Category
- Novel
- University Magazine
- சிறுவர் புத்தகம் ( Children Books )
- English Books
- Physics
- Poetry
- Environment & Nature
- Science
- Investment & Strategy
- Medicine
- Linguistics
- Astronomy
- Atheism & Agnosticism
- (Auto)Biography & Memoir
- Biological Sciences
- Business
- Career & Success
- Oil Politics
- Communication Skills
- Creativity
- Digital Marketing & E-commerce
- Economics
- Artificial Intelligence
- Education & Research
- Entrepreneurship
- Health & Nutrition
- History
- Love & Relationships
- Management & Leadership
- Marketing & Sales
- Mental Health
- Mathematics & Physics
- Mindfulness & Happiness
- Money & Investment
- Motivation & Inspiration
- Parenting
- Personal Development
- Personal Finance
- Philosophy
- Politics
- War
- Popular Science
- Productivity
- Psychology
- Religion & Spirituality
- Society & Culture
- Sports
- Travel & Adventure
- Technology & the Future
- True Crime
- Venture Capital
- Women Empowerment
- தமிழ் Books
- இயற்கை
- இயற்பியல்
- உயிரியல்
- கட்டுரை
- கணிதம்
- கதைகள்
- சிறுகதைகள்
- சிறுவர் புத்தகங்கள்
- நாவல்
- பயணக்குறிப்பு
- பொதுவுடைமை
- வானவியல்
- விவசாயம்
- வேதியியல்
- அரசியல்
- ஆரோக்கியம்
- உத்வேகம் & ஊக்கம்
- உற்பத்தித்திறன்
- உளவியல்
- புனைவு
- காதல் மற்றும் உறவு
- சமூகவியல்
- சுயசரிதைகள் மற்றும் நினைவுகள்
- சுயமுன்னேற்றம்
- தத்துவஞானம்
- தலைமைத்துவம்
- தொழில் மற்றும் வெற்றி
- தொழில்நுட்பம் & எதிர்காலம்
- பொருளாதாரம்
- பங்குச்சந்தை
- தொழில்முனைவு
- நெட்வொர்க் மார்க்கெட்டிங்
- போர்
- பணம்
- மதம் & ஆன்மீகம்
- வணிகம் & மேலாண்மை
- வரலாறு
- விஞ்ஞானம் & பிரபல அறிவியல்
- சினிமா
- கவிதைகள்
- மன ஆரோக்கியம்
- குழந்தை வளர்ப்பு
- குற்றம்
- மருத்துவம்
- மொழி
- கிளாசிக்ஸ்
Product categories
- English Books
- (Auto)Biography & Memoir
- Artificial Intelligence
- Astronomy
- Atheism & Agnosticism
- Biological Sciences
- Business
- Career & Success
- Communication Skills
- Creativity
- Digital Marketing & E-commerce
- Economics
- Education & Research
- Entrepreneurship
- Environment & Nature
- Health & Nutrition
- History
- Humor
- Investment & Strategy
- Linguistics
- Love & Relationships
- Management & Leadership
- Marketing & Sales
- Mathematics & Physics
- Medicine
- Mental Health
- Mindfulness & Happiness
- Money & Investment
- Motivation & Inspiration
- Oil Politics
- Parenting
- Personal Development
- Personal Finance
- Philosophy
- Physics
- Poetry
- Politics
- Popular Science
- Productivity
- Psychology
- Religion & Spirituality
- Science
- Society & Culture
- Sports
- Technology & the Future
- Travel & Adventure
- True Crime
- Venture Capital
- War
- Women Empowerment
- Novel
- University Magazine
- சிறுவர் புத்தகம் ( Children Books )
- தமிழ் Books
- அரசியல்
- ஆரோக்கியம்
- இயற்கை
- இயற்பியல்
- உத்வேகம் & ஊக்கம்
- உயிரியல்
- உற்பத்தித்திறன்
- உளவியல்
- கட்டுரை
- கணிதம்
- கதைகள்
- கவிதைகள்
- காதல் மற்றும் உறவு
- கிளாசிக்ஸ்
- குற்றம்
- குழந்தை வளர்ப்பு
- சமூகவியல்
- சினிமா
- சிறுகதைகள்
- சிறுவர் புத்தகங்கள்
- சுயசரிதைகள் மற்றும் நினைவுகள்
- சுயமுன்னேற்றம்
- தத்துவஞானம்
- தலைமைத்துவம்
- தொழில் மற்றும் வெற்றி
- தொழில்நுட்பம் & எதிர்காலம்
- தொழில்முனைவு
- நாவல்
- நெட்வொர்க் மார்க்கெட்டிங்
- பங்குச்சந்தை
- பணம்
- பயணக்குறிப்பு
- புனைவு
- பொதுவுடைமை
- பொருளாதாரம்
- போர்
- மதம் & ஆன்மீகம்
- மன ஆரோக்கியம்
- மருத்துவம்
- மொழி
- வணிகம் & மேலாண்மை
- வரலாறு
- வானவியல்
- விஞ்ஞானம் & பிரபல அறிவியல்
- விளையாட்டு
- விவசாயம்
- வேதியியல்
வீரயுக நாயகன் வேள்பாரி (VOL-I & II) / Velpaari
Rs. 11,890.00 Rs. 10,990.00

சு.வெங்கடேசன்
தன்னலமற்ற கொடை உள்ளத்தாலும், அன்புவழிப்பட்ட வாழ்வியல் மரபாலும் பாரியின் புகழ் தமிழ் நிலம் எங்கும் பரவியது. மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர்கள் அவன் புகழ் கண்டு வெதும்பினர். பறம்பு நாட்டின் நிலவளம் அவர்களின் கண்களை உறுத்தியது.
பாரிக்கு எதிராகத் தனித்தனியே அவர்கள் மேற்கொண்ட போர் முயற்சிகள் கைகூடவில்லை. இறுதியில் மூவேந்தர்களும் ஒன்றிணைந்தனர். அவர்களின் கூட்டுப்படை பாரியின் பறம்பு நாட்டை அனைத்துத் திசைகளில் இருந்தும் ஒருசேரத் தாக்கியது. சின்னஞ்சிறு `டிராய்’ நகரின் மீது மொத்த கிரேக்கப் படையும் போர் தொடுத்ததைப் போலத்தான் இதுவும் நிகழ்ந்தது.
பெரும் நிலப்பரப்பை ஆண்ட மூவேந்தர்களின் கூட்டுப்படை, ஒரு குறுநில மன்னனால் சிதறடிக்கப்பட்டது. அதன் பின் மூவேந்தர்களும் ஒன்றாய் சதிசெய்து, வஞ்சினம் நிகழ்த்தி, பாரியின் உயிர் பறித்தனர். வீரத்தால் சாதிக்க முடியாததை துரோகம் செய்து முடித்தது. இயற்கைக்கும் மனிதனின் பேராசைக்கும் இடையில் இன்று நடக்கும் போராட்டத்தின் ஆதிவடிவம்தான் வேள்பாரியின் கதை. திரும்பும் திசையெல்லாம் அருவி கொட்டும் குறிஞ்சி நிலத்தில், அந்த அருவி நீரினும் குழுமையுடை பாரியின் கரம்பற்றி நடக்க வாருங்கள்…
Out of stock
Notify me when stock available
Book Specifications
Title: வீரயுக நாயகன் வேள்பாரி
Author: சு.வெங்கடேசன்
Translator:
Language: Tamil
Binding: Hardcover
Pages:
Weight: 1Kg 900g
Published Year: 2019
Publisher: Vikatan Prasuram
ISBN:
Dimensions:
Print size: Please feel free to drop us a message.
Related products
-
செங்கிஸ்கான்
Rs. 1,090.00or 3 X Rs.363.33 withRead moreமுகில்
உலகையே கட்டியாளப் போகிறேன் என்று கிளம்பியவர்கள் சிலர். அதில் வெற்றி பெற்றவர்கள் வெகு சிலரே. அவர்களில் முதன்மையானவர் மங்கோலியப் பேரரசர் செங்கிஸ்கான்.
சுமார் எண்ணூறு வருடங்களுக்கு முன் வாழ்ந்தவர் என்றாலும் இன்றுவரை செங்கிஸ்கான் மீதான மிரட்சியும் ஆச்சரியமும் அச்சமும் குறையாமலிருப்பதற்கான காரணம், உயிரை உலுக்கும் போர்த் தந்திரங்கள் மட்டுமல்ல. அவரது ஆளுமைத் திறனும்தான்.
ஒரு சாதாரண மங்கோலிய நாடோடிக் கூட்டத்தில் செங்கிஸ்கான் பிறந்தபோது, மங்கோலியா என்ற ஒரு தேசமே கிடையாது. செங்கிஸ்கான் ஒரு கனவு கண்டார். சிதறிக் கிடக்கும் இனக்குழுக்களை ஒன்று சேர்க்க வேண்டும். புத்தம் புதிய தேசத்தை உருவாக்கவேண்டும். உலகமே அண்ணாந்து பார்த்து வியக்கும் வகையில் ஒரு மகா பேரரசைக் கட்டியமைக்கவேண்டும்.
அசாதாரணமான கனவு. ஆனால் அதை நிறைவேற்றுவதற்கான துடிதுடிப்பும் துணிச்சலும் உத்வேகமும் உக்கிரமும் செங்கிஸ்கானிடம் இருந்தது. கடுமையும் கல்பாறை மனமும் கொண்டவராகத் தன்னை உருமாற்றிக் கொண்டார். எதிரிகளை அழித்தொழிப்பதற்கான சூத்திரங்களை மட்டுமல்ல, கனவுகளைச் சாத்தியமாக்குவதற்கான கலையையும் செங்கிஸ்கானிடம் இருந்தே கற்றுக்கொண்டது உலகம். செங்கிஸ்கான் பற்றி தமிழில் வெளிவரும் முதல் நூல் இது.
-
மெயின் காம்ஃப் / Mein Kampf
Rs. 1,950.00or 3 X Rs.650.00 withAdd to cartஅடால்ஃப் ஹிட்லர்
“Mein Kampf” என்பது அடால்ஃப் ஹிட்லர் 1920 களின் முற்பகுதியில் சிறையில் இருந்த காலத்தில் எழுதிய புத்தகம். ஹிட்லரின் அரசியல் சித்தாந்தம் மற்றும் நம்பிக்கைகள், அவரது தீவிர யூத-விரோதக் கருத்துக்கள், ஆரிய இனத்தின் மேன்மை பற்றிய நம்பிக்கை மற்றும் ஜெர்மனியில் ஒரு சர்வாதிகார அரசை உருவாக்குவதற்கான அவரது விருப்பம் உள்ளிட்டவற்றை புத்தகம் கோடிட்டுக் காட்டுகிறது.
இந்த புத்தகம் அதன் இனவெறி மற்றும் யூத-விரோத உள்ளடக்கம் மற்றும் இரண்டாம் உலகப் போரின் போது நாஜி ஆட்சி செய்த அட்டூழியங்களுடனான அதன் தொடர்பு காரணமாக மிகவும் சர்ச்சைக்குரிய மற்றும் புண்படுத்தும் படைப்பாக பரவலாகக் கருதப்படுகிறது. இது பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது மற்றும் பொதுவாக வெறுப்பு மற்றும் சகிப்புத்தன்மையின் அடையாளமாக பார்க்கப்படுகிறது.
-
வால்காவிலிருந்து கங்கை வரை (Volgavilirundhu Gangai Varai)
Rs. 2,790.00Rs. 2,290.00or 3 X Rs.763.33 withRead moreராகுல சாங்கிருத்தியாயன்
மனித சமுதாயத்தின் தோற்றம், வளர்ச்சி, நாகரிகம் பற்றி தத்துவரீதியாக விளக்கும் மகத்தான சிருஷ்டி இந்தப் புத்தகம். ஆரம்ப நிலை வாசகரும் புரிந்து கொள்ளும்படியான எளிமையான 20 கதைகள். இந்து- ஐரோப்பிய, இந்து- இராணிய சாதிகளின் வரலாற்றை ஆதாரமாகக் கொண்ட ஒவ்வொரு, 8,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து 20ம் நூற்றாண்டு வரைக்குமான, மனித சமுதாய வளர்ச்சியின் ஒவ்வொரு படி! இந்தியாவின் அதிக வாசகர்களால் மிகவும் விரும்பிப் படிக்கப்பட்டது மட்டுமல்லாமல் மதவாதிகளால் அதிகம் தாக்குதலுக்கு உள்ளான புத்தகமும் கூட. தமிழகத்தில் சிந்தனைப் புரட்சிக்கு வித்திட்ட அறிவார்ந்த நூலின் 29 வது அழகிய செம்பதிப்பு இது.
-
பின்லாந்து காட்டும் வழி / 100 Social Innovations from Finland
Rs. 1,990.00or 3 X Rs.663.33 withRead moreஇல்க்கா டாய்பாலே
தமிழில்: காயத்திரி மாணிக்கம்
நீண்ட காலமாக பின்லாந்தும் மற்ற நாடுகளைப் போலவே பொருளாதார முன்னேற்றத்துக்கும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கும்தான் அதிக முக்கியத்துவம் கொடுத்துவந்தது. மிகச் சமீபத்தில்தான் இந்தச் சிந்தனைமுறையில் ஆச்சரியப்படத்தக்க ஒரு திருப்புமுனை நிகழ்ந்தது. மக்களே நாட்டின் மையம், அவர்களுடைய சமூக வாழ்க்கையை மாற்றி அமைப்பதே உண்மையான வளர்ச்சி என்பதை பின்லாந்து புரிந்துகொண்டது. அதன் பிறகு அடுத்தடுத்து அந்நாட்டில் மலர்ந்த சமூகக் கண்டுபிடிப்புகள் பின்லாந்தைத் தனித்துவம் மிக்க ஒரு நாடாக உலக அரங்கில் உயர்த்தியது. -
இலங்கையில் சிங்களவர்: இந்திய இனத் தொடர்ச்சியும் தென்னிந்தியப் பண்பாட்டு நீட்சியும்
Rs. 890.00or 3 X Rs.296.67 withRead moreபக்தவத்சல பாரதி
இலங்கை என்றாலே நம் நினைவுக்கு வருவது புத்தமதமும் இனப் பிரச்சினையும்தான். ஆனால் இன்றைய இலங்கை சுமார் ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தனித் தீவல்ல, இந்தியாவின் நீட்சியாகவே இருந்தது.
அப்படியானால் சிங்களவர் யார், அவர்களின் பூர்வீகம் என்ன, எங்கிருந்து சென்றார்கள் போன்ற வினாக்களுக்கு பக்தவத்சல பாரதியின் இந்நூல் சமூக-பண்பாட்டு மானிடவியல் நோக்கில் விடையளிக்கிறது.
இதை, சிங்கள மொழி, சிறீலங்கா உருவாக்கம், இனத்துவம் போன்றவற்றினூடாக சிங்களவர்களின் பண்பாடு, சாதிமுறை, திருமணம், அவர்களிடையே நிலவும் உறவுமுறை முதலியவற்றையும் தனித்தனி இயல்களில் காட்சிப்படுத்துகிறார்.
சிங்களவர்கள் இந்திய இனத் தொடர்ச்சி கொண்டவர்கள் என்றாலும் மரபணு (டிஎன்ஏ) ரீதியான நெருக்கம் தமிழர்களுடன்தான் அதிகம் என்றும், அவர்கள் தென்னிந்தியப் பண்பாட்டு நீட்சி கொண்டவர்கள் என்றும் பாரதி கூறுவது ஆர்வமூட்டுவதாய் இருக்கின்றன.
இதற்காக சிங்களவர்கள் பௌத்தர்களாயினும் பத்தினித் தெய்யோ (கண்ணகி), கதரகமத் தெய்யோ (முருகன்) உள்ளிட்ட இன்னும் பல தமிழ்த் தெய்வங்களை எவ்வாறு வழிபடுகின்றனர் என்பதில் தொடங்கி தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் உள்ள உறவையும் திராவிட உறவுமுறையை அவர்கள் பின்பற்றும் விதத்தையும் விவரிக்கின்றார்.
மேலும் சிங்களவர்கள் இந்தோ-ஆரிய மொழி பேசினாலும் தமிழ் இலக்கண மரபைப் பின்பற்றும் விதத்தையும் அவர்களின் இயல், இசை, நாடகத்தில் திராவிடத்தின் தாக்கம் பெற்றுள்ளதையும் பாரதி தமது களப்பணி அனுபவத்தின் மூலம் விவரிப்பது இனப்பகையூட்டப்பட்டச் சூழலில் புதிய வெளிச்சத்தைத் தருவதாய் இருக்கின்றது.
இதன் மூலம் இனவேறுபாடுகளுக்கு அப்பால் அறிவார்ந்த புதிய உலகத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறது இந்தப் புத்தகம். இவையே இந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது.
-
இந்தியா அடிமைபடுத்தப்பட்ட வரலாறு / The Theft of India
Rs. 2,190.00or 3 X Rs.730.00 withAdd to cartராய் மோக்ஷாம்
நம் நாடு பல காலம் அந்நியர்களுக்கு அடிமைப்பட்டுக்கிடந்தது; நீண்ட நெடியப் போராட்டங்களுக்குப் பிறகு நாம் விடுதலை பெற்றோம். நாமனைவரும் அறிந்த இந்த ஒற்றை வரியை நீட்டி, விவரித்தால் உலுக்கியெடுக்கும் வரலாறு உயிர்பெற்று வருகிறது. போர்ச்சுகல், டச்சு, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகள் இந்தியாவை எப்படி ஆக்கிரமித்தன? இந்த ஆக்கிரமிப்புகள் நம் உடலையும் உள்ளத்தையும் எவ்வாறு பாதித்தன? நம் நிலமும் கடலும் பண்பாடும் பொருளாதாரமும் வாழ்வியலும் எத்தகைய பேரழிவுகளைச் சந்தித்தன? இவற்றையெல்லாம் இந்தியா எவ்வாறு எதிர்கொண்டது? மூன்று நூற்றாண்டுகளாக இந்தியா அனுபவித்த கணக்கற்ற வதைகளையும் வலிகளையும் இந்நூல்மூலம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறார் ராய் மாக்ஸம். வணிகத்தின் பெயரால் தொடங்கிய கப்பல் பயணம் எவ்வாறு கொலை, கொள்ளை, பட்டினி, பஞ்சம் என்று முற்றிலும் சீரழிவுப் பாதையில் சென்று முடிந்தது என்பதை அதிர வைக்கும் சான்றுகளோடு வெளிப்படுத்துகிறது. -
இரண்டாம் உலகப் போர்
Rs. 2,490.00or 3 X Rs.830.00 withRead moreமருதன்
மனித குலம் அறிந்திராத பயங்கரங்களை அநாயசமாக நிகழ்த்திக்காட்டியது இரண்டாம் உலகப்-போர். போரின் மையம் ஐரோப்பா என்றாலும் அது ஏற்படுத்திய பேரழிவும் நாசமும் உலகம் முழுவதையும் உலுக்கி எடுத்தது. சிலருக்கு இது ஆக்கிரமிப்புப் போர். சிலருக்குத் தற்காப்பு யுத்தம். சிலருக்கு, பழிவாங்கல். சிலருக்கு விடுதலைப் போர். இன்னும் சிலருக்கு, இது ஒரு லாபம் கொழிக்கும் வியாபாரம். திடீரென்று ஒரு நாள் வெடித்துவிட்ட யுத்தமும் அல்ல. மிகக் கவனமாகத் தயாரிக்கப்பட்டு, தெளிவாகத் திட்டமிடப்பட்டு, தகுந்த முன்னேற்பாடுகளுடன் நிகழ்த்தப்பட்ட மிருகத்தனம். அரசியல், சமூக, வரலாற்றுப் பின்புலத்தில் இரண்டாம் உலகப் போரை விரிவாக விவரித்து, அலசுகிறார் மருதன்.
-
நெப்போலியன்: போர்க்கால புயல்
Rs. 890.00or 3 X Rs.296.67 withRead moreஎன். சொக்கன்
கில்லட்டின் காதலர், கலகக்காரர், போர்வெறி பிடித்தவர், சர்வாதிகாரி, சூழ்ச்சிக்காரர் என்று நெப்போலியன் பற்றிய நெகட்டிவ் பார்வைகள் நிறையவே உண்டு. மாவீரன், லட்சியவாதி, தன்னம்பிக்கைச் சக்கரவர்த்தி, போர் வித்தகர், காதலில் கரைகண்டவர் என்று பாஸிட்டிவ் விஷயங்களையும் பக்கம் பக்கமாகப் பேசலாம். உண்மையில் நெப்போலியன் யார்? லட்சியம் கண்ணை மறைக்க, ரத்தவெறி பிடித்து அலைந்தவரா? அல்லது சூழ்நிலை காரணமாக அப்படியொரு மாயச்சுழலில் மூழ்கடித்துக் கொல்லப்பட்டவரா? வறுமையால் ஆளப்பட்டவரால், எப்படி உலகை ஆளும் பேரரசராக மாற முடிந்தது? இந்த வளர்ச்சி நேர்மையானதா?
இல்லை, கூர்மையான வாளின் முனையால் கொண்டுவரப்பட்டதா? கிடுகிடுவென்று உச்சத்தை நோக்கிச் சென்ற நெப்போலியன், அதைவிட இருமடங்கு வேகத்தில் படுபாதாளத்தில் விழுந்து மறைந்தாரே, அந்த வீழ்ச்சியின் பின்னணி என்ன? இந்தக் கேள்விகளுக்குள்தான், நிஜமான நெப்போலியன் ஒளிந்திருக்கிறார். ஒரு மாமன்னரின் வாழ்க்கை மட்டுமல்ல இது. ஒரு சாமானிய சிப்பாய், பேரரசராக உயர்ந்த வெற்றிக்கதையும் கூட.
-
விஜயநகர பேரரசு
Rs. 1,690.00or 3 X Rs.563.33 withஎஸ். கிருஷ்ணன்
தமிழகத்தைச் சுமார் 200 ஆண்டுகள் ஆட்சி செய்து தங்கள் முத்திரையை வலுவாகப் பதித்துவிட்டுச் சென்றிருக்கிறது விஜயநகரப் பேரரசு. 14ஆம் நூற்றாண்டு முற்பகுதியில் உதயமான இந்தப் பேரரசுக்கு மற்ற அரசுகளுக்கு இல்லாத ஒரு பெரும் கடமை இருந்தது. அது, தென்னாட்டைப் பெரும் சீரழிவிலிருந்து மீட்கும் பணி.
நிலையற்ற அரசும் கொந்தளிப்பான தன்மையும் நிலவிய மோசமான சூழலிருந்து நாட்டை மீட்டுச் செம்மைப்படுத்தினார்கள் விஜயநகர மன்னர்கள். நிர்வாகச் சீர்திருத்தங்கள், பொருளாதார மேன்மை, நீர்ப்பாசனம் என்று தொடங்கி அடிப்படையான மாற்றங்களைக் கொண்டுவந்ததன்மூலம் தென்னகத்தை அவர்கள் தலைநிமிரச் செய்தார்கள். கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில், இடைவிடாத போர்களுக்கு நடுவில் இந்தியாவின் வரலாற்றை விஜயநகரப் பேரரசு அழுத்தந்திருத்தமாக மாற்றி எழுதியது.
விஜயநகரப் பேரரசு எப்படி உருவானது? எந்தெந்த மன்னர்களெல்லாம் ஆண்டனர்? கிருஷ்ணதேவராயர் வகித்த பாத்திரம் எத்தகையது? அவர்களுடைய ஆட்சிமுறை எப்படி இருந்தது? படைபலம் எத்தகையது? கலை, கட்டுமானம், பொருளாதாரம், சமயம் போன்ற துறைகள் எத்தகைய மாற்றங்களைச் சந்தித்தன? எஸ். கிருஷ்ணனின் இந்நூல் விஜயநகரப் பேரரசு பற்றிய மிகச் சிறப்பான பருந்துப் பார்வையை அளிக்கிறது.
நெப்போலியன்: சாமானியன் சக்ரவர்த்தியான சாதனைச் சரித்திரம்
Rs. 2,290.00or 3 X Rs.763.33 withRead moreஎஸ். எல். வி. மூர்த்தி
சாதாரணன் – சிப்பாய் – தளபதி – மன்னன் – சக்கரவர்த்தி – கைதி. மாவீரன் நெப்போலியனின் வாழ்க்கையை இப்படி ஆறே வார்த்தைகளில் சுருங்கச் சொல்லிவிடலாம். ஆனால், இந்த ஆறு வார்த்தைகளுக்குப் பின்னால் புதைந்து கிடக்கும் பேருண்மைகள் அதி ஆழமானவை, மிக அழுத்தமானவை. பால்ய காலத்தில் வறுமையைச் சுவைத்து, வெளியில் சொல்ல முடியாத அவலங்களை விழுங்கி, வளர்ந்த எந்த ஒரு மனிதனும் விதியின் புதைகுழியில் சிக்கி முகவரியே இல்லாமல் போயிருப்பான். ஆனால், தன்னம்பிக்கையின் முகவரியாகத் துளிர்த்து, தழைத்து, விழுதுவிட்டு வளர்ந்து நின்றவன் நெப்போலியன். எதிர்வந்த சிரமங்கள் எப்பேர்ப்பட்டதெனினும் அவற்றை ரோமங்களாகக் கருதி ஊதித் தள்ளும் மனோதிடம் இந்த மாவீரனின் தனிச்சிறப்பு. அந்த மனோதிடமும் தன்னம்பிக்கையும் நெப்போலியனுக்குள் நிலைபெற்றது எப்படி என்பதை நுணுக்கமாகப் படம் பிடித்திருப்பது இந்நூலின் தனிச்சிறப்பு.
மாணவனாக இருந்தபோதே மனத்தளவில் போரிட்டுப் பழகியவன், வெறும் சிப்பாயாகத் தடம் பதித்தபோதே தலைமைத் தளபதிக்கு இணையாக இயங்கியவன், தளபதியாக உயர்ந்தபோதே சக்கரவர்த்தி சிம்மாசனத்தை நோக்கி வீரத்துடன் நகர்ந்தவன் – நெப்போலியன் எப்போதும் வருங்காலத்தை நிகழ்காலத்தில் வாழ்ந்து பார்த்தவன். இவன், மெய்யான மாவீரன் மட்டுமல்ல, கூர்த்த மதிகொண்ட அரசியல்வாதி; நேர்த்தியான நிர்வாகி; கிடைக்கும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு முன்னேறிச் செல்வதில் நிகரற்றவன்! யுத்தத்தைக் காதலிக்கும் நெப்போலியனுக்குள் புதைந்துகிடக்கும் பெண்பித்தன் எப்போது வேண்டுமானாலும் விழித்தெழுவான். இந்நூலில் எஸ்.எல்.வி. மூர்த்தியின் ‘குதிரைப் பாய்ச்சல் மொழி’, வெறும் போர்கள் வழியே நெப்போலியனின் வீர பிம்பத்தைக் கட்டமைக்காமல், ஒரு சாமானியனின் மகன், படிப்படியாக பிரான்ஸின் சக்கரவர்த்தியாகப் உருவெடுத்த பிரமாண்டத்தைத் தத்ரூபமாக விவரிக்கிறது. உலகம் போற்றும் ஒப்பற்ற மாவீரனை அங்குலம் அங்குலமாகத் தரிசிக்கும் பேரனுபவத்துக்குத் தயாராகுங்கள்!