviews

There are no reviews yet.

Be the first to review “இந்தியாவின் இருண்ட காலம் / Indiavin Irunda Kaalam”

Your email address will not be published. Required fields are marked *