Opening Possibilities, Illuminating Potentials
Delivery in 1-5 business days. Island-wide Free Delivery for Purchase of Rs. 3990 or above.

Cart

Your Cart is Empty

Back To Shop
Contact Us 0764980321

பாகிஸ்தான் : அரசியல் வரலாறு / Pakistan: Arasiyal Varalaru

Rs. 1,190.00

or 3 installments of Rs.396.67 with

ப.ராகவன்

 

குமுதம் வார இதழில் தொடராக வெளிவந்த பாகிஸ்தானின் அரசியல் வரலாறு. முகம்மதலி ஜின்னா தொடங்கி பர்வேஸ் முஷாரஃப் வரை நீளும் பாகிஸ்தானின் ஆளும் வர்க்கம் குறித்த துல்லியமான அறிமுகம் இதில் கிடைக்கிறது.

 

பாகிஸ்தானில் நிலைகொண்டு, காஷ்மீரில் தீவிரவாதம் வளர்க்கும் அனைத்து இயக்கங்கள் குறித்தும் ஆதாரபூர்வமான தகவல்கள், புள்ளிவிவரங்கள், காஷ்மீர் பிரச்னை பற்றிய ஆழமான அலசல் அடங்கிய நூல் இது.

 

காஷ்மீரை விலக்கிவிட்டு பாகிஸ்தானில் அரசியல் செய்யவே முடியாது என்கிற நிலையில், அந்நாட்டின் அரசியல் குறித்த முழுமையான, ஆதாரபூர்வமான பதிவு தமிழில் முதல்முறையாக வெளிவருகிறது.

 

1947-ல் இந்தியா சுதந்தரம் பெற்றது. அதே நேரத்தில்தான் மாபெரும் துயர் இந்தியாவைச் சூழ்ந்தது.

தேசம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது.

தேசம் மட்டுமல்ல, லட்சக்கணக்கானோரில் உடல்களும் பிளக்கப்பட்டன.

உடைமைகள் அபகரிக்கப்பட்டன.

பெண்கள் வல்லுறவுக்கு ஆட்படுத்தப்பட்டனர்.

இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள் என அருகருகே நட்புடன் வசித்துவந்த மக்கள் ஒருவரை ஒருவர் கொலை வெறியுடன் தாக்கிக்கொண்டனர்.

 

ஒருவரது குற்றத்தை முன்வைத்து அடுத்தவர் தம் குற்றங்களை அரங்கேற்றத் தொடங்கினர்.மனிதர்களின் வெறித்தாண்டவம் பேயாட்டம் ஆடிக்-கொண்டிருக்கும் பின்னணியில், பஞ்சாபில் ஒரு கிராமம் மட்டும் அமைதியாக இருக்கிறது. அப்படி அந்த கிராமத்து முஸ்லிம்களும் சீக்கியர்களும் மட்டும் அமைதியாக இருந்துவிட முடியுமா என்ன? அந்த அமைதியைக் குலைக்கிறது பாகிஸ்தானிலிருந்து வரும் ஒரு ரயில். அதில் எண்ணற்ற இந்து, சீக்கியப் பிணங்கள்.

 

பழிக்குப் பழியா?

பாகிஸ்தானுக்குப் புலம் பெயரும் முஸ்லிம்கள் அடங்கிய ரயிலுக்கு என்ன ஆகப் போகிறது? அதுதான் கதை.

 

இந்தக் கதைக்கு இடையில் ஒரு மென்மையான காதல், அரசியல்மீதான ஆழமான பார்வை, சீக்கிய மதத்தைப் பற்றிய விமரிசனம், அதிகார வர்க்கத்தின் செயல்பாடுகள் பற்றிய குத்தல், காவல்துறை மீதான கருத்துகள் என்று எண்ணற்ற சித்திரங்களை வரைந்து செல்கிறார் குஷ்வந்த் சிங்.எழுதப்பட்டு 60 ஆண்டுகள் கழித்தும் இன்னும் வலுவாக நம்முன் நிற்கிறது இந்தக் கதை.

Out of stock

Notify me when stock available

About the author

பா. ராகவன் (பிறப்பு: அக்டோபர் 8, 1971) தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர் ஆவார்.

புதினங்கள், சிறுகதைகள், மற்றும் அரசியல் வரலாற்று நூல்களையும் எழுதியிருக்கிறார். தமது படைப்பிலக்கியப் பங்களிப்புகளுக்காக பாரதிய பாஷா பரிட்சத் விருது பெற்றவர்.

 

Book Specifications

Binding: Paperback
Pages: 176
Published Year: 2012
Publisher: கிழக்கு பதிப்பகம்
ISBN: 9788183680332

Reviews

There are no reviews yet.

Be the first to review “பாகிஸ்தான் : அரசியல் வரலாறு / Pakistan: Arasiyal Varalaru”

Your email address will not be published. Required fields are marked *