Opening Possibilities, Illuminating Potentials
Delivery in 1-5 business days. Island-wide Free Delivery for Purchase of Rs. 3990 or above.

Cart

Your Cart is Empty

Back To Shop
Contact Us 0764980321

Category: வரலாறு

Showing 61–75 of 75 results

  • Out of Stock

    ஆர்யபடரின் கணிதம்

    Rs. 790.00
    or 3 X Rs.263.33 with

    பத்ரி சேஷாத்ரி

     

    பண்டைய இந்தியாவின் பங்களிப்புகளைக் கணக்கில் கொள்ளாமல் வானியல், கணிதம் உள்ளிட்ட துறைகளின் வரலாற்றைக் கட்டமைக்கமுடியாது. இன்றும் நம்மை வியப்பிலாழ்த்தும் அசாத்தியமான பாய்ச்சல்களைப் பற்பல நூற்றாண்டுகளுக்கு முன்பே சிலர் நிகழ்த்தி இருக்கிறார்கள். அவர்களுள் ஒருவர், ஆர்யபடர்.
     

    ஆர்யபடரின் கணிதப் படைப்புகள் (ஆர்யபடீயம்) திருக்குறள்போல் ஈரடிப் பாக்களால் கட்டமைக்கப்பட்டவை என்பதால் அவற்றை வாசிப்பதும் புரிந்துகொள்வதும் கடினம். உரைகளை நாடலாம் என்றால் அவையும் பழங்காலத்தவையே. எனில், கணிதத்தில் ஆர்வமுள்ள இன்றைய தலைமுறையினரால் ஆர்யபடரை நெருங்கவேமுடியாதா? முடியும். பத்ரி சேஷாத்ரியின் இந்நூல் ஆர்யபடரின் கணிதத்தை நமக்குப் புரியும் மொழியில், இன்றைய தேவைகளுக்கு ஏற்றாற்போல் எளிமையாக, படிப்படியாக அறிமுகப்படுத்துகிறது. ஐந்தாம் நூற்றாண்டு சூத்திரங்களையும் நவீன கணிதச் சமன்பாடுகளையும் அழகாக ஒன்றிணைக்கிறார் பத்ரி.
     

    எண்களோடு விளையாட விரும்பும் அனைவருக்கும் இந்நூல் ஒரு பெரிய களத்தை அமைத்துக்கொடுக்கிறது. மாணவர்கள் தொடங்கி கணித ஆர்வலர்கள் வரை அனைவரும் இதிலிருந்து பயன் பெறலாம்.

    or 3 X Rs. 263.33 with Koko Koko
    Read more
  • Sale!
    Out of Stock

    [RARE] இந்தியாவின் வரலாறு (A History of India India) Part 1

    Original price was: Rs. 2,790.00.Current price is: Rs. 2,190.00.
    or 3 X Rs.730.00 with

    கொ.அ. அன்தோனவா, கி.ம. போன்காரத்-லேவின்

    தமிழில்: பூ. சோமசுந்தரம்,  டாக்டர் இரா. பாஸ்கரன்

     

     

    நூலாசிரியர்கள் பிரபல சோவியத் இந்திய இயல் வரலாற்றாளர்கள். இவர்கள் கடந்தகால மற்றும் நிகழ்கால இந்திய வரலாற்று ஆராய்ச்சியில் ஈடு பட்டுள்ளவர்கள்.

    இந்நூலில் தொன்மைக் கால மற்றும் இடைக் கால இந்திய வரலாறு சுருக்கமான வடிவில் தரப்பட்டுள்ளது. 18ம் நூற்றாண்டின் நடுப் பகுதி வரை நாட்டின் சமூக-பொருளாதார வளர்ச்சி, அரசியல் வரலாறு, மதம், பண்பாடு ஆகியவற்றை நூலாசிரியர் கள் பகுப்பாய்வு சென்துள்ளனர்.

     

    * 70களிலும் 80களிலும் வெளிவந்த பிரபல்யமான புத்தகங்கள். மிகவும் அரிதான புத்தகங்கள்.

    இவை பாவிக்கப்படாத புத்தகங்கள். ஆனால் அச்சிடப்பட்டு 30 வருடங்களுக்கு மேல் கிடங்கில் இருந்ததால் சில புத்தகங்களில் கரையான் அறிப்பு, பக்கங்களின் நிறம் மாறுதல் போன்ற சிறிய சேதங்கள் இருக்கலாம்.

    ஆனால் முழுமையாக வாசிக்க முடியுமாக இருக்கும்.

    or 3 X Rs. 730.00 with Koko Koko
    Read more
  • Sale!
    Out of Stock

    [RARE] இந்தியாவின் வரலாறு (A History of India India) Part 2

    Original price was: Rs. 3,490.00.Current price is: Rs. 2,690.00.
    or 3 X Rs.896.67 with

    கொ.அ. அன்தோனவா கி.கி. கத்தோவ்ஸ்கி

    தமிழில்: பூ. சோமசுந்தரம்,  டாக்டர் இரா. பாஸ்கரன்

     

     

    ‘இந்தியாவின் வரலாறு’ (18ம் நூற்றாண்டின் நடுப் பகுதி முதல் நம் காலம் வரை) எனும் நூலில் புதிய கால மற்றும் அண்மைக் காலத்தில் இந்தியாவின் வரலாற்றைப் பற்றிக் கூறப் பட்டுள்ளது. 18ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் இந்தியாவைக் கைப்பற்றியது, இரண்டாவது உலக யுத்தக் காலத்தில் இந்தியா, இந்தியாவின் சுதந்திரப் போராட்டம் போன்ற பிரச்சினைகள் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன.

     

    இப்பிரச்சினை சம்பந்தமான சோவியத் மற்றும் அயல்நாட்டு நவீன ஆராய்ச்சிகள் இந்நூலில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

     

    * 70களிலும் 80களிலும் வெளிவந்த பிரபல்யமான புத்தகங்கள். மிகவும் அரிதான புத்தகங்கள்.

    இவை பாவிக்கப்படாத புத்தகங்கள். ஆனால் அச்சிடப்பட்டு 30 வருடங்களுக்கு மேல் கிடங்கில் இருந்ததால் சில புத்தகங்களில் கரையான் அறிப்பு, பக்கங்களின் நிறம் மாறுதல் போன்ற சிறிய சேதங்கள் இருக்கலாம்.

    ஆனால் முழுமையாக வாசிக்க முடியுமாக இருக்கும்.

    or 3 X Rs. 896.67 with Koko Koko
    Read more
  • Out of Stock

    செங்கிஸ்கான் ( Genghis Khan Tamil )

    Rs. 2,190.00
    or 3 X Rs.730.00 with

    முகில்

     

    உலகையே கட்டியாளப் போகிறேன் என்று கிளம்பியவர்கள் சிலர். அதில் வெற்றி பெற்றவர்கள் வெகு சிலரே. அவர்களில் முதன்மையானவர் மங்கோலியப் பேரரசர் செங்கிஸ்கான்.

     

    சுமார் எண்ணூறு வருடங்களுக்கு முன் வாழ்ந்தவர் என்றாலும் இன்றுவரை செங்கிஸ்கான் மீதான மிரட்சியும் ஆச்சரியமும் அச்சமும் குறையாமலிருப்பதற்கான காரணம், உயிரை உலுக்கும் போர்த் தந்திரங்கள் மட்டுமல்ல. அவரது ஆளுமைத் திறனும்தான்.

     

    ஒரு சாதாரண மங்கோலிய நாடோடிக் கூட்டத்தில் செங்கிஸ்கான் பிறந்தபோது, மங்கோலியா என்ற ஒரு தேசமே கிடையாது. செங்கிஸ்கான் ஒரு கனவு கண்டார். சிதறிக் கிடக்கும் இனக்குழுக்களை ஒன்று சேர்க்க வேண்டும். புத்தம் புதிய தேசத்தை உருவாக்கவேண்டும். உலகமே அண்ணாந்து பார்த்து வியக்கும் வகையில் ஒரு மகா பேரரசைக் கட்டியமைக்கவேண்டும்.

     

    அசாதாரணமான கனவு. ஆனால் அதை நிறைவேற்றுவதற்கான துடிதுடிப்பும் துணிச்சலும் உத்வேகமும் உக்கிரமும் செங்கிஸ்கானிடம் இருந்தது. கடுமையும் கல்பாறை மனமும் கொண்டவராகத் தன்னை உருமாற்றிக் கொண்டார். எதிரிகளை அழித்தொழிப்பதற்கான சூத்திரங்களை மட்டுமல்ல, கனவுகளைச் சாத்தியமாக்குவதற்கான கலையையும் செங்கிஸ்கானிடம் இருந்தே கற்றுக்கொண்டது உலகம். செங்கிஸ்கான் பற்றி தமிழில் வெளிவரும் முதல் நூல் இது.

    or 3 X Rs. 730.00 with Koko Koko
    Read more
  • Out of Stock

    உணவின் வரலாறு ( Unavin Varalaaru )

    Rs. 1,790.00
    or 3 X Rs.596.67 with

    பா.ராகவன்

     

    உண்ண வேண்டும் என்பது ஓர் உணர்வு. எதை உண்பது என்பதை ஆதி மனிதன் முதல் முதலில் எப்படித் தீர்மானித்திருப்பான்? நெருப்பு கண்டறியப்படுவதற்கு முன்னால் எப்படிச் சமைத்திருப்பான்? பசி தூண்டி உணவைக் கண்டடைந்திருக்கலாம். ஆனால் எது தூண்டி மனிதன் போதையைத் தேடிப் போயிருப்பான்? மது எப்படிப் பிறந்திருக்கும்? ஆரியர்கள் சோம பானத்தைக் கொண்டு வருவதற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்த மண்ணில் பீரைப் போன்றதொரு பானம் இருந்திருக்கிறது. அதைப் பற்றித் தெரியுமா?

     

    உணவின் கதை என்பது உயிரினங்களின் கதையைக் காட்டிலும் சுவாரசியமானது. புதிர்கள் நிறைந்தது. உணவு இல்லாவிட்டால் உயிர்கள் இல்லை. மனிதனின் கற்பனைத் திறன் உனவுக்கு ருசியைச் சேர்த்தது. ருசி சேரச் சேர அதற்குச் சிறகு முளைத்தது. நாம் அன்றாடம் உண்ணும் இட்லி, தோசையில் இருந்து மேற்கத்திய உணவு வகைகள் வரை ஒவ்வொன்றும் தோன்றி, வளர்ந்து உருக்கொண்ட வரலாற்றை திகைப்பூட்டக் கூடிய தகவல்களுடன் விவரிக்கிறார் பா. ராகவன். உணவு இயல் என்றாலே சமையல் குறிப்புகள்தான் என்றிருந்த தமிழ் வாசக மனப்பதிவை முற்றிலும் மாற்றியமைத்த நூல் இது.

    or 3 X Rs. 596.67 with Koko Koko
    Read more
  • Sale!
    Out of Stock

    மனிதகுலம்

    Original price was: Rs. 3,950.00.Current price is: Rs. 3,790.00.
    or 3 X Rs.1,263.33 with

    ருட்கர் பிரெக்மன்

    தமிழில்: நாகலட்சுமி சண்முகம்

     

    “அருமை. பிரெக்மனின் வரலாற்று விவரிப்பு, மனித இயல்பு குறித்தப் புதிய புரிதலுக்கு இட்டுச் செல்கிறது. முன் எப்போதையும்விட இப்போதுதான் இது நமக்கு அதிகமாகத் தேவைப்படுகிறது.”
    — சூசன் கெயின்

    “இந்நூலின் கருப்பொருள் மிக முக்கியமானது, இதன் வீச்சு பிரம்மாண்டமானது, கதை கூறும் விதம் வசீகரமானது. இது ஓர் அருமையான புத்தகம்.”
    –டிம் ஹார்ஃபோர்டு

     

    “மனிதகுலத்தை வெறுப்போரின் முழக்கங்களுக்கு இது சாவுமணி அடித்துள்ளது. கதிகலங்கிப் போயுள்ள உலகிற்கு நம்பிக்கையளிக்கின்ற ஒரு கலங்கரைவிளக்கமாக இந்நூல் திகழ்கிறது.”
    –டேனி டோர்லிங்

     

    “மனிதர்களின்” உள்ளார்ந்த நற்குணம் மற்றும் இயல்பான கண்ணியத்தின்மீதான அசாதாரணமான, ஆணித்தரமான நம்பிக்கைப் பிரகடனமாக இந்நூல் வெளிப்படுகிறது. நாம் நினைத்துக் கொண்டிருக்கின்ற அளவு நாம் காட்டுமிராண்டித்தனமான, மட்டுமீறிய பேராசையுடைய, வன்முறையான, எல்லாவற்றையும் அடித்துச் சாப்பிடுகின்ற மூர்க்கத்தனமான ஒரு விலங்கு அல்ல என்ற வாதத்தை ருட்கர் பிரெக்மன் ஆணித்தரமாகவும் நம்பத்தக்க விதத்திலும் இதில் எடுத்துரைக்கிறார்-சான்றுகள் இதற்கு நேரெதிராக இருக்கின்றபோதிலும்!”
    — ஸ்டீபன் ஃபிரை, நடிகர்

     

    “சில நூல்கள் நம்முடைய யோசனைகளுக்குச் சவால்விடுகின்றன. ஆனால், ‘மனிதகுலம்’ என்ற இந்நூல், அந்த யோசனைகள் எவற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளனவோ, அந்த அடித்தளத்தையே ஆட்டம் காணச் செய்கிறது. இந்நூல் முன்வைக்கின்ற துணிச்சலான வாதம், நம்முடைய சமுதாயம், ஜனநாயகம், மனிதனின் அடிப்படை இயல்பு ஆகியவை குறித்து உங்களை மீண்டும் சிந்திக்க வைக்கும். மனிதன்மீதான நம்பிக்கை முற்றிலுமாக மறைந்துவிட்ட ஓர் ஆழ்கடலில், இவ்வுலகிற்கு இப்போது தேவைப்படுகின்ற, உறுதியான, மூழ்கடிக்கப்பட முடியாத, உயிர்காக்கும் படகாக இந்நூல் விளங்குகிறது.”
    –டேனியல் எச். பிங், நூலாசிரியர்

     

    “மனிதர்கள் அடிப்படையில் தன்னலவாதிகள், இனிமையற்றவர்கள் என்ற ஓர் எதிர்மறையான கண்ணோட்டத்தை உடைத்தெறிந்து, மனித இயல்பைப் பற்றிய ஒரு துல்லியமான, நமக்கு நம்பிக்கையூட்டுகின்ற ஓர் ஓவியத்தை இந்நூல் நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துகிறது. நம்முடைய சிந்தனைக்குத் தீனி போடுகின்ற, நம்முடைய காலகட்டத்தைச் சேர்ந்த தலைசிறந்த சிந்தனையாளர்களில் ருட்கர் பிரெக்மனும் ஒருவர்.”
    –ஆடம் கிரான்ட், நூலாசிரியர்

    or 3 X Rs. 1,263.33 with Koko Koko
    Read more
  • Out of Stock

    விஜயநகர பேரரசு

    Rs. 1,690.00
    or 3 X Rs.563.33 with

    எஸ். கிருஷ்ணன்

     

    தமிழகத்தைச் சுமார் 200 ஆண்டுகள் ஆட்சி செய்து தங்கள் முத்திரையை வலுவாகப் பதித்துவிட்டுச் சென்றிருக்கிறது விஜயநகரப் பேரரசு. 14ஆம் நூற்றாண்டு முற்பகுதியில் உதயமான இந்தப் பேரரசுக்கு மற்ற அரசுகளுக்கு இல்லாத ஒரு பெரும் கடமை இருந்தது. அது, தென்னாட்டைப் பெரும் சீரழிவிலிருந்து மீட்கும் பணி.
     

    நிலையற்ற அரசும் கொந்தளிப்பான தன்மையும் நிலவிய மோசமான சூழலிருந்து நாட்டை மீட்டுச் செம்மைப்படுத்தினார்கள் விஜயநகர மன்னர்கள். நிர்வாகச் சீர்திருத்தங்கள், பொருளாதார மேன்மை, நீர்ப்பாசனம் என்று தொடங்கி அடிப்படையான மாற்றங்களைக் கொண்டுவந்ததன்மூலம் தென்னகத்தை அவர்கள் தலைநிமிரச் செய்தார்கள். கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில், இடைவிடாத போர்களுக்கு நடுவில் இந்தியாவின் வரலாற்றை விஜயநகரப் பேரரசு அழுத்தந்திருத்தமாக மாற்றி எழுதியது.
     

    விஜயநகரப் பேரரசு எப்படி உருவானது? எந்தெந்த மன்னர்களெல்லாம் ஆண்டனர்? கிருஷ்ணதேவராயர் வகித்த பாத்திரம் எத்தகையது? அவர்களுடைய ஆட்சிமுறை எப்படி இருந்தது? படைபலம் எத்தகையது? கலை, கட்டுமானம், பொருளாதாரம், சமயம் போன்ற துறைகள் எத்தகைய மாற்றங்களைச் சந்தித்தன? எஸ். கிருஷ்ணனின் இந்நூல் விஜயநகரப் பேரரசு பற்றிய மிகச் சிறப்பான பருந்துப் பார்வையை அளிக்கிறது.

    or 3 X Rs. 563.33 with Koko Koko
    Read more
  • Out of Stock

    சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி? ( Che Guevara Puradchiyaalar Aanathu Eppadi? )

    Rs. 1,190.00
    or 3 X Rs.396.67 with

    மருதன்

     

    அர்ஜெண்டினாவில் தொடங்கி சிலி, பெரு, வெனிசூலா, பொலிவியா என்று லத்தீன் அமெரிக்க நாடுகளிடையே எர்னஸ்டோ மேற்கொண்ட பயண அனுபவங்கள் மோட்டார் சைக்கிள் டைரிக் குறிப்புகளாக வெளிவந்தன.

     

    தனித்துவமிக்க இந்தப் புத்தகத்தில் எர்னஸ்டோ தன் அனுபவங்களையும், தரிசித்த நாடுகளின் அரசியல், சமூக, வரலாற்றுப் பின்புலத்தையும் பதிவு செய்திருக்கிறார்.இந்தப் பயணம் எர்னஸ்டோவை உலகின் முதன்மையான புரட்சியாளராக உருமாற்றியது. ஒரு தேர்ந்த மார்க்சிஸ்டாகவும், தீரமிக்கப் போராளியாகவும் வளர்த்தெடுத்தது. மக்களை நேசித்து, மக்களுக்காக வாழ்ந்து, மக்களுக்காக உயிர் துறக்கும் நெஞ்சுரத்தையும் மாண்பையும் பெற்றுத் தந்தது. எர்னஸ்டோ என்னும் சாமானியனை சே குவேராவாக உருமாற்றியது.

     

    ஃபிடல் காஸ்ட்ரோ, சே குவேரா, சாவேஸ் வாழ்க்கை வரலாறுகளைத் தொடர்ந்து லத்தீன் அமெரிக்க அரசியல் குறித்து மருதன் எழுதியுள்ள நன்காவது புத்தகம் இது.

    or 3 X Rs. 396.67 with Koko Koko
    Read more
  • Out of Stock

    வீரயுக நாயகன் வேள்பாரி (VOL-I & II) / Veerayuga Nayagan Velpari

    Rs. 11,490.00
    or 3 X Rs.3,830.00 with

    சு.வெங்கடேசன்

     

    தன்னலமற்ற கொடை உள்ளத்தாலும், அன்புவழிப்பட்ட வாழ்வியல் மரபாலும் பாரியின் புகழ் தமிழ் நிலம் எங்கும் பரவியது. மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர்கள் அவன் புகழ் கண்டு வெதும்பினர். பறம்பு நாட்டின் நிலவளம் அவர்களின் கண்களை உறுத்தியது.
     

    பாரிக்கு எதிராகத் தனித்தனியே அவர்கள் மேற்கொண்ட போர் முயற்சிகள் கைகூடவில்லை. இறுதியில் மூவேந்தர்களும் ஒன்றிணைந்தனர். அவர்களின் கூட்டுப்படை பாரியின் பறம்பு நாட்டை அனைத்துத் திசைகளில் இருந்தும் ஒருசேரத் தாக்கியது. சின்னஞ்சிறு `டிராய்’ நகரின் மீது மொத்த கிரேக்கப் படையும் போர் தொடுத்ததைப் போலத்தான் இதுவும் நிகழ்ந்தது.
     

    பெரும் நிலப்பரப்பை ஆண்ட மூவேந்தர்களின் கூட்டுப்படை, ஒரு குறுநில மன்னனால் சிதறடிக்கப்பட்டது. அதன் பின் மூவேந்தர்களும் ஒன்றாய் சதிசெய்து, வஞ்சினம் நிகழ்த்தி, பாரியின் உயிர் பறித்தனர். வீரத்தால் சாதிக்க முடியாததை துரோகம் செய்து முடித்தது. இயற்கைக்கும் மனிதனின் பேராசைக்கும் இடையில் இன்று நடக்கும் போராட்டத்தின் ஆதிவடிவம்தான் வேள்பாரியின் கதை. திரும்பும் திசையெல்லாம் அருவி கொட்டும் குறிஞ்சி நிலத்தில், அந்த அருவி நீரினும் குழுமையுடை பாரியின் கரம்பற்றி நடக்க வாருங்கள்…

    or 3 X Rs. 3,830.00 with Koko Koko
    Read more
  • Out of Stock

    கிட்டத்தட்ட அனைத்தையும் பற்றிய சுருக்கமான வரலாறு ( Kiddathatta Anaithaiyum Pattriya Surukkamaana Varazhaaru ) ) A Short History of Nearly Everything

    Rs. 4,290.00
    or 3 X Rs.1,430.00 with

    பில் பிரைசன்

    ப்ரவாஹன்

     

    அறிவியல்… அது கசப்பான பாடங்களில் ஒன்று. ஆனால் அறிவியல் சாதனைகள் கசப்பானவையா? இல்லையே! அப்புறம் எப்படி பாடங்கள் மட்டும் கசப்பானவையாக இருக்கிறது என்றால், அதனைக் கற்பிக்கும் முறைதான் அதற்குக் காரணம். அறிவியலை எளிமையாகச் சொன்னால், அதைவிட த்ரில் வேறு எதிலும் இல்லை. அப்படி எழுதப்பட்ட புத்தகங்களில் முதன்மையானது இது. அதனால்தான் பில்பிரைசனின் இந்தப் புத்தகம் உலகிலேயே அதிகமாக விற்பனை ஆன புத்தகங்களில் ஒன்றாக மதிக்கப்படுகிறது.

     

    ஆரம்ப கால ஆதி மனிதர்கள் குறித்த இரண்டு அத்தியாயங்களை எழுதுவதற்காக 19 ஆயிரம் கி.மீ.தூரம் பயணம் செய்தார் பில்பிரைசன்…. உலகில் வாழும் 2,000 விஞ்ஞானிகளை நேரில் சந்தித்துப் பேசினார். அதற்குப் பிறகு ஒரு புத்தகம் எழுதினார். அதுதான் இது… அறிவியலை, நமக்கு அருகாமையில் கொண்டுவந்து நிறுத்தவும் செய்கிறது. — Junior Vikadan

    or 3 X Rs. 1,430.00 with Koko Koko
    Read more
  • Out of Stock

    இந்திய நாகரிகம்

    Rs. 3,390.00
    or 3 X Rs.1,130.00 with

    நமித் அரோரா

     

    இந்திய நாகரிகம் என்பது ஒரு சிந்தனை, ஒரு யதார்த்தம், ஒரு புதிர். இந்தியாவின் 5,000 ஆண்டு வரலாற்றின் வழியே பயணம் செய்யும் உணர்வை ஏற்படுத்தும் நூல் இது.
     

    நூலாசிரியர் நமித் அரோரா, ஆறு முக்கிய இடங்களுக்குச் சென்று நம்முடைய தொன்மையான வரலாற்றைக் கள ஆய்வு செய்திருக்கிறார். தோலாவிராவில் உள்ள ஹரப்ப நாகரிக நகரம், இக்ஷ்வாகு வம்சத்தவரின் தலைநகரமான நாகார்ஜூனகொண்டா, பௌத்தர்களின் கல்வி மையமான நாளந்தா, புரியாத புதிரான
    கஜுராஹோ, ஹம்பியின் விஜயநகரம், இறுதியாக வாரணாசி, மெகஸ்தனிஸ், பாஹியான், யுவான் சுவாங், அல்பெரூனி, மார்க்கோ போலோ போன்ற புகழ்பெற்ற பயணிகளின் சுவையான கதைகளையும் பொருத்தமான இடங்களில் அறிமுகப்படுத்துகிறார்.
     

    தெளிவான, நேர்த்தியான நடையில், நம்முடைய முன்னோர்களின் சிந்தனைகள், நம்பிக்கைகள், விழுமியங்கள் எவ்வாறு பல ஆயிரம் ஆண்டுகளாக இந்தியாவை நெறிப்படுத்துகின்றன, எஞ்சியவை எப்படி காலவெள்ளத்தில் காணாமல் போய்விட்டன என்று காட்டுகிறார். நம்முடைய ரத்த நாளங்களில் கலந்துவிட்ட வரலாற்றின் மீது ஒளியைப் பாய்ச்சுகிறது இந்நூல்.

    or 3 X Rs. 1,130.00 with Koko Koko
    Read more
  • Out of Stock

    1877 – தாது வருடப் பஞ்சம்

    Rs. 1,690.00
    or 3 X Rs.563.33 with

    வில்லியம் டிக்பி

     

    உறையச் செய்யும் ஒரு வரலாற்று ஆவணம். நம் மனசாட்சியை உலுக்கியெடுக்கும் நேரடி வாக்குமூலம். இப்போது உச்சரித்தாலும் உடலையும் உள்ளத்தையும் ஒருசேர நடுநடுங்கச் செய்யும் சொல், பஞ்சம். கடந்து போய்விட்ட பஞ்சங்களும்கூட நினைவுகளாக, கதைகளாக, உணர்வுகளாக உயிர்த்திருக்கின்றன.
     

    வரலாற்றுப் பதிவுகள்தான் குறைவு. அபூர்வமாக எஞ்சி நிற்கும் நூல்களில் ஒன்று, வில்லியம் டிக்பி எனும் ஆங்கிலேய எழுத்தாளரின் நேரடிப் பதிவு. 1877ஆம் ஆண்டு தென்னிந்தியாவில் வெடித்த மாபெரும் பஞ்சத்தின் அவல வரலாற்றை அருகிலிருந்து கண்டும் உணர்ந்தும் எழுதியிருக்கிறார் டிக்பி. மக்களின் துயர்மிகு வலிகளைப் பதிவு செய்வதோடு நிறுத்திக்கொள்ளாமல் ஆங்கிலேய அரசு பஞ்சத்தை எதிர்கொண்ட விதத்தைக் கூர்மையாகவும் நேர்மையாகவும் விமரிசனத்துக்கு உட்படுத்துகிறார் நூலாசிரியர்.
     

    உயிரே போனாலும் சாதிப் பற்றை விட்டுக்கொடுக்காத விநோத மனிதர்களின் கதையும் இதில் உண்டு. இது பஞ்சத்தின் கதை. இந்தியாவின் கதை. நம் மனசாட்சியைக் குத்திக் கிளறிவிடும் வரலாற்றின் கதையும்கூட.

    or 3 X Rs. 563.33 with Koko Koko
    Read more
  • Out of Stock

    அசோகர்

    Rs. 1,990.00
    or 3 X Rs.663.33 with

    மருதன்

     

    இந்திய வரலாற்றின் மகத்தான பேரரசர்களில் ஒருவரான அசோகரை எளிமையாக அறிமுகப்படுத்தும் நூல். ‘இந்து தமிழ்’ நிறுவனத்தின் ‘காமதேனு’ இணைய இதழில் தொடராக வெளிவந்து இப்போது நூல் வடிவம் கண்டுள்ளது. இந்த நூலில் அசோகர் குறித்து இதுவரை நடத்தப்பட்டுள்ள ஆய்வுகளின் அடிப்படையில் அவருடைய வாழ்க்கை, ஆட்சிக் காலம் குறித்து ஒரு எளிய சித்திரத்தை மருதன் தந்திருக்கிறார். போரையும், நாடு பிடிக்கும் ஆவலையும் கைவிட்டு அன்பையும் சமத்துவத்தையும் போதித்த பேரரசரையும் அவருடைய ஆட்சிக் காலம் பண்டைய இந்தியாவின் ஒளிமிகுந்த காலகட்டமாக இருந்ததையும் இந்த நூல்வழியாக அறிந்துகொள்ளலாம்.

    or 3 X Rs. 663.33 with Koko Koko
    Read more
  • Out of Stock

    தே ஒரு இலையின் வரலாறு/ A Brief History of Tea

    Rs. 2,190.00
    or 3 X Rs.730.00 with
    ராய் மோக்ஷாம்

    உலகம் விரும்பி அருந்தும் ஒரு பானத்தின் கதை என்று சொல்லலாம் அல்லது, இப்படியும் விரித்துச் சொல்லலாம். தேநீர் மீது பிரிட்டன் கொண்டிருந்த வேட்கை எவ்வாறு மெல்ல மெல்ல வளர்ந்து அதனை ஒரு பேரரசாக மாற்றியது என்பதையும் அந்த மாற்றம் உலகம் முழுக்க எத்தகைய அதிர்வலைகளை ஏற்படுத்தியது என்பதையும் ஆராயும் முக்கியமான நூல் இது. சீனாவின் தேயிலையை வாங்குவதற்கு இந்தியாவின் ஓப்பியத்தை கிழக்கிந்திய கம்பெனி அளிக்கத் தொடங்கியபோது அதிரத் தொடங்கிய உலகம் இன்னமும் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை என்றுதான் சொல்லவேண்டும். தேயிலைத் தோட்டத்தில் தொடங்கும் பயணம் நம்மை சீனா, இந்தியா, சிலோன், ஆப்பிரிக்கா என்று உலகம் முழுக்க அழைத்துச் செல்கிறது. ஒரு கோப்பை தேநீருக்குள் சூழ்ச்சி, சுரண்டல், கயமை, லாபவெறி, ஆதிக்கம் அனைத்தும் அடங்கியிருக்கும் என்று என்றாவது நினைத்துப் பார்த்திருப்போமா?

    or 3 X Rs. 730.00 with Koko Koko
    Read more
  • Out of Stock

    ஹரித்ரா நதி

    Rs. 1,490.00
    or 3 X Rs.496.67 with

    ஆர்.வி.எஸ்

     

    ஹரித்ரா நதி நாஸ்டால்ஜியா என்ற நனைவிடைத் தோய்தல் எப்போதும் வசீகரமானது. எழுத்தாளரும் வாசகரும் சேர்ந்து அமர்ந்திருக்கும் பள்ளிக்கூட வகுப்பு மர பெஞ்ச் அது. உத்தமதானபுரம் பற்றி எழுதி ‘என் சரித்திரம்’ என்ற தம் வரலாற்றைத் தொடங்கிய தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யரும், தாம் பிறந்த சிவகங்கை பற்றி எழுதிய கவியோகி சுத்தானந்த பாரதியாரும், வலங்கைமான் குறித்து எழுதிய ரைட் ஹானரபில் ஸ்ரீனிவாச சாஸ்திரியாரும், யாழ்ப்பாணம் பற்றிக் கட்டுரை வடித்த எஸ்.பொன்னுதுரையும் சந்திக்கும் காலம், இடம் கடந்த வெளி இந்த பிள்ளைப் பருவ நினைவுப் பரப்பு. பின்னாட்களில் சுஜாதாவின் ‘ஸ்ரீரங்கத்துத் தேவதை’யில் இந்த ழானர் (எஞுணணூஞு) புத்துயிர் பெற்றது. எவ்வளவு எழுதினாலும், எவ்வளவு படித்தாலும் நினைவுகளை அசைபோட்டு நடக்கும் உலா அலுப்பதே இல்லை. நானும் எழுதியிருக்கிறேன்.
     

    இப்போது பளிச்சென்று ஒளிரும் நட்சத்திரமாக ஆர்.வி.எஸ், மன்னார்குடி நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார். பொங்கிக் கரை புரண்டு வரும் காவிரி போல நினைவலைகள் தன் பதின்ம வயதைத் தொட்டுத் தொட்டுத் திரும்ப, நண்பர் ஆர்.வி.எஸ் இந்தப் புத்தகத்தில் நனவிடைத் தோய்ந்திருக்கிறார். 1980-களின் மன்னையைத் தெப்பம் போல் ஹரித்ராநதியில் மிதக்க விட்டுக் காலப் பிரவாகத்தில் முன்னும் பின்னும் சுற்றி வந்து பழைய ஞாபகங்களை அகழ்ந்தெடுத்துப் பங்கு போட்டுக்கொள்கிறார் ஆர்.வி.எஸ். நானும் இதை வாசிக்கிற நீங்களும் கடந்து வந்த தெரு, நினைவில் விரியும் ஹரித்ராநதிக் கரை வீதி. ஆர்.வி.எஸ் கையைப் பிடித்துக் கொண்டு பராக்குப் பார்த்தபடி வலம் வருகிறோம்.

    or 3 X Rs. 496.67 with Koko Koko
    Read more