Opening Possibilities, Illuminating Potentials
Delivery in 1-5 business days. Island-wide Free Delivery for Purchase of Rs. 3990 or above.

Cart

Your Cart is Empty

Back To Shop
Contact Us 0764980321

Category: சுயமுன்னேற்றம்

Showing 181–192 of 192 results

  • Out of Stock

    மேனேஜ்மெண்ட் குரு கம்பன்

    Rs. 1,390.00
    or 3 X Rs.463.33 with

    சோம வள்ளியப்பன்

     

    “கம்ப ராமாயணம் என்பது பக்தி இலக்கியமோ தமிழ்க் காவியமோ மட்டுமல்ல. அள்ள அள்ளக் குறையாத பெரும் செல்வக் குவியல்களைக் கொண்ட பேரதிசயம் அது. அறிவியல், அரசியல், சமூகவியல் என்று தொடங்கி இன்று நாம் நவீனம் என்று கருதும் பல துறைகளுக்கான ஆரம்ப வித்துகளை கம்பர் அன்றே விதைத்துவிட்டுச் சென்றிருக்கிறார். சோம. வள்ளியப்பனின் இந்நூல் கம்ப ராமாயணத்தில் புதைந்து கிடக்கும் மேலாண்மைச் சிந்தனைகளை அகழ்வாய்ந்து நம்மோடு பகிர்ந்து கொள்கிறது.

    நமக்கான இலக்குகளை எவ்வாறு நிர்ணயித்துக்கொள்வது, அவற்றை நோக்கி எவ்வாறு பயணம் செய்வது, பயணம் செய்வதற்குத் தகுந்த பயிற்சிகளை எங்கிருந்து பெறுவது என்று தொடங்கி தனி நபர்களுக்கும் மேலாளர்களுக்கும் தொழில்முனைவோருக்கும் பல ஆழமான, அற்புதமான ஆலோசனைகளை இந்நூல் நமக்கு அளிக்கிறது. நவீன நிர்வாகவியல் கோட்பாடுகளை கம்பனின் வரிகளோடு மிகப் பொருத்தமாக இணைத்து ஒரு ரசவாதத்தை சோம. வள்ளியப்பன் இந்நூலில் நிகழ்த்திக்காட்டியிருக்கிறார். மேலாண்மையும் இலக்கியமும், பழமையும் புதுமையும், இலக்கிய நயமும் நவீன உத்திகளும் இந்நூலில் ஒன்றிணைகின்றன. ஒவ்வொரு தமிழரும் படித்து பெருமை கொள்ளவேண்டிய நூல்.”

    or 3 X Rs. 463.33 with Koko Koko
    Read more
  • Out of Stock

    நேரத்தை உரமாக்கு

    Rs. 1,090.00
    or 3 X Rs.363.33 with

    சோம. வள்ளியப்பன்

     

    திறமை இருக்கிறது. சாதிக்கவேண்டும் என்னும் முனைப்பு இருக்கிறது. கனவுகளும் நிறையவே இருக்கின்றன. ஒரே சிக்கல், நேரம் மடடும்தான். எல்லாவற்றையும் எப்படி குறுகிய காலத்துக்குள் செய்துமுடிக்க முடியும்? வளர்ந்து வரும் போட்டிகளைச் சமாளித்து, எல்லாத் தடைகளையும் மீறி நம் கனவைச் சாதித்து முடிக்கும்வரை காலம் காத்திருக்குமா என்ன? இருபத்து நான்கு மணி நேரத்தை வைத்துக்கொண்டு பெரிதாக என்ன செய்துவிடமுடியும் என்று நினைக்கிறீர்களா? இதுதான் உங்கள் கவலை என்றால் இந்தப் புத்தகம் உங்கள் கவலைக்கான தீர்வு.

    படிப்பு, தகுதி, செல்வம், புகழ், திறமை உள்ளிட்ட பண்புகள் நபருக்கு நபர் மாறுபட்டாலும் காலம் அனைவருக்கும் பொதுவானதுதான். அதை எப்படிப் பயன்படுத்துவது அல்லது வீணடிப்பது என்பதில் மட்டும்தான் வேறுபாடு இருக்கிறது. சாதனையாளர்களுக்கும் தோல்வியாளர்களுக்குமான வேறுபாடு என்பது இதுதான்.

    சோம. வள்ளியப்பன் எழுதிய புகழ்பெற்ற நூலான, ‘காலம் உங்கள் காலடியில்’ புத்தகத்தின் இரண்டாம் பாகம் இது. நேர மேலாண்மையைச் சுவையாகவும் தகுந்த உதாரணங்களுடனும் கற்றுத் தரும் இந்நூல், மாணவர்கள் முதல் மேனேஜர்கள் வரை அனைவருக்கும் பயனளிக்கக்கூடியது.

    or 3 X Rs. 363.33 with Koko Koko
    Read more
  • Sale!
    Out of Stock

    பணக்கார மனம், பணக்கார வாழ்க்கை தொகுப்பு : பணக்காரத் தந்தை ஏழைத் தந்தை & பணம்சார் உளவியல் தொகுப்பு / Panakara Manam, Panakara Vazkai Thogupu

    Original price was: Rs. 6,180.00.Current price is: Rs. 5,870.00.

    ராபர்ட் கியோஸாகி, மார்கன் ஹெளஸ்ஸேல்

     

    பணக்காரத் தந்தை ஏழைத் தந்தை

     

    கியோஸாகி, ஹவாயில் வளர்ந்த விதம் மற்றும் கல்வி பெற்றுக் கொண்ட தன்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே இந்தப் புத்தகம் பேசுகிறது. இரண்டு வேறுபட்ட வாழ்க்கைப் பின்னணிகளைக் கொண்ட மனிதர்கள் பணம், வாழ்க்கை, வேலை என்ற விடயங்களை கையாண்ட முறைகளும் அந்த முறைகள் கியோசாகியின் வாழ்க்கையின் முக்கியமான தீர்மானங்களை எடுப்பதில் எவ்வாறு ஆதிக்கம் செலுத்தின என்பவற்றை விபரமாக இந்நூல் விபரிக்கிறது.

     

    பணம்சார் உளவியல்

     

    பணத்தைச் சிறப்பாகக் கையாள்வது என்பது, நீங்கள் எவ்வளவு அறிந்திருக்கிறீர்கள் என்பதை மட்டுமே பொறுத்து அமைந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அது, நீங்கள் எப்படி நடந்துகொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. அத்தகைய குணாதிசயத்தைக் கற்றுத்தருவது என்பது, மிகுந்த அறிவாளிகளுக்கே அரிதான செயல்.

     

    “மார்கன் ஹௌஸ்ஸேல் போல் ஒருசிலரால் மட்டுமே, பொருளாதாரம் குறித்த இத்தகைய தெளிவைத் தரவியலும்.” — டேனியல் எச். பிங்க், “நியூயார்க் டைம்ஸ்’ -ஆல் மிக அதிக அளவில் விற்கப்படும் நூல் என்று குறிப்பிடப்பட்ட, ‘வென், டு செல் இஸ் யூமன், and டிரைவ்’ என்ற நூலின் ஆசிரியர்

     

    “ஹௌஸ்ஸேல்-இன் கணிப்புகள் குறைந்தது இருமுறைகளாவது தினம் நிகழும்; அதற்கு முன்னர் குறிப்பிடப்படாதவற்றை அவை கோடிட்டுக்காட்டும். அவை ஒத்துக்கொள்ளக் கூடியனவாகவும் இருக்கும்.” –ஹோவர்ட் மார்க்ஸ், இணை நிறுவனர், இணை-மேலாளர், ஓக்டிரீ கேப்பிடல் மேனேஜ்மென்ட்

     

    “மிகவும் சிக்கலான தத்துவங்களை. ஈர்க்கக்கூடிய வகையிலும், எளிதாகப் புரிந்துகொள்ளக்கூடிய விதத்திலும் சொல்லக்கூடிய எழுத்தாளர்.” –– ஆனி டியூக், ‘திங்கிங் இன் பெட்” என்ற நூலின் ஆசிரியர்

     

    பணத்தின் மேலாண்மையை, எப்படிக் கைக்குள் கொள்வது, எப்படி முதலிடுவது, எப்படி வணிக முடிவுகளை எடுப்பது போன்ற செயல்கள் பெரும்பாலும் கணக்கீடுகளின் மூலமாகச் செய்யப்படும் செயல்களாகும். அதற்கு உதவியாக, நாம் எப்படியெல்லாம் கையாள வேண்டும் என்று எடுத்துக்கூற, பல்வேறு சூத்திரங்களும் உள்ளன. ஆனால், உண்மையில், மக்கள் பொருளாதாரம் குறித்த அத்தகைய முடிவுகளை, வெறும் கணக்கீடுகளைக் கொண்டு எடுப்பது இல்லை. பொதுவாக, இரவு உணவை உண்ணும் நேரத்திலோ, நிறுவனங்களில் நடக்கும் கூட்டங்களின் மத்தியிலே அவர்கள் அத்தகைய முடிவுகளை எடுக்கின்றனர். அத்தகைய நிலையில், தங்கள் சொந்த அனுபவங்கள், உலகு குறித்த தங்கள் தனிப்பார்வை, கர்வம், தானெனும் அகம்பாவம், சந்தையாக்கத் திட்டங்கள், கிடைக்கப்போகும் சில சலுகைகள் இவை யாவும் எடுக்கும் அந்த முடிவுக்கான காரணிகளாக அமைகின்றன.

     

    “பணம்சார் உளவியல்” என்னும் இந்நூலில், ஆசிரியர், பல்வேறு மக்கள், எப்படியெல்லாம் வித்தியாசமான முறைகளில் பணம் குறித்து யோசிக்கிறார்கள் என்பதை, 19 கதைகளின் மூலம் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். மேலும் ஒரு மனிதனுக்கு, வாழ்க்கையில் மிக முக்கியமான முடிவுகளைக் குறித்து எப்படியான புரிதல் இருத்தல் அவசியம் என்பதையும் தெளிவுபடுத்துகிறார்.

    or 3 X Rs. 1,956.67 with Koko Koko
    Read more
  • Out of Stock

    வெற்றிக்கொடி கட்டு: ஒரு பின்னடைவு என்பது மீள்வருகைக்கான ஆயத்தம்

    Rs. 1,190.00
    or 3 X Rs.396.67 with

    வில்லி ஜாலி

    தமிழில்: லலிதா கல்யாணசுந்தரம்

     

    வில்லி ஜாலி இந்த ஆண்டின் சிறந்த ஊக்குவிப்புப் பேச்சாளர். — டோஸ்ட்மாஸ்டர்ஸ் இண்டர்நேஷனல்

     

    ஜாலி தமது இலக்கை எட்டுகிறார். ஒரு பரந்து விரிந்த வாசகர் வரிசையை அவர் ஒருங்கிணைக்கிறார் — பப்ளிஷர்ஸ் வீக்லி

     

    வாழ்க்கையில் தாழ்ந்த நிலையில் நீங்கள் இருந்தால் இந்தப் புத்தகம் மேலே ஏறும் பாதையைக் காட்டும். ஒரு மிகப்பெரும் வாசிப்பு. –லெஸ் பிரவுன், ‘லிவ் யுவர் ட்ரீம்ஸ்’ இன் ஆசிரியர்

     

    ‘வெற்றிக்கொடி கட்டு-ஒரு பின்னடைவு என்பது மீள்வருகைக்கான ஆயத்தம்’ புத்தகத்தைப் படிப்பது உங்கள் பிரச்சினைகளை வாய்ப்புகளாகவும், சவால்களை ஒளிமிகுந்த சந்தர்ப்பங்களாகவும் மாற்ற உங்களுக்கு உதவும் என்று நான் நம்புகிறேன். –வாலி ‘ஃபேமஸ்’ ஆமோஸ், வாட்டர்மெலன் மாஜிக்கின் ஆசிரியர்

    or 3 X Rs. 396.67 with Koko Koko
    Read more
  • Out of Stock

    ப்ளீஸ்! இந்த புத்தகத்தை வாங்காதீங்க

    Rs. 640.00
    or 3 X Rs.213.33 with

    கோபிநாத்

     

    ப்ளீஸ்! இந்த புத்தகத்தை வாங்காதீங்க ஏன்னா இந்த புத்தகத்தில் நான் எதையும் புதிகாக சொல்லி விடவில்லை என்று முன்னுரையில் ஆரம்பித்த ஆசிரியர் ஒரே மூச்சில் இந்த புத்தகத்தை முழுவதும் படிக்கும்படி செய்து உள்ளார். இது உங்களுக்கு உங்களை அடையாளம் காட்டும், உங்கள் சிறப்பியல்புகளையும், உங்கள் திறனின் நீள, அகலங்களையும் உங்களுக்குச் சொல்லும்.வார்த்தை ஜாலங்கள் காட்டாமல் பொட்டில் அடித்தாற்போல் பல விஷயங்களை எளிமையான உதாரணங்கள் மூலம் புரியவைத்துள்ளார் கோபி!

    or 3 X Rs. 213.33 with Koko Koko
    Read more
  • Out of Stock

    ரசவாதி ( Rasavathi ) The Alchemist

    Rs. 2,990.00
    or 3 X Rs.996.67 with

    பாலோ கொயலோ

     

    தமிழில்: நாகலட்சுமி சண்முகம்

     

    உங்கள் கனவுகளைப் பின்தொடர்ந்து செல்லுவதைப் பற்றிய ஒரு கற்பனைக் கதை

     

     

    • Grand Prix des lectrices de Elle for roman (1995)
    • Premio Grinzane Cavour for Narrativa Straniera (1996)
    • Corine Internationaler Buchpreis for Belletristik (2002)
    • 8.5 கோடிப் பிரதிகள் விற்றுச்சாதனை படைத்துள்ள நூல்

     

    “ஒருவரின் விதியை நிறைவேற்றுவதற்கான தேடல்.” அந்தோனி ராபின்ஸ்

     

    “உலகளாவிய ஞானத்தின் ஒரு தொழில்முனைவோர் கதை, நம் சொந்த வாழ்க்கையின் வணிகத்திற்கு நாம் உபயோகிக்கலாம்.” ஸ்பென்சர் ஜான்சன், எம்.டி

     

    “இது என் முழு வாழ்க்கையையும் மாற்றியது. என்னை இந்த இடத்திற்கு அழைத்துச் செல்ல சதி செய்த அனைத்து மக்களையும் நான் உணர்ந்தேன். ஃபாரல் வில்லியம்ஸ், இசைக்கலைஞர்

     

    or 3 X Rs. 996.67 with Koko Koko
    Read more
  • Out of Stock

    பணம் சில ரகசியங்கள் ( Panam Sila Rahasiyangal )

    Rs. 1,290.00
    or 3 X Rs.430.00 with
    சோம. வள்ளியப்பன்
     
    எதற்குப் பணம் சம்பாதிக்கவேண்டும்? எவ்வளவு சம்பாதிக்கவேண்டும்? சம்பாதித்ததை என்ன செய்யவேண்டும்? எளிமையாகத் தோன்றினாலும் இந்த மூன்று கேள்விகளுக்கு விடையளிப்பது கடினம். ஆயிரம் வாசல்கள் வழியாக உள்ளே வருவதற்கும் இன்னும் ஆயிரம் வாசல்கள் வழியே வெளியில் செல்லவும் பணம் தயாராக இருக்கிறது. எந்தெந்த கதவுகளைத் திறந்துவைக்கவேண்டும்? எவற்றையெல்லாம் மூடி வைக்கவேண்டும்? பணம் ஒரு கருவி மட்டுமே. அது வாழ்க்கைக்கு அவசியம். ஆனால் வாழ்க்கை என்பது அது மட்டுமேயல்ல என்கிறார் நூலாசிரியர் சோம. வள்ளியப்பன். சரியான இலக்குகளை அமைத்துக்கொள்ளாவிட்டால் பணம் நம்மை, நம் பணி வாழ்வை, நம் குடும்ப உறவுகளை, நம் எதிர்காலக் கனவுகளைப் பாதிக்கும் என்றும் அவர் எச்சரிக்கிறார். பங்குச்சந்தை, சுய-முன்னேற்றம், நிர்வாகவியல் என்று பல துறைகளில் இயங்கிவரும் சோம. வள்ளியப்பனின் இந்நூல் பணம் குறித்து நாம் தெரிந்துகொள்ளவேண்டிய சில முக்கியமான ரகசியங்களை நம்மோடு பகிர்ந்துகொள்கிறது.
    or 3 X Rs. 430.00 with Koko Koko
    Read more
  • Out of Stock

    ரசவாதம்: எதிலும் பெரும் வெற்றி

    Rs. 1,190.00
    or 3 X Rs.396.67 with

    சோம. வள்ளியப்பன்

     

    நீங்கள் அடைய விரும்புவது எதுவாக இருந்தாலும் அதை அடைவது எப்படி? அதைச் செய்யவிடாமல் தடுக்கும் அச்சங்களையும் தயக்கங்களையும் தடங்கல்களையும் களைவது எப்படி? அனைவரிடமும் இணக்கமான உறவுமுறையை வளர்த்துக்கொள்வது எப்படி?

     

    இரு வழிகள் உள்ளன. உலகை மாற்றுவது. உங்களை மாற்றிக்கொள்வது. மாற்றம் என்பது உங்களிடமிருந்து தொடங்கவேண்டியது என்பதை வலியுறுத்தும் NLP என்ற அற்புதமான, நிரூபிக்கப்பட்ட சர்வதேச வெற்றி ஃபார்முலாவை நம் சூழலுக்கு ஏற்ப எளிமையாகவும் சுவையாகவும் அறிமுகப்படுத்துகிறார் நூலாசிரியர் சோம. வள்ளியப்பன்.

     

    NLP என்பது என்ன?

     

    · ஐம்புலன்களின் திறன்களைக் கூர்மைப்படுத்தவும் முழுமையாகப் பயன்படுத்தவும் உதவும் Sensory Awareness.

     

    · எந்தச் சூழலிலும் வேண்டியதை அடையும் Oதtஞிணிட்ஞு கூடடிணடுடிணஞ். · பிடிவாதத்தைக் கைவிட்டு, நெகிழ்வுத்தன்மையைக் கைகொள்ளும் Behaviour Flexibility.

     

    இந்த நான்கையும் கொண்டு பள்ளி, கல்லூரி, பணியிடம், குடும்பம், சமுதாயம் என்று எதிலும் பெருவெற்றி பெற இந்நூல் கற்றுக்கொடுக்கிறது.

     

    எங்கும் எதிலும் உன்னதம் வேண்டும் என்று விரும்பும் அனைவருக்குமான புத்தகம் இது. இதை உங்களுக்கும் மற்றவர்களுக்கும் நீங்கள் பரிசளித்து மகிழலாம்.

    or 3 X Rs. 396.67 with Koko Koko
    Read more
  • Out of Stock

    ரிச்சர்ட் பிரான்ஸன்

    Rs. 1,390.00
    or 3 X Rs.463.33 with

    என். சொக்கன்

     

    பணி என்பது பணம் பண்ண மட்டுமே அல்ல.  ரசித்து, அனுபவித்துச் செய்யுங்கள்.  நீங்கள் விரும்பிய அனைத்தும் உங்கள் பின்னால் வரும்! இதுதான் ரிச்சர்ட் பிரான்ஸனின் வெற்றிச் சூத்திரம்.  அந்தச் சூத்திரத்தைப் பயன்படுத்தி அவர் சென்ற உயரம் பிரம்மாண்டமானது.

     

    ஆனால் அந்த உயரத்தை அவர் ஒன்றும் அநாயாசமாகத் தொட்டுவிடவில்லை.  தடைகள் வந்தன.  எதிர்ப்புகள் அணிவகுத்தன.  முன்னேறும் பாதையில் முட்டுக்கட்டைகள் விழுந்தன.  குறிப்பாக, வெர்ஜின் விமான சேவையைத் தொடங்கியபோது பெரும் பண முதலைகள் எல்லாம் அவரை அழுத்தப் பார்த்தன.

     

    ஆனால் அனைத்தையும் நம்பிக்கையுடனும், துணிச்சலுடனும் எதிர்கொண்டார் பிரான்ஸன்.  ஆகவே, சாதித்தார். வர்த்தக உலகம் சந்தித்த மற்ற வெற்றியாளர்களிடம் இருந்து பிரான்ஸன் பல விஷயங்களில் வேறுபடுகிறார்.  காத்திரமான பண பலத்துடன் களத்தில் இறங்கவில்லை.

     

    பரம்பரைப் பணக்காரரும் இல்லை. ஆனாலும் அவர் சாதனைகளின் உச்சத்தைத் தொட்டார்.  அது தான் சாமானியர்கள் பலரையும் பிரான்ஸனை நோக்கி ஈர்த்தது.  ஈர்த்துக்கொண்டே இருக்கிறது.

     

    தொழில் முனையும் ஆர்வம் உள்ள அத்தனை பேருக்கும் ரிச்சர்ட் பிரான்ஸன் ஆதர்சமாகத் தெரிகிறார்.  அது ஏன் என்பதை நுணுக்கமான ஆய்வின் வழியாக எடுத்துச் சொல்லியிருக்கிறார் என். சொக்கன்.

     

    வர்த்தக வெற்றியாளர்கள் பலருடைய வாழ்க்கையையும் புத்தகமாகப் பதிவு செய்திருப்பவர் அவர் என்ற வகையில் இந்தப் புத்தகம் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.

    or 3 X Rs. 463.33 with Koko Koko
    Read more
  • Out of Stock

    உங்கள் விதியைக் கண்டறியுங்கள்

    Rs. 1,990.00
    or 3 X Rs.663.33 with

    ராபின் ஷர்மா

    தமிழில்: அ. ராஜ்மோகன், ஐ.பி.எஸ்

     

    தன் பொக்கிஷத்தை விற்ற துறவி என்ற கோட்பாடு எவ்வாறு உலகளாவிய அளவில் பரவியதோ அதே தொனியில் பலன் தரும் வகையில் எழுதப்பட்ட நூல் “உங்கள் விதியைக் கண்டறியுங்கள்”. இதில் டார் சேன்டர்சன் வாசகர்களுக்கு அறிமுகமாகிறார். இவர் புற உலக விஷயங்கள் அனைத்தும் உள்ள ஒரு பேராவல் உடைய நிர்வாகி, ஆயினும் வாழ்க்கையில் மகிழ்ச்சி, அர்த்தம், மன அமைதி எதுவுமின்றி இருக்கின்றார்.
    நீடித்து நிலைக்கும் வெற்றிக்கான இரகசியங்களை கண்டறிந்த பிரபலமான துறவி ஜூலியன் மேன்டலை ஏதேச்சையாக சந்திக்கிறார் டார். ஜூலியன், டாரின் உண்மையான சுயரூபத்தை அறியவும், வாழ்க்கையின் களவுகள் மெய்படவும் ஒரு அசாதாரண பயணப் பாதையில் இட்டுச் செல்லுகிறார். பயணிக்கும் பாதையில், ஒருவரது மிக பெரிய வாழ்க்கை வாழ்வதற்கும், உலகில் ஒளிர்வதற்கும் அத்தியாவசியமான ஏழு சக்திவாய்ந்த பாடங்களை டார் சுற்றுக் கொள்கிறார். இந்த மறக்கமுடியாத காவியத்தில் நீங்கள் கண்டறியப்போவது
    • எப்படி கட்டுப்பாட்டை துறந்து, உங்கள் அளவற்ற உள்ளாற்றலின் மீது நம்பிக்கை கொள்வது
    • எப்படி தனக்குத்தானே துரோகம் செய்தல் எனும் குற்றத்தைத் தவிர்த்து பெருவாழ்வு வாழ்வது
    • எப்படி ஒரு ஆரம்பக் கல்வி கற்போனின் மனநிலையை ஏற்பதினால் உயர்ந்த சுய நிபுணத்துவத்தை அடைவது
    • எப்படி பயத்தை பொக்கிஷமாக மாற்றுவது
    • எப்படி உங்களின் அந்தராத்மாவின் குரலை அறிந்து, வாழ்க்கையின் அர்த்ததை தெரிந்து கொள்வது
    • எப்படி உங்களை சோதனைக்குள்ளாக்கும் நிகழ்வுகளை உங்களுக்கு பயன்தரும் நிகழ்வுகளாக மாற்றுவது
    • எப்படி உங்களின் முழு உள்ளாற்றலையும் விழித்தெழச் செய்வது
    or 3 X Rs. 663.33 with Koko Koko
    Read more
  • Out of Stock

    அதிகாலை 5 மணி குழு ( Athikalai 5 Mani Kulu )

    Rs. 2,590.00
    or 3 X Rs.863.33 with

    ராபின் ஷர்மா

     

    உங்கள் காலையை சொந்தமாக்கி – உங்கள் வாழ்க்கையை உயர்த்துங்கள்.

     

    புகழ்பெற்ற தலைமைப் பண்பு மற்றும் மிகச்சிறந்த செயல்திறன் நிபுணர் ராபின் சர்மா 20 ஆண்டுகளுக்கு, முன்பு. ஒரு புரட்சிகரமான காலை வழக்கத்தை அடிப்படையாகக் கொண்டு அதிகாலை 5 மணி குழு தத்துவத்தை அறிமுகப்படுத்தினார். இது அவரைப் பின்பற்றுபவர்களுக்கு அவர்களின் உற்பத்தித்திறனை அதிகரிக்கவும், அவர்களின் சிக்கலான வாழ்வில் சிறந்த ஆரோக்கியத்தை செயல்படுத்தவும் அவர்களது அமைதியைப் பாதுகாக்கவும் உதவியது.

     

    இப்போது தீவிரமான நான்கு ஆண்டு முயற்சியின் விளைவாக எழுத்தாளரால் வடிவமைக்கப்பட்டுள்ள, பலருக்கும் சாதனை முடிவுகளை அடையவும், அதே நேரத்தில் அவர்களின் மகிழ்ச்சி, உதவும்தன்மை மற்றும் புத்துணர்ச்சி ஆகியவற்றை மேம்படுத்தவும் உதவிய வாழ்க்கையை மாற்றும் இந்த புத்தாத்தில், அதிகாலையில் எழும் பழக்கத்தைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்வீர்கள், முன்பின் தெரியாத இரண்டு மனிதர்கள் ஒரு விசித்திரமான தொழிலதிபரைச் சந்திப்பது, பிறகு அவரே அவர்களின் ரகசிய வழிகாட்டியாக மாறுவது பற்றிய ஒரு அழகான மற்றும் பெரும்பாலும் சுவாரஸ்யமான கதையான அதிகாலை 5 மணி குழு புத்தகம் கீழ்க்கண்டவாறு உங்களை வழிநடத்தும்.

     

    வியக்கத்தக்க சாதனைகளை உருவாக்க சிறந்த மேதைகள், வணிக அதிபர்கள் மற்றும் உலகின் புத்திசாலித்தனமான மக்கள் தங்கள் கலைப் பொழுதை எவ்வாறு தொடங்குகிறார்கள்.. அதிகாலையில் எழுகையில், தூண்டுதல், மிகுந்த கவளம் மற்றும் அதி தீவிள உந்துதலுடன் உங்கள் நாளிள் முழுப் பயனையும் அடையும் படியான அதிகம் அறியப்படாத நீங்கள் உடனடியாகப் பயன்படுத்தக் கூடிய ஒரு சூத்திரம் அதிகாலையின் அமைதியான நேரத்தை படிப்படியான செயல்முறை மூலம் பயன்படுத்தி, உடற்பயிற்சி, சுய புதுப்பித்தல் மற்றும் தனிப்பட்ட வளர்ச்சிக்கு தேவையான நேரம் பெறுதல்.

     

    ஒரு நரம்பியல் அடிப்படையிலான நடைமுறையானது அதிகாலையில் எழும் பழக்கத்தின் மூலம். பெரும்பாலான மக்கள் தூங்கிக் கொண்டிருக்கும்போது, உங்களுக்கு சிந்திக்கவும், படைப்பாற்றலை வெளிப்படுத்தவும், பநட்டமான செயல்பாட்டிற்கு பதிலாக நிம்மதியாக நாரைத் தொடங்கவும் அருமையான வாய்ப்பைத் தருகிறது. “ரகசியமான செயல்” தந்திரோபாயங்கள் டிஜிட்டல் கபணிச்சிதறல்கள் மற்றும் அற்பமான திசைதிருப்பல்களிலிருந்து உங்கள் சிறப்புத் திறன்கள், இயற்கைத் நிறமைகள் மற்றும் கனவுகளை பாதுகாத்து, நீங்கள் அதிர்ஷ்டம், செல்வாக்கு மற்றும் உலகில் அற்புதமான தாக்கத்தை அனுபவிக்க உதவுகிறது.

    or 3 X Rs. 863.33 with Koko Koko
    Read more
  • Out of Stock

    தடையேதுமில்லை

    Rs. 990.00
    or 3 X Rs.330.00 with

    சோம. வள்ளியப்பன்

     

    ‘வாசகர்களின் தோளில் கைபோட்டுப் பேசும் திறன் கொண்ட புத்தகம் இது. கடினமான விஷயங்களை மிக எளிமையாக எடுத்துச் சொல்லும் சோம. வள்ளியப்பனின் பாணி அபூர்வமானது.’ – பா.ராகவன்

     

    புத்தகங்களை மட்டுமே படித்துவிட்டு எவரும் வெற்றியாளர் ஆகிவிடமுடியாது.வாழ்க்கையைவிடச் சிறந்த வாத்தியார் இந்த உலகில் இல்லை. எனவே அனுபவங்களிலிருந்தும் ஒருவர் கற்கவேண்டியிருக்கிறது.

     

    ஆனால் அது அத்தனை சுலபமல்ல. எடுத்தோமா, படித்தோமா என்று கற்றுக்கொண்டுவிடமுடியாது. அனுபவத்தைப் புரிந்துகொள்ளவும் அதிலிருந்து முக்கியமான பாடங்களைக் கண்டுபிடித்து கிரகித்துக்கொள்ளவும் தனித்திறன் தேவைப்படுகிறது. திறந்த மனமும் தெளிவான சிந்தனையும் இருந்தால்தான் அனுபவப் பாடம் படிக்கமுடியும்.

     

    சோம. வள்ளியப்பனின் இந்தப் புத்தகம் நம் வாழ்வை நாமே படித்துக்கொள்ள உதவும் ஒரு கைவிளக்காக இருக்கிறது. நம்மை முன்னேறவிடாமல் தடுக்கும் தடைக்கற்கள் எவையெவை என்பதை மிகத் தெளிவாக வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. தடைகளைத் தகர்த்து வெற்றிப் படிகளில் ஏறி உச்சத்தைத் தொட இந்தப் புத்தகம் உங்களுக்கு நிச்சயம் உதவும்.

    or 3 X Rs. 330.00 with Koko Koko
    Read more