Opening Possibilities, Illuminating Potentials
Delivery in 1-5 business days. Island-wide Free Delivery for Purchase of Rs. 3990 or above.

Cart

Your Cart is Empty

Back To Shop
Contact Us 0764980321
Sale!

மூலதனம் தொகுப்பு / Muladhanam Thoguppu

Original price was: Rs. 26,970.00.Current price is: Rs. 22,940.00.

கார்ல் மார்க்ஸ், டேவிட் ஹார்வி, தாமஸ் பிக்கெட்டி

 

மார்க்ஸின் மூலதனத்திற்கு ஒரு வழிகாட்டி

 

இந்த நூலின் ஆசிரியர் டேவிட் ஹார்வி கடந்த நாற்பது ஆண்டுகளாக ‘மார்க்ஸின் மூலதனம்’ குறித்து தொழிலாளர் உள்ளிட்ட அனைத்து தரப்பினர்க்கும் வகுப்புகள் நடத்திய அனுபவம் கொண்டவர்.

 

மார்க்ஸின் இயக்கவியல் முறையால் கவரப்பட்ட டேவிட் ஹார்வி அதன்வழியாக ஏகாதிபத்தியத்தின் உலகமயமாக்கலை ஊடுருவிப் பார்க்கிறார். அவரது இந்நூல் மூலதனம் நூலுக்கு ஒரு வழிகாட்டி மட்டுமல்ல, அரசியல் நோக்கமும் கொண்டதாகும்.

 

மூலதனக் குவிப்புக்கு எதிரான அரசியல் போராட்டமானது எந்தளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை எடுத்துரைப்பதுடன், பாரம்பரியமான தொழிலாளி வர்க்கப் போராட்டத்தையும் உயர்த்திப்பிடிக்கிறது. ஏகாதிபத்தியம், இப்போதும் புதிய சந்தைகளுக்காக ஒடுக்குமுறையான அரசியல் மற்றும் ராணுவ வழிமுறைகளை கையாள்கிறது என்பதையும் இந்நூல் பகிரங்கப்படுத்துகிறது.

 

21 ஆம் நூற்றாண்டில் மூலதனம்

 

பத்தொன்பாதம் நூற்றாண்டின் கடைசிக் காலாண்டிலும். இருபதாம் நூற்றாண்டில் முதல் இரு காலாண்டுகளிலும் பிரிட்டனில் ஏற்ப்பட்ட வளர்ச்சியைப் பார்க்கும் போது இதே காலகட்டத்தில் இந்தியாவில் தனிநபர் உண்மை வருமானம் வீழ்ச்சியடைந்ததையும் கோடிக்கணக்கான மக்கள் பஞ்சத்தில் மாண்டதையும் இணைத்துப் பார்ப்பதை தவிர்க்க முடியாது.

 

தொழிற்சங்கங்களை நசுக்கினால் வேலைவாய்ப்பு பெருகும் என்பது இந்தியா உள்ளிட்ட நாடுகளில் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்களின் கோரிக்கையாகும். முதலாளித்துவம் ஏற்படுத்தும் ஏற்றத்தாழ்வைப் பற்றிய விரிவான ஆய்வு நூல்.

 

மூலதனம் 

 

“நான் லண்டனில் வசிப்பதால், எனது கட்சித் தொடர்புகளெல்லாம் குளிர்காலத்தில் கடிதப் போக்குவரத்தோடு சரி; கோடையிலோ அவை பெரும்பாலும் நேர்முகமாகவே நடைபெறும். இந்த நிலைமையும், சீராக அதிகரித்து வரும் எண்ணிக்கையிலான ஏடுகளிலும் இயக்கத்தைக் கவனிக்கவேண்டிய அவசியமும், ஓரளவு சீராக நடைபெற்று வரும் கட்சி விவகாரங்களைக் கவனிப்பதற்கு குளிர்கால மாதங்களை, குறிப்பாக, ஆண்டின் முதல் மூன்று மாதங்களை ஒதுக்கிக் கொள்ளுமாறு என்னை நிர்ப்பந்தித்துள்ளன.

 

பொதுவாக, ஒரு மனிதனின் வயது எழுபதைத் தாண்டியிருக்கும் போது, அவனது மூளையின் மெய்னெர்ட் இணைப்பு நரம்புகள் எரிச்சலூட்டக் கூடிய அளவில் மதமதப்புடன் செயல்படுகின்றன. இந்நிலையில், கையாளுவதற்குக் கடினமான மெய்யியல் சிக்கல்களில் அவ்வப்போது ஏற்படும் தடங்கல்களை அவன் முன்போல சுலபமாகவும் துரிதமாகவும் சமாளிப்பதில்லை. ஆகவே, ஒரு குளிர்காலத்தில் முடிக்கப்பட வேண்டிய பணி எதிர்பார்த்தபடி பூர்த்தியாகாவிட்டால், அடுத்த குளிர்காலத்தில் அதே பணியை பெரும்பாலும் புதிதாகத் தொடங்க வேண்டிய நிலைமையே ஏற்பட்டது.

 

மூலதனம் நூலில் மிகமிகக் கடினமான ஐந்தாம் பகுதியைப் பதிப்பிப்பதில் நடந்தது இதுவே!”

 -எங்கெல்ஸ் முன்னுரையிலிருந்து

Out of stock

Notify me when stock available

Book Specifications

Title: மூலதனம்

Binding: Paperback

Pages: 4483

Published Year: 2014

Publisher:

ISBN: 9788123405889

 

Title: 21 ஆம் நூற்றாண்டில் மூலதனம்

Binding: Paperback

Pages:

Published Year: 2018

Publisher: பாரதி புத்தகாலயம்

ISBN: 9789388126076

 

Title: மார்க்ஸின் மூலதனத்திற்கு ஒரு வழிகாட்டி

Binding: Paperback

Pages: 492

Published Year: 2012

Publisher: பாரதி புத்தகாலயம்

ISBN: 9789381908624

Reviews

There are no reviews yet.

Be the first to review “மூலதனம் தொகுப்பு / Muladhanam Thoguppu”

Your email address will not be published. Required fields are marked *