Category
- University Magazines
- சிறுவர்களுக்கான புத்தகங்கள்
- Children Books
- English Books
- Book Bundles
- Current Affairs
- Military & Intelligence
- Short Stories
- Fiction
- Poetry
- Environment & Nature
- Science
- Medicine
- Linguistics
- Atheism & Agnosticism
- (Auto)Biography & Memoir
- Business & Management
- Creativity
- Economics
- Education & Research
- Health & Nutrition
- History
- Humor
- Love & Relationships
- Parenting
- Personal Development
- Personal Finance
- Philosophy
- Politics
- War
- Psychology
- Religion & Spirituality
- Society & Culture
- Sports
- Travel & Adventure
- Technology & the Future
- True Crime
- Women Empowerment
- தமிழ் Books
- Book Bundles ( தமிழ் )
- சட்டம்
- இயற்கை
- கட்டுரை
- கணிதம்
- பயணக்குறிப்புகள்
- விவசாயம்
- அரசியல்
- ஆரோக்கியம்
- உளவியல்
- புனைவு
- காதல் மற்றும் உறவு
- சமூகவியல்
- சுயசரிதைகள் மற்றும் நினைவுகள்
- சுயமுன்னேற்றம்
- தத்துவஞானம்
- தொழில்நுட்பம் & எதிர்காலம்
- பொருளாதாரம்
- போர்
- பணம்
- மதம் & ஆன்மீகம்
- வணிகம் & மேலாண்மை
- வரலாறு
- விஞ்ஞானம் & பிரபல அறிவியல்
- விளையாட்டு
- சினிமா
- கவிதைகள்
- குழந்தை வளர்ப்பு
- குற்றம்
- மருத்துவம்
- மொழி
Product categories
- Children Books
- English Books
- (Auto)Biography & Memoir
- Atheism & Agnosticism
- Book Bundles
- Business & Management
- Creativity
- Current Affairs
- Economics
- Education & Research
- Environment & Nature
- Fiction
- Health & Nutrition
- History
- Humor
- Linguistics
- Love & Relationships
- Medicine
- Military & Intelligence
- Parenting
- Personal Development
- Personal Finance
- Philosophy
- Poetry
- Politics
- Psychology
- Religion & Spirituality
- Science
- Short Stories
- Society & Culture
- Sports
- Technology & the Future
- Travel & Adventure
- True Crime
- War
- Women Empowerment
- University Magazines
- சிறுவர்களுக்கான புத்தகங்கள்
- தமிழ் Books
- Book Bundles ( தமிழ் )
- அரசியல்
- ஆரோக்கியம்
- இயற்கை
- உளவியல்
- கட்டுரை
- கணிதம்
- கவிதைகள்
- காதல் மற்றும் உறவு
- குற்றம்
- குழந்தை வளர்ப்பு
- சட்டம்
- சமூகவியல்
- சினிமா
- சுயசரிதைகள் மற்றும் நினைவுகள்
- சுயமுன்னேற்றம்
- தத்துவஞானம்
- தொழில்நுட்பம் & எதிர்காலம்
- பணம்
- பயணக்குறிப்புகள்
- புனைவு
- பொருளாதாரம்
- போர்
- மதம் & ஆன்மீகம்
- மருத்துவம்
- மொழி
- வணிகம் & மேலாண்மை
- வரலாறு
- விஞ்ஞானம் & பிரபல அறிவியல்
- விளையாட்டு
- விவசாயம்
ஒரு யோகியின் சுயசரிதம்
Rs. 1,990.00

பரமஹம்ஸ யோகானந்தர்
30–ம் நூற்றாண்டின் மிகச் சிறந்த 100 ஆதங்க நூல்களில் ஒன்று எனப் பெயர் பெற்ற பரமஹம்ஸ் யோகானந்தரின் குறிப்பிடத்தக்க வாழ்க்கை சரித்திரம் உங்கனை. மகான்கள் மற்றும் போகியர், அறிவியல் மற்றும் அதிசயங்கள், மாரணம் மற்றும் உயிர்த்தெழுதலைப் பற்றிய உலகத்தின் மறக்க வொண்ணா ஆராய்ச்சிகளுக்கு அழைத்துச் செல்கின்றது. அவர். ஆன்ம-நிறைவை அளிக்கும் ஞானத்துடனும் அன்பை எழுப்பும் புத்திக் கூர்மையுடனும், வாழ்க்கை மற்றும் பிரபஞ் சத்தினுடைய மிக ஆழ்ந்த இரகசியங்களை விளக்குகிறார் -ஒவ்வொரு மனிதனின் வாழ்க் கையிலும் உள்ள ஆனந்தம், அழகு மற்றும் மறைந்துள்ள எல்லையற்ற ஆன்மீகத் தன்மைகள்.
ஆகியவற்றை நோக்கி நம் இதயங்களையும் மனங்களையும் திறந்த வண்ணம்தான்.இதன் ஆசிரியரால் நிறுவப்பட்ட ஸ்தாபன மாசிய யோகதா சத்சங்க சொஸைடி, ஆஃப் இந்தியா-விடமிருந்து மட்டுமே கிடைக்கப் பெறுகின்ற இந்த முழுமையான பதிப்பு 1946ம் வெருடப் பதிப்பிற்குப் பிறகு அவர் இணைத்த விரிவான விஷயங்களையும் சேர்த்து இறுதி பாலுக்கான அவரது அனைத்து அலாக்களையும் உள்ளடக்கியுள்ளாதாகும்மனம் மற்றும் ஆன்மாவின் ஜன்னால் களைத் திறக்கும் புத்தகம்.
Out of stock
Notify me when stock available
About the author
“மேற்கில் யோகாவின் தந்தை” என்று போற்றப்படும் பரமஹம்ச யோகானந்தர் நம் காலத்தின் சிறந்த ஆன்மீக நபர்களில் ஒருவராக கருதப்படுகிறார். வட இந்தியாவில் பிறந்த அவர், 1920 இல் அமெரிக்காவிற்கு வந்தார், அங்கு அவர் தனது எழுத்துக்கள் மற்றும் போதனைகளை உலகம் முழுவதும் பரப்புவதற்காக சுய-உணர்தல் பெல்லோஷிப்பை நிறுவினார். அவரது சிறந்த விற்பனையான கிளாசிக், ஒரு யோகியின் சுயசரிதை மற்றும் அவரது பல புத்தகங்கள் மூலம், உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கானவர்களுக்கு யோகா தியானத்தின் ஆன்மீகக் கோட்பாடுகள் மற்றும் அனைத்து உலக மதங்களின் அடிப்படையிலான உலகளாவிய உண்மைகளையும் அறிமுகப்படுத்தியுள்ளார்.
Book Specifications
Title: Autobiography of a Yogi / ஒரு யோகியின் சுயசரிதம்
Author: Paramahansa Yogananda / பரமஹம்ஸ யோகானந்தர்
Translator:
Language: Tamil
Binding: Paperback
Pages: 512
Weight: 350g
Published Year: 1946
Tamil Translation Published Year: 2020
Publisher: Fingerprint! Publishing
ISBN: 978-8194898856
Dimensions: 20.3 x 25.4 x 4.7 cm
Print size: Please feel free to drop us a message.
Related products
-
வில்லாளன்
Rs. 1,650.00or 3 X Rs.550.00 withRead moreபாலோ கொயலோ
ஞானத்தைத் தேடி ஒரு முதியவரை நாடி வருகின்ற ஓர் இளைஞனையும், தன் தேடலின் ஊடாக அவன் கற்றுக் கொள்கின்ற பாடங்களையும் பற்றிய உத்வேகமூட்டும் ஒரு கதை இது!
இந்நூலில் நாம் சந்திக்கவிருக்கின்ற தெட்சுயா, ஒரு காலத்தில் தன்னுடைய வில் வித்தைக்குப் புகழ் பெற்றவராக இருந்து, பிறகு பொது வாழ்க்கையிலிருந்து முற்றிலுமாக ஓய்வு பெற்றுள்ளவர். பல கேள்விகளைச் சுமந்து கொண்டு ஓர் இளைஞன் அவரைத் தேடி வருகிறான். அக்கேள்விகளுக்கு பதிலளிப்பதன் வாயிலாக, வில் வித்தையின் நுணுக்கங்களையும் அர்த்தமுள்ள ஒரு வாழ்க்கைக்கான அறநெறிகளையும் தெட்சுயா அவனுக்கு விளக்குகிறார்.
-
தென்னிந்தியாவில் இஸ்லாமியப் படையெடுப்புகள்
Rs. 1,990.00or 3 X Rs.663.33 withஎஸ். கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார்
‘இது தென்னிந்தியா மீது நடைபெற்ற இஸ்லாமியர்களின் படையெடுப்பைப் பற்றி விவரிக்கும் ஓர் அரிய புத்தகம். தென்னிந்தியாவில் இன்னும் கோயில்கள் இருப்பதால், அங்கு இஸ்லாமியர்களின் தாக்குதல்கள் நடைபெறவில்லை. அல்லது அவை மிகக் குறைவாகவே நடந்துள்ளன என்று பலர் கருதுகின்றனர். டெல்லி சுல்தானகத்தால் தென்னிந்தியா எவ்வாறு அழிக்கப்பட்டது என்பதை இந்த அருமையான புத்தகம் கூறுகிறது’ என்கிறார் பத்மஸ்ரீ விருது பெற்ற வரலாற்று ஆசிரியர் மீனாட்சி ஜெயின்.
இந்நூலை எழுதிய எஸ். கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார் வரலாறு, தொல்லியல் துறைகளில் பேராசிரியராகப் பணியாற்றியவர். அரசியல் சாய்வுகளின்றி, தகுந்த ஆதாரங்களோடும் ஏற்கத்தக்க வாதங்களோடும் இஸ்லாமியப் படையெடுப்புகளின் வரலாற்றை உள்ளது உள்ளபடி பதிவு செய்திருக்கிறார்.
சோழப் பேரரசின் வீழ்ச்சியில் தொடங்கி தக்காணத்தில் நடந்த முகமதியர்களின் படையெடுப்புகள், கில்ஜிக்களின் ஆட்சியில் நடைபெற்ற அழிவுகள், துக்ளக்கின் படையெடுப்புகள் என்று விரிந்து செல்கிறது இந்நூல். இந்திய வரலாற்றைப் புரிந்துகொள்ள உதவும் முக்கிய நூல்களுள் ஒன்று என்று இதனைச் சொல்லமுடியும்.
வாரணாவதம்: துரியோதன பர்வம்
Rs. 1,890.00or 3 X Rs.630.00 withRead moreகளம்பூர் பாபுராஜ்
வாரணாவதம் துரியோதனன் பார்வையில் மகாபாரதம். இதிகாசங்களும் புராணங்களும் காற்று, கடல், ஆகாயம் போல் அனைவருக்குமானவை. அவற்றுக்கு எல்லைகள் வகுக்க இயலாது. எந்தக் கோணத்திலிருந்தும் அணுகலாம். எப்படி வேண்டுமானாலும் மறுவாசிப்பு செய்யலாம். எவ்வளவு நட்சத்திரங்கள் இருக்கின்றனவோ அவ்வளவு விதங்களில் அர்த்தப்படுத்திக்கொள்ளலாம்.
மகாபாரதத்தை யாருடைய பார்வையிலிருந்தும் விரித்தெடுக்கலாம். நன்மை தீமை, தர்மம் அதர்மம், நாயகன் வில்லன் ஆகிய இருமைகளைக் கொண்டு மகாபாரதத்தை அணுகுவது ஒரு முறை என்றால் இந்த மதிப்பீடுகளிலிருந்து விலகி, எதிர் நிலையிலிருந்து அதன் கதையைச் சொல்லத் தொடங்குவது இன்னொரு முறை.
இந்நாவலில் மகாபாரதம் துரியோதனின் கோணத்திலிருந்து விரிகிறது. கறுப்பும் வெள்ளையும் கலந்து வியாசர் உருவாக்கிய துரியோதனனை இருள் மனிதனாக மட்டும் சுருக்கிக் காணவேண்டியதில்லை என்று வாதிடும் இந்நாவல் ஒரு புதிய தேடலைத் தொடங்கி வைப்பதோடு நமக்கு நன்கு பரிச்சயமான கோணங்களையும் நிகழ்வுகளையும் புதிய நோக்கில் மறுஆய்வுக்கு உட்படுத்துகிறது. முற்றிலும் புதிய, வண்ணமயமான ஒரு மகாபாரதத்தை வாசிக்கத் தயாராகுங்கள்.
மாபெரும் இரகசியம் Maperum Irakasiyam ( The Greatest Secret )
Rs. 4,590.00Rs. 4,290.00or 3 X Rs.1,430.00 withRead moreரோன்டா பைர்ன்
தமிழில்: PSV குமாரசாமி
2006 ஆம் ஆண்டில் இரகசியம் நூலை வெளியிட்டதன் மூலம் சர்வதேசப் புரட்சி ஒன்றை ரோன்டா பைர்ன் தோற்றுவித்தார். வாழ்க்கையை அடியோடு மாற்றக்கூடிய அவருடைய இந்தக் கண்டுபிடிப்பு, தங்களுக்குள் புதைந்து கிடக்கும் சக்திகளை வாசகர்கள் புரிந்து கொள்ள உதவியது. ஆனால் ரோன்டாவின் பயணம் அத்துடன் முடியவில்லை. ஏனெனில், அதிக ஞானத்தைத் தேடிச் செல்லும்படி ஏதோ ஒன்று அவருக்குள்ளிருந்து அவரை உந்தித் தள்ளியது. அவர் அந்தத் தேடலில் பதினான்கு ஆண்டுகளைச் செலவிட்டதன் விளைவாகக் கண்டுபிடித்த உலகளாவிய உண்மைகள் இந்நூலின் பக்கங்களில் இடம்பெற்றுள்ளன.
மாபெரும் இரகசியம் மக்களை பௌதிக உலகிலிருந்து உயர்த்தி, அனைத்துச் சாத்தியக்கூறுகளும் நிறைந்துள்ள ஆன்மிகத் தளத்திற்குக் கூட்டிச் செல்லும். இந்நூலில் இடம்பெற்றுள்ள போதனைகள், நீங்கள் உடனடியாக நடைமுறையில் பயன்படுத்தக்கூடிய சில பயிற்சிகளை வழங்குவதோடு, உங்களுடைய பயங்கள், ஐயப்பாடு, கவலை, வேதனை ஆகியவற்றைக் கரைக்கக்கூடிய ஆழமான உண்மைகளையும் வழங்குகின்றன. உலகம் நெடுகிலுமுள்ள பல்வேறு ஆன்மிக ஆசான்கள் உதிர்த்த ஞான முத்துகளால் நிரம்பி வழிகின்ற மாபெரும் இரகசியம், துன்பத்திற்கு ஒரு முடிவு கட்டி, ஒரு பேரானந்தமான வாழ்க்கையை வாழ்வதற்கான ஒரு நேரடியான பாதையை வாசகர்களுக்கு வழங்குகிறது.
சைவ ஆதீனங்கள்
Rs. 790.00or 3 X Rs.263.33 withRead moreஜனனி ரமேஷ்
கோயில்களின் வரலாறு வெளிவந்த அளவுக்கு ஆதீனங்களின் வரலாறோ அவற்றின் தலைமைப் பொறுப்பிலுள்ள ஆதீனகர்த்தர்கள் குறித்த வரலாறோ வெளிவந்ததில்லை.
இந்து சமய வரலாற்றில் சைவ ஆதீனம் வகிக்கும் பாத்திரம் என்ன? ஆதீனம் என்றால் என்ன? மொத்தமுள்ள 18 ஆதீனங்களில் இப்போது எவ்வளவு இயங்கி வருகின்றன? அவை எங்கே அமைந்துள்ளன? அவற்றை யார் பொறுப்பேற்று நடத்திவருகிறார்கள்? ஆதீனங்களில் எத்தகைய மரபுகள் பின்பற்றப்படுகின்றன? பொதுவான மரபுகளா அல்லது ஒவ்வொன்றுக்கும் தனித்
தனியே நடைமுறைகள் உள்ளனவா? சைவ சித்தாந்தம் பற்றிய பார்வையில் இவர்களுக்கு இடையில் வேறுபாடுகள் நிலவுகின்றனவா? சைவத்தை இவை எவ்வாறு வளர்த்தெடுக்கின்றன?
ஆதீனங்களின் தோற்றம், வளர்ச்சி, பணிகள் அனைத்தையும் விரிவாகவும் எளிமையாகவும் அறிமுகப்படுத்துகிறது இந்நூல். தமிழறிஞர்களையும் அவர்தம் படைப்புகளையும் தொடர்ந்து அறிமுகம் செய்து வரும் ஜனனி ரமேஷின் மற்றுமொரு படைப்பு.
அறியப்படாத கிறிஸ்தவம் Part-1 & Part-2
Rs. 8,590.00or 3 X Rs.2,863.33 withRead moreநிவேதிதா லூயிஸ்
கிறிஸ்தவம் பற்றியும் கிறிஸ்தவர்கள் பற்றியும் நமக்கிருக்கும் மனச்சித்திரங்களையும் முன் அனுமானங்களையும் கலைத்துப்போட்டு, முற்றிலும் புதிய பார்வைகளை அளிக்கும் ஒரு கலகப் புத்தகத்தை நிவேதிதா லூயிஸ் எழுதியிருக்கிறார்.
இரு பெரும் பகுதிகளில் ஆயிரம் பக்கங்களைக் கடந்து விரிகிறது இந்நூல். தென்மேற்குத் தமிழகத்தின் முள்ளூர்த்துறை முதல் திண்டிவனம் வரை; கிழக்கே புதுவை தொடங்கி மேற்கே கொடிவேரிவரை தமிழகத்தில் கிறிஸ்தவம் வேர்கொண்டு வளர்ந்த கதை இதில் விரிகிறது.
விரிவான கள ஆய்வுகளை மேற்கொண்டு, பலதரப்பட்ட மக்களோடு உரையாடி, அவர்களுடைய கதைகளையும் அனுபவங்களையும் வலிகளையும் கனவுகளையும் பண்பாட்டு அடையாளங்களையும் கவனமாகத் திரட்டி இந்நூலில் அவர் தொகுத்திருக்கிறார்.
இரகசியம் ( Irahasiyam ) The Secret
Rs. 3,290.00or 3 X Rs.1,096.67 withAdd to cartரோன்டா பைர்ன்
தமிழில்: PSV குமாரசாமி
இரகசியத்தைப் படிப்படியாக நீங்கள் புரிந்து கொள்ளும்போது நீங்கள் விரும்பும் அனைத்தையும் பெறுவது எப்படி, வேண்டிய நிலைகளை அடைவது எப்படி? விரும்பியவற்றைச் செய்வது எப்படி என்பதை அறிந்து கொள்வீர்கள். உண்மையில் நீங்கள் யார் என்பதைத் தெரிந்து கொள்வீர்கள். உங்களுக்காகக் காத்திருக்கும் பிரம்மாண்டத்தையும உணர்ந்து கொள்வீர்கள்.
திறனின் திறவுகோல் அமைப்பு
Rs. 1,490.00or 3 X Rs.496.67 withRead moreசார்ல்ஸ் எப். ஹானல்
இந்த புத்தகம் வெற்றிக்கான ஒரு சக்திவாய்ந்த அமைப்பின் ரகசியத்தை வைத்திருக்கிறது, இது எழுத்தாளர் சார்லஸ் எஃப். ஹானெலால் தனக்கென ஒரு செல்வத்தை குவிக்க பயன்படுத்தப்பட்டது. மாஸ்டர் கீ சிஸ்டம் ஈர்ப்பு விதியின் மூலம் படைப்பு வெளிப்பாட்டின் கொள்கைகளின் அடித்தளத்தை அமைக்கிறது. பிரபஞ்சத்தின் மிகவும் சக்திவாய்ந்த சக்தியைக் குறிப்பிடும் போது, இன்று மிகவும் பிரபலமான வார்த்தையாக மாறியுள்ள, ஈர்ப்பு விதி என்ற சொற்றொடரைப் பயன்படுத்திய முதல் புத்தகங்களில் இது ஒன்றாகும். உங்கள் மனதின் படைப்புக் கருவியை எவ்வாறு உருவாக்குவது மற்றும் பயன்படுத்துவது என்பதை நீங்கள் கற்றுக் கொள்வீர்கள்.
தாயம் ( Thaayam )
Rs. 1,990.00or 3 X Rs.663.33 withRead moreமஹாத்ரயா ரா
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
இது மஹாத்ரயா எழுதிய சிறு கட்டுரைகளின் தொகுப்பு. இதில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு கடிதமும், வாழ்க்கை, வேலை, சூழல்கள் மற்றும் மனப்போக்குகள் தொடர்பான பல ஆழ்ந்த பிரதிபலிப்புகளை வெளிப்படுத்துகின்றன. எளிய படிப்பினைகள் மற்றும் கொள்கைகள், நடைமுறைக்குகந்த யோசனைகள் ஆகியவற்றை இந்நூல் உள்ளடக்கியுள்ளது.
இதில் கூறப்பட்டுள்ளவற்றைக் கடைபிடித்தால், வாழ்க்கை மன நிறைவுடையதாக இருக்கும், சவாலான சூழல்களைச் சந்திப்பது சுலபமானதாக இருக்கும். ஓர் அகரீதியான முரண்பாடு, ஓர் உறவுச் சிக்கல், தொழில்ரீதியான ஓர் இக்கட்டான நிலை, ஒரு திட்ட மதிப்பீடு, நேர நிர்வாகப் பிரச்சனைகள் போன்றவற்றிற்கு இங்கு தீர்வுகள் இருக்கின்றன.
:”எந்தப் பக்கத்தை வேண்டுமானாலும் விரியுங்கள். தேடுபவனுக்கு அங்கு ஒரு விடை காத்துக் கொண்டிருக்கும்.”
‘தாயம்’ என்ற இந்நூலில் தங்களுக்கான விடையை பலர் கண்டுபிடித்துள்ளனர்.வெற்றி பெரிய பெரிய விஷயங்களில் இருக்கிறது.
மகிழ்ச்சி சின்னச் சின்ன விஷயங்களில் இருக்கிறது.
தியானம் வெறுமையில் இருக்கிறது.
கடவுள் எல்லாவற்றிலும் இருக்கிறார்.
அதுதான் வாழ்க்கை.
“குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டிய ஒன்று. நான் பல புத்தகங்களைப் படித்துள்ளேன். ஆனால் ‘தாயம்’ புத்தகம்தான் நான் படித்ததிலேயே மிக அருமையான புத்தகம்.” –ஆர். சி. லஹோட்டி, முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி
“…மிகப் பெரிய விஷயங்கள் இவ்வளவு எளிய வார்த்தைகளில் வடிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பக்கமும் ஒரு பொக்கிஷம். ஒவ்வொரு பக்கமும் எல்லோருக்கும் பொருத்தமாக இருக்கிறது. நீங்கள் சோகமாக இருந்தாலும் சரி, மகிழ்ச்சியாக இருந்தாலும் சரி, நீங்கள் வெற்றிகரமானவராக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, இதை நீங்கள் படிக்கும்போது சிறப்பாக உணர்வீர்கள். அறிவுப் பொக்கிஷமாக, அக ஒளி வழிகாட்டியாகத் திகழும் இந்நூல்தான் என் இதயத்தைத் தொட்ட ஒரே ஆன்மீகப் புத்தகம். நான் இதைப் பற்றி எண்ணற்றோரிடம் பேசியிருக்கிறேன்.” — சங்கர் மகாதேவன் இசையமைப்பாளர் மற்றும் பாடகர்
கம்ப ராமாயணம்
Rs. 2,690.00or 3 X Rs.896.67 withRead moreபழ. பழனியப்பன்
கம்பனை முன்னமேயே கற்றவர்க்கு இது ஒரு ‘கையேடு’. இனி கற்பவர்க்கு இது ஒரு ‘கைவிளக்கு’.
கம்பன் கல்லாத கலையும் வேதக்கடலும் இல்லை எனலாம். கம்பன் கீர்த்தியை, கம்ப நாடனின் கவிதா நேர்த்தியை, அவனிடம் மலிந்து கிடக்கும் கலைமகள் கடாட்சத்தை, அவனது விருத்தமெல்லாம் இன்றளவும் மெருகு குலையாமல் தகத்தகாயமாய்த் துலங்குகின்ற விந்தையை, அவனது சமயப்பொறை ஓம்புகின்ற சிந்தையை – எடை போட்டு – அதன் நிறை என்னவென்று நமக்கு எடுத்தோதியுள்ளார் கம்ப காவலர் கம்பனடி சூடி திரு. பழ. பழநியப்பன்.
கம்பராமாயணத்தை சகலரும் அனுபவித்து ஜன்மம் கடைத்தேற வேண்டும், வீடுபேறு பெறவேண்டும், என்றெண்ணி இடையறாது முயன்று இந்த நூலை ஆக்கியளித்துள்ள திரு. பழ. பழநியப்பன் ‘இன்னோர் இராமானுச’ராய் என் கருத்துக்குப் புலப்படுகிறார்.
முக்கியமான பாடல்களை, ஆங்காங்கு முழுமையாய்ச் சுட்டியும், சில கடினமான சொற்களுக்கு அகராதிபோல் பொருள் விளக்கமும், பின்பு அப்பாடல்களின் பொருளை ரத்தினச் சுருக்கமாய் புரியும் தமிழில் நமக்குப் படைத்தும் தமிழ்ப் பணியும் தரணிப் பணியும் ஒருசேர ஆற்றியிருக்கிறார் கம்பனடிசூடி.
இந்த நூல் இருக்கும் இல்லந்தோறும் இன்பம் பெருகும்… பரிசுத்தமான இறையுணர்வில் இதயம் உருகும்!
– கவிஞர் வாலி