Opening Possibilities, Illuminating Potentials
Delivery in 1-5 business days. Island-wide Free Delivery for Purchase of Rs. 3990 or above.

Cart

Your Cart is Empty

Back To Shop
Contact Us 0764980321

Category: தமிழ் Books

Showing 601–620 of 620 results

  • Out of Stock

    அசோகர்

    Rs. 1,990.00
    or 3 X Rs.663.33 with

    மருதன்

     

    இந்திய வரலாற்றின் மகத்தான பேரரசர்களில் ஒருவரான அசோகரை எளிமையாக அறிமுகப்படுத்தும் நூல். ‘இந்து தமிழ்’ நிறுவனத்தின் ‘காமதேனு’ இணைய இதழில் தொடராக வெளிவந்து இப்போது நூல் வடிவம் கண்டுள்ளது. இந்த நூலில் அசோகர் குறித்து இதுவரை நடத்தப்பட்டுள்ள ஆய்வுகளின் அடிப்படையில் அவருடைய வாழ்க்கை, ஆட்சிக் காலம் குறித்து ஒரு எளிய சித்திரத்தை மருதன் தந்திருக்கிறார். போரையும், நாடு பிடிக்கும் ஆவலையும் கைவிட்டு அன்பையும் சமத்துவத்தையும் போதித்த பேரரசரையும் அவருடைய ஆட்சிக் காலம் பண்டைய இந்தியாவின் ஒளிமிகுந்த காலகட்டமாக இருந்ததையும் இந்த நூல்வழியாக அறிந்துகொள்ளலாம்.

    or 3 X Rs. 663.33 with Koko Koko
    Read more
  • Out of Stock

    காஷ்மீர்: அரசியல்-ஆயுத வரலாறு / Kashmir Arasiyal – Aayudha Varalaru

    Rs. 2,090.00
    or 3 X Rs.696.67 with

    பா. ராகவன்

     

    சரித்திரம் முழுதும் ரத்தம். எப்போது வேண்டுமானாலும் யுத்தம். ஆயிரக் கணக்கான தீவிரவாதச் செயல்பாடுகள். குண்டு வெடிப்புகள், உயிர்ப்பலி, நினைத்த போதெல்லாம் ஊரடங்கு. ‘நாங்கள் இந்தியர்களும் இல்லை; பாகிஸ்தானியரும் இல்லை; காஷ்மீரிகள்’ என்னும் கோஷம், பிரிவினைப் போராட்டங்கள் தனி. காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தான் வசம் இருக்கிறது. அங்கே ஏன் இந்தக் கோஷங்களும் போராட்டங்களும் இல்லை? யுத்தங்கள், சமரசங்கள், பேச்சுவார்த்தைகள், நல்லெண்ண முயற்சிகளுக்குக் குறைவில்லை.

     

    ஆனால் இன்றுவரை பிரச்சினை தீர்ந்தபாடில்லை. காஷ்மீர் உண்மையிலேயே தீர்க்க முடியாத பிரச்சினைதானா? காஷ்மீர் பிரச்னையின் முழுமையான வரலாறை விவரிக்கும் இந்நூல், இதைப் பிரச்சினையாகவே வைத்திருக்கும் அரசியலின் ஆழங்களையும் ஆராய்கிறது.

    or 3 X Rs. 696.67 with Koko Koko
    Read more
  • Out of Stock

    ரசவாதம்: எதிலும் பெரும் வெற்றி

    Rs. 1,190.00
    or 3 X Rs.396.67 with

    சோம. வள்ளியப்பன்

     

    நீங்கள் அடைய விரும்புவது எதுவாக இருந்தாலும் அதை அடைவது எப்படி? அதைச் செய்யவிடாமல் தடுக்கும் அச்சங்களையும் தயக்கங்களையும் தடங்கல்களையும் களைவது எப்படி? அனைவரிடமும் இணக்கமான உறவுமுறையை வளர்த்துக்கொள்வது எப்படி?

     

    இரு வழிகள் உள்ளன. உலகை மாற்றுவது. உங்களை மாற்றிக்கொள்வது. மாற்றம் என்பது உங்களிடமிருந்து தொடங்கவேண்டியது என்பதை வலியுறுத்தும் NLP என்ற அற்புதமான, நிரூபிக்கப்பட்ட சர்வதேச வெற்றி ஃபார்முலாவை நம் சூழலுக்கு ஏற்ப எளிமையாகவும் சுவையாகவும் அறிமுகப்படுத்துகிறார் நூலாசிரியர் சோம. வள்ளியப்பன்.

     

    NLP என்பது என்ன?

     

    · ஐம்புலன்களின் திறன்களைக் கூர்மைப்படுத்தவும் முழுமையாகப் பயன்படுத்தவும் உதவும் Sensory Awareness.

     

    · எந்தச் சூழலிலும் வேண்டியதை அடையும் Oதtஞிணிட்ஞு கூடடிணடுடிணஞ். · பிடிவாதத்தைக் கைவிட்டு, நெகிழ்வுத்தன்மையைக் கைகொள்ளும் Behaviour Flexibility.

     

    இந்த நான்கையும் கொண்டு பள்ளி, கல்லூரி, பணியிடம், குடும்பம், சமுதாயம் என்று எதிலும் பெருவெற்றி பெற இந்நூல் கற்றுக்கொடுக்கிறது.

     

    எங்கும் எதிலும் உன்னதம் வேண்டும் என்று விரும்பும் அனைவருக்குமான புத்தகம் இது. இதை உங்களுக்கும் மற்றவர்களுக்கும் நீங்கள் பரிசளித்து மகிழலாம்.

    or 3 X Rs. 396.67 with Koko Koko
    Read more
  • Out of Stock

    ரிச்சர்ட் பிரான்ஸன்

    Rs. 1,390.00
    or 3 X Rs.463.33 with

    என். சொக்கன்

     

    பணி என்பது பணம் பண்ண மட்டுமே அல்ல.  ரசித்து, அனுபவித்துச் செய்யுங்கள்.  நீங்கள் விரும்பிய அனைத்தும் உங்கள் பின்னால் வரும்! இதுதான் ரிச்சர்ட் பிரான்ஸனின் வெற்றிச் சூத்திரம்.  அந்தச் சூத்திரத்தைப் பயன்படுத்தி அவர் சென்ற உயரம் பிரம்மாண்டமானது.

     

    ஆனால் அந்த உயரத்தை அவர் ஒன்றும் அநாயாசமாகத் தொட்டுவிடவில்லை.  தடைகள் வந்தன.  எதிர்ப்புகள் அணிவகுத்தன.  முன்னேறும் பாதையில் முட்டுக்கட்டைகள் விழுந்தன.  குறிப்பாக, வெர்ஜின் விமான சேவையைத் தொடங்கியபோது பெரும் பண முதலைகள் எல்லாம் அவரை அழுத்தப் பார்த்தன.

     

    ஆனால் அனைத்தையும் நம்பிக்கையுடனும், துணிச்சலுடனும் எதிர்கொண்டார் பிரான்ஸன்.  ஆகவே, சாதித்தார். வர்த்தக உலகம் சந்தித்த மற்ற வெற்றியாளர்களிடம் இருந்து பிரான்ஸன் பல விஷயங்களில் வேறுபடுகிறார்.  காத்திரமான பண பலத்துடன் களத்தில் இறங்கவில்லை.

     

    பரம்பரைப் பணக்காரரும் இல்லை. ஆனாலும் அவர் சாதனைகளின் உச்சத்தைத் தொட்டார்.  அது தான் சாமானியர்கள் பலரையும் பிரான்ஸனை நோக்கி ஈர்த்தது.  ஈர்த்துக்கொண்டே இருக்கிறது.

     

    தொழில் முனையும் ஆர்வம் உள்ள அத்தனை பேருக்கும் ரிச்சர்ட் பிரான்ஸன் ஆதர்சமாகத் தெரிகிறார்.  அது ஏன் என்பதை நுணுக்கமான ஆய்வின் வழியாக எடுத்துச் சொல்லியிருக்கிறார் என். சொக்கன்.

     

    வர்த்தக வெற்றியாளர்கள் பலருடைய வாழ்க்கையையும் புத்தகமாகப் பதிவு செய்திருப்பவர் அவர் என்ற வகையில் இந்தப் புத்தகம் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.

    or 3 X Rs. 463.33 with Koko Koko
    Read more
  • Out of Stock

    அறியப்படாத கிறிஸ்தவம் Part-1 & Part-2

    Rs. 8,590.00
    or 3 X Rs.2,863.33 with

    நிவேதிதா லூயிஸ்

     

    கிறிஸ்தவம் பற்றியும் கிறிஸ்தவர்கள் பற்றியும் நமக்கிருக்கும் மனச்சித்திரங்களையும் முன் அனுமானங்களையும் கலைத்துப்போட்டு, முற்றிலும் புதிய பார்வைகளை அளிக்கும் ஒரு கலகப் புத்தகத்தை நிவேதிதா லூயிஸ் எழுதியிருக்கிறார்.
     

    இரு பெரும் பகுதிகளில் ஆயிரம் பக்கங்களைக் கடந்து விரிகிறது இந்நூல். தென்மேற்குத் தமிழகத்தின் முள்ளூர்த்துறை முதல் திண்டிவனம் வரை; கிழக்கே புதுவை தொடங்கி மேற்கே கொடிவேரிவரை தமிழகத்தில் கிறிஸ்தவம் வேர்கொண்டு வளர்ந்த கதை இதில் விரிகிறது.
     

    விரிவான கள ஆய்வுகளை மேற்கொண்டு, பலதரப்பட்ட மக்களோடு உரையாடி, அவர்களுடைய கதைகளையும் அனுபவங்களையும் வலிகளையும் கனவுகளையும் பண்பாட்டு அடையாளங்களையும் கவனமாகத் திரட்டி இந்நூலில் அவர் தொகுத்திருக்கிறார்.

    or 3 X Rs. 2,863.33 with Koko Koko
    Read more
  • Out of Stock

    தே ஒரு இலையின் வரலாறு/ A Brief History of Tea

    Rs. 2,190.00
    or 3 X Rs.730.00 with
    ராய் மோக்ஷாம்

    உலகம் விரும்பி அருந்தும் ஒரு பானத்தின் கதை என்று சொல்லலாம் அல்லது, இப்படியும் விரித்துச் சொல்லலாம். தேநீர் மீது பிரிட்டன் கொண்டிருந்த வேட்கை எவ்வாறு மெல்ல மெல்ல வளர்ந்து அதனை ஒரு பேரரசாக மாற்றியது என்பதையும் அந்த மாற்றம் உலகம் முழுக்க எத்தகைய அதிர்வலைகளை ஏற்படுத்தியது என்பதையும் ஆராயும் முக்கியமான நூல் இது. சீனாவின் தேயிலையை வாங்குவதற்கு இந்தியாவின் ஓப்பியத்தை கிழக்கிந்திய கம்பெனி அளிக்கத் தொடங்கியபோது அதிரத் தொடங்கிய உலகம் இன்னமும் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை என்றுதான் சொல்லவேண்டும். தேயிலைத் தோட்டத்தில் தொடங்கும் பயணம் நம்மை சீனா, இந்தியா, சிலோன், ஆப்பிரிக்கா என்று உலகம் முழுக்க அழைத்துச் செல்கிறது. ஒரு கோப்பை தேநீருக்குள் சூழ்ச்சி, சுரண்டல், கயமை, லாபவெறி, ஆதிக்கம் அனைத்தும் அடங்கியிருக்கும் என்று என்றாவது நினைத்துப் பார்த்திருப்போமா?

    or 3 X Rs. 730.00 with Koko Koko
    Read more
  • Out of Stock

    ரொமிலா தாப்பர்: ஓர் எளிய அறிமுகம்

    Rs. 1,390.00
    or 3 X Rs.463.33 with

    மருதன்

     

    முற்கால இந்திய வரலாற்றின் மீது புத்தொளி பாய்ச்சியவர்களில் குறிப்பிடத்தக்கவர் ரொமிலா தாப்பர். ஒரு வரலாற்றாரியராக மட்டுமின்றி பொது மக்களுக்காகக் குரல் கொடுக்கும் ஓர் அறிவுஜீவியாகவும் திகழும் தாப்பரை எளிமையாக அறிமுகப்படுத்துகிறது இந்நூல். ரொமிலாவின் வாழ்க்கை, வரலாறு இரண்டையும் குறித்த மருதனின் இந்தச் சுருக்கமான அறிமுகம் அவருடைய படைப்புகளை மேலும் நெருங்கிச் சென்று வாசிப்பதற்கான உந்துதலை வழங்கும்.

    or 3 X Rs. 463.33 with Koko Koko
    Read more
  • Out of Stock

    வில்லியம் ஷேக்ஸ்பியர் கதைகள் ( Shakespeare Kathaigal )

    Rs. 660.00
    or 3 X Rs.220.00 with

    வில்லியம் ஷேக்ஸ்பியர்

     

     

    or 3 X Rs. 220.00 with Koko Koko
    Read more
  • Out of Stock

    ஆழமான கேள்விகள் அறிவார்ந்த பதில்கள் ( Aazhamaana Kelvikal Arivarntha bathilkal )

    Rs. 2,990.00
    or 3 X Rs.996.67 with

    ஸ்டீபன் ஹாக்கிங்

    தமிழில்: PSV குமாரசாமி

     

    உலகப் புகழ் பெற்றப் பிரபஞ்சவியலாளரான ஸ்டீபன் ஹாக்கிங், ‘கடவுள் என்ற ஒருவர் இருக்கிறாரா? பிரபஞ்சம் எவ்வாறு தோன்றியது? அறிவார்ந்த வேறு உயிரினங்கள் பிரபஞ்சத்தில் இருக்கின்றனவா? காலப் பயணம் சாத்தியம்தானா? விண்வெளியை நாம் காலனிப்படுத்த வேண்டுமா? செயற்கை நுண்ணறிவு நம்மை விஞ்சிவிடுமா?’ போன்ற, பிரபஞ்சம் தொடர்பான ஆழமான கேள்விகளுக்குத் தன்னுடைய அறிவார்ந்த கருத்துக்களை இந்நூலில் பதிவு செய்துள்ளார்.

     

    பிரபஞ்சத்தைப் பற்றிய நம்முடைய புரிதலை விரிவுபடுத்தவும், அதன் மாபெரும் புதிர்கள் சிலவற்றை முடிச்சவிழ்க்கவும் ஹாக்கிங் தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்தார். கருந்துளைகள், காலநேரம், பிரபஞ்சத்தின் துவக்கம் ஆகியவற்றைப் பற்றிய அவருடைய கோட்பாடுகள் விண்வெளிக்கு அப்பால் அவருடைய மனத்தைக் கூட்டிச் சென்றபோதிலும், பூமியின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணுவதில் அறிவியல் ஓர் இன்றியமையாத பங்காற்றுவதாக அவர் நம்பினார். அதனால், பருவநிலை மாற்றம், அணுவாயுதப் போர் குறித்த அச்சுறுத்தல், அதிக ஆற்றல் படைத்தச் செயற்கை நுண்ணறிவு போன்ற, மனிதகுலத்தைத் தற்போது அச்சுறுத்திக் கொண்டிருக்கும் அவசரமான விவகாரங்களை நோக்கி ஹாக்கிங் தன் கவனத்தைத் திருப்புகிறார்.

    or 3 X Rs. 996.67 with Koko Koko
    Read more
  • The Kite Runner Tamil flashbooks.lk
    Out of Stock

    பட்ட விரட்டி ( Patta Viratti ) Kite Runner

    Rs. 2,990.00
    or 3 X Rs.996.67 with

    காலித் ஹுஸைனி

    தமிழில்: எம். யூசுப் ராஜா

     

    இந்த தசாப்தத்தின் முக்கியமான புத்தகம் என்று தி டைம்ஸ், டெய்லி டெலிக்ராப் மற்றும் கார்டியனால் தெரிவு செய்யப்பட்டது.

     

    ‘மனதை உடைப்பது, அதிர்ச்சியளிப்பது, எழுச்சியூட்டுவது.’ – அப்சர்வர்

     

    பட்ட விரட்டி என்ற பொருளுடைய தலைப்பைக் கொண்ட இந்நூல் ஆப்கானிய-அமெரிக்கரான காலித் ஹுசைனியால் எழுதப்பட்ட முதல் புதினம்.

     

    ஒரு ஆப்கானியரால் முதன்முதலில் ஆங்கிலத்தில் பிரசுரிக்கப்பட்ட புதினம் என்கிற சிறப்பையும் பெற்றது இந்நூல். காபூலின் வசீர் அக்பர் கான் பகுதியைச் சேர்ந்த பாஷ்டூன் என்கிற இனத்தின் செல்வக் குடும்பமொன்றில் பிறந்த அமீர் என்கிற சிறுவனின் கதையைச் சொல்கிறது இந்நூல். அவனது சிறு பருவத் தோழனும் தந்தையின் ஹசரா இனத்தைச் சேர்ந்த வேலையாளின் மகனுமான ஹசனுக்கு இழைத்த நம்பிக்கைத்துரோகம் அமீருக்குக் குற்றவுணர்வைத் தருகிறது. ஆப்கானிஸ்தானின் முடியரசின் வீழ்ச்சி, சோவியத் படையெடுப்பு, பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவுக்குமான மக்கள் வெளியேற்றம், மற்றும் தலிபான் ஆட்சி எனும் அமளியான காலகட்டங்களில் இக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.

    or 3 X Rs. 996.67 with Koko Koko
    Read more
  • Sale!
    Out of Stock

    [RARE] மூலதனத்தின் மூலத்தோற்றம் (The Genesis of Capital)

    Original price was: Rs. 1,490.00.Current price is: Rs. 690.00.
    or 3 X Rs.230.00 with

    கார்ல் மார்க்ஸ்

     

    முதலாளித்துவ வரலாற்றை ஆராயும் மார்க்ஸ் அந்த அமைப்பின் தோற்றத்தையும் பரிணாம வளர்ச்சியையும் பகுப்பாய்வு செய்கிறார். மூலதன ஆதித் திரட்சி என்றழைக்கப்பட்டதுதான் – முதலாளித்துவத்தின் வரலாற்று முன்தேவைகள் தோற்றுவிக்கப்பட்டதுதான், நேரடி உற்பத்தியாளர்கள் பெருமளவில் உடைமை பறிக்கப்பட்டதுதான்-முதலாளித்துவ வரலாற்றின் ஆரம்பம், அதன் துவக்கப் புள்ளியாகும்.

     

    இதற்கு அர்ப்பணிக்கப்பட்டதுதான் இந்நூல் ஆகும். மூலதனம் நூலின் முதல் பாகத்தின் நான்காவது ஜெர்மன் பதிப்பின் 24ஆவது அத்தியாயமும் (ஆதித் திரட்சி என்றழைக்கப்படுவது), 25ஆவது அத்தியாயமும் (தற்காலக் காலனியாதிக்கத் தத்துவம்) இங்கே இடம் பெறுகின்றன.

     

    * 70களிலும் 80களிலும் வெளிவந்த பிரபல்யமான புத்தகங்கள். மிகவும் அரிதான புத்தகங்கள்.

    இவை பாவிக்கப்படாத புத்தகங்கள். ஆனால் அச்சிடப்பட்டு 30 வருடங்களுக்கு மேல் கிடங்கில் இருந்ததால் சில புத்தகங்களில் கரையான் அறிப்பு, பக்கங்களின் நிறம் மாறுதல் போன்ற சிறிய சேதங்கள் இருக்கலாம்.

    ஆனால் முழுமையாக வாசிக்க முடியுமாக இருக்கும்.

    or 3 X Rs. 230.00 with Koko Koko
    Read more
  • Out of Stock

    உங்கள் விதியைக் கண்டறியுங்கள்

    Rs. 1,990.00
    or 3 X Rs.663.33 with

    ராபின் ஷர்மா

    தமிழில்: அ. ராஜ்மோகன், ஐ.பி.எஸ்

     

    தன் பொக்கிஷத்தை விற்ற துறவி என்ற கோட்பாடு எவ்வாறு உலகளாவிய அளவில் பரவியதோ அதே தொனியில் பலன் தரும் வகையில் எழுதப்பட்ட நூல் “உங்கள் விதியைக் கண்டறியுங்கள்”. இதில் டார் சேன்டர்சன் வாசகர்களுக்கு அறிமுகமாகிறார். இவர் புற உலக விஷயங்கள் அனைத்தும் உள்ள ஒரு பேராவல் உடைய நிர்வாகி, ஆயினும் வாழ்க்கையில் மகிழ்ச்சி, அர்த்தம், மன அமைதி எதுவுமின்றி இருக்கின்றார்.
    நீடித்து நிலைக்கும் வெற்றிக்கான இரகசியங்களை கண்டறிந்த பிரபலமான துறவி ஜூலியன் மேன்டலை ஏதேச்சையாக சந்திக்கிறார் டார். ஜூலியன், டாரின் உண்மையான சுயரூபத்தை அறியவும், வாழ்க்கையின் களவுகள் மெய்படவும் ஒரு அசாதாரண பயணப் பாதையில் இட்டுச் செல்லுகிறார். பயணிக்கும் பாதையில், ஒருவரது மிக பெரிய வாழ்க்கை வாழ்வதற்கும், உலகில் ஒளிர்வதற்கும் அத்தியாவசியமான ஏழு சக்திவாய்ந்த பாடங்களை டார் சுற்றுக் கொள்கிறார். இந்த மறக்கமுடியாத காவியத்தில் நீங்கள் கண்டறியப்போவது
    • எப்படி கட்டுப்பாட்டை துறந்து, உங்கள் அளவற்ற உள்ளாற்றலின் மீது நம்பிக்கை கொள்வது
    • எப்படி தனக்குத்தானே துரோகம் செய்தல் எனும் குற்றத்தைத் தவிர்த்து பெருவாழ்வு வாழ்வது
    • எப்படி ஒரு ஆரம்பக் கல்வி கற்போனின் மனநிலையை ஏற்பதினால் உயர்ந்த சுய நிபுணத்துவத்தை அடைவது
    • எப்படி பயத்தை பொக்கிஷமாக மாற்றுவது
    • எப்படி உங்களின் அந்தராத்மாவின் குரலை அறிந்து, வாழ்க்கையின் அர்த்ததை தெரிந்து கொள்வது
    • எப்படி உங்களை சோதனைக்குள்ளாக்கும் நிகழ்வுகளை உங்களுக்கு பயன்தரும் நிகழ்வுகளாக மாற்றுவது
    • எப்படி உங்களின் முழு உள்ளாற்றலையும் விழித்தெழச் செய்வது
    or 3 X Rs. 663.33 with Koko Koko
    Read more
  • Out of Stock

    அதிகாலை 5 மணி குழு ( Athikalai 5 Mani Kulu )

    Rs. 2,590.00
    or 3 X Rs.863.33 with

    ராபின் ஷர்மா

     

    உங்கள் காலையை சொந்தமாக்கி – உங்கள் வாழ்க்கையை உயர்த்துங்கள்.

     

    புகழ்பெற்ற தலைமைப் பண்பு மற்றும் மிகச்சிறந்த செயல்திறன் நிபுணர் ராபின் சர்மா 20 ஆண்டுகளுக்கு, முன்பு. ஒரு புரட்சிகரமான காலை வழக்கத்தை அடிப்படையாகக் கொண்டு அதிகாலை 5 மணி குழு தத்துவத்தை அறிமுகப்படுத்தினார். இது அவரைப் பின்பற்றுபவர்களுக்கு அவர்களின் உற்பத்தித்திறனை அதிகரிக்கவும், அவர்களின் சிக்கலான வாழ்வில் சிறந்த ஆரோக்கியத்தை செயல்படுத்தவும் அவர்களது அமைதியைப் பாதுகாக்கவும் உதவியது.

     

    இப்போது தீவிரமான நான்கு ஆண்டு முயற்சியின் விளைவாக எழுத்தாளரால் வடிவமைக்கப்பட்டுள்ள, பலருக்கும் சாதனை முடிவுகளை அடையவும், அதே நேரத்தில் அவர்களின் மகிழ்ச்சி, உதவும்தன்மை மற்றும் புத்துணர்ச்சி ஆகியவற்றை மேம்படுத்தவும் உதவிய வாழ்க்கையை மாற்றும் இந்த புத்தாத்தில், அதிகாலையில் எழும் பழக்கத்தைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்வீர்கள், முன்பின் தெரியாத இரண்டு மனிதர்கள் ஒரு விசித்திரமான தொழிலதிபரைச் சந்திப்பது, பிறகு அவரே அவர்களின் ரகசிய வழிகாட்டியாக மாறுவது பற்றிய ஒரு அழகான மற்றும் பெரும்பாலும் சுவாரஸ்யமான கதையான அதிகாலை 5 மணி குழு புத்தகம் கீழ்க்கண்டவாறு உங்களை வழிநடத்தும்.

     

    வியக்கத்தக்க சாதனைகளை உருவாக்க சிறந்த மேதைகள், வணிக அதிபர்கள் மற்றும் உலகின் புத்திசாலித்தனமான மக்கள் தங்கள் கலைப் பொழுதை எவ்வாறு தொடங்குகிறார்கள்.. அதிகாலையில் எழுகையில், தூண்டுதல், மிகுந்த கவளம் மற்றும் அதி தீவிள உந்துதலுடன் உங்கள் நாளிள் முழுப் பயனையும் அடையும் படியான அதிகம் அறியப்படாத நீங்கள் உடனடியாகப் பயன்படுத்தக் கூடிய ஒரு சூத்திரம் அதிகாலையின் அமைதியான நேரத்தை படிப்படியான செயல்முறை மூலம் பயன்படுத்தி, உடற்பயிற்சி, சுய புதுப்பித்தல் மற்றும் தனிப்பட்ட வளர்ச்சிக்கு தேவையான நேரம் பெறுதல்.

     

    ஒரு நரம்பியல் அடிப்படையிலான நடைமுறையானது அதிகாலையில் எழும் பழக்கத்தின் மூலம். பெரும்பாலான மக்கள் தூங்கிக் கொண்டிருக்கும்போது, உங்களுக்கு சிந்திக்கவும், படைப்பாற்றலை வெளிப்படுத்தவும், பநட்டமான செயல்பாட்டிற்கு பதிலாக நிம்மதியாக நாரைத் தொடங்கவும் அருமையான வாய்ப்பைத் தருகிறது. “ரகசியமான செயல்” தந்திரோபாயங்கள் டிஜிட்டல் கபணிச்சிதறல்கள் மற்றும் அற்பமான திசைதிருப்பல்களிலிருந்து உங்கள் சிறப்புத் திறன்கள், இயற்கைத் நிறமைகள் மற்றும் கனவுகளை பாதுகாத்து, நீங்கள் அதிர்ஷ்டம், செல்வாக்கு மற்றும் உலகில் அற்புதமான தாக்கத்தை அனுபவிக்க உதவுகிறது.

    or 3 X Rs. 863.33 with Koko Koko
    Read more
  • Out of Stock

    வாரணாவதம்: துரியோதன பர்வம்

    Rs. 1,890.00
    or 3 X Rs.630.00 with

    களம்பூர் பாபுராஜ்

     

    வாரணாவதம் துரியோதனன் பார்வையில் மகாபாரதம். இதிகாசங்களும் புராணங்களும் காற்று, கடல், ஆகாயம் போல் அனைவருக்குமானவை. அவற்றுக்கு எல்லைகள் வகுக்க இயலாது. எந்தக் கோணத்திலிருந்தும் அணுகலாம். எப்படி வேண்டுமானாலும் மறுவாசிப்பு செய்யலாம். எவ்வளவு நட்சத்திரங்கள் இருக்கின்றனவோ அவ்வளவு விதங்களில் அர்த்தப்படுத்திக்கொள்ளலாம்.

    மகாபாரதத்தை யாருடைய பார்வையிலிருந்தும் விரித்தெடுக்கலாம். நன்மை தீமை, தர்மம் அதர்மம், நாயகன் வில்லன் ஆகிய இருமைகளைக் கொண்டு மகாபாரதத்தை அணுகுவது ஒரு முறை என்றால் இந்த மதிப்பீடுகளிலிருந்து விலகி, எதிர் நிலையிலிருந்து அதன் கதையைச் சொல்லத் தொடங்குவது இன்னொரு முறை.

    இந்நாவலில் மகாபாரதம் துரியோதனின் கோணத்திலிருந்து விரிகிறது. கறுப்பும் வெள்ளையும் கலந்து வியாசர் உருவாக்கிய துரியோதனனை இருள் மனிதனாக மட்டும் சுருக்கிக் காணவேண்டியதில்லை என்று வாதிடும் இந்நாவல் ஒரு புதிய தேடலைத் தொடங்கி வைப்பதோடு நமக்கு நன்கு பரிச்சயமான கோணங்களையும் நிகழ்வுகளையும் புதிய நோக்கில் மறுஆய்வுக்கு உட்படுத்துகிறது. முற்றிலும் புதிய, வண்ணமயமான ஒரு மகாபாரதத்தை வாசிக்கத் தயாராகுங்கள்.

    or 3 X Rs. 630.00 with Koko Koko
    Read more
  • Sale!
    Out of Stock

    [RARE] கூலி, விலை, லாபம் (Wages, Price and Profit)

    Original price was: Rs. 1,490.00.Current price is: Rs. 990.00.
    or 3 X Rs.330.00 with

    கார்ல் மார்க்ஸ்

     

    இந்நூல் 1865 ஜூனில் முதலாம் அகிலத்தின் பொதுக் குழுவில் கா. மார்க்ஸ் ஆற்றிய உரையின் வாசகமாகும். அதில்தான் கா. மார்க்ஸ் தன் உபரி மதிப்புத் தத்துவத்தின் அடிப்படைகளை முதன்முதலாகப் பகிரங்கமாக அறிவித்தார்.

     

    அகில உறுப்பினர் வேஸ்டன், கூலி உயர்வு தொழிலாளர்களின் நிலையை மேம்படுத்தாது, தொழிற்சங்கங்களின் நடவடிக்கை தீயது என்று ஒப்புக் கொள்ள வேண்டும் என்றார்; கா. மார்க்சின் உரை இத் தவறான கருத்துகளை நேரடியாகச் சாடியது. அதே நேரத்தில் தொழிலாளர்களின் பொருளாதாரப் போராட் டத்தையும் தொழிற்சங்கங்களையும் எதிர்த்த புரூதோன் வாதிகள் மற்றும் லஸ்ஸால்வாதிகளின் மீதும் இந்த உரை அடியாக விழுந்தது.

     

    தன் உரையில் கா. மார்க்ஸ், தம்மைச் சுரண்டும் மூலதனத்தின் முன் பாட்டாளிகள் அடங்கி சமரசமாகப் போக வேண்டும் என்பதை உறுதியோடு எதிர்க்கிறார், தொழிலாளர்களுடைய பொருளாதாரப் போராட்டத்தின் பங்கையும் முக்கியத்துவத்தையும் தத்துவார்த்த ரீதியில் ஆதாரப்படுத்துகிறார். இதைப் பாட்டாளிகளின் இறுதி லட்சியத்திற்கு-கூலியுழைப்பு முறையையே அடியோடு ஒழிப்பதற்கு உட்படுத்த வேண்டியதன் அவசியத்தைக் கோடிட்டுக் காட்டுகிறார்.

     

    * 70களிலும் 80களிலும் வெளிவந்த பிரபல்யமான புத்தகங்கள். மிகவும் அரிதான புத்தகங்கள்.

    இவை பாவிக்கப்படாத புத்தகங்கள். ஆனால் அச்சிடப்பட்டு 30 வருடங்களுக்கு மேல் கிடங்கில் இருந்ததால் சில புத்தகங்களில் கரையான் அறிப்பு, பக்கங்களின் நிறம் மாறுதல் போன்ற சிறிய சேதங்கள் இருக்கலாம்.

    ஆனால் முழுமையாக வாசிக்க முடியுமாக இருக்கும்.

    or 3 X Rs. 330.00 with Koko Koko
    Read more
  • Out of Stock

    கஸ்டமர் சைக்காலஜி / Customer Psychology

    Rs. 1,290.00
    or 3 X Rs.430.00 with

    சதீஷ் கிருஷ்ணமூர்த்தி

     

    எங்கும், எப்போதும் பிசினஸ் உலகின் எதிர்பார்ப்பு ஒன்றுதான். இது வேண்டாம் என்றோ இப்போது வேண்டாம் என்றோ சாக்கு போக்கு சொல்லாமல் நான் விற்கும் எதுவொன்றையும் கஸ்டமர்கள் மகிழ்ச்சியோடு வாங்கிக்கொள்ளுமாறு செய்வது சாத்தியமா? சாத்தியம் என்கிறார் பிரபல மார்க்கெட்டிங், நிர்வாகவியல் குரு சதீஷ் கிருஷ்ணமூர்த்தி. அடிப்படையான சில உளவியல் பாடங்கள் கற்றுக்கொண்டால் போதும். கஸ்டமர்கள் உங்கள் உள்ளங்கையில் அடங்கிவிடுவார்கள் என்கிறார் இவர். மக்கள் ஏன், எப்படி, எதை வாங்குகிறார்கள் என்பதை ஆராயும் துறைக்கு கஸ்டமர் சைக்காலஜி என்று பெயர். மக்களுக்கு ஏற்றவாறு மார்க்கெட்டிங் உத்திகளை வகுப்பதன்முலம், அவர்கள் ஆழ்மனதிலுள்ள அறிவாற்றல் அவர்கள் தேர்வுகளை எப்படிப் பாதிக்கிறது என்பதை அறிந்துகொள்வதன்முலம், அவர்கள் எதை வாங்குவார்கள், எதை வாங்கமாட்டார்கள் என்பதை நம்மால் துல்லியமாகத் தெரிந்துகொள்ளமுடியும். இந்நூல் கஸ்டமர் சைக்காலஜியின் கச்சிதமாக சாரத்தைக் உங்களுக்கு வழங்குகிறது. இதைப் படித்த பிறகு கஸ்டமர்களை பற்றிய புரிதல் இப்போது இருப்பதைக் காட்டிலும் நிச்சயம் உங்களுக்கு அதிகரித்திருக்கும். அதன்மூலம் இப்போது பெற்றுக்கொண்டிருப்பதைக் காட்டிலும் அதிக வெற்றிகளை நீங்கள் குவிக்கவும் முடியும்.
    or 3 X Rs. 430.00 with Koko Koko
    Read more
  • Out of Stock

    ஹரித்ரா நதி

    Rs. 1,490.00
    or 3 X Rs.496.67 with

    ஆர்.வி.எஸ்

     

    ஹரித்ரா நதி நாஸ்டால்ஜியா என்ற நனைவிடைத் தோய்தல் எப்போதும் வசீகரமானது. எழுத்தாளரும் வாசகரும் சேர்ந்து அமர்ந்திருக்கும் பள்ளிக்கூட வகுப்பு மர பெஞ்ச் அது. உத்தமதானபுரம் பற்றி எழுதி ‘என் சரித்திரம்’ என்ற தம் வரலாற்றைத் தொடங்கிய தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யரும், தாம் பிறந்த சிவகங்கை பற்றி எழுதிய கவியோகி சுத்தானந்த பாரதியாரும், வலங்கைமான் குறித்து எழுதிய ரைட் ஹானரபில் ஸ்ரீனிவாச சாஸ்திரியாரும், யாழ்ப்பாணம் பற்றிக் கட்டுரை வடித்த எஸ்.பொன்னுதுரையும் சந்திக்கும் காலம், இடம் கடந்த வெளி இந்த பிள்ளைப் பருவ நினைவுப் பரப்பு. பின்னாட்களில் சுஜாதாவின் ‘ஸ்ரீரங்கத்துத் தேவதை’யில் இந்த ழானர் (எஞுணணூஞு) புத்துயிர் பெற்றது. எவ்வளவு எழுதினாலும், எவ்வளவு படித்தாலும் நினைவுகளை அசைபோட்டு நடக்கும் உலா அலுப்பதே இல்லை. நானும் எழுதியிருக்கிறேன்.
     

    இப்போது பளிச்சென்று ஒளிரும் நட்சத்திரமாக ஆர்.வி.எஸ், மன்னார்குடி நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார். பொங்கிக் கரை புரண்டு வரும் காவிரி போல நினைவலைகள் தன் பதின்ம வயதைத் தொட்டுத் தொட்டுத் திரும்ப, நண்பர் ஆர்.வி.எஸ் இந்தப் புத்தகத்தில் நனவிடைத் தோய்ந்திருக்கிறார். 1980-களின் மன்னையைத் தெப்பம் போல் ஹரித்ராநதியில் மிதக்க விட்டுக் காலப் பிரவாகத்தில் முன்னும் பின்னும் சுற்றி வந்து பழைய ஞாபகங்களை அகழ்ந்தெடுத்துப் பங்கு போட்டுக்கொள்கிறார் ஆர்.வி.எஸ். நானும் இதை வாசிக்கிற நீங்களும் கடந்து வந்த தெரு, நினைவில் விரியும் ஹரித்ராநதிக் கரை வீதி. ஆர்.வி.எஸ் கையைப் பிடித்துக் கொண்டு பராக்குப் பார்த்தபடி வலம் வருகிறோம்.

    or 3 X Rs. 496.67 with Koko Koko
    Read more
  • Out of Stock

    தடையேதுமில்லை

    Rs. 990.00
    or 3 X Rs.330.00 with

    சோம. வள்ளியப்பன்

     

    ‘வாசகர்களின் தோளில் கைபோட்டுப் பேசும் திறன் கொண்ட புத்தகம் இது. கடினமான விஷயங்களை மிக எளிமையாக எடுத்துச் சொல்லும் சோம. வள்ளியப்பனின் பாணி அபூர்வமானது.’ – பா.ராகவன்

     

    புத்தகங்களை மட்டுமே படித்துவிட்டு எவரும் வெற்றியாளர் ஆகிவிடமுடியாது.வாழ்க்கையைவிடச் சிறந்த வாத்தியார் இந்த உலகில் இல்லை. எனவே அனுபவங்களிலிருந்தும் ஒருவர் கற்கவேண்டியிருக்கிறது.

     

    ஆனால் அது அத்தனை சுலபமல்ல. எடுத்தோமா, படித்தோமா என்று கற்றுக்கொண்டுவிடமுடியாது. அனுபவத்தைப் புரிந்துகொள்ளவும் அதிலிருந்து முக்கியமான பாடங்களைக் கண்டுபிடித்து கிரகித்துக்கொள்ளவும் தனித்திறன் தேவைப்படுகிறது. திறந்த மனமும் தெளிவான சிந்தனையும் இருந்தால்தான் அனுபவப் பாடம் படிக்கமுடியும்.

     

    சோம. வள்ளியப்பனின் இந்தப் புத்தகம் நம் வாழ்வை நாமே படித்துக்கொள்ள உதவும் ஒரு கைவிளக்காக இருக்கிறது. நம்மை முன்னேறவிடாமல் தடுக்கும் தடைக்கற்கள் எவையெவை என்பதை மிகத் தெளிவாக வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. தடைகளைத் தகர்த்து வெற்றிப் படிகளில் ஏறி உச்சத்தைத் தொட இந்தப் புத்தகம் உங்களுக்கு நிச்சயம் உதவும்.

    or 3 X Rs. 330.00 with Koko Koko
    Read more
  • Sale!
    Out of Stock

    [RARE] தொலைநோக்கி சொல்லும் கதை ( All About the Telescope )

    Original price was: Rs. 3,190.00.Current price is: Rs. 2,190.00.
    or 3 X Rs.730.00 with

    பாவெல் குலுஷன்த்ஸேவ்

     

    பூமி எங்கே முடிவடைகிறது, பூமியைச் சுற்றி என்ன இருக்கிறது, சந்திரனும் நட்சத்திரங்களும் எவ்வளவு தூரத்தில் உள்ளன, நட்சத்திரங்கள் ஏன் மின்னுகின் றன, நாம் வீசியெறியும் பந்து ஏன் எப்போதும் கீழே விழுகிறது, ஏன் சந்திரன் ஒரு நாளில் வட்டமானதாயும் மறுநாள் பிறை வடிவிலும் உள்ளது, பூமியைத் தவிர வேறு எந்த கிரகங்கள் உள்ளன என்றெல்லாம் அறிய நிச்சயமாக நீங்கள் ஆசைப்படுவீர்கள்.

     

    இக் கேள்விகளுக்கும் இன்னும் பல கேள்விகளுக்குமான பதில்களை நீங்கள் பாவெல் குலுஷன்த்ஸேவின் தொலை நோக்கி சொல்லும் கதை எனும் இந்நூலில் காணலாம்.

     

    * 70களிலும் 80களிலும் வெளிவந்த பிரபல்யமான புத்தகங்கள். மிகவும் அரிதான புத்தகங்கள்.

    or 3 X Rs. 730.00 with Koko Koko
    Read more
  • Out of Stock

    ஸ்டார்ட்-அப் பிசினஸில் சக்சஸ் / Startup Businessil Success

    Rs. 1,690.00
    or 3 X Rs.563.33 with

    சதீஷ் கிருஷ்ணமூர்த்தி

     

     

    எல்லோரிடமும் ஒரு ஸ்டார்ட்அப் கனவு இருக்கிறது. இதுவரை இல்லையென்றாலும் சுலபத்தில் வளர்த்துக்கொண்டுவிட முடியும்.

    சவாலானது என்ன தெரியுமா? கனவை நகர்த்திச் சென்று நடைமுறைக்குக் கொண்டு வருவதும் அதை வெற்றி பெறச் செய்வதும்தான். இதற்கு அஞ்சியே பலர், ‘இதெல்லாம் சிலருக்குதான் சரிப்பட்டு வரும்’ என்று ஏக்கப் பெருமூச்சோடு தங்கள் கனவைக் கனவாகவே முடித்துக்கொண்டு விடுகிறார்கள். அவ்வாறு செய்யத் தேவையில்லை. துணிந்து திட்டத்தில் இறங்குங்கள் என்கிறது இந்நூல்.

    என் ஸ்டார்ட்அப் வெற்றி பெறுமா என்பதை எப்படித் தெரிந்துகொள்வது? தெரிந்துகொண்டபிறகு என்ன செய்யவேண்டும்? முதலீட்டுக்கு எப்படி நிதி திரட்டுவது? பார்ட்னர் வைத்துக்கொள்ளவேண்டுமா அல்லது தனியாகவே ஆரம்பிக்கலாமா? எப்படி விளம்பரம் செய்வது? எப்படி வாடிக்கையாளர்களைப் பெறுவது? போட்டிகளை எப்படிச் சமாளிப்பது? பயணத்தைத் தொடங்கிய பிறகு படுகுழிகள் தென்பட்டால் என்ன செய்வது? திறமையாக நிர்வாகம் செய்வது எப்படி?

    நிர்வாகவியல், மார்க்கெட்டிங் உள்ளிட்ட துறையில் நிபுணத்துவம் பெற்ற சதீஷ் கிருஷ்ணமூர்த்தியின் இந்நூல் ஸ்டார்ட்அப் உலகம் பற்றிய மிகச் சிறந்த அறிமுகத்தை எளிமையாக அளிக்கிறது.

    or 3 X Rs. 563.33 with Koko Koko
    Read more